07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 8, 2012உலகெங்கும் உள்ள தமிழ் வலைபதிவாளர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 

வலைச்சரம் பல வலைபதிவுலக பிரம்மாக்களால் கோர்க்கப்பட்டு, அவர்களது படைப்புக்களாலும்,  அவர்களது அறிமுகங்களின்  படைப்புகளாலும்  சரம்சரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், என்னைப்போல வலைபதிவுலகக் கடைசிப் படியில் நிற்கும் கற்றுக் குட்டிகளும் ஆசிரியர் பொறுப்பேற்பது என்பதை நினைக்கும்போது

‘யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்.... அம்மா..

என்ற எனக்கு மிகவும் பிடித்த ‘மகா கவி காளிதாஸ்’ படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

திரு ‘அன்பின்’ சீனா ஐயா அவர்களாலும், என்னைப் பரிந்துரைத்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களாலும் மட்டுமே இந்த மாதிரி ஒரு ‘risk’ சாத்தியம். இவர்களிருவருக்கும் ‘தலையல்லால் கைம்மாறிலேன்’.

‘காதலொருவனைக் கைபிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே....’ என்ற பாரதியின் பாடல் வரிகள் நிஜமாகியது என் வாழ்வில்.

37 வருடங்களுக்கு முன் என் தந்தையிடம் என் காதலை தைரியமாகச் சொல்லி மனதுக்குப் பிடித்தவரை கை பிடித்தேன். 

திருமணமாகி 22 வருடங்களுக்கு பின், என் பெண்ணுக்கு அவள் விரும்பியவரையே (இரண்டு வீட்டுப் பெரியவர்களின் சம்மதத்துடன்) திருமணம் முடித்து வைத்தேன். (எனக்கொரு நீதி, அவளுக்கொரு நீதியா?) 

இனி என் பதிவுகள் சிலவற்றைப் பார்க்கலாமா?

என் பெண்ணின் திருமணத்தினால் அவளுக்கு அவள் விரும்பியவர் கிடைத்தார். எனக்கு? என் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த எழுத்தாளி வெளியே வந்தாள்.
மகளின் திருமணம் என்னை எழுத்தாளி ஆக்கியது என்றால், மகனின் திருமணம் ஒரு புதிய  பதவியைக் கொடுத்தது.


தலைமுறை தலைமுறையாக உலகமே வெறுக்கும், சீண்டும், கேலி செய்யும், கரித்துக் கொட்டும், பெண்களே பெண்களின் எதிரி என்று சொல்லும் படியான  ஒரு பதவி அது: ‘மாமியார்’

அதை நான் எப்படி சமாளிக்கிறேன் என்று ‘மங்கையர் மலரு’ க்காக ஒரு கட்டுரை எழுதினேன். பிரசுரம் ஆகவில்லை. நானே வெளியிட்டுக் கொண்டு விட்டேன்!  இதுவே என்  வலைப்பதிவின் முதல் பதிவு.

***************               **********************            ************************

நேர மேலாண்மை: இதில் வரும் கதை சுவாரஸ்யமானது. நான் ரொம்பவும் ரசித்து, அனுபவித்து எழுதிய கட்டுரை.
அதிலிருந்து சில வரிகள்:

“………அதனால் முக்கியமான விஷயங்களுக்கு முதலில் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்; ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
 காப்பி எதைக் குறிக்கிறது?”
உங்கள் வாழ்க்கை எத்தனைதான் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தாலும், சற்று நேரத்தை சரியாக செலவழித்தால், ஒரு நண்பருடன் ஒரு கோப்பை காப்பி குடிக்க கட்டாயம் நேரம் இருக்கும் என்பதைத்தான் காப்பி காட்டுகிறது

.***************               **********************            ************************அவள் விகடனில் வெளியான முதல் கதை. நீதானா அந்தக் குயில்
1987 இல் பெங்களூரு வந்து இறங்கியவுடன் பெய்த மழை (ஏப்ரல் மாதம்!), தொடர்ந்து வந்த குயிலின் கூவல்,  என் அண்ணா விசாகப்பட்டினத்தில் உக்கு நகரத்தில் இருந்த தோட்டத்துடன் கூடிய மல்லிகைப் பூ பூத்து -  கொய்யா, மா, பலா பழங்கள் காய்த்துக் குலுங்கும் மிகப் பெரிய அரசாங்க வீடு, அங்கு நாங்கள் சென்ற அப்பளக்கொண்டா கடற்கரை – இவையெல்லாம் சேர்ந்து உருவான இந்த கதை அவள் விகடனில் மிகப் பெரிய பாராட்டைப் பெற்றது.

***************               **********************            ************************

யூதர்களின் வெற்றி பற்றிய இந்த மொழியாக்கம் ஊர்.காம் என்ற மின்னிதழில் வெளியானது. அந்தப் பத்திரிகையில் இருந்து மிகவும்  பாராட்டிக் கடிதம் வந்தது.

இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு திரு. அப்பாதுரை எழுதிய பின்னூட்டத்திற்கு நான் இன்னும் பதில் எழுதவே இல்லை. என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்பதுதான் நிஜக் காரணம்!

என்னுடைய கட்டுரையை விட அவரது பின்னூட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது; real time உண்மைகளைப் பேசுகிறது. எனது மொழிபெயர்ப்பில் இல்லாத பல விஷயங்களை அந்தப் பின்னூட்டத்தில் காணாலாம். இந்தக் கட்டுரையை படிப்பவர்கள் கட்டாயம் அவரது பின்னூட்டத்தையும் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவரது பின்னூட்டம் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு.
***************               **********************            ************************

மற்றொரு மொழியாக்கம்: பாட்டியின் மரபணு 

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு நானும் ஒரு பாட்டி என்பதும் என்னுடைய இருவழிப் பாட்டிகளுடனும் நாங்கள் அதிகம் உறவாடியதும் காரணம்.

என் தோழி ராதா பாலுவின் பின்னூட்டம் சுவாரஸ்யமானது.

***************               **********************            ************************

நான் விஞ்ஞான அறிவிலியாக இருந்தபோதும்,  ஜீன்ஸ் பற்றிய எல்லாக் கட்டுரைகளும் என்னை அதிகம் கவர்கின்றன.
ஜீன்ஸ் தொடர்பாக பல  வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதை  பருப்புசிலி ஜீன்! இந்தக் கதை எழுதிய போதுதான் ஜீன் தெரப்பி, க்ளோனிங் பற்றிய கட்டுரைகள் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்து கொண்டிருந்தன.  என் பங்குக்கு நானும் எழுதலாமே என்று எழுதிய கதை.

***************               **********************            ************************  நா பாஷை தெரியுமா? – செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையை வைத்து எழுதியது. பழைய நினைவுகள் அதிகம் தந்த ஒரு பதிவு. என் பாட்டி, என் அம்மா, நான், என் மகள், அவளது குழந்தைகள் என்று தலைமுறைகளை இணைக்கும் இந்த நா பாஷை!

***************               **********************            ************************

கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் (9) கட்டுரையும் எனது விஞ்ஞான அறிவுக்கு ஒரு சவால்தான். ஆனாலும் முடிந்த அளவுக்கு எளிமைப் படுத்தி எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இதன் பின்னணியில் இந்திய விஞ்ஞானியின் உழைப்பு மறு(றை)க்கப்பட்டதைப் பற்றியும்  அடுத்த கட்டுரை சொல்லுகிறது.

***************               **********************            ************************

திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களைப் பற்றி எழுதிய இந்தக் கட்டுரைதான் என்னை பதிவுலகத்திற்கு அடையாளம் கட்டியது என்று சொல்லலாம். முதல் நாள் இரவு இதை எழுதி வெளியிட்டேன். அடுத்தநாள் இந்தக் கட்டுரையை ‘like’ க்கி இருந்தார் ஒரு புதுமுகம் (அவர் பழைய முகம் தான்; எனக்குப் புதிய முகம்!) அவரது இணைப்பில் போய் பார்த்தால் ராகிர பற்றிய பதிவர்கள் பலர் எழுதியிருந்த அத்தனை அஞ்சலிகளையும் (அதில் என்னுடையதும் அடக்கம் என்று மிகவும் அடக்கமாகக் கூறிக் கொள்ளுகிறேன்!) தனது வலைத்தளத்தில் தொகுத்திருந்தார் இவர்.

அன்றைக்கு என் வலைத்தளத்திற்கு வருகையாளர் அமோகம்! பதிவர் விழாவுக்குப் போனால் ராகிர பற்றி எழுதி இருந்தீர்கள், இல்லையா என்ற விசாரிப்பு!

அதுமட்டுமல்ல; எனது நீண்ட நாளைய தோழி – நீண்ட வருடங்கள் கழித்து எனக்குக் கிடைக்கவும் காரணமாக இருந்தார் ராகிர என்னும் சீதக்காதி!

***************               **********************            ************************

மே 13 ஆம் நாள்  என் அம்மாவுக்காக நான் எழுதியது. இதைப் படித்து விட்டு புதிதாய்க் கிடைத்த பழைய தோழி சொன்னாள், “ரொம்பவும் பாசிடிவ் ஆக எழுதி இருக்கிறாய். உன்னுடன் என் தோழமை தொடர்ந்திருந்தால் நானும் என் அம்மாவிடம்  இன்னும் சிறிது கனிவுடன் நடந்து கொண்டிருப்பேனோ, என்னவோ.....” இப்போதும் நடக்கலாமே!

இதற்கு என் பதிவுலக தோழமை ஒருவர் எழுதி இருந்தார்: ‘எல்லோரும் அவரவர்கள் அளவில் அம்மாவைப் பற்றி நினைக்கும்படி எழுதி இருக்கிறாய். என் மனதிலும் என் அம்மாவைப் பற்றி ஒரு நல்லெண்ணக் கட்டுரை மளமளவென்று உருவாகியது’ என்று.

***************               **********************            ************************
நீ இருக்கும்
திசைக்கு முகம்காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூபூத்தல் அதான் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்  
கல்யாண்ஜி

நாளையிலிருந்து வலைதளங்களில்  பூத்திருக்கும் பூக்களை போய் பார்ப்போம் வாருங்கள்!

66 comments:

 1. வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள்.

  என் பதிவைக் குறிப்பிட்டதற்கு மன்மார்ந்த நன்றி. (பின்னூட்டங்களுக்குப் பதில் எழுத வேண்டியதில்லை; எழுதிக் கொண்டிருந்தால் japanese greeting போல் ஆகிவிடும் சாத்தியமுண்டு :-)

  ReplyDelete
 2. தங்கள் பதிவுகளைக் குறித்த அறிமுகம் நன்றாக இருக்கிறது.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. நன்றி திரு அப்பாதுரை!
  அது என்ன Japanese Greetings?

  ReplyDelete
 4. நன்றி திரு சித்திரவீதிக்காரன்!

  ReplyDelete
 5. நல்ல அறிமுகப்படலம் சகோ.!

  தங்களின் பதிவுகளைக் காணவும் முயற்சிக்கின்றேன்.


  நன்றி.!

  ReplyDelete
 6. சிறப்பான அறிமுகப் படலம்...

  வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 7. கரண்ட் கட்... மறுபடியும் வருவேன்...

  ReplyDelete
 8. வலைச்சரத்துக்கு திங்கள் வருகை எனத்தெரிந்தது.
  வரவேற்கவே தங்கள் வலைக்குச் சென்றேன்.

  சென்ற என்னை வாசலில் வரவேற்றதோ குப்பை.
  அக்குப்பையில் என்னவோர் அப்படி நகைச்சுவை !!

  நகைத்தேன்.பின் சுவைத்தேன்.
  நம் உடலே ஒரு குப்பையென ஒரு
  பின்னூட்டமும் எழுதினேன்.

  காலை எழுந்த உடன், கணினியைத் திறந்தென்
  குப்பைக்கென்ன பதில் ? பார்க்க விரைந்தேன்.

  ஆஹா !! ஆஹா !!
  குப்பை இருந்த இடத்தில் = மலர்க்
  கொத்துகள் அல்லவா
  காட்சி அளிக்கின்றன !!

  பழையன கழிதலும் புதியன புகுதலும்
  வழுவல கால வகையினாலே !!

  பாட்டிகளும் பேத்திகளாய் இருந்தது கனவே.
  பேத்திகள் பாட்டிகள் ஆவதும் நிசமே

  பாட்டிகள் ஊட்டும் கனிவும் அன்பும்
  பேத்திகளுக்கோர் ஃஃப்ரூட் சாலட்டுகள்.
  பஞ்சனைய நெஞ்சங்களைப் பாங்கோடு உறவாடும்
  ரஞ்சனியை அழைப்போம் ஆரத்தி எடுத்தே நாம்
  ரா ரா மா இன்டி டாகா
  http://youtu.be/5LLCxx-nxYc
  சுப்பு ரத்தினம்.

  பாருங்கள் கேளுங்கள்.

  ReplyDelete
 9. உங்கள் (மாமியின்) வலைச்சர வரவு, நல்வரவாகுக. கடந்த சில வாரங்களாக தான் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். மேலே சொன்னவைகளை விரைவில் படிப்பேன்.

  உங்கள் Sense of Humor எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் பதிவுகள் அனைத்திலும் இது வெளிப்படுகிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் பல!!!

  நாற்சந்தியிலிருந்து,
  ஓஜஸ்

  ReplyDelete
 10. தமிழ் மணம் திரட்டியிலும் பதிவதனை இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் சகோ.


  நன்றி.!

  ReplyDelete
 11. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்மா....

  உங்கள் பழைய பதிவுகளையும் ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும்....

  ReplyDelete
 12. மனம் நிறைந்த வாழ்த்துகள் ரஞ்சனி. பல்வேறு முகங்களைப் பற்றிப் படிக்க மிகப் பெருமையாக இருக்கிறது.இந்த வாரம் இனிமையாகச் செல்ல மீண்டும் என் வாழ்த்துகள். துரை எழுதின ஜாபனிஸ் க்ரீட்டிங்ஸ்...
  ஒருவர் வணங்க மற்றவர் வணங்குவார். மீண்டும் முதல்வர் வணங்குவார். பதிலுக்கு இவர் வணங்குவார். முதுகு உடைந்துபோகுமோன்னு நினைக்கும் வரை வளைவார்கள்:P

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ரஞ்சனி மேடம்.
  நான் 4/5 மாதங்களாக பதிவுலகம் பக்கம் வாராத்தால்.உங்களை பரிச்சயம் செய்து கொள்ள முடியவில்லை. தங்கள் வலைப்பதிவுகள் சுவாரசியமாக இருக்கு.படிக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி.

  ReplyDelete
 14. வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு சிவஹரி!

  தமிழ் மனத்தில் எப்படி இணைப்பது? கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன், ப்ளீஸ்!

  ReplyDelete
 15. என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி ரஞ்சனி நாராயணன் மேடம் அவர்களே.....

  வாங்கோ, வாங்கோ, வாங்கோ ....

  தங்களின் சுய அறிமுகம் மிக அருமை.

  ஏற்கனவே நான் தங்களின் பல்வேறு படைப்புக்களைப் படிக்கும் பாக்யம் பெற்றுள்ளேன்.

  தொடரும்....

  ReplyDelete
 16. ரஞ்சனி வாழ்த்துக்கள் புது பதவிக்கு நான் பலமுறை உங்க பக்கம் வந்தும் பின்னூட்டம் பப்லிஷ் பண்ணமுடியாம திரும்பி இருக்கேன் அதை கொஞ்சம் சுலபமாக்குங்க அதாவது பின்னூட்ட பெட்டியை சொல்ரேன்

  ReplyDelete
 17. //‘யார் தருவார் இந்த அரியாசனம்
  புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்.... அம்மா..

  என்ற எனக்கு மிகவும் பிடித்த ‘மகா கவி காளிதாஸ்’ படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

  திரு ‘அன்பின்’ சீனா ஐயா அவர்களாலும், என்னைப் பரிந்துரைத்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களாலும் மட்டுமே இந்த மாதிரி ஒரு ‘risk’ சாத்தியம். இவர்களிருவருக்கும் ‘தலையல்லால் கைம்மாறிலேன்’.//


  தங்களை அரியாசனத்தில் அமார்த்திய பிறகே, அந்த அரியாசனத்திற்கே ஒரு பெருமையும், கம்பீரமும், கும்மென்று, ஜம்மென்று ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.

  தொடரும்....

  ReplyDelete
 18. அழகாக தலைவாழை நுனி இலை போட்டு, அனைத்தையும் அன்புடன் பரிமாறி, எனக்கு மிகவும் பிடித்தமான பருப்பு உசிலியையும் கொடுத்து அசத்தியுள்ள மிகச்சிறப்பாக உள்ளது.

  அன்பான பாராட்டுக்கள்.

  மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  தங்களின் இந்த வார வலைச்சர ஆசிரியர் பணி மிகச்சிறப்பாக அமைய எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பிரியமுள்ள,
  VGK

  ReplyDelete
 19. நன்றி திரு தனபாலன்!

  ReplyDelete
 20. நீங்கள் இணைத்திருக்கும் பாட்டைப் போலவே, உங்கள் பின்னூட்டமும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

  'குப்பை' பாட்டை என் வலைத்தளத்தில் பாடியவரும் நீங்கள் தானே?

  ReplyDelete
 21. ஓஜஸ் அம்பி,
  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 22. நன்றி திரு வெங்கட்!

  ReplyDelete
 23. அன்புள்ள வல்லி,
  google+ இலும் வரவேற்று, இங்கேயும் வாழ்த்தியதற்கு நன்றி!

  அப்பாதுரைக்கு japanese greetings என்ன என்று கேட்டு எழுதியவுடன் எனக்குள் ஒரு 'பல்ப்!

  கொஞ்சம் டியூப் லைட்!

  ReplyDelete
 24. வலைச்சரத்தில் தாங்கள் பதிவினை பதிவிட்ட பின்பு அப்பதிவின் கடைசிப் பகுதியில் அதாவது பதிவு முடியும் பகுதியில் பார்த்தால் தமிழ் மணத்தின் இலட்ச்சினை காணப்படும்.

  அத்தோடு சப்மிட் டூ தமிழ் மணம் (Submit to Tamilmanam) என்ற மீயிணைப்பும் காணப்படும்.

  அவ்விணைப்பினைச் சொடுக்கிடும் போது தமிழ் மணம் வலைத்திரட்டி தானாகவே தாங்கள் இட்ட பதிவினை திரட்டிக் கொள்ளும். ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே திரட்டப்பட்ட பதிவு தமிழ் மணத்தில் முகப்பில் தெரியும் சகோ.

  தமிழ் மணத்தில் பதிவானது திரட்டப்பட்ட பின்பே வலைச்சரத்தில் வாக்குப்பட்டை தெரியும்.

  நம் விரும்பிய வாக்கினை அங்கே இருக்கும் படத்தினைச் சொடுக்கிட்டு வாக்கினை செலுத்தலாம் சகோ.!

  நன்றி.!

  ReplyDelete
 25. எத்தனை பின்னூட்டங்கள் VGK ஸார்!
  அத்தனைக்கும் நன்றி, நன்றி, நன்றி!

  ReplyDelete
 26. நிதானமாகப் படியுங்கள் திரு ராம்வி!

  இன்றைக்கு வருகை தந்ததற்கு நன்றி!

  ReplyDelete
 27. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி லட்சுமி!

  நீங்கள் என் வலைத் தளத்திற்கு வந்துவிட்டு பின்னூட்டம் இடமுடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது.

  உங்கள் இமெயில் ஐடி கொடுக்க வேண்டும். பின் post comment - ஐ கிளிக் செய்தால் போதும்.

  உங்கள் காமென்ட் படிக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 28. வருக! வணக்கம்! வாழ்த்துக்கள்! இன்னும் சிறிது நேரத்தில் இங்கு (திருச்சியில்) தொடர் மின்வெட்டு தொடங்கும். எனவே மீண்டும் மின்சாரம் வந்ததும் உங்கள் பதிவை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
 29. //குப்பை' பாட்டை என் வலைத்தளத்தில் பாடியவரும் நீங்கள் தானே? //

  நானே தான் .

  நானொரு குப்பை
  நான் எங்கு சென்றாலும்
  சொல்கிறார்கள்
  " குட் பை ! "

  பையில் ஏதேனும் இருந்தால் தான்
  கிழங்களுக்கு இன்று குட்பை இல்லை.
  அறிவுப்பழம் ஆன்மீகப்பழம் எல்லாம்
  "ஆப்பிள்" ளுக்கு முன்னாடி
  அம்புட்டும் குப்பை.


  சுப்பு ரத்தினம்
  பின் குறிப்பு: எனினும் நேரம் கிடைப்பின் வாருங்கள்.
  http://movieraghas.blogspot.com
  http://mymaamiyaarsongs.blogspot.com
  http://pureaanmeekam.blogspot.com

  ReplyDelete
 30. வணக்கம் திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கு!

  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 31. அன்பு வரவேற்புகள் ரஞ்சும்மா...

  ஆரம்பிச்சுட்டீங்களா கலாட்டாவை?? :) ரசிக்கிறேன்...

  //என் பெண்ணின் திருமணத்தினால் அவளுக்கு அவள் விரும்பியவர் கிடைத்தார். எனக்கு? என் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த எழுத்தாளி வெளியே வந்தாள்.//

  எங்களுக்கும் ஒரு அருமையான படைப்பாளி கிடைத்தாரே.... சுவையான சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கிறதே ரசிக்கவும் ருசிக்கவும்....

  வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க என் அன்புவாழ்த்துக்கள்மா...

  உங்கள் திரிகளுக்கெல்லாம் சென்று வருகிறேன் ஒரு ரௌண்ட்....

  // அப்பாதுரை சொன்ன ஜாப்பனீஸ் க்ரீட்டிங்க்ஸ் படிச்சதும் சிரிப்பு வந்துட்டுதும்மா... //

  ReplyDelete
 32. அறிமும் தங்கள் முதல் பதிவு பார்க்க வேண்டும். மாலையில் தான் பார்க்கலாம்
  நல்வாழ்த்து. சிறப்பாக நடக்கட்டும் ஆசிரிய வாரம். இறையருள் நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 33. வணக்கம் அம்மா இன்றைய வலைச்சரங்களின் அறிமுக
  வைபோகத்தை மிக மிக அருமையாக நிகழ்த்தி உள்ளீர்கள் .காரணம் இதில் ஒரு தளத்தைத் தவிர ஏனைய தளங்கள் நான் கூட இதுவரை அறியாத தளங்களே .மிக்க நன்றி அம்மா
  பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமான
  அனைத்து வலைத்தள நெஞ்சங்களுக்கும் உங்களுக்கும் .மேலும் தொடரட்டும் சிறப்பாக தங்கள் பணி.நேரம் கிடைக்கும்போது அவசியம் இத் தளங்களுக்கும் சென்று படிப்பேன் .

  ReplyDelete
 34. அன்பின் ரஞ்ஜனி - முதல் பதிவு அருமை - படங்களுடன் விளக்கம் - சுட்டிகள் - அத்தனையும் சென்று படிக்க வேண்டும் - படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் ரஞ்ஜனி - நட்புடன் சீனா

  ReplyDelete
 35. அன்பின் ரஞ்ஜனி அத்தனையையும் சென்று படித்து - மகிழ்ந்து - மறுமொழிகளும் இட்டு வந்தேன் . நன்று நன்று சுய அறிமுகம் நன்று - நல்வாழ்த்துகள் ரஞ்ஜனி - நட்புடன் சீனா

  ReplyDelete
 36. வாழ்த்துகள் அம்மா.

  தங்கள் பணி சிறப்புறட்டும்.

  ReplyDelete
 37. ரன்ஜனி, அறிமுகம் , அழகாகவும் , விறுவிறுப்பாகவும் , படிக்க எளிதாக இருக்கிறது.

  தொடரும் பதிவிகளை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. அம்மா,,, அசத்தல் தான் போங்க,,,

  அனைத்து வயதினரையும் உங்கள் வரிகளில் நவீனப்படுத்திவிடுகிறீர்கள் அம்மா,,,

  வலைச்சரத்தில் உங்கள் பணி சிறக்க வாழ்த்தும் தொழிற்களம் குழு..

  (பிள்ளைகளையும் கவனீங்கோ,,,)

  ReplyDelete
 39. நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்று! தொடருங்கள்!

  ReplyDelete
 40. பதிவர் திருவிழாவில் எனக்குக் கிடைத்த கொடை நீங்கள். உங்கள் ரசனைக்குகந்த மலர்களை எங்களுக்குப் படிக்கத் தந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வருகிறேன். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்மா.

  ReplyDelete
 41. அன்பு மஞ்சு, நீங்கள் உங்கள் பணி முடிந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு எல்லாவற்றையும் படியுங்கள். உங்கள் அளவு அத்தனை செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

  பாராட்டுக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 42. அன்பு வேதா.இலங்காதிலகம், உங்கள் வருகை மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது.நிதானமாகப் படியுங்கள்.

  நன்றி!

  ReplyDelete
 43. அன்புள்ள அம்பாளடியாள்,
  இன்று நான் கொடுத்திருக்கும் இணைப்புகள் என்னுடைய பதிவுகள்.நேரம் கிடைக்கும்போது படித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
  நன்றி

  ReplyDelete
 44. அன்பு சீனா ஐயா,
  நன்றி சொல்லவும் வார்த்தைகள் கிடைக்கவில்லை.

  உங்கள் கருத்துரைகள் எல்லாம் படித்து மகிழ்ந்தேன்.

  பாராட்டுக்களுக்கு நன்றி.

  நேர மேலாண்மை உங்களிடம் பழக வேண்டும்.

  மறுபடி மறுபடி நெஞ்சு நிறைந்த நன்றிகளுடன்,

  ரஞ்ஜனி

  ReplyDelete
 45. வாருங்கள் கோவை டூ தில்லி!

  கணவருடன் சேர்ந்து நீங்கள் வலைப்பதிவில் கலக்குவது சந்தோஷம்.

  குழந்தை வெகு அழகாக ஓவியம் வரைகிறாள்.ஆசிகள்!

  நன்றி!

  ReplyDelete
 46. வாருங்கள் பட்டு!
  நீங்கள் கொடுத்த தைரியம் இது.
  என் வலைதலத்திற்கும் சென்று வந்திருக்கிறீர்கள்.
  நன்றி!

  ReplyDelete
 47. தொழிற்களத்தின் இளைய வாரிசு என்று நீங்களே குறிப்பிடுகிறீர்களே!

  உங்களை மறக்கவே முடியாது.

  நன்றி!

  ReplyDelete
 48. நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே!
  என்னுடைய தளத்திற்கும் சென்று கருத்துரை இட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள்.

  அவற்றிற்கு நிதானமாக பதில் எழுதுகிறேன்.

  ஒன்று விடாமல் படித்து 'நல்ல மாமியார்' என்று பாராட்டியதற்கும் நன்றி ஐயா!

  ReplyDelete
 49. நன்றி திரு பால கணேஷ்!

  Mutual admiration!

  ReplyDelete
 50. நன்றி வல்லிசிம்ஹன்.. அழகான விளக்கம். "முதுகு ஒடிந்துவிடுமோ" - ரசித்து சிரித்தேன். to think of it, உண்மையில் அப்படித்தான் தோன்றுகிறது.

  ReplyDelete
 51. வணக்கம் (ரஞ்ஜனியம்மா)

  வலைச்சரத்து வலைப்பூவில் அசிரியாரக ஒருவார காலம் பொறுப்பேற்று படைப்பாளிகளின் பலஆண்டு அறுவடையை உலகமே பிறமிக்கும் வகையில் துள்ளிய விளக்கத்துடன் பறைசாற்றுவதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.....அம்மா.

  வலைச்சரம் ஒர் அறிமுகம் என்ற தலைப்பின் கீழ் உங்களால் வெற்றிகரமாக எழுதிப்படைத்த சிறப்பு கட்டுரைகளை படித்து பார்த்த போது ஜதர்த்தமாக உள்ளது...அதிலும் (நேர மேலாண்மை)என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையானது. மனித வாழ்கை தத்தவத்தை அழகாக பல எடுத்து காட்டுக்கள் மூலமாக விளக்கியுள்ளிர்கள் அம்மா... தரணியில் புகழ்படைத்து மாந்தார்கள் போற்றிடவே. உன் புகழ் ஓங்குக என்றும் பணி தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 52. முதலில் வாழ்த்துக்கள் அம்மா

  இந்தப் பதிவின் மூலம் உங்களின் முத்தான பதிவுகளையெல்லாம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இன்னும் சில படிக்கப் படாமலே இருக்கிறது.
  யூதர்கள் பற்றிய பதிவை படித்தேன், புதிதாக பலவற்றை அறிந்தேன்.

  ReplyDelete
 53. வணக்கம், வாருங்கள் ரூபன்!
  நேற்றும் உங்கள் நல்வரவு படித்தேன்.

  பதில் அளிக்காததற்கு மன்னிக்கவும்.


  என் படைப்புகள் பலவற்றையும் நீங்கள் படித்துப் பார்த்து கருத்துரை கொடுத்திருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது ரூபன்!

  மறுபடியும் நன்றி!

  ReplyDelete
 54. வாருங்கள் தமிழ் ராஜா!
  உங்களது பின்னூட்டம் கண்டேன்.
  பல செய்திகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.

  நன்றி!

  ReplyDelete
 55. இப்போது தான் இணைப்பில் உள்ளவற்றை படிக்க முடிந்தது அம்மா... (இங்கு கரண்ட் கட் மிகவும் அதிகம்)

  நன்றி...

  ReplyDelete
 56. வலைச்சரம் ஏற்கும் வளைக்கரத்திற்கு வரவேற்பு! என்ன ஒற்றுமை நானும் ஸ்ரீரங்கம் நீங்களும் ஸ்ரீரங்கம் நானும் பெங்கலூர் நீங்கலும் பெங்களூர்! என் பதியும் திருப்பாற்கடல் நாயகர் தங்கள் பதியும் அப்படியே!
  அறிமுகப்பதிவுகள் அமர்க்களம்! தொடர்ந்து வாசித்து கருத்து கூறுவேன்..

  ReplyDelete
 57. வாருங்கள் தனபாலன்!

  ஏற்கனவே சிலவற்றைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  நன்றி!

  ReplyDelete
 58. வாருங்கள் ஷைலஜா!

  வருகைக்கு நன்றி.

  கருத்துரைகளுக்கு காத்திருக்கிறேன்.

  நிறைய ஒற்றுமை - வியக்க வைக்கிறது!

  கூடிய விரைவில் சந்திப்போம்!

  ReplyDelete
 59. ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது!

  ReplyDelete
 60. வாருங்கள் ராமமூர்த்தி!
  நன்றி!

  ReplyDelete
 61. தங்களின் இந்த அறிமுகப்பதிவில் உள்ள அனைத்தையும் மீண்டும் இன்று ஒருமுறை படித்துப்பார்த்தேன். அதில் பலவற்றிற்கு நான் ஏற்கனவே கருத்துக்கள் கூறியிருந்தேன்.

  ஒருசிலவற்றிற்கு மட்டும் இன்று கருத்து அளித்தேன். அதற்கான காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். அவை பற்றி தாங்கள் எனக்கு மெயில் மூலம் இணைப்புத்தந்து தகவல் தெரிவிக்கவில்லை.

  இனி அதுபோல எதுவும் விடுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கோ.

  அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 62. நிச்சயம் இனிமேல் பதிவு போட்டவுடன் உங்களுக்கு மெயில் செய்கிறேன்.

  ஸாரி!

  ReplyDelete
 63. சுய அறிமுகத்தை அழகா செய்திருக்கீங்க.

  "நாளையிலிருந்து வலைதளங்களில் பூத்திருக்கும் பூக்களை போய் பார்ப்போம் வாருங்கள்!"_தொடர்ந்து வருகிறோம்.சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 64. தாமத வருகைக்கு மன்னிக்கவும்,பணி காரணமாக பதிவுலகில் அதிகம் சுற்ற முடியவில்லை.அருமையான அறிமுகம்.உங்கள் தளத்தில் அறிவியல் பதிவுகளும் உண்டு என்கிற செய்தி தற்போது தான் தெரிகிறது.கட்டாயம் தங்கள் கதைகளையும் பதிவுகளையும் படிக்கிறேன். :)

  ReplyDelete
 65. அன்பின் ரஞ்சனி நாராயணன் மேடம்

  அருமையான பதிவு - மிக மிக இரசித்தேன் - பாராட்டுகள்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது