மூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நல்லிசை
➦➠ by:
சிவஹரி
“இனிய இசையின் அடிநாதம் மெல்லிடைத்து” என்பது அறிஞர்களின் வாக்கு. அதனடிப்படையில் எத்தகுமிக்க இசையாக இருந்தாலும் அதன் அடிநாதத்தினை ஈண்டு நோக்கினால் மென்மையான சோக வரிகளாகத்தான் இருக்கும்.
ஏழு சுரங்கள் - 1
ஏழு சுரங்கள் - 2
ஏழு சுரங்கள் - 3
ஏழு சுரங்கள் - 4
பருவம் மாறும் பிரியங்கள்...
வலைப்பூவினை திறந்திடும் போதே முண்டாசுக் கவிஞனின் வரிகள் நல்லிசையுடன் நம்மை வரவேற்கின்றன. அதிலே தன்னை மறந்த தருணங்களும் எனக்குண்டு.
வெளிச்சத்தில் கவிதாயினி என்ன சொல்ல நினைக்கின்றார் என்று படித்து எனக்குச் சொல்லுங்களேன். பல்விதமான சிந்தனைத் துளிகள் அக்கவியில் எனக்குதிக்கின்றன.
****************************
இனியவை கூறலின் ஆசிரியர் கலாகுமரன் தன்னைப் பற்றி மிக எளிமையாக “எளியோன் எனை பற்றி ஏதுமிலை இயம்ப” என்று குறிப்பிடுகின்றார். ஆனால் வலைப்பூவில் சில மின்புத்தகங்களை தரவிறக்கிப் படித்துப் பயனடையவும் வழி செய்திருக்கின்றார்கள்.
எண்ண அலைகளும் ஆழ்மன ஈடுபாடும். கட்டுரையில் தன்னம்பிக்கை ஊட்டிகள் தழும்ப காணக்கிடைக்கின்றது.
நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !! தேவையான தகவல் தான் நமக்கும்.
வலைப்பூவின் ஆசிரியரை எனக்கு முத்தமிழ் மன்றத்தின் மூலமாக நல்ல பழக்கம். கவிதை வடிப்பதில் தம்பதியர் இருவருமே சளைத்தவரில்லை. மண்..! கவிதையில் தந்திருக்கும் படிப்பினை அகம்பாவத்தை அறுத்திடச் செய்யவல்லது.
எனக்குள்ளே எனக்குள்ளே..! யில் சகதர்மினி மீது கொண்ட அன்பு வெளிப்படுகின்றது. கலைவாணி மீது பக்தி கொண்டவர். இவரது கலைவாணியின் துதிகளில் கலைவாணியே..8 இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
உளிகள் நிறைந்த உலகமிது - 15
உளிகள் நிறைந்த உலகமிது - 12
அடையாளம்
ஒரு பாடல் எந்த அளவிற்கு பெருமை தேடிக் கொள்ளும் என்பது அதனோடு ஒட்டிப்பிறழும் இராகத்தினை வைத்தே தான் அளவிட முடியும். அந்த ராகத்தின் அடிப்படையை சுரம் என்று சொல்வர்.
அந்த சுரங்கள் ஏழு. அவையவான:
சுரம்
|
தமிழ்ச்சொல்
|
வடசொல்
|
ச
|
குரல்
|
சட்ஜமம்
|
ரி
|
துத்தம்
|
ரிஷபம்
|
க
|
கைக்கிளை
|
காந்தாரம்
|
ம
|
உழை
|
மத்திமம்
|
ப
|
இளி
|
பஞ்சமம்
|
த
|
விளரி
|
தைவதம்
|
நி
|
தாரம்
|
நிஷாதம்
|
நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம்.
சுரங்களுக்கு இருந்த தமிழ் பெயர்கள் இன்று வடசொற்களின் ஆதிக்கத்தில் அமிழ்ந்திருக்கின்றன என்றும் ஆசிரியர்கள் ஏக்கம் தெரிவித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
அந்த சுரங்களைப் பற்றி வளவு தளத்தில் ஏழு சுரங்கள் என்ற தலைப்பிலே அருமையான பதிவினை ஆசிரியர் திருவாளர் இராம கி அவர்கள் தந்திருக்கின்றார்கள்.
அதன் இணைப்புகள் இங்கே தருவதில் மகிழ்வெனக்கு. அத்தோடன்றி தமிழ் மொழி பால் தீராக் காதல் கொண்டவர் என்பதினை அவர்கள் அளித்திருக்கும் மற்றைய பதிவுகள் மூலமும் அறிய முடிகின்றது.
ஏழு சுரங்கள் - 1
ஏழு சுரங்கள் - 2
ஏழு சுரங்கள் - 3
ஏழு சுரங்கள் - 4
தன்னம்பிக்கை கதைகளும், கவிதைகளும் எழுதுவதில் வல்லவரான இத்தளத்தின் நிறுவனர் வசு அக்கா அவர்கள் எழுதிய நிசப்தத்தின் அத்தியாயத்தில் இன்னும் மர்மம் விலகியபாடில்லை.
உடன் பிறப்பவள் உயிரின் மறுபிறப்பவள் என்று உடன்பிறந்தோர் மீது கொண்டிருக்கும் தீராப் பாசத்தை வெளிப்படுத்திடும் இக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.
உடன்பிறப்பவள்...உயிரின் மறுபிறப்பவள்....
அடிப்படையிலே ஒரு சந்தோச விரும்பியான ஹேமா அக்காவின் காதல் கவிதைகளைப் படித்திடுகையில் ஒரு கவிதாயினிக்குரிய இயல்பு இது தானோ என்று என்னை பலமுறை சிந்தனைக் கேள்விகள் எழுப்பியிருக்கின்றன.
அவர்களின் படைப்பினிலிருந்து சில மலர்கள் இதோ:
வலைப்பூவினை திறந்திடும் போதே முண்டாசுக் கவிஞனின் வரிகள் நல்லிசையுடன் நம்மை வரவேற்கின்றன. அதிலே தன்னை மறந்த தருணங்களும் எனக்குண்டு.
வெளிச்சத்தில் கவிதாயினி என்ன சொல்ல நினைக்கின்றார் என்று படித்து எனக்குச் சொல்லுங்களேன். பல்விதமான சிந்தனைத் துளிகள் அக்கவியில் எனக்குதிக்கின்றன.
இவரைப் பற்றி நான் சொல்வதை விட நீங்களே அவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று பாருங்களேன், “ 'ஆம்' என்று ஆமோதித்திருந்தாலோ, 'இல்லை' என்று மறுத்திருந்தாலோ நிகழ்ந்திருக்கக்கூடிய அல்லது நிகழாமல் போயிருக்கக்கூடிய சம்பவங்களையும், நழுவிப்போன வாழ்வின் தருணங்களையும் கணக்கெடுப்பதில் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்து விட்டு பின் அதிலிருந்து மீண்டு நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும், அதே வேளையில் தேடலையும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களில் நானும் ஒருவன்.”
மனங்கனக்கச் செய்த கவிதையாய் எனக்கு வீடுகளைக் கனவு காண்பவன் தெரிகின்றது.
அடுத்து ஆயுதம் கொல்வோம்! கவிதையில் சமாதானத்தின் உருவமாய் வார்த்தைகளை வடிப்பது இன்னும் அருமை.
இஸ்லாமியப் பெண்மணி
இஸ்லாத்தில் கூறப்படும் நற்கருத்துகளை இஸ்லாமியப் பெண்மணி வலைத்தளத்தின் மூலம் சகோதரங்கள் பரிமாறிக் கொள்கின்றார்கள். இந்த வலைப்பூ குறித்து விமர்சிக்கும் அளவிற்கு என்னுடைய வளர்ச்சி இன்னும் எட்ட வில்லையாதனால் வலைப்பூவின் இணைப்பினையே நேரிடையாக இங்கே தருகின்றேன். மற்றவர்களுக்கும் பயனுள்ள முறையில் இருந்திடும் என்ற நம்பிக்கையில்.
கபீரின் கனிமொழிகள்
ஞானத்தின் சிகரம் கபீர்தாஸின் கனிமொழிகளை நமக்காக கபீரன்பன் தொகுத்தளித்திருக்கின்றார்கள். கபீரின் கவிதைகள் (தோஹா) என்பதன் தமிழாக்க முயற்சியாக சொற்சுவை கூட்டி நமக்களித்திருக்கின்றார்கள். வாருங்கள் உறவுகளே பருகிடுவோம்.
பேச்சால் வளருது ஏச்சு
அவன் கொல்லன், நான் இரும்பு
அவன் கொல்லன், நான் இரும்பு
***********************************************
சேட்டைக்காரன்
சேட்டைக்காரன் நானில்லைங்கோ, நம்ம சகோதரம் நாஞ்சில் வேணு அவர்களின் வலைப்பூவின் பெயர் தான் அப்படியிருக்கு. இங்கே இவர்கள் காட்டியிருக்கும் குறும்புத்தனத்தைக் கண்டு சிரித்து சிரித்து மனம் இலகுவாகி காற்றிலே பறந்து விடும் போலிருக்கு.
சில பதிவுகளை தங்களுக்கும் சொல்கின்றேன். பாருங்களேன்.
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி
ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி-02
*************************************************
அழியாச் சுடர்கள்
நவீன இலக்கிய படைப்பாளிகளின் பெட்டகம் என்று இத்தளத்தினை வர்ணித்தால் அதில் தவறேதுமில்லை. வலையாசிரியர் அழியாச் சுடர் ராம் அவர்களின் இச்சேவை என்றும் போற்றுதற்குரியது. எழுத்தாளர்களை
வரிசைப் படுத்தி அவர்களது படைப்புகளை தனியே பிரித்து படிப்பவர்களுக்கு
இலகுதன்மையுடன் படித்திட வசதியளித்திருக்கின்றார்கள்.
இதோ: எழுத்தாளர்கள்
**********************************
விவசாயி
வலைப்பூவின் தலைப்பினைப் பார்த்திடும் போதே ஏதோ விவசாயம் குறித்து நமக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறுகின்றார்கள் என்று நினைத்து உள்ளே சென்றால் ஆசிரியர் ILA(@)இளா அவர்கள் பதிந்திருக்கும் நகைச்சுவைப் பதிவுகள் தான் நம்மை வரவேற்கின்றன.
அவற்றில் சில:
நம்மை யாராவது “நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு” அப்படின்னு திட்டினா நாம் கேட்டுக் கொண்டு பொறுமையாய் அல்லது பொங்கி எழுந்து விட்டு வந்திடுவோம். ஆனால் ஆசிரியர் அவர்கள் இங்கே ஒரு பாடமே எடுத்திருக்கின்றார்கள் பாருங்களேன்
நாம் நினைத்தது நடவாமல் வேறொன்று நடந்திட்டால் “கிழிஞ்சது கிருஷ்ணகிரி” என்று சொல்லுவோம் தானே! இங்கே ஆசிரியர் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கின்றார்கள் பாருங்களேன்.
கிழிஞ்சது கிருஷ்ணகிரி
என்ன இங்க சண்டை
__/”\____/”\____/”\____/”\____/”\____/”\__
கிங்டம் ஆப் கீழக்கரை
நம்ம ஊர்க்காரவுக சாமீயோவ். நல்லத்தான் எழுதியிருக்காக. என்னென்ன பொருட்கள் எப்படியெல்லாம் தயாரிக்கிறாங்க என்று இங்கே சொல்லியிருக்காங்க பாருங்களேன்.
மேலும் தெரிந்து கொள்வோமில் கூடுதல் தகவல்களை அளித்திருக்கின்றார்கள். உறவுகளுக்கு பயன்படும் என்ற நோக்கினிலே இவ்வலைப்பூவினை அறிமுகப் படுத்துவதில் மகிழ்வெனக்கு.
__/”\____/”\____/”\____/”\____/”\____/”\____/”\____/”\____/”\____/”\__
இவையெல்லாம் தமிழ்ச் சொற்களே
ஆசிரியர் திகழ் அவர்களின் அளப்பரிய சேவையில் விளைந்த நல்முத்து. இன்றைய சூழலில் தமிழன் தமிழிலே பேச வெட்கப்படுகின்றான். தன் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியின் மீது ஒரு பிடிப்பினை ஏற்படுத்த பல இடங்களில் தவறி விடுகின்றான். சமீபத்தில் முக நூலில் பார்த்த ஒரு புகைப்படத்தினை இங்கே பதிந்திட கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஆசிரியர் திகழ் அவர்கள் “நான் தமிழை முழுவதும் அறிந்தவன் என்று சொல்ல மாட்டேன். இன்னும் எழுத்துப்பிழையுடன் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அதைத் திருத்துவதற்கான ஒரு முயற்சி தான் இது.மொழியாக்கம், சந்திப்பிழை, தமிழின் பெருமை ஆகியவற்றை அறியும் ஆவலில் எழுதிக் கொண்டிருக்கின்றேன்தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்,திருத்திக் கொள்கிறேன்.” என்று பெருந்தன்மையோடு செய்திடும் சேவை என்றுமே போற்றுதற்குரியது.
****************************
இனியவை கூறல்
இனியவை கூறலின் ஆசிரியர் கலாகுமரன் தன்னைப் பற்றி மிக எளிமையாக “எளியோன் எனை பற்றி ஏதுமிலை இயம்ப” என்று குறிப்பிடுகின்றார். ஆனால் வலைப்பூவில் சில மின்புத்தகங்களை தரவிறக்கிப் படித்துப் பயனடையவும் வழி செய்திருக்கின்றார்கள்.
எண்ண அலைகளும் ஆழ்மன ஈடுபாடும். கட்டுரையில் தன்னம்பிக்கை ஊட்டிகள் தழும்ப காணக்கிடைக்கின்றது.
நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !! தேவையான தகவல் தான் நமக்கும்.
*********************************
காகிதனின் காகிதங்கள்
வலைப்பூவின் ஆசிரியரை எனக்கு முத்தமிழ் மன்றத்தின் மூலமாக நல்ல பழக்கம். கவிதை வடிப்பதில் தம்பதியர் இருவருமே சளைத்தவரில்லை. மண்..! கவிதையில் தந்திருக்கும் படிப்பினை அகம்பாவத்தை அறுத்திடச் செய்யவல்லது.
எனக்குள்ளே எனக்குள்ளே..! யில் சகதர்மினி மீது கொண்ட அன்பு வெளிப்படுகின்றது. கலைவாணி மீது பக்தி கொண்டவர். இவரது கலைவாணியின் துதிகளில் கலைவாணியே..8 இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
*************************
மரபின் மைந்தன்
மரபின் மைந்தன் வலைப்பூவின் ஆசிரியர் ”கலைமாமணி” ம. முத்தையா அவர்களைப் பற்றி நமது நம்பிக்கை இதழில் அதிகம் படித்திருக்கின்றேன். என்னுடைய
வலைப்பூவில் வெளியாகும் படித்ததில் பிடித்த தன்னம்பிக்கை கட்டுரைகள் சில
இவரது வலையகத்தில் இருந்தே எடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொள்வதில்
பெருமையெனக்கு.
சில கட்டுரைகளின் தொடுப்பினை இங்கே காணலாம்.
உளிகள் நிறைந்த உலகமிது - 15
உளிகள் நிறைந்த உலகமிது - 12
அடையாளம்
*************************
தொடர்ந்து என்னோடு பயணித்தமைக்கு நன்றி. தொடர்ந்து பல வலையகங்களை பின்னர் காண்போம்
|
|
அறியாத பல தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
T.M.2
வணக்கம்.
ReplyDeleteசிவஹரி
இன்று வலைப்பூ பதிவில் பல அருமையான தளங்களை அறிமுகம் செய்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்
இன்று இசையப்பற்றிய விளக்கம் அதாவது சப்தஸ்வரங்கள் 7 பற்றிய தகவல் மிக அருமை... அடுத்து சமயகருத்தையும் சொல்லியுள்ளிர்கள் அதுவும் அருமை.ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராமாணி-02 படைப்பும் அருமை அருமை பொதுவாக பார்க்கப் போனால் இன்று படைக்கப்பட்ட படைப்பு அனைத்தும் மிகவும் நேர்தியாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சிவஹரி
அனைத்துப் பதிவுகளையும் நான் படித்தக் கொண்டு இருக்கிறேன்.
மூன்றாம் நாள் போல .நான்காம் நாளும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் சிவஹரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோ! வலைச்சரம் புதிய பதிவர்களின் அரங்கேற்ற மேடை. அங்கு அறிமுகமாவது பதிவர்களுக்குக் கிடைக்கிற அங்கீகாரம் என்றால், ஆசிரியராக ஒரு வாரம் பணியாற்றுவது சுவாரசியம் நிறைந்த ஒரு சுகானுபவம்! ஒவ்வொரு முறை வலைச்சரத்தில் என் பெயர் குறிப்பிடப்படும்போதெல்லாம் மனம் குழந்தைத்தனமாகக் குதூகலப்படுகிறது எனக்கு. அத்தகைய மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் குழுவுக்கு எனது வணக்கங்கள்!
>{ திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅறியாத பல தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
T.M.2}<
நற்கருத்துரை வழங்கியமைக்கு நன்றி சகோ.
>{ 2008rupan said...
ReplyDeleteவணக்கம்.
சிவஹரி
இன்று வலைப்பூ பதிவில் பல அருமையான தளங்களை அறிமுகம் செய்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்
இன்று இசையப்பற்றிய விளக்கம் அதாவது சப்தஸ்வரங்கள் 7 பற்றிய தகவல் மிக அருமை... அடுத்து சமயகருத்தையும் சொல்லியுள்ளிர்கள் அதுவும் அருமை.ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராமாணி-02 படைப்பும் அருமை அருமை பொதுவாக பார்க்கப் போனால் இன்று படைக்கப்பட்ட படைப்பு அனைத்தும் மிகவும் நேர்தியாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சிவஹரி
அனைத்துப் பதிவுகளையும் நான் படித்தக் கொண்டு இருக்கிறேன்.
மூன்றாம் நாள் போல .நான்காம் நாளும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் சிவஹரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-}<
விரிவார்ந்த பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி சகோ.
நன்றி
>{சேட்டைக்காரன் said...
ReplyDeleteசகோ! வலைச்சரம் புதிய பதிவர்களின் அரங்கேற்ற மேடை. அங்கு அறிமுகமாவது பதிவர்களுக்குக் கிடைக்கிற அங்கீகாரம் என்றால், ஆசிரியராக ஒரு வாரம் பணியாற்றுவது சுவாரசியம் நிறைந்த ஒரு சுகானுபவம்! ஒவ்வொரு முறை வலைச்சரத்தில் என் பெயர் குறிப்பிடப்படும்போதெல்லாம் மனம் குழந்தைத்தனமாகக் குதூகலப்படுகிறது எனக்கு. அத்தகைய மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
வலைச்சரம் ஆசிரியர் குழுவுக்கு எனது வணக்கங்கள்! }<
தங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்புகளையும், கருத்திட்டமைக்கு உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மகிழ்ச்சி
அறியாத பல தளங்கள்...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
by 99likes
இசைக்கு மயங்காதோர் உண்டோ இப்புவியில்?
ReplyDeleteஇசையின் ஏழு ஸ்வரங்களை மிக அருமையாக விளக்கி விரிவாகச்சொல்லி தொடங்கும் மூன்றாம் நாள்....
சக்கரக்கட்டியில் தொடங்கி நானறிந்தவர் சிலர் அறிமுகப்படுத்தி இருக்கே தம்பி....
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பி....
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்.
>{99likes said...
ReplyDeleteஅறியாத பல தளங்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
by 99likes}<
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
>{மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteஇசைக்கு மயங்காதோர் உண்டோ இப்புவியில்?
இசையின் ஏழு ஸ்வரங்களை மிக அருமையாக விளக்கி விரிவாகச்சொல்லி தொடங்கும் மூன்றாம் நாள்....
சக்கரக்கட்டியில் தொடங்கி நானறிந்தவர் சிலர் அறிமுகப்படுத்தி இருக்கே தம்பி....
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பி....
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்.}<
மகிழ்ச்சி அக்கா.
இசை பற்றியும் ஏழு ஸ்வரங்கள் பற்றியும் அருமையான விளக்கங்கள்.
ReplyDeleteஇதில் மிகப்பிரபலமான மற்றும் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாயகர் சேட்டைக்காரன், மெளனத்தின் சப்தங்கள் போன்ற ஒருசிலர் பரிச்சயமானவர்கள். மீதிப்பதிவுகளை இனிதான் போய்ப்பார்க்க வேண்டும்.
அனைவருக்கும் பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்; உங்களுக்கும் சேர்த்து தான்.
>{வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇசை பற்றியும் ஏழு ஸ்வரங்கள் பற்றியும் அருமையான விளக்கங்கள்.
இதில் மிகப்பிரபலமான மற்றும் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாயகர் சேட்டைக்காரன், மெளனத்தின் சப்தங்கள் போன்ற ஒருசிலர் பரிச்சயமானவர்கள். மீதிப்பதிவுகளை இனிதான் போய்ப்பார்க்க வேண்டும்.
அனைவருக்கும் பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்; உங்களுக்கும் சேர்த்து தான்.}<
எனக்கும் சேர்த்தான வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் அனைவரின் சார்பில் நன்றிகள் பற்பல
பிரபலங்களின் பதிவுகளின் ஊடாக எமது வலைப்பதிவுகளையும் சிறப்பித்தளித்த சிவஹரி அவர்களுக்கு எனது நன்றி.
ReplyDeleteசப்த சுரங்கள் 7ம் தமிழில் என்பது சிறப்பான தகவல்.
"சேட்டைகாரன்" அவர்களின் எழுத்து நடை."எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி -யின் எழுத்து நடையை ஞாபகப்படுத்துகிறது.
>{கலாகுமரன் said...
ReplyDeleteபிரபலங்களின் பதிவுகளின் ஊடாக எமது வலைப்பதிவுகளையும் சிறப்பித்தளித்த சிவஹரி அவர்களுக்கு எனது நன்றி.
சப்த சுரங்கள் 7ம் தமிழில் என்பது சிறப்பான தகவல்.
"சேட்டைகாரன்" அவர்களின் எழுத்து நடை."எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி -யின் எழுத்து நடையை ஞாபகப்படுத்துகிறது.}<
வருகைக்கு என் நன்றிகளும் இனிய வரவேற்புகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் மணத்திலே சிறப்பாகச் சொல்லப்படும் சில வளைத்தளங்களே இங்கு மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதைக் கண்டேன். அதனோடு சேர்த்து கொஞ்சம் பிரபலத்தில் (தமிழ் மணத்தில்) பின் தங்கிய நிலையில் இருக்கும் வலையகங்களை அறிமுகப்படுத்தி அதனுள் இருக்கும் கருத்துகளை மற்றவர்களும் பருகிட வேண்டுமென்ற முயற்சியின் விளைவு தான் இது.
நன்றி
என் தளத்தையும் வசுவின் தளத்தையும் இங்கு அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி சிவா.. மன்றங்களில் கவிதை வடிவிலும் பின்னூட்ட வடிவிலும் படித்திருக்கிறேன் ஆனால் இத்தனை விரிவாக உன் தமிழை இங்கே படிப்பதில் மிக மகிழ்ச்சி. நன்று தம்பி, வாழ்த்துக்கள்.
ReplyDelete>{SOS said...
ReplyDeleteஎன் தளத்தையும் வசுவின் தளத்தையும் இங்கு அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி சிவா.. மன்றங்களில் கவிதை வடிவிலும் பின்னூட்ட வடிவிலும் படித்திருக்கிறேன் ஆனால் இத்தனை விரிவாக உன் தமிழை இங்கே படிப்பதில் மிக மகிழ்ச்சி. நன்று தம்பி, வாழ்த்துக்கள்.}<
இனிய வரவேற்புகள் அக்கா.
கருத்தினைக் கண்டு மகிழ்ச்சி.
நன்றி
வாக்களித்த இருவருக்கும் (dindiguldhanabalan cheenakay ) என் நன்றிகள் பற்பலவே
ReplyDelete