07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 25, 2012

நான்காம் நாள் பதிவு - சிவஹரி - சக்கரங்களுக்குள் சக்தி

தூல உடலில் ஏழு விதமான சக்தி மையங்கள் இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். அவை மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை மற்றும் சஹஸ்ராரம்.

மனதை ஒரு முகப் படுத்தி ஒவ்வொரு ஆத்ம பீடத்திலும் கரையேறி ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை நிலையான சஹஸ்ராரத்தினை அடைவது இறைவனின் பாதகமலங்களில் சரணடைவதாக கொள்ளப்படுவதாக சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நமக்கு தெரிவிக்கின்றார்கள்.

அந்த ஏழு சக்தி மையங்களைக் குறித்தும் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி வலைத்தளத்தில் ஒவ்வொரு நிலைக்கும் தெளிவான விளக்கங்கள் கொடுத்து நமக்கு அளித்திருக்கின்றார்கள்.

ஏழு ஆதாரங்கள் என்ற சக்கரங்கள் (மூலாதாரம்)

ஸ்வாதிஷ்டானம் இரண்டாவது ஆதாரம் (சக்கரம்)

மணிபூரகம்
 
அனாகதம் (இதய கமலம் )

விசுத்தி
 
ஆக்ஞை

 நல்லவையையே எப்போதும் எழுத முயலும் சுந்தரவடிவேலு அவர்களின் தன்னைப்பற்றிய அறிமுகத்தில் சில நேரங்களில் அதீத புத்திசாலியாகவும், சில நேரங்களில் வடிகட்டிய முட்டாளாகவும், இரட்டை நிலையில் இருப்பதாகவும் சொல்லுகின்றார்கள்.

அவரது வலைப்பூவில் கவிதை ஏதேனும் இருக்கின்றதா என்று தேடிப்பார்க்கையில் அபத்தத்தில் நம்மைச் சிரிக்க வைத்து விட்டார்கள்.

அத்தோடு காதலின் அடுத்ததளம் என்ற பதிவில் சில அபிப்ராயங்களாக வெளிப்படுத்துகின்றார்கள்.பாப்பாவின் குறும்பு கவிதையில் மழலையின் அன்பை நமக்கு வரிகளாக வடித்திருக்கின்றார்கள்.
கணினியின் தற்போது அதிகமாக விண்டோஸ் இணையத்தளத்தினை தான் நாம் உபயோகின்றோம்.

ஆனால் விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது என்று லினக்ஸ் சார்பில் நம்மோடு அதன் சிறப்பம்சங்களை சொல்லிட வரும் சரவணன் அவர்களின் லினக்ஸ் தமிழன் வெல்வான் வலைப்பூவிலிருந்து சில பதிவுகளை பார்ப்போமாக.

உபுண்டு 12.04இன் கணினி முகத்திரைகள்

உபுண்டுவில் புதிய VLC-2.0 ஊடக இயக்கியை நிறுவது எவ்வாறு?

லினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு தகவல்....

காலதேவனின் கைக்குழந்தையாக, பூமித்தாயின் மடியில் தமிழ் தேடி தவமிருக்கும் தமிழ்க் காதலன் அவர்களின் இதயச் சாரல் வலைப்பூவில் ”இனிய தாகம்..!” நம் தாகத்தை தணிக்கின்றது.விடைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விந்தைகளின் வழியே ”நதி மூலம்...!” பார்க்கச் சொல்கின்றார்கள்.

 ”புதிராகும் மலர்..!” பதிவில் நம்மிடம் மலரோடு பேசி கண்ட முடிவினை கவிதை வழியாக அறியத் தருகின்றார்கள்.

நிச்சயம் நாமும் இத்தளத்தில் கொஞ்சம் நேரம் செலவழித்து மேலும் இவ்வலைப்பதிவரை ஊக்குவிப்போமே.!

குட்டிக் கதைகள் மூலம் சிறுவர்களுக்கு நல்ல நீதிக்கதைகள் தந்திடும் ந.உதயகுமார் அவர்களின் சில கதைகளை இங்கே பகிர்கின்றேன்.

பச்சோந்திக் கல்
 
காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது
 
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து
 
நாவினால் சுட்ட வடு
 
இந்த வலைப்பதிவின் ஆசிரியர் பாட்டி ருக்மணி சேஷாசாயி அவர்களின் வலைப்பூவினில் இருக்கும் கதைகளை அனுமதியோடு மற்றொரு இடத்தில் வணிக நோக்கமின்றி பகிர்வதற்காக அனுமதி முகநூலின் வழியே கடந்த ஓராண்டுக்கு முன்பு கேட்டிருந்தேன்.

ஏதோ ஒரு சூழலினால் அவர்களது பதில் எனக்கும் இன்னும் வந்தபாடில்லை. இது என் புறமேயிருக்க எதிர்கால சமுதாயம் பண்போடும், வரலாற்றினை அறிந்தவர்களாக விளங்கச் செய்வதே தன்னுடைய குறிக்கோள் என்று பாட்டியார் வலைப்பூவினில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அவர்களின் வலைப்பதிவில் சில.

96 - தந்தையின் பெருமை.

92-நம்பிக்கையின் சிறப்பு.

87-சிறந்த நீதிபதி

பாட்டியின் நீதிக்கதைகளைப் படித்த நாம் கங்கா அவர்களின் தினமும் ஒரு ஜென்கதைகள் வலைப்பூவிற்கு தேனுறிஞ்சிடும் தும்பியாய்ப் பறந்திடுவோமே! இந்தக் கதைகளானது எதிர்கால சமுதாயத்தினை நல்வழிப்படுத்திட நல்லதொரு தூண்டுகோலாய் அமைந்திடும் என்பதிலும் விதிவிலக்கில்லை.

இந்த வலைப்பூவானது பல ஜென் கதைகளை பகிர்ந்தளித்திருக்கின்றது. அவற்றில் சில

ஒன்பது திருடர்கள் - தினம் ஒரு ஸென் கதை

விசித்திரமான துறவி - தினம் ஒரு ஸென் கதை

ஒரு துளி நீர் - தினம் ஒரு ஸென் கதை

நம் வலைப்பூவின் வாசகர்கள் வெளியிடும் கருத்துகளை பகுப்பாய்வு செய்யாமல் வெளியிட்டால் எதிர்கொள்ளவிருக்கும் சங்கடங்களை நேரில் கண்டு கொள்ளுங்கள். நல்ல ஒரு தளம் இப்போது கதைகளைத் தொடர்ந்து தரமுடியாமல் நின்று விட்டது போல எனக்குத் தெரிகின்றது.

கணினி அறிவு குறித்தும், சுதந்திர மென்பொருட்கள் நிறுவல் குறித்தும் பயனுள்ள பல தகவல்களை கொண்டிருக்கும் இத்தளத்தினை இங்கே அறிமுகப் படுத்திட விரும்புகின்றேன்.

பார்த்தவைகளில் சில.
Blog-ன் Secret Followers எத்தனை? கண்டுபிடிப்பது எப்படி? Blogger Tips

உபுன்டுவில் கிம்ப் (Gimp) நிறுவுவது எப்படி?
 
வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படி?
 
ஓப்பன் ஆபீஸ் 3.1 - என்ன புதுசு?


சிறில் அலெக்ஸ் அவர்களின் பைபிள் கதைகள் வலைப்பூவினை நான் கடந்த மூன்று வருடங்களாக தேவைப்படும் சமயத்தில் எல்லாம் பைபிள் கதைகளைப் படித்துக் கொண்டு வருகின்றேன்.

அவர்கள் இத்தளத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டுமாய் வாசகர்களின் சார்பிலே கேட்டுக் கொள்கின்றேன். சில கதைகள் உங்களின் பார்வைக்கு.

ஆபிரகாமின் பலி

மூன்று வழிப்போக்கர்கள்"

பயணம் துவங்கியது


நான் யார்? எனது அனுமதியின்றியே இப் பூமியென்னும் நரகத்தினுள் தள்ளிவிடப்பட்டவன்... ...இன்னமும் தேடிக்கொன்டிருக்கிறேன் ரோஜா மலர்களை, இழந்து போக துடித்துக்கொன்டிருக்கும் நம்பிக்கையுடனும் அகன்று போக மறுக்கும் “நானும் உள்பட” என்று தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ளும் மதுரன் அவர்களின் சிறகுகள் வலைப்பூவினில் பல கட்டுரைகள் தன் சுய சிந்தனையுடன் வடித்திருக்கின்றார்கள்.

நான் படித்த சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

கல்கி என்னும் அற்புதம் என்னை கட்டிப்போட்ட மாயம்

தமிழனின் பின்னடைவுக்கு காரணம் தெரியுமா?

வழிதேடும் சுவடுகள் - பாகம்1


“அன்பை விட ஆயுதம் எதுவுமே இல்லை” என்று அன்பாலே ஒரு வலைப்பூவினை வடிவமைத்திருக்கின்றார்கள் மன்னையின் செல்வன் சிவா அவர்கள்.

கற்பனையில் வரைந்த மீண்டும் அடுத்த கடிதத்தில்..  நகைச்சுவை ததும்ப அவரது சிந்தனையை நம்மோடு பகிர்ந்திருக்கின்றார்கள். அவசரமான இவ்வுலகிலே நாம் எவ்வளவு வேகமான இயந்திரத் தன்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனையும் அதனுடைய முடிவுப் பொருளையும் நமக்கு தனியே ஒரு நடைப்பயணம். வழியே வழங்குகின்றார்கள்.

 இதயம் இடம் மாற்றி .... என்ற கவிதைப் பதிவிலே அன்பானவர்களின் இதயத்தின் அருகே தன் இதயத்தினை பத்திரமாய் வைக்கும் வரிகள் பல்நோக்கில் சிந்திக்க தக்கன.

மனதில் தோன்றும் எண்ணங்களே எழுத்துகளின் வடிவமாய் நாம் கண்டு ரசிக்கின்றோம் என்று என் சகோதரியிடம் பல முறை கலந்துரையாடியிருக்கின்றேன். 

அதனை மெய்பிக்கும் விதமாக ஈழமண்ணின் இலக்கிய ரசனையாளர் திருவாளர் வந்தியத் தேவன் அவர்களின் என் உளறல்கள் வலைப்பூவானது நமக்கு பல ரசிப்பிற்குகந்த வரிகளை நமக்கு தருகின்றன.

நான் படித்து ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வெனக்கு.

சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ
 
ஐ மிஸ் யூடா!
 
வாழ்நாள் சாதனையாளர் செங்கைஆழியான்

கிராமத்து விதையாய் பாலை நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாணி சே.குமார் அவர்களின் சிறகில்லா பறவையோடு நாமும் பறந்திடுவோமே! தண்டவாளப் பூக்களின் நாயகி நந்தினியின் எண்ண அலைகளையும், எடுத்திருக்கும் சிறப்பான முடிவையும் படித்த பின்பு நாம் எழுத்தாளரை பாராட்டமல் இருக்க மனம் வருவதில்லை.

ஐந்து வயதில் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்காளி என்று கிராமத்தில் பழமொழி சொல்லுவார்கள். இங்கு பங்காளிச் சண்டை யில் இளம்பிராயத்து நிகழ்வுகளையும் சமாதானம் சொல்ல இப்போது நம்மோடு அந்த உறவுகள் இல்லையே என்ற ஏக்கத்தினையும் நமக்கு வடித்து தந்திருக்கின்றார்கள்.


இணைய உலகிலே தொழில் நுட்பச் சக்கரவர்த்திகள் நமக்கு இலவச தொழில் நுட்ப உதவிகளை செய்து தருபவர்கள் எண்ணில் சிலரே.! அவர்களில் நம் தங்கம் பழனி அவர்களும் ஒருவரே!

இவர்களைப் பற்றிய அறிமுகத்தினை வலைச்சரத்தில் பலர் சிறப்பாசிரியர்கள் எடுத்துரைந்திருக்கின்றபடியால் நான் பார்த்த சில ஆக்கங்களை உங்களோடு பகிர்கின்றேன்.

ஆடு வளர்ப்பு -லாபம் நிரந்தரம்!
 
முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

தன்னம்பிக்கையை மேம்படுத்தும் பொன்மொழிகள் !

அலெக்சா ரேங்க் உயர வழிகள்..

"எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள" தொடருக்கு "அழகி"யின் அங்கீகாரம்..!!

Paypal சில பயன்மிக்க தகவல்கள்..!


அடுத்த தொகுப்போடு பின்னர் வருகின்றேன்.

நன்றி

21 comments:

  1. மிகவும் அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    அன்பான இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் மீண்டும் ஒரு முறை அறிமுகம்....

    உங்கள் அறிமுகம் மிகவும் அருமையாக இருக்கிறது. இதில் இருந்தே உங்கள் மெனக்கெடல் தெரிகிறது.

    என்னையும் என் நண்பன் இதயச்சாரல் தமிழ்க்காதலனையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு எங்கள் இருவரின் சார்பாகவும் நன்றிகள்....

    உங்கள் எழுத்துப் பயணம் தொடரட்டும் ....

    மற்ற நண்பர்களையும் படிக்கிறோம்...


    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அறியாத பல வலைப்பூக்களை அறிந்து கொண்டேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  4. அறியாத பல தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
    tm2

    ReplyDelete
  5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருமையான மற்றொரு ஏழு ஜீவாதாரம்... உடலில் உள்ள சக்திகள் பற்றிய விளக்கங்களின் தொகுப்பு....

    அருமையான அறிமுகங்கள்....

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பிக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும்...

    ReplyDelete
  7. நான் எழுதிப் பலகாலம் ஆகியும் என்னுடையவலைப்பூவையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. சிறப்பான அறிமுகங்கள்.

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. உங்கள் தேடலும்
    அழகான அறிமுகமும்
    எத்தனை நன்றி சொன்னாலும் தகும்
    உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
    உங்கள் பணி மிக அருமை
    வாழ்க வளமுடன்
    அன்புடன்
    சிவா

    ReplyDelete
  10. >{வை.கோபாலகிருஷ்ணன் said...

    மிகவும் அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    அன்பான இனிய வாழ்த்துகள்.}<

    கருத்திட்டமைக்கு நன்றி சகோ.

    மகிழ்வுடன்,
    சிவஹரி

    ReplyDelete
  11. >{சே. குமார் said...

    வலைச்சரத்தில் மீண்டும் ஒரு முறை அறிமுகம்....

    உங்கள் அறிமுகம் மிகவும் அருமையாக இருக்கிறது. இதில் இருந்தே உங்கள் மெனக்கெடல் தெரிகிறது.

    என்னையும் என் நண்பன் இதயச்சாரல் தமிழ்க்காதலனையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு எங்கள் இருவரின் சார்பாகவும் நன்றிகள்....

    உங்கள் எழுத்துப் பயணம் தொடரட்டும் ....

    மற்ற நண்பர்களையும் படிக்கிறோம்...


    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.}<

    இனிய வரவேற்பினை தங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்வெனக்கு.

    தங்களின் வலைப்பூ போன்ற புதுமிகு கருத்துகள் தாங்கிய வலையகங்களுக்காக மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல.

    மகிழ்ச்சியுடன் நன்றி

    ReplyDelete
  12. >{s suresh said...

    அறியாத பல வலைப்பூக்களை அறிந்து கொண்டேன்! மிக்க நன்றி!}<

    இனிய வரவேற்புகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.

    கருத்திட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  13. >{திண்டுக்கல் தனபாலன் said...

    அறியாத பல தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
    tm2}<

    ஊக்கியின் உயர்தனி செம்மொழிக்கு நன்றி சகோ.

    மகிழ்ச்சி

    ReplyDelete
  14. >{Lakshmi said...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.}<

    கருத்திட்டமை கண்டு மகிழ்ச்சி சகோ.

    நன்றி

    ReplyDelete
  15. >{மஞ்சுபாஷிணி said...

    அருமையான மற்றொரு ஏழு ஜீவாதாரம்... உடலில் உள்ள சக்திகள் பற்றிய விளக்கங்களின் தொகுப்பு....

    அருமையான அறிமுகங்கள்....

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பிக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும்...}<

    அக்காவிற்கு,

    அன்பும் பண்பும் பாசமும் பொருந்திய என் வாழ்த்துகள் பற்பல

    ReplyDelete
  16. >{வந்தியத்தேவன் said...

    நான் எழுதிப் பலகாலம் ஆகியும் என்னுடையவலைப்பூவையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.}<

    இனிய வரவேற்புகள் சகோ.

    காலம் கிடைத்திடும் பொழுது எழுத முயற்சியுங்களேன். எண்ணங்களே எழுத்துகளாக வெளிப்படும் வல்லமை கொண்டவை.

    மேலும் வளர என் வாழ்த்துகள்.

    கருத்திட்டமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  17. >{வெங்கட் நாகராஜ் said...

    சிறப்பான அறிமுகங்கள்.

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். }<

    கருத்தினைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி சகோ.

    நன்றி

    ReplyDelete
  18. >{Siva sankar said...

    உங்கள் தேடலும்
    அழகான அறிமுகமும்
    எத்தனை நன்றி சொன்னாலும் தகும்
    உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
    உங்கள் பணி மிக அருமை
    வாழ்க வளமுடன்
    அன்புடன்
    சிவா }<

    கருத்திட்டமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  19. வாக்களித்த மூவருக்கும் (dindiguldhanabalan manju அக்கா venkatnagaraj ) நன்றிகள் பற்பல

    ReplyDelete
  20. மதிப்பிற்குரிய சிவஹரி அவர்களுக்கு..

    நான் சுந்தரவடிவேலு, திருப்பூரிலிருந்து.....

    முதற்கண் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்... எனக்கு அறிமுகமான நண்பர்கள் பலர் இருந்தும் கூட எனது படைப்புகளை அங்கீகரிக்க வேண்டுமென்கிற எண்ணம் அவர்களுக்கோ, அவர்கள் ஏன் என்னை அங்கீகரிக்கவில்லை என்கிற கேள்வி எனக்கோ இருந்ததில்லை... ஆனால் நான் எந்த அறிமுகமும் ஆகாமலே எனது நல்ல விஷயங்களை அங்கீகரிக்கவும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கவும் நேர்ந்த தங்களின் மாண்பு என்னில் ஓர் மகத்தானதோர் மதிப்பினை தங்கள் வசம் ஏற்படுத்தியுள்ளது...

    இவ்விதம் மற்றவர்களின் நல்ல தன்மைகளை நாமும் தேர்ந்தெடுத்து தெரிவிக்கிற ஓர் நற்செயலை புரிய வேண்டுமென்கிற பிரக்ஞையை என்னுள் ஏற்றியமைக்கு மறுபடி நான் எமது நன்றிகளை தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். நன்றி சிவஹரி அவர்களே...

    ReplyDelete
  21. அறிமுகமான அனைத்துத் தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்தியிருக்கும் தோழர்.சிவஹரி ஒவ்வொரு வலைப்பூவையும் தாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் முறையிலேயே தெரிகிறது தாங்கள் கொண்ட ஆர்வமும், எழுத்தர்களுக்கு கொடுக்கும் ஊக்கமும்..அறிமுகப்படுத்திய முறையை வணங்குகிறேன்..._/\_

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது