பொறுமை - கதம்ப உணர்வுகள் ( நான்காம் நாள் )
➦➠ by:
மஞ்சுபாஷினி
நம்மில் இருந்து வெளிபடும் வார்த்தைகள் எப்போதும் நல்லவையாக
இருக்கவேண்டும். அப்படி நல்லவையாக இருக்கவேண்டுமென்றால் பொறுமையாக அமைதியான மனதுடன்
இருக்கவேண்டும். அமைதியாக இருக்க கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். எதையும் ஒருமுறைக்கு
பலமுறை யோசித்து செயல்படவேண்டும். கோபத்தில் சிதறப்படும் வார்த்தைகள் அன்னம் அல்லவே
சிதறியதை சுத்தம் செய்யவும் எடுக்கவும்… வார்த்தைகள் நம்மிடம் இருக்கும் வரை நாம் அதற்கு
எஜமான். நம்மை விட்டு கோபத்துடன் வெளியேறிய வார்த்தைகள் நமக்கு எஜமானாகிவிடும். இனி
என் மனம்கவர் பதிவர்களை சந்திப்போமா?
இன்று நான் மிகவும் நேசிக்கும் சிலரின் பதிவுகளை பகிர
இருக்கிறேன். இன்று பதியப்படும் எல்லோருமே நம் நாட்டின் கண்களாகப்போற்றும்
அன்புப்பெண்கள் தான்.
நான் மிக ரசிக்கும் பெண்மணி
இவர். இவர் பதிவுகளில் எத்தனை அனுபவங்கள் இருக்கிறதோ அவ்வளவும் நம் வாழ்க்கைக்கு
அவசியப்படும் பாடங்களாகவும் இருக்கும். தொலைபேசியில் பேசியபோது இவர் மீதுள்ள
மதிப்பு அதிகமானது. மறக்காமல் வாழ்த்துகள் சொல்வதிலும், அவரை விட
எத்தனை வயது குறைந்தவரானாலும் மரியாதையோடு அழைக்கும் பாங்கும் அவர் என் மனதில்
நீங்காது நிலைத்த அன்புக்கரசி... அன்பில் கரையவைக்கும் அற்புதமானவர் இவர். இவர்
முத்துமாலையில் இருந்து சில முத்துகளை இங்கே தருகிறேன் உங்கள் பார்வைக்காக....
மனதில், வாழ்க்கையில்,
உலகில், சுற்றும் புறமும் எத்தனையோ நடந்தாலும்
எத்தனையோ சம்பவித்தாலும் மனம் நிறைந்து இவர் சொல்வது குறையொன்றுமில்லை மறைமூர்த்தி
கண்ணா.... இப்படிச்சொல்லனும்னா எந்த அளவுக்கு மனசு பக்குவப்படனும்? இவர் கண்களை சிறிது நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தாலே இவர் மனதின் கருணை
நம் மனதிலும் சட்டென்று ஒட்டிக்கொள்ளும். பார்வையே இத்தனை கருணை என்றால் அப்ப இவர்
பதிவுகள்? அத்தனையும் மென்மையான மல்லிப்பூ தீண்டலாக மெல்லிய
அன்பை பதிவுகளுடன் தொடர்வதாக அத்தனை அருமையாக இருக்கும். படிச்சு பார்த்து நீங்களே
உணர்வீர்கள்... அம்மாவின் மென்மையான பதிவுகளில் சில உங்கள் பார்வைக்காக...
இந்த மதுரகவியின் வரிகள்
எல்லாமே ரசிக்கும்படியாக சிலாகிக்கும்படியாக எளிமையாக என்னவோ நம்ம பக்கத்துவீட்டு
குழந்தை நம்மிடம் பேசுவது போல படைப்புகள் அத்தனை இயல்பாக இருக்கும். படித்து
தான் பாருங்களேன்.
இவர்களை தெரியாத பதிவர்களே
இருக்கமுடியாது என்பது என் நம்பிக்கை. நானெல்லாம் ஒரு நாள் ஒரு பதிவு போட்டாலே
எனக்கு கைகள், தோள்பட்டை
முதுகு வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் இவர்கள் தினமும் சிரத்தையுடன் அழகிய
பொருத்தமான படங்கள் சேகரித்து சுவாரஸ்யமாக நம்மை செலவில்லாமல் ஒவ்வொரு
இடத்துக்கும் அழைத்துச்சென்று அங்கே அந்த கோயில்களின் வரலாற்றை, அது தொடர்பான செய்திகளை, அதற்கான ஸ்லோகங்களை ஒன்று
கூட விடாமல் மிக சிரத்தையுடன் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே... ஆன்மீக பதிவுகள்
என்றால் எனக்கு சட்டென இவர் நினைவு தான் வரும்.... பார்ப்போமா இவர் பதிவுகளில் சில?
வேதாம்மா மனதிற்கு எப்போதும்
வயது 10. அத்தனை சுறுசுறுப்பும் குழந்தைச்சிரிப்புமாக தான் இருப்பார்.. நான் எப்போது தொலைபேசியில்
கதைத்தாலும் ஒரு குழந்தையிடம் பேசுவது போலவே ஒரு உணர்வு இருக்கும் எனக்கு. அத்தனை
சந்தோஷமும் குரலிலிலும் இவர் எழுதும் கவிதை வரியிலும் தெறிக்கும் என்றால்
பாருங்களேன். வேதாம்மாவின் சில பதிவுகளை பார்ப்போமா?
இவரின் இனிமையான குரல், பாடிக்கேட்டிருக்கிறேன். திண்மையான
பதிவுகள் வாசித்து அறிந்திருக்கிறேன். மென்மையான மனது பேசி அறிந்திருக்கிறேன். இவரின்
நட்பு எனக்கு கிடைத்தது எனக்கு மிக சந்தோஷம் என்றே சொல்வேன். இவர்
பதிவுகளில் உயிர்ப்பு இருப்பதை நானே உணர்ந்திருக்கிறேன் பலமுறை.... உங்களுக்கும்
படிக்கத்தோணுகிறது தானே இவர் பதிவுகளை?? பார்ப்போமா?
பதிவுகளை மட்டுமே பார்த்து என்னிடம் அன்புக்கொண்ட மிக அற்புதமான பெண் ஸாதிகா. பதிவுகளில் சிரிக்கவும் வைக்கமுடியும் என்று சீனிமுட்டாய் ஸ்ரீனிவாசனின் கதையில் சொல்லி இருக்காங்க பாருங்களேன்.
பதிவர்
மாநாடு நிகழ்ச்சி மூலம் அறிந்த மிக அன்பான தங்கை சசி..மின்னல்வரிகள் பாலகணேஷ்
மூலமாக தான் அறியப்பெற்றேன்.. இந்த தென்றலின் கனவு கூட பதிவர் மாநாடு அன்று
நிறைவேறியது. அன்பு வாழ்த்துகள் தங்கையே..தன் இனிய கவிதைகளால் தென்றலின் கவிதை
வரிகளை பார்ப்போமா?
என் அன்பு அண்ணி… மெத்த படித்தவர். ஆனால் அமைதியே
அன்பே உருவானவர். நான் வலைச்சரம் ஒரு வாரம் எழுதனும் எப்படி செய்வதுன்னு தெரியலன்னு
விழித்தபோது அருமையான யோசனைகள் தந்தவர். இவர் வலைப்பூவில் இருக்கும் அருமையான பதிவுகள்
சில பார்ப்போமா?
அம்பாளுக்கு அடியாள் என்று
சொல்லிக்கொள்ளும் இந்த தங்கையின் வீரமான எழுத்துகள் எனக்கு மிக மிக இஷ்டம்.
அன்பும் பரிவும் எத்தனைக்கு இருக்கிறதோ மனதில் அத்தனைக்கும் தவறு கண்டால் சீறும்
பாரதியாய் தெறித்திருக்கிறது நெருப்பு வரிகள் கவிதையில்.... நட்பிலும் அன்பிலும்
குழந்தையாய் என் மனதில் என்றும் நிலைத்திருக்கும் இந்த தங்கையின் வரிகளையும் தான்
சிலவற்றை பார்ப்போமே...
இன்றைய நாள் முழுதும் வெற்றிகளையும் நல்லவைகளும் மட்டுமே எல்லோருக்கும் கிடைக்க என் அன்பு பிரார்த்தனைகள்.
|
|
சாதனை மகளிராய் 10 வலைப்பூக்களை மேலும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அக்கா. இங்கு குறிப்பிட்டிருக்கும் வலைப்பூக்கள் எனக்குப் புதியனவே! எல்லாவற்றையும் காலம் கிடைத்திடும் போது பார்வையிட முயற்சிக்கின்றேன்.
ReplyDeleteநன்றி
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று எனது வலைப்பூவில் http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteமிளிருகிறது வலைசரம் உங்கள் கை வண்ணத்தால் வாழ்த்துக்கள் தோழி
அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteஉங்களின் உழைப்புக்கும் பாராட்டுகள்.
//இன்று நான் மிகவும் நேசிக்கும் சிலரின் பதிவுகளை பகிர இருக்கிறேன். இன்று பதியப்படும் எல்லோருமே நம் நாட்டின் கண்களாகப்போற்றும் அன்புப்பெண்கள் தான்.//
ReplyDeleteநாட்டின் கண்களாகப் போற்றும் அன்புப் பெண்களை என் இரு சாதாக் கண்களால், இன்றைய வலைச்சரத்தின் மூலம் அறிய வைத்துள்ளது, என் மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது, மஞ்சு.
தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்புப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து முத்துக்களுக்கும், தங்கம், வைரம், வைடூர்யம் போன்ற புகழ் பெற்ற பதிவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
பிரியமுள்ள,
VGK
வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்பவர்கள், அவர்கள் தினமும் அடையாளம் காட்டும் பதிவுகளைப்பற்றி, சம்பந்தப் பட்ட பதிவர்களுக்கு, அவர்களின் லேட்டஸ்ட் பதிவுகளில் உள்ள பின்னூட்டப்பெட்டியில் தகவல் தெரிப்பது வழக்கம்.
ReplyDeleteஅவ்வாறு தகவல் தெரிவிக்கும் போது, வலைச்சரத்தின் இணைப்புடன் தகவல் தெரிவித்தால், அவர்கள் மகிழ்ச்சியுடன் உடனே வருகை தந்து கருத்துக்கள் கூற வசதியாக இருக்கும்.
இது தங்கள் தகவலுக்காக மட்டும் நான் எழுதியுள்ளேன்.
தாங்கள் அதுபோல செய்கிறீர்களோ இல்லையோ என எனக்கு சரியாகத் தெரியவில்லை.
OK மஞ்சு .... பார்ப்போம்.
தொடர்ந்து வெற்றி ந்டை போடுங்கள்.
பிரியமுள்ள
கோபு அண்ணா
ஆன்மீக பதிவுகள் என்றால் எனக்கு சட்டென இவர் நினைவு தான் வரும்...//
ReplyDeleteசிறப்பாக படம் பிடித்து என்னை எனக்கே அறிமுகப்படுத்திய அன்பு உள்ளத்திற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
இணையத்தில் கிடைத்த அன்பு அக்காவே என்னென்று சொல்ல உங்கள் குரல் இன்னமும் என் செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. என்று காண்பேனோ ?
ReplyDeleteஅறிமுகங்கள் படலம் சிறப்பு,,,
ReplyDeleteஅனைத்து தளங்களும் நான் தொடரும் சிறப்பான தளங்கள்... மிக்க நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இன்று அறிமுகப்படுத்தியவர் அனைவருமே மிகச்சிறந்த வலைப்பதிவாளர்கள்.
ReplyDeleteதிருமதி லக்ஷ்மியும் திருமதி ராஜேஸ்வரியும் திருமதி சசிகலா அவர்களும்
தமக்கென ஒரு பாதை அமைத்து அதில் சிறப்பென செயல்படுபவர்கள். தினம் தினம்
நான் வணங்கும் முதல் கோவில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் வலைப்பதிவு தான்
என்றால் மிகையாகாது.
அண்மையில் சசிகலா மேடம் அவர்கள் வெளியிட்டு வந்த நூல் படித்தேன். என்றோ
காவிரியில் ஆடிப்பெருக்கன்று அடித்து வந்த வெள்ளப்பெருக்கில் நீந்திய
சுகம் எனக்கு நினைவுக்கு வந்தது. கவிதை நீரோட்டம் எனின் அவர்கள் கங்கை.
மற்ற இருவரின் வலைகளுக்கும் சென்று பார்க்கிறேன். மஞ்சு பாஷிணி அவர்கள்
என் வலைப்பதிவுக்கு வந்தது எனக்கு மகிழ்வை அளிக்கிறது.
சுப்பு ரத்தினம்.
www.menakasury.tumblr.com
//வார்த்தைகள் நம்மிடம் இருக்கும் வரை நாம் அதற்கு எஜமான். நம்மை விட்டு கோபத்துடன் வெளியேறிய வார்த்தைகள் நமக்கு எஜமானாகிவிடும். //
ReplyDeleteஅருமையான சிந்தனை முத்து
இன்றைய சரத்தின் மலர்கள் அனைவருமே நான் விரும்பி வாசிப்பவர்களின் பக்கம் ...தோழி ரமா ..சில நாட்களாக எழுதவில்லை
மீண்டும் வரணும் அவங்க ..
அனைவரும் அருமையான பதிவர்கள் ...
அனைவரும் என் உள்ளம் கவர்ந்த
ReplyDeleteஅருமையான பதிவர்கள்
அறிமுகத்திற்கு என் மனமார்ந்த நன்றி
பதிவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கண்களில் மழையை இனிய
ReplyDeleteகருத்தினால் பொழியவைத்த உன்
அன்பினை நான் பெற இங்கு
என்ன தவம் செய்தேனோ !!!!!......
அம்பாளடியாளுக்கு இன்னொரு அக்கா !...
இந்த வலைத்தளத்தில் உள்ள சுகமே இதுதான் .இதற்காக ஒரு
கவிதை என்ன ஓராயிரம் கவிதைகள் வடிக்க இதயம் துடிக்கும் .
மிக்க நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கும் இன்றைய அறிமுக
பகிர்விற்கும்.இங்கு உள்ளவர்கள் அனைவரும் என் இதயத்தில்
ஏற்கனவே குடிகொண்டிருக்கும் நல் உறவுகள், சிறந்த படைப்பாளிகள்
இவர்கள் அனைவருக்கும் இந்த அம்பாளடியாளின் வாழ்த்துக்கள் .
மிகச் சிறப்பாக அனைவரையும் அறிமுகம் செய்து வைத்த என் அன்புச்
சகோதரி உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
அபாரமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் அறிவேன். குறிப்பிட்டுள்ள பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்திடுவேன். உங்கள் உழைப்புக்கு பாராட்டுகள் மஞ்சுபாஷிணி. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகெளசி மேடமும் செல்வி சங்கரும் எனக்குப் புதிது. மற்ற அனைத்து ரத்தினங்களும் நான் ரசித்துப் படிப்பவர்கள் தான். புதியவர்களை அவசியம் படித்து விடுகிறேன் மஞ்சு. அருமையான அறிமுகங்களைத் தொடர்ந்து தந்து அசத்துகிறீர்கள். இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDeleteஅனைவரும் அறிமுகமானவர்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
ஒரே ஒருவரைத் தவிர மற்ற தாய்க்குலங்களை நன்கு அறிவேன்..அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் உங்களுக்கு எனது நன்றியினையும் சொல்லி விடைபெறுகிறேன்..நன்றி.. நாளை காலை வருகிறேன்..
ReplyDelete//சிவஹரி said...
ReplyDeleteசாதனை மகளிராய் 10 வலைப்பூக்களை மேலும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அக்கா. இங்கு குறிப்பிட்டிருக்கும் வலைப்பூக்கள் எனக்குப் புதியனவே! எல்லாவற்றையும் காலம் கிடைத்திடும் போது பார்வையிட முயற்சிக்கின்றேன்.
நன்றி//
அன்பு நன்றிகள் தம்பி...
// சேகர் said...
ReplyDeleteஅனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று எனது வலைப்பூவில் http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் சேகர்.
// கோவை மு சரளா said...
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
மிளிருகிறது வலைசரம் உங்கள் கை வண்ணத்தால் வாழ்த்துக்கள் தோழி//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் சரளா....
//கோவை2தில்லி said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.
உங்களின் உழைப்புக்கும் பாராட்டுகள்//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் தோழி.
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//இன்று நான் மிகவும் நேசிக்கும் சிலரின் பதிவுகளை பகிர இருக்கிறேன். இன்று பதியப்படும் எல்லோருமே நம் நாட்டின் கண்களாகப்போற்றும் அன்புப்பெண்கள் தான்.//
நாட்டின் கண்களாகப் போற்றும் அன்புப் பெண்களை என் இரு சாதாக் கண்களால், இன்றைய வலைச்சரத்தின் மூலம் அறிய வைத்துள்ளது, என் மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது, மஞ்சு.
தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்புப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து முத்துக்களுக்கும், தங்கம், வைரம், வைடூர்யம் போன்ற புகழ் பெற்ற பதிவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
பிரியமுள்ள,
VGK//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா.
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்பவர்கள், அவர்கள் தினமும் அடையாளம் காட்டும் பதிவுகளைப்பற்றி, சம்பந்தப் பட்ட பதிவர்களுக்கு, அவர்களின் லேட்டஸ்ட் பதிவுகளில் உள்ள பின்னூட்டப்பெட்டியில் தகவல் தெரிப்பது வழக்கம்.
அவ்வாறு தகவல் தெரிவிக்கும் போது, வலைச்சரத்தின் இணைப்புடன் தகவல் தெரிவித்தால், அவர்கள் மகிழ்ச்சியுடன் உடனே வருகை தந்து கருத்துக்கள் கூற வசதியாக இருக்கும்.
இது தங்கள் தகவலுக்காக மட்டும் நான் எழுதியுள்ளேன்.
தாங்கள் அதுபோல செய்கிறீர்களோ இல்லையோ என எனக்கு சரியாகத் தெரியவில்லை.
OK மஞ்சு .... பார்ப்போம்.
தொடர்ந்து வெற்றி ந்டை போடுங்கள்.
பிரியமுள்ள
கோபு அண்ணா//
மன்னித்துவிடுங்கள் அண்ணா..முடிந்தவரை தகவல் தெரிவித்து இருக்கிறேன், லிங்க் தர மறந்துட்டேன் அண்ணா. இனி கவனமாக செய்கிறேன் அண்ணா.
எத்தனை அழகாக முத்துக்களைக் கோர்த்து மாலையாக்கியது போல நேர்த்தியாக இப் பணியை செய்துள்ளீர்கள் அக்கா.. உங்கள் வாசிப்பு திரன் ப்ரம்மிக்க வைக்கிறது. மிக அழகான பணி. அனைத்து தளங்களையும் நேரம் கிடைக்கையில் படித்துவிடுவேன் அக்கா. மிக்க நன்றி.
ReplyDelete//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஆன்மீக பதிவுகள் என்றால் எனக்கு சட்டென இவர் நினைவு தான் வரும்...//
சிறப்பாக படம் பிடித்து என்னை எனக்கே அறிமுகப்படுத்திய அன்பு உள்ளத்திற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா...
// Sasi Kala said...
ReplyDeleteஇணையத்தில் கிடைத்த அன்பு அக்காவே என்னென்று சொல்ல உங்கள் குரல் இன்னமும் என் செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. என்று காண்பேனோ ?//
அடுத்த வருடம் ஓடி வந்துடறேன் என் பாப்புக்குட்டி சசியைப் பார்க்க....
//தொழிற்களம் குழு said...
ReplyDeleteஅறிமுகங்கள் படலம் சிறப்பு,,,//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.
//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅனைத்து தளங்களும் நான் தொடரும் சிறப்பான தளங்கள்... மிக்க நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் தனபாலன்.
//sury Siva said...
ReplyDeleteஇன்று அறிமுகப்படுத்தியவர் அனைவருமே மிகச்சிறந்த வலைப்பதிவாளர்கள்.
திருமதி லக்ஷ்மியும் திருமதி ராஜேஸ்வரியும் திருமதி சசிகலா அவர்களும்
தமக்கென ஒரு பாதை அமைத்து அதில் சிறப்பென செயல்படுபவர்கள். தினம் தினம்
நான் வணங்கும் முதல் கோவில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் வலைப்பதிவு தான்
என்றால் மிகையாகாது.
அண்மையில் சசிகலா மேடம் அவர்கள் வெளியிட்டு வந்த நூல் படித்தேன். என்றோ
காவிரியில் ஆடிப்பெருக்கன்று அடித்து வந்த வெள்ளப்பெருக்கில் நீந்திய
சுகம் எனக்கு நினைவுக்கு வந்தது. கவிதை நீரோட்டம் எனின் அவர்கள் கங்கை.
மற்ற இருவரின் வலைகளுக்கும் சென்று பார்க்கிறேன். மஞ்சு பாஷிணி அவர்கள்
என் வலைப்பதிவுக்கு வந்தது எனக்கு மகிழ்வை அளிக்கிறது.
சுப்பு ரத்தினம்.
www.menakasury.tumblr.com//
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சுப்பு ஐயா.... உங்க மெயில் முகவரி தாங்கோ ஐயா.
//angelin said...
ReplyDelete//வார்த்தைகள் நம்மிடம் இருக்கும் வரை நாம் அதற்கு எஜமான். நம்மை விட்டு கோபத்துடன் வெளியேறிய வார்த்தைகள் நமக்கு எஜமானாகிவிடும். //
அருமையான சிந்தனை முத்து
இன்றைய சரத்தின் மலர்கள் அனைவருமே நான் விரும்பி வாசிப்பவர்களின் பக்கம் ...தோழி ரமா ..சில நாட்களாக எழுதவில்லை
மீண்டும் வரணும் அவங்க ..
அனைவரும் அருமையான பதிவர்கள் ...//
அன்பின் நிர்மலா,
மனம்நிறைந்த அன்புநன்றிகள்பா.. ராம்வி என்னிடம் மெயிலில் தொடர்பு கொண்டார்கள்பா.. கண்டிப்பா திரும்ப வருவாங்க...
// Ramani said...
ReplyDeleteஅனைவரும் என் உள்ளம் கவர்ந்த
அருமையான பதிவர்கள்
அறிமுகத்திற்கு என் மனமார்ந்த நன்றி
பதிவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்.
//அம்பாளடியாள் said...
ReplyDeleteகண்களில் மழையை இனிய
கருத்தினால் பொழியவைத்த உன்
அன்பினை நான் பெற இங்கு
என்ன தவம் செய்தேனோ !!!!!......
அம்பாளடியாளுக்கு இன்னொரு அக்கா !...
இந்த வலைத்தளத்தில் உள்ள சுகமே இதுதான் .இதற்காக ஒரு
கவிதை என்ன ஓராயிரம் கவிதைகள் வடிக்க இதயம் துடிக்கும் .
மிக்க நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கும் இன்றைய அறிமுக
பகிர்விற்கும்.இங்கு உள்ளவர்கள் அனைவரும் என் இதயத்தில்
ஏற்கனவே குடிகொண்டிருக்கும் நல் உறவுகள், சிறந்த படைப்பாளிகள்
இவர்கள் அனைவருக்கும் இந்த அம்பாளடியாளின் வாழ்த்துக்கள் .
மிகச் சிறப்பாக அனைவரையும் அறிமுகம் செய்து வைத்த என் அன்புச்
சகோதரி உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .//
மனம் நிறைந்த அன்பையும் கவிதை வரிகளாக பொழிந்துவிட்டீர்களேப்பா...
மனம் நிறைந்த அன்புநன்றிகள் அம்பாளடியாள்.
//கீதமஞ்சரி said...
ReplyDeleteஅபாரமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் அறிவேன். குறிப்பிட்டுள்ள பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்திடுவேன். உங்கள் உழைப்புக்கு பாராட்டுகள் மஞ்சுபாஷிணி. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் கீதம்.
//பால கணேஷ் said...
ReplyDeleteகெளசி மேடமும் செல்வி சங்கரும் எனக்குப் புதிது. மற்ற அனைத்து ரத்தினங்களும் நான் ரசித்துப் படிப்பவர்கள் தான். புதியவர்களை அவசியம் படித்து விடுகிறேன் மஞ்சு. அருமையான அறிமுகங்களைத் தொடர்ந்து தந்து அசத்துகிறீர்கள். இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும்.//
இவங்க ரெண்டு பேரையும் கண்டுப்பிடிச்சா உங்களுக்கு நூறு மார்க் தருவேன் கணேஷா...
மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா
//மாதேவி said...
ReplyDeleteஅனைவரும் அறிமுகமானவர்கள்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
மனம் நிறைந்த அன்பு வரவேற்புகளுடன் கூடிய நன்றிகள் மாதேவி.
//மதுமதி said...
ReplyDeleteஒரே ஒருவரைத் தவிர மற்ற தாய்க்குலங்களை நன்கு அறிவேன்..அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் உங்களுக்கு எனது நன்றியினையும் சொல்லி விடைபெறுகிறேன்..நன்றி.. நாளை காலை வருகிறேன்..//
அதென்னப்பா நாளை காலை??
மனம் நிறைந்த அன்புநன்றிகள் மதுமதி.
//SOS said...
ReplyDeleteஎத்தனை அழகாக முத்துக்களைக் கோர்த்து மாலையாக்கியது போல நேர்த்தியாக இப் பணியை செய்துள்ளீர்கள் அக்கா.. உங்கள் வாசிப்பு திரன் ப்ரம்மிக்க வைக்கிறது. மிக அழகான பணி. அனைத்து தளங்களையும் நேரம் கிடைக்கையில் படித்துவிடுவேன் அக்கா. மிக்க நன்றி.//
ஹை ஹேமா... எப்டி இருக்கேப்பா.. எத்தனை நாளாச்சு உன்னைப்பார்த்து.. மறக்கவே முடியாதுப்பா நாம் எல்லோரும் சந்தித்த நாள்...
மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா.
இனிய வரவேற்புகள் ஹேமா அக்கா.!
ReplyDeleteஎனக்குப்பிடித்த பதிவர்கள் வரிசையில் ஆன்மீகப்பதிவாளராக "மணிராஜ்"மேடத்தைக் குறிப்பிட்டிருப்பது சாலப்பொருந்தும்.
ReplyDeleteஉங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteநம்மில் இருந்து வெளிபடும் வார்த்தைகள் எப்போதும் நல்லவையாக இருக்கவேண்டும். அப்படி நல்லவையாக இருக்கவேண்டுமென்றால் பொறுமையாக அமைதியான மனதுடன் இருக்கவேண்டும். அமைதியாக இருக்க கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படவேண்டும். கோபத்தில் சிதறப்படும் வார்த்தைகள் அன்னம் அல்லவே சிதறியதை சுத்தம் செய்யவும் எடுக்கவும்… வார்த்தைகள் நம்மிடம் இருக்கும் வரை நாம் அதற்கு எஜமான். நம்மை விட்டு கோபத்துடன் வெளியேறிய வார்த்தைகள் நமக்கு எஜமானாகிவிடும். //
ReplyDeleteமிக நன்றாக சொன்னீர்கள்.
கதம்ப உணர்வுகளில் வந்தவர்களில் ஒருவர் மட்டும் எனக்கு பரீட்சையம் இல்லை மற்றவ்ர்களை படித்து இருக்கிறேன்.
எல்லோரும் தங்களுக்கு உள்ள தனித்தன்மையுடன் எழுதுவார்கள்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
வலைச்சரம் மிக அருமையாக இருக்கிறது.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
எழுதி அஞ்சல் செய்யப்படாத மடல் என்று நினைத்துக் கொண்டு நான் தொடாமலே விட்டு விட்ட பகுதிகளை மீண்டும் தொடர்வதற்கு இது அறிமுகமோ ----- !
ReplyDeleteஎனது படைப்புகளீல் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளீல் இவையும் அடங்கும்.
பகிர்வுக்கு ந்ன்றி
செல்வி ஷங்கர்
இன்று நான் மிகவும் நேசிக்கும் சிலரின் பதிவுகளை பகிர இருக்கிறேன். //அன்பின் மஞ்சுபாஷினி,இந்த வட்டத்தினுள் என்னையும் இணைத்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.வலைச்சர ஆசிரியப்பணியை செவ்வன ஆற்றி வருகின்றீர்கள்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாலையில் பார்த்த போது இன்றைய பதிவு வரவில்லை. போய்விட்டேன். மாலையில் பார்த்தேன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி அறிமுகங்களிற்கு. அத்துடன் என்னையும் அறிமுகப் படுத்தியுள்ளதும் மகிழ்ச்சி மிக்க மிக்க நன்றி. அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல்வாழ்த்து.
ReplyDeleteஇதை முகநூலில் படத்துடன் பகிர்ந்துள்ளேன். 45வது கருத்தாளியாகத்தான் வர முடிந்துள்ளது. முகநூல் லிங்க் தந்துள்ளேன்
வேதா. இலங்காதிலகம்.
https://www.facebook.com/#!/vetha.elangathilakam
அனைவருமே அறிமுகமானவர்கள் என்றாலும் படித்திராத சுட்டிகள் பல தந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஅருமையான பெண்பதிவர்களாய் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஆச்சரியம் என்னவென்றால் அத்தனை பேருமே எனக்கு அறிமுகம். சில சுட்டிகள் படித்திராதவை. மீண்டும் வாசிக்கிறேன்.
ReplyDeleteமனோ மேடம் அவர்களின் சமையல் பகுதிகளும் சுவாரஸ்யமானவை.
ReplyDeleteலக்ஷ்மிம்மா.... எளிமை.
மதுரகவி..சுவாரஸ்யம், ஆனால் நீண்டநாளாய் அஞ்ஞாதவாசம்!
மணிராஜ்.... சான்சே இல்லை. இப்படிப் பதிவுகள் போட யாராலும் முடியாது என்று நினைக்க வைப்பவர்.
ஸாதிகா... சுவாரஸ்யம். பல்சுவைப் பதிவர்.
மற்ற அறிமுகப் பதிவர்களை எனக்குத் தெரியாது! (உங்கள் எழுத்துகளை எனக்குத் தெரியும் சகோதரி. அப்பா நானு என்று மறுபடியும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :))))) பின்னூட்ட ஸ்பெஷலிஸ்ட் நீங்கள்)
மஞ்சு சிறப்பான அறிமுகங்கள். அதில் என்னையும் சேர்த்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு நன்றி அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமிகச்சிறப்பானவர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க மஞ்சு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete//சந்திர வம்சம் said...
ReplyDeleteஎனக்குப்பிடித்த பதிவர்கள் வரிசையில் ஆன்மீகப்பதிவாளராக "மணிராஜ்"மேடத்தைக் குறிப்பிட்டிருப்பது சாலப்பொருந்தும்.//
ஆமாம்பா உண்மையே....
மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.
//தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteஉங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா.
//கோமதி அரசு said...
ReplyDeleteஎல்லோரும் தங்களுக்கு உள்ள தனித்தன்மையுடன் எழுதுவார்கள்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
வலைச்சரம் மிக அருமையாக இருக்கிறது.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் கோமதிம்மா..
// செல்விஷங்கர் said...
ReplyDeleteஎழுதி அஞ்சல் செய்யப்படாத மடல் என்று நினைத்துக் கொண்டு நான் தொடாமலே விட்டு விட்ட பகுதிகளை மீண்டும் தொடர்வதற்கு இது அறிமுகமோ ----- !
எனது படைப்புகளீல் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளீல் இவையும் அடங்கும்.
பகிர்வுக்கு ந்ன்றி
செல்வி ஷங்கர்//
ஆமாம் அண்ணி.... மீண்டும் உங்கள் எழுத்துப்பணி தொடரவேண்டும் அண்ணி இது என் வேண்டுகோள்...
மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணி.
//ஸாதிகா said...
ReplyDeleteஇன்று நான் மிகவும் நேசிக்கும் சிலரின் பதிவுகளை பகிர இருக்கிறேன். //அன்பின் மஞ்சுபாஷினி,இந்த வட்டத்தினுள் என்னையும் இணைத்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.வலைச்சர ஆசிரியப்பணியை செவ்வன ஆற்றி வருகின்றீர்கள்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஸாதிகா..
முதலில் மஞ்சுவுக்கு நன்றி. வலைச்சரம் அறிமுகம் ஒரு பாரிய பொறுப்பு அதைப் பயன்பட அளிப்பது அவரவர் திறமையின் படைப்பு. பலரின் அறிமுகம் இதன் மூலம் கிடைக்கின்றது அதை தேடித் பெற்று பலர் அறியத் தருவது என்பது இலகுவான காரியமன்று . என்னைப் பற்றி மஞ்சு அறிந்தது கூறினார் . அதை மேலும் அறிந்து கொள்வது வாசகர்கள் நேரத்தையும் ஆர்வத்தையும் பொறுத்தது . மஞ்சு பாஷினியின் எழுத்தாற்றல் நன்றாக நான் அறிவேன். பிறரை வாழ்த்துவதன் மூலம் நிம்மது பெறுபவர் . மேலும் மேலும் உடலாலும் உள்ளத்தாலும் மேன்மை பெற அவரை மனதாலும் உள்ளத்தாலும் நன்றி கூறி வாழ்த்துகிறேன்
ReplyDelete// kovaikkavi said...
ReplyDeleteகாலையில் பார்த்த போது இன்றைய பதிவு வரவில்லை. போய்விட்டேன். மாலையில் பார்த்தேன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி அறிமுகங்களிற்கு. அத்துடன் என்னையும் அறிமுகப் படுத்தியுள்ளதும் மகிழ்ச்சி மிக்க மிக்க நன்றி. அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல்வாழ்த்து.
இதை முகநூலில் படத்துடன் பகிர்ந்துள்ளேன். 45வது கருத்தாளியாகத்தான் வர முடிந்துள்ளது. முகநூல் லிங்க் தந்துள்ளேன்
வேதா. இலங்காதிலகம்.
https://www.facebook.com/#!/vetha.elangathilakam//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் வேதாம்மா.
//அப்பாதுரை said...
ReplyDeleteஅனைவருமே அறிமுகமானவர்கள் என்றாலும் படித்திராத சுட்டிகள் பல தந்திருக்கிறீர்கள்.//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் அப்பாதுரை.
//விச்சு said...
ReplyDeleteஅருமையான பெண்பதிவர்களாய் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஆச்சரியம் என்னவென்றால் அத்தனைபேருமே எனக்கு அறிமுகம். சில சுட்டிகள் படித்திராதவை. மீண்டும் வாசிக்கிறேன்.//
அன்பு வரவேற்புகள் விச்சு
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் விச்சு.
//ஸ்ரீராம். said...
ReplyDeleteமனோ மேடம் அவர்களின் சமையல் பகுதிகளும் சுவாரஸ்யமானவை.
லக்ஷ்மிம்மா.... எளிமை.
மதுரகவி..சுவாரஸ்யம், ஆனால் நீண்டநாளாய் அஞ்ஞாதவாசம்!
மணிராஜ்.... சான்சே இல்லை. இப்படிப் பதிவுகள் போட யாராலும் முடியாது என்று நினைக்க வைப்பவர்.
ஸாதிகா... சுவாரஸ்யம். பல்சுவைப் பதிவர்.
மற்ற அறிமுகப் பதிவர்களை எனக்குத் தெரியாது! (உங்கள் எழுத்துகளை எனக்குத் தெரியும் சகோதரி. அப்பா நானு என்று மறுபடியும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :))))) //
அப்பநானு? :) நீங்க கொடுத்ததை நான் தான் நைசா அழிச்சுட்டேனே ஸ்ரீராம் :) சும்மா சொன்னேன்பா...
அழகா ஒவ்வொருவரின் தனித்தன்மையை குறிப்பிட்டு எழுதியது சிறப்பு ஸ்ரீராம்....
மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா... நான் ஒன்னும் பின்னூட்ட ஸ்பெஷல் இல்லியாக்கும்.... நிஜம்ம்ம்மா தான்பா...
//Lakshmi said...
ReplyDeleteமஞ்சு சிறப்பான அறிமுகங்கள். அதில் என்னையும் சேர்த்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு நன்றி அனைவருக்கும் வாழ்த்துகள்.//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்ஷ்மிம்மா..
//Jaleela Kamal said...
ReplyDeleteமிகச்சிறப்பானவர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க மஞ்சு அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஜலீலாகமால்
அன்பு மஞ்சுபாஷிணி ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு கோணத்தில் நல்லெழுத்து படைப்பவர்கள்.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்டதாலேயே இந்தச் சரம் இன்னும் மின்னுகிறது. வாழ்த்துகள் மா.
அனைவரும் என் மனமும் கவர்ந்தவர்கள்.வாழ்த்துக்கள்.ஆஹா!நீங்க ரொம்ப வித்தியாசமானவங்க மஞ்சு.பகிர்வே சான்று.
ReplyDelete//சந்திரகௌரி said...
ReplyDeleteமுதலில் மஞ்சுவுக்கு நன்றி. வலைச்சரம் அறிமுகம் ஒரு பாரிய பொறுப்பு அதைப் பயன்பட அளிப்பது அவரவர் திறமையின் படைப்பு. பலரின் அறிமுகம் இதன் மூலம் கிடைக்கின்றது அதை தேடித் பெற்று பலர் அறியத் தருவது என்பது இலகுவான காரியமன்று . என்னைப் பற்றி மஞ்சு அறிந்தது கூறினார் . அதை மேலும் அறிந்து கொள்வது வாசகர்கள் நேரத்தையும் ஆர்வத்தையும் பொறுத்தது . மஞ்சு பாஷினியின் எழுத்தாற்றல் நன்றாக நான் அறிவேன். பிறரை வாழ்த்துவதன் மூலம் நிம்மது பெறுபவர் . மேலும் மேலும் உடலாலும் உள்ளத்தாலும் மேன்மை பெற அவரை மனதாலும் உள்ளத்தாலும் நன்றி கூறி வாழ்த்துகிறேன்//
அட சந்திரகௌரி வந்துட்டீங்களாப்பா? உங்களை காணலையேன்னு நினைச்சேன்பா... நட்பின் மேன்மை எத்தனை உயர்வு.. உங்கள் வரிகளை மீண்டும் மீண்டும் படிக்கிறேன். எத்தனை அழகாய் என் மனதை படம் பிடித்து காட்டிவிட்டீர்கள். நம் இருவரின் அன்பு எப்போதும் இதே போல் நிலைத்திருக்க வேண்டுகிறேன்பா...
மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா.
// வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஅன்பு மஞ்சுபாஷிணி ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு கோணத்தில் நல்லெழுத்து படைப்பவர்கள்.
அறிமுகம் செய்யப்பட்டதாலேயே இந்தச் சரம் இன்னும் மின்னுகிறது. வாழ்த்துகள் மா.//
உங்கள் ஆசி அம்மா... மனம் நிறைந்த அன்புநன்றிகள் அம்மா.
//Asiya Omar said...
ReplyDeleteஅனைவரும் என் மனமும் கவர்ந்தவர்கள்.வாழ்த்துக்கள்.ஆஹா!நீங்க ரொம்ப வித்தியாசமானவங்க மஞ்சு.பகிர்வே சான்று.//
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஆசியாஉமர்.