மூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நம்பிக்கையே ஆணி வேர்
➦➠ by:
சிவஹரி
வானவில்லின் ஏழு நிறங்களான ஊதா, அடர் நீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு ஆகிய ஏழு நிறங்களின் கலவை தான் வெண்மையென்று படித்தாய் நினைவு. அதனால் தான் என்னவோ சூரிய பெருமானும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவதாய் ஆன்மீகமும் குறிப்பிடுகின்றது.
ஆன்மீகத்தின் அடிப்படையே நம்பிக்கை என்ற வேர் தான். நம் வாழ்வில் முன்னேற்றம் வேண்டுமெனில் முதலில் நம்மிடமும் இறைவனிடமும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்கள்.
எண்சாண் உடம்பு இயங்கிக் கொண்டிருப்பதும் நம்பிக்கை என்ற ஒரு அச்சாணியிலே தான். கண்ணிற்கு புலப்படாத காற்று நம் உதிரத்தில் கலந்து சரீரத்தை எப்படி இயக்குவிக்கின்றதோ அதே நம்பிக்கை என்னும் சக்கரம் தான் உறவுகளின் வலுவிற்கு அடித்தளமாகவும் அமைகின்றது.
துவழும் மனதிற்கு துரிதமாய் வேண்டியதொரு ஊக்கி நம்பிக்கை என்ற ஒரு நற்பொருளே.! நாம் மீது பிறர் காட்டும் கரிசனத்தின் வெளிப்பாடும் நம்பிக்கையைப் பொறுத்தே அமையும்.
இன்னும் நம்பிக்கையைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால் சில வலைப்பூக்களைப் பற்றிய அறிமுகம் தரவேண்டியிருப்பதால் அதன் பக்கமும் கொஞ்சங் கவனம் செலுத்திடுவோம். வாருங்கள் உறவுகளே.,
பரஞ்சோதி
தான் பெற்ற கல்வியினையும், அறிவுச் செல்வத்தினையும் வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் இணையத்தில் பல்வேறு வகைகளில் தரவுகளை சேகரித்து தந்திருக்கின்றார்கள். அதன் வழியிலே அவர்களது சில வலைப்பூக்களையும் அதனில் நான் ரசித்த பதிவுகளையும் இங்கே காண்போமே!
சாதனையாளர்கள்:
சோதனைகளால் மனம் வேதனை அடைந்தாலும் தான் கொண்ட இலட்சியத்தின் பாதை நோக்கி பயணிக்கும் மாந்தரே சாதனையெனும் கனியினை புசித்து மகிழ்கின்றார்கள். அதன் வழியிலே இத்தளத்தில் பதிந்திருக்கும் கட்டுரைகளில் சிலவற்றின் மீயிணைப்பை இங்கே தருகின்றேன்.
7 மணி நேரத்தில் 65 கி.மீ ஓடிய 4 வயது சிறுவன்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற தமிழ் மாணவி
சிறுவர் பாடல்கள்:
அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நவயுக அறிவியலின் வளர்ச்சியினாலும், உலகின் வேகமான ஓட்டத்தினாலும் பலவற்றை கற்றுக் கொள்ள வழியின்றி போகலாம்.
இன்றும் நம் குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துவோர் நம்மில் மிகச் சிலரே. இந்தத் தளத்தில் இருக்கும் குழந்தைகளுக்கான பாடல்களில் சிலவற்றை மீயிணைப்பாகத் தருகின்றேன்.
மயிலே குயிலே
பள்ளிக் கூடம் போகலாமே
அழகர் யானை
சிறுவர் பூங்கா:
மாவீரன் சத்ரபதி சிவாஜிக்கு வீரக் கதைகளை சொல்லி வளர்த்தவர் அவரது தாயார் ஜீஜாபாய் அம்மையார். சிறு வயதிலே விதைக்கப்படும் உள்மனத்திடம் தான் அவன்/ள் பெரியவர் நிலையினை அடையும் போது பலன் கொடுக்கின்றது.
அத்தகைய நீதிக் கதைகளை சிறுவர் பூங்காவானது போதுமான அளவிற்கு நிரப்பி வைத்திருக்கின்றது. அவற்றில் சில.
கஞ்ச மகா பிரபு
நயவஞ்சக நரி
புத்தி பலம்
மகுட தீபன்
சிவனின் மீது தீராத அன்பு கொண்ட நம் மகுடதீபன் ஐயா, ஆடலரசன் என்று சிவபெருமானைத் துதித்தே ஒரு வலைப்பூ முழுமையும் சிவனின் பெருமைகளைப் பாடியிருக்கின்றார்கள். அவர்களது சில வலைப்பூக்களையும் அதில் என்னைக் கவர்ந்த பதிவுகளையும் காணத் தருவதில் மகிழ்வெனக்கு.
கவிதை – 1000:
மகுட தீபன் அவர்களின் கவிதை – 1000 தளத்திலிருந்து சில கவிதைகளுக்கான மீயிணைப்புகள்:
கவ்வேன்
பாணன் கேட்கிறான் . . .
சீதைதான் பெண்ணே நீ !
தமிழ் கவிதைகள்:
மகுட தீபன் அவர்களின் இறை பக்தியினையும், தமிழ்ப் பற்றினையும் தனது எழுத்துரு வடிவாய் காட்டியிருக்கின்றார்கள். அதனில் சிலவற்றை இங்கே தருகின்றேன்.
அற்புதமாய் எழுக
இன்னுமொரு முறைவருமோ
மண்ணில் தெரியுது சொர்க்கம்
ஆடலரசன்:
தில்லையம்பலவாணனின் மீது கொண்ட தீராத பற்றில் உருவான இத்தளத்திலிருந்தில் எனக்குப் பிடித்த சில பதிவுகளை இங்கே மீயிணைப்பாகத் தருகின்றேன்.
மனைக்காவல்
சோதி
மன்று
சேது பூமி:
திருப்புல்லாணி, திரு உத்திரகோசமங்கை, தேவிபட்டினம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய புண்ணிய தலங்களின் பெருமையை சேது பூமி எடுத்துச் சொல்கின்றது.
திரு உத்திரகோசமங்கையின் வரலாறு
தேவிபட்டினம் வரலாறு
கவியரங்கம்:
காணொளிகளாய் கவிடைத்திருக்கின்றார்கள். இதில் தாய் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.
கனவு மெய்ப்பட வேண்டும். – பாரதி விழா
முருகன் திருவடி – வள்ளலார் விழா
தாய்
புல்லாணிப் பக்கங்கள்
வைணவ மார்க்கத்தின் பெருமைகளைச் சொல்லிடும் ஓர் அருமையான வலைப்பூ. நிறுவனர் தி.ரகுவீரதயாள் ஐயா அவர்கள். இந்த வலைப்பூவினை ஆராய்ந்து சொல்லும் அளவிற்கான திறமை எனக்கில்லாததால் ஒரு சில பதிவுகளை இங்கே பதிய விரும்புகின்றேன்.
திருப்புல்லாணி மாலை
வெண்ணெய் உண்ட பெருமாயனாய் எங்கள் தேசிகன்
யுவாவின் எண்ணச் சிதறல்கள்
புதுக்கவிதை தோட்டத்திலே பூத்திருக்கும் ஓர் மலர். எந்தன் ஆருயிர்த் தோழியான யுவா அவர்களின் நீரில் இடும் கோலங்கள் கவிதை சகோதரம் ஒட்டக்கூத்தன் அவர்களால் முத்தமிழ் மன்றத்தின் வாயிலாக நடாத்தப்பட்ட
கவிதைப் போட்டியில் பரிசினைப் பெற்றது.
போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்களுக்காக தேர்வு சம்பந்தமான தகவல்களை தனியே திரட்டியும் கொண்டிருக்கின்றார்கள். இந்த வலைப்பூவில் என்னைக் கவர்ந்த கவிதைகள்
நீரில் இடும் கோலங்கள்.
வாழ்வின் இறுதி நாள்
ஏக்கம்!!!
விட்டில் பூச்சிகள்
தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை என்று எளிமை நடையினை இயல்பிலே உருவாகக் கொண்டவர், எதற்கும் சளைக்காத மனிதர்; வாழ்வில் அன்பினையும், நகைச்சுவைத் தன்மையினையும் தன் எழுத்துகளில் மூலம் நமக்கு சொல்லிடும் மாந்தர்.
இலங்கைத் தமிழிலே இனிமை பொங்க உரையாடுபவர். இவரது கவிதைப் படைப்புகளில் காதல் ரசம் வழிந்தோடும். நாமும் பருகித் தான் பார்ப்போமே.! வாருங்கள் உறவுகளே..
நான் அங்கு நலந்தானா?
சித்திரம் நீயடி.
அவள் கூந்தல் வாசம்!
நகைச்சுவை - மொக்கை
இந்த வலைப்பூவின் சொந்தக்காரர் என்றுமே எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். முத்தமிழ் மன்றத்திலே 1.5 லட்சம் பதிவுகளுக்கு மேல் பதிந்து முதன் முதலாக முத்தமிழ் சிகரம் என்ற பட்டத்தைப் பெற்றவர்.
நகைச்சுவை ததும்பும் இவரது வரிகள் என்றுமே சலிக்காதவை. இவருடைய பல பதிவுகளைப் படித்து விட்டு சிறிது நேரம் யோசித்தே பல முறை சிரித்திருக்கின்றேன்.
வார்த்தை பிரயோகத்தில் கில்லாடியான இவர்களது வலைப்பூவில் சில மலர்கள் தங்களின் பார்வைக்காக..
மொக்கை வந்தாச்சு..!
மொக்கை Rocks..!
மொக்கை ஒரு மதப் பிரசங்கியார்..!
6 பேருக்கு தேவையான உணவு..!
மொக்கையின் விமானப் பயணம்..!
ஔவையின் உளறல்கள்
அத்தோடன்றி இவர்களின் கவிதை வரிகளைப் படித்திடும் போது அப்படியே கருவோடு இலயித்திடுவோம் என்பது நிதர்சனமான உண்மை.
வெண்பா இயற்றுவதில் வல்லவரான இவர் புதுக்கவிதைகளிலும் புயல் பறக்க விளையாடுகின்றார். அவர்களின் சில பதிவுகள்:
வாடகைத்தாய்
தனியாய் அலைந்தேனே மேகமாய்
டிசம்பர் 6
மேகச் சித்திரங்காள்!
ஆங்கிலம் கற்போம்
திருவாளர் அருண் அவர்களால் தொடங்கப்பட்டிருக்கும் இவ்வலைப்பூவில் எளிய முறையில் ஆங்கிலத்தினை நாம் கற்றுக் கொள்ள முடியும். பயிற்சிப் பாடங்களோடு சந்தேகங்களுக்கும் விடையளிக்கின்றார்.
வலைப்பூவில் முக்கியமானவைகளில் சில தங்களின் பார்வைக்காக..
ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns 1)
ஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons
ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time)
அடுத்த பதிவினில் மேலும் பல அருமையான வலைப்பூக்களைப் பார்க்கலாம்.
நன்றி
|
|
முடிவில் உள்ள இரு தளங்களை தவிர மற்ற அனைத்து தளங்களும் புதியவை... நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்... சில தளங்கள் பதிவுகளை தொடர்வதில்லை...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
படங்களும் அறிமுகப்படுத்திய விதமும் அருமை...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
>{திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteமுடிவில் உள்ள இரு தளங்களை தவிர மற்ற அனைத்து தளங்களும் புதியவை... நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்... சில தளங்கள் பதிவுகளை தொடர்வதில்லை...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
படங்களும் அறிமுகப்படுத்திய விதமும் அருமை...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்..}<
ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி சகோ.
பல தளங்களில் பதிவுகள் புதுப்பிக்கப்படுவதே இல்லை என்பது உண்மை தான்.
நமக்கு படிக்கத் தேவையான கருத்துகள் அதனுள் நிரம்பியிருக்கின்றனவே. அதனைப் படித்து நாம் பயன்பெறுவோம் என்ற நோக்கமும் இன்றைய பதிவில் அடங்கியிருக்கின்றது.
இரண்டு நாட்களாக பதிவுகளைப் புகுத்திடுவதில் பல சிரமங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எப்படியும் திட்ட அட்டவணைப் பதிவுகளை இட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கின்றேன் சகோ.
நன்றி
அன்பின் தம்பி,
ReplyDeleteநேற்று கடையேழு வள்ளல்களின் சிறப்பைக்கூறி.... தாய்மன்றமாம் முத்தமிழ்மன்றத்தின் அருமையான திரிகளை தொகுத்தது சிறப்பு என்றால்...
இன்று ஏழு நிறங்கள் கொண்ட வானவில்லின் வர்ணஜாலங்களைப்பற்றிக்கூறி சூரியன் ஏழுகுதிரைக்கொண்ட தேரில் உட்கார்ந்து ஆட்சி செய்யும் படம் கொடுத்து... நமக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது என்றும்.. காற்று நம் உடலை இயக்குகிறது என்றும் மிக அழகாகக்கூறிச்சென்ற விதம் சிறப்பு...
இன்று அறிமுகப்படுத்திய தளங்களில் பெரும்பான்மையோர் நான் அறிந்தவர்களே என்பதில் எனக்கு மிக மிக சந்தோஷம்....
ராஜா ஐயா நீ சொன்னது போலவே பேசும்போதே எல்லோர் மனதிலும் சந்தோஷப்பூக்களை விதைக்கும் அற்புதமான மனம் கொண்டவர்... இனிமை, புன்னகை, எல்லோரிடமும் மனம் புண்படாமல் பேசும் குணம் உள்ளவர்...
பரஞ்சோதி நகைச்சுவையும் எல்லோரையும் சிந்திக்கவைக்கும் ஆற்றல் மிக்க அறிவுப்பிள்ளை....
மகுடதீபன் ஐயாவின் அழகிய கவிதைகள் ஒரு காலத்தில் முத்தமிழ்மன்றத்தில் மிக அருமையானதாக இருந்தது.. நான் வாசித்திருக்கிறேன்....
குட்டிம்மா (யுவா) இனிமையானப்பிள்ளை... அமைதியான சுபாவம்....
ஔவை.... நான் மதிக்கும் பெண்மணி... எனக்கு மிகவும் பிடித்த தைரியமான பெண்மணி....
ராஜி.... சிரிக்கவைக்கும் குழந்தை மனமுள்ள தோழி...
அறிமுகப்படுத்தப்பட்ட வலைதளங்களுக்கும் இனி சென்று பார்க்கிறேன்...
இன்றைய வானவில்லின் நிறத்திற்கும், சூரியனார் படத்திற்கும் எல்லோரையும் அறிமுகப்படுத்திய விதமும் சிறப்பு.. மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்டா தம்பி...
அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்....
சூரியன் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேருடன் வலம் வரும் படமே சொல்லிவிட்டது இன்றைய உங்கள் பதிவின் முன்னோட்டத்தை!
ReplyDeleteஎல்லாமே புதிய தளங்கள். ஆங்கில மொழியை சொல்லித்தரும் தளம் உடனடியாக கருத்தைக் கவர்ந்தது. நம் தொழிலாச்சே!
எல்லாவற்றையும் போய் பார்க்கிறேன் சிவஹரி.
உங்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
>{மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteஅன்பின் தம்பி,
நேற்று கடையேழு வள்ளல்களின் சிறப்பைக்கூறி.... தாய்மன்றமாம் முத்தமிழ்மன்றத்தின் அருமையான திரிகளை தொகுத்தது சிறப்பு என்றால்...
இன்று ஏழு நிறங்கள் கொண்ட வானவில்லின் வர்ணஜாலங்களைப்பற்றிக்கூறி சூரியன் ஏழுகுதிரைக்கொண்ட தேரில் உட்கார்ந்து ஆட்சி செய்யும் படம் கொடுத்து... நமக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது என்றும்.. காற்று நம் உடலை இயக்குகிறது என்றும் மிக அழகாகக்கூறிச்சென்ற விதம் சிறப்பு...
இன்று அறிமுகப்படுத்திய தளங்களில் பெரும்பான்மையோர் நான் அறிந்தவர்களே என்பதில் எனக்கு மிக மிக சந்தோஷம்....
ராஜா ஐயா நீ சொன்னது போலவே பேசும்போதே எல்லோர் மனதிலும் சந்தோஷப்பூக்களை விதைக்கும் அற்புதமான மனம் கொண்டவர்... இனிமை, புன்னகை, எல்லோரிடமும் மனம் புண்படாமல் பேசும் குணம் உள்ளவர்...
பரஞ்சோதி நகைச்சுவையும் எல்லோரையும் சிந்திக்கவைக்கும் ஆற்றல் மிக்க அறிவுப்பிள்ளை....
மகுடதீபன் ஐயாவின் அழகிய கவிதைகள் ஒரு காலத்தில் முத்தமிழ்மன்றத்தில் மிக அருமையானதாக இருந்தது.. நான் வாசித்திருக்கிறேன்....
குட்டிம்மா (யுவா) இனிமையானப்பிள்ளை... அமைதியான சுபாவம்....
ஔவை.... நான் மதிக்கும் பெண்மணி... எனக்கு மிகவும் பிடித்த தைரியமான பெண்மணி....
ராஜி.... சிரிக்கவைக்கும் குழந்தை மனமுள்ள தோழி...
அறிமுகப்படுத்தப்பட்ட வலைதளங்களுக்கும் இனி சென்று பார்க்கிறேன்...
இன்றைய வானவில்லின் நிறத்திற்கும், சூரியனார் படத்திற்கும் எல்லோரையும் அறிமுகப்படுத்திய விதமும் சிறப்பு.. மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்டா தம்பி...
அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்....}<
வழக்கம் போல விலாவாரியான பின்னூட்டம் அக்கா.
வாழ்த்துகள் பற்பல
>{Ranjani Narayanan said...
ReplyDeleteசூரியன் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேருடன் வலம் வரும் படமே சொல்லிவிட்டது இன்றைய உங்கள் பதிவின் முன்னோட்டத்தை!
எல்லாமே புதிய தளங்கள். ஆங்கில மொழியை சொல்லித்தரும் தளம் உடனடியாக கருத்தைக் கவர்ந்தது. நம் தொழிலாச்சே!
எல்லாவற்றையும் போய் பார்க்கிறேன் சிவஹரி.
உங்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!}<
பதிவின் முன்னோட்டத்தை படம் பிடித்துக் காட்டியமைக்கு நன்றி சகோ.
மகிழ்ச்சி
சிறப்பான அறிமுகங்கள்.
ReplyDeleteஎல்லாப் பதிவுகளையும் படித்து விடுகிறேன்...
>{வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்.
எல்லாப் பதிவுகளையும் படித்து விடுகிறேன்...}<
மிக்க மகிழ்ச்சி சகோ.
சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete>{Lakshmi said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.}<
மகிழ்ச்சி சகோ.
எல்லாம் புதிய தளங்கள்...
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.
பல புதிய தளங்களைப் பற்றி அறிய முடிகிறது. படங்கள் , எழுதும் வல்லமை இரண்டும் அருமை.
ReplyDelete>{சந்திர வம்சம் said...
ReplyDeleteபல புதிய தளங்களைப் பற்றி அறிய முடிகிறது. படங்கள் , எழுதும் வல்லமை இரண்டும் அருமை.}<
கருத்தினை கண்டு மகிழ்ச்சி சகோ.
நன்றி