07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 15, 2012

வணக்கம் பல முறை சொன்னேன் ....


அன்பின் சீனா சார் அவர்களுக்கும் , அவர்தம் வலைச்சரம் ஆசிரியர் குழுவிற்கும் நெஞ்சார்ந்த வணக்கம் !
அறிமுகப் படுத்திய அன்பின் வைகோ சாருக்கு அடியேனின்
பணிவான வணக்கம் !
அனைத்துலக தமிழ் வலைப் பதிவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் !
விட்டுப் போன அனைவருக்கும் சுணக்கமே இல்லாமல்
கூறுகிறேன்..
அனைவருக்கும் வணக்கம் ..வணக்கம் ..வணக்கம் !  
இப்ப உங்க எல்லாருக்கும் ராம மூர்த்தியாகிய நான்   ஒரு ஆளை அறிமுகப் படுத்தப் போறேன் .அவர் பேரு விநாயக மூர்த்தி!
   ஆளைப் பார்த்தாலே பெயருக்கு ஏற்றார் போல் கேள்விக் குறி                   (வினா ?!)போல இருப்பார் ..அந்த பெடகொனியன் மூக்கு கொஞ்சம் வித்யாசமா இருக்கும் .. அந்த மூக்கும், முன்வழுக்கையும்  அறிவு ஜீவிகளுக்குத் தான் இருக்கும் என்பதை DISPROVE பண்ணியவர்.சம்பந்தா சம்பந்தா இல்லாமல் மூக்கை நுழைப்பதில் கில்லாடி !  இப்படித் தான் எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார்.." நம்பிக்கையான ஆளா இருப்பார்னு நினைச்சுத் தான் கேஷியரா வேலைக்கு எடுத்தேன் ..அந்த ஆளு கல்லாவிலிருந்து பத்தாயிரம் ரூபாயைத் தூக்கிட்டுப் போயிட்டான் .."
      அதுக்கு நாம என்ன சொல்வோம் ? அவரை சமாதானம் படுத்துவோம் ..
நம்மாளு சமாதானப் 'படுத்தினதை' கேளுங்க..
      "டேய் சோமு, நாங் கூட இப்ப சும்மாத் தான் இருக்கேன் ..அந்த கேஷியர் வேலைக்கு வேணா வரட்டுமா?"
     போதுமா அறிமுகம் !
               இவரை விநாயக மூர்த்தி என்று  நீட்டி முழக்கி பெயரைக்  கூப்பிடுவதற்குள் பொழுது விடிந்து போய் விடும் என்பதால் நம்மாளு என்றே அழைப்போம் !
நம்மாளு : எதுக்குப்பா என்னை கூப்பிட்டே?
நான்         : என்னை நம்ம வலைச் சர பகுதிக்கு ஆசிரியரா ஒரு வாரத்திற்கு
                     போட்டிருக்காங்க...
நம்மாளு : சந்தோஷம் !அதுக்கு நான் எதுக்கு?
நான்          : நீ தான் என்னை அறிமுகப் படுத்தணும்!
நம்மாளு : புண்ணாக்கு டப்பாக்கு புதுசா வாசனை வேணுமாக்கும் !
நான்         : ரைமிங்கா வரதுங்கிறதுக்காக புண்ணாக்கு...புடலங்காய்னு       ஏதாவது  உளறி வைக்காதே! நாலு பேரு வந்து போற இடம்பா  இது !

நம்மாளு : உன்னோட பர்த்டே க்கு ஒண்ணு எழுதினியே ..அந்த லிங்கைப்
                      போடு !
நான்          : இதானே http://aaranyanivasrramamurthy.blogspot.in/2011/04/blog-post.html
நம்மாளு  : பார்க்கிறவங்க மன்னிக்கணும் ! CUT AND PASTE பண்ணினால் தான்
                       லிங்க் கிடைக்கும் !
நான்           : நான் எழுதினதுல உனக்கு ரொம்ப புடிச்சது எது?
நம்மாளு   : பைத்தியம் தான் !
நான்           : நான் பைத்தியக் கார டாக்டர்ட்ட போனது தானே அது   என்  விகடனில் வந்தாச்சே !!
நம்மாளு   : பிசிக்ஸ் ல  CERN  பற்றி எழுதினியே ! அதைப் போடேன்!
நான்             : http://aaranyanivasrramamurthy.blogspot.in/2012/02/e-mc2.html
நம்மாளு    : கண் தானம் செல்வராஜ் பற்றி எழுதினியே ..அதைப் போடு
                        ' பார்க்கிறவங்க' உனக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறதா
                        நினைச்சுப்பாங்க !
நான்            : http://aaranyanivasrramamurthy.blogspot.in/2012/03/blog-post_24.html
நம்மாளு   :  வேற ஏதாவது?
நான்           : போதும்பா ..எப்பவும் நாமளே நம்மள பத்தி சொல்லக் கூடாது
                        மத்தவங்க சொல்லணும் !
நம்மாளு  :  நல்ல வேளை! இப்பவாவது புரிஞ்சுதே !
நான்          :  என்னப்பா சொல்றே ?
நம்மாளு :  ஒண்ணுமில்ல...... நாளைக்கும் வரேன்னு சொல்றேன் !
நான்         :  வா.. இந்த வாரம் டெய்லி வா..நீ வராட்டி எனக்கு கையும் காலும்
                      ஓடாது !
நம்மாளு : கேட்கறேன்னு தப்பா நினைக்காதே!
நான்         : என்ன கேட்கப் போறே?    கை       எப்படி ஓடும் தானே கேட்கப் போறே        அது ஒரு அரதப் பழைய ஜோக் ...நீ சரியான FORM'ல   இருக்கியான்னு
தெரிஞ்சிக்கத தான் நான்    நூல்விட்டுப் பார்த்தேன் !
         

50 comments:

 1. என் அருமை
  நண்பரும்
  நகைச்சுவை
  விரும்பியுமான
  ஆரண்ய நிவாஸ்
  திரு R. இராமமூர்த்தி
  அவர்களே !

  வாருங்கள் !
  வாருங்கள் !!

  அரியாசனத்தில்
  அமருங்கள் !!!

  "காத்திருந்தேன்
  காத்திருந்தேன்.....

  காலைமுதல்
  காத்திருந்தேன்......".

  தமிழ் பதிவுலகமே
  உங்களைக்காண
  காலையிலிருந்து
  மிகவும் ஆவலாக
  வழிமேல்
  விழிவைத்துக்
  காத்துள்ளது.


  தொடரும்......

  ReplyDelete
 2. From VGK [2]

  இன்று நல்லநாள்
  நிறைந்த நன்நாள்.


  தாங்கள்
  வருவதற்குள்
  ஸோமவார
  அமாவாசையும்
  இன்று போய்
  விடுமோ என
  ஒரே கவலையாகி
  விட்டது எனக்கு.

  ஆத்தில்
  ஆத்துக்காரியை
  பிரதக்ஷணம்
  செய்து
  அனுமதி
  வாங்கிவர
  தாமதம்
  ஆகிவிட்டதோ????


  ”ஆத்துக்காரியுடன்
  அரசமரத்தைப்
  பிரதக்ஷணம்
  செய்துவர”
  என்று மேலே
  நான் எழுதி
  இருக்க வேண்டும்
  ஸ்வாமி ... .....!

  ஏதோ ஓர்
  அவசரத்தில்
  டைப்பும் போது
  தப்பாகி விட்டது
  ஸ்வாமி !!


  அதற்காக
  என்னை
  க்ஷமித்து
  [மன்னித்து]
  அருள
  வேண்டும்..
  ஸ்வாமி !!!

  தொடரும்........

  ReplyDelete
 3. From VGK [3]

  திங்கட்கிழமையில்
  அமாவாசை
  சேர்ந்து
  வந்தால்
  விசேஷம்.

  அதற்குத்தான்
  ஸோமவார
  அமாவாசைன்னு
  பெயர்.

  அரசமரத்தைப்
  பிரதக்ஷணம்
  செய்வார்கள்......

  உடனே
  அடிவயிற்றை
  தொட்டுப்பார்த்துக்
  கொள்வார்கள்.......

  என்பதெல்லாம்
  அந்தக்காலப்
  பழன்கதை.

  நீங்கள்
  இன்று
  ஸோமவார
  அமாவாசையில்
  ஆத்துக்காரியுடன்
  அரசபிரதக்ஷணம்
  செய்ததால்
  வலைச்சர
  ஆசிரியர்
  பதவியே
  கிடைத்து
  விட்டது.

  இதுதான்
  புதுக்கதை.

  சந்தோஷம்! ;)))))


  இனி உங்கள் பாடு.

  ஜாலியா
  ஆரம்பியுங்கோ
  உங்கள்
  கச்சேரிகளையும்
  பஜனைகளையும்
  கீர்த்தனைகளையும் !

  வாழ்த்துகள்.

  அட்டா,
  இதுபோலெல்லாம்
  நமக்குள் நேரில்
  சந்தித்து
  ஜாலியாகப்பேசி
  எவ்ளோ நாள் ஆச்சு? ;(

  அந்த நாள் ஞாபகம்
  நெஞ்சிலே வந்ததே!

  நண்பனே நண்பனே!!

  பேரன்புடன்
  பிரியமுள்ள
  கோபு

  -oOo-

  ReplyDelete
 4. அட இது நம்ம ஆளு! :)

  வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்..... ஒரு வாரம் கலகலவென்று இருக்கப்போகிறது வலைச்சரம்.....

  தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்! [த.ம. 1]

  ReplyDelete
 5. அட ஆரம்பமே அமர்க்களமா இருக்கே சார்??

  அதெப்படி?? எப்படி எப்படி??? யாராச்சும் விநாயக மூர்த்திக்கிட்ட தப்பி தவறி வந்து புலம்பினா அவ்ளோ தான்னு செம்ம அட்டகாசம் சார்....ரசித்து வாசித்தேன்...

  நல்ல நகைச்சுவையுடன் தான் ஆரம்பிச்சிருக்கீங்க...

  இதோ உங்க லிங்க் எல்லாம் போய் பார்த்துட்டு வரேன் இருங்க....

  அன்புவாழ்த்துகள் சார்...

  ReplyDelete
 6. நானும் கேட்குறேன்னு தப்பா நினைக்காதிங்க எப்படி ஓடும் .....
  அசத்தல்ங்க.

  ReplyDelete
 7. அன்பின் ராமமூர்த்தி - அருமையான சுய அறிமுகம். மூன்றே மூன்று பதிவுகள் தானா - அறிமுக படுத்துவதற்கு . த்ன்னடக்கம் - மற்றவர்களின் பதிவுகளை அறிமுகப் படுத்துவதற்காக தன் பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அடக்கி வாசிச்சீங்களா ? பலே பலே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. வை.கோ. சார்.. நீங்க அரசமரத்தை சுத்த சொல்லும் போதே ஏதோ வில்லங்கம் இருக்குமோன்னு யோசிச்சதிலே ..அரச மரத்தை எங்கே தேடறது..
  அரச மரமும் அம்பேல்..
  கரண்ட் போயிந்தி...
  கரண்ட் போனதினால, கற்பனையும் வறண்டு போச்சு!

  ReplyDelete

 9. வெங்கட் நாகராஜுக்கு,
  மிக்க நன்றி!

  ReplyDelete
 10. நண்பர் ஸ்ரீராம்க்கு,

  ஏற்கனவே கலங்கிப் போய்த் தான்
  உட்கார்ந்திருக்கேன்..
  நான் எதை கலக்கணும்...?
  ஐயோ..கேள்விக் குறி போட்டாலே,எங்கே நம்மாளு வந்துடுவாரோன்னு பயமாயிருக்கு!

  ReplyDelete

 11. மஞ்சு பாஷிணிக்கு,

  டீச்சர், ஸ்கூல் பசங்க ஆன்சர்பேப்பரை அவங்கள வைச்சுக்(வைது)கிட்டே திருத்திறாப்பல இருக்குங்கோ..
  அவ்ளவ் டென்ஷன்!

  ReplyDelete
 12. சசிகலா எதை கேட்கறீங்க?
  ( ? ஐயோ நம்மாளு மறுபடியும்!)

  ReplyDelete

 13. சசிகலாவிற்கு
  ஒருக்கால், கையும் ஓடுமோ..

  ReplyDelete

 14. சீனா சார்..
  எண்பத்திஏழு மேயிலிருந்து ஐயா
  மே மே தான்..அடக்கி வாசிச்சே பழகிப் போயிடுச்சு!

  அன்பன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 15. //நம்மாளு : புண்ணாக்கு டப்பாக்கு புதுசா வாசனை வேணுமாக்கும் !//

  இதைப்படித்ததும், வேறு ஒண்ணு ஞாபகம் வந்து குப்புன்னு சிரிச்சுட்டேன்.

  அது என்னான்னு தெரியுமா?

  என் பதிவு ஒன்றுக்கு நீங்க போட்ட கமெண்ட் + நான் எழுதிய பதில் இதோ இங்கே:

  இணைப்பு:
  http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html

  தலைப்பு:
  சுடிதார் வாங்கப் போறேன்!


  //”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  சாதாரணமா, சுண்ணாம்பு வாங்கப்போற விஷயத்தையே, சூப்பரா எழுதுவீங்க..சுடிதார்னா, கேக்கணுமா?//

  என் பதில்:

  அப்படியே சொக்க வச்சுப்புட்டீங்க !
  குபீர்ன்னு சிரிச்சுப்புட்டேன்.

  [சார், ஒரு சின்ன சந்தேகம்.

  சுண்ணாம்புக்கும் சுடிதாருக்கும் அப்படியென்ன சார், பெரிய வித்யாசம்; அதுவும் நாம் எழுதும்போது?

  சரி, சரி, நாம் நேரில் சந்திக்கும்போது கொழுக்கட்டை+பூர்ணத்துடன், இந்த சுண்ணாம்பு+சுடிதார் matter ஐயும் சேர்த்து நமக்குள் discuss செய்வோம்]

  ReplyDelete
 16. ஆரம்பமே அசத்தல் ஐயா...

  (TM 2)

  ReplyDelete
 17. அவர் [திரு.வை.கோ.] அறிமுகப்படுத்தியவரா, வாங்க வாங்க!

  என்னைப்பற்றியும் எழுதுங்க கொஞ்சம்!!

  ReplyDelete
 18. ராமமூர்த்தி சார்,

  சொல்ல மறந்துட்டேனே!

  விநாயக மூர்த்தியின் முகத்தை படமாக வரைந்திருக்கேளே ...

  அது சூப்பாராக உள்ளது.

  மூக்கும் முழியுமா சும்மா ஜோராகத்தான் இருக்கிறார்.

  தலைமுடி சுத்தமாக குறைந்து விட்டாலும், இருக்கும் முடி நல்ல கருகருப்பாகவே உள்ளது.

  [டை அடித்திருப்பாரோ?]

  ReplyDelete
 19. // ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

  சீனா சார்..
  எண்பத்திஏழு மேயிலிருந்து ஐயா
  மே மே தான்..அடக்கி வாசிச்சே பழகிப் போயிடுச்சு!

  அன்பன்,

  ஆர்.ஆர்.ஆர்.//

  அன்பின் சீனா சார்,

  உங்களுக்குப் புரியாத விஷயம் கிடையாது தான். மற்றவர்களுக்குப் புரியணுமேன்னு தான் இந்த மே மே விஷயத்தைப் பற்றி நான் சொல்லியாகணும் இப்போது. இல்லாட்டி என் தலையே வெடிச்சிடும்.

  1987 மே மாதம் தான், சாருக்குக் கல்யாணம் ஆச்சு. அந்த மேடம் ரொம்ப தங்கமானவங்க. அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல நான் ஏற்கனவே நிறைய விஷயங்கள் என்னிடம் வைத்துள்ளேன். அத்துடன் இதனையும் இப்போ சேர்த்து சேமித்து வைத்து விட்டேன்.

  பாருங்கோ நான் மேலே என் இரண்டாவ்து கமெண்டில் ஏதோ தவறிப்போய் டைப் அடித்ததும் மிகச்சரியே என ஒப்புக்கொண்டுள்ளார்.

  நல்ல மனிதர் தான், இவரும்.

  அடக்கி வாசித்தால் [அதுவும் மனைவியிடம்] நல்லது தானே.
  பாராட்டுவோம்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 20. வலைச்சர ஆசிரியர் பதவியேற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!! முதல் நாளே அசத்தலான ஆரம்பம்!!

  ReplyDelete
 21. திருச்சிக்காரரே! வருக! வணக்கம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து கலக்குங்க... தொடர்கிறோம்...

  ReplyDelete
 23. வணக்கம்
  ஆரணிய நிவாஸ்(ஆர்.ராமமூர்த்தி)

  வலைச்சரம் வலைப்பூவை பொறுப்பேற்று ஒருவாரகாலம் நடாத்துவதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சிறப்பாக படைக்க எனது வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 24. அன்பின் ஆர் ஆர் ஆர்

  அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகளைச் சுட்டி, சென்று, படித்து, மகிழ்ந்து, மறு மொழி இட்டு மகிழ்ந்தேன்.

  நல்வாழ்த்துகள் ஆர் ஆர் ஆர்

  நட்புடன் சீனா

  ReplyDelete
 25. அன்புள்ள ராமமூர்த்தி அவர்களுக்கு,

  அசத்தலான ஆரம்பம் யானை முகத்தானுடன் ஆரம்பித்திருக்கிறது.

  இனி இந்த வாரம் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் கோடி காட்டி விட்டீர்கள்!

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 26. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 27. ஆரம்பமே அசத்தல்

  ReplyDelete
 28. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். ஆரம்பமே கலக்கலா இருக்கு சார்.

  ReplyDelete
 29. கலகலப்பாகத் துவங்கி இருக்கிறீர்கள் வாரத்தை. தொடர்கிறேன் நான்.

  ReplyDelete
 30. துவக்கமே கலகலப்பாக இருக்கு.. இந்த வாரம் முழுவதும் சிரிச்சுக்கிட்டே இருக்கப்போகிறோம்.

  ReplyDelete
 31. கந்தசாமி சார்..வருகைக்கு நன்றி..
  ஏதோ பெரியவங்க சபையில, ஆளு வராட்டி, நிலைய வித்வான் போல ஏதோ
  பண்ணிக் கிட்டு இருக்கேன்...

  ReplyDelete
 32. வை.கோ. சார்,
  சுண்ணாம்பும்,சுடிதாரும் போட்டிக்கிற சமாச்சாரம் தான் ..இருந்தாலும்,சுண்ணாம்பை யார் வேணா போட்டுக்கலாம்..சுடிதார் அழகான இளம் பெண்கள் போட்டுண்டா நன்றாக இருக்கும்!சுடிதார் இருபாலரும் போட்டுக்கிற சமாச்சாரம் இல்ல!அது தான் வித்யாசம்!

  ReplyDelete

 33. தனபாலன் வாங்க அட சூப்பர் மீசைங்க..அதுக்கு முன்னால என் எழுத்தெல்லாம் ஜுஜுபி!

  ReplyDelete
 34. வைகோவிற்கு,
  வினாயக மூர்த்தி டை தான் அடித்துள்ளார்.எனக்கு எப்படி தெரியும் என்றால், எதேச்சையா, அவர் பொண்ணோட டைரி கிடைச்சது..அதுல,
  15.10.2012 அன்று FATHER DYED னு இருந்தது!

  ReplyDelete
 35. நான் எப்பவுமே அடக்கி வாசிப்பதே ஆனந்தம் என நினைப்பவனாக்கும்!

  ReplyDelete

 36. சந்திர வம்சம் வாங்க..ஏழு நாளும் வாங்க..ஏதோ கொலுக்கு கூப்பிடுகிறார்போல் கூப்பிடுகிறேன்..

  ReplyDelete

 37. மனோ சாமினாதன் மேடம் வருக..வருக...யூரப் போயிட்டு வந்தாச்சா?

  ReplyDelete

 38. தமிழ் இளங்கோ சார்.. நீங்களும் திருச்சியா?

  ReplyDelete

 39. குமார் சார்..கலக்கத் தான் போறேன்...ஐயோ, கலக்குதே!

  ReplyDelete
 40. வணக்கும் 2008 ரூபன்..அதென்ன 2008 ரூபன்.?

  ReplyDelete

 41. சீனா சார்,
  அடியேனின் அவதார மகிமை எப்படி?
  அடியேன் அவதாரம் செய்த சனிக்கிழமை அன்று எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்..ஏன் தெரியுமா?
  அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை..அதனால தான்!

  ReplyDelete

 42. ரஞ்சனி மேடம் எப்படித் தான் எழுதினீங்களோ? கை, காலெல்லாம் உதறல்..தப்பித் தவறி கூட டாக்டர் கிட்ட போக மாட்டேனே...
  போனா, டெங்கு என்று சொல்லி விடுவார்!

  ReplyDelete

 43. வாங்க ரிஷபன்..இனிமேல் நான் அடக்கி
  வாசிக்கணும்..

  ReplyDelete
 44. கோவை2தில்லி மேடம் வாங்க...இப்ப நீங்க கோவை 2 ஸ்ரீரங்கமா?

  ReplyDelete

 45. வாருங்கள் பால கணேஷ்..உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே...
  ஓ..கடுகோட சேர்ந்த உளுத்தம் பருப்பு
  தாங்களோ?

  ReplyDelete

 46. ராம்வி பார்த்து சிரிங்க..அழறதுக்கும் சிரிப்பதற்கும் உள்ள பெரிய வித்யாசமே இது தான்..தனியா அழலாம்..ஆனா, தனியா சிரிக்கக் கூடாது..

  ReplyDelete
 47. ஒன்னோட எளுத்து நடை சொம்மா சூப்பரா கீதுப்பா....எங்க ரஜினி பாலிடிக்சுக்கு வந்தா என்னா மகிள்ச்சி வருமோ, அத்தினி மகிள்ச்சி நீ இந்த எடத்துக்கு வந்ததிலே....வாள்க....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது