07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 17, 2012

மூன்றாம் நாளிதழ்



நம்மாளு : அட, அதுக்குள்ளே மூன்றாவது நாள் வந்து விட்டதே ?
நான்         : ஆமாம் ..வா..நம்மாளு, ஏதாவது சாப்பிடலாமா?
நம்மாளு : என்ன சாப்பிடறது ?
நான்          : இந்த மழைக்கு சூடா வெங்காய பஜ்ஜி?
நம்மாளு : சாப்பாடுன்ன உடனே உனக்கு என்ன  தோணுது ?
நான்          :  இதென்ன கேள்வி? முருங்கைக்காய் தொக்கு தான் ?
                       இந்த லிங்க் பாத்தியா ..நம்ம மனோ மேடம் ப்லாக் ..
                       http://muthusidharal.blogspot.in/2012/02/blog-post_26.html
                      அவங்க நம்ம  நடிகை பானுமதி மாதிரி ..சித்திரம், கதை,சிந்தனை
                       என்று நிறைய விஷயங்கள் நமக்கு கிடைக்கும் !
நம்மாளு  : சரி..வெங்காய பஜ்ஜி  முருங்கைக் காய் தொக்கு தொட்டுக்
                       கொண்டு ஆச்சு ..அப்புறம் ?
நான்          : அட..இந்த கீதமஞ்சரி பிலாக் சூப்பரா இருக்கே !
                       அம்மாச்சியும் மகிழம் பூக்களும் ..தலைப்பே ஒரு கவிதை !
                       http://geethamanjari.blogspot.in/2012/01/blog-post_07.html
நம்மாளு   : இதப் பாருப்பா ..நிலாமகள் கொஞ்சம் VARIETYஆ எழுதறாங்க ?
நான்            : இப்பத் தான் பார்க்கிறியா..இந்த லிங்க்க பாரேன் !
                        http://nilaamagal.blogspot.in/2012/10/3.html
நம்மாளு   : ஏய் இந்த பிலாக் பார்த்தியா ?
நான்            : சொன்னாத் தானே தெரியும் ?
நம்மாளு   : புன்னகையை அடகு வைக்க முடியாதுங்கிறாங்க இந்த      
                        கவிதாயினி..http://kakithaoodam.blogspot.in/2012/09/blog-post.html    
நான்           : கரெக்ட் ..என் FRIEND ஒருத்தர் பேங்கில இருக்காரு ..ரொம்ப               நாளா   லாக்கர் கேட்டுப் பார்த்தேன் ..கிடைக்கல ..
நம்மாளு   : ஏதாவது வித்தியாசமாய் பண்ணுவியே ? என்ன பண்ணினே ?
நான்            : அவ்ளாவ் நகைகளையும் அடகுக் கடையில வைச்சேன்
                         லாக்கரை விட பத்திரமா இருக்கு இப்ப !
நம்மாளு    : உன் மூளையே மூளை!மூளைன்னதும் உனக்கு என்ன
                           தோணுது ?
நான்            : நம்ம கந்த சாமி சார் தான் ..இந்த லிங்க்  பாரேன் , நம்மாளு
                          உன்னையே அவர் கேள்வி கேட்கிறாரய்யா ...
நம்மாளு    : இந்த வினாயகமிடமே வினாவா ?
நான்             : ஆமாம் என் கேள்விக்கு என்ன பதில்  என்று கேட்கிறார் பார் !
                          http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post_16.html
நம்மாளு    : வேப்பந்தோப்பு மாதிரி ஜிலுஜிலுன்னு காத்து வருது ..
நான்            : அட ..http://www.ssakthivel.com/2012/10/2.html இதைப் பார்த்துட்டியா ?
நம்மாளு    : ".... உன்மனைவி பிள்ளை பெரிதென்று-பாராமல்.பணம்……
                          பணம்   -என்று.உன் உள் மூச்சு வேண்டுதே..."ங்கிறாரு ரூபன் !
                          http://2008rupan.wordpress.com/2012/09/19/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3/
நான்           : அவர் சொல்றது கரெக்ட்! USE VALUE இல்லாட்டா பணத்துக்குள்ள
                        மதிப்பு அவ்ளவ் தான் ! சஹாராபாலைவனத்துல ஒரு மிலியன்
                        டாலர் வைச்சுண்டு என்ன பிரயோசனம்? ஒரு மிலியன்
                        டாலர்ங்கிறது நம்ம ரூபாய்ல 5.2 கோடி !
                        NO USE!! 
நம்மாளு : நம்ம சுந்தர்ஜியை விட்டுட்டியே?
நான்           : இது பாரு..இத்தோட முடிஞ்சுடுத்தா ? ஏன்யா இப்டி சிண்டு
                       முடிஞ்சு விடறே ? உன் சொந்த ஊர் என்ன ?
நம்மாளு  : அய்யம்பேட்டை !    
நான்           : அதான் ....அப்பவே நினைச்சேன்..சுந்தர்ஜி ஒரு சூப்பர் மேன் ! 
                       இதைப் பாரு ...
                        http://sundargprakash.blogspot.in/#!/2012/08/blog-post_20.html
    
நம்மாளு   : சுந்தர்ஜின்ன  உடனே தஞ்சாவூர் கவிராயர் வரணுமே ... 
நான்            : அதிலென்ன சந்தேகம்? இதோ       http://thanjavurkavirayar.blogspot.in/#!/2011/09/blog-post_9149.html
நம்மாளு    :  நீ சந்தேகம்ன உடனே எனக்கு இது நினைவிற்கு  வரதுப்பா ..
நான்             : எது ?
நம்மாளு    : கான்ஸ்டபிள்  ஒருத்தர் ஸ்வீட் பாக்கெட்டோட இன்ஸ்பெக்டர்ட்ட
                     போனாராம் .
                                 " சார்  ஸ்வீட் எடுத்துக்குங்க .."
                                      "என்னப்பா விஷயம் ?"
                    " எனக்கு பையன் பொறந்திருக்கான் !"
 ஸ்வீட்  எடுத்துக் கொள்வதற்கு  முன் அந்த   இன்ஸ்பெக்டர் கேட்டாராம்
                                    " ஆமா...யாரை நீ சந்தேகப் படறே ?"
                                            ......................................................
                        : அப்ப,ஆர்.ஆர்.ஆர். வரட்டுமா ...நாளைக்கு(ம்) வரேன் ..........

32 comments:

  1. ஹா ஹா.. நம்மாளு பண்ற கலாட்டா சூப்பர்.. அறிமுகம் செய்கிற விதமே அட்டகாசம்.. உங்ககிட்ட கத்துக்க வேண்டிய மேட்டர் நிறைய இருக்கு.

    ReplyDelete
  2. ஹா... கடைசி பஞ்ச் சூப்பர்....

    நல்ல அறிமுகங்கள். ஒருவரைத்தவிர மற்றவர் அனைவரையும் படிக்கிறேன்....

    ReplyDelete
  3. வணக்கம் ராமமூர்த்தி ஸார்!

    மூன்றாம் நாள் அறிமுகங்களில் நான் பகிர்ந்த பதிவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

    கீதமஞ்சரியின் அம்மாச்சியை நானும் பகிர்ந்து இருந்தேன்.

    திரு ரூபனின் பதிவையும் (வேறு கவிதை) பகிர்ந்ததற்கு நன்றி.


    பாராட்டுக்கள் ஸார்!

    ReplyDelete
  4. அநேகமாக எல்லோருமே நான் வாசித்த சுவாரஸ்யமான நண்பர்கள்தான்.

    என்னையும் உங்கள் பட்டியலில் சேர்த்திருப்பது உங்கள் பெருந்தன்மை. காப்பாற்றிக்கொள்கிறேன் உங்கள் அங்கீகாரத்தை.

    உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மொறுமொறுப்பாய் இருந்தது ஆர்.ஆர்.ஆர்.சார்.

    ReplyDelete
  5. மூன்றாம் நாள் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களின் படைப்புக்களும் அருமையோ அருமை.

    அனைவருக்கும் என் அன்பான
    வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    இந்த அறிமுகப்படலத்திற்கு
    அயராது உழைத்த நம்மாளு
    வினாயகமூர்த்தி அவர்களுக்கும்
    வினாயகமூர்த்தியின் நண்பர்
    நகைச்சுவை நாயகர் திருவாளர்
    இராமமூர்த்தி அவர்களுக்கும்
    என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துகளும்.

    நாளை இந்த வேளை பார்த்து
    ஓடி வருவேன் ... நண்பா !

    அன்புடன்
    VGK

    ReplyDelete

  6. ரிஷபன் சார்..சும்மா சொல்லாதீங்க..ஏதோ கல்லா கட்டிக்கிட்டு இருக்கேன்.. நீங்க இங்க வந்தா, துண்டைக் காணோம்...துணியைக் காணோம்னு ஓடிட மாட்டேன்?

    ReplyDelete

  7. ரஞ்சனி மேம்...ஏதோ ஓட்டிக்கிட்டு இருக்கேன்...உங்க அளவு HARD WORK என்னாலெல்லாம் பண்ண முடியாது...
    மிக்க நன்றி!

    ReplyDelete
  8. ஹாய் சுந்தர்ஜி..ஹவ் ஆர் யு?
    ரொம்ப நாளாச்சு உங்களோடு பேசி?

    ReplyDelete
  9. வைகோ சார்..வாங்க..வாங்க...
    நீங்க வந்தா தான் களை கட்டுது!

    ReplyDelete
  10. மூன்று தளங்கள் அறியாதவை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  11. ரசனையான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்...

    ReplyDelete
  12. வணக்கம் ஆரணிய நவாஸ்(அண்ணா)

    இன்று மூன்றாவது நாள் கடந்து விட்டது வலைச்சரம் வலைப்பூவில் 09 வலைப்பதிவாளர்களை பற்றி பதிவு இட்டுள்ளிர்கள் அனைத்தும் மிகவும் அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்.

    என்னுடைய வலைச்சர பதிவையும் அனைவரும் பார்க்கும் வகையில் அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா....நான்காம் நாளும் வலைச்சரம் வலைப்பூ பூத்து மலர எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. அருமை...
    அருமையான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அறிமுக தோரணையே அசத்துகிறதே....

    நிஜம்மா சொல்லுங்க சார்.... உங்க வயசு 12 தானே??

    எத்தனை சுறுசுறுப்பு... எத்தனை துறுதுறுப்பு..... அறிமுகப்படுத்தவதில் இருக்கும் அழகு...எல்லாமே தத்ரூபம் சார்...

    இதில் கீதமஞ்சரி சுந்தர்ஜீ இவர்களின் எழுத்துகள் மிக்க பரிச்சயம் உண்டு...

    ஆரம்பிச்சிட்டீங்க.... வாணவேடிக்கை போல ஜெகஜ்ஜோதியா தொடர்கிறீர்கள் சார்...

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் உங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு நண்பர்களுக்கும்....

    அசத்துங்கோ சார்....நாங்களும் உங்கக்கூடவே வரோம்...

    ReplyDelete
  15. ஹிஹி.. உரக்கச் சிரித்த ஜோக் கடைசியில்.

    ReplyDelete
  16. நன்றிகள் வேப்பந்தோப்பை அறிமுகப்படுத்தியதற்கு :-)

    ReplyDelete
  17. என் வலைப்பூவை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி ராமமூர்த்தி சார்!!

    ReplyDelete


  18. அந்த கடைசி ஒன்று மிகவும் அருமை!

    ReplyDelete
  19. அறிமுகங்களிற்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. திண்டுக்கல் தனபாலன் சார் வாங்க..வாங்க...

    ReplyDelete
  21. மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி மேம்!

    ReplyDelete
  22. தங்கள் வருகைக்கு நன்றி ரூபன்...
    நம்ம கடைக்கும் (ப்லொக்) அடிக்கடி வாங்க!

    ReplyDelete
  23. சுபாஷிணி மேடம் வாங்க..ரொம்ப கூச்சமாயிருக்கு..வயசை ரொம்ப..ரொம்ப..குறைச்சு சொல்றீங்க..
    என் வயசு 21 தான்...






    1978ல்!

    ReplyDelete
  24. மிக்க நன்றி அப்பாதுரை சார்..
    ஜோக்கினை ரசித்ததிற்கு!
    ஒரு ப்ராண்ட் குத்தியாச்சு எனக்கு...
    “ஹலோ செளக்யமான்னு யாரையும் கேட்க முடியல, இப்பலலாம்..அதுவும் ஏதோ ஜோக்னு சிரிக்க ஆரம்பிச்சுடறாங்க...

    ReplyDelete
  25. மனோ சாமினாதன் மேடம் வாங்க..
    நான் பிரமிக்கும் வலத்தலத்துள் ஒன்று
    உங்கள் பிலாக்!

    ReplyDelete
  26. அன்பின் ஆர்.ஆர்.ஆர் - வலைச்சரம் நன்கு சென்று கொண்டிருக்கிறது. அத்தனை அறிமுகங்களையும் சென்று பார்த்து படித்து மறுமொழி இட்டு மக்ழிந்தேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  27. ஹை!! நானும் உண்டா உங்க‌ வ‌ட்ட‌த்துக்குள்!!! ம‌கிழ்வும் ந‌ன்றியும்!
    எழுத்துக்க‌ளின் வித்தியாச‌த்தில் கூட‌ ம‌னித‌ர்க‌ளை உண‌ர்த்தும் சூட்சும‌ம் உங்க‌ளுக்கு(ப்லொக், பிலாக்) விய‌க்கிறேன்... உண்மை வ‌ய‌தை எத்த‌ருண‌த்திலும் உர‌க்க‌ சொல்லும் நேர்மைக்கும். உங்க‌ நினைவு வ‌ந்தாலே ம‌ன‌ம் லேசாகி புன்ன‌கைத்துக்கொள்வ‌து அறிந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் அறிந்த‌து. இறைகொடைய‌ல்ல‌வா ஹாஸ்ய‌ம்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது