07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 16, 2012

இரண்டாம் நாளிதழ்!

 நான்         :   வாய்யா.. நம்மாளு! இன்னிக்கு என்ன விஷயம் எழுதலாம்?
நம்மாளு  :  இலக்கியம்..கவிதை..இதைப் பற்றி எழுதலாமே?
நான்           : ஆமாம்..உலகமே பரபரப்பாகிப் போச்சு.. நாம இலக்கியத்தைப்
                       பற்றி எழுதலை என்றால், ஒரு முழுமை கிடைக்காமல் போய்
                       விடும்..ஒரு கொழுக்கட்டையின் வெண்மை பகுதி வாழ்க்கை
                       என்றால், அதன் பூரணம் இலக்கியம்..அதற்கு வேண்டும் ரசிகத்
                       தன்மை!
நம்மாளு : நீ கூட சொல்வியே?
நான்         : ஒரு ஆள் பள்ளத்திலெ கீழெ விழுந்துட்டான்...கீழே ஒரு புலி..
                      மேலே ஒரு கட்டு விரியன்..இவன் புடிச்சுண்டு இருக்கிறது ஒரு
                        முழம் தாம்புக் கயிறு..அதுவும் இற்றுப் போய்...
நம்மாளு : அப்ப என்னா நடந்தது..?.
நான்          : ஒண்ணும் நடக்கல... மேலேர்ந்து சொட்டு சொட்டாய்   இவன்  வாயில் ஓரிரு தேன்  துளிகள் விழ, ‘ஆஹா..சூப்பர்’என்றான் தன்  நிலை
                        மறந்து!
நம்மாளு  : ஆஹா...!
      நான்      : கீழே விழுந்தா.. புலியும், மேல போனா அந்த கட்டு விரியனும்
                       ’ஆஹா..சூப்பர்’னு  சொல்லும் நிலையிலும் இங்க அவன் அப்ப
                        'ஆஹா சூப்பர்'னு  சொல்றது   தான் சூப்பர்!
நம்மாளு   : அந்த காலத்துல ட்ரையினில ஆஃபீஸ் கோயர்ஸ் எல்லாரும்
                        ’காதலித்தால் போதுமா’, ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’
                        ‘துப்பறியும் சாம்பு’ ‘வாஷிங்டனில் திருமணம்’ என்று எத்தனை,
                         எத்தனை நாவல்கள் படித்துக் கொண்டு போய் இருப்பார்கள்?
நான்            : எல்லாமே போச்! காதுல செல்,முகவாய் கட்டை வானத்தைப்
                         பார்த்துக் கொண்டு புட்போர்டில் பயணம் செய்து வாழ்க்கை
                         ரொம்பவுமே சுவாரஸ்யமில்லாமல் போய் விடுகிறது..
 நம்மாளு   : ஏதாவது  கவிதை சொல்லேன்?
நான்             :     FRIENDSHIP DAY க்கு
                             என்னை ஏன் நீ GREET
                             செய்யவில்லை என
                             அவன்  கோபத்துடன்
                             கேட்க....
                              அவள் கூலாகச்
                              சொன்னாள்
                              நீ என்ன
                              என்  ஃப்ரெண்டா
                              உன்னை நான்
                              GREET செய்ய? 
நம்மாளு  : இந்த மாதிரி கவிதைகள் தான் இப்போது சுவாசப் புத்துணர்ச்சி
                       தருகின்றன...அது சரி..இலக்கியம்ன உடனே...
நான்           : இதென்ன கேள்வி? நம்ம குணா தான் ..
                        வாழ்க்கையை அகம், புறம் என வகுத்த மரபல்லவா நம் மரபு! “களவும் கற்று மற” என்று களவியலும் - கற்பியலும் வகுத்து களவு என்னும் காதலுக்கும் ஒரு காலஅளவுண்டு களவுக் காதல் சில நாட்களில் திருமணம் செய்துகொண்டு கற்புக்காதலாக மாறவேண்டும் என்று சொன்னவர்களல்லவா நம் முன்னோர். நான் காதலர் தினம் கொண்டாடுவதைவிட காதலைத் தினம் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம்...
மேலும் சுவாசிக்க"உயிர்களைப் புதுப்பிக்கும் வேதியியல் மாற்றம்!"
 நம்மாளு  : நம்ம ரிஷபனை விட்டுட்டியே..அவரோட வருமென்றுதான் நினைத்தேன்..
வானம் இருட்டிக் காட்டியது..
இடி மின்னலும் கூட பதில் சொன்னது..
       நான்   : நம்ம ரவீந்திரன் கூட பிலாக்குல கவிதை எழுதறாப்பல....’அம்மாவின் சிரிப்பில் ஏதோ ஒரு ஊனம்..என்கிற கவிதை அட்டகாசமாய்...
    நம்மாளு : முக்கியமான நபரை விட்டுட்டியே..
       நான்   : வைக்கோலை மாடு மறந்தாலும், நம்ம
                     வை.கோ.வை நாம மறப்போமா?
                     அவரோட ’பூக்களை விட அந்த பூக்காரியே அழகு ’என்று கன    
                     ஜோராக ஆரம்பிக்கும் கதையை மறக்க முடியுமா?
                     http://gopu1949.blogspot.in/2011/09/blog-post_30.html 
நம்மாளு : சிகாகோவிலிருந்து நித்யா எழுதறது கூட நல்லாத் தான்
                     இருக்கு !
நான்         : இதைச் சொல்றியா ?
                    http://nittywrites.wordpress.com/2010/08/22/out-of-the-cocoon/
                    அப்புறம் நம்ம மோகன்ஜி ஹைதை லேர்ந்து  எழுதறார் ...
                    இது அவரோட லிங்க் .
                     http://vanavilmanithan.blogspot.in/2012/09/blog-post.html
நம்மாளு : அப்புறம்?
நான்         : தொடரும்னு ஒரு வலைப் பதிவு ..சூப்பரா போறது ..
                    http://aarellen.blogspot.in/2012/07/blog-post.html
                    நம்ம எல்லன் தான் நடத்தறாரு !                  
     நம்மாளு :  உனக்கே இது ஓவரா தெரியல..பொறுப்புன்னு கொடுத்தா அதை 
                          இப்படியா MISUSE  பண்றது ? உன்னோட பொண்ணு,மாமா,
                          மச்சான் ,மாப்பிள்ளை ,பிரண்ட்ஸ்  என்று இப்படியா                            INTRODUCE பண்றது ?    
         நான்    : 'ஸேம் சைட் கோல்' போடாதப்பா..அடுத்த PM நான் தான். அப்ப 
                         நீ தான் நமக்கு  RIGHT HAND!  FINANCE,HOME, DEFENCE எல்லாம்  நீ     எடுத்துக்கிறே ..  இப்ப கம்முனு கிட  !
                                  
                                                                                    

41 comments:

 1. ஒருவர் கேள்வி கேட்டு இன்னொருவர் பதில் சொல்லும் விதமாக,வலைபூக்களை அறிமுகம் செய்தல் அருமை ....,

  ReplyDelete

 2. வாருங்கள் ஓம்போகர்..தங்கள் பெயர் கனகச்சிதம்! வருகைக்கு நன்றி!

  ReplyDelete

 3. ரொம்ப பழைய டெக்னிக் தான்..விஷ்ணு சகஸ்ர நாமத்திலே வருகிறதே..ச்ஞ்சய உவாச...சல்லிய உவாச ...என்று!

  ReplyDelete
 4. ஆஹா... இன்னிக்கு அறிமுகங்களில் நித்யா மட்டும் தான் படித்ததில்லை!

  உரையாடல் மூலம் வந்த சுவையான பகிர்வு. தொடரட்டும் அறிமுகங்கள்.

  ReplyDelete

 5. உஷ்..வெங்கட்...இங்க உங்க காதைக் கொண்டு வாங்க.. நித்யா..எம் பொண்ணு..யார்ட்டியும் சொல்லிடாதீங்க..ப்ளீஸ்!

  ReplyDelete
 6. தாங்கள் அறிமுகம் செய்தமுறை அருமையாக இருந்தது நண்பரே.

  தாங்கள் தமிழ்மீது கொண்ட பற்றுக்கும் என் மீது கொண்ட அன்புக்கும்
  சங்க இலக்கியத்தின் மீது கொண்ட ஈடுபாட்டுக்கும் நன்றி. தங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் இருக்கும் வலை இணையத்தில் தமிழ் இன்னும் இன்னும் உயரத்துக்குச் செல்லும்.

  தங்கள் வலைச்சர ஆசிரியர் பணிசிறக்க வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 7. என்னோடு அறிமுகம் செய்யப்பட் பிற பதிவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 8. சிறப்பான அறிமுகங்கள். நித்யா தான் படித்ததில்லை.

  ReplyDelete
 9. //நம்மாளு:முக்கியமான
  நபரை விட்டுட்டியே..

  நான்: வைக்கோலை
  மாடு மறந்தாலும்,
  நம்ம வை.கோ.வை
  நாம மறப்போமா?
  அவரோட

  ’பூக்களைவிட அந்த
  பூக்காரியே அழகு'

  என்று கன ஜோராக
  ஆரம்பிக்கும் கதையை
  மறக்க முடியுமா?
  http://gopu1949.blogspot.in/2011/09/blog-post_30.html//

  ஆஹா! எனக்கே மிகவும் பிடித்தமான இந்தக்கதையே தங்களுக்கும் பிடித்துள்ளதும், அதையே இங்கு இன்று அடையாளம் காட்டியுள்ளதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  ”ஒரு சிறுகதை எழுதியவர்
  யார் என்பதை மறக்கலாம்;

  அந்தக்கதையையே கூட
  நாம் நாளடைவில் மறக்கலாம்;

  ஆனால் அதில் வரும்
  ஏதோ ஒரு வரி, வார்த்தை, அல்லது சம்பவம் மட்டுமாவது,
  வாசகர் மனதில் என்றும்
  மறக்காமல் தங்குமாயின்,
  அதுவே மிகச் சிறந்த கதை”

  என்பார் என் எழுத்துலக
  மானஸீக குருநாதர் திரு.
  ரிஷபன் அவர்கள்.

  அதுபோலவே என் இந்த
  சிறுகதையான “ஜாதிப்பூ”
  வின் ஆரம்ப வரிகள்.

  அனைவராலும் பாராட்டப்பட்டது.
  என்றும் நினைவில் நிற்பது.

  சந்தோஷம். நன்றிகள்.

  தொடரும் ....

  ReplyDelete
 10. குழந்தை நித்யாவை நான்
  நேரில் பார்த்து ரொம்ப நாள்
  ஆச்சு.

  சிகாகோ போய் பார்த்துட்டு
  திரும்பவும் வருகிறேன்.

  இங்கே மின் தடை
  ஒரு பக்கம்.

  இடியுடன் கூடிய மழை
  மறுபக்கம்.

  ஒரே இருட்டு வேறு.

  கையில் விசிறி,
  டார்ச் லைட் சகிதம்,
  இன்வெட்டெர் உதவியுடன்
  லாப்டாப்பில் ஏதோ
  தட்டுத்த்டுமாறி
  அடித்துக்கொண்டு
  இருக்கிறேன்.

  சிகாகோ போய்விட்டு
  திரும்பி வர கொஞ்சம்
  லேட் ஆகும்.

  இப்போ விடை பெறுகிறேன்.

  மீண்டும் சந்திக்கும் வரை
  வணக்கம் கூறி விடைபெறுவது
  உங்கள் VGK

  ReplyDelete
 11. அறியாத சில தளங்கள்...

  நன்றி...

  ReplyDelete
 12. தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

  நன்றி...

  ReplyDelete
 13. நம்மாளு:

  உனக்கே இது ஓவரா தெரியல..பொறுப்புன்னு
  கொடுத்தா அதை இப்படியா MISUSE
  பண்றது? உன்னோட பொண்ணு,மாமா, மச்சான் ,மாப்பிள்ளை,
  பிரண்ட்ஸ் என்று
  இப்படியா INTRODUCE பண்றது?

  நான்:
  'ஸேம் சைட் கோல்'
  போடாதப்பா..

  அடுத்த PM நான் தான்.
  அப்ப நீ தான் நமக்கு
  RIGHT HAND !
  FINANCE,HOME,
  DEFENCE
  எல்லாம் நீ
  எடுத்துக்கிறே ..

  இப்ப கம்முனு கிட !!//


  சூப்பரான நகைச்சுவை
  HIGHLIGHT இது தான்
  ராமமூர்த்தி சார்.

  புரிந்து கொண்டேன்.
  மிகவும் ரஸித்தேன்.

  ஆமாம். நம் எல்லென்
  இதைப்படித்தாரா?

  உடனே தகவல்
  கொடுங்கோ.

  VGK
  ReplyDelete
 14. சிகாகோவுக்குப் போய்ட்டு வந்துட்டேன்.
  தங்கள் மகள் நித்யாஸ்ரீதர் செளக்யமா இருக்கா. அவங்களுக்கும் பாராட்டுச் சொல்லிட்டு வந்துட்டேன்.

  இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்கள் எல்லோருமே எனக்கு மிகவும் தெரிந்தவர்களாகப் போய் விட்டார்கள்.

  நம் வஸந்தமுல்லையையும் விடாமல் வானவில்லையும் தொட்டு அசத்தி விட்டீர்கள்.

  எல்லோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  **நாளை இரவு எப்போது வரும் என ஏங்க வைத்துள்ள தங்களுக்கும் தங்கள் நண்பர் ’நம்மாளு’ வினாயக மூர்த்திக்கும் நன்றிகள்.

  பிரியமுள்ள,
  கோபு

  [**இப்போதைய ஏக்கம்
  மின்சாரம் எப்போ வரும்?
  என்பது மட்டுமே எனக்கு]

  ReplyDelete
 15. ஹை இராமமூர்த்தி சார்....

  உரையாடல்கள் மூலம் கலகலப்பா கொண்டு போறீங்க.....அசத்தல்....

  என்னுடைய ஃபேவரைட் ரைட்டர்ஸ் எல்லாரும் இருக்காங்களே.... மிக்க மகிழ்ச்சி இராமமூர்த்தி சார்....

  உங்களுக்கும் என் ஃபேவரைட் ரைட்டர்ஸுக்கும் அன்பு வாழ்த்துகள் தொடருங்கோ நாளைக்கும் வரேன்....

  ReplyDelete
 16. வித்தியாசமான அசத்தலான அறிகுகங்கள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 17. அன்பின் ஆர் ஆர் ஆர்

  அறிமுகங்கள் அருமை - வைகோ - நித்யா தவிர அத்தனையும் சென்று - படித்து மகிழ்ந்து மறுமொழி இட்டு வந்தேன் - வை.கோவின் பூக்காரி - ஜாதி பூ கதை ஏற்கனவெ படித்து மறு மொழி இடப்பட்டது தான். நித்யா - ஆங்கிலத்தில் இருக்கிறது,

  நம்மாள விசாரிச்சதாச் சொல்லுங்க

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 18. வித்தியாசமான பதிவர் அறிமுகம்! நன்று!வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. உரையாடல்கள் மூலம் கலகலப்பா கொண்டு போறீங்க..
  வித்தியாசமான அறிமுகம்...

  மிகவும் ரஸித்தேன்.

  ReplyDelete
 20. சிறப்பான அறிமுகங்கள். உரையாடல் மூலமாக அறிமுகப்படுத்தியிருப்பது அதற்கு மேலும் சுவாரசியமாக இருக்கு.

  ReplyDelete
 21. வலைச்சரப் பொறுப்பா?! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
  உரையாடல் டெக்னிக் வித்தியாசமாக இருக்கிறது.

  ReplyDelete
 22. சார் குணசீலன் வாங்க..வாங்க..
  ரொம்ப சந்தோஷம்!

  ReplyDelete

 23. கோவை 2 தில்லி மேம்,
  நித்யாவையும் படிங்கோ...
  அவளுக்கும் SENSE OF HUMOUR உண்டு!

  ReplyDelete

 24. வை. கோ. சார் உங்க கதையில உங்களுக்கு பிடிச்ச கதை எனக்கும் பிடிச்சிருக்கு என்பது என் அதிர்ஷ்டம்!
  அது சரி, இப்படியா திடீர்னு சிகாகோ போறது..சொல்லியிருந்தா, அரைக் கிலோ பருப்பு பொடி, மூன்று கிலோ ஆவக்காய் ஊறுகாய், நாலு கிலோ மாவடு, ஆறு கிலோ அப்பளக் கட்டு, திடீர் புளியோதரைப் பொடி, கருவேப்பிலைப் பொடின்னு கொடுத்து அனுப்பிச்சிருப்பேனே!

  ReplyDelete
 25. திண்டுக்கல் தனபாலன் வாருங்கள் சார்!

  ReplyDelete
 26. மஞ்சு பாஷிணி மேம் போன பதிவிலே பெண்டிங் வைச்சுட்டீங்க...உங்களோட
  அரைக் கிலோ மீட்டர் விமரிசனங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்..தங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிபார்க்கிறேன்..என்னுடைய ஹாஸ்ய ஜோதிக்கும், e=mc2 க்கும்!

  ReplyDelete
 27. சீனா சார்...
  அடியேன் பாஸ் மார்க் வாங்கிடுவேனா?

  ReplyDelete
 28. இராமானுசம் ஐயா அவர்களே வருக..வருக....

  ReplyDelete
 29. ரிஷபன்..உம்மால் தான் நான் எழுத வந்தேன்..வைகோ சாருக்கு நீங்க மானஸீக குரு..எனக்கு நிதர்சன குரு...

  ReplyDelete
 30. அட.. நம்ம அப்பாத்துரை சார்...
  வாங்க.. நான்,நீங்க,மோகன்ஜி,சுந்தர்ஜி
  கேரளா டூர் ப்ரொக்ராம் என்ன ஆச்சு..என்னை வெண்ணாத்தங்கரையில இறக்கி விட்டுடுங்க..அங்கேயே செட்டில் ஆயிடறேன்!

  ReplyDelete
 31. - என் blog-ஐயும் அறிமுகப்படுத்தி, அதனுள்ளில் பெரியவர் வைகோவும் //ஆமாம். நம் எல்லென்
  இதைப்படித்தாரா?// என்று வினவி.....என்னைக் கூச வைத்துவிட்டீர்கள் ஐயா...என் நெஞ்சார்ந்த நன்றிகள்.....

  ReplyDelete
 32. வாருங்கள் எல்லன்..தங்கள் வரவு நல் வரவு ஆகுக..

  ReplyDelete
 33. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

  //வை. கோ. சார் உங்க கதையில உங்களுக்கு பிடிச்ச கதை எனக்கும் பிடிச்சிருக்கு என்பது என் அதிர்ஷ்டம்!//

  நான் சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆபீஸ் செல்லவேண்டி பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் நிஜமாகவே ஒருநாள் “பூக்களை விட அழகான பூக்காரி” ஒருவளை சந்தித்தேன்.

  சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை .... பஸ் நகர ஆரம்பித்து விட்டது.

  அதையே அப்படியே முதல் வரிகளாகப்போட்டு மனதில் கதை எழுதிக்கொண்டேன்.

  ஆபீஸ் போனதும் மளமளவென்று முதல்வேளையாக அதை அப்படியே பேப்பரில் கதையாக எழுதி முடித்துவிட்டே, டிபன காஃபி சாப்பிட்டேன்.

  அதை முதன்முதலாகப் படித்தது யார் தெரியுமா? நம் கேஷ் ஆபீஸில் அப்போது இருந்த ”மரியா ஃபெர்டிணண்ட்” தான்.

  முதல் வரியைப்படித்ததுமே என்னைக் கட்டிப்பித்து உம்மாக் கொடுத்து விட்டார்.

  =-=-=-=-=-=-=-=-=-=-

  //அது சரி, இப்படியா திடீர்னு சிகாகோ போறது..சொல்லியிருந்தா, அரைக் கிலோ பருப்பு பொடி, மூன்று கிலோ ஆவக்காய் ஊறுகாய், நாலு கிலோ மாவடு, ஆறு கிலோ அப்பளக் கட்டு, திடீர் புளியோதரைப் பொடி, கருவேப்பிலைப் பொடின்னு கொடுத்து அனுப்பிச்சிருப்பேனே!//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

  என் 92 கிலோ வெயிட்டுள்ள உடம்பைத் தூக்கிக்கொண்டும், இருட்டிலே குருட்டாண்டின்னு, மின்தடையிலே, கொட்டின இடி மழையிலே நான் போய் வந்ததே பெரிதுன்னு, வழியனுப்பிவைத்த எங்க ஆத்துக்காரி தன் திருமாங்கல்யச்சரட்டை கண்ணிலே ஒத்திக்கொண்டு தேம்பித்தேம்பி அழுததிலே, உங்களிடம் வந்து சொல்லிக்கொண்டு போகணும்னே தோணலை ஸ்வாமி. க்ஷமிக்கணும்.

  அந்த சமாசாரமெல்லாம் ரெடியா நம் ஆத்திலே இருந்தா சொல்லுங்கோ. நானே ஒரு ரேட்டுப்போட்டு எடுத்துக்கறேன்.

  ஏன்னாக்க, இந்த மாவடு, புளியோதரைப்பொடின்னு சொன்னாலே போதும், எனக்கு மஸக்கைக்காரி மாதிரி ரொம்ப ரொம்ப ஆசை வந்திடுது. ;))))))

  அன்புடன்
  கோபு

  ReplyDelete
 34. அப்பாத்துரை....
  ஒரு சின்ன திருத்தம்..
  நெய்க்கும்,வெண்ணைக்கும் வித்தியாசம் தெரியாம, வெண்ணாத்தங்கரைன்னு சொல்லிட்டேன்..என்னை திருவனந்தபுரம் அருகில் இருக்கும் நெய்யாற்றங்கரையில் இறக்கி விடுங்க..அங்க செட்டில் ஆயிடலாம்னு இருக்க்கேன்....

  ReplyDelete
 35. //”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  மஞ்சு பாஷிணி மேம் போன பதிவிலே பெண்டிங் வைச்சுட்டீங்க...உங்களோட
  அரைக் கிலோ மீட்டர் விமரிசனங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்..தங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிபார்க்கிறேன்..என்னுடைய ஹாஸ்ய ஜோதிக்கும், e=mc2 க்கும்!//


  நீங்க கேட்டு நான் மறுப்பேனா இராமமூர்த்தி சார்?

  பெண்டிங்கா???

  கண்டிப்பா நாளை வந்து பார்த்து கருத்து எழுதிடறேன் சார்....

  மனம்நிறைந்த அன்பு நன்றிகள் இராமமூர்த்தி சார்...

  ReplyDelete
 36. trip போக வேண்டியது தான். plan போட்டுக்கிட்டேயிருந்தா எதுவுமே நடக்காது. நெய்யோ வெண்ணையோ எந்த ஆற்றங்கரையா இருந்தாலும் இறங்கிடுவோம்.

  ReplyDelete
 37. ப்ரமாத‌ம் சார்... உங்க‌ கார்ட்டூன் உட்ப‌ட‌! வை. கோ. சார் ந‌ல்ல‌ ஜ‌மா:))

  ReplyDelete
 38. நிலாமகள் said...
  ப்ரமாத‌ம் சார்... உங்க‌ கார்ட்டூன் உட்ப‌ட‌! வை. கோ. சார் ந‌ல்ல‌ ஜ‌மா:))//

  வாங்கோ மேடம்.

  மிகவும் ரஸித்துப்படித்து இருப்பீர்கள் போலிருக்கு. ;)))))

  என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  அன்புடன்,
  VGK

  ReplyDelete
 39. நிலாமகள் said...
  ப்ரமாத‌ம் சார்... உங்க‌ கார்ட்டூன் உட்ப‌ட‌! வை. கோ. சார் ந‌ல்ல‌ ஜ‌மா:))//

  வாங்கோ மேடம்.

  மிகவும் ரஸித்துப்படித்து இருப்பீர்கள் போலிருக்கு. ;)))))

  என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  அன்புடன்,
  VGK

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது