07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 2, 2012

அறுசுவை - கதம்ப உணர்வுகள் (இரண்டாம் நாள்)

அன்பு நண்பர்களே எல்லோரும் சௌக்கியமாப்பா? நேற்று முழுக்க எனக்கு ஊக்கம் தந்து, வரவேற்று, என் வலைப்பூவுக்கும் சென்று அன்புடன் எனக்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் அன்புநன்றிகள். இன்றுமுதல் என் மனம் கவர் பதிவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன்.


முதல் அறிமுகம்


என்னால் அண்ணா என அன்புடன் அழைக்கப்பட்டுவருபவரும், மற்ற சிலரால்  ”VGK” என்றும், வேறு சிலரால் பதிவுலக வை.கோஎன்றும், ஒருசிலரால் செல்லமாக கோபுஎன்றும் அழைக்கப்பட்டுவரும் பதிவர்  வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை வலையுலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது.  வை. கோபாலகிருஷ்ணன்
* வை.கோ *
* கோபு *
* VGK *
இவர் பல்வேறு தனித்திறமைகளைத் தன்னிடத்திலே வளர்த்துக்கொண்டுகுடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்து கொண்டுஅன்பு,  அடக்கம்,  அமைதிஅனுபவம் என்ற மிகச்சிறப்பான குணங்களைத் தன்னகத்தே தக்க வைத்துக்கொண்டுஎப்போதும் தன்னை மிகச் சாதாரணமானவன் தான் ஆனாலும் ஏதாவது சாதிக்க நினைப்பவன் என்று சொல்லி வருகிறார்.

இவர் இதுவரை செய்துள்ள சாதனைகளே,  ஏராளமாகவும்,  தாராளமாகவும் உள்ளன.

தற்சமயம் குவைத்திலிருக்கும் நான்இந்தியாவில் தமிழ்நாட்டில்   திருச்சியிலிருக்கும் என் அண்ணா திரு. வை. கோபாலகிருஷ்ணனுடன்சமீபத்தில்  தொலைபேசியில் பேசி இருக்கிறேன். அவரின் பலவிதமான சாதனைகளை ஆச்சர்யத்துடன் கேட்டிருக்கிறேன் 

இவரைப்போன்ற ஒரு நல்ல மனம் படைத்தவரைநல்லதை மட்டுமே நினைப்பவரைபல்வேறு திறமைகள் கொண்டவரைநகைச்சுவை உணர்வுகள் நிரம்பியவரை நான் இதுவரைப் பார்த்ததே இல்லை. 


எழுத்தினில் எழுதி எடுத்துரைத்துப் புரிய வைக்க முடியாத பல்வேறு நல்ல விஷயங்கள் நான் இவரிடம் பேசியதில் என்னால் நன்கு அறிய முடிந்தது. பிராப்தம் இருந்தால் நான் இவரை நேரில் சந்திப்பேன்.

இவரின் பதிவுலக எழுத்துக்களில் இவர் தொடாத தலைப்புக்களே இல்லை என்றும் சொல்லலாம்.  

நட்புமனிதநேயம்அனுபவம்காதல்மனித உணர்வுகள்மனிதாபிமானம்வாழ்வியல் யதார்த்தங்கள்உண்மைநேர்மைகுடும்ப உறவுகள் போன்ற அனைத்து அம்சங்களும்  இவரின் பல்வேறு படைப்புகளில் இவர் கையாண்டுள்ளார். 

மேலும் இவரின் படைப்புகள்  எல்லாவற்றிலும் நகைச்சுவை கலந்து கொடுப்பதிலும்சொல்லுவதை மிகத் தெளிவாக தகுந்த உதாரணங்களுடன் சொல்லுவதிலும் இவர் வல்லவராகவே உள்ளார். 

என் பேட்டியில் முக்கியமாக அவரின் படைப்புகளைப்பற்றி பேசியபோது நான் சேகரித்த சில விஷயங்களைப்பற்றி மட்டும் இங்கு இன்று விஸ்தாரமாக எடுத்துரைத்து அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 

oooooooooooooo

தாயுமானவள்” பகுதி 1 / 3

அன்புக்குரிய கோபு அண்ணா எழுதிய முதல் சிறுகதை இது.

முதல் சிறுகதையே பிரபல பத்திரிகையின் சிறுகதைப் போட்டியொன்றில் பரிசுக்கு தேர்வாகியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். 

முதல் சந்திப்புமுதல் பார்வைமுதல் நட்புமுதல் உரையாடல்முதல் காதல்முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு THRILLING  ஆன அனுபவமும்சுகமும்பேரானந்தமும்பரவஸமும்  இருக்க முடியும்?

அதுபோலவே தான் இந்த என் முதல் கதையும்அது முதன் முதலாக ஒரு பிரபல பத்திரிகையில் அச்சேறிபிரசுரம் ஆனபோதுஎனக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும்பரிசுத் தொகையையும்என்னுடன் அன்று மிகப்பெரிய தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்களையும்புதிய எழுத்துலக நண்பர்களையும் பெற்றுத்தந்தது என்பதே என் சிறுகதையின் மூலம் நான் பெற்ற மிகச்சிறப்பானமகிழ்ச்சிகரமானதோர் அனுபவம்.

அந்த என் முதல் அனுபவம் மிகவும் 
THRILLING! THRILLING!! THRILLING!!! தான் !”  

என்கிறார்என் அன்புக்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் அண்ணா. 

[சுனாமி என்ற இயற்கையின் சீற்றத்தால் தன் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற அனாதையான ஓர் சிறுமியைப் பற்றிய கதைஇது. நெஞ்சை உருக்கும் சம்பவங்களை மிகவும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ]

===========================================================

உடம்பெல்லாம் உப்புச்சீடை

மிகவும் அருமையானதோர் காவியம்.  

தமிழின் பிரபல  மாத பத்திரிகையான மங்கையர் மலர்”  மட்டுமின்றி இந்தக்கதைதமிழ் மொழியும்  தெரிந்த  கன்னட எழுத்தாளர் ஒருவரால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுபெங்களூரிலிருந்து வெளிவரும் பிரபல கன்னடப் பத்திரிகையான கஸ்தூரி யிலும் வெளியாகியுள்ளது. 

அந்த கன்னட மொழியாக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தக்கதையின் தலைப்பு: ”மையெல்லாக் கண்டு” 

இரயில் பயணத்தில் துவங்கும் இந்தக்கதைஒவ்வொரு பகுதியிலும் நம்மையும் சுகமாக தாலாட்டி அதே ரயில் வண்டியில்  கூட்டிச் செல்கிறது. 

கதையில் எக்ஸ்ப்ரஸ் வேகம். நல்ல விறுவிறுப்பு. 

கதாசிரியரின் முழுத்திறமையும் ஒவ்வொரு வரிகளிலும் மிளிர்கின்றனஒளிர்கின்றன. 

மிகச் சிறந்ததோர் படைப்பு. அனைவராலும் ஒருமனதாகப் பாராட்டப்பட்டுள்ளது. 

======================================   

அஞ்சலை”  பகுதி 1 / 6

உலகளாவிய தமிழ் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்ட இந்தக்கதைக்கு லண்டனிலிருந்து வெளிவரும் புதினம்” என்ற பத்திரிகையால் பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது. 

கதையென்றால் இதுவல்லவோ கதை’ என்று சொல்லும் அளவுக்கு நல்ல விறுவிறுப்பான நடையுடன்மனித உணர்வுகளைப் பற்றிச் சொல்லும்மிக  அற்புதமான கதை இது.

=======================================================

என் உயிர்த்தோழி

ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிகை நடத்திய  படக்கதை” க்கான  போட்டியில் ஒருவருக்கே பரிசு என்ற நிபந்தனையில்அந்தப்பரிசினை தனக்கே தட்டிச்சென்ற கதை இது.

இதில் அன்புபாசம்பிரியம்உறவு போன்றவை வெகு அழகாக விளக்கப்பட்டுள்ளன.

===========================================

இனி துயரம் இல்லை

தமிழ் மாதச் சிற்றிதழ் ஒன்று நடத்திய போட்டியொன்றில் முதல் பரிசு பெற்ற கதை இது.

முதியோரின் மன உணர்வுகளை அருமையாக அற்புதமாக இளைஞர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்த மிகச்சிறந்த கதை.

======================================================

ப வ ழ ம்

நிலாச்சாரல்’ என்ற மின் இதழில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான  கதைகளிலுமே மிகச்சிறப்பானது இந்தக் கதை என தெர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது இந்தச் சிறுகதை.

=================================================================================

தீபாவளி நேரத்தில் பத்தாயிரம் வாலா பட்டாசு என சர வெடி வெடிக்கும் .......  பார்த்திருப்பீர்கள் தானே!

அதே போன்ற சரவெடியாகதாங்களும் வாய்விட்டுச்  சிரித்துக்கொண்டே இருக்க விருப்பமா

இதோ என் கோபு அண்ணாவின் இந்த மூன்று கதைகளையும் வாசியுங்கோ .... 

சிரித்துச் சிரித்து வயிற்றுவலி ஏற்பட்டால் மஞ்சுவாகிய நான் பொறுப்பல்ல! ;)))))  

==============

எலிஸபத் டவர்ஸ் [பகுதி 1 / 8]

அடுக்குமாடிக் குடிருப்பில் வீடாம். வீட்டினில் ஓர் எலி புகுந்து விட்டதாம். அந்த வீட்டில் உள்ளவர்கள் படும் பாட்டை முழு நீள நகைச்சுவையாகத் தந்திருக்கிறார் ...... நம் கோபு அண்ணா. 

இதில் வேடிக்கை என்னவென்றால் முதல் ஏழு பகுதிகள் வரை எலியை நம் கண்ணில் காட்டாமலேயே மிக ரகசியமாகவே ஓட விட்டுள்ளார் கதாசிரியர். 

சிரிப்போ சிரிப்பு தான். திகில் கதை போலஅதே சமயம் நகைச்சுவை குறையாமல்மிக  அற்புதமாக எழுதியுள்ளார்..

===================

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?”  பகுதி-1 / 2

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும் என்பார்கள். 

அப்போ பல் வலி வந்தால் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுக்கா தெரியும்எனக்கேட்டு கதையை ஆரம்பித்துள்ளார் என் அண்ணா VGK. 

படித்துச் சிரித்ததில் என் பல்லெல்லாம் சுளுக்கிக் கொண்டு விட்டது.  அவ்வளவு நகைச்சுவை. 

தனக்கே உரித்தான வெகு சரளமான நடையில்  எழுதியுள்ளார்.

கடைசியில் இவரால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில அறிவுரைகளோ ...  
அடடா .. அக்ஷர லக்ஷம் பெறும்.  

இந்த அருமையான கதையை எழுதிய கோபு அண்ணா 
பல்லாண்டு வாழ்க !!!

=============

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.! 
புதிய கட்சி மூ.பொ.போ.மு.க.” 
உதயம்: பகுதி 1 / 8

சென்ற ஆண்டு 2011 ஆரம்பத்தில்தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு  சற்று முன் இந்தக் கதையைக் கொடுத்துள்ளது,  அண்ணா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் தனிச்சிறப்பு.

அருமையானதோர் நகைச்சுவை சரவெடியினை கொளுத்திவிட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார். 

அரசியல் மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களைச் சேர்த்துச் சமைத்த ஓர் ருசியான அவியல் இது.

தமிழக அரசியலில் ஏற்கனவே உலா வரும் முன்னேற்றக் கழகங்கள் போதாதென்று இவர் ஓர் மூ.பொ.போ.மு.க” என்று  ஓர் புதிய கட்சி உதயம் என்கிறார். 

அலுவலகத்தில்அலுவலக நேரத்தில்வேலை செய்கிறார்களோ இல்லையோவெட்டி அரட்டை அடிப்பதே சிலரின் வழக்கம். அந்தக் கருவினை அழகாகக் கையில் எடுத்துக்கொண்டு,  மிக மிக சுவைபட எழுதி அசத்தியுள்ளார்நம் கோபு அண்ணா. 

முதல் பகுதியை படிக்க ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடிக்காமல் யாரும் அங்கே இங்கே செல்லவே முடியாதபடி, தன் கதைகளை நகைச்சுவையாக நகர்த்திச் சொல்வதில், என் கோபு அண்ணா அவர்களுக்கு நிகர் அவரே தான் என்பேன்.

oooooooooooooooooooooooooooooooo   

பொறுமையாக நீண்ட நேரம் செலவழித்து கதைகளைப் படிக்க முடியாது. 

ஏதோ ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே உள்ளது. அதற்குள் ஒரு கதையைப் படிக்க வேண்டும். குபீரெனச் சிரிக்க வேண்டும். கவலைகளை மறக்க வேண்டும் 

என விரும்புவோர்களுக்காக மட்டுமே,  என் கோபு அண்ணா குட்டியூண்டு கதைகள்” நிறையவே எழுதியுள்ளார். 

இதோ இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். 

சரவெடி அல்ல;  இவை மிகச்சிறிய ஒரே வெடிதான்;  
ஆனாலும் ஒவ்வொன்றும் ஓர் அணுகுண்டு போல! 
ஜாக்கிரதை!! ;))))) 


பிரமோஷன்


வாய்விட்டுச்சிரித்தால் 

சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]


பெயர் சூட்டல்

வரம்

யார் முட்டாள்?

அமுதைப்பொழியும் நிலவே !

திருமண மலைகளும் மாலைகளும்

கொட்டாவி

எட்டாக்க[ன்]னிகள்

முன்னெச்சரிக்கை முகுந்தன்

கார் கடத்தல்

தங்கமே தங்கம்

பகற்கொள்ளை

ஐக்யூ டாப்லெட்ஸ்  [I Q TABLETS]

விருது மழையில் தூறியதோர் குட்டிக்கதை.
புத்திசாலி மனைவியைப் பற்றிய நகைச்சுவைக் கதை ]

தாலி” 

ஆசை

===========================================

அண்ணா எழுதிய கற்கண்டாக 
இனிக்கும் [திகட்டாத] அற்புதமான கதைகள் இதோ: 

மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்

காதல் வங்கி

மனசுக்குள் மத்தாப்பூ பகுதி 1 / 4
[என் கோபு அண்ணா அவர்கள் தானே வரைந்த 
ஓவியத்துடன் கூடிய காதல் காவியம் இது.] 

ஜா தி ப் பூ

காதலாவது .... கத்தரிக்காயாவது!!

மலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3

கொஞ்ச நாள் பொறு தலைவா ...!
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....!!

தேடிவந்த தேவதை பகுதி 1 / 5

================================================

அன்பின் VGK அண்ணா அவர்கள் எழுதியுள்ள

சமூக விழிப்புணர்வுக் கதைகள். 

மனித நேயம்மனிதாபிமானம்உண்மைநேர்மை
என மிகச்சிறப்பான குணங்களைப்பற்றி,  சிந்திக்க 
வைக்கும் அற்புதமான படைப்புகளில் ஒருசில:

ஜாங்கிரி

எல்லோருக்கும் பெய்யும் மழை

பூபாலன்

நாவினால் சுட்ட வடு பகுதி 1 / 2

அவன் போட்ட கணக்கு

எங்கெங்கும் எப்போதும் என்னோடு பகுதி 1/ 3

மூக்குத்தி பகுதி 1 / 7

யாதும் ஊரே!  யாவரும் கேளிர்!!

வடிகால் பகுதி 1 / 4

மடிசார் புடவை பகுதி 1 / 2

பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் பகுதி 1 / 2

முதிர்ந்த பார்வை பகுதி 1 / 2

அழைப்பு பகுதி 1 / 2

அட்டெண்டர் ஆறுமுகம் 

சகுனம் பகுதி 1 / 2

பிரார்த்தனை

அழகு நிலயம்

நல்ல காலம் பிறக்குது

மாமியார்

உண்மை சற்றே வெண்மை பகுதி 1 / 2

நகரப்பேருந்தில் ஓர் கிழவி

தை வெள்ளிக்கிழமை

நன்றே செய் அதுவும் இன்றே செய்

சூழ்நிலை

அழகு நிலையம்

அன்ன்மிட்ட கைகள்

முதிர்ந்த பார்வை பகுதி 1 / 2 

ஏமாற்றாதே ஏமாறாதே

===================================================================

தங்கப்பதக்கத்தின் மேலே ஓர் முத்துப்பதித்தது போலே
கோபு அண்ணாவின் சொந்த அனுபவங்களால் 
வெளிப்பட்டுள்ள அழகான வைரம் போல மின்னும் 
படைப்புகள் நிறையவே காணப்படுகின்றன. 

இதோ அவற்றில் சில:   

சுடிதார் வாங்கப்போறேன்  பகுதி 1 / 3

நீ முன்னாலே போனா ... நா .. 
பின்னாலே வாரேன் பகுதி 1 / 5

மழலைகள் உலகம் மகத்தானது

உணவே வா ... உயிரே போ  [கட்டுரை]

ஜான்பேட்டா” - கேரக்டர் பகுதி 1 / 2

பிரபல சங்கீத உபன்யாசகர் திருமதி விசாஹா ஹரி 
அவர்களுடன் ..... சுகமான அனுபவம்.  பகுதி 1 / 2

காலம் மாறிப்போச்சு பகுதி 1 / 2

மீண்டும் பள்ளிக்குப்போகலாம் பகுதி 1 / 7

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் பகுதி 1 / 18

ஊரைச் சொல்லவா! பேரைச் சொல்லவா!! 
[திருச்சியைப் பற்றிய விரிவான கட்டுரை]

பெயர் காரணம் [நகைச்சுவை ஆனால் உண்மை]

ஐம்பதாவது பிரஸவம் 
[”மை டியர் ப்ளாக்கி” + குட்டிக்குழந்தை தாலி”]

100 ஆவது பதிவு - இந்த நாள் இனிய நாள் 

150 ஆவது பதிவு [தீபாவளி குறு நாவல்-முடிவு]

200 ஆவது பதிவு 
நான் ஏறி வந்த ஏணி தோணி கோணி

250 ஆவது பதிவு [ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி]

300 ஆவது பதிவு
ஆதி சங்கரரின் வாக்கு [நாடகப்பகுதி 17]

===========================================

கோபு அண்ணா எழுதியுள்ள ஒரு சில கவிதைகள்

அந்த நாளும் வந்திடாதோ [கவிதை]

உனக்கே உனக்காக [கவிதை]
==========================================

VGK அண்ணா அவர்கள் தன்னுடைய இல்லற வாழ்க்கை, [மணிவிழாமனைவிபிள்ளைகள்மருமகள்கள்பேரன்கள்பேத்தி]அலுவலக வாழ்க்கைஎழுத்துலகப் ப்ரவேசம்வெளியிட்டுள்ள நூல்கள்வெளிநாட்டுப்பயணம்,  அவரின் ஆர்வங்கள்தனித்திறமைகள்இதுவரை அவர் பெற்றுள்ள பரிசுகள்,  விருதுகள்பட்டங்கள்தேசிய விருதுகள் என 

பல்வேறு “மலரும் நினைவுகளை அழகான படங்களாக வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நான் மிகவும் வியந்தும் மகிழ்ந்தும் போனேன். 

இதோ அதற்கான இணைப்புகள்:

நல்லதொரு குடும்பம் 

அலுவலக நாட்கள்

என்னை வரவேற்ற எழுத்துலகம்

நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்

துபாய்ப் பயணம்

கலைகளிலே அவள் ஓவியம்

==========================================


இங்கு நான் இவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர இன்னும் பல சிறப்பான பதிவுகள் கொடுத்துள்ளார். அதாவது ஆன்மிகம்மூளைக்கு வேலை,  தந்திரக் கணக்குகள்,  ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஒருசில சிறுகதைகள்ஜோக்குகள்விசித்திரமான ஓவியங்கள் என ஏராளமாக உள்ளன.

சென்ற ஆண்டு அதாவது 2011 ஜனவரி முதல் டிஸம்பர் வரை மட்டும் சுமார் 200 பதிவுகள் கொடுத்துள்ள இவர் இந்த 2012 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு 100 பதிவுகளுக்கு மேல் கொடுத்து விட்டுசற்றே வலையுலகிலிருந்துவிலகியுள்ளது போலத்தெரிகிறது.  

அதற்கான காரணத்தை ஏதோ இக்கட்டான சூழ்நிலை என்று இவர் தன்னுடைய   2012 மே மாதப் பதிவினில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவருடன் நான் பேசிப் பழகியதிலிருந்துஇவர் நம்முடன் பகிர்ந்து கொள்ள இன்னும் ஆயிரக்கணக்கான சுவையான விஷய்ங்கள் இருக்கும் என்பதை நன்கு உணர முடிந்தது. 

நல்லதொரு கற்பனை வளமும்அழகான எழுத்து நடையும்மிகச்சிறந்த அனுபவ முதிர்ச்சியும் உள்ள இவர் மீண்டும் பதிவுலகத்திற்கு தொடர்ச்சியாக வருகை தந்துமேலும் பல சிறப்பான பதிவுகளைத் தரவேண்டும் என உங்கள் அனைவர் சார்பாகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

இவருடைய சமீபத்திய ஒருசில பதிவுகள் மூலம் இவரின் நட்பு வட்டம் எவ்வளவு மிகப் பெரியது என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது. தனக்குக் கிடைத்த 10th  11th +  12th விருதுகள் ஒவ்வொன்றையும் இவர் 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார். 

அதற்கான இணைப்புகள் இதோ:

இவரின் பதிவுக்கு வருகை புரிந்து பின்னூட்டம் தரும் ஏராளமானவர்களையும்அவர்களின் மிகச்சிறந்த கருத்துக்களையும்அவற்றிற்கு இவர் தரும் பதில்களையும் படித்தாலே மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அந்த அளவுக்கு இவர்மேல் பலரும் பாசமழையினைப் பொழிகிறார்கள் என்றால்இவர் சொல்வது போல இவர் சாதாரணமானவராகவே இருக்க முடியாது.


அன்பின் கோபு அண்ணா!

தாங்கள் அவசியமாக மீண்டும் பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க  வேண்டும் என மிகத்தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
உங்களின் அன்புத்தங்கை

ம ஞ் சு பா ஷி ணி


இந்தப் பதிவினைப் பார்க்கும் படிக்கும் அன்பர்கள்நண்பர்கள்பதிவர்கள் அனைவருக்கும் ஓர் மிகசிறிய வேண்டுகோள்

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணைப்புகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒன்றினைப் போய்ப் படியுங்கள். தங்களின் கருத்துக்களை பதிவு செய்து பின்னூட்டம் அளியுங்கள். அதுவே என் அன்பின் அண்ணா திரு. VGK அவர்களை மிகவும் மகிழ்விக்கும். அவருக்கு உற்சாகமும் அளிக்கும். 

அதுபோன்ற தங்களின் கருத்துக்களும்பாராட்டுக்களும் மட்டுமே அவரை திரும்ப உற்சாகத்துடன் நம் வலையுலகில் வலம் வர வழிவகுக்கும்.

செய்வீர்கள் தானே? ........ 

மீண்டும் நாளை மனம் கவர் பதிவர்களுடன் சந்திக்கிறேன்பா உங்களை.... 
133 comments:

 1. சிறப்பான பணி அக்கா.!

  வாழ்த்துகள் பற்பல

  ReplyDelete
 2. பன்முகத் திறமை படைத்த தன் எழுத்துக்களால் நாளும் என்னை வியக்க வைத்துக் கொண்டிருப்பவர் வை.கோ. சார், அன்பான இதயம் படைத்த அவரின் சாதனைகளையு்ம் சிறந்த படைப்புகளையும் ஒன்றும் விடாமல் தொகுப்பாக இங்கே பார்த்ததில் மிகமிக மகிழ்ச்சி. இவற்றில் நான் தவறவிட்ட படைப்புகளை அவசியம் படித்துக் கருத்திடுகிறேன் தோழி. அருமையான பகிர்விற்கு மனமகிழ்வுடன் என் நன்றி உங்களுக்கு.

  ReplyDelete
 3. எதையும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும்
  செய்வீர்கள் என்பதற்கு நமது மதிப்பிற்குரிய
  பதிவர்திரு. வை.கோ.அவர்களின் அறிமுகமே சான்று
  தாங்கள் கடைசியாக வைத்துள்ள கோரிக்கையை
  உங்கள் கோரிக்கையாக மட்டுமல்லாது
  பதிவர்கள் அனைவரின் கோரிக்கையாகவும்
  முன் வைக்கிறேன்
  ஆசிரியர் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. // சிவஹரி said...
  சிறப்பான பணி அக்கா.!

  வாழ்த்துகள் பற்பல//

  அன்பு நன்றிகள் தம்பி.

  ReplyDelete
 5. //பால கணேஷ் said...
  பன்முகத் திறமை படைத்த தன் எழுத்துக்களால் நாளும் என்னை வியக்க வைத்துக் கொண்டிருப்பவர் வை.கோ. சார், அன்பான இதயம் படைத்த அவரின் சாதனைகளையு்ம் சிறந்த படைப்புகளையும் ஒன்றும் விடாமல் தொகுப்பாக இங்கே பார்த்ததில் மிகமிக மகிழ்ச்சி. இவற்றில் நான் தவறவிட்ட படைப்புகளை அவசியம் படித்துக் கருத்திடுகிறேன் தோழி. அருமையான பகிர்விற்கு மனமகிழ்வுடன் என் நன்றி உங்களுக்கு.//

  அன்பு நன்றிகள் கணேஷா.

  ReplyDelete
 6. //Ramani said...
  எதையும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும்
  செய்வீர்கள் என்பதற்கு நமது மதிப்பிற்குரிய
  பதிவர்திரு. வை.கோ.அவர்களின் அறிமுகமே சான்று
  தாங்கள் கடைசியாக வைத்துள்ள கோரிக்கையை
  உங்கள் கோரிக்கையாக மட்டுமல்லாது
  பதிவர்கள் அனைவரின் கோரிக்கையாகவும்
  முன் வைக்கிறேன்
  ஆசிரியர் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்.

  ReplyDelete
 7. வணக்கம் அன்புச் சகோதரி மஞ்சுபாஷிணி!
  முதற்கண் வலைச்சரத்தின் ஆசிரியராய் பணியேற்றுள்ள தங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
  நான் இங்கு புதியவள். அவ்வப்போது உங்கள் வலைப்பூவுக்கும் ஓசைப்படாமல் தேன் அருந்த வந்ததுண்டு:) தடம் பதித்ததில்லை;))

  வைகோ ஐயா எனக்கு உங்களின் இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியேற்பை அறியத்தந்திருந்தார். வந்து பார்த்து வியந்துபோனேன்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

  சகோதரி, நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள உங்கள் மனம்கவர் பதிவர்கள் வரிசையில் வைகோ ஐயாவை, அவரின் பதிவுகளை முதலில் இங்கு அறிமுகப்படுத்தியது மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத்தருகிறது.
  உள்ளங்கை நெல்லிக்கனியென அவரின் திறமைகளை அறியாதோர் இல்லையெனலாம்.
  எனக்கும் வைகோ ஐயாவின் பதிவுகள் ரொம்பப் பிடிக்கும்.

  நான் இன்னும் படிக்கவேண்டிய ஐயாவின் பதிவுகள் ஏராளம் இருக்கின்றன.
  அழகாக பட்டியலிட்டுத் தந்துள்ளீர்கள். கணனியில் எனக்குப் பிடித்தவற்றை பாதுகாக்கும் bookmark ல் பதிந்துவிட்டேன். பகிர்வுக்கு மிக்கநன்றி!

  தொடரட்டும் உங்கள் பணி! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி!!

  ReplyDelete
 8. அருமையான பதிவு.
  திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது பதிவுகளைச் சொல்லியிருக்கிறார்; அறிமுகம் என்றால் சரியான வார்த்தையில்லை என்று நினைக்கிறேன். இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 9. வலைச்சர ஆசிரியர்
  திருமதி மஞ்சுபாஷினி அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. திரு வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலையுலகப் பணியைப் பாராட்டி அறிமுகம் செய்த தங்கள் பணி பாராட்டுக்குரியது.

  அறிமுகம் செய்யப்பட்ட வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 11. ஐயோப்பா! அருமை ஆக்கம், என்னால முடியாதப்பா இவ்வளவும் பார்க்க. எவ்வளவு களைப்பாக இருக்கும். மிக்க நன்றி சகோதரி. மேலும் பணி சிறக்க வாழ்த்து.
  உங்கள் அறிமுகம் பொருத்தமானதே.
  அப்படி நீண்ட பட்டியல் போடாது, அளவோடு செய்யுங்களேன் .மேலும் பலரை அறிமுகப்படுத்தலாம் அல்லவா மஞ்சும்மா.?

  நல்வாழ்த்துடா!...
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 12. அறிமுகப் பதிவாளர்களிற்கு மனமார்ந்த வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. மஞ்சுபாஷிணி, திரு. வை, கோபாலகிருஷ்ணன் அவர்களின் கதைகளில் மிக பிடித்தது என்று வலைச்சரத்தில் உடம்பெல்லாம் உப்புச்சீடை என்ற கதையை பகிர்ந்து கொண்டேன் அதே கதை உங்களுக்கும் பிடித்து இருக்கிறது. மனித நேயக் கதை.

  மனிதநேயம் மிக்க மனிதர் அவர். அவரைப்பற்றி ஒரு குறும்படம் பார்த்த உணர்வை கொடுத்து விட்டீர்கள்.
  ஒன்றே செய்க அதை நன்றே செய்க என்று செய்து விட்டீர்கள்.
  உங்கள் விருப்பம் போல் தான் எங்கள் விருப்பமும் அவர் மறுபடியும் பதிவுகள் தரவேண்டும். அநேகமாக அவர் பதிவுகள் எல்லாம் படித்து இருக்கிறேன் படிக்காத பதிவுகளை படித்து கருத்து தெரிவிக்கிறேன்.

  உங்களுக்கு பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள்.


  வை. கோபாலகிருஷ்ண்ண சாருக்கு அழைப்பு விடுக்கிறேன் வாருங்கள் உங்கள் அனுபவங்களில் கிடைத்த நல்ல விஷ்யங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எல்லோருக்கும் பயன்படும். பேரக் குழந்தைகள் ஊருக்கு போனபின் உங்கள் பதிவுலகப் பிரவேசம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

  ReplyDelete
 14. மஞ்சு, வை.கோ சாருக்கு அர்ப்பணித்த வலைச்சரத்தில் தங்களின் ஒருநாள் தொகுப்பு சூப்பர்,மிக்க நன்றி. வலையுலக வள்ளல் வை.கோ அவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.பாகுபாடின்றி பழகுவதில் அவருக்கு நிகர் அவரே! தொடர்ந்து அவரின் சேவை வலையுலகிற்கு தேவை..

  ReplyDelete
 15. என் அன்புத் தங்கை மஞ்சுவே,

  காலை வணக்கம்.

  நலம். நலமறிய ஆவல்.

  தங்களின் இந்தப் பதிவைப்

  பார்த்ததும் நான் வியந்து போனேன்.

  படித்ததும் எனக்கு மயக்கமே வந்தது

  தங்களின் கடும் உழைப்பினைக்கண்டு கலங்கிப்போனேன்.

  எனக்கே என்னைப்பற்றி தெரியாத பலவிஷயங்களை எப்படித் தங்களால் இப்படிக் கோர்வையாகவும் தரமாகவும் தரமுடிந்துள்ளது .......ம ஞ் சூ ?


  தொடரும்.......

  ReplyDelete
 16. 2] VGK to மஞ்சு........

  அன்றொரு நாள் தாங்கள்.

  “அண்ணா நான் தங்கள் மேல் வைத்துள்ள அன்பை, பாசத்தை, நேசத்தை, பரிவை, ஆத்மார்த்தமான ஆரோக்யமான அழகான நட்பை எவ்வளவு கிலோ அல்லது எவ்வளவு டன் என என்னால் எடைபோட்டுக் காட்டிவிட முடியாது”

  என்று சொல்லியிருந்தீர்கள்.

  என்னுடன் தொலைபேசியில் பேசிய நீங்கள்

  “உங்களுடன் பேசும் போது ஓர் குழந்தையுடன் பேசுவது போன்ற குதூகுலத்தைக் காண்முடிகிறது, கைக்குழந்தையுடன் பழகும் வாத்சல்யத்தை உணர முடிகிறது”

  என்றீர்கள்.

  நானும் இதுபோல அதீதப்பிரியத்துடன் ஒரு சிலருடன் மட்டும் பழகி, பிறகு அவர்கள் என்னை விட்டுப் பிரியும் போது தாங்க முடியாத வலிகளை உணர்ந்ததால், நான் என்னுடைய நட்பு வட்டத்தைப் பெருக்கிக்கொள்ளவோ, அதன் நீள, அகல, ஆழஙகளை பெரிதாக்கவோ ஒரு போதும் விரும்புவது இல்லை.

  எல்லாவற்றிலுமே, எல்லோரிடமுமே, அடிப்படையில் அன்பே தான் என்றாலும், அந்த அன்பினைப் பகிர்ந்து கொள்வதிலும் ஒரு கட்டுப்பாட்டு எல்லைகளை, நானே எனக்குள் வகுத்துக்கொண்டு விட்டேன்.

  தொடரும்......

  ReplyDelete
 17. 3] VGK to மஞ்சு........

  இருப்பினும் நம் இருவருக்குள் ஏற்பட்டுள்ள இந்த ஆழமான நட்புக்கும் பாசத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன.

  அது நம் இருவருக்கும் மிக நன்றாகவே தெரியும். இருப்பினும் அண்ணன் தங்கையாக பழகி வரும் நமக்குள் உள்ள ஒருசில ஒற்றுமைகள் மற்றவர்களுக்கும் தெரியட்டும் என இங்கு குறிப்பிடுகிறேன்.

  1] மற்றவர்கள் என்னை வற்புருத்தி அழைக்காமலேயே, நானே விரும்பிப்போய் படித்து மகிழும் பதிவுகள் என்று ஒரு சில மட்டுமே உள்ளன. ஆனால் அவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே.

  அதுபோலவே தாங்களும் ஒருசில பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே சென்று, படித்துப்பார்த்து, கருத்துக் கூறுவது வழக்கம் என்று என்னிடம் சொல்லியிருந்தீர்கள்.

  2] அதுபோல நானாகவே விரும்பிச்சென்று படித்து மகிழ்ந்த பதிவுகளுக்கு என்னால் ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டம் அளிக்கவே முடியாது என்பதே உண்மை.

  முடிந்தவரை நிறையவே பின்னூட்டங்கள் கொடுத்து பதிவு எழுதி வெளியிட்டவரை என்னால் முடிந்தவரை மகிழ்விப்பது உண்டு. உற்சாகப்படுத்துவது உண்டு.

  அது போன்று பின்னூட்டமிடுவதில் எந்த விதமான கஞ்சத்தனமும் என்னால் காட்டவே முடியாது. அது என் சுபாவம்.

  என் அன்புத்தங்கையாகிவிட்ட தாங்களும் இது விஷயங்களில் அப்படியே டிட்டோவாக என்னைப்போலவே [உங்களின் அன்பு அண்ணாவை போலவே] உள்ளீர்கள்.

  ஏன் ..... சில சமாய்ங்களில் என்னையே தூக்கி சாப்பிட்டு விடுபவராக உள்ளீர்கள்.

  ஒவ்வொரு பதிவுக்கும் சென்று ஆழமாக அந்தப் பதிவினைப் படித்து, ரஸித்து [அந்தப் பதிவை விட அதிக வரிகளுடன்] பக்கம் பக்கமாக பின்னூட்டம் கொடுத்து அசத்தி வருகிறீர்கள்.

  உங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ள அந்த ஒரு நல்ல குணம் தான், உங்களை எனக்கு மிகவும் பிடிக்க வைத்துள்ளது.

  அண்ணாவுக்குத் தங்கை சளைத்தவளே இல்லை என்பதை ஆங்காங்கே நிரூபித்து வருகிறீர்கள்.

  இந்தப்பதிவிலும் அதனையே தான் வேறு விதமாக மிகப்புதுமையாக நிரூபித்துள்ளீர்கள்.


  தொடரும்.....

  ReplyDelete
 18. 4] VGK to மஞ்சு........

  சென்ற 2011 ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவிடத் துவங்கிய என்னை, அதே மாதம் வலைச்சர ஆசிரியராக இருந்த திரு. எல்.கே [கார்த்திக்] அவர்கள் முதன் முதலாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினார்.

  ஜனவரி 2011 முதல் செப்டெம்பர் 2012 வரையிலான 21 மாதங்களில் {திரு. எல்.கே. அவர்களில் ஆரம்பித்து திருமதி. ஜலீலா கமால் அவர்கள் வரை} இதுவரை 29 வலைச்சர ஆசிரியர்கள் என்னை 40 தடவைகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

  பொதுவாக வலைச்சர ஆசிரியர்களாகப் பொறுப்பு ஏற்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைக் கடைபிடித்து அறிமுகங்கள் செய்து அசத்துவார்கள்.

  அதாவது தினமும் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவர்களை அறிமுகம் செய்து, அவ்வாறு அறிமுகம் செய்யப்படுபவர்கள் ஒவ்வொருவரின் ஓரு சில மிகச்சிறந்த படைப்புகளையும் முன்னிலைப்படுத்தி பாராட்டி எழுதுவார்கள்.

  ”என் வழி ..... தனி வழி” என்று படையப்பா ரஜனிகாந்த் சொல்வது போல தாங்கள் செய்துள்ளீர்கள்.

  அதாவது, இன்றைய தினம் என் ஒருவனைப்பற்றி மட்டுமே அறிமுகம் செய்து, என்னுடைய பல்வேறு படைப்புகளைப் பற்றி பல்வேறு தலைப்புகள் கொடுத்து மிகவும் புகழ்ந்து எழுதி, தாங்கள் செய்துள்ள அறிமுகம் முற்றிலும் வித்யாசமாக அமைந்துள்ளது.

  என் அன்புத்தங்கை மஞ்சு என் மீதும் என் எழுத்துக்கள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையையும் ஆழ்ந்த ஈடுபாட்டினையும் என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

  என் அன்புத்தங்கை என் எழுத்துக்களுக்கு அளித்துள்ள மாபெரும் பரிசாக இதனை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

  ம ஞ் சு வுக்கு என் நெ ஞ் சு நிறைந்த அன்பான இனிய ஆசிகள்.


  என்றும் பிரியமுள்ள
  கோபு அண்ணா [VGK]

  ReplyDelete
 19. அன்பு மஞ்சுபாஷிணி,
  'என் வழி தனி வழி' என்று திரு வை.கோ. வைப் பற்றி மட்டும் அறிமுகம் செய்து அசத்தி விட்டீர்கள்.

  அவரது படைப்புகள் எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் இருக்கிறது.

  உங்களது போலவே அவரது வழியும் தனி வழி தான்!

  அண்ணா தங்கை இருவருக்கும் பாராட்டுக்கள்!  ReplyDelete
 20. திருமதி மஞ்சுபாஷினி அவர்களுக்கு ,
  திரு வை கோ அவர்களின் சாதனைகளை பட்டியல் இடுவதே மிகச் சிறந்த சாதனை. அதனை நீங்கள் சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்.
  மனம் கவர் பதிவர்களில் முதல்வராக மிக சரியான நபரை தேர்ந்து எடுத்துள்ளீர்கள்.
  வாழ்த்துக்கள் பல.

  கணேஷ்

  ReplyDelete
 21. திரு VGK ( உங்களுக்கு கோபு அண்ணா ) அவர்களை பற்றிய நீங்கள் தொடுத்த வலைச்சரம் அவரது புகழ் மணம் வீசுகிறது. உங்களைப் போலவே நானும் அவரது எழுத்துக்களை ரசித்து படித்தவன். அந்த லயிப்பின் காரணமாக அவரைப் பற்றி திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும் என்ற தலைப்பில்
  http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html ஒரு பதிவை எழுதியுள்ளேன். உங்கள் பதிவின் இறுதியில் நீங்கள் வெளியிட்ட

  // அன்பின் கோபு அண்ணா! தாங்கள் அவசியமாக மீண்டும் பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும் என மிகத்தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். //

  என்ற வேண்டுகோள் அவரது வாசகர்கள் அனைவரும் சொல்வதாகவே உணருகிறேன்.


  ReplyDelete
 22. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிவர்களை ஊக்கப்படுத்துவதில் சிறந்த நிபுணர்...

  இப்போது அவர் பதிவுகள் எழுதவில்லை என்றாலும், அன்பர்களின் தளங்களில் அவரின் கருத்துக்கள் படிப்பதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு... (பல ரசிகர்களில் நானும் ஒருவன்...)

  அவரின் வர்ணிப்பு, ரசனை வித்தியாசமாக இருக்கும்... சிற்சில தவறுகள் இருந்தாலும் அருமையாக சுட்டிக்காட்டவும் தவறுவதில்லை...

  வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்...

  அவரைப்பற்றிய சிறந்த தொகுப்பை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 23. I was awestruck when I read VGK's story: ”உடம்பெல்லாம் உப்புச்சீடை”. Since then I would have read all his entries in his blog. It is heartening to note that like me, he has scores of admirers. I am glad that you brought all his best qualities through this. Kudos to you, and long live VGK with good health, happiness and prosperity.

  ReplyDelete
 24. இன்று முழு அறிமுகமும் ,வை கோபலகிருஷ்ணன் சாருடையதா

  ரொம்ப வே நீங்க பரிட்சைக்கு படிப்பது போல் தரோவா அவர் வலைய
  அலசி ஆராய்ந்து இங்கு பல பல்சுவை லின்குகள் கொடுத்து இருக்கீங்க

  நான் அவர் பதிவுகளை தேடும் போது ரொம்ப திணறி விட்டேன் இதுவா அதுவான்னு

  எல்லா படைப்புகளும் அற்புதம்.

  அவர் பணி நிறைவு பதிவும் அருமை

  நேரமின்மை காரணமாக நிறைய பதிவுகள் பார்க்க முடியவில்லை.

  உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. மஞ்சு ஊ!!!!
  எவ்வளவு கடின உழைப்பு ...
  பாராட்ட வார்த்தைகளே இல்லை ..
  எங்கள்,நோ நோ நம் :)) அண்ணாவைப்பற்றி நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் மெய் !!!

  அண்ணா அவர்கள் தகவல் களஞ்சியம் நானும் அவருடைய சில கதைகள் படிக்காமல் விட்டுபோயிருக்கு ..விரைவில் அனைத்தையும் முடிக்கணும் ...அருமையாக தொகுத்து அளித்ததற்கு நன்றி மஞ்சு ..உங்கள் இந்த பதிவை நான் புக் மார்க் செய்து வைத்திருக்கேன் ..பிரிண்ட் செய்யவும் போறேன்
  ..லண்டனில் இருப்பதால் வருகை தாமதமாகிவிட்டது .

  ReplyDelete


 26. வியக்கிறேன்!!!! இன்னும் வியந்து கொண்டே இருக்கிறேன்! உங்கள் இருவரைப் பற்றியும் எண்ணி எண்ணி!

  ReplyDelete
 27. அன்பு ஐயா வை. கோபாலகிருஷ்ணனின் பல்வேறு படைப்புகளை அருமையாக அறிமுகப்படுத்தியது சூப்பர்!! உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 28. சமீப காலங்களில் வெளியான தங்களின் படைப்புகளைப் படித்து மகிழந்தவன்! தங்களின் பன்முகத் திறமை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்! இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் அருளுவான் என்பதில் ஐயமில்லை!
  நீங்கள் மீண்டும் விரைவில் பல நல்ல படைபுகளைத் தரவேண்டும் என வேண்டும்
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 29. சிறப்பான தொகுப்பு. வை.கோ சாருடைய கதைகள் எல்லாமே சந்தோஷத்தில் முடிவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்....

  அவர் மீண்டும் கதைகள் எழுத வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைக்கிறேன்.

  தங்களுடைய உழைப்பு பாராட்டுக்குரியது.

  ReplyDelete
 30. அன்பின் மஞ்சுபாஷினி

  வலைச்சரத்தில் புதுமையாக - அருமை நண்பர் வைகோவின் கூற்றுப்படி - என் வழி தனி வழியென - வைகோவின் 312 பதிவுகளையும் படித்து - இரசித்து - மகிழ்ந்து - இங்கு பாராட்டி எழுதியது நன்று- இங்கு வரும் பதிவர்கள் அனைத்துச் சுட்டிகளையும் சுட்ட இயலாவிட்டாலும் - 95 சுட்டிகளில் 9 சுட்டிகளையாவது சுட்டிச் செல்வார்கள் என்பது நிச்சயம்.

  நான் எல்லாவற்றையும் ஏற்கனவே படித்திருப்பேன் என நினைக்கிறேன். இருப்பினும் அத்தனையைஅயும் சென்று மறு முறை படித்து மகிழ ஆசை.

  நல்வாழ்த்துகள் மஜ்ஞ்சுபாஷினி
  நட்புடன் சீனா

  ReplyDelete
 31. Gopu சாரை பற்றி அறியாத விஷயங்கள் இந்த உங்களுடைய பதிவின் மூலம் படித்து வியந்து போனேன். gopu sir-ai பின்தொடர்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன். அவர் தனக்குக் கிடைத்த விருதுகளை பகிரும்போது அதில் எனது வலையும் ( Mira’s Talent Gallery ) இடம்பெற்றது மகிழ்ச்சியை பலமடங்கு பெருகிற்று. முத்தான பதிவுடன் இணைப்பு பேழையும் பகிர்ந்தமைக்கு நன்றி

  Gopu Sir, you always keep track of your followers and everytime I make a post you never to miss go vie your motivational boost. Thank you Sir.

  ReplyDelete
 32. // இளமதி said...
  வணக்கம் அன்புச் சகோதரி மஞ்சுபாஷிணி!
  முதற்கண் வலைச்சரத்தின் ஆசிரியராய் பணியேற்றுள்ள தங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
  நான் இங்கு புதியவள். அவ்வப்போது உங்கள் வலைப்பூவுக்கும் ஓசைப்படாமல் தேன் அருந்த வந்ததுண்டு:) தடம் பதித்ததில்லை;))

  வைகோ ஐயா எனக்கு உங்களின் இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியேற்பை அறியத்தந்திருந்தார். வந்து பார்த்து வியந்துபோனேன்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

  சகோதரி, நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள உங்கள் மனம்கவர் பதிவர்கள் வரிசையில் வைகோ ஐயாவை, அவரின் பதிவுகளை முதலில் இங்கு அறிமுகப்படுத்தியது மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத்தருகிறது.
  உள்ளங்கை நெல்லிக்கனியென அவரின் திறமைகளை அறியாதோர் இல்லையெனலாம்.
  எனக்கும் வைகோ ஐயாவின் பதிவுகள் ரொம்பப் பிடிக்கும்.

  நான் இன்னும் படிக்கவேண்டிய ஐயாவின் பதிவுகள் ஏராளம் இருக்கின்றன.
  அழகாக பட்டியலிட்டுத் தந்துள்ளீர்கள். கணனியில் எனக்குப் பிடித்தவற்றை பாதுகாக்கும் bookmark ல் பதிந்துவிட்டேன். பகிர்வுக்கு மிக்கநன்றி!

  தொடரட்டும் உங்கள் பணி! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி!!//

  அன்பின் இளமதி சகோ,

  தங்களின் அன்பு வரவேற்புகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா..

  உண்மையே அண்ணாவின் பதிவுகளை படித்தவர் அறிவர்.

  ReplyDelete
 33. "நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
  நல்லார் சொற் கெட்பதுவம் நன்றே-நல்லார் ளுரைப்பதுவும்
  நன்றே அவரோடிணங்கி யிருப்பதுவும் நன்று."

  மதிப்பிற்குறியவரின் வலைத்தளத்தில் வெளிவந்துள்ள அத்தனை சிறப்பான பதிவுகளை எழிலோடு குறிப்பிட்டுள்ளீர்கள்; வழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. //Rathnavel Natarajan said...
  அருமையான பதிவு.
  திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது பதிவுகளைச் சொல்லியிருக்கிறார்; அறிமுகம் என்றால் சரியான வார்த்தையில்லை என்று நினைக்கிறேன். இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரத்னவேலு ஐயா. அண்ணாவின் பதிவை உங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தமைக்கும் அன்பு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 35. //முனைவர்.இரா.குணசீலன் said...
  வலைச்சர ஆசிரியர்
  திருமதி மஞ்சுபாஷினி அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.//

  // முனைவர்.இரா.குணசீலன் said...
  திரு வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலையுலகப் பணியைப் பாராட்டி அறிமுகம் செய்த தங்கள் பணி பாராட்டுக்குரியது.

  அறிமுகம் செய்யப்பட்ட வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் குணசீலா.

  ReplyDelete
 36. //kavithai (kovaikkavi) said...
  ஐயோப்பா! அருமை ஆக்கம், என்னால முடியாதப்பா இவ்வளவும் பார்க்க. எவ்வளவு களைப்பாக இருக்கும். மிக்க நன்றி சகோதரி. மேலும் பணி சிறக்க வாழ்த்து.
  உங்கள் அறிமுகம் பொருத்தமானதே.
  அப்படி நீண்ட பட்டியல் போடாது, அளவோடு செய்யுங்களேன் .மேலும் பலரை அறிமுகப்படுத்தலாம் அல்லவா மஞ்சும்மா.?

  நல்வாழ்த்துடா!...
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com//

  என் செல்லக்குட்டி வேதாம்மா,

  அன்புநன்றிகள் அம்மா.. கண்டிப்பாக.. இன்று வை.கோ அண்ணாவுக்கு மட்டும்... நாளை நீங்க சொல்வது போல 10 பேரை அறிமுகப்படுத்துகிறேன் அம்மா..

  ReplyDelete
 37. // kovaikkavi said...
  அறிமுகப் பதிவாளர்களிற்கு மனமார்ந்த வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.//

  அன்பு நன்றிகள் வேதாம்மா.

  ReplyDelete
 38. //கோமதி அரசு said...
  மஞ்சுபாஷிணி, திரு. வை, கோபாலகிருஷ்ணன் அவர்களின் கதைகளில் மிக பிடித்தது என்று வலைச்சரத்தில் உடம்பெல்லாம் உப்புச்சீடை என்ற கதையை பகிர்ந்து கொண்டேன் அதே கதை உங்களுக்கும் பிடித்து இருக்கிறது. மனித நேயக் கதை.

  மனிதநேயம் மிக்க மனிதர் அவர். அவரைப்பற்றி ஒரு குறும்படம் பார்த்த உணர்வை கொடுத்து விட்டீர்கள்.
  ஒன்றே செய்க அதை நன்றே செய்க என்று செய்து விட்டீர்கள்.
  உங்கள் விருப்பம் போல் தான் எங்கள் விருப்பமும் அவர் மறுபடியும் பதிவுகள் தரவேண்டும். அநேகமாக அவர் பதிவுகள் எல்லாம் படித்து இருக்கிறேன் படிக்காத பதிவுகளை படித்து கருத்து தெரிவிக்கிறேன்.

  உங்களுக்கு பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள்.


  வை. கோபாலகிருஷ்ண்ண சாருக்கு அழைப்பு விடுக்கிறேன் வாருங்கள் உங்கள் அனுபவங்களில் கிடைத்த நல்ல விஷ்யங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எல்லோருக்கும் பயன்படும். பேரக் குழந்தைகள் ஊருக்கு போனபின் உங்கள் பதிவுலகப் பிரவேசம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.//

  அன்பு வணக்கங்களுடன் கூடிய நன்றிகள் கோமதிம்மா... எல்லோருடைய கோரிக்கையை ஏற்று அண்ணா பதிவுகள் இடுவார் என்றே நானும் நம்பிக்கை வைக்கிறேன் அம்மா..

  ReplyDelete
 39. //Asiya Omar said...
  மஞ்சு, வை.கோ சாருக்கு அர்ப்பணித்த வலைச்சரத்தில் தங்களின் ஒருநாள் தொகுப்பு சூப்பர்,மிக்க நன்றி. வலையுலக வள்ளல் வை.கோ அவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.பாகுபாடின்றி பழகுவதில் அவருக்கு நிகர் அவரே! தொடர்ந்து அவரின் சேவை வலையுலகிற்கு தேவை..//

  உண்மையே ஆசியா உமர்.... அவருக்கு கிடைத்த விருதை அவர் 108 பேருக்கு பாகுபாடில்லாம பகிர்ந்த நல்ல மனசை எல்லோருமே அறிவோம்பா..உண்மையேப்பா... ஆமாம். அவர் திரும்ப எழுதுவார் என்ற நம்பிக்கை உண்டு எனக்கும்பா..

  அன்புநன்றிகள்பா தங்களின் வாழ்த்துக்கு.

  ReplyDelete
 40. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  என் அன்புத் தங்கை மஞ்சுவே,

  காலை வணக்கம்.

  நலம். நலமறிய ஆவல்.

  எல்லாவற்றிலுமே, எல்லோரிடமுமே, அடிப்படையில் அன்பே தான் என்றாலும், அந்த அன்பினைப் பகிர்ந்து கொள்வதிலும் ஒரு கட்டுப்பாட்டு எல்லைகளை, நானே எனக்குள் வகுத்துக்கொண்டு விட்டேன்.

  இந்தப்பதிவிலும் அதனையே தான் வேறு விதமாக மிகப்புதுமையாக நிரூபித்துள்ளீர்கள்.

  என் அன்புத்தங்கை என் எழுத்துக்களுக்கு அளித்துள்ள மாபெரும் பரிசாக இதனை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

  ம ஞ் சு வுக்கு என் நெ ஞ் சு நிறைந்த அன்பான இனிய ஆசிகள். //

  அன்பின் அண்ணா,

  தங்களின் பாராபட்சமில்லாத அன்பு எல்லோரிடத்திலும், பதிவிலும் கண்டிருக்கிறேன். விருதை பகிர்ந்து அளிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையையும் உழைப்பையும் கண்டிருக்கிறேன். இனியும் உங்கள் எழுத்துகள் தடையில்லாது தொடரட்டும் அண்ணா.... எங்களுக்கு உங்கள் வழிநடத்தலும் அறிவுரையும் உங்கள் பதிவுகள் மூலம் கிடைக்கட்டும். இதுவே என் வேண்டுகோள்.. தொடருங்கள் அண்ணா உங்கள் எழுத்துலக பணியை.

  உங்கள் ஆசி என்றென்றும்...  ReplyDelete
 41. //Ranjani Narayanan said...
  அன்பு மஞ்சுபாஷிணி,
  'என் வழி தனி வழி' என்று திரு வை.கோ. வைப் பற்றி மட்டும் அறிமுகம் செய்து அசத்தி விட்டீர்கள்.

  அவரது படைப்புகள் எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் இருக்கிறது.

  உங்களது போலவே அவரது வழியும் தனி வழி தான்!

  அண்ணா தங்கை இருவருக்கும் பாராட்டுக்கள்!//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரஞ்சும்மா தங்களின் வாழ்த்துகளுக்கு.

  ReplyDelete
 42. //கணேஷ் said...
  திருமதி மஞ்சுபாஷினி அவர்களுக்கு ,
  திரு வை கோ அவர்களின் சாதனைகளை பட்டியல் இடுவதே மிகச் சிறந்த சாதனை. அதனை நீங்கள் சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்.
  மனம் கவர் பதிவர்களில் முதல்வராக மிக சரியான நபரை தேர்ந்து எடுத்துள்ளீர்கள்.
  வாழ்த்துக்கள் பல.

  கணேஷ்//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ வாழ்த்துகளுக்கும் வரவேற்புக்கும்.

  ReplyDelete
 43. //தி.தமிழ் இளங்கோ said...
  திரு VGK ( உங்களுக்கு கோபு அண்ணா ) அவர்களை பற்றிய நீங்கள் தொடுத்த வலைச்சரம் அவரது புகழ் மணம் வீசுகிறது. உங்களைப் போலவே நானும் அவரது எழுத்துக்களை ரசித்து படித்தவன். அந்த லயிப்பின் காரணமாக அவரைப் பற்றி திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும் என்ற தலைப்பில்
  http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html ஒரு பதிவை எழுதியுள்ளேன். உங்கள் பதிவின் இறுதியில் நீங்கள் வெளியிட்ட

  // அன்பின் கோபு அண்ணா! தாங்கள் அவசியமாக மீண்டும் பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும் என மிகத்தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். //

  என்ற வேண்டுகோள் அவரது வாசகர்கள் அனைவரும் சொல்வதாகவே உணருகிறேன்.//

  அன்பு வணக்கங்கள் இளங்கோ ஐயா...

  ஆமாம் ஐயா.. நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த பதிவை வாசித்தேன்.மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா.

  ReplyDelete
 44. //திண்டுக்கல் தனபாலன் said...
  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிவர்களை ஊக்கப்படுத்துவதில் சிறந்த நிபுணர்...

  இப்போது அவர் பதிவுகள் எழுதவில்லை என்றாலும், அன்பர்களின் தளங்களில் அவரின் கருத்துக்கள் படிப்பதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு... (பல ரசிகர்களில் நானும் ஒருவன்...)

  அவரின் வர்ணிப்பு, ரசனை வித்தியாசமாக இருக்கும்... சிற்சில தவறுகள் இருந்தாலும் அருமையாக சுட்டிக்காட்டவும் தவறுவதில்லை...

  வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்...

  அவரைப்பற்றிய சிறந்த தொகுப்பை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் தனபாலன்....தங்கள் வலைப்பூவுக்கு ஒரு முறை வந்து பார்த்தேன், ஐ எஸ் ஓ பற்றி மிக அருமையாக பகிர்ந்திருந்தீர்கள்.

  ReplyDelete
 45. //D. Chandramouli said...
  I was awestruck when I read VGK's story: ”உடம்பெல்லாம் உப்புச்சீடை”. Since then I would have read all his entries in his blog. It is heartening to note that like me, he has scores of admirers. I am glad that you brought all his best qualities through this. Kudos to you, and long live VGK with good health, happiness and prosperity.//

  THANKS A LOT SIR, FOR YOUR KIND WISHES AND PRAYERS FOR ANNA.

  ReplyDelete
 46. // Jaleela Kamal said...
  இன்று முழு அறிமுகமும் ,வை கோபலகிருஷ்ணன் சாருடையதா

  ரொம்ப வே நீங்க பரிட்சைக்கு படிப்பது போல் தரோவா அவர் வலைய
  அலசி ஆராய்ந்து இங்கு பல பல்சுவை லின்குகள் கொடுத்து இருக்கீங்க

  நான் அவர் பதிவுகளை தேடும் போது ரொம்ப திணறி விட்டேன் இதுவா அதுவான்னு

  எல்லா படைப்புகளும் அற்புதம்.

  அவர் பணி நிறைவு பதிவும் அருமை

  நேரமின்மை காரணமாக நிறைய பதிவுகள் பார்க்க முடியவில்லை.

  உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்//

  ஆமாம் ஜலிலாம்மா நீங்க அவருடைய லிங்க் தந்திருந்தீங்க நானும் வாசித்தேன்பா.. அன்புநன்றிகள்பா...

  ReplyDelete
 47. //angelin said...
  மஞ்சு ஊ!!!!
  எவ்வளவு கடின உழைப்பு ...
  பாராட்ட வார்த்தைகளே இல்லை ..
  எங்கள்,நோ நோ நம் :)) அண்ணாவைப்பற்றி நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் மெய் !!!

  அண்ணா அவர்கள் தகவல் களஞ்சியம் நானும் அவருடைய சில கதைகள் படிக்காமல் விட்டுபோயிருக்கு ..விரைவில் அனைத்தையும் முடிக்கணும் ...அருமையாக தொகுத்து அளித்ததற்கு நன்றி மஞ்சு ..உங்கள் இந்த பதிவை நான் புக் மார்க் செய்து வைத்திருக்கேன் ..பிரிண்ட் செய்யவும் போறேன்
  ..லண்டனில் இருப்பதால் வருகை தாமதமாகிவிட்டது .//

  பிரச்சனை இல்லை அஞ்சு... நிதானமாகவே செய்யுங்க. மனம்நிறைந்த அன்புநன்றிகள்பா...

  ReplyDelete
 48. //புலவர் சா இராமாநுசம் said...


  வியக்கிறேன்!!!! இன்னும் வியந்து கொண்டே இருக்கிறேன்! உங்கள் இருவரைப் பற்றியும் எண்ணி எண்ணி!//

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா...

  ReplyDelete
 49. // middleclassmadhavi said...
  அன்பு ஐயா வை. கோபாலகிருஷ்ணனின் பல்வேறு படைப்புகளை அருமையாக அறிமுகப்படுத்தியது சூப்பர்!! உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்!//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் மாதவி.

  ReplyDelete
 50. //Seshadri e.s. said...
  சமீப காலங்களில் வெளியான தங்களின் படைப்புகளைப் படித்து மகிழந்தவன்! தங்களின் பன்முகத் திறமை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்! இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் அருளுவான் என்பதில் ஐயமில்லை!
  நீங்கள் மீண்டும் விரைவில் பல நல்ல படைபுகளைத் தரவேண்டும் என வேண்டும்
  -காரஞ்சன்(சேஷ்)//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் காரஞ்சன் (சேஷ்)

  ReplyDelete
 51. //கோவை2தில்லி said...
  சிறப்பான தொகுப்பு. வை.கோ சாருடைய கதைகள் எல்லாமே சந்தோஷத்தில் முடிவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்....

  அவர் மீண்டும் கதைகள் எழுத வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைக்கிறேன்.

  தங்களுடைய உழைப்பு பாராட்டுக்குரியது.//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் தோழி. ஆமாம் உண்மையே. அண்ணா கதைகள் எல்லாவற்றிலும் சுபமுடன் முடித்திருப்பார்கள்.

  ReplyDelete
 52. // cheena (சீனா) said...
  அன்பின் மஞ்சுபாஷினி

  வலைச்சரத்தில் புதுமையாக - அருமை நண்பர் வைகோவின் கூற்றுப்படி - என் வழி தனி வழியென - வைகோவின் 312 பதிவுகளையும் படித்து - இரசித்து - மகிழ்ந்து - இங்கு பாராட்டி எழுதியது நன்று- இங்கு வரும் பதிவர்கள் அனைத்துச் சுட்டிகளையும் சுட்ட இயலாவிட்டாலும் - 95 சுட்டிகளில் 9 சுட்டிகளையாவது சுட்டிச் செல்வார்கள் என்பது நிச்சயம்.

  நான் எல்லாவற்றையும் ஏற்கனவே படித்திருப்பேன் என நினைக்கிறேன். இருப்பினும் அத்தனையைஅயும் சென்று மறு முறை படித்து மகிழ ஆசை.

  நல்வாழ்த்துகள் மஜ்ஞ்சுபாஷினி
  நட்புடன் சீனா//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா

  ReplyDelete
 53. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் பணியைப் பாராட்ட