07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 24, 2011

ஆறாம்நிலை மாடம்!!






ஆகாய வீதியில்
ஆளில்லா கோளத்தில்
சிறகடிச்சு பறந்தோமே!
கிண்கிணி மணியொலியாய்
கிச்சுகிச்சு மூட்டிய
நகைச்சுவை கேட்டோமே!!

திண்ணைப்பேச்சு முடியல
திகட்டாம இருப்பதற்கு!
வில்லுப்பாட்டு கேட்பதுபோல்
கதைகேட்க போவோமுங்க!!




நகைச்சுவை பதிவுகளை பார்த்து படித்து நல்லா வயிறு குலுங்க சிரிச்சீங்களா? சிரிப்பும் அழுகையும் தான் நமக்கு கிடைத்த மாபெரும் புதையல். எப்போ வரும்னு நமக்கே தெரியாது. சூழல்களின் மாற்றங்கள் நிகழ்கையில் மாறிமாறி நமை ஆட்டுவிக்கும். நல்லா சிரித்துவிட்டு முகம் பார்க்கும் கண்ணாடி பாருங்கள் நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று. அதனால... எல்லோருக்கும் சொல்லிகிறது என்னான்னா ... நல்லா வாய்விட்டு சிரிக்க பழகுங்கோ.!

சிரிச்சு பேசிவிட்டோம், அடுத்து கொஞ்சம் மாறுதலுக்காக கதை கேட்கப் போவோமா? நாம எல்லோரும் சிறுவயதிலிருந்தே பழகி வந்த பழக்கம் கதை கேட்பது. சிறு வயதில் அம்மாவிடம், நான் தூங்கணும் கதை சொல்லு னு என்னா பாடு படுத்தி இருப்போம். இப்போ நம்ம பிள்ளைகள் கேட்கும்போதுதான் அதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆனாலும்.. வேலைகளை ஒதுக்கி வைத்து கதை கேட்பது என்பது ஒரு தனி சுகம் தான். அதுவும் சிலர் கதை சொல்கையில் சும்மா சேர்க்க வேண்டியதெல்லாம் சேர்த்து அருமையாக சொல்வாங்க.




காதலிக்க நேரமில்லை திரைப்படம் ... நம் வாழ்நாளில் மறக்ககூடியதா? அருமையான குணச்சித்திர நடிகர் பாலையாவிடம் நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் அவர்கள் கூறிய கதை இன்னும் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

கதைய சொல்லவந்தேன்
களத்துமேடு காக்க வந்தேன்!!
அந்திநேரம் கடந்துபோச்சு
கும்மிருட்டு கவிழ்ந்துருச்சு!
சுத்திநிக்கும் செல்ல மக்கா
சீக்கிரமா ஓடியாங்க!

ரெண்டுரூபா நாந்தாரேன்
நாலுமிட்டாய் வாங்கிவாங்க!
ஆளுக்கொண்ணு எடுத்துகிட்டு
நான் சொல்லும் கதைய நல்லா
காதை தீட்டி கேளுங்க!!
..........................................................................................................................

நம்ம பதிவர்கள் நிறைய பேர் கதை சொல்வதில் வல்லவர்கள். திக்காம திகட்டாம தேன் போல கருத்துக்களை நாசூக்காக தடவி நமக்கு கதை சொல்வதில் சூராதி சூரர்கள். அப்படிப்பட்ட சில பதிவர்களின் கதைகளை கொஞ்சம் கட்டுசோறு கட்டிக்கிட்டு படித்து வருவோம் வாருங்க...
..............................................................................................................................







பலபூக்களைக் கொண்டு மணமிக்க கதம்பம் தொடுப்பதுபோல பல்லுணர்வுகளை ஒருங்கே கூட்டி கதம்ப உணர்வுகளாய் சரம் தொடுத்து படிப்பவர்களின் மனதை சுண்டி இழுப்பவர் எமதருமை சகோதரி மஞ்சுபாஷிணி. இவரின் பின்னூட்டங்கள் படிப்பதற்கு மிக மகிழ்ச்சியாய் இருக்கும், பதிவிடும் படைப்புகளை நன்கு படித்து உள்ளுணர்ந்து ஆழ்ந்து கருத்தளிப்பதில் இவருக்கு இணை இவர்தான். அவரின் வலைப்பூவை முகரச் செல்கையில் அங்கே கதைப்பதிவுகள்
மனதை கொள்ளைகொண்டன. அதில் ஒரு வாசப்பூவான தொலைக்க விரும்பாத அன்பு... என்ற கதைப்பூ வாசமாய் இருந்தது... நீங்களும் சென்று முகர்ந்து பாருங்களேன்...

இதோ அவருக்காக...

பூவாலே புன்னகையாம்
பொதிந்துவைத்த சந்தனமாம்!
உள்ளுக்குள்ளே ஊற்றெடுக்கும்
உணர்சிகளை மாலையாய்
தொடுத்து இங்கு வந்தாயே!
கதம்பவாசம்  வீசும்
கடம்பவன சோலைக்குள்
கதைபடிக்க வந்தோமே!
ஜசீரா விமானத்தில
வாகாக ஏறிவந்து
குவைத்துல இறங்கிடுவோம்
வக்கனையா மாலைகோர்த்த
மஞ்சு அக்காவுக்கு
மலர்க்கொத்து கொடுத்திடத்தான்!!
........................................................................................................................



இயல்பான வார்த்தை கணைகளால் வில்லேந்தி வந்து மனதுக்குள் அதைப் பாய்ச்சும் சொல்வன்மை பெற்றவர் அன்புச் சகோதரி நிஹாஷா. நெஞ்சமெனும் சுவருக்குள் திறமை எனும் தூரிகையால் அழகிய ஓவியங்கள் வரைபவர். சென்று படித்தவுடன் சிக்கென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு பசையுள்ள பதிவுகளை தூவி
விட்டிருக்கிறார். தூரிகையின் அழகை ரசிக்கையில் என் கண்ணில் பட்ட கதை தான் அவள் அப்படித்தான்... இயல்பான வார்த்தை முத்துக்களால் அழகிய சரம் தொடுத்திருக்கிறார். உணர்வுகளை நாசூக்காக பகிர்ந்திருக்கிறார். வாருங்கள் தூரிகையின் வண்ணம் பார்த்து வருவோம்...

இதோ அவருக்காக...

சிங்காரத் தூரிகையால்
ஓவியங்கள் தீட்டியதை!
கண்காட்சி போலவந்து
காணத்தான் வந்தேனே!
அழகான ஓவியங்களை
கண்குளிர பார்த்துபுட்டேன்!
வரும்போது என்கிட்டே
ஓட்டிகிட்டு இருந்த மனம்
போகையிலே என்கூட
வராம போச்சுதம்மா!!
........................................................................................................................


வலைப்பூக்களை சுற்றி வருகையில் என் கண்ணில் பட்ட ஒரு அற்புதமான மனிதர் எஸ்.ஏ.சரவணக்குமார். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இவர் மாதமிருமுறை வெளிவரும் ஒரு பத்திரிகையில் கௌரவ ஆசிரியராகவும் இருக்கிறார். இத்தனை பணிகளுக்கிடையில் சில நண்பர்களோடு சேர்ந்து ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். இவரின் கதைகள் நிறைய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. இவரை அறிமுகபடுத்துகிறேன் என்று சொல்வதை விட, இவரின் கதை ஒன்றை இங்கே என் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன் என்று சொல்வதே சிறந்தது. அவரின் கதை ஒன்று உங்கள் பார்வைக்கு.. பாக்யா வார இதழில் வெளியான கல்யாண சந்தையில் ...

இதோ அவருக்காக...

நல்ல மனம் படைத்தவரே
நாலு உதவி செய்வரே!
உன்னை இங்கு கண்டிடவே
இத்தனை நாள் ஆனதய்யா!!
நின் கதையை இப்பதிவில்
கொண்டுவந்து போட்டிடவே
என்ன தவம் செயதேனையா!!
................................................................................................................................






ஐயா இதை எழுத வேண்டாம் என்று சொன்னால் கூட இவரின் பேனா அதை கேட்காதாம். புலம்பல் என்கிற பெயரில் புலம்புகிறேன் ஆசாமி என்று சொல்லும் பி.அமல்ராஜ் எண்ணும் இவர்  எவ்வளவு அழகான புனைவுகளை கொடுத்திருக்கிறார் பாருங்கள். கதையென்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு படிப்பவர்களை அப்படியே தனது நகைச்சுவைத் திறனால் கதையை விட்டு வெளியே வராத படி கட்டிப்போட்டு வைக்கிறார். வெள்ளி பூஜை எண்ணும் இந்த சிறுகதையை படித்துப் பாருங்கள். சிரித்துக்கொண்டே படியுங்கள்...

இதோ இவருக்காக..

வெள்ளிக்கிழமை என்றாலே
ஆடிவெள்ளி மனதில்வரும்!
வெள்ளிஎல்லாம் வெள்ளியல்ல
வெள்ளியின்னா என்னதுன்னு
விளக்கமாக தெரிஞ்சுதய்யா!
வெள்ளிபூஜை கதையை இங்கே
படிச்சிபுட்ட பின்னால்தான்
வெவரமாக தெரிஞ்சுதய்யா!!
........................................................................................................................




என்னை நன்றாக படைத்தனன் இறைவன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என்று தமிழ் பேசி வருகிறார் அன்பு நண்பர் ராஜா MVS. பல்சுவைப் பதிவுகளில் அசத்தும் இவர் கதைகளை புனைவதில் வல்லவர். கும்பிடுறேன் சாமி... என்ற இவரின் கதையை படித்துப் பாருங்கள் கதைக்குள்ளே திருப்பங்கள் அருமையாக ஒளித்து வைத்திருக்கிறார். அவர்கிட்டே போய் நல்லா கதைச்சிட்டு வருவோமா??.....

இதோ அவருக்காக...

எட்டூரு ஆண்டவராம்
எங்ககுல ராசாவாம்!
எழுத்தாணி பிடித்து வந்து
கதைசொல்லும் ராசாவாம்!
கும்பிடுறேன் சாமியின்னு
கதைய வந்து படிச்சபின்னே
பட்டுன்னு சொல்லிடுறேன் - நீயோ
பத்தூரு ராசா தான்!!
..............................................................................................................................




கவிக்கோ.அப்துல்ரகுமானின் வரிகளை உரக்கக் கூறிக்கொண்டு பெருமழையாய் பொழியாமல் சின்னதூரல் போட்டுக்கொண்டு நம் வீட்டு தாழ்வாரம் நனைக்கவரும் அன்பு சகோதரியின் வலைப்பூவில் சுவைகள் கொட்டிக் கிடக்குது. அதில் நான் ரசித்த ஒருசுவை கதைச் சுவை. ஒரு 15 நிமிட பேருந்து பயணத்தை எவ்வளவு அழகாக விவரிக்கிறார் பாருங்கள். ஒவ்வொரு நிறுத்தமாக நிறுத்தி அங்கே ஒரு ஏற்றத்தைக்கூறி அப்படியே நம்மையும் பயணம் கூட்டிப் போகிறார். வாருங்கள் சற்று பேருந்து பயணம் போய் வருவோம்...

இதோ அவருக்காக..

அடைமழையாய் வந்திங்கே
ஆழ்மனதை நனைத்துவிட்டாய்!
சிறுதூரல் போட்டுவந்து
சிலிர்க்கவும் வைத்துவிட்டாய்!
சிட்டுக்குருவி போலநானும்
சிறகடிச்சி வந்தேனம்மா
உன்வலையில் சிதறிகிடக்கும்
நெல்மணியாம் பதிவுகளை
கொத்தித்திங்க வந்தேனம்மா!!
............................................................................................................................




கதைசொல்லிகளில் என மனதுக்கு பிடித்த எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் போல இங்கே ஆயிரம் ஆயிரம் கதைசொல்லிகள் இருக்கிறார்கள். இங்கே நான் சிலரை மட்டும் சுட்டியிருக்கிறேன்.
மற்ற ஏனைய பதிவாளர்களுக்கு அவர்களின் கதை சொல்லும் திறனுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன் 

42 comments:

  1. இன்று கதாசிரியர்களை அறிமுகப்படுத்திய வலைச்சர ஆசிரியர் மகேந்திரனுக்கு நன்றி.

    நீங்கள் சொன்னது போன்று அக்கா மஞ்சுபாஷினியின் பின்னூட்டத்தை படிக்க அவ்வளவு ஆர்வமாக இருக்கும்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அன்பு நண்பர் காந்தி பனங்கூர்
    தங்களின் கருத்து மிகச் சரியே.
    அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. http://ganeshmoorthyj.blogspot.com/2011/09/4_19.html

    நல்ல அறிவியல் கதைகள் எழுதுவதில் சூரரான கணேஷின் பதிவுகளும் அருமை என்பதை பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  4. சிறந்த அறிமுகங்கள்....

    #அவிங்க தளங்களுக்கு லைட்டுப் போடாம போவேன்... நிஜமான கதை சொல்லிகள்...

    ReplyDelete
  5. அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
    நண்பர் கணேஷ் இன் வலைத்தளம் சென்று பார்த்தேன்
    உண்மையிலேயே அருமையாக இருந்தது. அவரைப் பின்தொடர்ந்து
    கருத்தும் இட்டு வந்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  6. அன்பு நண்பர் வெளங்காதவன்
    தங்களின் மனம் நிறை கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  7. இன்றும் அருமையான அறிமுகங்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  8. அன்புநிறை நண்பர் ரமேஷ்
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. இன்றைய அறிமுகங்கள் யாவும் அருமை. அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    //எமதருமை சகோதரி மஞ்சுபாஷிணி. இவரின் பின்னூட்டங்கள் படிப்பதற்கு மிக மகிழ்ச்சியாய் இருக்கும், பதிவிடும் படைப்புகளை நன்கு படித்து உள்ளுணர்ந்து ஆழ்ந்து கருத்தளிப்பதில் இவருக்கு இணை இவர்தான். //

    திருமதி. மஞ்சுபாஷிணி அவர்களைப்பற்றி கூறியுள்ளது 100க்கு 100 உண்மை தான். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். ந்ன்றிகள்.

    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்கள் நண்பரே.... எனக்கு பலர் புதிய அறிமுகம்... படிக்கின்றேன் ஒவ்வொன்றாய்....

    ReplyDelete
  11. அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  12. இன்றைய பதிவும் வழக்கம் போல்
    கவிவழி அறிமுகம் செய்துள்ளீர்
    நன்றி! சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. எனக்கென்றே சில புதியவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க மகேந்திரன்.

    தொகுத்திருக்கும் விதமும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இன்று வலைசரத்தில் என்னை அறிமுகபடுத்தியதற்கு
    நன்றி சகோ ......
    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும்
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  15. அறிமுகங்கள் அருமை நண்பரே..

    ReplyDelete
  16. அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. இத்தனை அழகாய் எளிமையாய் பொறுப்பாய் பணி செய்வது கூட வித்தியாசமாய் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.....

    தொட்டு தொடங்கி அழகிய கவிதை வரிகளால் பகிர்ந்து....

    சரி பேசி முடிச்சோம் சாடி முடிச்சோம் சமுதாய சீர்கேடுகளை நல்லாவே அலசினோம். மூளை சூடாகீருக்கும்னு தணிக்க நகைச்சுவையால் மனமும் குளிரவெச்சோம். இன்னிக்கு கதை சொல்வோம்னு நீங்க ஆரம்பிச்சு அறிமுகப்படுத்தியவர்களில் காந்தி வை கோபாலக்ருஷ்ணன் சார் இருவரின் வலைப்பூ பார்த்திருக்கிறேன். மீதி எல்லோரின் வலைப்பூவும் கண்டிப்பாக பார்க்கிறேன்பா...

    என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு என் அன்பு வாழ்த்துகள்பா.. மனிதனா பிறந்தால் எப்படியும் வாழலாம் என்பது ஒரு ஆப்ஷன்.... இப்படி தான் வாழனும் என்பது இன்னொரு ஆப்ஷன்....

    ஒவ்வொருத்தரும் ஆசை ஆசையா தன் மன உணர்வுகளை தன் திறமைகளை தன் படைப்புகளில் தான் கொண்டு வந்து படைப்பாங்க..

    அப்படி பகிரப்பட்ட ஒவ்வொரு படைப்புமே வலி எடுத்து பிறந்த குழந்தைக்கு சமம்....

    நம்ம குழந்தையை பற்றி பெருமையா பலரும் பேசும்போது பெற்றோர் நாம எப்படி பூரிப்படைவோம்? அது போல நாம் படைத்த படைப்புகளை சிலாகித்து நுணுக்கமாய் படித்து அறிந்ததை மனம் நிறைந்து சொல்லும்போது உங்க பிள்ளை நல்லவர்பா என்று சொல்லிவிட்டு புன்னகைத்துவிட்டு போவது போல அதுவும் பாராட்டே... இன்னும் சற்று முன்வந்து ஹே இன்னைக்கு உன் புள்ள என்னா இப்படி அசத்திப்புட்டானே? அட ஏன் கேக்கிரே இப்படி ஒரு திறமையை நான் எங்கும் கண்டதில்லைப்பா என்று பிள்ளையை சொல்லும்போது பெற்றோருக்கு கண் கலங்கிடும்..

    ஒவ்வொருவரின் படைப்புகளை நான் படிக்கும்போதும் ரொம்ப சீக்கிரம் படைப்புகளில் ஆழ்ந்துவிடுவேன். இப்படியாக நினைத்து எழுதி இருப்பாரா எப்படி நினைத்திருப்பார் என்னவா யோசிச்சிருப்பார் என்று நினைத்து மனதில் தோன்றியதை அப்டியே டைப் செய்துவிடுவேன்...

    அதற்கு மதிப்பு கொடுத்து என் பின்னூட்டம் படைப்புகளை படித்து பின் எழுதப்பட்டது என்று அறியப்படும்போது மனம் நிறைந்த மகிழ்ச்சி ஆகிறது எனக்கும்.....

    அன்பு வாழ்த்துகள் மகேந்திரன்... சொல்லாமல் இருக்கவே முடியவில்லை... குடத்திலிட்ட விளக்காய் பிரகாசிக்கிறீர்கள்... உங்க படைப்பு பார்க்கும்போதெல்லாம் ஆச்சர்யப்படுவேன். அமைதியா இருக்கும் பிள்ளை இப்படி பிரம்மாண்டமா படைப்புகளை தருமா என்று வியக்கவைக்கும்படி இருக்கும் உங்க கவிதைகள்.....

    அமைதி எளிமை அடக்கம் இது மூன்றும் உங்களை வெற்றியின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்பதில் நம்பிக்கை எனக்கிருக்குப்பா...

    இறையின் அருளால் இன்னும் மென்மேலும் பெருகட்டும் உங்கள் படைப்புகள்.....

    அன்பு வாழ்த்துகள் உங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்,

    என் பின்னூட்டத்தை ரசித்து ஆமாம் என்று சொன்ன காந்தி தம்பிக்கும் வை கோபாலக்ருஷ்ணன் சாருக்கும், இதை எனக்கு என் பிளாக்கில் வந்து மஞ்சு அங்க உங்களை அறிமுகப்படுத்தி இருக்காங்க பாருங்கன்னு சொன்னதுக்கும் என் பணிவான அன்பு நன்றிகள்பா.....

    ReplyDelete
  18. குவைத் வாங்கப்பா... அன்பு வரவேற்புகள் மகேந்திரன் குவைத்துக்கு எப்ப வரீங்க?

    ReplyDelete
  19. அறிமுகங்கள் அனைத்தும் மிக மிக அருமை
    அறிமுகப் படுத்திய தங்களுக்கும்
    அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. கதை எழுதுவர்களை பற்றிய அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. உண்மையில் கதை கேட்பது அலாதி பிரியம் தான்.... குழந்தை மனம் உள்ளவருக்கு... அதை நன்றாக சொன்னீங்க நண்பரே.. வாழ்த்துக்கள்... இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. கதைக்கு முக்கியத்துவம் தருவது சரிதான்.நல்ல அறிமுகங்கள்,அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  23. கதை சொல்லிகளின் கலக்கல் அறிமுகம்!

    ReplyDelete
  24. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. இதில் சகோதரி மஞ்சுவின் பதிவுகள் பார்த்திருக்கிறேன்.. அவரின் பின்னூட்டங்களே ஒரு பதிவுதானே..!!! ஹி ஹி மற்றவர்களிடமும் செல்கிறேன்..  அறிமுகத்திற்கு நன்றி மாப்பிள...!!!

    ReplyDelete
  25. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. புதுமையான முறையில் அறிமுகங்கள் மிக அருமை

    காதலிக்க நேரமில்லை, நாகேஷ் , பாலய்யா மறக்கவே முடியாது

    ReplyDelete
  27. அன்புநிறை ஐயா வை.கோபாலகிருஷ்ணன்
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  28. அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  29. அன்புநிறை நண்பர் சத்ரியன்
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  30. அன்புநிறை புலவர் ஐயா
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  31. அன்புநிறை சகோதரி சின்னதூரல்
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  32. அன்புநிறை முனைவரே
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  33. அன்புநிறை சகோதரி மஞ்சுபாஷிணி
    தங்களின் கருத்துரைக்கே காத்திருந்தாற்போல
    கொக்கின் ஒற்றைக்கால் போல வைத்திருந்தேன்...
    என்னையும் என் எழுத்துக்களையும் நன்கு
    புரிந்து வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இன்னும் பத்து நாட்கள் தான்பா
    அப்புறம் விமானம் ஏறி அபுதாபிக்கு பறந்திட வேண்டியதுதான்..

    நேரம் வரும்போது நிச்சயம் குவைத் வருகிறேன் சகோதரி.

    ReplyDelete
  34. அன்பு நண்பர் ரமணி
    தங்களின் மனம் நிறை கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  35. அன்புநிறை சகோதரி ராம்வி
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  36. அன்பு நண்பர் ராஜேஷ்
    தங்களின் மனம் நிறை கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  37. அன்பு நண்பர் சண்முகவேல்
    தங்களின் மனம் நிறை கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  38. அன்புநிறை சென்னை பித்தன் ஐயா
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  39. அன்புநிறை காட்டான் மாமா
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  40. அன்புநிறை நண்பர் சே.குமார்
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  41. அன்புநிறை சகோதரி ஜலீலா கமால்
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  42. அன்பின் மகேந்திரன், அடடா இன்னும் அபுதாபிக்கு கிளம்பலையா நீங்க? அப்டியே குவைத் வந்துட்டு போங்கப்பா....

    உங்கள் ஒவ்வொரு படைப்புமே படிப்பினை தான் எல்லோருக்குமே மகேந்திரன்...

    அன்பு நன்றிகள் மீண்டுமொருமுறை....

    அன்பின் காட்டான் சகோதரருக்கும் என் அன்பு நன்றிகள்பா....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது