07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 1, 2011

புதிய கோணங்கி!



பேரன்புமிக்க வலையுலகப் பெருந்தகையீரே! அன்புமிக்க மிடில் கிளாஸ் மாதவி அம்மையாரே!!

என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் தான் முத்தமிழையும் கரைத்துக் குடித்து, ஆங்கில மீடியத்திலேயே ஆங்கிலத்திலேயே தமிழ் படித்தவன், என் தலைமையில் புதிய கட்சி தொடங்கியுள்ளேன்! - என்ற எங்கள் கட்சி தான் வரும் 2021-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியை அமைக்கப் போகிறது! இப்போது எனது தலைமையில் ஏழாவது அணியை அமைக்கலாம் என்று எண்ணம்!

எனது கட்சி அங்கத்தினர்கள் கூறியதைச் சிரமேற்று - ஆம், தோழர்களே, நான் கட்சியின் கடைசி உறுப்பினர் சொல்வதையும் கேட்பேன் - எதிர்க்கட்சிக்காரர்கள் என் கட்சியில் இரண்டே பேர்தான் இருக்கிறார்கள் என்று சொல்வதை நம்பாதீர்கள்! எங்கள் கட்சிக்கு தமிழ்நாடு முழுதும் எண்ணிலடங்கா தொண்டர் படை உள்ளது! - அத்தகைய கடலலை அனைய என் கட்சித் தொண்டர்கள், பெண்தெய்வம் மிடில் கிளாஸ் மாதவி அம்மையார் உங்களை ஆதரித்தால், உங்களுக்கு வரும் இடைத் தேர்தல், கடைத் தேர்தல், சே, உள்ளாட்சித் தேர்தல் எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம் என்று சொன்னதால் இங்கு பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன்! பிரபலமான வலைச்சரம் என்ற ஒன்றில் அவர் எழுதுகிறாராமே!

இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் அந்த அம்மையார்அவர் சார்பாகச் சில பதிவர்களை நான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததால், அந்த வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்று இங்கே அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!

'சொற்களைத் தொலைக்க வந்தேன்..சொல்லற சும்மாயிருக்க!' என்று சொல்லும் தம்பி செங்கோவி ஒரு தொடர் கதையையும் எழுதி வருகிறார். இந்த அன்புத் தம்பி திரை விமர்சனங்கள் எழுதி வரும் வரிசையில் 'வெடி' விமர்சனத்தையும் சொல்லியிருக்கிறார். உண்ணாவிரதங்கள் பற்றியும் தம்பி அலசி ஆராய்ந்திருக்கிறார்! எம் கட்சிக்கு இவரைப் போன்ற தலைவர்கள் தேவை. என்னங்க, , இங்கே அதைச் சொல்ல வேண்டாமா, சரி சரி!!

'கற்றது கையளவு, கல்லாதது உலகளவு' என்று சொல்லும் தம்பி 'பலே பிரபு'என்னும் பிரபு கிருஷ்ணா - கற்ற தம் அறிவை உலகம் பெற, தொழில்நுட்பச் செய்திகளை அழகாகச் சொல்லிக் கொடுக்கிறார்! உதாரணத்துக்கு ஃபோல்டர் லாக் செய்யும் தொழில்நுட்பத்தையும்,டெலீட் ஆன வலைப்பூவை மீட்பது எப்படி என்பதையும் மிக எளிமையாக விளக்கியுள்ளார்!

இந்தத் தொழில்நுட்பத் தம்பி, புதிர் போடலாம் என்னும் புதிர்கள் வலைப்பூவையும் நடத்தி வந்து, ஆகஸ்ட் மாதத்துடன் விட்டு விட்டார்! எமது மேடை நாயகி மிடில் கிளாஸ் மாதவிக்கும் அவர் I.Q.Queen என்ற விருதை ஒரு முறை கொடுத்துள்ளார்! இந்த விருதைக் கூட வரும்... என்ன, இதுவும் சொல்லக் கூடாதா?... சரி, சரி! இந்தத் தம்பியை மேலும் புதிர்களைத் தொடரும்படி எம் கட்சித் தொண்டர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்!

மன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் என்று தம்மை அறிமுகப் படுத்திக் கொள்ளும் மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன் 'மன்னை மைந்தர்களில் ஒருவன்' என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கிறார். இவருடைய பதிவுகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடியன. சமீபத்தில் அவருடைய சின்னக் குழந்தைகள் கேட்ட இரண்டு கேள்விகளைப் பாருங்கள்! பையன் கேட்ட கேள்விக்கு எம் அரசாங்கம் வந்த பிறகு... என்ன, சரி, சொல்லலை... ம்க்கும், செஸ்ஸில் இவரிடம் கணிணியே தோற்று விட்டதாம்!

நடுவில் சோடா, கலர் ஏதும் கிடையாதா... ம், சரி! சகோதரி புவனேஸ்வரி ராமனாதன் மரகதம் என்ற வலைப்பூவில் ஆன்மீகம், சங்கீதம், சமையல், பயணம் என்று பலதரப்பட்ட பதிவுகளை இட்டுள்ளார்! வாணி ஜெயராமின் இனிய பாடல்கள், ஜவ்வரிசிப் பொங்கல், கொல்லிமலையின் அழகு என்று சொல்லிக் கொண்டே போகலாம்!

இந்திராவின் கிறுக்கல்கள் - இந்திரா இம்சிக்கிறேன் - என்ற அறிவிப்புடன் எழுதும் சகோதரியின் வலைப்பூவில் சமூக அக்கறையுடன் பதிவுகளும், கண்களுக்கு வேலை தரும் காட்சிப் பதிவுகளும் இணைந்திருக்கும். தற்சமயம் புகைப்படத்தைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார், எனக்கு நோட்ஸ் எடுத்துக் கொடுத்த என் தொண்டர் இன்னும் நடுங்கிக் கொண்டிருக்கிறார்!!

தடுக்கி விழும்போது தாங்கிப் பிடிச்சா லவ்வருதுடோய்! என - சீரியலில் ரியல் லைஃப் காட்டக் கூடாதாங்கற ஆதங்கத்தையும் தெரிவிக்கிறார்!!

'யோவ் எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் ப. சதீஸ் பிரபு ஆகிய நான்!' என அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவரது தொலைந்து போன செல்ஃபோன் கவிதை ரசிக்கும்படி உள்ளது!

'என்னை என் பதிவுகளிலிருந்து தெரிந்து கொள்வீர்கள்' எனனும் அறிமுகத்தோடு அன்பே சிவம் என்ற வலைப்பூவில் முகில் எழுதுகிறார். செப்டம்பர் 2011 முதல் எழுதுகிறார். கூகிள் தேடல் - ஒரு எளிமையான வழிமுறை என உபயோகமான பதிவு இட்டிருக்கிறார்!
ஆகவே, பேரன்பு மிக்க பதிவர்களே, உங்கள் பொன்னான வாக்குளை...... என்ன, இதை படிக்கிறவங்க எல்லாரும் உலகம் முழுக்க இருக்காங்களா... தமிழ் நாட்டு ஓட்டு வந்து கொட்டும்னு தான பேச வந்தேன்.... ம்... எப்படியோ எனக்குச் சொன்ன வேலையைச் செய்து விட்டேன். என் ஔ-ஃ கட்சிக்கே வாக்களியுங்கள்! நன்றி!
********#####**********
என் குறிப்பு:
1. மேலே உள்ள அரசியல்வாதி கற்பனையே; யாரையும் குறிப்பது அல்ல!
2. அன்புத் தோழர் Ramani அவர்கள் என் இரண்டாம் நாள் பதிவில் எழுதிய கருத்து என் கருத்தில் நின்றதில், பதிவர்களுக்கான கொலுவை ஏழு படிகளாக்கலாம் என்று இந்தப் பதிவு! அவருக்கு எனது நன்றிகள்! எனது இந்த வாரப் பணிக்கான கடைசிப் பதிவு ஞாயிறு மதியம் கொணர முயற்சிக்கிறேன

28 comments:

  1. உங்க கட்சி சின்னத்தை பத்தி ஒன்னுமே சொல்லலையே...!! :-))

    ReplyDelete
  2. @ ஜெய்லானி -மெகாஃபோனைக் கட்சி சின்னமா வைத்துக் கொள்ளலாமா?! :-))

    ReplyDelete
  3. என்னங்க இப்பிடி பண்ணிட்டீங்க?
    உங்க சார்பா இவ்வளவு பேசினவருக்கு ஒரு ஜோடா, கலர் ஒண்ணும் தரலையா?

    இருந்தாலும் நல்ல அறிமுகங்களை தந்திருக்கறதால சமாதானமாயிட்டாரு போல!

    ஒண்ணு பண்ணுங்க.உங்க சார்புல பேசினதால கட்சி சின்னமா வானவில் இல்லைன்னா கொலு படி(ஏழு) கொடுத்துடுங்க,ஓக்கேவா?!

    ReplyDelete
  4. அக்காவின் அன்புக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ”புதிய கோணங்கி” தலைப்பு ஒரு மாதிரியாக தோன்றினாலும், அறிமுகங்கள் அருமையாய் உள்ளன.

    அனைவருக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    vgk

    ReplyDelete
  6. அறிமுகத்துக்கு நன்றி அக்கா.

    //இந்தத் தம்பியை மேலும் புதிர்களைத் தொடரும்படி எம் கட்சித் தொண்டர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்!
    //

    ஹா ஹா ஹா இனி புதிர்ப் போட்டி ஆக இல்லாமல், புதிர்கள் ஆக மட்டும் தொடருகிறேன்.

    ReplyDelete
  7. இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஔ-ஃ என்ற எங்கள் கட்சி தான் வரும் 2021-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியை அமைக்கப் போகிறது! //


    ஔவ்வா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. 1) சிறந்த அறிமுகங்கள்...
    2) என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் (மீண்டும் முதல் வரியை படிக்கவும்...)

    ReplyDelete
  10. @ raji - அவருக்கு ஆதாயம் இருக்கும்னு தானே பேச வந்தாரு...!!
    //.உங்க சார்புல பேசினதால கட்சி சின்னமா வானவில் இல்லைன்னா கொலு படி(ஏழு) கொடுத்துடுங்க,ஓக்கேவா?!// அது எட்டாவது கட்சியைக் கூட்டணியில் சேர்க்கும் போது கஷ்டம்! :-)) மெகாஃபோன்?

    ReplyDelete
  11. @ செங்கோவி - தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. @ வை.கோபாலகிருஷ்ணன் - //”புதிய கோணங்கி” தலைப்பு ஒரு மாதிரியாக தோன்றினாலும்// இது பாரதியின் ஒரு பாடலின் தலைப்பு! வருகிற நல்ல காலத்தைச் சொல்லும் குடுகுடுப்பைக்காரன்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  13. @ Prabhu Krishna - /இனி புதிர்ப் போட்டி ஆக இல்லாமல், புதிர்கள் ஆக மட்டும் தொடருகிறேன்./ நன்றி!

    ReplyDelete
  14. @ மாய உலகம் - கருத்துக்களுக்கு நன்றி!

    கட்சி பேரை வேகமா, திருப்பித் திருப்பிச் சொல்லி மட்டும் பார்க்காதீங்க! :-))

    ReplyDelete
  15. பல வண்ணங்கள் கொண்ட அந்த மலரை கட்சி சின்னமாய் வைத்துக் கொள்ளலாமே

    ReplyDelete
  16. @ Madhavan Srinivasagopalan -
    //1) சிறந்த அறிமுகங்கள்...
    2) என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் (மீண்டும் முதல் வரியை படிக்கவும்...)//
    எப்ப நிறுத்தலாம்?!! :-))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

    ReplyDelete
  17. புதிய கோணங்கி! பாரதி பாடல் தலைப்பிலே ஒரு கட்சி தலைவர் பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கிரார்! :)

    புதிய கட்சியின் பெயர் :)))

    அறிமுகம் ஆன நண்பர்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  18. கலகல்ப்பாக அறிமுகம் செய்துவைத்தவ்ருக்கும்,

    அறிமுகப்படுத்தப்படவர்களுக்கும்

    நன்றியறிதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  19. அறிமுகங்கள் அருமை...

    ReplyDelete
  20. @ வெங்கட் நாகராஜ் - தங்கள் கருத்துக்களுக்கு நன்றி! :-)

    ReplyDelete
  21. @ இராஜராஜேஸ்வரி - தங்கள் வருகைக்கும் நன்றியறிவித்தல்களுக்கும் என் நன்றி!!

    ReplyDelete
  22. @ suryajeeva - //பல வண்ணங்கள் கொண்ட அந்த மலரை கட்சி சின்னமாய் வைத்துக் கொள்ளலாமே// - நல்ல ஐடியா!!

    ReplyDelete
  23. @ சே. குமார் - நன்றி1

    ReplyDelete
  24. பாரதி வரிகளைக் கொண்டே இந்த வாரத் தலைப்புகளை அமைத்தது சிறப்பு. ரமணி சார் சொன்னது போல கொலு படிகளாகவும் அமைத்ததும் சிறப்பு. கட்சி சொல்லிட்டீங்க...கொ.ப. செ யாரு? பொருளாளர் யாரு?!!

    ReplyDelete
  25. @ ஸ்ரீராம் - //கொ.ப. செ யாரு? பொருளாளர் யாரு?!!// அது எனக்கு எப்படித் தெரியும், அந்தத் தலைவருக்குத் தான் தெரியும்!! :-))

    ReplyDelete
  26. @ ஸ்ரீராம் - //கொ.ப. செ யாரு? பொருளாளர் யாரு?!!// அது எனக்கு எப்படித் தெரியும், அந்தத் தலைவருக்குத் தான் தெரியும்!! :-))

    ReplyDelete
  27. அட இன்னைக்கு அரசியல் நெடி வீசுதே... என்னாச்சு என்னாச்சு? உங்க கட்சியில் ஒரே ஜனரஞ்சகமா இருக்கேப்பா....

    தலைப்பு செம்ம அசத்தல் புதுமையா இருக்குப்பா...

    அன்பு வாழ்த்துகள் மாதவி...

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்பா...

    ராஜீ என்ன சொல்றாங்கன்னு எட்டி பாருங்க.. ஜோடா கலர் வாங்கி தந்தீரான்னு கேக்கிராங்க..

    அட ரமணி சார் கருத்தில் இருந்து எடுத்ததா இப்படி ஒரு யோஜனை?

    ReplyDelete
  28. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
    அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது