07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 7, 2012

நட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )


உலகில் பிறந்த ஜீவராசிகளில் இருந்து மனிதர் வரை அன்பு என்ற இழை பிணைத்திருப்பதால் தான் ஒருவரிடம் ஒருவர் நட்புடன் பழகமுடிகிறது. மனதில் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது…. நட்பாய் தொடங்குகிறது…. நிலைத்தும் நிற்கிறது… ஆரோக்கிய நட்பு….. நேர்மையான நட்பு…. உண்மையான நட்பு….. இதெல்லாம் சொல்வது ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே… அன்பு…..

நட்புக்கு வயதில்லை…. ஆண் பெண் பேதமில்லை… அழகு, அறிவு, கல்விக்குரிய தகுதி எதுவும் அவசியமில்லை…..அன்பு இருந்தால் மட்டும் தான் நட்போ உறவோ நிலைத்திருப்பது. அன்பில் விரிசல் ஏற்படும்போது தான் அங்கே நட்பிலும் உறவிலும் தூரம் அதிகமாவது. அந்த விரிசல் கூட இப்படிப்பட்ட காரணத்தால் கூட இருக்கலாம் என்பது என் கணிப்பு...

எதிர்ப்பார்ப்புகள், பொசசிவ்நெஸ், அந்த பொசசிவ்நெஸ்ஸால் ஏற்படும் சந்தேகம், கோபம், சண்டை, வருத்தம், கண்ணீர், பிரிவு...... நட்பாய் இருப்போர் மனதில் அன்பு மிகுதியாய் இருக்கும் வரை அவர்களின் குறைகள் கூட கண்ணுக்கு தெரியாது. அன்பு குறையும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட குற்றமாய், குறையாய் தெரியும். அதுவே பூதாகரமாகி விரிசல் விட்டு பிரிவுக்கு வழி வகுக்கும்...

எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்.. எதிர்ப்பார்ப்புகளற்ற பொச்சிவ்நெஸ் இல்லாத நட்பும் சரி, உறவும் சரி என்றும் அன்பு நிறைந்து நிலைத்து இருக்கும்..

அதனால் தான் சொல்கிறேன் நட்பாய் இருக்க முக்கியமான ஒன்று வேண்டும்… அது நம்பிக்கை மனதில்... நேர்மை கண்களில்….

நம்பிக்கையுடன் கைக்கோர்த்தால் நட்பும் நலமே…

ஏழு நாட்களும் என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்க பரிந்துரைத்த வை.கோ அன்பு அண்ணாவுக்கும், பரிந்துரைத்த மஞ்சுவை நம்பிக்கையுடன் ஆசிரியராய் நியமித்த அன்பு சீனா அண்ணாவுக்கும், ஒவ்வொரு நாளும் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்தும்போது தயங்காமல் சலிக்காமல் அறிமுகமானவர்களின் வலைப்பூவுக்கு சென்று அவர்களுக்கு அன்புடன் தெரிவித்த அன்பு நண்பர் தனபாலனுக்கும், இதுநாள் வரை என்னுடனே ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் அளித்து என்னுடனே பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த மனம் நிறைந்த பணிவான அன்பு நன்றிகள்.

இன்று என் மனம்கவர் பதிவர்கள் சிலரின் வலைப்பூக்களை பார்ப்போமாப்பா?




எந்த ஒரு தகவலையும் பதியும்போதும் சரி, எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை பதியும்போதும் சரி அதை தவறு இல்லாமல் மிக கனகச்சிதமாக பகிர்ந்து தமிழை நேசித்து, சுவாசித்து அதையே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் என்பது போல் வாசகர் அனைவருக்கும் அன்புடன் பகிரும் மிக அற்புதமான மனிதநேய உள்ளம் கொண்ட தி. தமிழ் இளங்கோ ஐயாவின் பதிவுகள் சில பார்ப்போமா?




இந்த கண்ணனின் படத்தை உற்றுப்பார்த்தபோது பதிவர் மாநாட்டில் எடுத்த வல்லிம்மா படத்தில் இருக்கும் வல்லிம்மாவின் புன்னகைக்கும் இந்த உள்ளம் கவர் கள்வன் கண்ணனின் புன்னகையும் ஒரே போல் தோன்றியது எனக்கு. அத்தனை அன்பும் பரிவும் வாத்ஸல்யமும் வல்லிம்மாவின் பதிவுகளில் நான் கண்டேன். எப்போதோ ஒரு முறை எங்கள் பிளாக் என்ற வலைப்பூவில் மிக அருமையாக வல்லிம்மா பாடுவதைக்கேட்டு லயித்துப்போனேன் அவரின் இனியக்குரலில். இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகள் சில பார்ப்போமா?




புராணக்கதைகள் கேட்கணும்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதிலும் கண்ணன் இடம்பெறும் அத்தனை காட்சிகளும் எத்தனை படித்தாலும் திகட்டாது. தித்திக்க தித்திக்க கண்ணன் கதைகளைச்சொன்னால் அதில் வரும் ஒவ்வொருவரையும் கதையில் காட்சிகளாக விவரிக்கும்போது நம் கண்முன் அந்த காட்சி விரிகிறது. பீஷ்மரைப்பற்றி சொல்லும்போது பீஷ்மரின் தீட்சண்யப்பார்வை, கண்ணனின் குளுமையான அழகுப்புன்னகை...அத்தனையும் இவரின் பதிவுகளில் தவறாமல் காணலாம். ரசிக்கும்படி தலைப்புகளும் அத்தனை அசத்தல். பார்ப்போமா அழகு கண்ணனின் கதைகள் கொண்ட பகிர்வுகள் சில?

சத்யவதியின் மனோதிடம் 




இவங்க முகத்தைப்பார்த்தால் என்ன ஒரு துறு துறுன்னு ஆக்டிவா இருக்காங்க.... இதே சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் இவர்களின் பதிவுகளிலும் காணமுடிகிறது. நான் மிகவும் ரசித்து வாசித்தேன் நோகாமல் வடை சுடுவது எப்படின்னு....  நான் நேற்று மாலை வடை சுடும்போது (ஆஞ்சந்எந்த ஒரு பதிவும் பதிவும்போதே அதை வாசகர்கள் விருப்பத்திற்கிணங்க சுவாரஸ்யமா தருவது இவர்களின் அழகான பாங்கு. ஆசிரியை அல்லவா... அதான் அத்தனை பர்ஃபெக்‌ஷன். 2004 ஆம் ஆண்டில் இருந்து வலைப்பூவில் அட்டகாசமாக தொடரும் இவர் பயணம் இனியும் வெற்றியுடன் தொடரவும்... சமீபத்தில் நடந்த சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்காகவும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் மேடம்..  துளசி டீச்சரின் பதிவுகள் சில பார்ப்போமா?




இவங்க வலைப்பூவில் போய் பார்த்தால் அப்பப்பா ஒரே கதம்ப மணம் தான். குழம்பு மணக்கிறது, பொரித்த குழம்பும், வயதானவர்களுக்காக இலகுவான கஞ்சியும் இன்னும் என்னென்னவோ சமையலில் அசத்தி இருக்காங்க. நிதானமா நீங்க இவர் வலைப்பூவில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பா தினம் தினம் வெரைட்டியா சமைத்து அசத்தலாம் வீட்டிலும் பிள்ளைகளுக்கு வெரைட்டியா டிபன் கிடைக்கும். நல்லப்பெயரும் கிடைக்கும். அட அப்டின்னு அசந்து போறமாதிரி சமைக்கலாம் இவர் வலைப்பூவில் இருந்து சிலவற்றை பார்ப்போமா?

கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு 




நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா.... ஹுஹும் நிலா நம்மக்கிட்ட வராது... நாம தான் நிலாமகள் வலைப்பூவுக்கு சென்று பார்க்கவேண்டும்.. அப்படி போய் பார்த்தால் அழகிய அவரின் கவிதை பிரவாகங்களும், அருமையான மருத்துவ பயன்களும், பயன் தரும் அனுபவங்களும் மிக எளிய நடையில் பகிர்ந்திருக்காங்க. அன்பு நலன் விசாரித்தலும் உண்டு . பார்ப்போமா நிலாமகளின் சில நட்சத்திர பதிவுகள் ?





தாய்மை நிறைந்த இந்த படத்தை உற்றுப்பார்க்கும்போது இவரின் அன்பு மனதையும் அறியமுடிகிறது இவர் பதிவுகளில்.... குழந்தைகளில் பலவகை இருப்பார்கள். என் பொம்மை என்னுடையது எனக்கு மட்டும் தான்... இந்தா அழாதே என் பொம்மை நீ வெச்சுக்கோ என்று கொடுக்கும்... இன்னொரு குழந்தையோ வா நாம் இருவருமே ஒன்றாய் இந்த பொம்மையை வைத்து விளையாடுவோம் சண்டையே இடாமல்... மூன்று குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை பாருங்கள்.... குழந்தைகள் தான். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தை தான்... நாம் குழந்தையை நல்லவைகளை சொல்லித்தந்து வளர்ப்பதில் தான் சூட்சுமம் அடங்கி இருப்பது. ஏன் இதெல்லாம் வள வளன்னு சொல்றீங்க அப்டின்னு என்னை கேக்காதீங்கப்பா.. இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை போய் பார்த்தால் தாய்மை நிறைந்த அன்பு பதிவுகள் நிறைய இது போல் பயனுள்ளவை இருக்கிறது.. பார்ப்போமா அவற்றில் சில?





கதை எழுதுவது, கவிதைகள் புனைவது, படம் வரைவது, சிற்பங்கள் வடிப்பது இதெல்லாம் எப்படி ஒரு கலையோ அதுபோல் சமையலும் ஒரு கலை. சமைக்கும்போது நாம் என்ன மனநிலையில் சமைக்கிறோமோ அதே போல் பண்டமும் அமையுமாம்.  நல்ல மனநிலையில் சந்தோஷமான மனநிலையில் இசையைக்கேட்டுக்கொண்டோ அல்லது பாட்டு ஹம் செய்துக்கிட்டோ (பிடிச்சப்பாட்டு அல்லது ஸ்லோகங்கள்) சமைச்சுட்டு அதன்பின் ஈடுபாட்டோடு அதை பரிமாறி சுவைப்பவர் அதன்பின் சொல்லும் வார்த்தை ஆஹா இதுவல்லவா சமையல்... இப்டி எல்லாம் நான் சொல்லவே இல்லப்பா.. ராதாராணிம்மா கிச்சனுக்கு போய் பார்த்தால் இப்படி எல்லாம் தான் நினைச்சு செய்திருப்பாங்களோன்னு நினைக்கவைத்த அளவுக்கு தத்ரூபமா அழகான படங்களோட விதம் விதமா சமைச்சு அசத்தி இருக்காங்க. நாமெல்லாம் மாவுல இட்லி சுடுவோம் தோசை சுடுவோம். இவங்க பாருங்க சட்னி எல்லாம் செய்து அசத்தி இருக்காங்க...இவரின் அசத்தலான சில பதிவுகள் பார்ப்போமா?







துரை டேனியல்.. அதிகம் எனக்கு பரிச்சயமே இல்லாத பதிவர்.. ஆனால் வலைச்சர ஆசிரியராய் நான் பணி தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து வந்து அருமையான பின்னூட்டங்கள் அளித்து ஊக்கம் தருபவர். சரி போய் தான் பார்ப்போமே இவர் வலைக்கு அப்டின்னு போய் பார்த்தால்... அட நிஜம்மாவே இவர் குடத்திலிட்ட விளக்கு தாம்பா.. அத்தனை திறமைகளையும் தன்னுள் வைத்துக்கொண்டு எத்தனை அடக்கமாக அமைதியாக வந்து பதிவுகளும் பதிவுகளுக்கு பாராட்டும் ஊக்கமும் தரும் பின்னூட்டங்களும் அளிக்கிறார்... அருமையான தலைப்புகள் தந்து பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து, அழகிய கவிதைகளை நம்முள் சிந்தனைகளை தூண்டிவிடும் இவரின் சில பதிவுகளை பார்ப்போமா?

என் பறை முழங்குகிறது 


இன்றைய நாள் மட்டுமல்லாது இனிவரும் எல்லா நாட்களும் எல்லோருக்கும் நல்ல நாளாக, வெற்றியைத்தரும் நாளாக நல்லவைகளைத்தரும் நாளாக சந்தோஷங்களைத்தரும் நாளாக (நாட்களாக) அமைய இறைவனை வேண்டிக்கொண்டு என் பணியை முடிக்கிறேன்பா..

அடுத்து ஆசிரியர் பணி தொடரும் அன்பு உள்ளத்திற்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

இன்றோடு என் பணி இங்கே முடிந்தது.... சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது.... 









63 comments:

  1. நட்பு குறித்த முன்னுரை மிகவும் அற்புதமான படைப்பாய் இப்படைப்பினை அலங்கரிக்கின்றது அக்கா.
    எதிர்பார்ப்பினில் தான் அன்பும் நட்பும் விரிசலை நோக்கி பயணிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை தான்.

    நட்பின் பாதையானது நமது நலம் என்ற பாதையிலிருந்து தன்னலம் நோக்கிப் பயணிக்கும் போது தான் வலிகளும் படிப்பினைகளும் நம்மை ஒரு விதத்தில் ஈர்த்துக் கொள்கின்றன.

    வள்ளுவப் பெருந்தகை

    "முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அக நக நட்பதாம் நட்பு"
    என்று நட்பின் பெருமையைப் பற்றி எடுத்தியம்பியுள்ளார்கள்.

    அதன்கண் இவ்வையத்தில் அத்தன்மை பொருந்திய நட்பைக் காணுதல் அரிதே அக்கா.

    ஏதேனும் ஒரு வகையில் ஒருவரை வைத்து மற்றொருவர் முன்னேற்றங்கொண்டிடும் போது முன்னேற்றம் கண்டவர் ஏணியை மறந்து மிதித்துத் தள்ளிச் செல்லும் வகையிலான மாந்தர் தாம் இவ்வுலகில் அதிகம் அக்கா.

    நட்பு குறித்த சிறந்த கருத்துகள் அருமையாய் அமைந்திருக்கின்றது அக்கா.

    அடுத்து அறிமுகப்படுத்திய பதிவர்கள் யாவரும் எனக்கும் புதியவர்களே.! காலம் கிடைத்திடும் போது காண்கின்றேன்.

    சிறப்பான பணிக்கு நன்றிகள் பற்பலவே.!

    ReplyDelete
  2. ஒரு வார ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல (எனக்கு) புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. இன்றும் மிகச்சிறப்பான அருமையான அறிமுகங்கள்.

    அனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  4. நட்பின் சிறப்புகளுக்கு அளவே இல்லை... அருமையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்...

    சிறப்பான தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பலப்பல...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  5. தமிழ்நாட்டில் திருச்சியில் நேற்றும் இன்றும் தொடரும் மிக நீண்ட நேர மின்தடை காரணமாக, என் வருகையில் இன்று மிகவும் தாமதம். ;(

    oooooooooooooooo

    அன்பின் மஞ்சு,

    வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டு கடந்த ஏழு நாட்களாக மிக அருமையாகப் பணியாற்றி சிறப்பித்து அசத்தியுள்ள என் குழந்தை ”ம்ஞ்சு”வுக்கு என்

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    நன்றியோ நன்றிகள்.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    நீ டூ ழி வாழ்க ! ;))))))

    [ததாஸ்து ;))))) ]

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  6. //நட்புக்கு வயதில்லை…. ஆண் பெண் பேதமில்லை…

    அழகு, அறிவு, கல்விக்குரிய தகுதி எதுவும் அவசியமில்லை…..

    அன்பு இருந்தால் மட்டும் தான் நட்போ உறவோ நிலைத்திருப்பது.

    அன்பில் விரிசல் ஏற்படும்போது தான் அங்கே நட்பிலும் உறவிலும் தூரம் அதிகமாவது.

    அந்த விரிசல் கூட இப்படிப்பட்ட காரணத்தால் கூட இருக்கலாம் என்பது என் கணிப்பு...

    எதிர்ப்பார்ப்புகள், பொசசிவ்நெஸ், அந்த பொசசிவ்நெஸ்ஸால் ஏற்படும் சந்தேகம், கோபம், சண்டை, வருத்தம், கண்ணீர், பிரிவு......

    நட்பாய் இருப்போர் மனதில் அன்பு மிகுதியாய் இருக்கும் வரை அவர்களின் குறைகள் கூட கண்ணுக்கு தெரியாது.

    அன்பு குறையும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட குற்றமாய், குறையாய் தெரியும்.

    அதுவே பூதாகரமாகி விரிசல் விட்டு பிரிவுக்கு வழி வகுக்கும்...//

    அன்பைப்பற்றி,
    அன்புடன்,
    அழகாக வெகு அழகாக

    சொல்லிட்டீங்க ம ஞ் சூ ஊஊஊஊ!

    எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து கொண்டேன்.

    மஞ்சுவின் ஒவ்வொரு வரிகளும்
    பஞ்சு மிட்டாய் போல இனிப்போ இனிப்பு!

    மஞ்சு மிட்டாய் வாழ்க வாழ்க வாழ்க!

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  7. நட்பு நாகரீகமானது.
    நாடி வருவது.
    மெய்யான் நட்பில் எதிர்பார்ப்புகள் இல்லை.
    எல்லா நட்புகளுமே பால் சின்ட்ர்லர் சொல்லியபடி ஒரு red triangle ஆகத்தான் செயல்படுகின்றன.
    R stands for RULES, E stands for EXPECTATIONS, and D stands for DEMANDS.
    நாம் வகுக்கும் விதிகளுக்குட்பட்டு, நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கும் வேண்டியவைகளையும்
    பூர்த்திசெய்ய வேண்டும் என்னும் மன நிலை நட்புக்கு எதிர் மறையானதது.

    இதை friendship transcending levels of unconditional love எனவும் சொல்வார்கள்.

    எல்லா உயிரினம் இடத்தும் வள்ளலார் கொண்டிருந்த அன்புக்கும் நட்புக்கும் பொருந்தும்.
    '
    நம்மைப் பொருத்தவரைக்கும் " நான் உங்க வீட்டுக்கு வந்த என்ன தர்றே ? நீ எங்க வீட்டுக்கு வந்தா
    என்ன கொண்டு வர்றே ? " இந்த மன நிலையை விட்டு கொஞ்சம் மேலே போக முடியுமா என்று
    இந்த ப் பதிவினைப் படித்தவர்கள் யாவருமே சற்று சிந்திப்பார்களானால் ? ( சிந்திப்பார்கள் என்று
    நினைக்கிறேன்.)
    அப்பொழுது மஞ்சு பாஷிணி அவர்களது ஏழு நாட்கள் உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைத்திருக்கிறது
    எனவே சொல்லலாம்.

    எதற்கும் நான் அந்தக்காலத்தில் எழுதியவைகளிலிருந்து சிலவற்றை இங்கே பாருங்கள்.

    https://sites.google.com/site/meenasury/

    வெல் டன் மஞ்சு பாஷிணி.
    அது சரி. அது என்ன விழுனேரி. !! புரியல்லையே !!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  8. மறுபடியும் நல்ல அறிமுகங்கள். மறுபடியும் எங்கள் ப்ளாக் பிரயோகம் வந்ததற்கும் நன்றி. பதிவர்களை அறிமுகப்படுத்துமுன் சொல்லப் பட்ட கருத்துகள் யாவும் அருமை. இந்த வாரத்தை சிறப்பாக, வித்தியாசமாகவே முடித்தீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நிறைவான அறிமுகங்களுடன் சிறப்பான வலைச்சரப் பணிக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் சிறப்பாக அறிமுகப் படுத்தும்
    பாங்கிற்கு !....இதில் ஒரு சில தளங்களைத் தவிர ஏனைய தளங்கள்
    யாவும் நானும் அறியாத தளங்களே அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .
    சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்கின்றேன் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  11. மிகச் சிறப்பாக ஒரு வாரப் பணியை நிறைவேற்றி விட்டீர்கள், மஞ்சு பாஷிணி. அதற்கு முதலில் பாராட்டுக்கள்.

    அறிமுகமான பதிவர்களின் வலைபூக்களும் அவர்களது எழுத்துக்களும் ஒரு கதம்ப மாலையாக மணக்கின்றன.

    ஒவ்வொரு நாளும் ஒரு உணர்ச்சியுடன் - அன்புப் பரிமாற்றம், அறுசுவை, சிந்தனை, பொறுமை, நம்பிக்கை, கோபம், நட்பு - என்று பெயருக்குத் தக்க கதம்ப உணர்ச்சிகளுடன் விடை பெற்று இருக்கிறீர்கள்.

    நாங்களும் அதேபோன்ற ஒரு கதம்ப உணர்ச்சிகளுடன் உங்களுக்கு விடை கொடுக்கிறோம்.

    வாஷ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நன்றியுரை வாசிச்சாச்சு போலருக்கே?? :))

    ReplyDelete
  13. வலைச்சரத்தின் ஏழாம்நாளில் என்னை அறிமுகப்படுத்திய சகோதரி மஞ்சுபாஷிணி (http://manjusampath.blogspot.in கதம்ப உணர்வுகள்) அவர்களுக்கு நன்றி! மற்ற சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்! இதனை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  14. நட்பு பற்றிய பகிர்வுகளும் அருமை.மிக நிறைவான அசத்தலான வாரம்..

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்கள்

    ஏற்றெடுத்த பணியை சிறப்பாய் செய்து முடித்த தோழி அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. பணி சிறப்பற முடித்தீர்கள் மிக மிக அருமையாக நடத்தினீர்கள்.
    இன்று சமையலும் பிரமாதமாக மணக்கிறது.
    உங்களிற்கும், அனைவருக்கும் நல்வாழ்த்து.
    எல்லா இடுகைக்கும் செல்ல ஆசை தான்.
    நேரமின்றித்தான் உள்ளது. முயற்சிப்பேன்
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. ஒரு வாரம் இனிமையாகச் சென்றது. செம்மையாக பணிசெய்து எங்களுக்கு நல்லறிமுகங்கள் பல தந்தீர்கள். நட்பும் என்றும் (முடிவில்லா) தொடர்கதைதான் தோழி. உங்களுக்ககு என் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நல்ல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்,..,

    வலைச்சரத்திற்கும் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  19. ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும். உங்களின் கரங்களால் இந்த வாரம் வலைசரம் மிக அழகாக ஜொலித்தது என்றால் அது மிகையாகது. மிக நேர்த்தியுடன் செய்த உங்கள் பாங்கு மனம் நிறைய வைத்தது. வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் தளத்தில் உங்களை நிழல் போல தொடர்ந்து வருகிறேன்

    ReplyDelete
  20. அன்பு மஞ்சு.
    வலைசர ஆசிரிய பணியின் 7-வது நாளான இன்று பதிவின் தொடக்கம் நட்பை பற்றிய தங்களின் விளக்கம்,விரிவான கருத்து மிக்க அருமை .நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை .ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையை கொடுக்கும் .அழகான பதிவு. நன்றி தோழி.
    இன்றைய அறிமுகத்தில் என் வலைபூவை அறிமுகமப்படுத்தியதற்க்கு மக்க நன்றி .அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும்
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  21. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி சகோ. அருமையாக வலைச்சரம் தொடுத்தமைக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளோடு!

    - துரை டேனியல்.

    ReplyDelete
  22. இன்றைய அறிமுகங்கள் அத்தனையும் சும்மா 'நச்' 'நச்'! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. இன்றைய அறிமுகங்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்கிறேன்.இந்த வாரம் முழுவதும் சிறப்பானதொரு ஆசிரியப் பணியாற்றி சிறப்பான அறிமுகங்களைத் தந்து இப்பணியிலிருந்து ஓய்வு பெறும் அன்பு அன்பு அன்பு சகோதரிக்கு அன்பு அன்பு அன்பு சகோதரனின் நன்றிகளும் வாழ்த்துகளும்..நற்பணி..

    ReplyDelete
  24. எதிர்பாரார்ப்பு இல்லாமல் என்னிடம் நட்பு கொண்டாடும் மனக்கள் தான் அதிகம் இங்கே மஞ்சுபாஷிணி. அதில் நீங்களும் ஒருவர் என்பதும் எனக்குத் தெரியும்.தனபாலனும் அப்படியே. மாதேவியும் அப்படியே.எப்படி ஒன்று சேர்ந்தோம் என்பதே என்வியப்பு. என் பட்ஜிவையும் என் சககால்ப் பதிவர்களையும் அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். மனம் நிறைய மகிழ்ச்சி பெருகி ஓடுகிறது. இந்த அன்பு எப்போதும் நிலை பெறட்டும்.
    வாழ்த்துகள் கண்ணா.

    ReplyDelete
  25. எத்தனை கடுமையாக முயன்றிருந்தால்
    இத்தனை சிறப்பாக ஆசிரியர் பணியை
    முடித்திருக்க முடியும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது
    பதிவில் தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக நிறைவு செய்த்தற்கு வாழ்த்துகள். இன்றைய அறிமுகங்கள் அனைவருமே தெரிந்த முகங்கள்தான் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  27. /எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்/

    but accept your friend the way they are..

    நட்பு ,நம்பிக்கை ....மிக மிக அழகா சொல்லியிருக்கீங்க மஞ்சு .
    பதிவர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திய விதமும் superb!!!.

    இந்த வாரம் முழுவதும் வலைச்சரப்பணியை செவ்வனே நடத்தி வந்திருக்கீங்க ..வாழ்த்துகிறேன் ..பாராட்டுகிறேன்

    ReplyDelete
  28. சிறப்பான வலைச்சர ஆசிரியர் பணி இன்றோடு நிறைவுற்றதே என்று வருத்தமாக இருக்கிறது.

    இன்று அறிமுகம் செய்யப்படவர்களில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரையும் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி....

    தொடர்ந்து தங்களது தளத்தில் அசத்த வாழ்த்துகள்....

    ReplyDelete
  29. ராதாஸ் கிச்சன் தவிர பிற பதிவர்களைப் படித்திருக்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.

    கீதா சாம்பசிவம் அவர்களின் கற்பனையில் மெருகேற்றப்படுகிறது என்பது புராணக்கதைக்குக் கிடைத்த புத்துயிர். மிகவும் ரசித்துப் படிக்கும் பதிவுகளில் ஒன்று. இங்கே இடம்பெறுவது நிறைவாக இருக்கிறது.

    சிறப்பான வலைச்சரப் பணிக்குப் பாராட்டுக்கள்.


    ReplyDelete
  30. //சிவஹரி said...
    நட்பு குறித்த முன்னுரை மிகவும் அற்புதமான படைப்பாய் இப்படைப்பினை அலங்கரிக்கின்றது அக்கா.
    எதிர்பார்ப்பினில் தான் அன்பும் நட்பும் விரிசலை நோக்கி பயணிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை தான்.

    நட்பின் பாதையானது நமது நலம் என்ற பாதையிலிருந்து தன்னலம் நோக்கிப் பயணிக்கும் போது தான் வலிகளும் படிப்பினைகளும் நம்மை ஒரு விதத்தில் ஈர்த்துக் கொள்கின்றன.

    வள்ளுவப் பெருந்தகை

    "முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அக நக நட்பதாம் நட்பு"
    என்று நட்பின் பெருமையைப் பற்றி எடுத்தியம்பியுள்ளார்கள்.

    அதன்கண் இவ்வையத்தில் அத்தன்மை பொருந்திய நட்பைக் காணுதல் அரிதே அக்கா.

    ஏதேனும் ஒரு வகையில் ஒருவரை வைத்து மற்றொருவர் முன்னேற்றங்கொண்டிடும் போது முன்னேற்றம் கண்டவர் ஏணியை மறந்து மிதித்துத் தள்ளிச் செல்லும் வகையிலான மாந்தர் தாம் இவ்வுலகில் அதிகம் அக்கா.

    நட்பு குறித்த சிறந்த கருத்துகள் அருமையாய் அமைந்திருக்கின்றது அக்கா.

    அடுத்து அறிமுகப்படுத்திய பதிவர்கள் யாவரும் எனக்கும் புதியவர்களே.! காலம் கிடைத்திடும் போது காண்கின்றேன்.

    சிறப்பான பணிக்கு நன்றிகள் பற்பலவே.!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி.

    ReplyDelete
  31. //சத்ரியன் said...
    ஒரு வார ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல (எனக்கு) புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சத்ரியன்.

    ReplyDelete
  32. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    இன்றும் மிகச்சிறப்பான அருமையான அறிமுகங்கள்.

    அனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  33. //திண்டுக்கல் தனபாலன் said...
    நட்பின் சிறப்புகளுக்கு அளவே இல்லை... அருமையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்...

    சிறப்பான தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பலப்பல...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தனபாலன் சகோ.

    ReplyDelete
  34. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    தமிழ்நாட்டில் திருச்சியில் நேற்றும் இன்றும் தொடரும் மிக நீண்ட நேர மின்தடை காரணமாக, என் வருகையில் இன்று மிகவும் தாமதம். ;(

    oooooooooooooooo

    அன்பின் மஞ்சு,

    வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டு கடந்த ஏழு நாட்களாக மிக அருமையாகப் பணியாற்றி சிறப்பித்து அசத்தியுள்ள என் குழந்தை ”ம்ஞ்சு”வுக்கு என்

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    நன்றியோ நன்றிகள்.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    நீ டூ ழி வாழ்க ! ;))))))

    [ததாஸ்து ;))))) ]

    பிரியமுள்ள
    கோபு அண்ணா//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா.. தங்களின் ஆசி.

    ReplyDelete
  35. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    //நட்புக்கு வயதில்லை…. ஆண் பெண் பேதமில்லை…

    அழகு, அறிவு, கல்விக்குரிய தகுதி எதுவும் அவசியமில்லை…..

    அன்பு இருந்தால் மட்டும் தான் நட்போ உறவோ நிலைத்திருப்பது.

    அன்பில் விரிசல் ஏற்படும்போது தான் அங்கே நட்பிலும் உறவிலும் தூரம் அதிகமாவது.

    அந்த விரிசல் கூட இப்படிப்பட்ட காரணத்தால் கூட இருக்கலாம் என்பது என் கணிப்பு...

    எதிர்ப்பார்ப்புகள், பொசசிவ்நெஸ், அந்த பொசசிவ்நெஸ்ஸால் ஏற்படும் சந்தேகம், கோபம், சண்டை, வருத்தம், கண்ணீர், பிரிவு......

    நட்பாய் இருப்போர் மனதில் அன்பு மிகுதியாய் இருக்கும் வரை அவர்களின் குறைகள் கூட கண்ணுக்கு தெரியாது.

    அன்பு குறையும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட குற்றமாய், குறையாய் தெரியும்.

    அதுவே பூதாகரமாகி விரிசல் விட்டு பிரிவுக்கு வழி வகுக்கும்...//

    அன்பைப்பற்றி,
    அன்புடன்,
    அழகாக வெகு அழகாக

    சொல்லிட்டீங்க ம ஞ் சூ ஊஊஊஊ!

    எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து கொண்டேன்.

    மஞ்சுவின் ஒவ்வொரு வரிகளும்
    பஞ்சு மிட்டாய் போல இனிப்போ இனிப்பு!

    மஞ்சு மிட்டாய் வாழ்க வாழ்க வாழ்க!

    பிரியமுள்ள
    கோபு அண்ணா//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா...

    ReplyDelete
  36. //sury Siva said...
    நட்பு நாகரீகமானது.
    நாடி வருவது.
    மெய்யான் நட்பில் எதிர்பார்ப்புகள் இல்லை.
    எல்லா நட்புகளுமே பால் சின்ட்ர்லர் சொல்லியபடி ஒரு red triangle ஆகத்தான் செயல்படுகின்றன.
    R stands for RULES, E stands for EXPECTATIONS, and D stands for DEMANDS.
    நாம் வகுக்கும் விதிகளுக்குட்பட்டு, நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கும் வேண்டியவைகளையும்
    பூர்த்திசெய்ய வேண்டும் என்னும் மன நிலை நட்புக்கு எதிர் மறையானதது.

    இதை friendship transcending levels of unconditional love எனவும் சொல்வார்கள்.

    எல்லா உயிரினம் இடத்தும் வள்ளலார் கொண்டிருந்த அன்புக்கும் நட்புக்கும் பொருந்தும்.
    '
    நம்மைப் பொருத்தவரைக்கும் " நான் உங்க வீட்டுக்கு வந்த என்ன தர்றே ? நீ எங்க வீட்டுக்கு வந்தா
    என்ன கொண்டு வர்றே ? " இந்த மன நிலையை விட்டு கொஞ்சம் மேலே போக முடியுமா என்று
    இந்த ப் பதிவினைப் படித்தவர்கள் யாவருமே சற்று சிந்திப்பார்களானால் ? ( சிந்திப்பார்கள் என்று
    நினைக்கிறேன்.)
    அப்பொழுது மஞ்சு பாஷிணி அவர்களது ஏழு நாட்கள் உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைத்திருக்கிறது
    எனவே சொல்லலாம்.

    எதற்கும் நான் அந்தக்காலத்தில் எழுதியவைகளிலிருந்து சிலவற்றை இங்கே பாருங்கள்.

    https://sites.google.com/site/meenasury/

    வெல் டன் மஞ்சு பாஷிணி.
    அது சரி. அது என்ன விழுனேரி. !! புரியல்லையே !!

    சுப்பு ரத்தினம்.//

    அன்பின் ஐயா,

    இத்தனை நாளும் நான் எழுதிய சிந்தனை வரிகள் எல்லாமே எனக்கும் சேர்த்தே தான் ஐயா... என்னை நான் புடம் போட்டுக்கொள்ளவும் என் மனதை நான் பண்படுத்திக்கொள்ளவும் எடுத்துக்கொள்கிறேன் ஐயா... நான் எப்படி இருக்கிறேனோ அதேபோல் தான் அனைவரிடமும் அன்புடன் பேசுவதும்....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா....

    ReplyDelete
  37. // ஸ்ரீராம். said...
    மறுபடியும் நல்ல அறிமுகங்கள். மறுபடியும் எங்கள் ப்ளாக் பிரயோகம் வந்ததற்கும் நன்றி. பதிவர்களை அறிமுகப்படுத்துமுன் சொல்லப் பட்ட கருத்துகள் யாவும் அருமை. இந்த வாரத்தை சிறப்பாக, வித்தியாசமாகவே முடித்தீர்கள். வாழ்த்துகள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஸ்ரீராம்...

    ReplyDelete
  38. //இராஜராஜேஸ்வரி said...
    நிறைவான அறிமுகங்களுடன் சிறப்பான வலைச்சரப் பணிக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ..//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா..

    ReplyDelete
  39. //அம்பாளடியாள் said...
    வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் சிறப்பாக அறிமுகப் படுத்தும்
    பாங்கிற்கு !....இதில் ஒரு சில தளங்களைத் தவிர ஏனைய தளங்கள்
    யாவும் நானும் அறியாத தளங்களே அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .
    சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்கின்றேன் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கையே..

    ReplyDelete
  40. //Ranjani Narayanan said...
    மிகச் சிறப்பாக ஒரு வாரப் பணியை நிறைவேற்றி விட்டீர்கள், மஞ்சு பாஷிணி. அதற்கு முதலில் பாராட்டுக்கள்.

    அறிமுகமான பதிவர்களின் வலைபூக்களும் அவர்களது எழுத்துக்களும் ஒரு கதம்ப மாலையாக மணக்கின்றன.

    ஒவ்வொரு நாளும் ஒரு உணர்ச்சியுடன் - அன்புப் பரிமாற்றம், அறுசுவை, சிந்தனை, பொறுமை, நம்பிக்கை, கோபம், நட்பு - என்று பெயருக்குத் தக்க கதம்ப உணர்ச்சிகளுடன் விடை பெற்று இருக்கிறீர்கள்.

    நாங்களும் அதேபோன்ற ஒரு கதம்ப உணர்ச்சிகளுடன் உங்களுக்கு விடை கொடுக்கிறோம்.

    வாஷ்த்துக்கள்!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரஞ்சும்மா...

    ReplyDelete
  41. //தக்குடு said...
    நன்றியுரை வாசிச்சாச்சு போலருக்கே?? :))//

    அட ஆமாம்பா தக்குடு...

    ReplyDelete
  42. //தி.தமிழ் இளங்கோ said...
    வலைச்சரத்தின் ஏழாம்நாளில் என்னை அறிமுகப்படுத்திய சகோதரி மஞ்சுபாஷிணி (http://manjusampath.blogspot.in கதம்ப உணர்வுகள்) அவர்களுக்கு நன்றி! மற்ற சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்! இதனை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா, தனபாலன் சகோ.

    ReplyDelete
  43. //Asiya Omar said...
    நட்பு பற்றிய பகிர்வுகளும் அருமை.மிக நிறைவான அசத்தலான வாரம்..//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஆசியா உமர்.

    ReplyDelete
  44. //
    செய்தாலி said...
    நல்ல அறிமுகங்கள்

    ஏற்றெடுத்த பணியை சிறப்பாய் செய்து முடித்த தோழி அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் செய்தாலி சகோ.

    ReplyDelete
  45. //kovaikkavi said...
    பணி சிறப்பற முடித்தீர்கள் மிக மிக அருமையாக நடத்தினீர்கள்.
    இன்று சமையலும் பிரமாதமாக மணக்கிறது.
    உங்களிற்கும், அனைவருக்கும் நல்வாழ்த்து.
    எல்லா இடுகைக்கும் செல்ல ஆசை தான்.
    நேரமின்றித்தான் உள்ளது. முயற்சிப்பேன்
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் வேதாம்மா..

    ReplyDelete
  46. //பால கணேஷ் said...
    ஒரு வாரம் இனிமையாகச் சென்றது. செம்மையாக பணிசெய்து எங்களுக்கு நல்லறிமுகங்கள் பல தந்தீர்கள். நட்பும் என்றும் (முடிவில்லா) தொடர்கதைதான் தோழி. உங்களுக்ககு என் நல்வாழ்த்துக்கள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கணேஷா..

    ReplyDelete
  47. //தொழிற்களம் குழு said...
    நல்ல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்,..,

    வலைச்சரத்திற்கும் வாழ்த்துகள்!!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

    ReplyDelete
  48. //Avargal Unmaigal said...
    ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும். உங்களின் கரங்களால் இந்த வாரம் வலைசரம் மிக அழகாக ஜொலித்தது என்றால் அது மிகையாகது. மிக நேர்த்தியுடன் செய்த உங்கள் பாங்கு மனம் நிறைய வைத்தது. வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் தளத்தில் உங்களை நிழல் போல தொடர்ந்து வருகிறேன்//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

    ReplyDelete
  49. //ராதா ராணி said...
    அன்பு மஞ்சு.
    வலைசர ஆசிரிய பணியின் 7-வது நாளான இன்று பதிவின் தொடக்கம் நட்பை பற்றிய தங்களின் விளக்கம்,விரிவான கருத்து மிக்க அருமை .நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை .ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையை கொடுக்கும் .அழகான பதிவு. நன்றி தோழி.
    இன்றைய அறிமுகத்தில் என் வலைபூவை அறிமுகமப்படுத்தியதற்க்கு மக்க நன்றி .அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும்
    வாழ்த்துக்கள் .//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ராதாராணி சகோ.

    ReplyDelete
  50. //துரைடேனியல் said...
    என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி சகோ. அருமையாக வலைச்சரம் தொடுத்தமைக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளோடு!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

    ReplyDelete
  51. //துரைடேனியல் said...
    இன்றைய அறிமுகங்கள் அத்தனையும் சும்மா 'நச்' 'நச்'! வாழ்த்துக்கள்!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் துரை சகோ.

    ReplyDelete
  52. //மதுமதி said...
    இன்றைய அறிமுகங்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்கிறேன்.இந்த வாரம் முழுவதும் சிறப்பானதொரு ஆசிரியப் பணியாற்றி சிறப்பான அறிமுகங்களைத் தந்து இப்பணியிலிருந்து ஓய்வு பெறும் அன்பு அன்பு அன்பு சகோதரிக்கு அன்பு அன்பு அன்பு சகோதரனின் நன்றிகளும் வாழ்த்துகளும்..நற்பணி.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மதுமதி...

    ReplyDelete
  53. //வல்லிசிம்ஹன் said...
    எதிர்பாரார்ப்பு இல்லாமல் என்னிடம் நட்பு கொண்டாடும் மனக்கள் தான் அதிகம் இங்கே மஞ்சுபாஷிணி. அதில் நீங்களும் ஒருவர் என்பதும் எனக்குத் தெரியும்.தனபாலனும் அப்படியே. மாதேவியும் அப்படியே.எப்படி ஒன்று சேர்ந்தோம் என்பதே என்வியப்பு. என் பட்ஜிவையும் என் சககால்ப் பதிவர்களையும் அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். மனம் நிறைய மகிழ்ச்சி பெருகி ஓடுகிறது. இந்த அன்பு எப்போதும் நிலை பெறட்டும்.
    வாழ்த்துகள் கண்ணா.//

    நல்ல உள்ளம் என்னை வாழ்த்தி ஆசி கூறுகிறது. என்றும் நிலைத்திருக்கும் அம்மா.... மனம் நிறைந்த அன்புநன்றிகள்.... எத்தனை அன்பாக அழைக்கிறீர்கள் கண்ணா என்று, கேட்கவே மனம் மகிழ்வாய் இருக்கிறது அம்மா..

    ReplyDelete
  54. //Ramani said...
    எத்தனை கடுமையாக முயன்றிருந்தால்
    இத்தனை சிறப்பாக ஆசிரியர் பணியை
    முடித்திருக்க முடியும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது
    பதிவில் தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்கள்//

    என் ஒவ்வொரு வரியும் எண்ண ஓட்டங்களையும் படம் பிடித்திருப்பதை துல்லியமாக கண்டுப்பிடித்து எழுதி இருக்கும் ரமணி சாருக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

    ReplyDelete
  55. // Lakshmi said...
    ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக நிறைவு செய்த்தற்கு வாழ்த்துகள். இன்றைய அறிமுகங்கள் அனைவருமே தெரிந்த முகங்கள்தான் அனைவருக்கும் வாழ்த்துகள்//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்‌ஷ்மிம்மா..

    ReplyDelete
  56. //angelin said...
    /எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்/

    but accept your friend the way they are..

    நட்பு ,நம்பிக்கை ....மிக மிக அழகா சொல்லியிருக்கீங்க மஞ்சு .
    பதிவர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திய விதமும் superb!!!.

    இந்த வாரம் முழுவதும் வலைச்சரப்பணியை செவ்வனே நடத்தி வந்திருக்கீங்க ..வாழ்த்துகிறேன் ..பாராட்டுகிறேன் //

    நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்ளும் நட்பை சொல்லி காமிக்காது என்றும் அதே அன்புடன் மாறாது இருப்பது தான் நேர்மை நட்பு....

    உண்மையே நிர்மலா அக்கா சரியாவே சொன்னீங்க :)

    நம் அன்பும் நிலைத்திருக்கும் கண்டிப்பாக...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் நிர்மலா அக்கா..

    ReplyDelete
  57. //வெங்கட் நாகராஜ் said...
    சிறப்பான வலைச்சர ஆசிரியர் பணி இன்றோடு நிறைவுற்றதே என்று வருத்தமாக இருக்கிறது.

    இன்று அறிமுகம் செய்யப்படவர்களில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரையும் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி....

    தொடர்ந்து தங்களது தளத்தில் அசத்த வாழ்த்துகள்....//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் வெங்கட்...

    ReplyDelete
  58. //அப்பாதுரை said...
    ராதாஸ் கிச்சன் தவிர பிற பதிவர்களைப் படித்திருக்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.

    கீதா சாம்பசிவம் அவர்களின் கற்பனையில் மெருகேற்றப்படுகிறது என்பது புராணக்கதைக்குக் கிடைத்த புத்துயிர். மிகவும் ரசித்துப் படிக்கும் பதிவுகளில் ஒன்று. இங்கே இடம்பெறுவது நிறைவாக இருக்கிறது.

    சிறப்பான வலைச்சரப் பணிக்குப் பாராட்டுக்கள்.//

    உண்மையே அப்பாதுரை.. ஈடுபாட்டுடன் ரசனையுடன் செய்யப்படும் எதுவுமே ரசிக்க மிக அழகாகவே இருக்கும்.. கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டமும் மீனாட்சி அவர்களின் பின்னூட்டமும் நான் உங்கள் வலைப்பூவில் ரசித்து வாசிப்பதுண்டு...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா..

    ReplyDelete
  59. அன்பு மஞ்சுபாஷணி, அருமையாக எதிர்ப்பார்ப்பு இல்லாத நட்பே நட்பு என்று கூறி, அருமையான வலைத்தளங்களை குறிப்பிட்டு வெகு சிறப்பாய் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்த பணியை மிகசிறப்பாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பூங்கொத்துக்கள்.
    நேற்று வெளியில் போய் விட்டதால் வரமுடியவில்லை.
    நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களை வாசித்து வருகிறேன்.
    என்று நட்புகளுடம் மகிழ்ந்து இருங்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  60. எனது வலைதளம் மற்றும் பதிவுகளை அருமையாக எடுத்துரைத்துள்ளமைக்கு நன்றிகள். சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.தங்களின் உழைப்பை வலைச்சரம் & பதிவுலகத்தால் மறக்கமுடியாது.நெட்வொர்க் பிரச்சனை இப்பதான் தொடர்பு கிடைத்தது.தெரியப்படுத்திய சாருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  61. அருமையான அறிமுகங்கள். தங்கள் பணி சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  62. ந‌ட்புட‌னான‌ வ‌லைச்ச‌ர‌ அறிமுக‌த்துக்கு ம‌கிழ்வான‌ ந‌ன்றிகளை ச‌ம‌ர்ப்பிக்கிறேன் ம‌ஞ்சு... அறிவித்த‌ தோழ‌ர் த‌ன‌பால‌ன் அவ‌ர்க‌ளுக்கும் என‌து ந‌ன்றி! ந‌ல்ல‌ ப‌ல‌ அறிமுக‌ங்க‌ள் த‌ங்க‌ளால் எங்க‌ளுக்கு.

    ReplyDelete
  63. சின்னு ரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி கூறுகின்றேன்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    பல அறிமுகங்களை அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது