07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 1, 2009

வலைச்சரத்தில் முருவின் ஐந்தாம் பதிவு.




தமிழன் இல்லாத நாடில்லை., ஆனால்


தமிழனுக்கென்று தனியே ஒரு நாடில்லை.




தமிழ்நாட்டிற்கு வெளியே அதிகப்படியான தமிழர்கள் வாழும்நாடுகளில் மலேசியாவுக்கு மூன்றாவது இடம். மலேசிய நாட்டை உருவாக்கியதில் தமிழர்களுக்கு பெரும்பங்குண்டு.



ஆனால் இன்று மலேசியாவில் தமிழர்கள் தமிழ் படிப்பதற்கு பல தடைகள் உண்டு. அந்தவிதத் தடைகளைத் தாண்டியும் நல்ல தமிழினை பேசும் நண்பர்களைச் சந்திக்கும் போதோ, அவர்களின் எழுத்தை படிக்க நேரும் போதும் மனதுக்குள் பொங்கும் இன்பத்திற்கு அளவே இல்லை.



எனவே இன்றய அறிமுகம் முழுக்க முழுக்க மலேசிய அன்பர்கள் மட்டுமே.


*********************************************

கவித்தமிழ்



கிருஷ்ணமூர்த்தி எனும் மலேசிய நண்பர் எழுதும் கவித்தமிழ் பதிவினைப் பற்றி பார்க்கலாம். கவிதைகள் மேலான ஆர்வத்தால் கவிதைகளை மெட்டுப்போட்டு, சரணம், பல்லவி, அநுபல்லவி பிடித்து அழகாக எழுதுகிறார்.

வரமா சாபமா..?



என்ற இடுக்கையில் குழந்தை நமக்கு வரமா, சாபமா என கேட்டு எழுதியதில், வார்த்தைகள் அத்தனையும் இன்றய நவீன உலகின் அவலத்தை எளிய தமிழில் எழுதியுள்ளார்.

*******************************************







தோழி து. பவனேஸ்வரி எழுதும் இந்த பதிவில் கவிதைகளும், தொடர்கதையும் சிறப்பாக உள்ளன.



கவிதைகளில் நட்பு, காதல், சோகம், தன்முனைப்பு என பலதளங்களில் பொங்கிப் பிரவாகம் எடுக்கின்றது தமிழ்.



தொடர்பு கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. தலைப்பைத் தொட்டு கணைகளுக்குச் சென்று அவசியம் அனைத்து இடுக்கைகளையும் படித்து இன்புற கேட்டுக்கொள்கிறேன்.




********************************************************************************

நினைவெல்லாம்





யார் எழுதுகிறார் என்ற விபரத்தினை இடுக்கைகளில் காணவில்லை..



எழுதுவது, எழுதியது எல்லாம் காதல், காதல், காதல் கவிதைகள் மட்டுமே. ஆனால் அத்தனையும் அருமை.




**********************************************************************************




கண்டிப்பாக எல்லோரும் வாசிக்கவேண்டிய பதிவர்களை அறிமுகம் செய்து உங்களிடமிருந்து விடைப்பெறுவது உங்கள்

அப்பாவி முரு

7 comments:

  1. சந்தடி சாக்குல தமிழ்க் கடவுளக் கண்ல காண்பிச்சதுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  2. அண்ணே நானும் மலேசியன் தானே. என்னலாம் கண்டுக்க மாட்டிங்களா?

    ReplyDelete
  3. ஐந்தாம் நாள் வலைச்சர ஆசிரியர் பதிவுக்கு வாழ்த்துகள்.

    கவித்தமிழ் - அருமையான கவிதைகள். சமீபமாக நட்பு பற்றி ஒரு கவிதை.. 4 வரிக் கவிதையில் அர்த்தங்கள் ஆயிரம்.
    // உலக

    வரைபடத்தில்

    மலேசியா..

    ஒரு,

    சிறு புள்ளி

    என்றிருந்தேன்..

    இன்று..

    உன் பிரிவில்தான்

    அதன்

    பரப்பளவு

    புரிகிறது

    எனக்கு..?! //

    கணைகள் - காதல் கவிதைகள் - காதல் பிரிவின் வலி - சொல்ல வார்த்தைகளே இல்லை. அருமையான கவிதைகள்.

    ReplyDelete
  4. நினைவெல்லாம் - இன்றுதான் பார்த்தேன். காதல் கவிதைகள் மிக அருமையாக எழுதியிருக்கின்றார்.

    அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல

    ReplyDelete
  5. விடைபெறுவதா - ஐந்தாம் நாளேவா - எப்படி - இன்னும் இரு நாட்கள் உள்ளன - அன்பின் முரு - வருகிறா ஞாயிறு இரவு 8 வரை எழுதலாமே !

    ReplyDelete
  6. தெரியாதவங்களை சொல்லியிருக்கிங்க!
    நன்றி

    // VIKNESHWARAN said...

    அண்ணே நானும் மலேசியன் தானே. என்னலாம் கண்டுக்க மாட்டிங்களா?//

    சூரியனுக்கு எதுக்குன்னே டார்ச்சு!

    ReplyDelete
  7. //விடைபெறுவதா - ஐந்தாம் நாளேவா - எப்படி - இன்னும் இரு நாட்கள் உள்ளன - அன்பின் முரு - வருகிறா ஞாயிறு இரவு 8 வரை எழுதலாமே !//

    கண்டிப்பாய்.
    தற்காலிக விடை தான்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது