07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 4, 2009

முதல் மரியாதை


ஆச்சு! இந்த மே மாசம் நாலாந் தேதியோட வலைப் பூ எழுத ஆரமிச்சு ஒரு வருசம் ஆச்சு! செரியா ஒரு வருசங் கழிச்சு இண்ணைக்கு அதே மே 4ஆம் தேதி வலைச் சரப் பொறுப்பு!
நெம்ப நாளா சீனா கேட்டுகிட்டே இருந்தாரு. ’வலைச் சரம் ஆசிரியரா இருங்க’னு. இப்ப வேண்டாம் உண்ணொருக்காப் பாப்பமனு தப்பிச்சுகிட்டே இருந்தேன். வலைச் சரம் ஆசிரியரா ஒரு வாரம் இருக்குறதுல எனக்குச் சில சங்கடங்க இருந்துச்சு.

மொதோக் காரணம்.... எனக்கு முந்தி இதுக்கு ஆசிரியரா இருந்தவிங்க பட்டியல்ல இருந்த சில பேரு! இவிங்கல்லாம் ஆசிரியரா இருந்த எடத்துல நாம எப்படி இருக்குறதுனு ஒரு ஓசனை….. அவ்வளவு பெரியவிங்க அவிங்க!

ரண்டாவது காரணம் இதுல வலைப் பதிவருங்கள அறிமுகம் பண்ண வேண்டியிருக்கும். நம்பளுக்குப் பின்னூட்டம் போடறவிங்க, போன்ல பேசுறவிங்க, ஈமெயில் அனுப்புறவிங்க, நேர்ல பாத்தவிங்களத் தவிர வேற ஆரு ப்ளாக்கையும் நாம படிக்கிறது கெடையாது. அவிங்கள்ள முக்காவாசிப் பேர அல்லாத்துகும் ஏற்கனவே தெரியும். வலைச்சரம் ஆசிரியரானதுக்கப்பறம் அதுல எழுதறதுக்கோசரம் அல்லாரோடைய ப்ளாக்குங்களெல்லாத்தையும் படிக்க நேரமுஞ் சிக்காது. படிக்கவும் முடியாது. படிச்சா லேசா அஜீர்ணமாவும் ஆயிரும்.

மூணாவது காரணம், ’தமிழ்மணம் நச்சத்திரமா இருந்தப்போ எனக்குப் புடிச்ச சில ப்ளாகருங்களப் பத்தி எழுதியாச்சு. புதுசா என்ன இருக்கு எழுதறதுக்கு?’ அப்படிங்குற ஓசனை வேற.

நாலாவது காரணம் அரசியல், க்ரூப்பிஸம், சினிமா இதெல்லாம் நம்பளுக்கு லேசா அலர்ஜி. அதனால இப்பவே க்ளியராச் சொல்லிப்போட்றன். பதிவர அறிமுகப் படுத்துனா அவிங்களோட எல்லாப் பதிவையும் சிபாரிசு பண்றேன்னு அர்த்தமில்ல. எனக்குப் புடிச்ச மாதிரி சில பதிவுகள் இருக்கு. அவ்வளவுதான். சரியா? குறிப்பா அரசியல் பத்தின அவிங்க பார்வைக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. ரைட்?

சரி! மார்ச் வேலைகளும் முடிஞ்சாசா? லேசா ஃப்ரீ டைமுங் கெடைச்சுதா? அதனால வலைச் சரத்துக்கும் ஆசிரியரா இருந்து பாத்தர்லாம்னு சம்மதம் சொல்லிப் போட்டேன்.

நம்பளுக்கு நெம்பப் பேரத் தெரியாதுங்குறதால தெனோம் ஒண்ணு அல்லது ரெண்டு பதிவருங்களப் பத்தி மட்டும் எழுதுறேன். சரியா?

மொதோ மொத நா சொல்ல விரும்புறவரு

வடகரை வேலன்.

பதிவர் வட்டத்துல இவர அண்ணாச்சி அப்படினு அன்போட அழைப்பாங்க. ஏற்கனவே பரவலா அறியப்பட்டவருதான் இவரு. இவருகிட்ட எனக்கு நெம்பப் புடிச்ச விஷயம் வட்டார வழக்குல – குறிப்பாத் திருநெல்வேலி நடையில நெம்ப அழகா எழுதுவாரு.

நகைச்சுவை, நையாண்டி இதெல்லாம் கலந்து கட்டுரைகளிலும் வெளாசுவாரு. கவிதையிலும் நல்ல ஈடுபாடு இருக்கு. மித்தவிங்க எழுதின தரமான கவிதைகளை அறிமுகம் செய்வாரு. ஆனாலும் கவிதையெல்லாம் நெம்ப எழுதிப் பயப்படுத்தமாட்டாரு.

சிறுகதை மாதிரியும் சிலது அப்பப்ப எழுதுவாரு. ‘கதம்பம்’ அப்படினு ஒரு தலைப்பை ஒரிஜினலா இவரே கண்டு புடிச்சு அதுல பல விஷயங்களையும் எழுதிகிட்டு வர்ராரு.

தனது குடும்பத்தார் மேல பிரியம் பொங்க இவரு எழுதுன ரண்டு மூணு பதிவுங்கள நெம்ப விஸ்காப் படிப்பேன்.

நான் பிளாக் எழுத ஆரமிச்ச காலத்தில அடிக்கடி பின்னூட்டம் போடுவாரு. “எந்தக் கோஷ்டியிலயும் ஐக்கியமாயிராதீங்க. கொம்புசீவிங்க கிட்டச் சாக்கிரிதி” அப்படினெல்லாம் புத்திமதி சொல்லியிருக்காரு. இதைப் புதுசாப் பதிவெழுதுற அல்லாரும் நாபகம் வெச்சுக்கோணும்கிறது என்ர ஆசை. (அவரும் நாபகம் வெச்சுக்குறதும் நெம்ப நல்லது.)

நண்பர்கள் மேல நெம்ப மதிப்பு வெச்சிருக்கிறவரு.

கோயமுத்தூர் ரேஸ்கோர்ஸ்ல ஒரு இலக்கிய மீட்டிங் நடக்குதுனு(ம், அங்க கலந்துக்கிறவிங்களுக்கு மீட்டிங் முடிஞ்சதும் குடுக்கிற டிப்பன் நெம்ப நல்லாருக்கும்னும்) கேள்விப்பட்டு நானும் பழ. சந்திரசேகரனும் சாயங்காலம் காப்பியுங்கூடிக் குடிக்காம வெறும் வகுத்தோட கூட்டத்துக்குப் போயிட்டோம். போகறதுக்கு முந்தி அண்ணாச்சி வடகரை வேலனுக்கும் போன் பண்ணி அங்க வரச் சொல்லியிருந்தேன். வந்தாரு.

என்ர மீசைய வெச்சு அடயாளங் கண்டுபிடிச்சு வந்து பேசுனாரு. நெம்ப நாளு பழகுனவரு போலப் பேசுனாரு. நிதானமாப் பேசுனாரு. நெம்ப டீப்பா விஷயங்கள அலசுனாரு. நெம்பப் பண்பாடு மிக்கவரு. எனக்கு நெம்பப் புடிச்சுப் போச்சு!

அடிக்கடி போன் பண்ணிப் பேசுவேன். ப்ரமோஷனுக்கப்புறம் அதிகமா டச் இல்ல. கொஞ்ச நாளைக்கு முந்தி அவரும் வேற சில பதிவருங்களும் நான் இருக்குற எடத்துக்கு வந்திருந்தாங்க. கேள்விப்பட்டு முறிஞ்ச காலோட நொண்டி நொண்டி அவிங்களப் பாத்துப் பேசுனேன். தலையில உருமாலையெல்லாங்கட்டி அண்ணாச்சி வித்தியாசமான கெட்டப்புல இருந்தாரு.

அண்ணாச்சி வடகரை வேலன் அவிங்களோட பிளாக் அட்ரஸ் :
http://vadakaraivelan.blogspot.com/

அட! சொல்ல மறந்திட்டனே!

நான் போட்டுக்குற சொக்காய் பத்தியும், நகைகள் போட்டுக்கிறதப் பத்தியும், ராவுடி பண்றவன்னும், என்னையக் கர்வம் மிக்கவன்னும், பெண்பித்தன்னும், நாலு பேரு இருக்குற எடத்துல என்னையவே அல்லாரும் மதிக்கோணும்னு நான் நெனைக்கிறவன்னும், ஆரையும் நான் மதிக்கிறதில்லைனும், வயசானதால எனக்குப் புத்தி பேதலிச்சுப் போயிருச்சுன்னும், நான் ஒரு கழுதைனும் என்னைய விமரிசிச்சு அவரு எழுதின கட்டுரையோட லிங்க் இதோ!
http://vadakaraivelan.blogspot.com/2009/02/blog-post_06.html

அல்லாரும் இந்தப் பதிவைப் படிச்சுப் பயன் பெறணும்னு கேட்டுக்கறேன். இந்தப் பதிவு ’குங்குமம்’ இதழிலும் வந்திருக்கு. (குங்குமத்தில வெளிவர்ரதுக்கு நான் எதுவும் பண்ணலை. நெசமாங்க. நம்புங்க! ஹி!ஹி!)
******************************************************************

23 comments:

  1. வாழ்த்துகள்!
    வலைத்தளத்தில் ஒரு வருடகாலமாக எழுதிவருவதற்கும், வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கும்...

    ReplyDelete
  2. குடந்தை அன்புமணி!
    வலைசரத்தோட 1000மாவது இடுகை இதுங்கிறதையும் சேத்துக்கோங்க

    ReplyDelete
  3. //நான் பிளாக் எழுத ஆரமிச்ச காலத்தில அடிக்கடி பின்னூட்டம் போடுவாரு. “எந்தக் கோஷ்டியிலயும் ஐக்கியமாயிராதீங்க. கொம்புசீவிங்க கிட்டச் சாக்கிரிதி” அப்படினெல்லாம் புத்திமதி சொல்லியிருக்காரு. இதைப் புதுசாப் பதிவெழுதுற அல்லாரும் நாபகம் வெச்சுக்கோணும்கிறது என்ர ஆசை. //

    சரியான அட்வைஸ்தான் சொல்லியிருக்காரு...

    ReplyDelete
  4. வாவ்! 1000 பதிவா! வாழ்த்துகள்! தோழரே வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. குடந்தை!
    அய்யோ! வலச் சரத்தோட 1000மாவது பதிவுங்க. என்ரதில்ல.

    ReplyDelete
  6. 1000 பதிவுகள் எழுதி இருக்கீங்களா? ஜனரஞ்சகப் பத்திரிகைல எழுதறதா சொல்லி அறிமுகப்படுத்தி இருந்தாங்களே. உங்களுடைய புத்தகம் ஏதாவது வெளிவந்தது இருக்கிறதா?

    தியோடார் பார்ஸ்கர் மற்றும் ராமன் எழுதிய அச்சரேகை தீர்வுரேகை என்ற இரு புத்தகங்கள் மட்டும் தான் என்னிடம் உள்ளன. வேறு நல்ல புத்தகம் இருந்தால் யோசனை சொல்லுங்களேன் வனத் துறை சம்மந்தமாக.

    ReplyDelete
  7. வலைசரத்தோட 1000மாவது பதிவு.
    என்னோட இடுகைகள் 250தோ என்னமோதான்
    “வனங்களில் வினோதங்கள்” அப்படினு
    விகடன் பிரசுரம் புத்தகம் ஒண்ணு சமீபத்தில பாத்தேன். நீங்களும் பாருங்களேன்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  9. // அரசியல் பத்தின அவிங்க பார்வைக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. ரைட்? //

    writeங்க.

    ஆயிரம் பதிவெழுதிய (?)அபூர்வ சிந்தாமணி வாழ்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துகள்!
    வலைத்தளத்தில் ஒரு வருடகாலமாக எழுதிவருவதற்கும், வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கும்...

    ReplyDelete
  11. வாங்க லதானந்த் மாமா !!

    நீங்கள்லாம் வந்து எழுதினாத்தே வலைச்சரத்துக்குமு பெருமை.... என்னங் நாஞ் சொல்றது?

    ReplyDelete
  12. வலைச்சரம் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்.

    ஆரம்பமே அட்டகாசம்.

    ReplyDelete
  13. அட்டகாசமான் ஆரம்பம்(உள்குத்து+அரசியல்....மற்றும் இன்ன பிறவும்). ம்ம்ம்ம்ம் தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  14. வாழ்த்துகள் வாத்யாரே. ( அதானுங்க.. ஆசிரியரு)..:)

    ReplyDelete
  15. அன்பின் லதானந்த்

    வலைச்சரத்தின் 113 வது ஆசிரியர்

    994 வது இடுகை - இதனைச் சேர்த்து ( நான் சொல்ற கணக்குச் சரியா - தப்பா ?)
    1000 வது இடுகை - தங்களின் இடுகையாகத்தான் இருக்கும்.

    வலைப்பூ - பதிவு ஆரம்பித்து முதலாம் ஆண்டு விழா கொண்டாடுபவர்

    அண்ணாச்சிய அறிமுகம் செஞ்சிருக்கீங்க - காரணம் அவர நெம்பப் பிடிக்குமா

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  16. ஆரம்பமே அதிரடியா இருக்கே!

    அந்த பதிவுல என்னோட பின்னூட்டம் பார்த்திங்களா!

    எங்களுக்கும் வழி விடுங்க அங்கிள்!

    ReplyDelete
  17. வாழ்த்துகள்.
    வலைத்தளத்தில் ஒரு வருடகாலத்தில் மீண்டும் இவ்வார ஆசிரியரானதுக்கு

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் .ஒருவருட பங்களிப்பிற்கு தகுந்த பலன்.வடகரை வேலன் பற்றிய பதிவில் என்ன ஒரு மென்மை.நன் நெஞ்சு தான்.

    ReplyDelete
  19. // “வனங்களில் வினோதங்கள்” அப்படினு விகடன் பிரசுரம் புத்தகம் ஒண்ணு சமீபத்தில பாத்தேன் //

    இந்த புத்தகம் எழுதியவர் பேர் சொல்லுங்க.

    புத்தகம் வாங்கணும்.

    ReplyDelete
  20. பழமைபேசி, திரட்டி, துளசி கோபால், மகேஷ், ராகவன், சிவக்குமரன், சஞ்சய்,
    நன்றி

    கார்த்திக்! மற்ற கமெண்டுகளைப் பார்க்கவும்

    சீனா! புள்ளி விவரங்களை அள்ளி விட்ருக்கீங்க.

    வால்பையன்!
    எந்தப் பதிவில? திரு. சீனா அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். வலைச் சரத்தின் ஆசிரியர் பொறுப்பைக் கூடிய சீக்கிரம் திரு. வால்பையனுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பதிவுகளும் அவரு நல்லாப் போடுவாரு.

    டொக்டர்!
    நாங்கல்லாம் டாக்டர்னுசொல்லுவோம். டொக்டர்ங்கிறதும் கதைக்க நல்லா இருக்கு

    ஞாபகம் வருதே!
    எனக்கா நன்னெஞ்சு?

    வெயிலான்!
    புத்தகத்தின் பேர் சொன்னால் போதும்! தரம் எளிதில் விளங்கும். புத்தகத் திருவிழாவில அந்தப் புத்தகத்தை வாங்கிட்டிங்களாமே?
    ஓ! சமீப காலப் பதிவுலக வழக்கப்படி புத்தகம் வாங்கிறதோட சரியா? எழுதுனவிங்க பேரையாச்சும் படிங்க அப்பு!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது