07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 28, 2009

தி க்ரேட் பட்டினத்தார்

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன்? கச்சியேகம்பனே!

வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே

ஊற்றைச் சரீரத்தை யாபாசாக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற்து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே



இதை படிக்கும்போது என்ன என்னவோ தோணுதா, இல்ல எதுவுமே தோணலையா. சரி போகட்டும். எனக்கு சித்தர் பாடல்கள்னா ரொம்பப் பிடிக்கும், அதுலயும் நமக்கு ரொம்பப் பிடிச்சவர் தி க்ரேட் பட்டினத்தார். பட்டினத்தார்னு சொன்னவுடனே சிலர், பலருக்கு தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்ற வாசகங்கள் நினைவுக்கு வரலாம்.

மேற்சொன்ன பாடல்கள் அவர் எழுதியவற்றில சில, படிக்கும்போதே பிரிச்சுப் படிச்சோம்னா எளிதில் பொருள் விளங்கிடும். நல்ல வேளையா இவங்கள்லாம் இந்த காலத்துல இல்லை, இருந்ததிருந்தாங்கன்னா ஸ்ரீலகஸ்ரீ சுவாமிகளா ஆக்கிட்டிருப்பாங்க.

நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துது, ஏன் திடிர்னு இப்படின்னு கேட்கறவங்க கீழ இருக்குற இந்த ரெண்டு வலைப்பூவையும் படியுங்க,

என்னோட தேடலில், இவங்க ரெண்டு பேர் வலையிலதான் நான் சித்தர் பாடல்களைப் பார்த்தேன், அதுல திரு. சிவமுருகன் நீலமேகம் என்பவர் நல்ல விரிவா, பொழிப்புரையே கொடுத்திருப்பார். அடுத்ததா ஜகதீஸ்வரன் என்பவருடைய இந்த வலைப்பூ


என்னோட தேடல் இதோட முடியவில்லை, சிலரோட வலைப்பக்கங்கள்ல இருந்து நாம தெரிஞ்சிக்காத தெரிஞ்சிக்கலாம், அப்படி புரியும்படி சொல்லியிருப்பாங்க

அதுல ஒன்னு சந்திரவதனாவோட மகளிர் வலைப்பூ

குழந்தை வளர்ப்புக்கான பேரண்ட்ஸ் க்ளப்

பூந்தளிர் தீஷூ அம்மாவோட இந்த வலைப்பூ (மாண்டிசோரி கல்வி முறையினை இவங்க பொண்ணுக்கு மட்டும் சொல்லித்தரமா, தீஷூ மூலமா நமக்கும் சொல்லித்தருவாங்க.

பிறகு மழலைகளுக்கான மழலைகள்.காம் இந்த வலைப்பூ 2007 க்குப் பிறகு வலைத்தளமா மாறிடுச்சு போல, நீங்க அங்க க்ளிக்கினாலே இத கண்டுபுடிச்சிரலாம்.

அப்புறம் அம்மாக்கள் வலைப்பூ, ஆரம்பத்துல நாலு பேரோட மாத்திரம் ஆரம்பிச்ச இந்த வலைப்பூ இப்ப கிட்டத்தட்ட 12 அம்மாக்களை இணைச்சு வெச்சிருக்கு.
இதுல இருந்தும் நிறைய தெரிஞ்சிக்கலாம், குறை மாத குழந்தை வளர்ப்புல இருந்து, குழந்தைகளுக்கு தரும் உணவு முறைகள், அவர்களுக்கான புத்தகங்கள்,
ஆக்டிவிட்டீஸ் இப்படி நிறைய. இப்படி ஒரு வலைப்பூவுக்கு பிள்ளையார் சுழி போட்ட சந்தனமுல்லைக்கு நன்றிகள்

தேடல் தொடரும்

நட்புடன்
அமித்து அம்மா

15 comments:

  1. அம்மாக்களின் வலைப்பூக்கள் படித்திருக்கிறேன்.

    சித்தர் பாடல்கள் இருக்கும் வலைபூக்கள் சென்றதில்லை.

    ( காரணம் மண்டையில் மசாலா பத்தாது )

    ReplyDelete
  2. வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
    தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
    மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
    ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே

    அருமை அமித்து அம்மா மீண்டும் ஞாபகப்படுத்தியதுக்கு

    ReplyDelete
  3. என்னோட தேடலில், இவங்க ரெண்டு பேர் வலையிலதான் நான் சித்தர் பாடல்களைப் பார்த்தேன், அதுல திரு. சிவமுருகன் நீலமேகம் என்பவர் நல்ல விரிவா, பொழிப்புரையே கொடுத்திருப்பார். அடுத்ததா ஜகதீஸ்வரன் என்பவருடைய இந்த வலைப்பூ


    இப்படி கூட எழுதறாங்களா

    அறிமுகத்திற்கு நன்றி மா

    ReplyDelete
  4. நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அம்மாக்களின் வலைப்பூ மட்டுமே படித்துள்ளதாக நினைக்கின்றேன்

    மற்றவை பிறகு பார்க்கின்றேன்

    ReplyDelete
  6. நல்ல அறிமுகத்துக்கு நன்றிகள் பல! :-)

    ReplyDelete
  7. அமிர்தவர்ஷினி அம்மா!
    joy of sharing is joy of giving ! (who said?)
    great to read..Add more your experience

    VS Balajee
    (father of Nisha and Ananya) !

    ReplyDelete
  8. அமிர்தவர்ஷினி அம்மா!
    joy of sharing is joy of giving ! (who said?)
    great to read..Add more your experience

    VS Balajee
    (father of Nisha and Ananya) !

    ReplyDelete
  9. சித்தர்கள் விசயத்துல எனக்கும் கொஞ்சம் ஆர்வம் உண்டு! ஆனா இந்தமாதிரி பாட்டெல்லாம் படிச்சது இல்ல! மேல உள்ள பாட்டுக்கு கூடவே தமிழ்ல விளக்கம் கொடுத்து இருக்கலாம்!!! ;;)))

    ReplyDelete
  10. வலைச்சர ஆசிரியருக்கு நான்காவது நாள் வாழ்த்துக்கள்...

    //பட்டினத்தார்னு சொன்னவுடனே சிலர், பலருக்கு தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்ற வாசகங்கள் நினைவுக்கு வரலாம்.//

    ம்...எனக்கும் அந்த நினைவு தான் வந்தது...

    உங்கள் தேடலும் வாசிப்பு அனுபவமும் ஆச்சரியப் பட வைக்கிறது அமித்து அம்மா...

    இங்கு கொடுத்திருக்கும் அனைத்து வலைப் பூக்களும் எனக்குப் புதியவை நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பார்க்கிறேன்...

    ReplyDelete
  11. /*தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்ற வாசகங்கள் நினைவுக்கு வரலாம்.
    */
    சித்தர் பாட்டு-- வித்யாசமான அறிமுகம். அறிமுகங்களுக்கு நன்றி

    ReplyDelete
  12. நான்காம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  13. சித்தர்கள் விசயத்துல எனக்கு அதிக ஆர்வம் உண்டு!

    தேடல்களிலும் ஈடுபட்டதுண்டு, தேடல் இன்னும் தேடலில் தான் இருக்கின்றது. பார்க்கலாம் என்று நிறைவு வரும் என்று.

    ReplyDelete
  14. உங்களுடைய எழுதும் முறை படிக்க சரளமாக அழகாக இருக்கிறது. குழந்தைகள் வளர்ப்பு பற்றி எழுதப்பட்ட பதிவுகளை அறிமுகப்படுத்தியது அருமை. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் படிக்கிறேன்.

    "இசையால் வசம் ஆகா இதயமெது?" பதிவில் தமிழ்நதியின் 'பாடல்கள் திறக்கும் பலகணிகள்' பக்கத்திற்கு தவறாக இணைப்பைக் கொடுத்துள்ளீர்கள்.

    நிறைய பின்னூட்டங்கள் கொடுத்துள்ளார்கள். உண்மையிலேயே படித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறார்களா. நீ முந்தியா இல்லை நான் முந்தியா என்று போட்டி போடுகிறார்களா?

    ReplyDelete
  15. ஹைய்யா... சித்தர் பாடல்கள் தொடுப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி!

    எனக்கும் இந்த மாதிரி தமிழ் பாடல்கள் மிகவும் பிடிக்கும் :)))

    நம்ம பக்கத்தை சொன்னதற்கும் நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது