07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 5, 2009

(ஒளி ஓவியம் படைத்தவர் நந்து, F/o, நிலா இண்ணைக்கு வனவிலங்குக்கணக்கெடுப்பின்போது)

இப்ப நான் சொல்லப் போறது திருமதி.ஷைலஜா பத்தி. இவிங்களும் எனக்குப் பின்னூட்டம் போட்டது மூலமா அறிமுகமானவிங்க. மொதல்ல ஆம்பிளைனு நெனைச்சேன். அப்புறமாப் போன்ல பேசுனாங்க. பெங்களூர்ல இருக்காங்க.

நான் வெண்பாப் போட்டி ஒண்ணு வெச்சிருந்தேன். அதுல ரண்டாவது ப்ரைஸ் வாங்கினாங்க. அதுக்கு ஒரு வெப் கேமிரா பரிசாக் குடுக்ககத் தீர்மானிச்சு வாங்கியும் ஆச்சு. நேர்ல சந்திக்கிறப்போக் குடுங்கனு சொன்னாங்க. நேர்ல போன வாரம் சந்திக்க ஏற்பாடாச்சு. அதுக்குள்ள வேற அவசர வேலைகள் குறுக்க வந்து பயணத்த ஒத்தி வெச்சாச்சு.

அடுத்த மாசம் எடை குறைப்புக்காகவும் யோகா பயிற்சிக்காகவும் கோபிக்கு வர்ரன்னு சொல்லியிருக்காங்க. அப்ப நேர்ல பாக்கலாம்னு முடிவாயிருக்கு. பாப்பம். நானும் அவிங்களோட அந்தக் கோர்சில சேந்து எடையக் கொறச்சு யோகா கத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

இவிங்களும் ஒரு பலமான இலக்கியப் பின்னணியுள்ள குடும்பத்திலேருந்து வந்தவிங்க. நெம்பக கதை கட்டுரை கவிதையெல்லாம் எழுதுவாங்க. நெம்ப டமாசா எழுதுவாங்க. இவிங்க மைசூர்ப்பாகு கட்டுரை நெம்ப ஃபேமஸ்.

இலக்கியம், ஆன்மிகம், சமையல், மையல் இப்படி எல்லா சப்ஜக்ட்லயும் பூந்து வெளையாடுவாங்க. மயில், மான் இதுகளைப் பத்தி வெலாவரி பண்ணுன கட்டுரை எனக்கு நெம்பப் புடிச்சது. நச்சத்திரப் பதிவரா நெம்ப ’நன்னா’ எழுதியிருந்தாங்க.

விளம்பரங்களுக்குக் குரல் குடுத்திருக்காங்க. டெலிவிஷன் டாக் ஷோவுல கலக்குவாங்க. (talk show வுங்க!)

சமீபத்துல குடும்பநாவலில் இவிங்களோட ”காத்திருக்கிறேன் வா”ங்கிற நாவல் வந்திருக்கு. நெம்ப நல்லா இருக்கு. படிங்க. எல்லா வார இதழ்களிலும் இவரது கதை கட்டுரைகளைக் கேட்டு வாங்கிப் போடுறாங்க. ஓவியம் போன்ற fine arts களிலும் ஆர்வம் உள்ளவிங்க.

நெம்ப நல்லாப் பாடுவாங்க. குறிப்பா, ”துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” அப்படினு அவிங்க பாடுவாங்க பாருங்க. நெம்ப நல்லாருக்கும்.

திருமதி ஷைலஜா அவிங்களோட வலைப் பூ முகவரி :

http://shylajan.blogspot.com/

லதாகிட்ட ஒருக்கா ஷைலஜாவுட இசைத் திறமை பத்திச் சொல்லிட்டு, “ஏங் கண்ணு! நீயும் எதாவது பாட்டுப் படியேன்?” அப்படினு கேட்டேன்.

லதாளுக்கு நெம்ப சந்தோஷமாயிருச்சு.

கல்லாட்டம் ஆடுறப்போ ஒண்ணு, ரண்டு, மூணு எண்ணிட்டே கல்ல மேல போட்டுப் புடிக்கிறப்போ அதப் பாட்டாப் படிச்சிட்டு ஆடுவமே! அதப் பாடுட்டுமாங்?”

”பாடு! பாடு!”

“ஒண்ணுலருந்து அஞ்சு வரைக்கும் மறந்து போச்சுங். ஆர்லெருந்து பத்து வரைக்கும் பாடுட்டுமாங்?”

“செரி ஆத்தா!”

லதா குரலெடுத்துப் பாட ஆரமிச்சா!

”ஆறெட்டுக் கோரட்டு - கோரட்டுக் கச்சேரி
ஏளக் கண்ணாட்டி - எங்க பண்ணாட்டி
எட்டாச்சிக் கோட்ட - தும்பலப் பேட்ட
ஒம்பாச் சம்பா - சமைச்சாத் திம்பா
பத்தர சித்தர சாமிக்குச் - சித்தர மாசந் தெரட்டி!”

காதுல தேனீ பாஞ்ச மாதிரி இருந்துச்சு!
*****************************************************************

8 comments:

  1. ஹையோ சாமீ. லதாம்மா பாட்டப் படிச்சூட்டு,கடேசில உங்க வரியையும் படிச்சுட்டு சிரி சிரின்னு சிரிச்சேனுங்க.இதுதான் கோயம்புத்தூர் குசும்புங்கறதாங்கோ.

    ReplyDelete
  2. லதாக்காவ வம்புக்கு இழுக்காம எழுத முடியாத??

    ReplyDelete
  3. நன்றிங்க////ரொம்ப அதிகமா புகழ்ந்து எழுதிட்டீங்க...நைசா மைசூர்பாக்கையும் இழுத்திட்டீங்க....:0 வரவர ஷைலஜான்னாலே மைசூர்பாக்கும் சேர்ந்து வந்துடுது!! உங்க மனைவியின் பேச்சே பாட்டாக இருக்கும் பொழுது தனியா பாடணுமா என்ன? அவங்களை கேட்டதா சொல்லுங்க.
    நன்றி லதானந்த்...வலைச்சரத்துல என்னை அறிமுகம் செய்து கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்திட்டீங்க...சாதாரண ஷைலஜாதான் நான்,

    ReplyDelete
  4. ஹ்ம்ம்ம்ம்..

    ReplyDelete
  5. ஷைலஜா அக்காவை பற்றிய பதிவு மிக அருமை.

    ReplyDelete
  6. /
    Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    ஹ்ம்ம்ம்ம்..
    /

    என்ன ஆப்பீசர் கணைக்கிறீங்க????

    ReplyDelete
  7. முத்துவேல்!
    எது? பாட்டா இல்ல பஞ்ச்சா?

    மயில்!
    நேர்ல பாத்தப்பவே கேட்ருக்கலாமே?
    சரி முதுமலைல மறுக்காவும் பாப்பமில்ல! அப்பக் கேட்ருங்க

    ஷைலஜா!
    லதாளோட பேச்சே பாட்டா இருக்கும்கிறீங்க. வாஸ்தவமான பேச்சு!
    அடிக்கடி பாட்டுக் கேக்கிறவனுக்கல்ல தெரியும்?!
    சரி! எப்ப கோபி வந்து உடல் இளைச்சு யோகா பண்றது. சீக்கிரம் சொல்லுங்க?

    சஞ்சய்! சிவா!
    நன்றி

    சஞ்சய்க்கு வந்திருக்கிறத EPS அப்படினு மெடிக்கல் டெர்ம்ஸ்ல சொல்லுவோம்.

    ReplyDelete
  8. பாட்டு கோவை வழக்கில் இயல்பானது.பஞ்ச் தானுங்கோ குசும்பு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது