மகளிர் மட்டும்
சமீபத்தில எழுத வந்தாலும் தனித் தனிமையோட எழுதுறவிங்க மயில். கோயமுத்தூர்க்காரவிங்க.
அரிசியும் பருப்பும் சாதம்னாலும், பழைய நண்பர்களைப் பற்றி எழுதுறதுனாலும், காட்டமான சினிமா விமர்சனம்னாலும் அந்தத் தலைப்புக்கேத்தபடி சடார்னு நடையும் சொற் பிரயோகங்களும் மாறுது. இனிமையான் இளமையான் நடை. கொஞ்சம் முயற்சி பண்ணுனா இவிங்க ஜனரஞ்சக எழுத்தாளராவது உறுதி. சிறுகதை எழுத முயற்சிக்கலாம். சிறுகதை டிஸ்கஷனிலும் ஆர்வம் உள்ளவிங்க.
மயில் வீட்டுக்குப் போயிருந்ந்தப்போ மெயில் செக் பண்றதுக்காக கம்ப்யூட்டர் பக்கம் போனேன். மௌசில் இடது வலது பட்டன்களை மாற்றிப் பயன்படுத்தும் அளவுக்குப் புதுமை விரும்பி.
தக்காளிச் சந்தகை, தேங்காச் சந்தகை, இனிப்புச் சந்தகைனு அசத்திட்டாங்க. அருமையான சமையல்!
இவிங்க வலைப்பூ :
http://mayilviji.blogspot.com/
சின்ன அம்மிணி
இவிங்களும் கோயமுத்தூர்க்காரவிங்கதான். ஊட்டுக்கார அய்யன் உலகம் சுத்துற வாலிபன்(?) அதனால இவிங்களுக்கும் வெளிநாடுகள் நல்ல பரிச்சயம்.
நல்லாக் கட்டுரை எழுதுவாங்க. நேர்ல பாக்கிற மாதிரி இருக்கும் படிக்குறப்போ.
தண்ணியடிச்சவிங்களக் கம்ப்பேர் பண்ணி போட்டோ போட்ருக்காங்க நல்லாருக்கு. நான் படிச்ச நேரம் அந்தப் பதிவு ரெண்டு ரெண்டாத் தெரிஞ்சது. சிறுகதை ஒண்ணை என் பார்வைக்கு அனுப்ச்சாங்க. சில திருத்தம் பண்ணினேன். அரண்டு போயிட்டாங்க.
ஆன்மீகம் பத்தியும் அள்ளி விடுவாங்க. படிங்க. இவிங்க வலைப்பூ : http://chinnaammini.blogspot.com/
சிந்து சுபாஷ் : கோவை மாவட்டத்துக்காரங்க.
இப்ப அரபு நாடுகளிலே ஒண்ணில இருக்காங்க. எழுத்தும் அழகு. இவிங்களும் நெம்ப அழகு. ஒரு தேர்ந்த வர்ணனையாளரோட நேர்முக வர்ணனை மாதிரி இருக்கும் இவரோட எழுத்து. குறிப்பா ஒரு விழாவை இவிங்க ஆர்கனைஸ் பண்ணும்போது ஏற்பட்ட சிரமங்கள நேர்ல பாக்குற மாதிரி விவரிப்பாங்க. தயிர்சாதமும் காப்பியும் பதிவு மழைச் சாரலில் லேசா நனைகிற உணர்வை ஏற்படுத்தும். அறிவுப்பல் மொளச்சு அவதிப் பட்டதால பதினஞ்சு நாளா எங்கூடப் பேசலை. இண்ணைக்குத்தான் வலி செரியாயிப் பேசுனாங்க.சரியான குறும்பு.
http://sindhusubash.blogspot.com/ இவிங்களோட வலைப் பூ
விக்னேஷ்வரி
கோவையில கல்லூரியில படிச்சு வேலையிலும் இருந்திருக்காங்க.
இவிங்க எழுத்தோட சிறப்பு என்னன்னா தன்னோட நாட்குறிப்பக் கூட மத்தவங்களோடது மாதிரி சொல்லுவாங்க. புரியற மாதிரி சொல்ல முயற்சிக்கிறேன். பொதுவா வலைப்பூ என்பதையே பெரும்பாலும் நாட்குறிப்பு மாதிரி நெம்பப் பேரு எழுதிகிட்டிருக்காங்க. செம போரடிக்கும். ஆனா விக்னேஷ்வரியோட சில நாட்குறிப்புக்களப் படிங்க. நெம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.
குறிப்பா இவிங்க திருமண விழா வைபவங்களை ஆனந்தம் கொப்புளிக்க இயல்பா விவரிப்பாங்க. ஓட்டலுக்குப் போயிச் சாப்பிடுறதை இவ்வளவு சுவையா ஆரும் சொன்னது கெடையாது.
என்ன... லேசா மேல்தட்டு வர்க்கச் சாயல் எழுத்துக்களில் தென்படுவதைத் தவிர்க்கலாம். மத்தபடி விக்கிக்கு எழுத்துலகில் நல்ல பிரகாசமான வாய்ப்பிருக்கு.
http://vigneshwari.blogspot.com
இன்னும்
சந்தனமுல்லை http://sandanamullai.blogspot.com/
மாதங்கி http://clickmathangi.blogspot.com/
உஷா http://nunippul.blogspot.com/
உமா சக்தி http://umashakthi.blogspot.com/
நிர்மலா http://nirmalaa.blogspot.com/
லஷ்மி http://malarvanam.blogspot.com/
மங்கை http://manggai.blogspot.com/
மெஹருன்னிஸா
சுமதி
தமிழரசி http://ezhuthoosai.blogspot.com/
ஜீவா http://jeevaflora.blogspot.com/
இவிங்களப் பத்தியெல்லாம் தனித் தனியாச் சொல்லணும்னு குறிச்சு வெச்சிருந்தேன். அவசர அழைப்பு வயர்லெஸ்ல. அதனால பதிவை இதோட முடிச்சுக்கிறேன்.
இன்னும் உயிர்த் தோழி ஆரையாச்சும் குறிப்பிடாம உட்ருக்கேனா? அப்படியிருந்தா மன்னிசிருங்கோ! வேணும்னு ‘பண்ணி’ யிருக்கமாட்டேன்.
வலைச் சரத்தை ஆரமிச்சவரு அனுராக் அப்படிங்கிற சிந்தாநதினு கேள்விப்பட்டேன். அவருக்கும் என் நன்றி. ஆமா! அவரு இப்ப எங்கிருக்காரு?
இறுதியாக வலைப் பதிவர்களுக்குச் சில வேண்டுகோள்கள்.
தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.
உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.
குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.
அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.
பதிவர்களைச் சந்தித்துப் பேசவும் தொலைபேசியில் பேசவும் காசை விரயம் செய்யாதீர்கள்.
உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் - பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.
நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.
என்னை வலைச் சரம் கோர்க்கப் பணித்த திரு.சீனாவுக்கு நெம்ப நன்றி! விடைபெறுகிறேன்!
(கேள்வி பதிலுக்குக் கேக்க மறந்திராதீங்க!)
**********************************************************************************
|
|
அண்ணாச்சி,
ReplyDeleteவணக்கம். இதுவரைக்கும் நான் உங்க பதிவ படிச்சு இருக்கேன்னாலும் இதுவரை பின்னூட்டமிட்டதில்லை. ஆனா பாருங்க இன்னைக்கு போட வச்சுட்டீங்க. மத்ததெல்லாம் விடுங்க கடைசீல கொஞ்சம் அறிவுரை சொன்னீங்க பாருங்க. கலக்கீட்டீங்க. மிக்க உண்மை அண்ணாச்சி.
இந்த அடிப்படை உண்மைகளை புரிஞ்சுகிட்டா பிரச்சனைகளே இருக்காது ஆனாப்பாருங்க என்ன மாதிரி யாருன்னே தெரியாம போயிட வாய்ப்பு இருக்கு அதுக்கு மட்டும் தயாரா இருக்கணும் ;-)))
///இறுதியாக வலைப் பதிவர்களுக்குச் சில வேண்டுகோள்கள்.
ReplyDeleteதமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.
உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.
குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.
அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.
பதிவர்களைச் சந்தித்துப் பேசவும் தொலைபேசியில் பேசவும் காசை விரயம் செய்யாதீர்கள்.
உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் - பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.
நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.
///
உங்கள் பார்வையில் மிக்க சரி..
///உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.///
எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த வரிகள்தான்...
சிவக்குமரன்
அட, இவ்ளோ பெண்கள் எழுதறாங்களா? அதும் நம்மூர்க்காரங்க நெறயா பேர் இருக்காங்க போல.
ReplyDelete//இறுதியாக வலைப் பதிவர்களுக்குச் சில வேண்டுகோள்கள்.
ReplyDeleteதமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.
உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.
குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.
அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.
பதிவர்களைச் சந்தித்துப் பேசவும் தொலைபேசியில் பேசவும் காசை விரயம் செய்யாதீர்கள்.
உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் - பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.
நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.
//
மறுபடியும் பகிரங்க கடுதாசி மாரி கீதே. :))
ஆனந்தச்சித்தருக்கு என்னை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி. இத்தனை கோயமுத்தூர்க்காரவிக இருக்காங்கன்னு இப்பதான் தெரியும்.
ReplyDeleteசித்தரே,
ReplyDeleteபதிவர் கயல் எங்கே?
அன்பின் லதானந்த சித்தர், தங்களது வலைச்சரப் பதிவுகள் எனக்குக் குதூகலத்தையும், மனவெழுச்சியையும் நல்கியது. தங்களது வாசிப்பனுபவம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
ReplyDelete:))
சத்யா!சிவக்குமரன்!சின்ன அம்மிணி!
ReplyDeleteநன்றி
சஞ்சய் காந்தி!
நெம்பப் பேரு நம்மூராளுங்க எழுதுறாங்க.
விஜய்கோபால்சாமி!
உங்கள் ஆகக் காத்திரமான பின்னூட்டம் நல்ல கொண்டாட்டமாயிருந்தது.
அனானிமஸ்!
பதிவை மீண்டும் படிக்கவும்.
இத்தனை பெண் பதிவர்கள் இருக்குறாங்களா?
ReplyDeleteநன்றி லதானந்த் சார். தவறைத் திருத்த முயற்சிக்கிறேன்.
ReplyDelete