நானும் வாத்தியார் ஆகிவிட்டேன்
நான் எதோ வாய்க்கு வந்த மொக்கைகளை எழுதி பிழைப்பை ஓட்டி கிட்டு இருந்தேன்.தேர்தல் நேரத்திலே புதுசா திட்டங்களோ வேலை வாய்ப்புகளோ அறிமுகப்படுத்துக் ௬டாதுன்னு தேர்தல் ஆணையம் சொல்லி இருந்தாலும், எனக்கு ஒரு வாரத்துக்கு வாத்தியார் வேலை கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு நன்றி.நான் பள்ளி ௬டத்திலேயும் சரி, கல்லூரியிலும் சரி முன்னாடி இருக்கிற நண்பர்களையும், பின்னாடி இருக்கிற நண்பர்களையும் பார்த்து எழுதியே பழக்கம்.இப்ப செய்யுற வேலையிலும் தேடுவண்டி கூகிள் உதவியாலே அதையே தான் இன்னும் செய்துகிட்டு இருக்கேன்.
நாம்ம ஊரு சினிமா நடிகைகள் மாதிரி, நான் எழுத வந்ததே ஒரு விபத்துன்னு சொல்லி உங்களை கலவரப்படுத்த விரும்ப வில்லை.வலைப்பதிவு உலகம் இருக்குன்னு எனக்கு ரெம்ப நாளா தெரியாது, காரணம் கூகிள் ஆண்டவர் என்கிட்டே சொல்லவில்லை தேடும்போது, ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி என் கல்லூரி நண்பர்கள் மூலமாத்தான் இப்படி ஒரு விஷயம் இருகிறதே தெரிஞ்சது, அவரு கடந்த ஐந்து வருடங்களா எழுதி கிட்டு இருக்காரு.மாம்பழச்சாலை என்ற குழுப்பதிவை ரெண்டு வருடமாக நடத்தி வருகிறார், அங்கே திருகுறளுக்கு உரையும், வெண்பாக்களுக்கும் எழுதி இணைய தளம் மூலமாக தமிழுக்கு சேவை செய்து வருகிறார்.இது அவரோட சொந்த வீடு, இங்கேயும் நிறையை விசயங்கள் ரசிப்பதற்கு இருக்கு.
என்னைப் படு குழியிலே தள்ளி விட்ட பெருமை இன்னொருக்கும் இருக்கு, அவர் முகவைக்கு மண்ணுக்கு சொந்தக்கார், அது ஒரு கந்தக பூமி, தண்ணியில்லா காடு என்று சினிமாவிலே ௬றப்பட்டாலும், நல்ல மன உறுதியுள்ள நண்பனை தந்த நிலம், அவரும் நல்ல எழுத்தாளர் யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற வீட்டுக்கு சொந்தக்காரர்.
நான் கல்லூரியிலே படிச்சப்ப என்னை பார்க்க வந்த எங்க அம்மா இவரிடம் " தம்பி நசரேயனை நல்ல பசங்களோடு சேரச்சொல்லு, கேட்ட பசங்க என் புள்ளையை பீடி, சிகரட் என்று குடிக்க சொல்லி கெடுத்து புடுவாங்க" ன்னு சொன்னதும் மயங்கி விழுந்துட்டான், ஏன்னா அதுக்கு முந்தின நாள் தான் அவனுக்கு பீடி குடிக்க சொல்லி கொடுத்தேன். அன்புமணி ஐயா, தேர்தல் பிரச்சரத்திலே மும்முரமாக ஈடு பட்டு இருப்பதால் இதற்க்கு தடை விதிக்க வேண்டாம் என உத்தரவு இட்டு இருப்பதால் மேற்௬றிய சம்பவம் தணிக்கை செய்யப்படவில்லை
இப்படி உறுப்படியா நாலு விஷயம் பண்ணிக்கிற நல்லவங்க மத்தியிலே என்னை மாதிரி தமிழை பிழை இல்லாம எழுத தெரியாத உருப்படாத ஒன்னும் இருக்கு, இதை சொல்லும் போது எனக்கு இன்னொரு கொசு வத்தி வருது, வலை உலகின் பின்னூட்ட பிதாமகன் எங்கள் நைஜீரியா சிங்கம், இன்னும் அவங்க ஊரு திவிரவாதிகளாலே கடத்தப் படாத தமிழர் உருப்படாத அணிமா அவர்கள் தான் என் கடைக்கு முதல்ல வந்து போணியை ஆரம்பித்து வைத்தார். எனக்கு அவருக்கும் இடையிலே ஒரு நிரந்த வித்தியாசம் அவரு கொஞ்சம் கருப்பு, நான் அட்டு கருப்பு.
உருப்படியா எழுதிற அளவுக்கு சரக்கு ஒன்னும் என்கிட்டே இல்லை, சட்டியிலே இருந்தாதானே அகப்பையிலே வரும், அதனாலே கும்மி அடிக்கிற கும்பல் குட சேர்ந்துகிட்டு நாலு கும்மியை போட்டு காலந்தள்ளுகிறேன்.
எனக்கு மொக்கை போடுறதை தவிர வேற ஏதும் தெரியாது, இருந்தாலும் நல்லா எழுதுற ஒரு நாலு பேரை அறிமுகம் செய்வது என்பது ரெம்ப கஷ்டம், என்னை தவிர எல்லோருமே நல்லாவே எழுதுறாங்க என்பது மறுக்க முடியாத விஷயம், அதனாலே சான்றோர் நிறைந்த இந்த சபையிலே வருகிறவர்கள், தலைவர் படம் பார்க்க வருகிற மாதிரி அதிக எதிர் பார்ப்புகளோடு வரவேண்டாம், நானே கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்கி நடித்த படத்தை வலுக்கட்டாயமா படம் பார்க்க நான் காசு கொடுத்து உங்களை அழைத்த உணர்வோடு வாங்க.
நானே ஒரு பதிவு எழுதி ரெண்டு பேரை அதை படிக்க வைக்கும் குள்ளேயும் உயிரே போகுது, இன்னொரு ஒரு வாரத்திற்கு என்ன செய்யப்போறேன்னு நினைச்சா ஈரக்கொலை நடுங்குது.ம்ம் ஏதாவது தேத்திகிட்டு நாளைக்கு வாரேன்.
|
|
ஹேய் பின்னூட்ட சுனாமி எழுத வந்திருக்காரு...
ReplyDeleteஅனேகமா நிறைய புதிய பதிவர்கள் அறிமுகம் கிடைக்கும்...
தேர்தல் கால ஜூரத்திற்கும், ஸ்வைன் ஜூரத்திற்கும் மாற்று மருந்து கிடைக்கும் என நினைக்கிறேன்.
வாழ்த்துகள்
ReplyDeleteஆரம்பமே கலக்கல்! தொடருங்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் தலைவா ;)
ReplyDeleteஅண்ணே வாழ்த்துகள் !!!
ReplyDeleteகெட்ட கெனா காணாம ஒரு வாரத்துக்கு மட்டும் நல்ல கனா கண்டு எழுதுங்க :))))))))))
:-)) வாழ்த்துகள்!
ReplyDeleteவலைஞர் தளபதி, வரிஞ்சி கட்டி வகுந்தெடுங்க!! வாழ்த்துகள்!!
ReplyDeleteஆனா இப்பிடி வழக்கம் போல சொதப்பக் கூடாது பாருங்க.... வரவேற்புக்கு முன்னாடியே, இடுகை இருக்குதே?! சித்த வெளியீடு நேரத்தை மாத்தி, இடுகைய வரிசைப் படுத்துங்க!!! இஃகிஃகி!!!
ReplyDeleteதளபதி வாத்தியாரா மாறுனதுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆரம்பமே கலக்கல்!
ReplyDeleteவருக தல
ReplyDeleteமுதல் பதிவுலே அசல் அசத்திட்டேல்
உங்க எழுத்துநடை என்னை ரொம்ப கவர்ந்தது
தொடருங்கள்
நாங்க இருக்கோம் கருத்துப்போட
வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள் தலைவா
ReplyDeleteவாழ்த்துக்கள் தல!
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteதேர்தல் ஜுரத்துல கண்ணுல தெரியறதெல்லாம் கட்சி வைரஸ்கள்.
ReplyDeleteநான் அப்புறமா வருகிறேன்.சும்மா அசத்துங்க.வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்........
ReplyDeleteபாத்து பசங்கள கெடுத்துடாதீங்க வாத்தியாரே
ReplyDeleteவந்தாச்சு
ReplyDelete//நான் எதோ வாய்க்கு வந்த மொக்கைகளை எழுதி பிழைப்பை ஓட்டி கிட்டு இருந்தேன்//
ReplyDeleteஇப்பிடியா ஒபின் ஸ்டேட்மெண்ட் குடுக்குறது??
ஆ”ரம்பமே” ஜோர்
ReplyDelete//நான் பள்ளி ௬டத்திலேயும் சரி, கல்லூரியிலும் சரி முன்னாடி இருக்கிற நண்பர்களையும், பின்னாடி இருக்கிற நண்பர்களையும் பார்த்து எழுதியே பழக்கம்.///
ReplyDeleteநான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது..
நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்..
//இப்ப செய்யுற வேலையிலும் தேடுவண்டி கூகிள் உதவியாலே அதையே தான் இன்னும் செய்துகிட்டு இருக்கேன்///
ReplyDeleteகூகிளாண்டார் கைவிடமாட்டார்
//என்னைப் படு குழியிலே தள்ளி விட்ட பெருமை இன்னொருக்கும் இருக்கு,///
ReplyDeleteநாங்க இல்ல இப்போ அவதிபடுறோம்..
///இப்படி உறுப்படியா நாலு விஷயம் பண்ணிக்கிற நல்லவங்க மத்தியிலே என்னை மாதிரி தமிழை பிழை இல்லாம எழுத தெரியாத உருப்படாத ஒன்னும் இருக்கு,///
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்..
இதுக்கு என்னை நாலு அடி அடிச்சிருக்கலாம்..
//எனக்கு அவருக்கும் இடையிலே ஒரு நிரந்த வித்தியாசம் அவரு கொஞ்சம் கருப்பு, நான் அட்டு கருப்பு.//
ReplyDeleteநான் மாநிறத்துக்கும் கொஞ்சம் தான் கம்மி.. என்னை போயி கருப்புன்னு சொன்னதால வெளினடப்பு செய்கிறேன்.
/////இப்படி உறுப்படியா நாலு விஷயம் பண்ணிக்கிற நல்லவங்க மத்தியிலே என்னை மாதிரி தமிழை பிழை இல்லாம எழுத தெரியாத உருப்படாத ஒன்னும் இருக்கு,///
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்..
இதுக்கு என்னை நாலு அடி அடிச்சிருக்கலாம்..//
நான் என்னைத்தான் அப்படி சொன்னேன், உங்களை நான் அப்படி சொல்வேனா, நான் எம்புட்டு நல்லவருன்னு உங்களுக்கு தெரியும்
//வலை உலகின் பின்னூட்ட பிதாமகன் எங்கள் நைஜீரியா சிங்கம், ///
ReplyDeleteசிங்கமா?? அசிங்கம்ன்னு சொன்னா சந்தோசப்படலாம்..
எதுக்கு இப்படி மானத்த காத்துல விடுரீங்க...
அவ்வ்
///இன்னும் அவங்க ஊரு திவிரவாதிகளாலே கடத்தப் படாத தமிழர் உருப்படாத அணிமா அவர்கள் தான் என் கடைக்கு முதல்ல வந்து போணியை ஆரம்பித்து வைத்தார்.///
ReplyDeleteஅதுக்கு தான் இப்போ இப்படி அனுபவிக்கிறனோ??
//ம் ஏதாவது தேத்திகிட்டு நாளைக்கு வாரேன்.///
ReplyDeleteவாங்க வாங்க.. நானும் நாளைக்கு வரேன்
///இருந்தாலும் நல்லா எழுதுற ஒரு நாலு பேரை அறிமுகம் செய்வது என்பது ரெம்ப கஷ்டம், என்னை தவிர எல்லோருமே நல்லாவே எழுதுறாங்க என்பது மறுக்க முடியாத விஷயம்,//
ReplyDeleteஅதுல நானும் ஒருத்தனா? இல்லியா??
//தலைவர் படம் பார்க்க வருகிற மாதிரி அதிக எதிர் பார்ப்புகளோடு வரவேண்டாம்,///
ReplyDeleteஎன்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிப்புடீங்க??
நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் தலைவர் தான்
யாருமே இல்லியா??
ReplyDeleteகும்மி அடிக்க வாங்க
ReplyDelete//வலை உலகின் பின்னூட்ட பிதாமகன் எங்கள் நைஜீரியா சிங்கம், //
ReplyDeleteஇந்த சிங்கத்து இப்ப எல்லாம் என்ன ஆச்சுன்னு தெரியல
காணம போயிடுச்சு..
// முந்தின நாள் தான் அவனுக்கு பீடி குடிக்க சொல்லி கொடுத்தேன். //
ReplyDeleteயாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற குணம் உங்களுக்கு...
// இப்படி உறுப்படியா நாலு விஷயம் பண்ணிக்கிற நல்லவங்க மத்தியிலே என்னை மாதிரி தமிழை பிழை இல்லாம எழுத தெரியாத உருப்படாத ஒன்னும் இருக்கு,//
ReplyDeleteஹி...ஹி... என்னாது இது.. தம்பி இப்படி சொல்லிட்டீக...
// வலை உலகின் பின்னூட்ட பிதாமகன் எங்கள் நைஜீரியா சிங்கம், இன்னும் அவங்க ஊரு திவிரவாதிகளாலே கடத்தப் படாத தமிழர் உருப்படாத அணிமா அவர்கள் தான் என் கடைக்கு முதல்ல வந்து போணியை ஆரம்பித்து வைத்தார்.//
ReplyDeleteஓ உங்களுக்கும் அவர்தானா...
ஒருத்தர விட மாட்டார் போலிருக்கு
// எனக்கு அவருக்கும் இடையிலே ஒரு நிரந்த வித்தியாசம் அவரு கொஞ்சம் கருப்பு, நான் அட்டு கருப்பு.//
ReplyDeleteகருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு...
// நான் எதோ வாய்க்கு வந்த மொக்கைகளை எழுதி பிழைப்பை ஓட்டி கிட்டு இருந்தேன்.//
ReplyDeleteமொக்கை போட்டு வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் அவர் பின் பின்னூட்டமிட்டு செல்பவராவார்.
// நான் பள்ளி ௬டத்திலேயும் சரி, கல்லூரியிலும் சரி முன்னாடி இருக்கிற நண்பர்களையும், பின்னாடி இருக்கிற நண்பர்களையும் பார்த்து எழுதியே பழக்கம்.//
ReplyDeleteரொம்ப நல்ல பழக்கம்.
// இப்ப செய்யுற வேலையிலும் தேடுவண்டி கூகிள் உதவியாலே அதையே தான் இன்னும் செய்துகிட்டு இருக்கேன்.//
ReplyDeleteகூகுளை நம்பினார் கைவிடப்படார்.
// தேர்தல் நேரத்திலே புதுசா திட்டங்களோ வேலை வாய்ப்புகளோ அறிமுகப்படுத்துக் ௬டாதுன்னு தேர்தல் ஆணையம் சொல்லி இருந்தாலும், எனக்கு ஒரு வாரத்துக்கு வாத்தியார் வேலை கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு நன்றி.//
ReplyDeleteசீனா ஐயா அவர்களுக்கு ஒரு “ஓ” போடுங்க..
// உருப்படியா எழுதிற அளவுக்கு சரக்கு ஒன்னும் என்கிட்டே இல்லை, சட்டியிலே இருந்தாதானே அகப்பையிலே வரும், //
ReplyDeleteஇது உங்களுக்கு மட்டுமல்ல.. எனக்கும் பொருந்தும்.
\\உருப்புடாதது_அணிமா said...
ReplyDelete//என்னைப் படு குழியிலே தள்ளி விட்ட பெருமை இன்னொருக்கும் இருக்கு,///
நாங்க இல்ல இப்போ அவதிபடுறோம்..\\
இஃகி... இஃகி...
வாழ்த்துகள்...
ReplyDeleteஆரம்பமே கலக்கல்.
இதெல்லாம் ரொம்ப கொடுமை. நான் அஞ்சு வருஷமா பதிவ தொறந்து வச்சுருக்கேன்னு வேணும்னா சொல்லாலாம். கலக்கு கண்ணா கலக்கு அப்போ அப்போ வரேன்..
ReplyDelete