07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 2, 2009

வலைச்சரத்தில் முருவின் ஆறாம் பதிவு.

தங்கம்



மஞ்சள் வண்ணமட்டும் இருந்தால் போதும், அது பளபளப்பாக இருந்தாலும் சரி, பளபளப்பு கம்மியாக இருந்தாலும் சரி, இதன் மதிப்பு மற்றும் தேவை குறைவதே இல்லை. தங்கத்திற்கு மயங்காத பெண்களே(கருப்பு வெள்ளை பேதமில்லை) இல்லை எனும் அளவில் தான் சதவீதம் இருக்கிறது.


இருந்த நாகரீகங்களும், இருக்கும் நாகரீகங்களும் தங்களின் கலாச்சார அடையாளமாக தங்கத்தைத்தான் கைகாட்டுகிறார்கள். இந்து சமயத்தவர்கள் இடுப்புக்குக் கீழ் தங்கத்தை அணியாமல், தனக்கும் மேலாக தங்கத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள்.


மனிதன் தன் நடவடிக்கைகளையும் தாண்டி, அணிந்திருக்கும் தங்கத்தின் மூலமாவது சமூகத்தின் பார்வையை தன் மீது திருப்ப முயற்சிக்கிறார்கள் அல்லது ஈர்ப்பை உருவாக்கவாவது முயற்சிக்கிறார்கள்.

மனிதன் இந்தளவுக்கு மதிப்பு கொடுக்கும் முன் அந்த தங்கத்தை பிரித்தெடுக்க, அதற்கு பளபளப்பைக் கொடுக்க அதை படுத்தும் பாடு கொஞ்சமல்ல. அமிலத்தில் முக்குவதிலிருந்து, ஆயிரக்கணக்கான டிகிரிக்கும் அதிகமாக சூடுபட்டு வெளிவரும் போதுதான் அதற்கு அதீத பளபளப்பு கிடைக்கிறது.


ஆனால் எவ்வளவு சோதனைகளைத் தாண்டி வந்திருந்தாலும் உயிரற்ற தங்கத்திற்கு அதை மனிதர்கள் வதைப்பதும் தெரியாது, போற்றுவதும் தெரியாது. அப்படி ஒரு பிறவி!...


ஆனால், உடல் அல்லது மன பிரச்சனையால் போராடிக் கொண்டிருக்கும் மனிதனை, கேலிபேசிப் பேசியே முக்காலே மூணுவீசம் பேரை அழித்து, உலக வரைபடத்திலிருந்து தடம் தெரியாமல் துடைத்து எடுத்த பின் எச்சமிருக்கும் மனிதனை, போராட்டமே வாழ்க்கை என்பதை உணர்ந்து உடம்பெல்லாம் தழும்பேறிக்கிடக்கும் மிச்சத்தை, மனஉறுதியின் அடையாளம், சாதனையின் சாதனை, ஜெயிக்கப் பிறந்தவன், வெற்றியின் பிறப்பிடம் எனும் வாய் வார்த்தைகளால் போற்றுகிறதே இந்த உலகம்.

ஆனால், உடல், மன தடைகளையும் மீறி சகமனிதனின் கேலிகளையெல்லாம் தாண்டி வரும் வழியில் அந்த உயிர் படும் பாட்டை யாரறிவார்? அப்படி ஒரு பிறவி?

****************************************************************************



இனிய Positive அந்தோணி முத்து

எதையும் தெளிவாகக் கற்றுக்கொள்.
அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.
நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்...


எனும் வரிகளை தன் முகப்பாக வைத்திருக்கும் திருவாளர் அந்தோணி முத்து தான் எனது அறிமுக பதிவர்.

இவரின்,

கடவுளுக்கு ஒரு கடிதம்....!

தன்னம்பிக்கைக்கு மறு பெயர்.... தெய்வநம்பிக்கை....

மற்றும் எல்லா இடுக்கைகளும் அவருக்கு மிக முக்கியமானதோ என்னவோ, தன்னம்பிக்கை குறைந்து காணப்படுபவர்களுக்கு மிக மிக முக்கியமான ஒன்று, வரம் எனவும் சொல்லாம்.

*************************************************************


ஸ்மைல் பக்கம்

தலைப்பு தான் சிரிப்பை சொல்கிறது, வித்யாவின் எழுத்துக்களெல்லாம் அதுவல்ல.

பெயரில் என்ன இருக்கிறது

“அதில் நிராகரிப்பிற்கான காரணமாக கொடுக்கப்பட்ட பட்டியலில் அனைத்தையும் பேனாவால் அடித்துவிட்டு. ஒரு மூலையில் பென்சிலால் "இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்" என்று எழுதியிருந்தது. ” - அந்த இடுக்கையில் எடுத்தது.

திறக்காத கதவு

இந்த இடுக்கை ஒரு கவிதையைக் கொண்டது. அதற்கான விளக்கம் முதலில் கொடுக்கப் பட்டிருந்தாலும், கவிதை புரிகிறதா எனப்பாருங்கள்.

***********************************************************************



மேலே அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இரண்டு பதிவர்களையும், தமிழ் கூறும் பதிவுலகம் நன்கு அறியும் என எனக்குத் தெரியும்.

ஆனாலும், மதுரையைப் பற்றிப் பேசும் போது ”அங்க சொக்கனை விட மீனாச்சிக்குத் தான் பவர் சாஸ்தி” என சொல்வதில் பெருமையடைவதைப் போல், இந்த பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறேன்.


நன்றி கூறி தற்காலிக விடை பெருவது உங்கள்,

அப்பாவி முரு

4 comments:

  1. தங்கமா இருக்கு!

    ReplyDelete
  2. வித்யாவின் பதிவினை முன்பே படித்திருக்கிறேன். நல்ல வீச்சுடன் எழுதுகிறார். அவருடைய புத்தகம் கூட கிழக்கின் மூலம் வெளிவந்துள்ளது. மேலும் எழுதுவார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  3. அன்பின் முரு

    தன்னம்பிக்கையின் மறு உருவம் அந்தோணி முத்து.

    திருநங்கைகளின் பிரதிநிதி லிவிங்ஸ்மைல் வித்யா

    அறிமுகம் அருமை

    நல்வாழ்த்துகள் முரு

    ReplyDelete
  4. //மதுரையைப் பற்றிப் பேசும் போது ”அங்க சொக்கனை விட மீனாச்சிக்குத் தான் பவர் சாஸ்தி” என சொல்வதில் பெருமையடைவதைப் போல், இந்த பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறேன்.//

    ஒன்னும் சொல்றதுகில்லை!
    எல்லோரும் பயங்கர பூரிப்பாயிருப்பாங்க!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது