கடவுளர் தவறான உதாரணமாகலாமா?
நம் கடவுளர் எல்லோரும் ஐடியல் இல்லை. நம் நம்பிக்கையின் உச்சபட்சம் என்ன? கடவுள் சத்தியமா என்பது தானே! கடவுள் அப்படிங்கற கருதுகோள் மூலம் தானே நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழியை போதித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படிப்பட்ட கடவுளர் தவறான உதாரணமாகலாமா? தமிழ் கடவுள் என்றழைக்கப்படும் குமரன் முன்கோபக்காரன். ஒரு மாங்கனிக்காக குடும்பத்தை பிரிந்தவன். கற்பு, களவு என்று இருவிதத்திலும் மணம் புரிந்தவன்.
அவன் தந்தை ஈசனும் அப்படியே இரு மனைவி, தன்னை மதிக்காத மாமனார் வீட்டுக்கு போக கூடாது என்று மனைவியை அந்த உலக மாதாவைச் சொன்னவர். கோபம் வந்தால் மனைவியையும் சரி, உண்மைக்காக வாதாடும் நக்கீரனையும் சரி சுட்டெரிப்பவர்.
இவர் மைத்துனன் விஷ்ணுவோ ஆயிரம் நாமம் கொண்டவன், மனைவிமார்களுக்கு கணக்கே கிடையாது. ஒரு மனைவியிடம் மோதிரத்தை கொடுத்துவிட்டு முதல் மனைவியிடம் மணல்வெளியில் தொலைத்துவிட்டதாகக் கூறி மட்டையடி வாங்குபவர். இவர் ஒவ்வொரு அவதாரத்திலும் முறைமீறல்கள் ஒன்றா இரண்டா எல்லாம் சொல்லவே இந்த ஒரு பதிவு போதுமா?
பிரம்மனோ நான்கு முகம் கொண்டவர் இவருக்கும் மனைவிமார் இருவருரோ மூவரோ கதைப்படி. சரஸ்வதி,சாவித்திரி,காயத்ரி. ஆனா கும்பிடறங்கவங்க எல்லோருக்கும் போய் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அது மெய்ப்பொருள் என்று வரத்தை வாரி வழங்கி பின் அடுத்த கடவுளரிடம் போய் நிற்பது இவர் வழக்கம்.
சரி சரி அடிக்க வராதீங்க எல்லாத்தும் காரணம் இருக்கு. கடவுளர் யாரும் தவறான உதாரணங்கள் இல்லை அவர்கள் யாவரும் ஐடியல் தான்.
ஏதோ எனக்கு தெரிந்த விளக்கங்களை தர முயல்கின்றேன். மாங்கனிக்காக குடும்பம் பிரிந்த குமரன் இளைஞர்கள் தன் பெற்றோரை சார்ந்தில்லாமல் தானே தன் காலில் நிற்கவேண்டும் என்ற கருத்தை எடுத்துக்காட்டுகின்றார். கற்பு களவு மணம் மேட்டருக்கு அப்புறம் வருவோம்.
இறையனார் ஈசன் முக்காலமும் உணர்ந்தவர் தாட்சாயணிக்கு தந்தையால் அவமானம் நேரும் என்று தெரிந்தே தடுத்தார், தானென்ற ஆணவத்தால் அல்ல. இவர் கோபத்திற்கு பின்னால் தான் உணர்த்தப்பட்டது சக்தியும் சிவனும் ஒன்றென்று. அப்படிச் சுட்டெரித்த காரணத்தால் தான் தன்னில் பாதியாக சக்தியை கொண்டு அர்த்தநாரீஸ்வரர் ஆனார். நக்கீரனுக்கு நெற்றிக்கண் காட்டி தமிழுக்குகாக அவர் தன்னையும் தருவார், கடவுள் என்றாலும் தமிழை காக்க குரல் தருவார் என்ற பெருமையை தான் பெற்று தந்தார் அந்த இறையனார். இவரின் கொஞ்சு தமிழில் வந்ததல்லவா "கொங்குதேர்" என்ற குறுந்தொகைப் பாடல். இரண்டு மனைவி விசயத்திற்கு அப்புறம் வருவோம்.
விஷ்ணு கணக்கிலும் மனைவிமார்கள் பிரச்சனையை பொதுவாக எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு அவதாரத்திலும் நடந்த முறைமீறல் எல்லாமே அதர்மத்தை அதன் வழியே சென்று அடக்க தர்மத்தை நிலைநாட்டவே தான்.
பிரம்மாவின் இளகிய மனதுக்கும், "உலகில் எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகின்றதோ அங்கெல்லாம் நான் வருவேன்" என்பதன் ஊடுகோலே காரணம். "கடவுள் நல்லவர்களை சோதிப்பான் கைவிடமாட்டான் கேட்டவர்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டு, திருந்த வாய்ப்பளித்து பின் திருந்தாவிட்டால் தண்டனை தரவே" இவர் வரம் தருவார். இவர் படைக்கும் கடவுள் ஆயிற்றே. காக்கும் மற்றும் அழிக்கும் கடவுளர் தம்தம் வேலையை செவ்வனே செய்வர்.
சரி இப்போது கடவுளர்க்கு பல மனைவிகள் இருப்பதற்கு என்ன நியாயம் கற்பிக்க? அதற்கும் தர்மம் இருக்கின்றது. ஒரு நாட்டை ஆள்பவர் எல்லா துறையையும் தன் கையில் வைத்துக் கொள்ள இயலாது. அந்த அந்த துறைக்கு ஒரு எக்ஸ்பேர்ட்ஸ் வேண்டும் அவர்களை எல்லோரையும் ஒருங்கிணைத்து நாட்டை நல்ல வழியில் செயல்படுத்தலாம் நாட்டை ஆள்பவர்.
அதைப்போல்தான் சரஸ்வதி கல்விக்கும், மந்திர சக்திக்கு காய்திரியும், அந்த மந்திர சக்திக்குள் இருக்கும் ஜோதி வடிவம் சாவித்ரி என்றும் வைத்தனர் முன்னோர். அப்படியாக புத்தி சம்பந்தமான ஆளுமைக்கு சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி இவர்களின் கணவர் பிரம்ம தேவன். ஆக சரஸ்வதி, சாவித்ரி, காயத்ரி அனைவரும் புத்தி என்ற ஒரு விசயத்திற்குள் அடக்கம் அந்த வகையில் பார்த்தால் பிரம்மனுக்கு ஒரே ஒரு மனைவியின் பல பரிமாணங்களே காயத்ரி மற்றும் சாவித்ரி.
விஷ்ணுக்கு பல மனைவியர் இருப்பது போல தோன்றினாலும் அவர் அனைவரும் மஹாலஷ்மி, பூமாதேவி என்ற இருவருக்குள் அடங்கி விடுவர். மஹாலஷ்மி செல்வத்திற்கு அதிபதி. பூமாதேவி நிலம் நீர் காற்று என்ற மற்றை செல்வங்களுக்கு அதிபதி. ஆக இவர்கள் எல்லாவித செல்வங்களுக்கும் கொடுக்கப்பட்ட தனித்தனி வடிவங்களே ஆயினும் ஒரே வடிவமே. ஆகையால் விஷ்ணுக்கும் மனைவி ஒருவளே. ஏக பத்தினி விரதன் ராமன் மட்டுமல்ல எல்லா விஷ்ணு ரூபமும் அப்படியே.
சிவசக்தி வீரத்திற்கும் உடலில் அசையும் அனைத்து சக்திக்கும் அதிபதி. கங்கை உயிர்வாழ தேவையான தண்ணீர். தண்ணீரால் ஆனது தானே உடம்பும். உடல் முழுதும் ஓடும் ரத்தமும் தண்ணீர் கலவை தாமே. ஆகையால் சக்தியும் கங்கையும் இருவர் போல் தெரியும் ஒருவர்.
மேலும் கடவுளர் கணவன் மனைவி மாமன் மச்சான் என்று மனித சமுகத்தில் இருக்கும் உறவுகளோடான ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்டவர்கள். கடவுளர் தர்மம் வேறு. நம் நடைமுறையோடு பார்த்து அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் செய்யின் வீண் குழப்பமும் தேவையற்ற சிந்தனையுமே மிஞ்சும்.மீண்டும் சொல்கிறேன் கடவுள் என்கிற நிதர்சன உருவகங்கள் மூலமாகத்தான் நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழியை போதித்துக் கொண்டு இருக்கின்றோம். இவை கடவுளர் தர்மம் என்று சொல்லி நம்பிக்கை வளர்க்க வேண்டும். மேலே சொன்னது போல புத்திப்பூர்வமாக என்று நினைத்து விபரீதமாக யோசித்தால் கிடைக்கும் வெளிச்சம் பயம் தான் தரும். பின்வரும் கவிதை போல.
வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்
-- லஷ்மண்.
|
|
லஷ்மணின் கவிதை அருமை!
ReplyDeleteமாறுபட்ட பார்வை.
ReplyDeleteகடவுள் அருள் புரியட்டும்
ReplyDelete//சரி இப்போது கடவுளர்க்கு பல மனைவிகள் இருப்பதற்கு என்ன நியாயம் கற்பிக்க? அதற்கும் தர்மம் இருக்கின்றது. ஒரு நாட்டை ஆள்பவர் எல்லா துறையையும் தன் கையில் வைத்துக் கொள்ள இயலாது. அந்த அந்த துறைக்கு ஒரு எக்ஸ்பேர்ட்ஸ் வேண்டும் அவர்களை எல்லோரையும் ஒருங்கிணைத்து நாட்டை நல்ல வழியில் செயல்படுத்தலாம் நாட்டை ஆள்பவர்.//
ReplyDeleteநம்ம பிரதமரும் ரொம்ப கஷ்டப்படுவாரு, அவருக்கும் ஒரு நூறு பொண்டாட்டி கட்டி வச்சிரலாமா?
ஆணாதிக்க சிந்தனையுள்ள ஒரு களவாணிபய கண்டுபிடிச்ச கடவுளுக்கு நியாயம் வேற கற்பிக்கிறிங்களா!
நாடு எங்கேயிருந்து உருப்படும்!
பெண்கள் எங்கிருந்து முன்னேறுவது!
வாங்க சென்ஷி. நன்றி.
ReplyDeleteநன்றி நர்சிம்.
வாங்க தேனீ சுந்தர்.
வால்பையன், துறை விளக்கம் சொன்னது சரஸ்வதி, சாவித்ரி, காயத்ரி மூவரும் ஒன்று என்பதை விளக்கவே. கடவுளர் யாவரும் ஏகபத்தினி விரதர்களே. நான் எழுதி இருக்கும் புரிதலில் குழப்பத்தை தந்திருக்கும் என்று நினைக்கின்றேன். கருத்துக்கு நன்றிங்க வால் பையன்.
அருமையான விளக்கமும்
ReplyDeleteகவிதையும்
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
//கடவுளர் யாவரும் ஏகபத்தினி விரதர்களே.//
ReplyDeleteபொருட்பிழை உள்ளது
கடவுளர் யாவரும் ஏகப்பட்டபத்தினி விரதர்களே.
இது தான் சரி!
எதிலிருந்தும் நாம் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும் (நல்லவை இருந்தால்) என்ற கருத்தை இப்பதிவிலிருந்து எடுத்துக்கொள்ளலாமா?
ReplyDeleteஅடடே என்னது ரங்கனுடைய அடியாழ்வாள் (அடியாழ்வாரோட பெண்பால்) நாத்திகம் பேசுகிறாளேன்னு நினைத்தேன். கரெக்டா ரூட் பிடித்து சரியான பாதைக்கு வந்துட்ட. சொன்னது சரிதான். எல்லா கடவுளர்களுக்கும் காண்பிக்கபட்டிருக்கிற பத்தினிகள் அனைவரும் ஒரே வடிவத்தின் மாறுபட்ட உருவங்களே. பெரியவர்கள் சொல்லி வைத்த எத்தனையோ விசயங்களை தப்பாகவே புரிந்து கொள்வதை பொலவே இதையும் புரிந்து வைத்திருகிறோம். இது மிகவும் பெரிய கன்செப்ட், எழுத ஆரம்பித்தால் உன்னுடையதை போலவே கட்டுரையாக நீண்டுவிடும்
ReplyDelete