07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 26, 2009

கவிதைகள் பார்ட் II

பார்ப்பவையெல்லாம் கவித்துவமா தெரிகின்ற நமக்கு பல சமயங்களில் அதை கவிதையாக்கும் வாய்ப்பு வராது, சில சமயம் வந்திருந்தாலும் அது கவிதையாவும் இல்லாம, உரைநடையாவும் இல்லாம ஒரு ஷேப் இல்லாத ஷேப் புக்கு உள்ளாகியிருக்கும்.
இப்படி பல சமயங்களில் தோற்று சில சமயம் நம்மில் பலர் ஜெயிச்சிருப்போம்.

உரைநடைகளில் அசத்தல் பதிவெழுதினாலும், இவர்களுக்குள்ளும் கவிஞர்கள் இருக்கிறார்கள் என மெச்ச வைத்தது இதோ கீழ்க்காணும் வரிகள்.

தக்கைகள் அறிவதில்லை
நீரின் அடியாழம்;
ஒரு போதும்.

இதனை எழுதியவர் இதோ இவர்தான் அண்ணாச்சி

(மாத்தி யோசி)
”அம்பலத்தில் ஆடும் ஆதி சிவன்
தானறிவான் கால் தூக்கி ஆடி விட்டால்
அம்பிகை தோற்ப்பாள் என சும்மா
இருந்தவளை போட்டிக்கு அழைக்கவில்லை
தானே பெரிதெனும் தற்பெருமை தானடக்கி”

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர், மாத்தி யோசி என்று நம்மை சொல்லும் மிஸஸ்.தேவ்

(ஒழுகும் வானம்)
உடைந்து ஒழுகும்
வானத்தை சிறு
பாத்திரத்தில் பிடித்து
பல்தேய்த்துத் துப்புவனிடத்தில்
பிரபஞ்சத்தின் அழகியல்குறித்த
ஆலாபனை எதற்கு?

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் யாவரும் கேளிர்னு சொல்ற இவர்தான்,



ஒரு தக்கையைப்போல
காதலின் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டேயிருந்தேன்
நீ வந்தாய்,
ஒரு கல்லைப்போல
மூழ்கிப்போய்விட்டேன்.!
இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் தங்கமணி புகழ் ஆதித் தாமிரா

இவரின் பேசித்தீராத ஒன்று.! நம்மை அதிகம் பேச வைத்தது, கொஞ்சம் கவித்துவத்தோடு இருக்கும் இதையும் படியுங்கள் அவரின் இந்த வலைப்பூவில்
காதல் வெள்ளை வெளேரென்றிருக்கிறது.. காமம் அதிலிருந்து வண்ணங்களை விசிறியடிக்கிறது..





அனுபவிக்கத்தெரியாத தனிமை

உறங்கி விழிக்கையில் மேஜைமீது பரவியிருந்தது மீதமிருக்கிற மெழுகு,உண்மைதான்...அனுபவிக்கத்தெரியாத தனிமைகள் மிகக்கொடியவை!

இப்படி சொல்றவர் காதல் கறுப்பியான இவர்தான்


நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து

விழி இழந்தவனின்
கம்பு விசிறலைப்போல,
வீசி வீசி நானிறைத்த சொற்களெல்லாம்
சிதறிய அறையில்
தனிமை தியானத்திற்குப் பிறகான ஒர் கணத்தில்
தேடியபடியிருக்கிறேன்,
நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து
வெளிவர எனக்கிருக்கும்
ஒரே சாவியான சில சொற்களை-

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் சிறுமுயற்சி என்று பெருமளவில் பதிவெழுதுபவர், இவரின் சிண்ட்ரெல்லா கவிதையும் அருமை.



அது ஒரு கதைக் காலம் என்று கவிதைக்கு கூட்டிச்செல்பவர் யாருன்னு நீங்களே கண்டுபிடியுங்க

காக்கையை ஏமாற்றிய நரியும்
நரியை ஏமாற்றிய காக்கையும்
கொக்குக்கு விருந்து வைத்த ஓநாயும்
ஒநாய்க்கு விருந்து வைத்த கொக்கும்
திராட்சைக்கு ஏங்கிய நரியும்
பாட்டிவீட்டு தோட்டத்தில்
உலாவிக்கொண்டிருந்தன கேட்பாரற்று!
சன்,விஜய், கலைஞர் அலைவரிசைகளில்
கரைந்துப் போயிருந்தாள் பாட்டி!!
பஞ்ச காலத்தில்
காட்டில் தொலைத்து விடப்பட்ட
சித்திரக்குள்ளனும் அவன் சகோதரர்களும்
அலைந்துக்கொண்டிருந்தனர்...
தடயத்திற்காய் விட்டுவந்த
அப்பத்துண்டுகளைத் தேடி!!!


வேதியியல் மாற்றங்கள்

நொடிக்குநொடிக்கும் குறைவான
நமது கண்களின் உரசலில்
எனக்குள்ளே மீண்டும்
இரசாயன மடை உடைத்து
வேதியியல் மாற்றங்கள் நிகழ்த்துகின்றன
உன் நினைவுகள் ம் குறைவான
நமது கண்களின் உரசலில்
எனக்குள்ளே மீண்டும்
இரசாயன மடை உடைத்து

இப்படி கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுப்பவர் வேறு யாருமில்லை, நட்புக்கு உரியவர்தான்

23 comments:

  1. அருமையான ஃப்லோ அமித்து அம்மா.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நம்ம பேரையும் போட்டுட்டியள்

    அதுவும் பெருங்கவிகளுக்கு மத்தியில் ...

    ReplyDelete
  3. மிக அருமையான முறையில் அறிமுகங்கள்

    எல்லா சுட்டிகளையும் அவசியம் படிக்கின்றோம் அமித்து அம்மா

    ReplyDelete
  4. கவிதைகள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படியானவை.

    ReplyDelete
  5. பார்ப்பவையெல்லாம் கவித்துவமா தெரிகின்ற நமக்கு பல சமயங்களில் அதை கவிதையாக்கும் வாய்ப்பு வராது, சில சமயம் வந்திருந்தாலும் அது கவிதையாவும் இல்லாம, உரைநடையாவும் இல்லாம ஒரு ஷேப் இல்லாத ஷேப் புக்கு உள்ளாகியிருக்கும்.

    சரியா சொன்னீங்க. அதுதான் படைப்பாளிக்கும் ரசிகனுக்கும் உள்ள இடைவெளி.

    ReplyDelete
  6. காதல் வெள்ளை வெளேரென்றிருக்கிறது.. காமம் அதிலிருந்து வண்ணங்களை விசிறியடிக்கிறது..

    அருமை ஆதி.

    ReplyDelete
  7. பகிர்ந்து கொண்டுள்ள கவிதைகள் யாவும் அருமை. நன்றி அமித்து அம்மா!

    ReplyDelete
  8. நீங்கள் தொகுத்த கொடுத்துள்ள அனைத்து கவிதைகளும்
    அருமை

    வாழ்த்துகள்

    ReplyDelete
  9. பெஸ்ட் கலக்ஷன்ஸ்..

    இதுல எனக்கு தெரிந்த அனைத்தையும் வாசித்த ஞாபகம்.

    ஆமா இதுல உங்க கவிதைகள் எங்கே ??

    ReplyDelete
  10. அட இந்த வாரம் நீங்களா?

    வாழ்த்துகள்..

    அப்புறம்

    ”நேற்று முதல்

    எதை சாப்பிட்டாலும்

    லிப்ஸ்டிக் வாசனை என்றேன்.

    உனக்கு பரவாயில்லை

    எனக்கு ரத்த வாசனை என்கிறாய்”

    இதை எழுதிய ”கவிஞனை” தெரியுமா?

    ReplyDelete
  11. ஹைய்யா.. நானுமிருக்கேன். நன்றியக்கோவ்..

    ReplyDelete
  12. ”நேற்று முதல்
    எதை சாப்பிட்டாலும்
    லிப்ஸ்டிக் வாசனை என்றேன்.
    உனக்கு பரவாயில்லை
    எனக்கு ரத்த வாசனை என்கிறாய்”

    இதை எழுதிய ”கவிஞனை” தெரியுமா?
    //

    என்ன கொடும சார்.?

    ReplyDelete
  13. நல்ல தொகுப்பு! நன்றி!

    ReplyDelete
  14. ”நேற்று முதல்
    எதை சாப்பிட்டாலும்
    லிப்ஸ்டிக் வாசனை என்றேன்.
    உனக்கு பரவாயில்லை
    எனக்கு ரத்த வாசனை என்கிறாய்”

    இதை எழுதிய ”கவிஞனை” தெரியுமா?
    //

    என்ன கொடும சார்.?//

    :)))

    ReplyDelete
  15. அமிர்தவர்ஷினி வலைச்சரத்திற்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிறது. உங்களுடைய 'முன்கதை சுருக்கம்' அழகாக இருந்தது. நீங்கள் அறிமுகப் படுத்திய கவிதைகளும் அருமை. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நெம்ப சூப்பருங் அம்முனிங்கோவ்.....!!!!

    ReplyDelete
  17. அனைத்தும் அற்புதமான கவிதைப் பக்கங்கள்... ஆனால் கவிதை பக்கங்கள் பற்றி முழுவதும் எழுதினால் உங்களுக்கு ஒரு பதிவென்ன ஒரு வாரமும் போதாது...

    அவ்வளவு அழகிய கவிதைப் பக்கங்கள் சிதறிக் கிடக்கின்றன...

    உங்களால் இயன்ற அளவு அருமையான பக்கங்களை இங்கே அளித்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  18. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  19. சூப்பர் அமித்து அம்மா வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. அருமையான சுட்டிகள். தொடருங்கள்

    ReplyDelete
  21. நல்லாருக்கு பதிவு!! ஆனா என்னை அவ்வாக்கிட்டீங்களே..நான் எழுதினதையும் கவிதைன்னு சொல்லி!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது