07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 30, 2009

கொசுவத்தியும், விமர்சனமும்

நினைவுப் பகிர்தல் என்பது சில சமயம் நெகிழ்ச்சி, பல சமயம் நெகிழ்ச்சி. சென்றதினி மீளாது மூடரே என்பதறிந்தும் நடந்தவற்றை அசைபோடுவதில் தப்பேதுமில்லை. அப்படி படிச்சதுல எனக்குப் பிடிச்சது

துளசி தளத்தில் தொடர்ச்சியாக 15 பாகங்கள் வெளிவந்த “அக்கா”, அதுல பூக்கட்டுறத பத்தியும், வீடு மெழுகறத பத்தியும், பாம்பு அடிச்சத பத்தியும் சொல்லியிருப்பாங்க. அட அட அட. டீச்சர்னா சும்மாவா?

அடுத்ததா, அமுதா என் வானத்தில் தன் மாமனாரைப் பற்றி பகிர்ந்து கொண்ட இந்த நினைவுப் பகிர்வு

கோபம்,பயம் இப்படின்னு நவரசங்களையும் பற்றி பதிவெழுதி,பிறகு புறாக்களையெல்லாம் ஃபோட்டோ புடிச்சு (PIT)க்கு தயாராகி வரும் கத்தார் சிங்கத்தின் இந்த தந்தையர் தினப் பதிவு

புத்தக விமர்சனம் - புத்தகங்களைப் பற்றி யாராவது விமர்சனம் யாராவது எழுதி அது என் கண்ணில் பட்டு நான் படிக்க ஆரம்பிச்சேனா, நான் இருக்கறது ஆபிஸ்னு கூட மறந்துடுவேன், முதலில் அந்த புத்தகத்தையும், அதன் எழுத்தாளர் + பதிப்பகத்தின் பெயரையும் குறிச்சு வெச்சுப்பேன், பிறகு வாங்குறதுக்கு எளிதாக இருக்குமில்ல.


இப்படி புத்தகவிமர்சனத்தைப் பற்றி சொல்லும் வலைப்பூக்கள்


இவள் என்பது பெயர்ச்சொல் என்று சொல்லும் உமாஷக்தி (புத்தக விமர்சனம் மட்டுமல்லாமல் வேற்றுமொழி திரைப்படங்களையும் அழகாக விமர்சிக்கிறார்) இவரின் புத்தக விமர்சனத்தைப் படித்தபின் நான் வாங்கிய புத்தகம் நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது என்ற தமிழ்நதியின் சிறுகதைத் தொகுப்பு.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபின் என்ன சொல்ல?
வார்த்தைகளை நம் நடையில் சொல்லிவிட்டுப்போய்விடலாம் ஆனால் வலியை???

மேலும் இவரின் அணில்குட்டியும், சக்திவேலும், நானும் என்ற பதிவில் நடந்த நிகழ்வை அருமையாக வார்த்தைகளாக வார்த்திருப்பார்

வடகரை வேலன் அவர்களின் நூல் நயம் என்ற இந்த வலைப்பூவும் . கண்மணி குணசேகரனின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்திய வலைப்பூவில் இதுவுமொன்று.

முகமூடிக் கவிதைகள் மற்றும் புனைவுகள் என்று எழுதி அசத்தும் கிருத்திகாவின்விஷ்ணுபுரம்” நாவலின் விமர்சனம்.

கிருஷ்ண பிரபு என்பவருடைய இந்த வலைப்பூ

அரசூர் வம்சம் விமர்சனம் குறித்த Bee' Morgan னின் இந்தப் பதிவு

பதிவெழுத நமக்கு மேட்டர் இல்லையேன்னு நெனைக்கறப்ப சரியா ஏதாவது ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டனுப்புவாங்க. அப்படி வழக்கொழிந்த தமிழ்சொற்கள் என்று ஒரு தொடர்பதிவு புழக்கத்திலிருந்த போது, நிறைய பேர் நல்லா எழுதினாங்க. அதுல எனக்கு ரொம்பப் பிடிச்சது திகழ்மிளிரோட இந்தப் பதிவு

7 comments:

  1. ஆறாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. துளசி டீச்சர் பற்றி எல்லோருக்கும் நல்லா அறிமுகமுண்டு.

    மற்ற அனைத்து சுட்டிகளையும் படிச்சிடறோம்

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. இவள் என்பது பெயர்ச்சொல் என்று சொல்லும் உமாஷக்தி (புத்தக விமர்சனம் மட்டுமல்லாமல் வேற்றுமொழி திரைப்படங்களையும் அழகாக விமர்சிக்கிறார்)

    உண்மைதான். இவரின் விமர்சனம் படித்தால் அது சினிமாவாக இருந்தால் கண்டிப்பாகப் பார்க்கத்தூண்டும், புத்தகமாக இருந்தால் படிக்கத்தூண்டும். இவர் நுணுக்கமாய் கவனிக்கும் சில விஷயங்கள் அதன் படைப்பாளிக்குக் கூட புதிதாய்த் தோன்றும். அத்தனை அழகு.

    வெற்றிகரமான ஆறாம் நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவெழுத நமக்கு மேட்டர் இல்லையேன்னு நெனைக்கறப்ப சரியா ஏதாவது ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டனுப்புவாங்க.//

    சரி சரி நீங்க கொஞ்சம் பேமசான பதிவர்தான் ஒத்துக்கிறேன்

    ReplyDelete
  5. துளசி டீச்சரோட அக்கா பலரையும் அடுத்தது எப்ப வரும்னு காத்திருக்க வைச்சிருந்துது

    ReplyDelete
  6. பொதுவா பழைய நினைவுகளை பத்தின பதிவுகள் படிக்க சுவராஸ்யமாக தான் இருக்கும்!
    அந்த மாதிரி பதிவுகளா பார்த்து! பட்டியல் இட்டதற்கு நன்றி !

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது