07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 17, 2010

பெண்கிழமை. மூன்றாவது நாள், புதன்

இன்று பெண்பதிவர்கள், சும்மா பெண்பதிவர்கள் என்றுச் சொல்லிவிட முடியாது. என் எழுத்தில், என் வளர்ச்சியில் எங்காவது ஒரு பங்கை ஒளித்துவைத்திருக்கும் இவர்கள், என் நண்பர்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், நன்றி.

 கலகலப்ரியா அறிமுகம் தேவையில்லாத பெண், கலகலப்ரியா. பாரதியின் பரம விசிறி, ரெளத்திரம் மட்டுமே பழகிக்கொண்டிருக்கும்  பயங்கரவாதி, இது இவருடைய ப்ரொபைலில் உள்ள வாசகம். இவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இதன் வீரியம் தெரியும். ஈழத்தமிழரின் நிலையை, அவரது பால்ய அனுபவங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இங்கே படிக்கவும். கவிதை, கட்டுரை என பல தளங்களில் இயங்கி வந்தாலும் இவரது சிறப்பு, கவிதைகள், அதன் மொழி. பெரும்பாலும் இவருடைய பதிவுகளை காட்டிலும் பின்னூட்டத்தில் நிறைய பேசுவார்.


அனுராதா   எங்க ஊர் பொண்ணு. நல்ல தோழி. தோழி என்கிற பெயரிலேயே எழுதிவருகிறார். இவங்களும் எங்க ஊர்தான் என்று சொல்வதில் ஒரு சந்தோஷம் கிடைக்குமே அந்த மாதிரியான நபர். நிறைய படிக்கிறார், நிறைய பிரயாணிக்கிறார். என் பொறாமைக்குரிய தோழி. இவரது கவிதை பெரும்பாலும்  எவரும்  எளிதில் தொட தயங்கும் விஷயங்களை அழகாக தொட்டுச்சென்றிருக்கும்.  நான் சந்தித்த மிக தைரியமான பெண்களில் இவரும் உண்டு. வாழ்த்துக்கள், அனு. இவருடைய எழுத்துக்களுக்கான உதாரணம், பிய்ந்து தொங்கும் பொம்மை, துளிர்க்கும் இலை மற்றும் தேநீர் அருந்தும் நினைவுகள்


விக்னேஷ்வரி விக்கி என்கிற விக்னேஷ்வரி தன்வி கண்ணா, கணினி துறையில் பணிபுரிகிறார். சமீபத்தில் இவரது சந்திப்புக்கு பிறகே இவரை வாசிக்க தொடங்கியிருக்கிறேன். குறைவாக வாசித்திருந்தாலும் இவரது எழுத்து பிரம்மிக்கும்படியாகவே இருக்கிறது. குறிப்பாக நட்பு பற்றிய இவரது புரிதலும் அது சார்ந்த கவிதைகளும் மிகவும் அருமை. இவர் வெகுசமீபமாய் புதிதாக நிறம் மாறாத மனிதர்கள் மற்றும் ஆண், பெண்களுக்கான ஆடை வடிவமைப்பு குறித்தும்  இரண்டு தொடர்பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்,  வெகு ஆர்வமாய் அடுத்தபதிவுக்காக காத்திருக்கிறேன், விக்கி. தொடரும் அன்பின் நிழல் , தொலைந்த நாட்கள்


தமிழ், இவரது இயற்பெயர் தெரியவில்லை. தமிழ்கூடு என்ற தலைப்பில் பதிவெழுதிவருகிறார். வெகுசமீபமாகவே இவரது பக்கங்களை பார்த்தேன். மைக்கேல் ஜாக்சன் பற்றிய இவரது இந்தபதிவுதான் இவரை தொடர்ந்து வாசிக்கச் செய்த்து. இவரது எழுத்து வெகு இயல்பாக இருக்கிறது. மேலும் இவரது பட்டாம்பூச்சி பற்றீய இந்தபதிவும் அன்பின் பிரதிபளிப்பு. நிறைய புத்தகங்கள் படிப்பதும் சினிமா பார்ப்பதும் தனது பொழுதுபோக்கு என்று சொல்லும் இவரின் எழுத்துக்களில் அதன் பாதிப்பு நிறையவே தெரிகிறது. ஆனால் வெகு குறைவாகவே எழுதுகிறார் என நினைக்கிறேன். நிறைய படிங்க, பாருங்க, பகிர்ந்து கொள்ளுங்கள். தோழி. வாழ்த்துக்கள்.


 உதிர்ந்தமலர்கள்  கனிமொழி, என்னுடைய வறுபுறுத்தலுக்கு பின் எழுத வந்தவர்கள். நிறைய படிக்கவும் எழுதவும் விருப்பமுள்ள பெண். எழுத்தின் ஆரம்ப நிலையில் இருக்கும் இவருக்கு நல்ல எழுத்து கைகூடும் நாள் விரைவில். இன்று இங்கு வலைசரத்தில் சில நல்ல பதிவுகளை தேர்வு செய்ய எனக்கு மிகவும் உதவியாய் இருந்தவர்களில் இவரும் ஒருவர். பொதுவாக தன் அனுபவங்களையே சுவாரஸ்யமான பதிவுகளாக எழுது வருகிறார், உதாரணம் மரகதம் தந்த முத்துபொங்கல்


 காகிதஓடம். திருமதி.பத்மா,  இவர்களின் பதிவறிமுகமும் வெகு சமீபத்தில் நடந்த ஒன்றுதான். கவிதைகள் மட்டுமே எழுதுகிறார்கள். அடிக்கடி ‘அட’ போடவைக்கும் எழுத்துக்களுக்கு சொந்தகாரர். கவிதை சுலபமாக வருகிறது மேடம் உங்களுக்கு, தொடருங்கள். வாழ்த்துக்கள். இவரது கவிதைத் தோரணங்களில் சில பூக்கள், எப்படி இயலும், ஒற்றைமீன்.


இன்னும் இவர்கள்போக  நான் ஒரு கொரியபடத்திற்கு விமர்சனம் எழுதும்போது வேறு யாராஅவது எழுதியிருக்கிறாஅர்களா என்று தேடப்போக அறிமுகமான ரசிக்கும்சீமாட்டி, சத்தமே இல்லாம இருந்து திடீர்ன்னு வந்து அழகா எழுதுறிங்க என்று சொல்லிவிட்டுபோகும் ஆழிமழை,  என்னடா இவங்களை நம்ம பக்கம் காணோமே என்று தேடும்போது, நல்ல பதிவுகளுக்கு தவறாமல் வந்து வாழ்த்துக்களுடன் பூங்கொத்தும் கொடுக்கும் அன்புடன் அருணா மேடம் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

இருந்தாலும் எதுக்கும் ஒரு அளவிருக்கில்லையா? அதானால இதோட நிறுத்திக்கிறேன். பெயரை மறந்துவிட்ட தோழிகள், மன்னியுங்கள்.  நாளையும், நாளை மறு நாளும் என் விருப்பமான இரண்டு விஷயங்கள். எங்க கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

20 comments:

  1. டெஸ்ட் கமெண்ட்... ஒக்கே

    ReplyDelete
  2. முரளி சார் அனைத்து அறிமுகமும் கலக்கல....

    ReplyDelete
  3. அதுக்குள்ளயா,,,, நன்றி சங்கவி..
    :-)

    ReplyDelete
  4. அருமையான தேர்வுகள் முரளி!

    ReplyDelete
  5. அருமையான பதிவுகளை தரும் பதிவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நல்லது. நல்ல பெண் பதிவர்களை அறிந்தோம்.

    ReplyDelete
  7. முரளி,

    எதிர்பார்க்கவே இல்லை என்னைப் பத்தின அறிமுகத்தை. அதிலும் பொறாமைக்குரிய தோழி-யா அறிமுகப்படுதினதுக்கு ரொம்ப தேங்க்ஸ். மத்தவங்களதும் படிச்சுட்டு அப்புறமா வரேன்.

    அன்புடன்
    தோழி

    ReplyDelete
  8. அன்பின் முரளி

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருமே நான் அறியாதவர்கள் தான் ( ஒன்றிரண்டு தவிர ) - சென்று பார்க்கிறேன் - கருத்துச் சொல்லி வருகிறேன்

    நல்வாழ்த்துகள் முரளி

    ReplyDelete
  9. ம்ம்ம்...பதிவெல்லாம் ஒண்ணும் உருப்படியா இல்லை போல!எல்லோரும் பூங்கொத்து பற்றித்தான் சொல்றாங்க! பூங்கொத்தை நிறுத்திர வேண்டியதுதான்!!!!!

    ReplyDelete
  10. அருமையான தேர்வுகள். நிறைய பதிவிகளை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு நன்றி முரளி

    ReplyDelete
  12. தொடருங்கள்..:)

    ReplyDelete
  13. என்ன தவம் செய்து விட்டோம்... நட்புக்கு நன்றி முரளி...

    ReplyDelete
  14. நன்றி முரளி!

    உண்மையான பெயரே 'தமிழ்' தான் (தமிழ் மீது தீராத ஆர்வம் கொண்ட தாத்தாவின் உபயம்).. நேரமின்மையால் நிறைய எழுத முடிவதில்லை..

    ReplyDelete
  15. நண்பரே வணக்கம்... புதனில் கிடைத்த இந்த புண்ணியவதிகளில் சிலரை இனிமேல் படிக்கவேண்டும்...

    ReplyDelete
  16. நல்ல பதிவு நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நன்றி மகாப்பா,
    நன்றி சித்ரா,
    நன்றி தமிழ் உதயம்,
    நன்றி அனு,
    நன்றி சீனா சார்,
    நன்றி அருணாமேடம், அட ஒண்ணு ரெண்டை குறிப்பிட்டு சொல்றமாதிரியா, எழுதுறிங்க?
    நன்றி அமைதி சாரல்,
    நன்றி லக்‌ஷ்மணன்,
    நன்றி ஷங்கர் ஜி,
    நன்றி ப்ரியா,
    நன்றி கனி,
    நன்றி தமிழ்,
    நன்றி பாலாசி,
    நன்றி சசிகுமார்.

    ReplyDelete
  18. நல்ல அறிமுகங்கள். நன்றி முரளி

    ReplyDelete
  19. முரளி நன்றி நன்றி என்பதை தவிர நான் என்ன சொல்ல இயலும் ?

    ReplyDelete
  20. எதிர்பாரா மகிழ்ச்சி, நெகிழ்ச்சியும். நன்றி முரளி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது