07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 16, 2011

தெய்வம்

எல்லா புகழும் இறைவனுக்கே

  பகவத் கீதை
நீ எனை எதுவாக நினைத்து வழிபடுகிறாயோ 
நான் அதுவாகவே மாறி உனக்கு அருள் புரிவேன். 
கடவுள் கொடுக்குறதை யாராலயும் தடுக்க முடியாது
கடவுள் தடுக்குறதை யாராலயும் கொடுக்க முடியாது
                                            
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்
பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. 
அதில் மகிழ்ச்சியும் அடையாதே. ஏனேன்றால் 
அவனுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தி இறைவன் 
உன்னை சோதனையில் மூழ்க வைப்பான். 
நீ மற்றவர்களை திட்டினால் 
இறைவனின் சாபம் உன் மீது உண்டாகும். 
உமது நெருங்கிய நண்பரிடம் 
பொய்யை உண்மை என்று கூறி நம்ப வைப்பது மாபெரும் மோசடியாகும்.

இயேசு சொன்னார், 
செபிக்கும்போது கதவைத் தாழிட்டு விண்ணகத் தந்தையிடம் செபம் செய். மறைவாய் இருக்கும் செபமே இறைவனுக்கு நிறைவாய் இருக்கும் செபம். எனவே மனதைத் திற கதவைப் பூட்டு. இதுவே செபிக்கும் வழி. என்றார் இயேசு. நமக்குத் தேவை மனிதரின் மரியாதையா,இறைவனின் இணையற்ற கருணையா ? மனிதனின் அங்கீகாரமெனில் வித விதமான அங்கிகளுடன் வீதிகளில் கூச்சலிடலாம். இறைவனின் இரக்கமெனில் அடைபட்ட அறைகளில் மனதைத் திறக்கலாம்.
====================================================================

பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே, 
தெய்வ அருளுக்கு பாத்திரமாகி விடுவோம்.
மனதில் தூய்மையான எண்ணம் வேண்டும். 
பயமான, கபடமான, குற்றமான,
பகைமையான எண்ணங்களை அகற்ற வேண்டும். 
அவ்வாறு செய்தால், நம் உடல் முழுவதும்

தெய்வீகத்தன்மை பரவத் தொடங்கும்.                   
============================================================== 
இன்றைய வலைச்சரத்தில் எனக்கு தெரிந்த...
ஆன்மீகத்தைப் பற்றிய பதிவுகள் பகிரும் பதிவர்கள் உலா வருகிறார்கள்

இவர்களது வலைப்பூக்களுக்கு சென்றாலே கோவிலுக்கு சென்றது போல் மணம் சாந்தமடைந்து தெய்வீகத்தன்மை ஏற்படும்.
=======================================================================


இனிய பண்புள்ள இயல்பான குணமுள்ள இதய சுத்தியுடன்
குருவருளை நாடி வாழ்கின்ற நமது தோழியின் வலைப்பூ
சித்தர்கள் இராச்சியம் இந்த வலைப்பூ சென்று தரிசித்து விட்டு வரலாம் அன்பர்களே.இவரது ஆன்மீகம் என்ற வலைப்பூவில்
பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அது தான் உனக்கு எதிரொலிக்கும்
என்று அருமையாக எடுத்துரைக்கிறார்.
                                 ****************************

இவரது பதிவுகளில் கோயில்களின் படங்களும் அதற்கான விளக்கங்களும் பார்த்து படிக்கும் போது கோவிலின் நுழைவாயிலிருந்து கருவரை வரை சென்று தெயவங்களை நேரில் சென்று தரிசித்துவிட்டு வந்த பிரமையை ஏற்படுத்துவது போல் பிரமிப்பை ஏற்படுத்துவார் நமது சகோ இராஜராஜேஸ்வரி அவர்களது மணிராஜ் வலைப்பூவிற்கு சென்றுஆனந்தமாய் அருளும் ஆறுபடைவீடு முருகன் தரிசியுங்கள்.
                                         ***************************


நமது சகோதரர் ஹைதர் அலி அவர்களின் வலையுகம்  என்ற வலைப்பூவிற்க்கு சென்று
சென்று அறிமுக புத்தகத்தினை பற்றி தெரிந்து கொள்ளலாம் நண்பர்களே
                                             *************************

இயேசுபிதாவை பற்றியும் அவரின் மகிமைகளையும் 
இந்த உலகுக்கு எடுத்து காட்ட விரும்பும் 
சகோதரி தமிழ்மகள் அவர்களின் இயேசு தரிசனம்  வலைப்பூவிற்கு சென்று தரிசனம் பெறலாம் வாருங்கள்
                                        ***************************
பெற்ற தாயினும் தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்; தாய்ப்பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பைவிட ஆயிரம் மடங்கு அன்பை நம்மீது பொழிபவன் அல்லாஹ். 
முத்தான துவாக்கள்  வலைப்பதிவில் மதிப்புமிக்க 
Jaleela Kamal அவர்களின் பதிவை சென்று படியுங்கள் அன்பர்களே.

    அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே! என்று கூறும் சகோதரர் குமரன் அவர்களது வலைப்பூ ஸ்தோரமாலா வலைப்பூவிற்கு சென்று தரிசிக்கலாம் வாருங்கள்

                                                **************************
    சிவன் அருள் என்று பெயருள்ள நம்மவர் சிவமே சிவமயம் என்ற வலைப்பூவிற்கு சென்று வணங்கலாம் வாருங்கள்.
                                               ***************************

    வழிபடும் கடவுள்:சிவன்(பரம்பொருள்); வழிபடும் குரு: அகத்தியர்; வழிபடும் நூல்: பெரிய ஞானகோவை; தியான மார்க்கம்: ஞானம் என்று சகோ சக்ராவர்த்தி ஐயா அவர்களது சிவசித்தர்கள் வலைப்பூவிற்கு சென்று தரிசிக்கலாம் வாருங்கள்.
                                       ************************************ 


           நண்பரது நிகழ்காலத்தில் (அறிவே தெய்வம் ) என்கிற வலைப்பூவில் சென்று தரிசிக்கலாம் வாருங்கள்
                                         ***********************************


    வலைச்சரத்தில் நாளை நட்பு என்ற தலைப்பில் எனது அன்பு நண்பர்கள் அனைவரும் வலம் வருவார்கள் என அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்...

    54 comments:

    1. அருமையான ஆன்மீக பதிவர்களின் அறிமுகங்கள்.நன்றி.

      ReplyDelete
    2. எல்லோரும் போய் சேருமிடம் ஒன்றே, செல்லும் வழிகள்தான் வேறுவேறு. எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் பக்குவம் இறைவனின் அருள். இன்றைய அறிமுக வலைப்பூக்கள் சில எனக்குப் புதிது. வாசிக்கிறேன். வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    3. அன்பு நண்பரே
      வலைச்சரத்தில் உங்களின்
      படைப்புகள் கவர்கின்றது.
      இன்றோர் தெய்வ தரிசனப் படைப்பு....

      அறிமுகப்படுத்திய அத்தனை பதிவர்களும்
      அருமை.
      அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    4. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே....

      ReplyDelete
    5. ஆன்மீகம் சார்ந்த மனம் சார்ந்த கருத்துகளை பகிர்ந்து வரும் என் வலைப்பூவை உங்களுக்கு பிடித்தமானவற்றுள் ஒன்றாக நண்பர்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் மாய உலகம் ராஜேஷ்:))

      ReplyDelete
    6. vaalthukal sako...
      Vetha. Elangathilakam.

      ReplyDelete
    7. இவரது பதிவுகளில் கோயில்களின் படங்களும் அதற்கான விளக்கங்களும் பார்த்து படிக்கும் போது கோவிலின் நுழைவாயிலிருந்து கருவரை வரை சென்று தெயவங்களை நேரில் சென்று தரிசித்துவிட்டு வந்த பிரமையை ஏற்படுத்துவது போல் பிரமிப்பை ஏற்படுத்துவார் நமது சகோ இராஜராஜேஸ்வரி அவர்களது மணிராஜ் வலைப்பூவிற்கு சென்றுஆனந்தமாய் அருளும் ஆறுபடைவீடு முருகன் தரிசியுங்கள்./

      எத்த்னை அருமையான அறிமுகம்!
      மனம் நிறைந்த நன்றிகள்..
      மாய உலகத்தின் இனிய தரிசனம் பெற்ற நிறைவு..

      ReplyDelete
    8. எல்லா நதியும் பிறப்பிடம் வேறானாலும் சேருமிடம் கடல்..

      ஏக இறைவனை அறியும் பகிர்வுகளின் அறிமுகங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்...

      ReplyDelete
    9. ”தெய்வம்” என்ற தலைப்பில் ஆன்மீக பதிவர்களை அறிமுகப்
      படுத்தியுள்ளதற்கு மிக்க நன்றி.

      உண்மையிலேயே இவர்கள் எல்லோரும் தெய்வ அருள் பெற்றவர்களாகவே இருக்க வேண்டும். அவர்களால் தான் இதுபோன்ற அருமையான பதிவுகள் தொடர்ந்து தந்திட முடியும்.

      குறிப்பாக மணிராஜ் என்ற வலைப்பதிவில் தினந்தோறும் எழுதிவரும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை தினமும் நான் படித்து ரசிப்பதுண்டு.

      தாங்கள் சொல்லுவது போல நம்மை அந்தந்த தெய்வங்களின் கருவறைக்குள் கூட்டிச்சென்று பக்திப்பரவசத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள். தெய்வாம்சம் பொருந்திய அவர்களுக்கும், அவர்களை அறிமுகம் செய்துள்ள தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.vgk

      ReplyDelete
    10. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

      ReplyDelete
    11. மாயா...
      காலையிலயே வர வெளிக்கிட்டேன், ஆனா முதலை என் காலைப்பிடிச்சு... மாயாட்டப் போயிட வாணாம் என இழுக்கத்தொடங்கிட்டுது..... :)), இங்கின வராட்டில் தெய்வக்குற்றமாகிடுமே என ... ஒருகால் ஸூஸ் முதலையிட்ட:)) மற்றது என்னட்ட:)) ஓடிவந்திட்டேன்.

      இத்தனைபேர் ஆன்மீகம் எழுதுகிறார்களோ..... முடியும்போது போய்ப் பார்க்கிறேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

      மாயாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))(நான் சொல்லல்ல.. நான் ரொம்ப நல்ல பொண்ணு:), முதலதான் சொல்லச் சொல்லிச்சு:))))).

      ReplyDelete
    12. //வலைச்சரத்தில் நாளை நட்பு என்ற தலைப்பில் எனது அன்பு நண்பர்கள் அனைவரும் வலம் வருவார்கள் என அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்...
      ////

      ஹா...ஹா...ஹா... மாயாஆஆஆ... ஒண்ணுமில்லே சும்மா சிரிச்சேன்:)).

      ReplyDelete
    13. ம். அசத்துங்க ராஜேஷ்!

      ReplyDelete
    14. மனிதனைப்
      மனதினைப்

      பக்குவப்படுத்தும் ஆன்மீகப்பதிவுகள் அருமை தொடர்க நண்பா..

      ReplyDelete
    15. பகிர்வுக்கும் சிறந்த முறையில் அறிமுகப் படுத்தியதற்கும்,சகோதர பாசத்திற்கும் மிக்க நன்றி சகோ

      ReplyDelete
    16. ஆன்மிக நதிகள் சங்கமிக்கும் இடம்..,
      மூழ்கி எழுந்து வருகிறேன்
      நன்றி ராஜேஷ் ..,

      ReplyDelete
    17. கைகொடுங்க நண்பா! ஒவ்வொரு நாளும் வித்தியாசமான பாணி அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    18. நல்ல அறிமுகங்கள் .வாழ்த்துக்கள் ராஜேஷ்

      ReplyDelete
    19. RAMVI said...
      அருமையான ஆன்மீக பதிவர்களின் அறிமுகங்கள்.நன்றி.//

      தங்களது வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி

      ReplyDelete
    20. வெங்கட் நாகராஜ் said...
      நல்ல அறிமுகங்கள்.....//

      நன்றி நண்பரே

      ReplyDelete
    21. சாகம்பரி said...
      எல்லோரும் போய் சேருமிடம் ஒன்றே, செல்லும் வழிகள்தான் வேறுவேறு. எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் பக்குவம் இறைவனின் அருள். இன்றைய அறிமுக வலைப்பூக்கள் சில எனக்குப் புதிது. வாசிக்கிறேன். வாழ்த்துக்கள்.//

      சரியாக சொன்னீர்கள்.. தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றி

      ReplyDelete
    22. suryajeeva said...
      sorry wrong number//

      thanks boss

      ReplyDelete
    23. மகேந்திரன் said...
      அன்பு நண்பரே
      வலைச்சரத்தில் உங்களின்
      படைப்புகள் கவர்கின்றது.
      இன்றோர் தெய்வ தரிசனப் படைப்பு....

      அறிமுகப்படுத்திய அத்தனை பதிவர்களும்
      அருமை.
      அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

      நண்பரின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றி

      ReplyDelete
    24. தமிழ்வாசி - Prakash said...
      இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே....//

      வாழ்த்துக்கு வலைச்சரம் சார்பாக நன்றி நண்பரே

      ReplyDelete
    25. தமிழ்வாசி - Prakash said...
      எனது வலையில்:
      கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!//

      எனது பதிவிலும் இந்த பதிவை குறிப்பிட்டுள்ளேன் நண்பரே

      ReplyDelete
    26. நிகழ்காலத்தில்... said...
      ஆன்மீகம் சார்ந்த மனம் சார்ந்த கருத்துகளை பகிர்ந்து வரும் என் வலைப்பூவை உங்களுக்கு பிடித்தமானவற்றுள் ஒன்றாக நண்பர்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் மாய உலகம் ராஜேஷ்:))//

      வரவேற்கிறேன் நண்பரே! வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி

      ReplyDelete
    27. kovaikkavi said...
      vaalthukal sako...
      Vetha. Elangathilakam.//

      வாங்க சகோ...வாழ்த்துக்கு நன்றி சகோ

      ReplyDelete
    28. இராஜராஜேஸ்வரி said...

      எத்த்னை அருமையான அறிமுகம்!
      மனம் நிறைந்த நன்றிகள்..
      மாய உலகத்தின் இனிய தரிசனம் பெற்ற நிறைவு..//

      வரவேற்கிறேன்..கருத்துக்கும் வாழ்த்துக்கும் வலைச்சரம் சார்பாக நன்றி

      ReplyDelete
    29. இராஜராஜேஸ்வரி said...
      எல்லா நதியும் பிறப்பிடம் வேறானாலும் சேருமிடம் கடல்..

      ஏக இறைவனை அறியும் பகிர்வுகளின் அறிமுகங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்..//

      வலைச்சரம் சார்பாக வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றிகள்

      ReplyDelete
    30. வை.கோபாலகிருஷ்ணன் said...
      ”தெய்வம்” என்ற தலைப்பில் ஆன்மீக பதிவர்களை அறிமுகப்
      படுத்தியுள்ளதற்கு மிக்க நன்றி.

      உண்மையிலேயே இவர்கள் எல்லோரும் தெய்வ அருள் பெற்றவர்களாகவே இருக்க வேண்டும். அவர்களால் தான் இதுபோன்ற அருமையான பதிவுகள் தொடர்ந்து தந்திட முடியும்.

      குறிப்பாக மணிராஜ் என்ற வலைப்பதிவில் தினந்தோறும் எழுதிவரும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை தினமும் நான் படித்து ரசிப்பதுண்டு.

      தாங்கள் சொல்லுவது போல நம்மை அந்தந்த தெய்வங்களின் கருவறைக்குள் கூட்டிச்சென்று பக்திப்பரவசத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள். தெய்வாம்சம் பொருந்திய அவர்களுக்கும், அவர்களை அறிமுகம் செய்துள்ள தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.vgk//

      சரியாக சொன்னீர்கள் மரியாதைக்குரிய அன்பரே! தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் வலைச்சரம் சார்பாக மனம் கனிந்த நன்றிகள்

      ReplyDelete
    31. இந்திரா said...
      இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்//

      வாழ்த்துக்கு வலைச்சரம் சார்பாக நன்றிகள்

      ReplyDelete
    32. athira said...
      மாயா...
      காலையிலயே வர வெளிக்கிட்டேன், ஆனா முதலை என் காலைப்பிடிச்சு... மாயாட்டப் போயிட வாணாம் என இழுக்கத்தொடங்கிட்டுது..... :)), இங்கின வராட்டில் தெய்வக்குற்றமாகிடுமே என ... ஒருகால் ஸூஸ் முதலையிட்ட:)) மற்றது என்னட்ட:)) ஓடிவந்திட்டேன்.

      இத்தனைபேர் ஆன்மீகம் எழுதுகிறார்களோ..... முடியும்போது போய்ப் பார்க்கிறேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

      மாயாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))(நான் சொல்லல்ல.. நான் ரொம்ப நல்ல பொண்ணு:), முதலதான் சொல்லச் சொல்லிச்சு:))))).//

      ஒரு கால் சூஸ் முதலைக்கிட்ட மாட்டிக்கிச்சா... முதல மயக்கம் போடலையா.. முதல பாவம். ஓடிவந்த உங்களை ஏமாற்றவிலலை என முதலைக்கிட்ட வலைச்சரம் சார்பாக நன்றிய சொல்லிடுங்க ஆதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........

      ReplyDelete
    33. athira said...
      //வலைச்சரத்தில் நாளை நட்பு என்ற தலைப்பில் எனது அன்பு நண்பர்கள் அனைவரும் வலம் வருவார்கள் என அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்...
      ////

      ஹா...ஹா...ஹா... மாயாஆஆஆ... ஒண்ணுமில்லே சும்மா சிரிச்சேன்:)).//

      சொல்லிட்டு சிரிங்க..நாங்களும் சிரிப்போம்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      ReplyDelete
    34. சத்ரியன் said...
      ம். அசத்துங்க ராஜேஷ்!//


      நன்றி நண்பரே!

      ReplyDelete
    35. முனைவர்.இரா.குணசீலன் said...
      மனிதனைப்
      மனதினைப்

      பக்குவப்படுத்தும் ஆன்மீகப்பதிவுகள் அருமை தொடர்க நண்பா..//

      நண்பரின் கருத்துக்கு வலைச்சரம் சார்பாக மனம் கனிந்த நன்றி

      ReplyDelete
    36. ஹைதர் அலி said...
      பகிர்வுக்கும் சிறந்த முறையில் அறிமுகப் படுத்தியதற்கும்,சகோதர பாசத்திற்கும் மிக்க நன்றி சகோ//
      சகோவின் கருத்துக்கு வலைச்சரம் சார்பாக நன்றி

      ReplyDelete
    37. சின்னதூரல் said...
      ஆன்மிக நதிகள் சங்கமிக்கும் இடம்..,
      மூழ்கி எழுந்து வருகிறேன்
      நன்றி ராஜேஷ் ..,//

      தங்களது கருத்துக்கு நன்றி சகோ

      ReplyDelete
    38. shanmugavel said...
      கைகொடுங்க நண்பா! ஒவ்வொரு நாளும் வித்தியாசமான பாணி அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

      நண்பரின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றிகள்

      ReplyDelete
    39. angelin said...
      நல்ல அறிமுகங்கள் .வாழ்த்துக்கள் ராஜேஷ்//

      வாங்க தோழி... நன்றி

      ReplyDelete
    40. வணக்கம் பாஸ்,.

      ஆன்மீகப் பதிவுகளின் அறிமுகங்களோடு, மனதில் சாந்த உணர்வு தரும் ஆன்மீகப் பாடலையும் தந்திருக்கிறீங்க.

      இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    41. இங்கே வராட்டி தெய்வ குத்தமாகிடுமே அவ்வ்வ்வ் :-))) தட்டு தடுமாறி ஒரு வ(லி)ழியா வந்துட்டேன் ஹி..ஹி... :-))

      ReplyDelete
    42. தெய்வீகம் கமழ்கிறது இந்த பகிர்வில்...

      தெய்வம் ஒன்றே, அது கண்ணாகட்டும், அல்லாவாகட்டும், ஏசுவாகட்டும் எந்த தெய்வமும் நமக்கு அதன் புனித நூலில் புகட்டுவது நல்லதையே.. ஆனால் ஏனோ மனிதன் அதை உணர தவறிவிடுகிறான் அதனால் அவன் மனதில் வன்மம் பெருகிவிடுகிறது மத துவேஷமும் பெருகுகிறது... உற்றார் உறவினராக நம் குடும்பமாக நினைக்கவேண்டிய எல்லோரையும் மதம் என்ற பெயரில் பிரிக்கிறான்..

      ஆனால் நீங்க பிரிக்கலை... மிக அழகாக தொகுத்து இருக்கீங்க... அழகு அழகு தெய்வீகம் அழகு அதனை தொகுத்த விதமும் அழகு....

      அவனின்றி ஓர் அணுவும் அசையாது. உண்மைதானே... நாம் இன்று இத்தனை நன்றாக இருக்கிரோம்னா எல்லாவற்றுக்குமே இறைவனின் கருணைப்பார்வை தானே....

      எனக்கு எல்லா தெய்வமும் ஒன்றேப்பா... எங்கள் வீட்டு பூஜையறையில் இல்லாத தெய்வமே கிடையாது என்று சொல்வார்கள்...ஆமாம் குருநானக் கூட உண்டு... சர்ச் கும் போவோம்... மாஸ்க் முன்பு நின்று மனமுருக வேண்டுவேன்... வீட்டில் பாலபிஷேகம் செய்து அஷ்டோத்திரம் தினம் படித்து வழிபடவும் செய்வேன்... இறைவன் ஒன்றே என்ற கருத்து தான் எனக்கும்...

      எப்போதும் என்னை கைப்பிடித்து வழி நடத்துவது இறைவன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... நல்லது கெட்டது எது நடந்தாலும் அது இறைவனின் செயல் என்றே தான் எடுத்துக்கொள்ள முடியும்...

      அம்மாவின் பாஸ்போர்ட் தொலைந்தபோது முகம் தெரியாத எத்தனையோ பேர் வந்து உதவினபோதெல்லாம் இறைவன் இவர்கள் ரூபத்தில் எல்லாம் வந்து உதவுவதாகவே நினைத்து நன்றி சொன்னேன்... வாழும் காலம் வரை நன்றி மறக்காமலும் இருப்பேன்...

      இதெல்லாம் இறைவனின் அற்புதங்கள் அல்லவா?

      இறைவன் எப்படி எல்லோரையும் சமமாக பார்க்கிறானோ அதே போல் மனிதனும் எல்லோரையும் சமமாக பார்க்கிறானோ அன்னிக்கு உலகம் சுபிக்‌ஷமடையும் என்பதை உணர்த்துகிறது உங்களின் இந்த பகிர்வு...


      அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் ஆன்மீக பகிர்வில் நம்ம ராஜேஸ்வரி இருப்பது ரொம்ப சந்தோஷம்.. ஏன்னா என்னுடைய ஒவ்வொரு நாள் காலை விடிவதே இவங்களின் பதிவுகளில் தான்.. மனம் நிறையும்.... நான் குவைத்லயே இல்லை என்பதை சொல்லவைக்கும்...

      அருமையான பகிர்வுக்கு என் அன்பு வாழ்த்துகள்பா....

      அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்....

      ReplyDelete
    43. அருமை

      கதை , கவிதை, மொக்கை நகைச்சுவைகளுக்கு இடையே

      யாரும் ஆன்மிக பதிவுகளை படிப்பதில்லை
      அதில் தெய்வம் தலைப்பில் எடுத்துக்காட்டி சிலரையவது அந்த தளங்களை இந்த வலைச்சரத்தின் மூலம் அறிமுகப்படுத்தி அனைவரின் பார்வைக்கும் கொண்டு சென்றது அருமை



      நேரம் இருப்பவர்க்ள் இதையும் பார்வையிடலாம்

      http://jaleela-duwa.blogspot.com/

      ReplyDelete
    44. நிரூபன் said...
      வணக்கம் பாஸ்,.

      ஆன்மீகப் பதிவுகளின் அறிமுகங்களோடு, மனதில் சாந்த உணர்வு தரும் ஆன்மீகப் பாடலையும் தந்திருக்கிறீங்க.

      இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

      வணக்கம் தல... தங்களது நல் கருத்துக்கு மனப்பூர்வமான நன்றி

      ReplyDelete
    45. ஜெய்லானி said...
      இங்கே வராட்டி தெய்வ குத்தமாகிடுமே அவ்வ்வ்வ் :-))) தட்டு தடுமாறி ஒரு வ(லி)ழியா வந்துட்டேன் ஹி..ஹி... :-))
      //

      பாஸ் ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல ஹா ஹா..... :-)

      ReplyDelete
    46. மஞ்சுபாஷிணி said...
      தெய்வீகம் கமழ்கிறது இந்த பகிர்வில்...

      தெய்வம் ஒன்றே, அது கண்ணாகட்டும், அல்லாவாகட்டும், ஏசுவாகட்டும் எந்த தெய்வமும் நமக்கு அதன் புனித நூலில் புகட்டுவது நல்லதையே.. ஆனால் ஏனோ மனிதன் அதை உணர தவறிவிடுகிறான் அதனால் அவன் மனதில் வன்மம் பெருகிவிடுகிறது மத துவேஷமும் பெருகுகிறது... உற்றார் உறவினராக நம் குடும்பமாக நினைக்கவேண்டிய எல்லோரையும் மதம் என்ற பெயரில் பிரிக்கிறான்..//

      உண்மை தான் மேடம்.. மதத்தை மனிதன் தான் படைத்தான்... ஆனால் இறைவனின் பெயரால் பிரிந்து இருக்கிறோம்... உண்மையான விசயம் என்றால் இனம் பிரித்து பார்க்கும் வரை நம்மிடம் மனிதம் இல்லாவிட்டாலும் மனித குலம் என்ற ஒரே இனம் தான்....

      ReplyDelete
    47. மஞ்சுபாஷிணி said...
      தெய்வீகம் கமழ்கிறது இந்த பகிர்வில்...
      ஆனால் நீங்க பிரிக்கலை... மிக அழகாக தொகுத்து இருக்கீங்க... அழகு அழகு தெய்வீகம் அழகு அதனை தொகுத்த விதமும் அழகு....//

      நன்றி மேடம்

      ReplyDelete
    48. மஞ்சுபாஷிணி said...//

      எனக்கு எல்லா தெய்வமும் ஒன்றேப்பா... எங்கள் வீட்டு பூஜையறையில் இல்லாத தெய்வமே கிடையாது என்று சொல்வார்கள்...ஆமாம் குருநானக் கூட உண்டு... சர்ச் கும் போவோம்... மாஸ்க் முன்பு நின்று மனமுருக வேண்டுவேன்... வீட்டில் பாலபிஷேகம் செய்து அஷ்டோத்திரம் தினம் படித்து வழிபடவும் செய்வேன்... இறைவன் ஒன்றே என்ற கருத்து தான் எனக்கும்...//

      உண்மையில் உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மேடம்...எல்லாருக்கும் இந்த அறிவு பூர்வமான நல் எண்ணத்துடன் கூடிய ஒருமைபாடு வந்துவிடாது...உங்களது நட்புக்கு இறைவனுக்கு நன்றி

      ReplyDelete
    49. மஞ்சுபாஷிணி said...
      அம்மாவின் பாஸ்போர்ட் தொலைந்தபோது முகம் தெரியாத எத்தனையோ பேர் வந்து உதவினபோதெல்லாம் இறைவன் இவர்கள் ரூபத்தில் எல்லாம் வந்து உதவுவதாகவே நினைத்து நன்றி சொன்னேன்... வாழும் காலம் வரை நன்றி மறக்காமலும் இருப்பேன்...//

      கோயிலில் மட்டுமே தெய்வம் இருக்கிறது
      என்று நம்புபவர்கள், நம்மைச் சூழ்ந்திருக்கும்
      ஜனங்களிடம் தெய்வத்தைக் காண முயல்வதில்லை.
      உலகை இயக்கும் பரம்பொருளே
      இத்தனை கோடி ஜீவராசிகளாக
      நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... அதை நீங்கள் சரியாக உணர்ந்திருக்கிறீர்கள்...சூப்பர் மேடம்

      ReplyDelete
    50. மஞ்சுபாஷிணி said...//

      இறைவன் எப்படி எல்லோரையும் சமமாக பார்க்கிறானோ அதே போல் மனிதனும் எல்லோரையும் சமமாக பார்க்கிறானோ அன்னிக்கு உலகம் சுபிக்‌ஷமடையும் என்பதை உணர்த்துகிறது உங்களின் இந்த பகிர்வு...


      அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் ஆன்மீக பகிர்வில் நம்ம ராஜேஸ்வரி இருப்பது ரொம்ப சந்தோஷம்.. ஏன்னா என்னுடைய ஒவ்வொரு நாள் காலை விடிவதே இவங்களின் பதிவுகளில் தான்.. மனம் நிறையும்.... நான் குவைத்லயே இல்லை என்பதை சொல்லவைக்கும்...

      அருமையான பகிர்வுக்கு என் அன்பு வாழ்த்துகள்பா....

      அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்....//

      தங்களது விரிவான பின்னூட்டத்துக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

      ReplyDelete
    51. Jaleela Kamal said...
      அருமை

      கதை , கவிதை, மொக்கை நகைச்சுவைகளுக்கு இடையே

      யாரும் ஆன்மிக பதிவுகளை படிப்பதில்லை
      அதில் தெய்வம் தலைப்பில் எடுத்துக்காட்டி சிலரையவது அந்த தளங்களை இந்த வலைச்சரத்தின் மூலம் அறிமுகப்படுத்தி அனைவரின் பார்வைக்கும் கொண்டு சென்றது அருமை



      நேரம் இருப்பவர்க்ள் இதையும் பார்வையிடலாம்

      http://jaleela-duwa.blogspot.com/ //

      தங்களின் ஆன்மீக தளத்திற்கு தற்பொழுது தான் சென்றேன்.. கவனிக்க தவறிவிட்டேன்...தங்களது முத்தான துவாக்கள் வலைப்பூவின் இணைப்பையும் இணைத்துவிட்டேன்.. தாமதமாக இணைத்தமைக்கு மன்னிக்கவும்... தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      ReplyDelete

    தமிழ் மணத்தில் - தற்பொழுது