07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 5, 2008

அனைவரும் பார்த்து வியக்கும் சில ஆன்மீகப்பூக்கள-3

இப்ப நாம பார்க்கப்போறவரு தமிழ்ச்சங்கத்தின் ஒரு ஆசிரியர் , தமிழால் இணைவோம்; தமிழைப் போற்றுவோம்ன்னு தமிழின் பெருமைகளை எடுத்து காட்டுபவர்.

பெ. அ : இவரு அம்மன் பாட்டுலயும், முருகனருளிலும் எழுதுறாரு.
ஆத்திகம் வலைப்பூவுல ஆன்மிகத்தைப் பற்றி எழுதுறாரு.

டண் டண் டண் ...... அவர் தான் VSK அவர்கள்

சி. அ : இந்த அங்கிளோட ஒரு ரொம்ப உபயோகமான வலைப்பூவைப் பத்தி சொல்லுங்கப்பா.அதுவும் ஒரு குழுப்பதிவு 12 அன்பர்களின் பங்களிப்பு இதில இருக்கு, வலைபூவோட பேரு விக்கி பசங்க .

இந்த வலைப்பூவின் கருத்து : தெரிஞ்சிக்கோ! அறிஞ்சிக்கோ! தெளிஞ்சிக்க. உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் இவங்க கிட்ட கேட்டா உங்களுக்கு பதில் கிடைக்குதுங்க.

WIKI காலத்தில் விக்கி பசங்களின் சேவை அருமையாக உள்ளது.
VSK ஐயாவிற்கும் மற்றும் அனைத்து விக்கிகளுக்கும் நன்றிகள்.
___________________________________

சி . அ : அடுதத பதிவர் யாருப்பா?

ஒப்பிலி அப்பனுக்கு இராக மாளிகை கட்டியவர்தான் நம்மோட அடுத்த அன்பர்.

ஒப்பில்லாத அப்பன் நம் ஒப்பிலியப்பன்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பன் என் விண்ணகரப்பன் என்று
நம்மாழ்வார் துதித்த செல்லப்பன்


என்பது இவர் ஒப்பிலியபனுக்கு இவர் சமர்பித்த கவிதையின் ஒரு கண்ணி

.பெ அ : ஜீவி சார் தான் இந்த பதிவர் இல்லீங்க? .

ஆமா, ஆமா, பூ வனம் இவரோட நந்தவனம். எத்தனை எத்தனை எண்ணங்கள் நெஞ்சினிலே....

அவையெல்லாம் மலர்களாக பரிமளிக்கின்றன இந்த வலைப்பூவில்.

_________________________________________

அடுத்து நாம பார்க்கப் போற பதிவர் மிகவும் அன்பானவரு.

சி. அ : இப்பிடி ஈஸியா க்ளூ கொடுத்தா எப்படிப்ப, நீங்க அன்புடன் பாலா அங்கிளைத்தான சொல்றீங்க.நீயும் நல்லா தேறீட்டயே அவரேதான்.

பெ. அ:
தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா ஐயா எழுதும் வலைப்பூ.

சி. அ : ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் - இது தான் இவரோட கொள்கை முழக்கம்.

இவரோட திருப்பாவை பதிவுகள்தான் எனக்கு முதல் அறிமுகம், அருமையான விளக்கங்களோட ஆழமா கருத்துக்களோடும் எழுதியிருக்காரு. பாசுரங்களுக்கான படங்களும் சூப்பர்.

சி. அ : மொத்தம் 453 பதிவுகள் ஏழுதியிருக்காரு இல்லப்பா.

அதுமட்டுமில்லம்மா தமிழ் மண நடசத்திரமாவும் இருந்திருகாரு பாலா சாரு.

பெ அ : காலம் பொன்னானது கடமை கண்ணானது ன்னுட்டு கடிகாரத்தை காண்பிக்கறாறு, பதிவுக் கிடங்கு - இவரோட பழைய பதிவுகள்,

நான் வாசிக்கும், என்னை(யும்) வாசிக்கும் வலைப்பதிவர்கள் ன்னு அனைத்து வலைப் பதிவர்களையும் அடையாளம் காட்டுறாரு.

ஐயா வளர்க தங்கள் தொண்டு.
-------------------------------------

10 comments:

 1. அன்பு நண்பரே

  ஆன்மீகப் பதிவர்கள் அறிமுகம் அமர்க்களமாக நடக்கிறது - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. SK ஐயா வலையுலகப் பரிமேலழகர்! உரை வல்லுனர்! தமிழ் மருத்துவர்!

  அன்னாரின் திருப்புகழ் விளக்கங்கள், அதிலும் பின்பார்த்து முன்பார்ப்பது, முன்னிலும் பின்னழகன் பெருமாள் என்பதை நினைவுபடுத்தும்!

  இவரிடம் யாராவது நேயர் விருப்பம் வச்சிக்கிட்டே இருக்கணும் என்பது என் ஆசை! மொத்த திருப்புகழுக்கும் உரை வந்து விடும்! :)

  ஜீவி சார், பேரில் உள்ளது போலவே ஜீவனான பதிவுகள் தருபவர்! தத்துவ வித்தகர்கள் எல்லாம் ஜீவா, ஜீவி, ஜீவ்ஸ் என்றே அமைவது என்ன பேர் ராசியோ? :)

  அன்புடன் பாலா அண்ணன்...
  ஆன்மீகமும், மானுட சேவையும் செய்யும் அன்பானவர் தான்!
  பாசுரப் பொருள் விளக்கங்கள் வேணுமா? - Ask Bala! :)
  எப்படியும் தேடிப் பிடிச்சி சொல்லிடுவார்!

  ReplyDelete
 3. அடியேன் கொடுத்ததுதன் அதிகமாக கொடுத்து உதவிய KRS ஐயாவிற்க்கு நன்றி.

  ReplyDelete
 4. இன்னும் தொடரும் சீனா சார்.

  ReplyDelete
 5. //ஜீவி சார், பேரில் உள்ளது போலவே ஜீவனான பதிவுகள் தருபவர்! தத்துவ வித்தகர்கள் எல்லாம் ஜீவா, ஜீவி, ஜீவ்ஸ் என்றே அமைவது என்ன பேர் ராசியோ? :)//

  ஜீயில் தான் ஜீனியஸ் வருகிறது என்பதாலோ?

  ReplyDelete
 6. சரம் ஒளிவிசுகிறது கைலாஷி சார். படங்களும் அருமை. நன்றி.

  ReplyDelete
 7. ஆன்மீக மணம் பரப்பும் சரத்திற்கு நன்றிகள் கைலாஷி.

  ReplyDelete
 8. என்னைப் பற்றியும் இங்கு எழுதியமைக்கு என் மனமார்ந்த நன்றி, திரு. கைலாஷி.

  ReplyDelete
 9. ரவி, உங்களுக்கும் என் நன்றி!

  ReplyDelete
 10. //இவரிடம் யாராவது நேயர் விருப்பம் வச்சிக்கிட்டே இருக்கணும் என்பது என் ஆசை! மொத்த திருப்புகழுக்கும் உரை வந்து விடும்! :)//

  வாருங்கள் VSK ஐயா, KRS சார்பாகவும், வலை உலக அன்பர்கள் சார்பாகவும் அடியேனும் வேண்டுகிறேன். திருப்புகழ் விளக்கங்களை பதிவிடுங்கள் ஐயா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது