07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 5, 2008

அனைவரும் பார்த்து வியக்கும் சில ஆன்மீகப்பூக்கள-2

அடுத்து நாம சொல்லப்போறாவரு "என் வாசகம்" பாடறவரு. திருவாசகம் போல இவர் வாசகங்களும் தேன்.

பெ.அ : அட ஜீவா வெங்கட்ராமன் ஐயாவைப்பத்தி சொல்ல வரீங்களா?

ஆமா இவரும் ரெண்டு விஷயத்தைப் பற்றித்தான் எழுதறாறு, அது ரெண்டுமே இவரோட ரெண்டு கண்ணுக.

சி.அ : அது ரெண்டும் என்னனு நான் சொல்லட்டுமா?

சொல்லு பார்க்கலாம்

சி அ : ஆன்மீகமும்,இசையும்தான் இவரோட இரு கண்கள் .

இசையால் வசமாக இதயம் எதுன்னு இசையை ஆராதிப்பவ்ர் ஜீவா சார்.

இவர் இப்பதிவுல கொடுத்துள்ள வாசகம் " என் அரசே யான் புகழும் இசையும் அணிந்தருளே".ன்னு இவர் பாமாலை பாடி ஆராதிக்கறார் இறைவனை.

பெ. அ : இவரோட ஆன்மீக அரிச்சுவடி அருமையான பதிவு.
மாதர் பிறை கண்ணீயானை ன்னு இவர் எழுதின பதிவும் அருமை.

இவர் நிச்சயம் ஒரு தங்கத்தாமரைதான்.

இவரோடத் தனித்தன்மை தமிழிசை பாடிய பல அன்பர்களின் பாடல்களை அன்பர்களிடத் கொண்டு வந்து சேர்ப்பதுதான். மிகவும் அருமையான சேவை செய்து வருகின்றார்.

சி. அ : தமிழ்மண நட்சத்திரமாகவும் மின்னுராரல்லப்பா ஜீவா அங்கிள் .

ஆமாம்மா. மூணு பேரும் சேர்ந்து அவருக்கும் வாழ்த்து சொல்லலாமா?

ஜீவா ஐயா! வாழ்த்துக்கள் வளர்க தங்கள் சேவை..
----------------------------------------------------------------------
சி. அ : அப்பா எனக்கு என்னமோ பட்சி சொல்லுது நீங்க இப்பவும் ஒரு மதுரைக்காரரை மனசுல நெனச்சுட்டு இருக்கறேங்கன்னு.

எந்த பட்சிம்மா அது

சி அ : கருட பட்சிதான் அதுதானே நல்லதுக்கெல்லாம் முன்னால வருது,
சரி சரி உன்னோட கருடன் சரியாத்தான் சொல்லியிருக்கு,

இவரு பேருலயே மதுரை இருக்கு.

பெ. அ : அப்ப மதுரையம்பதி சாரைப் பத்தி சொல்லப்ப் போறீங்களா?

அருமையான கண்டு பிடிப்பு அவரேதான்.

சி: அ "ஞாலம் நின்புகழேமிக வேண்டுந் தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே!" தான் இவரோட தலைப்புல வ்ர்ற வாசகம் கவனிச்சீங்களா அப்பா?

கரெக்டா கவனிச்சிருக்கறயே திருஞான சம்பந்தரோட அதே வாசகத்தைதான் ஐயாவும் தன்னோட கருப்பொருளா கொண்டிருக்காரு.

பெ அ : மதுரையம்பதி ஐயா எழுதற தீராத வல்வினை தீர்த்த குருவின் திரு உருக்கொண்டு ஆராத இன்பச் சுகாதீதம் நல்கினள் அம்பிகையேன்னு சொல்ற ஆச்சார்ய ஹ்ருதயம்பதிவு குருவின் அருமையைச் சொல்றது சூப்பரா.

சி. அ: ஐயாவோட சௌந்தர்ய லஹரி . பதிவை அனைவரும் கட்டாயமா படிக்க வேண்டிய ஒன்னு.

குமரன் சாரோட இனைஞ்சு இவர் ஸ்தோத்ர மாலை பதிவும் அருமையோ அருமை.

ஆதி சங்கர பகவத் பாதரின் சிவமானஸ பூஜாவிற்கு அருமையான விளக்கம் தந்திருக்கிறார் இப்பதிவுல மதுரையம்பதி ஐயா

பெ அ : புதுகைத் தென்றல் அம்மிணி இவருக்காக ஒரு தனிப்பதிவே போட்டாங்க, அதுலிருந்தே ஐயாவோட எழுத்தை எல்லாரும் தெருஞ்சுக்கலாம்.
மதுரையம்பதி ஐயா மதுரை மீனாள் அருளால் தாங்கள் இது போல சேவை செய்து வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
---------------------------------------------------------------
பெ. அ : இதுவரை நாம பார்த்த அத்தனை பேரோடயும் சேர்ந்து எழுதற ஒருத்தரை நாம் இப்ப சொல்லலாமா?

சரி அவரு யாரு?

சி. அ : அப்பா விளையாடாதேங்க உங்களுக்கு தெரியாதா என்ன?

தெரியல்ல நீயே சொல்லுமா.

சி. அ : T. R. C, ... தி. ர. ச என்னு எழுதுற சந்திர சேகரன் இராமசாமி சார் தான் நம்மோட இப்போதய நாயகர்.

இவரும் கண்ணன் பாட்டு, சிவன் பாட்டு, முருகனருள், ஆச்சார்ய ஹ்ருதயம் எல்லாத்துலயும் எழுதறாரு.

பெ. அ : இவரு கௌசிகம் ன்னும் கம்பன் கவிச்சோலையில் பூத்த கவிமலர்கள் ரெண்டு வலைப்பூக்களையும் எழுதறாரு,

ஐயா தங்கள் சேவையும் மேலும் வளர்ந்து நல்ல மணம் பரப்ப வாழ்த்துகின்றோம்.
----------------------------------------------------



இப்பதிவில் மாவகிடண்ண கண்ணி பங்கனின் கிழக்கு முகமாம தத்புருஷ முகத்தின் தரிசனம் பெறுங்கள் அன்பர்களே.


தத்புருஷம் : யௌவன பருவமுடையதாய் கோகம்பூ நிறமாய் கிழக்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் வாயுவை குறிக்கின்றது, ஐந்தொழிலில் காத்தல் தொழிலை (தத்புருஷ கவச திரோபவ காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'வ", ஐயன் மகேஸ்வர வடிவம். அம்மை ஞான சக்தி வடிவம்.
இம்முகத்தை
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹ’ தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் என்னும் ப்ராக் வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம்.



View of Holy Kailash ( South face and East face) from Astapath, the place where first thirthangara attained nirvana. The closest point to south face.






VIEW OF HOLY KAILASH FROM DARCHEN BASE CAMP

Unlike the other three faces we don't get the darshan of east face alone, mostly with south face only. This is because of the extension of east face to Dolma pass which lies on the parikrama route. In the following photos we will find the east face as sun lit side.

15 comments:

  1. அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன், கைலாஷி. அருமையாக ரசனையுடன் தந்திருக்கிறீர்கள். புகைப்படங்கள் அத்தனையும் அருமை. நான் இன்னும் உங்கள் யாத்திரைப் பூவைப் படிக்கவில்லை. இனிமேல்தான். எனக்கான உங்கள் வாழ்த்துக்கு மீண்டும் நன்றிகள் :)

    ReplyDelete
  2. வாருங்கள் கவிநயா.

    திருக்கயிலை நாதரின் தரிசனம் பல ஜென்ம புண்ணியத்தாலே மட்டுமே கிடைக்க வல்லது, அதுவும் அந்த சிவசக்தி அருள் இருந்து அவர்கள் அழைத்தால் மட்டுமே அந்த புண்ணிய பூமிக்கு செல்ல முடியும்.

    அந்த தெய்வீக அனுபவத்தை அன்பர்களிடம் எடுத்து செல்லும் முயற்சியே "திருக்கயிலாய யாத்திரை" வலைப்பதிவு.

    அவசியம் அனைத்து பதிவுகளையும் படியுங்கள் எங்கோன் எங்கள் பிராட்டி தரிசனம் பெறுங்கள்.

    இன்னும் யாத்திரை தொடரும் அப்போதும் வந்து தரிசனம் பெறுங்கள்.

    ReplyDelete
  3. அடியேன் சிறியோன் என அறிந்தும் தாங்கள் ஐயா-வென அழைப்பது, தங்கள் பெரிந்தன்மையைக் காட்டுகிறது கைலாஷி ஐயா!. ஆன்மீகப் பூக்களின் தொகுப்பிற்கு எங்கள் நன்றிகள் என்றென்றும்.

    ReplyDelete
  4. //அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன்//

    இரண்டாவது தடவை படித்த போது தான் உணர்ந்தேன்.

    நன்றி கவிநயா.

    ReplyDelete
  5. //அடியேன் சிறியோன் என அறிந்தும் தாங்கள் ஐயா-வென அழைப்பது, தங்கள் பெரிந்தன்மையைக் காட்டுகிறது//

    ஆண்டவனுக்கு தொண்டு செய்யும் அனைவரும் சமமே எல்லாரும் அவன் பிம்பமே. ஏற்ற தாழ்வுகள் ஏதும் இல்லை.

    எம்பிரான் தோழரான சுந்தரரே அடியார்க்கும் அடியேன் என்று பாடியுள்ள போது அற்ப பதரான நான் எங்கே.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. புகைப்படங்கள் அருமை.முடிந்தால் பொன்நிற கயிலாய மலை படத்தை பதிவிடவும்.நன்றி.

    ReplyDelete
  7. அன்பு நண்பரே !

    அறிமுகம் - அரூமை - ஆன்மீகப் பதிவர்களை அறிமுகப் படுத்தியதும், அவர்களின் பதிவுகளுக்குச் சுட்டி கொடுத்ததும் அருமை.

    புகைப்படங்கள் புதுமையாக எல்லாப் பதிவுகளிலும் இணைப்பதும் பாராட்டத் தக்கது

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. தத்துவ வித்தகர் ஜீவா என்றே சொல்ல வேண்டும்!

    மதுரையம்பதி என்னும் மெளலி அண்ணா...அன்னையின் அருட்பாலகர், சக்தி உபாசகர்!

    திராச ஐயா இசையிலும் வல்லுனர்! சுப்புடு சீடர்!

    அவர் மற்றும் ஜீவா எழுதும் இசை இன்பம் வலைப்பூவினை மறந்து விட்டீர்களே!

    மூவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வாருங்கள் வேளராசி அடுத்த பதிவில் பொன் நிற திருக்கையிலாய படம் இடுகின்றேன். முதல் பதிவிலேயே சிவப்பு, பொன் வெள்ளை படங்கள் உள்ளன சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ReplyDelete
  10. நவீன நாரதரை இழுத்து வந்து பின்னூட்டம் இட வைத்த திருக்கயிலை நாதருக்கு அனந்த கோடி வணக்கங்கள்.

    ReplyDelete
  11. //தத்துவ வித்தகர் ஜீவா என்றே சொல்ல வேண்டும்!//

    அடியேன் அதை வழி மொழிகிறேன்.

    மதுரையம்பதி என்னும் மெளலி அண்ணா...அன்னையின் அருட்பாலகர், சக்தி உபாசகர்!

    அன்னையின் அருள் அழகை சௌந்தர்ய லஹரியை எழுதும் அவருக்கு அன்னை சகல வளங்களையும் நலங்களையும் அருள வேண்டுகிறேன்.

    திராச ஐயா இசையிலும் வல்லுனர்! சுப்புடு சீடர்!

    அவர் மற்றும் ஜீவா எழுதும் இசை இன்பம் வலைப்பூவினை மறந்து விட்டீர்களே!

    ReplyDelete
  12. //திராச ஐயா இசையிலும் வல்லுனர்! சுப்புடு சீடர்!//

    புதுப் புது தகவல்கள் கொடுத்து அசத்துகிறீர்கள் KRS ஐயா.

    //அவர் மற்றும் ஜீவா எழுதும் இசை இன்பம் வலைப்பூவினை மறந்து விட்டீர்களே!//

    அதை எப்படி மறக்க முடியும்.


    சி அ : ஆன்மீகமும்,இசையும்தான் இவரோட இரு கண்கள் .

    என்ற வரியில் இசையும் என்பதில் கிளிக்கினால் இசை இன்பம் பெறலாம்(வலைப்பூ)

    இசை இன்பத்தையும் பெறலாம்( பாடல்கள்).

    சரியாக குறிப்பிடவில்லை அதை திருத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  13. //புகைப்படங்கள் புதுமையாக எல்லாப் பதிவுகளிலும் இணைப்பதும் பாராட்டத் தக்கது//

    மலர்களின் படங்களை பதிவில் இனைக்கலாம் என்று தாங்கள் அனுமதி அளித்ததும் ஒரு காரணம்.

    முதல் பதிவில் மட்டும் திருக்கையிலை படம் போட மட்டுமே நினைத்திருந்தேன்.

    அதன் பின்னூட்டத்தில் துளசி கோபால் அம்மா இந்த வாரம் முழுவதும் சிவ சிவா என்று இருக்கட்டும் என்று கூறியதில் ஒரு பொறி தட்டியது ஒவ்வொரு நாளும் ஒரு பதிவில் மற்ற படங்களை இடலாம் என்று தொடர்கிறேம்.

    நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

    ReplyDelete
  14. இன்றுதான் இந்த பதிவினை கவனித்தேன் கைலாஷி ஐயா...

    நன்றி ஐயா!

    ReplyDelete
  15. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கின்றீர்கள்.

    வாருங்கள் மதுரையம்பதி ஐயா.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது