07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 22, 2008

கவிதையாகிக் கசிந்துருகி


இலக்கிய வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது கவிதை. ஒரு நாவலின் கனத்தை ஒரு நான்கு வரிக் கவிதை எழுதிவிட முடியும்.


இந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்


என்னும் அமுதபாரதியின் கவிதை இன்னும் நினைவுகளின் இடுக்கில் நிலைத்திருப்பதற்கு அதன் எளிமையும் அது சொல்லும் வலிமையான கருத்துக்களுமே காரணம் எனலாம்.


இன்னொன்று கவிதையில் நீங்கள் கட்டுரையின் விஷயத்தையும் சொல்லலாம், சிறுகதையையும் சொல்லலாம், நாவலையும் சொல்லலாம், நகைச்சுவையையும் சொல்லலாம். ஆனால் கவிதையை வேறு எந்த வகையிலும் நீங்கள் சொல்ல முடியாது என்பதே நிஜம்.


புனிதப் பயணம்
என்பது
நாம் செல்வதல்ல
நமக்குள் செல்வது

என சட்டென ஒரு கருத்தை பளிச் எனச் சொல்வதற்கு (எனக்கு) கவிதை வசதியாகவும், அழகாகவும் இருக்கிறது. சிலர் கவிதையை சோம்பேறிகளின் வாகனம் என்பார்கள். உண்மையில் ஒரு நான்கு வரியைச் செதுக்க ஆகும் நேரம் எவ்வளவு என்பதை கவிதை படைப்பாளிகளே அறிவார்கள்.


கவிதையில் ஏராளம் வகைகள் உண்டென்றும், ஒவ்வொன்றும் மோதிக்கொள்ளும் என்றும் எழும் விவாதங்கள் அர்த்தமற்றவை. எத்தனையோ வகையான மலர்கள் இருக்கலாம், கட்சிதமான அழகான மலர்கள் எப்போதுமே நேசிக்கப்படுபவை தான். தோட்டம் மாறியது என்பதற்காக பூக்களை யாரும் புறக்கணிப்பதில்லை.


என்னைப் பொறுத்தவரையில் எந்த வகைக் கவிதையானாலும் புரிந்து விட்டால் மிகவும் நேசிப்பேன். இதை அப்படி எழுதியிருக்கலாம் என்றோ, அதை இப்படி எழுதியிருக்கலாம் என்றோ கவிதைகளை இடம்மாற்றி அமரவைத்து யோசித்துப் பார்க்க மாட்டேன்.


கவிதை நூல் என எது கிடைத்தாலும் வாசிக்கும் ஒரு வெறி எனக்குள் இப்போதும் உண்டு. அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணிபுரிய நேர்ந்த காலத்தில் குளிர் என்னும் ஒரு கவிதை மூலம் நண்பராய் அறிமுகமானவர் புகாரி. பின்னர் அந்த நட்பு விரிவடைந்து, அவருடைய நூல் வெளியீட்டு விழாவுக்காக நான் ஆஸ்திரேலியாவிலிருந்து பறந்து வந்ததும், கனடாவிலுள்ள அவருடைய இல்லத்துக்குச் சென்று அருமையாய் மட்டன் வெட்டியதும் தனிக்கதை.


அவர் ஒரு கவிதைப் பிரியர். கவிதையை எழுதுவதோடு நின்றுவிடாமல் அந்தக் கவிதையின் ஒவ்வோர் எழுத்திலும் தனது சுவாசத்தை ஊட்டி வைப்பவர். சந்தத்தின் சந்துகளிலும் அவருடைய எழுத்துக்கள் துள்ளி விளையாடும். சந்தேகமெனில் ஒருமுறை அவருடைய வலைத்தளத்துக்குச் சென்று பாருங்கள்.


நதியலை என்றொரு வலைத்தளம் நான் அடிக்கடி உலவும் இடம். இவருடைய கவிதைகளில் உமிழ்ந்து விட்டுச் செல் போல சட்டென அடிக்கும் கவிதைகள் பல.


முபாரக் என்பவரின் முடிவற்ற அன்பின் தேடல் வலைத்தளம் தனியே ஒருவித வாசனை கொண்டிருக்கிறது. உனக்கெனவும் என்பதைப் போன்ற பளிச் கவிதைகள் மனதைக் கவர்கின்றன.


மணிகண்டனின் பேசலாம் வலைத்தளத்தில் கவிதைகள் பல உலவுகின்றன. தீராப்பிரியங்களில் கவிதை எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று.


கடற்கரய் பற்றி நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை. அவருடைய வலைத்தளத்தில் கவிதைகள் கிடைப்பதை விட கவிதைகள் குறித்த உரையாடல்கள் நிறைய கிடைக்கின்றன.


தனிமையின் இசை தளத்தில் கிடைக்கும் சில கவிதைகளும் நிறைய புலம்பல்களும் சுவாரஸ்யமாய் உள்ளது.


DISPASSIONATED DJ வலைத்தளம் போயிருக்கிறீர்களா ? கவிதைகள் கொஞ்சமே ஆனால் மனதுக்குள் நிற்கும்…



நீ

யாரையோ பார்த்து பிரமிக்கும்

அதே வினாடியில்

யாரோ

உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம்.

9 comments:

  1. சிறப்பாக இருக்கிறது...

    ReplyDelete
  2. அருமையான கவிதைகள்

    ReplyDelete
  3. //உண்மையில் ஒரு நான்கு வரியைச் செதுக்க ஆகும் நேரம் எவ்வளவு என்பதை கவிதை படைப்பாளிகளே அறிவார்கள்//

    முற்றிலும் உண்மை....சேவியர்...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  4. //உண்மையில் ஒரு நான்கு வரியைச் செதுக்க ஆகும் நேரம் எவ்வளவு என்பதை கவிதை படைப்பாளிகளே அறிவார்கள்//

    உண்மை சேவியர் - கவிஞர்களால், கவிதை எழுதும் போது கிழித்துப்போடப்பட்ட தாள்கள் செதுக்கும் நேரத்திற்குச் சான்று கூறும்.

    பல அருமையான பதிவுகளுக்குச் சுட்டிகள் - புகார் உட்பட - அருமையான கவிஞர்கள்.

    நல்லதொரு பதிவு சேவியர்

    ReplyDelete
  5. //அருமையான கவிதைகள்//

    நன்றி திகழ்மிளிர். :)

    ReplyDelete
  6. நன்றி அருணா. நன்றி சீனா சார்.

    ReplyDelete
  7. //இந்தக் காட்டில்
    எந்த மூங்கில்
    புல்லாங்குழல்//

    முதலில் இது பிடித்தது.

    //புனிதப் பயணம்
    என்பது
    நாம் செல்வதல்ல
    நமக்குள் செல்வது//

    அடுத்த இது ரொம்பப் பிடித்தது.

    //என்னைப் பொறுத்தவரையில் எந்த வகைக் கவிதையானாலும் புரிந்து விட்டால் மிகவும் நேசிப்பேன். இதை அப்படி எழுதியிருக்கலாம் என்றோ, அதை இப்படி எழுதியிருக்கலாம் என்றோ கவிதைகளை இடம்மாற்றி அமரவைத்து யோசித்துப் பார்க்க மாட்டேன்.//

    இது ரொம்ப ரொம்பவே பிடித்து விட்டது.

    ReplyDelete
  8. மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது