07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 10, 2008

அடியேனையும் இரசிக்கும் சில அன்பர்கள்

எந்த கலைஞனுக்கும் கைதட்டல் எவ்வாறு உற்சாகத்தைத் தருமோ அது போல வலைப்பூவில் பின்னூட்டங்கள் வ்லைப்பின்னலர்களுக்கு உற்சாகத்தை தருகின்றன. இவ்வாறு அடியேனுக்கு ஆதி காலத்திலிருந்து ஊக்கம் அளித்து வரும் சில அன்பு உள்ளங்களின் வலைப்பூக்கள் இப்பதிவில். ஏனென்றால் அடியேனின் வலைப்ப்பூக்களை படிப்பவர்கள் மிகக்குறைவு.

முதலில் நாம் பார்க்கப்போகும் அன்பர் வடுவூர் குமார் கட்டுமானத்துறை நிகழ்வுகளை பற்றிய பதிவிடற இவர், அவ்வப்போது கொஞ்சம் வெளி விஷயங்களைப்பற்றியும் எழுதுகின்றார்."இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!" ஒரு அரிய உண்மையும் கூறும் இவர், தன்னுடைய பழைய இடுகைகளுக்கு இட்டுள்ள பெயர் கள்ளிப்பெட்டி, இவரை மயக்கும் பாடல்களையும், பிடிக்கும் பாடல்களையும் தருகின்றார் இவர் கட்டுமானத்துறை என்ற அவரோட வலைப்பூவில்.
கத்திப்பராவில் கட்டிய புதுமேம்பாலத்தில் Shoulderகள் இல்லை என்றும். வாகன போலீஸ்காரர்களூக்கு முகக்கவசம் கொடுக்கவேண்டும்.அரசாங்கம் மூலம் நடக்கவேண்டும் என்றால் இவர்களை சென்றடைய இன்னும் பல காலங்கள் அதற்குள் அவர்கள் நலம் இன்னும் மோசமாகக்கூடும்.அதனால் செலவு குறைவாகக்கூடிய இந்த நற்பணியை தமிழ் வலைப்பதிவர்கள் ஏன் மேற்கொள்ளக்கூடாது? கேட்பதிலிருந்து இவரது நல்ல உள்ளம் உங்களுக்கு புரிந்திருக்கும்.மேலும் இவர் லினக்ஸ் என்று வலைப்பூவில் லினக்ஸ் கற்றுத்தருகின்றார்.


--------------------------------------------------------------------


அடுத்த அன்பர் ச்சின்னப்பையன் சார். இவரை இவர்கள் தங்கமணி தண்ணி தெளிச்சுவிட்டா போறாதுண்ணு குடத்தையை அப்படியே கவுத்துட்டதால் வலைச் சரத்தையே தன்னுடைய நகைச்சுவையா கலக்கிட்டு இருக்கறரு.2020ல் இவர் தான் தமிழக முதல்வருன்னு நம்பிக்கையோட இருக்கறவங்களை இவரோட வலைப்பதிவுக்கு வரலாம்னு கூப்புடறாருங்க. இவரின் காமெடிகளை இரசிக்க க்ளிக்குங்கள் ச்சின்னப் பையன் பார்வையில் .


தற்போது இவர் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
வலைப்பூவின் அட்லாஸ் சிங்கம். இவ்வாறு உல்லாசமாக சுற்றிக்கொண்டிருக்கும் வாலிபப்பசங்கள்ன்னு தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்கள்நேரம் கிடைக்கும் போது சென்று படியுங்கள் ச்சின்னப்பையன் வலைப்பூவை வாய் விட்டு சிரித்து உங்கள் நோய் விட்டுபோகும். அப்படியே பொழுது போக்கவேணும்ன்னா வாலிபபப்சங்க வலைப்பூபக்கம் போங்க அவங்க அடிக்கற லூட்டியில உங்க மனம் லேசாயிடும்.
------------------------------------------------------------
மூன்றாவது அன்பரும் மிகவும் நகைச்சுவையாக எழுதுபவர்தான். இவர் மட்டுமல்ல இவரது அன்பு மகளும் அதாவது அபி பாப்பாவும் தாய் ( இங்கு தந்தை) எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று நிரூபித்தவள். இவரது வலைப்பூ அபி அப்பா
இவர் மற்றவர்களுடன் சேர்ந்து கும்மி அடிக்கும் தள்ம் எது தெரியுமா? அன்பர்களேவேடந்தாங்கல்.......
பறவைகள் சரணாலயம் அல்ல இது கும்முபவர்களின் சரணாலயம். அன்பின் பிறப்பிடம்;நட்பின் உறைவிடம்;சந்தோஷ சரணாலயம் வேடந்தாங்கல்.

நாங்கதேன்னு இவருடன் சேர்ந்து கும்முபவர்கள் இவங்கதேங்க

ஆயில்யன்

பொன்வண்டு

கண்மணி

காயத்ரி

முத்துலெட்சுமி-கயல்விழி

கோபிநாத்

மின்னுது மின்னல்

.:: மை ஃபிரண்ட் :

:. குட்டிபிசாசு

இளைய கவி

தருமி

சுரேகா..

அய்யனார்

குசும்பன்அபி அப்பாவின் நூலகம் ஒரு அருமையான தகவல் பெட்டகம் என்றால் அது மிகையாகாது. இவ்வ்லைப்பூவில் கர்நாடக சங்கீதம், பின்னவீனத்துவம், பெண்களின் பிரச்னைகளூக்கான தீர்வு, அவர் ஊரான மயிலாடுதுறை மற்றும் மரக்காணம் பாலவின் பதிவுகள் உள்ளன.ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - என்று ரமணர் காட்டிய பாதையில் நடக்கும் அபி அப்பாவிற்கு வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------


10 வருடங்களாக செளதி அரேபியாவில் பணி புரிகிறேன். பிடித்தது ‍‍- தமிழ், பிடிக்காதது - பொய் பேசுவது, கற்றது பிழைப்பு நடத்துமளவுக்கு மின் பொறியியல், கல்லாதது - உலகளவு, கேட்க விரும்புவது இனிய இசை, கேட்க விரும்பாதது - புறம் பேசுவது, மற்றபடி என்னை பற்றி கூற என்ன இருக்கிறது? அப்படின்னு தன்னை அறிமுகம் செய்து கொள்கின்ற expat Guru ஐயாதான் நம்மோட அடுத்த அன்பர் Madras Thamizhan என்று வலைப்பூவின் பெயர் வைத்துக்கொண்டு உலக்ம் சுற்றும் Expat Guru ஐயா அவர்கள். பல இடங்களில் இவர் பட்ட கஷ்டங்களைக்கூட மிகவும் நகைச்சுவையாக எழுதுகின்றார் இவர். நல்லதை நினைப்போம், நல்லதே செய்வோம்! என்ற கொள்கையுடன் வலம் வரும் இவருக்கும் வாழ்த்துக்கள். ஆனால் ஐயா தன்னுடைய இயற்பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.
---------------------------------------------------

அடுத்த அன்பர் கோவி கண்ணன் அவர்கள். காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்) -உலகத்து உண்மைகளை உரக்கச் சொல்லுவது அறிவியல் ... உணர்ந்து சொல்லுவது கவிதைகள் ...! என்று இவரது இவ்வலைப்பூ முழுவதும் அருமையான கவிதைகள். எத்தனை எத்தனை எண்ணங்கள் நெஞ்சினிலே.... வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!நேரமில்லை என்றால், தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே! என்று இவர் கூறும் விதம் அருமை. இவரது இரண்டாவது வலைப்பூ காலம் எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
----------------------------------------------------

அடுத்த அன்பர் பாஸ்டன் பாலா ஐயா அவர்கள் பீட்டர்ஸ் என்னும் வலைப்பூவில் ஆங்கிலம் பேசுவது எழுதுவது குறித்தான உதவிப் பதிவு.
உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். என்று அன்பர்க்ளைன் பல சந்தேகங்களை தீர்த்து வைக்கின்றார். உலகும் முழுதும் உள்ள விளம்பரங்களை தொகுத்து India, NRI, Tamil, USA, World News
பாஸ்டன் பாலாவிடம் - 1. நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா? என்ற கேள்வியில் பாட்ஸ்டன் பாலா ஐயாவின் எழுத்து வன்மை புரியும்.
மற்ற அன்பர்களைப்பற்றி முன்னர் எழுதிய பதிவுகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் விடுபட்ட அன்பர்களின் வலைப்பூக்கள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. மேலும் சில சமயம் வந்து பார்த்து விட்து பின்னூட்டம் இடாமலும், ஏதோ ஒரு தடவை பின்னூட்டமிட்டும் சென்ற அன்பு உள்ள்ங்கள் கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வரும் கால்த்திலும் வந்து தரிசன்ம் பெறுங்கள்.
---------------------------------


View of west and North faces - மேற்கு முக மற்றும் வடக்கு முக தரிசனம்North face on way to Dolma Pass- we can clearly see the extension of the east face.


டோல்மா கணவாய் செல்லு வழியில் கைலாய தரிசனம். சிவலிங்கத்தின் தாரா போல விளங்கும் கிழக்கு முகத்தின் தொடர்ச்சியை தெளிவாக காணலாம்.

இன்றைய தினம் மரகதவல்லி மீனாக்ஷி அம்மன் மலைமகள் கௌரி நீராடும் கௌரி குளத்தின் தரிசனம் காணுங்கள் அன்பர்களே. அன்னையின் கர்ப்பகிரகம் டோலமா கணவாய் மற்றும் கௌரி குளம் இயற்கையாகவே அம்மனுக்கு உரிய இடப்பக்கத்தில் அமைந்துள்ளது.

Gauri Kund in June.


Gauri Kund

Gauri Kund is located just below Dolma Pass. It is supposed to be the pond in which Mother Parvati takes bath. It is really wonderful that the pond is emerald green reflecting the color of Mother. where as the water is crystal clear. The water of Gauri Kund is supposed to have cancer curing properties.
2 comments:

 1. திரு கைலாஷ்,
  நினைவு வைத்திருந்து குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி !

  உங்கது ஆன்மிக வழியின் பயணங்களில் வெற்றிகரமாக முன்னேறிச் சென்று வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 2. நன்றி மறப்பது நன்றன்று அல்லவா கோவி கண்ணன் அவர்களே.

  பாதைகள் வேறானாலும் போய் சேர்கின்ற இடம் ஒன்று தானே.

  தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது