இன்னும் சில ஆன்மீகப்பதிவர்கள் -1
➦➠ by:
Kailashi
அடியேன் வலைச்சரத்தில் எழுத ஆரம்பித்த போது சிறிது ஐயத்துடன்தான் ஆரம்பித்தேன் அதிகமாக ஆன்மீகப்பதிவுகளீயே எழுதி வலையிலும் அதிகமாக பார்க்கும் வலைப்பூக்களும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவையே யார் வந்து படிப்பார்களோ தெரியவில்லை என்று குழம்பியே பதிவுகள் எழுத ஆரம்பித்தேன், மொக்கை பதிவுகளோ, கும்மியோ, அடியேன் அறியாதது, ஆயினும் சென்ற வாரக் கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே நன்றாக இருந்தது. குறிப்பாக திருக்கயிலை நாதரின் தரிசனம் இவ்வளவு அதிகம் பேர் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எனவே இன்னும் பல பதிவுகள் ஆன்மீகப்பதிவர்கள் பற்றி எழுத விழைகின்றேன. அநேகமாக அனைவருமே சில விழுக்காடு ஆன்மீகம் கலந்தே எழுதுகின்றனர். இதுவரை வலைச்சரத்தில் கூறப்பட்டவர்கள அனைவ்ரும் அதிக சதவீதத்தில் எழுதுபவர்கள். இன்னும் எண்ணற்ற அன்பர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை அடியேன் கண்டு கொள்ளாதது அவர்கள் குற்றமல்ல அடியேன் குற்றமே. வலைப்பதிவுகள் எழுதும் நேரம் போக சிறிது நேரமே மற்ற வலைப்பூக்களை காண முடிகிறது என்பதால். ஆகவே ஆன்மீக பதிவராக அடையாளம் காட்டப்பட விருப்பமுள்ள அன்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் தங்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.
எனவே இன்னும் பல பதிவுகள் ஆன்மீகப்பதிவர்கள் பற்றி எழுத விழைகின்றேன. அநேகமாக அனைவருமே சில விழுக்காடு ஆன்மீகம் கலந்தே எழுதுகின்றனர். இதுவரை வலைச்சரத்தில் கூறப்பட்டவர்கள அனைவ்ரும் அதிக சதவீதத்தில் எழுதுபவர்கள். இன்னும் எண்ணற்ற அன்பர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை அடியேன் கண்டு கொள்ளாதது அவர்கள் குற்றமல்ல அடியேன் குற்றமே. வலைப்பதிவுகள் எழுதும் நேரம் போக சிறிது நேரமே மற்ற வலைப்பூக்களை காண முடிகிறது என்பதால். ஆகவே ஆன்மீக பதிவராக அடையாளம் காட்டப்பட விருப்பமுள்ள அன்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் தங்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.
இப்பதிவின் முதல் அன்பர் SP VR சுப்பையா அவர்கள். இவரை எல்லாரும் வாத்தியார் என்று அழைக்கின்றனர். இவர் உண்மையாகவே வலைப்பூ மூலம் ஜோதிடம் பாடம் நடத்துகிறார். இவரது வலைப்பூவும் வகுப்பறையே ஆனால் பிரம்பில்லாமல், கண்டிப்பும் இல்லாமல், கனிவை மட்டும் மனதில் கொண்டு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை!. ஆனால் வ்ருகைப்பதிவேடு மட்டும் உள்ளது. இவரின் மாணாகக்ர்களின் பெயரால இது நிறைந்துள்ளது.
தன்னைப்பற்றி ஐயா என்ன சொல்லுகின்றார் பாருங்கள்.
எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது? என்பார் கவியரசர் கண்ணதாசன்.என்னைக் கவலையில்லாத மனிதனாக மாற்றியது அவருடைய எழுத்துக்களும் பாடல்களும்தான. கவலையில்லாத மனிதன் என்று ஆகிவிட்ட பிறகு என்னைப் பற்றி வேறு என்ன உயர்வாகச் சொலல முடியும்?
இவரது மற்றொரு வலைப்பூ பல்சுவை. இவ்வலைப்பூவில் சுப்பையா அவர்கள் வாழநினைத்தால் வாழலாம் வழியாயில்லை பூமியில் ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா! என்று அனைவருக்கும் ஊக்கம் தருகின்றார்.
"பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை!
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!"
- கவிஞர் வாலி யின் பாடலுடன் அழகு முருகனின் வாகனமாம் மயிலை தன் பதிவில் இட்டுள்ள வாத்தியார் ஐயா முருகனருள் பாடுகின்றார். தேவகோட்டையை சேர்ந்த இவர் இப்ப என்ற ஊருக்காரர் ( கொங்கு) ஆயிட்டாருங்க. சுப்பையா அவர்களே தங்கள் சேவை இன்னும் சிறக்க பிரார்த்திக்கின்றேன்.
"பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை!
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!"
- கவிஞர் வாலி யின் பாடலுடன் அழகு முருகனின் வாகனமாம் மயிலை தன் பதிவில் இட்டுள்ள வாத்தியார் ஐயா முருகனருள் பாடுகின்றார். தேவகோட்டையை சேர்ந்த இவர் இப்ப என்ற ஊருக்காரர் ( கொங்கு) ஆயிட்டாருங்க. சுப்பையா அவர்களே தங்கள் சேவை இன்னும் சிறக்க பிரார்த்திக்கின்றேன்.
அடுத்த ஆன்மீகபப்திவர் கண்ணன் பாட்டு பாடுற மடல்காரர் இவரது வலைப்பூ மடல்கள் அருமையான கவிதைகள் நிறைந்த வலைப்பூ. இவர் தனனை இவ்வாறு அறிமுகப்படுத்திக்க்கொள்கின்றார் " தன் தகவல் " என்று.
. Madal Kadai - மடல் கடை யில் அருமையான சரக்கு வகைகள் உள்ளன், என்ன சரக்குகள் என்று தாங்களே சென்று கண்டு கொள்ளுங்கள்.
மேலும் மடல் கட்டுரை வலைப்பூவில் அருமையான கட்டுரைகளை எழுதுகின்றார்.
அடுத்து நாம் காணப்போகும் அன்பரின் பதிவுகளை இது வரை கண்டு மகிழ்ந்தவர்கள் மூன்று லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள்.
http://siththan.com/
இவையெல்லாம் ஐயாவின் சில வலைப்பூக்கள்.
இவர் பெயரே ஒரு புதுமை ஞான வெட்டியான். உலோகத்தை வெட்டி எடுத்து எல்லோருக்கும் பயன்படுமாறு தருபவர்கள் போல ஞானத்தை வெட்டியெடுத்து அனைவருக்கும் வழங்குபவர்.
பக்தி, யோகம், ஞானம், ஆன்மிகம், இலக்கியம், சித்தர் இலக்கியம், இறைவன் வழிபாடு, ஆன்ம விழிப்பு, ஆலயங்கள், தத்துவம், Thamizh Classics & Poetry எல்லாம் இவர் வலைப்பூக்களில் அடக்கம்.
பிரபுலிங்க லீலை - 2.25
அடிகளிற் சிலம்பு
புத்த னிச்சம் படினும் பொறாமையை
எய்த்து மற்றை யிருமணத் தம்மியில்
அத்தன் வைத்த அடிக்கம லங்களின்
முத்த ரிச்செஞ் சிலம்பு முழங்குற.
புத்து அனிச்சம் - புதிய அனிச்சமலர்.
எய்த்தும்- உணர்ந்திருந்தும்.
அத்தன்-இறைவன்.
முத்து அரி-முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட.
இருமணம் என்பது மலையரசன் மகளாகப் பிறந்து மணம் புரிந்ததையும், மலையத்துவச பாண்டியன் மகளாகப் பிறந்து மணம் புரிந்ததையும் குறிக்கும். இவ்விரு மணங்களிலும் அம்மியின்மீது இறைவன் வைத்த பாதங்கள் எப்படி இருந்ததாம்? இப்பாதங்களைக் கண்டு புது அனிச்ச மலர் பொறாமை கொண்டதாம். இப்படிப்பட்ட பாதங்களில் இறைவன் முத்துப் பரல்கள்களை உள்ளடக்கிய சிலம்பு அணிந்துள்ளார். இது தில்லையில் ஆடும் ஐயனின் சிலம்புகளைப்பற்றி ஐயா எழுதிய ஒரு பதிவு.
திருவாசகம், கந்தர் கலி வெண்பா, சிவ வாக்கியர் பாடல்கள் எல்லாம் பற்றி எழுகிறார் ஞான வெட்டியான் ஐயா.
---------------------------------------------------------
திருக்கயிலாய யாத்திரையின் CD/DVD/ புத்தகம் வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmail.com என்ற மின்னஞ்சலில் தங்கள் முகவ்ரியுடன் தெரிவித்தால் அனுப்பி வைக்கிறேன்.
* * * * *
இன்றைய தினம் அகோர முக தரிசனம் ஆனால் அருகில் இருந்து அல்ல தூரத்தில் இருந்து இவ்வாறு பார்க்கும் போது திருக்கயிலாய மலையின் முழு தரிசனமும் பெறுகின்றோம்.
புராணங்களின் படி இம்முகம் தொங்கிய தாடி உடையதாய் வெளிப்பட்ட பற்களுடையதாகி, கண்டோர்க்கு அச்சமாய் கரிய நிறமாகி வயதான முகம் போல் வலத்தோளில் தெற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் இம்முகம் அக்னியை குறிக்கின்றது. ஐந்தொழிலிலே அழித்தல் தொழிலை (சம்ஹார காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'சி'. ஐயன் அகோர ருத்ர ரூபம். அம்மை இச்சா சக்தி.
அகோரேப்யோத கோரேப்யோ கோரகோர தரேப்ய:
ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ய
என்னும் தக்ஷ’ண வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்கிறோம்.
The south face is known as AGHOR- represents the destroyer, one who dissolves everything in the end at the time of dissolution.

யம பயம் போக்கும் யம துவாரம் மற்றும் திருக்கயிலாயம்






இது வரை அலி ரோட்டிலிருந்து கண்ட தரிசனம் இனி வருவது யமதுவாரத்திலிருந்து கண்ட தரிசனம்


காளை நாதன் கயிலை நாதன் எதிரே ( நன்றி KRS)


žரிய சிம்மாதனத்தில் அமர்ந்து உலகை இரக்ஷ’க்கும் ஜகன் நாயகி நாயகனின் தரிசனம் நந்தியுடன்

|
|
பரவசமூட்டும் படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி கைலாஷி ஐயா.
ReplyDeleteவரும் நாள்களிலும் வந்து தரிசனம் பெறுங்கள் மதுரையம்பதி ஐயா.
ReplyDeleteபடங்களெல்லாம் அருமை. அத்துடன் புதிய வலைபூக்களின் அறிமுகமும் கிடைத்தது. நன்றி கைலாஷி.
ReplyDelete//புதிய வலைபூக்களின் அறிமுகமும் கிடைத்தது. நன்றி கைலாஷி.//
ReplyDeleteஇவர்கள் அனைவரும் software துறையை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், கடக் கடந்து சென்றும் ஆன்மீகத்தையும், தமிழையும் மறக்கவில்லை பாருங்கள் கவிநயா.
கயிலையம்பதியின் திருத்தரிசனத்திற்கு நன்றிகள் ஐயா.
ReplyDelete70 பதிவுகளில் ஒரு வருடத்தில் சாதிக்காததை இந்த இரண்டு வாரங்களில் வலைச்சரம் சாதிக்க உதவியுள்ளது. வலைச்ச்ர குழுவினருக்கு நன்றி.
ReplyDeleteதரிசனம் பெற்ற அனைவருக்கும் கயிலை நாதன் அருள் நிச்சயம் உண்டு.
வாசிப்பு அனுபவத்தால் உணர்வுகளாய் இருந்த சில காட்சிகளைத் தங்கள் புகைப்படங்கள் மூலம், புலக்கண்களுக்கு பார்க்குமாறு செய்தமைக்கு மிக்க நன்றி, கைலாஷ் ஐயா!
ReplyDeleteதாங்கள் அனுபவித்து இரசித்ததை
மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் பாங்கு போற்றத்தக்கது.
வாருங்கள் ஜீவீ ஐயா. எல்லாம் அவன் செயல். பதிவுகள் முடியுன் வரையிலும் வந்து தரிசனம் பெறுங்கள்.
ReplyDeleteநன்றி மற்றும் வாழ்த்துக்கள்.