07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 2, 2008

விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர்

அற்புத கீர்த்தி வேண்டின்ஆனந்த வாழ்க்கை வேண்டின்நற்பொருள் குவிதல் வேண்டின்நலமெல்லாம் பெருக வேண்டின்கற்பக மூர்த்தி தெய்வக்களஞ்சியத் திருக்கை சென்றுபொற்பதம் பணிந்து பாரீர்பொய்யில்லை கண்ட உண்மை.

கவிஞர் கண்ணதாசன்
ஸ்ரீ கற்பக விநாயகர் எனக்கு மங்களம் தந்தருள்க! ஆறுமுகப்பெருமான் எனக்கு மங்களம் தந்தருள்க! ஸ்ரீ மகேஸ்வரரும் எனக்கு மங்களத்தைத் தந்தருள்க!ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும், நான்கு தோள்களும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக விநாயக மூர்த்தியை நான் தொடங்கும் சகல காரியங்களும் எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக வணங்குகிறேன்.

மங்கள முகம் வாய்ந்த ஸுமுகன்
ஒற்றைக்கொம்பையுடைய ஏகதந்தன்கபில நிறம் வாய்ந்த கபிலன்யாணைக் காதுகள் உள்ள கஜகர்ணன்பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்குள்ளத்தோற்றமுள்ள விகடர்சகல விகனங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்துஷ்டச் செயல்களையும் இடையூறுகளையும் நீக்குவதில் வல்லவரான விநாயகன்.நெருப்பைப் போல ஒளி வீசித் திகழ்பவரான தூமகேது.பூதகணங்களுக்கு தலைவராக விளங்கும் கணாத்யக்ஷன்நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடியவரான பாலச்சந்திரன்யாணை முகத்தியுடைய கஜானனன்.வளைந்த துதிக்கரமுள்ள வக்ரதுண்டன்முறம் போல அகலமான காதுகள் உள்ள சூர்ப்பகர்ணன்.தம்மை வணங்கி நிற்கும் பக்த கோடிகளுக்கு அருள் பொழியும் ஹேரம்பன்.கந்தபெருமானின் தமைனாயரான ஸ்கந்த பூர்வஜன்.இவ்வாறு சொல்லப்படும் விநாயகப்பெருமானின் பதினாறு திருநாமங்களையும், வித்தைகளைக் கற்கத் தொடங்கும் போதும், வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போதும், போர்க்காலத்திலும், இன்னல்கள் வந்த போதும், யாராவது வாசித்தாலும், அல்லது செவி குளிரக் கேட்டாலும் அவர்களுக்கு எந்த வித விக்கினங்களுமே சம்பவிக்காது.

அன்பர்கள் அனைவருக்கு இனிய "விநாயகர் சதுர்த்தி" நல்வாழ்த்துக்கள். அந்த விக்னவிநாய்கர் தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் நல் அருளை வழங்குமாறு பிரார்த்திக்கின்றேன்.****************சி. அ : சூப்பர்ப்பா! விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு ஒரு நல்ல பதிவு போட சான்ஸ் கெடச்சதுக்கு.பெ. அ: விநாயகரைப் பத்தி ஏதாவது சொல்லுங்களேன்.விநாயகப் பெருமானும் ஒரு எழுத்தாளர் தான்னு நெறையப் பேருக்கு தெரிஞ்சுக்காது.சி. அ: ஆஹா, அப்படியா, எந்த கதைப்பா எழுதுனாரு அவரு.பெ. அ : இது கூடவா தெரியல்ல?சி.அ : (ஆமாம்மான்னுடு சிரிக்கறா) , ஏமாந்திட்டயா, நல்லாவே தெரியும் அவரு மஹா பாரதத்தை எழுதினாருன்னு.ஆமா, வியாச மஹரிஷி கூறிய பாரதத்தை, அவர் கூறிய வேகத்திற்கு எழுத யாராலும் முடியவில்லையாதலால் கணபதி தானே வந்து எழுதியருளினார்.சி. அ: அம்மா நீங்க சொல்லுங்க , விநாயகர் எதால மஹாபாரதத்தை எழுதினாரு.பெ. அ: பெரிய கேள்வி கேட்டுட்ட போ?சி. அ: அதெல்லாம் முடியாது பதில் சொல்லுங்க.பெ. அ : கஜாமுகாசூரனைக் கொன்ன தன்னோட ஒத்தை கொம்பாலதான் அவ்வளவு ஸ்பீடா எழுதுனாறு அது கூடவா எனக்குத்தெரியாது.


சரி ரெண்டு பேருமே புத்திசாலிகதான். இன்னைக்கு யாரைப்பத்தி சொல்லப்போறேன்னு சொல்லுங்க பார்க்கலாம்.ரெ. பே: எங்களுக்கு தெரியாதா, உங்களுக்கு புடிச்ச யாராவது ஒரு ஆன்மிகப் பதிவரத்தான்.இல்லையே, இன்னிக்கு ஆண்டவன் புகழ் பாடும் பதிவுகளைப் பத்தி சொல்லப்போறேனே.சி. அ : அப்படியும் பதிவுகள் இருக்குதாப்பா ?.ஆமாம்மா நெறைய இருக்கு, பல்வேறு அன்பர்கள் ஒண்ணா சேர்ந்து இது மாதிரிக் குழுப்பதிவுகள் எழுதுறாங்க.பெ. அ: அதுல்ல எதை முதல்ல சொல்லப்போறீங்க. கண்ணன் பாடல் பதிவைப்பத்தித்தான்.இந்த அன்பர்கள்தான் கண்ணன் பாட்டு பாடறவங்க


கண்ணபிரான்மடல்காரன்

ஷைலஜா


மலைநாடான்


தி. ரா. ச.(T.R.C.)


கவிநயா


குமரன் (Kumaran)


dubukudisciple Raghav


இவங்க எல்லாரும் சேர்ந்து படைக்கிற விருந்துதான் கண்ணன் பாட்டு. நூறாவது பதிவில் கன்னட பாடல் "கிருஷ்ணா நீ பேகனே வாரோ" பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு, பாடல் ஒரு அன்பர் பாடறவங்க ஒருவர், தனி முத்திரை அப்படின்னு கலக்கிட்டாங்க.

சி. அ: நெஜமா எல்லாரும் போய் பாக்க வேணுங்கற வலைப்பூவுன்னு சொல்லறீங்களா அப்பா?

நிச்சயமா, அதுல என்ன சந்தேகம்.

சி . அ: நூத்துக்கு மேல பதிவுகள் இருக்கறதுனால இதை முதல்ல சொன்னீங்க இல்ல அப்பா.

ஆமாம்மா முதல் முதல்ல ஆரம்பச்சதினாலயும் சொன்னேன்மா.


பெ . அ : அப்ப அடுத்து முருகனருள் பதிவைப்பத்திதான சொல்லபோறீங்க.

கரெக்ட்டா யூகிச்சிட்டியே

சி அ: உங்க பேரு அதுல வருதே அதனால தான அப்பா

விளையாடதம்மா அடுத்ததா நூறாவது பதிவைத் தொடப்போறாங்கறதால முருகனருளை ரெண்டாவதா சொல்றேம்மா.

பெ. அ: யார் யாருங்க இதுல காவடி சிந்து பாடறாங்க?இரவிசங்கர் கண்ணபிரான்
குமரன் (Kumaran)

VSK

நாமக்கல் சிபி

SP.VR. SUBBIAH

G.Ragavan

தி. ரா. ச.(T.R.C.)

இவங்கதாம்மா அந்த முருக பக்தர்கள்.

சி. அ : திருமாலையும் அவரது மருகரான வேலனையும் பாடறவங்களைப் பத்தி சொல்லியாச்சு அடுத்து யாருப்பா?

அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையை ப்பாடறவங்களைப் பத்தி சொல்லலாம்மா?

பெ. அ: சரி, அம்பாளைப்பத்துன பாடல்கள் உள்ள வலைப்பூ கற்பூர நாயகியே கனகவல்லி தானேங்க?

ஆமா, அதுல அம்மன் புகழ் பாடுறவங்க

KRS கண்ணபிரான்கவிநயா

குமரன் (Kumaran)

VSK

அன்புத்தோழி

சி. அ: இப்பதிவுல எனக்கு கவிநயா ஆன்டியோட கவிதைகள் நல்லா புடிக்கும்.

பெ. அ : எனக்கும் தான்.அடுத்தது சிவன் பாட்டைப்பத்தி சொல்லலாமா? அன்பே உருவான கயிலை நாதரின் பாட்டுகளைக்கொண்ட இவ்வலைப்பூ இப்பத்தான் ஆரம்பிச்சாங்க.

சி.அ : வலைப்பூவோட பேரு சிவன் பாட்டு

நமச்சிவாயருக்கு மங்களம் பாடறவங்க

சிவன் பாட்டுல KRS ஐயா தேவாரம், திருவாசகம் எல்லாத்துக்கும் அருமையான விளக்கங்கள், அதை விட அருமையான படங்கள்ன்னு கலக்குறாங்க.
பெ அ: மனசுக்குள் ( ஆமா, எம் புருஷனும் கச்சேரிக்கு போறேன்னுட்டு, ஒத்தப் பதிவைப் போட்டுட்டு, ஜாலியா உக்காந்து வலைச்சரத்துல எழுதிகிட்டு இருக்கிறீங்க)
*********


சன்மத காவலர் KRS ஐயாவுக்கும் மற்ற அன்பர்களுக்கும் இந்த விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு ஒரு விண்ணப்பம், ஐயா ஆதி சங்கரர் ஸ்தாபித்த சன்மதங்களில் நான்குக்கு வலைப்பூ இருக்கு. விநாயகருக்கு இன்றைக்கு ஆரம்பியுங்களேன். அடியேனும் கலந்துக்கறேன்.
வித்தக விநாயக விரைகழல் சரணே.

16 comments:

 1. இன்னிக்கு இங்கே லீவு கிடையாது. வினாயக சதுர்த்தி போன ஞாயித்துக்கிழமையே கொண்டாடியாச்சு. எல்லோருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. திரு.குமரன், அவரது 'நம்ம பாரதி' பதிவில் 'விநாயகர் நான்மணிமாலை' யினைத் தந்து வருகிறார்:
  http://nambharathi.blogspot.com/

  திரு.VSK, அவரது, 'ஆத்திகம்' பதிவில் 'விநாயகர் நான்மணிமாலை' யினைத் தந்திட்டார்:
  http://aaththigam.blogspot.com/search/label/Bharathiyar

  ReplyDelete
 3. வெளி நாட்டில் (நியூசிலாந்தில்) வசிக்கும் போது இது போன்ற சங்கடங்கள் ஏற்படத்தான் செய்யும். ஆயினும் வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை கணேசா என்று அவரை வணங்கினால் அவர் நிச்சயம் அருள் புரிவார்.

  மீண்டும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஆன்மீகப் பதிவர்களின் அருமையான பதிவுகளைச் சுட்டிக்காட்ட விநாயகர் சதுர்த்தியைத் தேர்ந்தெடுத்து, அழகாக பதிவிட்டமைக்குப் பாராட்டுகள்.

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 5. //திரு.குமரன், அவரது 'நம்ம பாரதி' பதிவில் 'விநாயகர் நான்மணிமாலை' யினைத் தந்து வருகிறார்:
  http://nambharathi.blogspot.com/

  திரு.VSK, அவரது, 'ஆத்திகம்' பதிவில் 'விநாயகர் நான்மணிமாலை' யினைத் தந்திட்டார்:
  http://aaththigam.blogspot.com/search/label/Bharathiyar//

  வினாயகர் சதுர்த்தியன்று பாரதியார் புதுச்சேரி மணக்குள விநாயகரை வேண்டி
  " நமக்குத்தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல், உமை இனிய மைந்தன் நம்மைக்காத்திடுவான்" என்று அற்புதமாக பாடிய நான்மணீமலையைப் பற்றிய சுட்டியை சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஜீவா ஐயா.

  ReplyDelete
 6. எல்லாம் அவன் செயல் சீனா ஐயா.

  எட்டாம் தேதி எழுத வேண்டியவனை ஒன்றாம் தேதி இழுத்தவன் அவனல்லவா.

  ஓம் மஹா கணபதயே நம:

  ReplyDelete
 7. விநாயகரின் திருநாமங்களை அழகுடன் விளக்கி சொன்னீர்கள். விநாயகர் படம் வெகு அழகு. நன்றி கைலாஷி. அம்மன் பாட்டில் எழுதும் அடியேனுடைய பாடல்கள் பிடிக்கும் என்று சொன்னதற்கு சிறப்பு நன்றி :) அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. உண்மையைத்தானே சொன்னேன் கவிநயா. அதிலும் சிவகாமி பஞ்சகம் உண்மையில் என்னை மிகவும் கவர்ந்தது.

  மறுபடியும் வந்து பாருங்கள்.

  ReplyDelete
 9. கைலாஷி ஐயா
  வணக்கம்! முதலில் வலைச்சர வாழ்த்துக்கள்!

  கொஞ்ச நாளா காய்ச்சல்! இப்போ தான் எட்டிப் பார்க்க முடிந்தது! வந்து பார்த்தா, கலக்கியிருக்கீங்க!

  ஒவ்வொரு பதிவிலும் ஈசன் எம்பெருமானின் அரு-உருவத் திருமுகமாய்,
  திருக்கயிலைத் தரிசனம், பற்பல கோணங்களில்...

  கண்டேன் அவர் திருக் கோலம்!
  கண்டறி யாதன கண்டேன்!
  என்னும்படிக்கு இருந்தது!

  ReplyDelete
 10. //நூத்துக்கு மேல பதிவுகள் இருக்கறதுனால இதை முதல்ல சொன்னீங்க இல்ல அப்பா. ஆமாம்மா முதல் முதல்ல ஆரம்பச்சதினாலயும் சொன்னேன்மா.
  //

  ஒரு சின்ன திருத்தம்.

  முருகனருள் எப்போதும் "முன்"னிற்கும்! :)
  முருகனருள் வலைப்பூ தான் முதலில் துவங்கப்பட்ட ஆன்மீகக் குழு வலைப்பூ!

  அதற்கு எட்டு மாதங்கள் பின்னர் தான் கண்ணன் பாட்டு துவங்கப்பட்டது! என்ன தான் கண்ணன் முதலில் நூறைக் கடந்தாலும், "முன்" நின்றவன் முருகப் பெருமானே ஆவான்! மருகனுக்குத் தான் மாமன் வீட்டில் முதல் மரியாதை! :)

  ReplyDelete
 11. //சன்மத காவலர் KRS ஐயாவுக்கும் மற்ற அன்பர்களுக்கும் இந்த விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு ஒரு விண்ணப்பம்//

  இப்படிப் பனம்பழத்தைத் தூக்கிச் சிற்றெறும்பின் தலையில் வைக்கிறீங்களே! தாங்குமா?

  சண்மதக் காவலர் ஆதி சங்கரர்
  அடியேன் வெறும் சங்கரன்!

  விநாயகப் பெருமானுக்கு என்று தனிப்பூ துவங்க முன்னர் யோசித்தோம்! ஒவ்வொரு குழுப்பூவிலும் அவரே முதன் முதலாய், முதற்பொருளாய் நிற்பதால், தனியாகத் துவங்காமல் இருந்தோம்!

  சரி..ஒரு சதுர்த்தி நாளாகப் பார்த்து, துவங்கி விடுவோம்!
  சூரியனுக்கு, சூர்ய நாராயணப் பெருமாளாய் இருப்பதால், கண்ணன் பாட்டு வலைப்பூவே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
 12. என்னடா இது, ஒரு குழுப்பூவிலும் அடியேனைக் காணவில்லையே!
  வெள்ளையனே வெளியேறு-ன்னு வெளியேத்திட்டாங்களோ-ன்னு நினைச்சேன்!

  ஓடிப் போய் பார்த்தா, எல்லாப் பூவிலும் அடியேன் அர்ச்சனைக்குன்னு ஓரமாய் இருந்தேன்! அப்பாடா! அது போதும் :))

  ReplyDelete
 13. //கொஞ்ச நாளா காய்ச்சல்! இப்போ தான் எட்டிப் பார்க்க முடிந்தது!//

  நலம் தானா? உடலும் உள்ளமும் நலம் தானா?

  //கண்டேன் அவர் திருக் கோலம்!
  கண்டறி யாதன கண்டேன்!//

  ஐயன் புகழ் ஞாலம் முழுவதும் பரவுவது குறித்து மகிழ்ச்சி, ஏனென்றால் தங்கள் பதிவில் இனி மேல் எம்பெருமானின் திருக்கோலமும் இடம் பெறுமே அதனால்.

  ReplyDelete
 14. //ஒரு சின்ன திருத்தம்.

  முருகனருள் எப்போதும் "முன்"னிற்கும்! :)
  முருகனருள் வலைப்பூ தான் முதலில் துவங்கப்பட்ட ஆன்மீகக் குழு வலைப்பூ!//

  முருகனருளே முன் நின்றது குறித்து மகிழ்ச்சி.

  எங்கள் ஊருக்கு மிக அருகில் பழனி முருகன்.

  என் தாத்தாக்கள்: சுவாமி நாதன், குமரன்.
  என் தந்தை : சுப்பிரமணியன்
  என் தாயார் : சரவணம்மாள்
  என் சகோதரி: கார்த்திகாயனி
  என் தமையன் : சுவாமி நாதன்
  என் அக்கா மகன் : செந்தில் குமரன்
  அடியேன் பெயரும் முருகானந்தம்.

  ஆகவே அவனை மறக்காத நாளே இல்லை.

  திருத்தத்திற்கு நன்றி.

  ReplyDelete
 15. //சரி..ஒரு சதுர்த்தி நாளாகப் பார்த்து, துவங்கி விடுவோம்!
  சூரியனுக்கு, சூர்ய நாராயணப் பெருமாளாய் இருப்பதால், கண்ணன் பாட்டு வலைப்பூவே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்!//

  மிகவும் சரி.

  ReplyDelete
 16. //என்னடா இது, ஒரு குழுப்பூவிலும் அடியேனைக் காணவில்லையே!
  வெள்ளையனே வெளியேறு-ன்னு வெளியேத்திட்டாங்களோ-ன்னு நினைச்சேன்!//

  ஆன்மீகப்பதிவர்களில் முதல் இடம் கொடுத்த தங்களை எப்படி ஒதுக்க முடியும்.

  தவறு நேர்ந்து விட்டது அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.

  அதுவும் எப்படி நேர்ந்தது என்றால் தங்கள் அறிமுக்ப்பதிவில்(Profile) இருந்துதான் பதிவர்களின் அறிமுக சுட்டியை எடுத்தேன் எனவே மற்றவர்கள் பெயர் வந்து தங்கள் பெயர் விட்டுப் போயுள்ளது.

  தவறை சுட்டிக்காட்டியதற்கு மிகவும் நன்றி.

  செய்த தவற்றை சரி செய்து விட்டேன்.

  மீண்டும் வந்து தரிசியுங்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது