என்ற ஊர்க்காரங்க
முதல்ல சொல்ல வேண்டியவரு பரிசல்காரன் அண்ணணுங்கோ, இவரும் உடலப்பேட்டக்காரருங்க ( உடுமலைப்பேட்டை) அதாவ்து உடும்பு மலை பேட்டைகாரருங்கோ. ஒரு காலத்துல எங்க திருமூர்த்தி மலைல உடும்புக நெறைய இருந்ததா கேள்வி பட்டிறுக்கோங்க ஆனா இப்பெல்லாம் கண்ணுல படறதே இல்லீங்க.
நம்மளப் பத்தி சொல்லோணும்னா..
நானெழுதுவது உங்களுக்குப் பிடிக்கவேண்டுமென நினைப்பதில்லை.. ஆனால் கண்டிப்பாய் படிக்கவேண்டுமென நினைப்பேன்! (ஏதாவது புரிஞ்சுதா?) அப்படீங்கறாருங்கோ.
பெண்களில் நல்ல பெண்கள் கெட்ட பெண்கள் உண்டு
தாயாரில் நல்ல தாயார் கெட்ட தாயார் உண்டோ
- ஆதி சங்கரர் ன்னுட்டு அம்மாவைபப்த்தி அருமையா எழுதற இவங்க எழுத்தைப்படிக்க கிளிக்குங்க சின்ன அம்மிணி.
அடுத்த கொங்கு அன்பர் Covai Ravee ங்க. இசையே மூச்சாக வாழும் அன்பர் கோவை இரவி. இவரின் வலைப்பூக்கள் தெய்வீக இராகம் SPB அவ்ர்களுக்காக படைக்கப்பட்ட வலைப்பூ. விநாய்கரோட் ஆபிஷேகம் அருமை.பாலாபிஷேகம் காணும் அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்ன்னு நல்ல எண்ணத்தோட இருககாங்க. பணம் திரட்டி பொது சேவைகளும் செய்யறாங்க.
இசைக்குயில் SJ இசைக்குயில் ஜானகியம்மா அவர்கள் வழங்கிய இனிய பாடல்கள் இந்த வலைப்பூவில கேட்கலாம் நீங்க.
இசையரசி இன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள். சினிமாப்பாடல் வலைப்பூ தேன் கிண்ணத்துலயும் எழுதுறாறு ரவி சார்.
இன்றைய தினம் முக்தி தரவல்ல மானசரோவர் ஏரியின் காட்சிகள் அதிகாலை சூரியன் ஒளியில் மற்றும் இராவணன் தவம் இராக்ஷஸ் தால் எனப்படும் இராவண ஏரியின் சில காட்சிகள்.

Sun's reflection in Holy Manasarovar

VIEW OF HOLY MANASAROVAR AT EARLY MORNING
காலை சூரிய ஒளியில் தங்கமென மின்னும் மானசரோவர்
மானசரோவர் தடாகம் பிரம்மா தனது மனதிலிருந்து உருவாக்கியது. இதன் கரையில் கிடைக்கும் ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம். இதில் ஒரு முறை குளித்தால் முக்தி வழங்கவல்லது. சிவசக்திக்கு ஆகும் அபிஷேக நீரே மானசரோவர் தடாகத்தில் வந்து கலக்கின்றது. அம்மையின் சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், வைணவர்கள் திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் கருதும் மானசரோவரின் பல்வேறு அழகை கண்டு களிக்கின்றீர்கள்.






அசுரன் இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்த போது உருவாக்கிய ஏரி இந்த இராக்ஷஸ் தால் ஏரி. எனவே இதன் தண்ணீரை நாம் பயன்படுத்துவது இல்லை. ஆயினும் யாத்திரையின் போது நமக்கு கயிலங்கிரியின் முதல் தரிசனம் இதன் கரையிலிருந்து தான் கிடைக்கின்றது.
|
|
நம்மளையும் கண்டுக்கிட்டதுக்கு நன்றி
ReplyDeleteகாலங்காத்தால எழுந்த்வுடனே எழுதறேங்க உங்களை எப்படீங்க மறக்க முடியும்.
ReplyDeleteதங்களுக்கு திருக்கயிலை நாதன் தரிசனம் வழங்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.