07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 28, 2008

லதானந்த் அவர்களுக்கு பகிரங்க கடிதம்.

பகிரங்க கடிதம் என்பதை தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் செய்த உங்களுக்கே நான் ஒரு பகிரங்க கடிதம் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

பரிசல்காரருக்கு நீங்கள் எழுதிய பகிரங்க கடிதம் பின்னர் பலருக்கும் பலரால் எழுதப்பட்டு சில வார காலங்களுக்கு தமிழ் மணத்தின் சூடாண இடுகைகளை நிரப்பியிருந்ததை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

கோயம்புத்தூர் என்றதும் என் நினைவுக்கு வருபவை குடிப்பதற்கிணிய சிறுவானி ஆற்று நீரும், கேட்பதற்கிணிய கொங்குத் தமிழும் தான். பார்ப்பதற்கு இனிய பல விசயங்கள் அங்கு இருப்பதாலும், பார்வை ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால் அதை நான் குறிப்பிடவில்லை. அந்த இனிய கொங்கு தமிழை எழுத்து வடிவில் வடித்து நீங்கள் எழுதும் போது அதன் சுவையில் மயங்காதோர் யாரும் இருப்பர் என எனக்குத் தோன்றவில்லை. அத்தனை சுவைபட எழுதிவந்த நீங்கள் சில காலங்களாய் எழுதுவதில்லை.

வ‌ட்டார‌ பேச்சு வ‌ழ‌க்கில் எழுதுவ‌தில் என் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌வ‌ர்க‌ள் இருவ‌ர். ஒன்று நெல்லை வ‌ட்டார‌ வ‌ழ‌க்கில் எழுதி த‌ள்ளும் ஆசிப் மீரான் அண்ணாச்சி அவ‌ர்க‌ள், அடுத்து கொங்கு வ‌ழ‌க்கில் எழுதும் நீங்க‌ள். உங்க‌ள‌து ப‌திவுக‌ள் எல்லாம் மிக‌ எளிய‌ ந‌டையில் ச‌ர்வ‌ சாதார‌ண‌மாய் போகிற‌ போக்கில் ப‌ல‌ செய்திக‌ளை அள்ளித் தெளித்துச் செல்லும் ப‌திவுக‌ள்.

உங்கள் பதிவுகளில் இருந்து தெரிந்து கொண்ட‌ கொங்குத் தமிழின் வார்த்தைகள் பலவற்றின் மேல் பலரும் விருப்பம் கொண்டு அவற்றை அவர்களும் உபயோகிக்கும் அளவுக்கு உங்களது எழுத்தின் வீச்சு வீரியம் கொண்டது. எடுத்துக்காட்டாக இப்ப எல்லாம் நெம்ப பேரு, ரொம்ப என்பதை நெம்ப என்றுதான் சொல்கிறார்கள் (நான் உட்பட).

உங்களுக்கு இருக்கும் தீவிரமான வாசிப்பு அனுபவங்களைக் உங்கள் பதிவுகளில் நீங்கள் காட்டும் மேற்கோள்கள் எடுத்துரைக்கும். ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரான உங்களது படைப்புகள் வராத தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனும் அளவுக்கு எழுதும் உங்களது கதைகளின் கடைசி வரியில் வரும் அந்த "லதானந்த் டச்" பல வாசகர்களை உங்களுக்கு பெற்றுத் தந்திருக்கும். இந்த கடைசி வரி டச் உங்கள் சிறுகதைகளில் மட்டுமல்ல, உங்கள் பதிவுகளிலும் உண்டு. உதாரணம் எழுத்தாளர் ஜெயமோகனுடன் உங்களது பயணத்தை நீங்கள் விவரித்த பதிவு.

நகைச்சுவை என்பது ஒரு மிகப் பெரிய வரம். எத்தனையோ சுவைகள் இருப்பினும், எல்லோராலும், எல்லா வயதிலும் அனுபவிக்க முடிந்த சுவை நகைச்சுவைத் தான். அந்த சுவை படைக்கும் திறன் உங்களுக்கு சர்வசாதாரணமாய் வருகிறது.என் அலுவலகத்தில் ஒரு நாள் நீங்கள் எழுதிய நான் கடவுள் திரைப்பட விமர்சனம் படித்துவிட்டு நான் குலுங்கி குலுங்கிச் சிரித்தது கண்டு என் மேலாளரும், மற்றவர்களும் வந்து என்ன எனக் கேட்டதை ஒரு தனிப் பதிவாகவே எழுதலாம். அந்த அளவுக்கு உங்கள் நகைச்சுவை மிகச் சிறப்பு வாய்ந்தது.

புதுமாப்பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுத்த ஐடியாவாகட்டும், இங்கிதம் எனும் தலைப்பில் நீங்கள் எழுதிய தொடராகட்டும், அனைத்துமே ஒரு நல்ல செய்தியை நகைச்சுவைக்கும் பொதிந்து தரப்பட்ட பதிவுகள். இப்படி ஒரு அருமையான எழுத்தாளாரை வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் இவ் வேளையில் மீண்டும் எழுத வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வசனம் இது,"Heard melodies are sweet but those of unheard are sweeter" அதையே உங்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எழுதிய பதிவுகள் எல்லாம் ஸ்வீட் என்றால் இன்னும் எழுதாத பதிவுகள் அனைத்தும் ஸ்வீட்டர் தான். எனவே அன்புக்குறிய லதானந்த் மாமா அவர்களே, உங்கள் ஓய்வுக்கு ஓய்வளித்துவிட்டு வீறு கொண்டொழுந்து வந்து மீண்டும் உங்களின் இனிய பதிவுகளின் வாயிலாக எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

எனது இந்த கடிதத்திற்கு நீங்கள் பதில் கடிதம் எழுத விரும்பினால் கூட அதை உங்கள் பதிவின் வாயிலாக எழுதுவீர்களேயானால் அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாக எண்ணிப் பெருமிதம் கொள்வேன். இனியும் இந்த http://lathananthpakkam.blogspot.com வலைப்பூ புதிய பதிவுகளின்றி ஓய்ந்திருக்க கூடாது. இன்றே உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ்.

17 comments:

 1. இந்த பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. இந்த பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 4. நெம்ப சரியா சொன்னிங்க அண்ணே...

  ReplyDelete
 5. ஆமாங்ணா. ஜோசப் சொல்றது உண்மைங்.சட்புட்னு சீக்கிரமாவாங்

  ReplyDelete
 6. // ஜெகதீசன் said...
  இந்த பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.

  September 29, 2008 12:36:00 PM IST
  //

  ஜெகதீசனை வழிமொழிகிறேன் !

  ReplyDelete
 7. உண்மைதான்
  ஒரு அருமையான பதிவர் எழுதாமல் இருப்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது.
  நானும் உங்கள் பதிவை வழிமொழிகிறேன்

  ReplyDelete
 8. பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 9. அன்புள்ள ஜோசஃப் பால்ராஜ்!

  மொதல்ல ஒங்களோட புதிய வலைச்சரப் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்!

  எம் மேல நீங்க வெச்சிருக்கிற அன்புக்கு நெம்ப நன்றி! ஒங்களோட அன்பு வத்தாத ஜீவ நதி மாதிரி இருக்குறது எனக்குப் பெருமையா இருக்கு!

  நான் என்னோட கடைசிப் பதிவில தெளிவாச் சொல்லியிருக்கேன். எழுதுறதை முச்சூடா நிறுத்திப் போடலை. கொஞ்சம் இடைவேளை உட்ருக்கேன். அவ்வளவுதான்.

  நெம்பப் பேரு மறுக்காவும் எழுதச் சொல்லியிருக்காங்க. நிச்சயம் எழுதுறேன். ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு எழுதுறேன்.

  ஒரு சமிக்ஞையை எதிர்பார்க்கிறேன். கெடைச்சதும் எழுதுறேன்.

  வலியும் கொஞ்சம் கம்மியாகுதானு பாக்கலாம். (லதானந்த் டச் வந்திருச்சா?)

  லதானந்த்

  ReplyDelete
 10. //ஒரு நாள் நீங்கள் எழுதிய நான் கடவுள் திரைப்பட விமர்சனம் படித்துவிட்டு நான் குலுங்கி குலுங்கிச் சிரித்தது //

  இது போல லதானந்த் சித்தரின் பல பதிவுகளைப்படித்து ரொம்ப சிரித்திருக்கிறேன். இவருடைய நகைச்சுவை coated கருத்துக்கள் என்னைப்போலவே பலரும் ரசித்திருப்பார்கள். ஜோசப் பால்ராஜ் அப்படியே பலரது எண்ணங்களை பிரதைபலித்திருக்கிறார். லதானந்த் சார் மீண்டும் எழுத வேண்டும்(தன் பணிகளை பாதிக்காத மாதிரி)

  ReplyDelete
 11. நன்றி கயல்!

  சீக்கிரம் எழுதுகிறேன்

  ReplyDelete
 12. அன்பின் ஜோசப்

  அருமையான பதிவு - ஆதங்கம் புரிகிறது - சீக்கிரமே சமிக்ஞை நண்பர் லதானந்திற்குக் கிட்டும் - எழுதுவார்

  இருவருக்குமே நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 13. ரொம்ப நாளாகிடுச்சு ஒங்க எழுத்தப் படிச்சு, செல பேரு திங்கள் புதன் வெள்ளின்னு மொறை வச்சு பதிவு போடுவாங்க. செல பேரு தோனும்போது எழுதுவாங்க. ஆனா ஒங்களோட பதிவ அலுவலகத்துல வேலைக்கு நடுவுல கூட, மணிக்கொருக்கா தெறந்து பாத்து புதுசா எதாவது எழுதிருக்கீங்களான்னு தேடுற அளவுக்கு நான் ரசிகன். நான் மட்டுமில்லை, பல பேரும் கூட....
  அதனால அப்பப்ப ஒரு விஸ்கா எழுதுங்க...

  ReplyDelete
 14. ஏய் புது மாப்பிள்ளை கோவாலு!

  "எல்லாம்" நல்லபடியா இருக்கா?

  சீக்கிரம் எழுதுறேன்பா

  ReplyDelete
 15. இந்த பதிவு முழுவதையும் நானும் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 16. பகிரங்க கடிதம் என்பதை தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் செய்த உங்களுக்கே // இந்தக் கண்டுபிடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது