07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 1, 2008

சின்ன அம்மணி! பெரிய அம்மணி!!

(நன்றி KRS)

இன்று காலை தங்கமணியும் ( இனி மேல் பெரிய அம்மணி), பாப்பாவும் ( இனி மேல் சின்ன அம்மணி) ரொம்ப கோபமாக வலைச்சர பதிவு எழுத கணணி முன்னே உட்கார்ந்திருந்த என் முன் வந்து நின்றார்கள் அப்போது நடைபெற்ற ஒரு சுவையான ( உங்களுக்கு ஆபத்தான) உரையாடல்.
-----------------------------------------


என்னம்மா? என்னாச்சு ரெண்டு பேரும் இப்படி வந்து மொரச்சுகிட்டு நிக்கறீங்க, என்ன பிரச்னை?

பெரிய அம்மணி: : ஹூம் நீங்க ஒன்னும் பேச வேண்டாம் போங்க. ஆமா நீங்க மட்டும் தனியா வலைச்சரத்துல பதிவுகளப் போடப் போறீங்களாமா?

அப்படின்னு யார் சொன்னாங்க?

பெரிய அம்மணி: எப்படியோ தெரிய வந்தது, நாங்களும் எழுதப்போறம் உங்களோட.

நாங்களா? இன்னொன்னு யாரு?

பெரிய அம்மணி: நானும் பாப்பாவும் தானுங்க.

சின்ன அம்மணி: ஆமாம்ப்பா, அபி அப்பா மட்டும் அபிபாப்பாவுக்கு பதிவு போட சான்ஸ் குடுத்திருக்காரு, நீங்க மட்டும் எனக்கு ஏன் சான்ஸ் தரமாட்டீக்கரேங்க?

அப்படியா நல்ல ஐடியாவா இருக்கே யோசிக்கிலாம்.

பெ. அ : யோசிக்கிறது, கீசிக்கறது எல்லாம் இங்க நடக்காது. நாங்களும் சேர்ந்து எழுதுறம் இல்லேனா நீங்க எழுதக்கூடாது.

அம்மணி ஆர்டர் போட்டுட்டா அதுக்கு அப்பீல் ஏது? ஒத்துக்கறேன்.

சின்ன அம்மணி: நீங்கதான் ஆன்மீகப் பதிவு மட்டுந்தான போடறீங்க, மத்த பதிவுகள நாங்க படிச்சு உங்களுக்கு ஹெல்ப பண்ணவோமல்ல.

அதுவும் நல்ல ஐடியாதான் நாம மூணு பேரும் சேர்ந்தே வலைச்சரப் பதிவுகளைப் போடலாம்.


அப்ப நாங்க ரெடி ( உங்களை போரடிக்க) நீங்க ரெடியா? ( அதைப் பொறுத்துக்க)
--------------------------


ஆமாங்க மூணு பேராக உரையாடுவது போல் பதிவுகளை அமைக்க எண்ணியுள்ளேன். ஆன்மீகம் சம்பந்தபட்ட பதிவுகளையே இதுவரை அதிகம் படித்திருக்கின்றேன், மற்ற பதிவுகளை சிறிதாக நோட்டம்தான் இட்டுள்ளேன் என்பதால் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் பதிவர்களின் பதிவுகளை விட அவர்களின் தனித்தன்மையை சுட்டிக் காட்ட எண்ணம். வந்து படித்து ஊக்குவிக்குமாறு வேண்டுகிறேன்.

என்னங்க தங்கமணிக்காக தனிப்பதிவான்னு யோசிக்கிறீங்களா? உங்க ஊகம் கரெக்ட் தாங்க. திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொன்னத அப்படியே நம்பிட்டு நடுக்கடல்ல இருந்துட்டு சம்பளம் வாங்கற அடியேனோட குடும்பக் கப்பலை செலுத்தற மாலுமி என்ற பெரிய அம்மிணி தாங்க.

லீவுல வரும் போது கூட வீட்டுக்கு வேணுங்கற பொருள் எல்லாம் வாங்கறது அவங்கதாங்க. வியட்நாம் வீடு பாட்டுல வர

ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்துமெண்ண
அதில் வேரென நீயிருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்


ன்னு வர வரிகள் எங்களுக்காகவே எழுதுனுங்க. அதானால இந்த வலைச்சர பதிவுகள் அத்தனையும் பெரிய அம்மணிக்கும் என் அன்பு மகள் சிறிய அம்மணிக்கும் சமர்ப்பணம்.
புதுகைக் தென்றல் போல புயலாக வீச ஆசையாத்தான் இருந்தது எதிர் பாராத விதமாக வெளியூர் செல்ல நேரிட்டதால் முதலில் மந்தமாகத்தான் இருக்கும் போகப் போக வேகத்தைக் கூட்ட முயற்சி செய்கின்றேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள் அன்பர்களே.இப்பதிவுல
" பூவிலே சிறந்த பூ என்ன பூ"?

"சிரிப்பு"

என்பதால் , மிகுந்த நகைச்சுவையாக எழுதும் ஒரு அன்பரையும், வலைச்சரத்தில் புயலாக வீசிய ஒரு பூவையையும் அறிமுகம் செய்துள்ளேன். அடுத்த பதிவில் இருந்து முழுமையான பதிவாக இடுகிறேன், வந்து படித்து வாழ்த்துங்கள்.

6 comments:

 1. என்னை வச்சி காமெடி ஏதும் பண்ணறீங்களோன்னு பாத்தேன். தப்பிச்சேன்.

  ReplyDelete
 2. வாங்க சின்னம்மிணி, நீங்க நம்மூர்க்காரங்களாச்சே எப்படிங்க காமெடி பண்ணுவேன்.

  என்ற ஊரு உடுமலைப்பேட்டைங்க, அதனால நம்ம கொங்கு பாஷையில எழுதறங்க.

  தெனமும் வந்து பாருங்க..

  ReplyDelete
 3. வாங்க புதுகைத்தென்றல்(புயல்) அம்மா. மிக்க நன்றி, வரும் நாட்களிலும் வந்து தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்.

  ReplyDelete
 4. ஆகா ஆகா - வூட்ல தங்கமணிக்கு மதிப்பு கொடுத்து அவரது கருத்துகளையும், பாப்பாவின் கருத்துகளையும் பதிவுகளாக இட முடிவு செய்தது நல்ல செயல். நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 5. எல்லோரையும் போல் நேராக எழுதாமல் உரைநடையாக எழுதலாமே என்று யோசித்த போது மனதில் வந்த யோசனை இது.

  எப்படி வந்துள்ளது என்று பின்னர் வந்து சொல்லுங்கள் சீனா ஐயா. நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது