ஒரு முன்னுரை
➦➠ by:
சேவியர்
ஒரு வாரம் அழுத்தமான எழுத்துக்களும், வாசிப்புகளும் வாய்க்கப்பற்ற விக்னேஷ் அசத்திக் கொண்டிருந்தார். இந்த வாரம் அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சவாலான, சுவாரஸ்யமான பணியை எனக்கு அளித்த ஆசிரியர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.
என்னைக் கவர்ந்த சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன். அதற்கு முன் எனது எழுத்துலக அனுபவத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.
எப்படி பிளாக் ஆரம்பிப்பது என்பதே தெரியாமல் அதைப் பற்றி கவலையும் படாமல் படைப்புகளை இதழ்களுக்கோ, தினம் ஒரு கவிதை போன்ற இணைய குழுக்களுக்கோ அனுப்பிக் கொண்டிருந்த காலம் 1998 ஐத் தொடர்ந்த வருடங்கள்.
சமீபத்தில் தான் அறிமுகமானது போல் இருக்கிறது வேர்ட்பிரஸ். அதுவும் ஆயிற்று இரண்டு வருடங்களும் ஐந்து மாதங்களும். இந்த காலம் எனது படைப்புகள் பலவற்றை இணையப்படுத்தி வைக்கவும், புதிதாய் எழுதவும் தூண்டுகோலாய் அமைந்தது என்பதில் ஐயமில்லை.
எனினும் என்னைப் பொறுத்தவரை நான் வலைத்தளங்களின் வெற்றி எனக் கருதுவது புதிய எழுத்தாளர்களுக்கு எழுதும் பயிற்சி கிடைப்பதும், வாசிப்பு வசதிகள் கூடுவதும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இணைய நட்பு வலை உருவாவதுமே.
கவிதைச்சாலை மட்டும் தான் முதலில் நான் ஆரம்பித்த வலைப்பூ. இலக்கியத்தின் வகைகள் மட்டுமே அதில் இருக்கவேண்டும். கவிதை, கட்டுரை, சிறுகதை, கவிதை நாவல், நல்ல விமர்சனங்கள் இவை மட்டுமே இந்தத் தளத்தில் இருக்க வேண்டும் என முடிவு கட்டி விட்டேன். அதையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக் காத்தும் வருகிறேன்.
இதுவரை வெளியாகியுள்ள எனது பதினோரு நூல்களில் ஒரு சில நூல்களைத் தவிர மற்ற நூல்களிலுள்ள பல படைப்புகள் இந்த இணைய தளத்தில் உள்ளன.
எழுத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே சாதாரண சிறு கவிதைகள் தவிர்த்து, சலனம் போன்ற நெடுங்கவிதைகளும், ஹெய்தி போன்ற வித்தியாசமான கட்டுரைகளும், யோபு போன்ற விவிலியக் கவிதைகளும், மச்சு பிச்சு போன்ற உலக அதிசயங்களும் , கவிதை நூல் போன்ற சிறுகதைகளும் என கலந்து கட்டி எழுதி வருகிறேன்.
இந்த வலைத்தளம் நடத்திக் கொண்டே இருந்தபோது புரிந்த ஒரு விஷயம், இலக்கியம் தாண்டியும் பல சுவாரஸ்யமான உரையாடல்கள், மருத்துவத் தகவல்கள், நகைச்சுவைகள், சினிமா சார்ந்த விஷயங்கள் இவை இருக்கின்றன. இவற்றைக் குறித்தும் ஒரு தளம் ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே என தோன்றியது.
நகைச்சுவை விஷயங்கள் மட்டும் எழுதலாம் என நினைத்து அலசல் வலைத்தளத்தை ஆரம்பித்தேன். முதலில் இதன் பெயர் சிரிப்பே சிறப்பு. பின்னர் வலைப்பூவின் முகம் மாறியது. பலரும் விரும்பும் ஒரு ஜனரஞ்சகத் தளமாக ஆகிப் போனதால் அதை அலசல் ஆக மாற்றினேன். அதுவும் ஆயிற்று இரண்டு வருடங்கள். இதிலும் தேவையற்ற தனி நபர் கூச்சல்கள், கும்மிகள், சண்டை ஏதும் இல்லாமல் இருப்பது நிறைவளிக்கும் விசயம்.
ஒரு நிம்மதி மட்டும் இருக்கிறது.
எங்கோ இருக்கும் உண்மையான வாசகர்கள் நல்ல எழுத்துக்களைப் படித்தபின் ஓரிரு வரிகளேனும் எழுதி விட்டுப் போகிறார்கள். மனதுக்கு மிகவும் நிறைவான விஷயம் அது.ஒரு எழுத்தாளன் அவனுடைய எழுத்து விரும்பப்பட்டதா என்பதை அறிய ஆசைப்படுவான். குறைந்த பட்சம் வாசிக்கப்பட்டதா என்பதையேனும் அறிந்து கொள்ள பிரியப்படுவான். அந்த எதிர்பார்ப்பை வாசகர்கள் இன்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பெரும்பாலான வாசகர்கள் எழுத்தாளர்களே !!!
போதும் என நினைக்கிறேன் ஒரு அறிமுக உரை.
என்னைப் பற்றி ஏதேனும் அறிய வேண்டும் என ஆசைப்பட்டால் கிளிக்குங்கள்.
இனி..... தொடர்கிறேன்....
- சேவியர்
|
|
உங்கள் வலையில் பாதியில் வாசிப்பைத் தொடங்கினேன். 2006ஆம் ஆண்டு... இன்றுதான் முழுதும் அறிந்தேன்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க சேவியர்....இந்த வாரம் கவிதைகளின் கலக்கலாக இருக்கும் என நம்புகிறேன்.....
ReplyDeleteஅன்புடன் அருணா
வருக வருக சேவியர்
ReplyDeleteஅருமையான அறிமுகம்
ஏற்கனவே தங்களின் பதிவுகள் பலவற்றைப் படித்து மறு மொழி இட்டிருக்கிறேன்.
இன்னும் படிக்கிறேன்
நல்வாழ்த்துகள் சேவியர்
//உங்கள் வலையில் பாதியில் வாசிப்பைத் தொடங்கினேன். 2006ஆம் ஆண்டு... இன்றுதான் முழுதும் அறிந்தேன்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்//
ReplyDeleteநன்றி விக்கி :)
/வாழ்த்துக்கள்//
ReplyDeleteநன்றி திகழ்மிளிர் :)
//வாங்க சேவியர்....இந்த வாரம் கவிதைகளின் கலக்கலாக இருக்கும் என நம்புகிறேன்.....
ReplyDeleteஅன்புடன் அருணா//
நன்றி அருணா :)
/வருக வருக சேவியர்
ReplyDeleteஅருமையான அறிமுகம்
ஏற்கனவே தங்களின் பதிவுகள் பலவற்றைப் படித்து மறு மொழி இட்டிருக்கிறேன். /
நன்றி சீனா. உங்கள் மறுமொழி மழையை மறக்க முடியுமா :)