07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 5, 2008

முத்துச்சரங்கள்


சி அ : என்னப்பா தலைப்பை மாத்தீட்டீங்க, ஆன்மீகப்பதிவர்கள் முடிஞ்சிருச்சா?

அநேகமாக அனைத்து அன்பர்களும் ஆன்மீகத்தைப் பத்தி எழுதுறாங்க அனைவரையும் அடையாளம் காட்டுறது கஷ்டங்கிறதால், இன்னும் சில முத்துக்களை பற்றி மட்டும் சொல்ல வேண்டியிருக்கு அதுக்குள்ள எப்படிம்மா முடிக்கமுடியும்.

இவங்களுக்கு தனி மரியாதை கொடுக்கண்ணுமுண்ணு தனிபபதிவா போடறேம்மா.

பெ. அ : அப்படி யாரைப்பத்தி சொல்லப் போறேங்க.

மூணு பேரைப்பத்தி சொல்லப்போறேன் சுப்புதாத்தா, நா. கண்ணன் , பட்ட முத்து இவங்க தான் அந்த முத்துகள்.

சி. அ : சுப்பு இரத்தினங்கற சுப்பு தாத்தா தானப்பா சொர்ணாம்பிகா பின்னூட்டத்துல அற்புதமான கவிதை எழுதி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பவனி வரும் அழகை எல்லாருக்கும் காட்டினாரு.

அவரே தான்ம்மா. ஸத்யம் சிவம் சுந்தரம். . ஆன்மீகம் அப்படீன்னு அருமையான பல ஆன்மீகத்தகவல்களை தொகுத்து தராரு நம்ம அன்பு ஐயா.

பெ அ: அது மட்டுமல்ல பலரோட வலைத்ததளத்துலிருந்து தேனீ மாதிரி தேனை சேகரித்து ஒன்னா தராரு சுப்பு தாத்தா.

சி. அ: இவருடைய செலெக்சன் சூப்பர்.

எத்தனை விதமாத்தான் இவரு எழுதறாரு,

தமிழ் மறை தமிழர் நெறி ,

நான் இரசிக்கும் வலைப்பதிவுகள்

சினிமா இராகங்கள்


எல்லாம் இவரோட வலைப்பூக்கள்.

மூவரும் : அருமையாக ஆன்மீக தொண்டு செய்து வரும் சுப்பு ஐயா, வாழ்த்த எங்களுக்கு வயதில்லை தங்களை வணங்குகிறோம்.
------------------------------------------------------

பெ அ : அடுத்து எந்த முத்தைப் பத்தி சொல்லப்போறீங்க.

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவ


என்று சிவபெருமானோட புகழ் பாடற பட்டமுத்து ஐயாதாம்மா அவரு.

சி. அ : " சைவ சரபம் மா.பட்டமுத்து" ஐயாவோட பெரிய புராண சொற்பொழிவுகள் அத்தனையும் தேன்.


வீடியோவாக அருமையாக பதிவு செய்து வலைப்பூவில் இட்டுள்ளார் பட்டமுத்து ஐயா.

பெ அ: செயற்கரிய செய்து விடையேறும் எங்கள் பரமனின் அன்பர்கள் சரிதத்தை 63 Nayanmaars - 63 நாயன்மார்கள் ங்கற வலைப்பூவிலே நுகரலாம்.

திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரோட அன்புத்தொண்டரான இவர் மற்ற அன்பர்களுடன் சேர்ந்து "நாங்கள் இலவசமாக நாயன்மார்கள் பற்றிய குறுந்தகடுகள் கொடுக்கிறோம். அனைவரும் பெற்று மகிழுங்கள்" ன்னு யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்ன்னு அருமையான சேவை செய்யறாரு. வேண்டும் அன்பர்கள் குறுந்தகட்டைப் பெற்று நன்மையடைய வேண்டுகிறோம்.

பட்டமுத்து ஐயா வளர்க தங்கள் சிவத்தொண்டு. முக்கண் முதல்வரின் புகழ் தங்கள் சேவையின் மூலம் மேலும் பரிமளிக்க அவரிடம் பிரார்த்திக்கின்றேன்.
-------------------------------------------------

சி. அ : அப்பா நீங்க சைவரை ஒரு முத்துன்னு சொல்லீட்டீங்க அப்ப வைணவர்கள் சும்மா இருப்பாங்களா?

அரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில மண்ணுங்கறது உனக்கு தெரியாதாம்மா?

சி அ: இருந்தாலும் ஏன்ப்பா வலையில சண்டை போட்டுக்கறாங்க?

அதுவும் ஒரு தலைப்பு தானேம்மா? அதனால இருக்கும்.

பெ. அ : ஆனா நமக்குத்தான் ஹரிஹர பேதம் இல்லையே அதனால நாம் இப்ப ஒரு வைஷ்ணவரைப் பத்தி சொல்லலாமா?

நீ சொல்லீட்டா அதுக்கு அப்பீல் ஏது அப்படியே செய்துறலாம்.

சி. அ : அப்ப யாரைப்பத்தி சொல்லப்போறீங்கப்பா?

அவரு, ஆழ்வார்களோட அருளிச்செயல்களில ஆழ்ந்து போய், ஆழ்வார்க்கடியார்ன்னு பதிவுகள் எழுதுவறவரு,

சி. அ : பொன்னியின் செல்வனில வராரே அவராப்பா?

நான் ஙேன்னு முழிக்க,

இருவரும் அப்பா இப்படி ஒரு பேக்கா இருக்காரேன்னு கையைத் தட்டிகிட்டு சிரிக்கறாங்க!! ( எனக்கு ஒண்ணும் புரியல்ல உங்களுக்கு புரிஞ்சா பின்னூட்தத்தில சொல்லுங்க)

நா.கண்ணன் சார் தான் இந்த பதிவர்

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

திருமொழி


ங்கற இவரோட பதிவுகளை படிக்காதவங்க அருமையான எதையோ இழந்துட்டாங்கண்னே சொல்லணும்.

சி அ: நெஞ்சம் மட்டுமா? கணினியும் மறப்பதில்லை! ங்கற பதிவு அருமை .

பெ அ : மூன்றாம் கண்ணுங்கற இவரோட பதிவுல
அருமையான புகைப்படங்கள்.

மொழி கடந்த பார்வை! (Third Eye) ன்னு அருமையான பதிவிட்டிருக்கறாரு கண்ணன் சார்.

மாலவன் மேல் மால் கொண்ட ஆழ்வார்களின் அருளால் ஐயா வளர்க தங்கள் கைங்கர்யம்.
__________________________________
இன்றைய தினம் மஞ்சாடும் மங்கை மணாளரின் மேற்கு முகமாம் சத்யோஜாத முக தரிசனம் பெறலாமா அன்பர்களே?

சத்யோஜாதம்: அரசம் பூ போல் வெண்மை நிறமாய் பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்கின்றது , ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது (பிரம்ம ஸ்ருஷ்டி காரண முகம்). ஐந்தெழுத்தில் 'ந'.


முதல் நாள் கிரி வலம் செய்யும் போது இம்முக தரிசனம் நன்றாக கிடைக்கின்றது. மற்ற முகங்கள் குவிந்து உள்ளன ஆனால் இம்முகம் மட்டும் குழியாக உள் வாங்கி இருக்கின்றது. இம்முகத்தை திருமயிலையிலே கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.


ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம:

பவேபவே நாதிபவே பவஸ்வ மாம் பவோத் பவாய நம:

என்னும் பஸ்சிம வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்கின்றோம்.


2 comments:

  1. திரு. பட்டமுத்து ஐயாவின் பதிவினை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ஐயா.

    சத்யோஜாத திருமுகத்தின் தரிசனத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  2. முத்தெடுக்க முயற்சி செய்தேன். முத்து என்று சரியாக சொல்ல உங்களை விட யார் சரியானவர்.

    நன்றிகள் குமரன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது