07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 23, 2008

செம்புலப் பெயல் நீர் : கவிதையும் காதலும்

கவிதைகளிலிருந்து காதலையும், காதலில் இருந்து கவிதையையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. சங்கம் முதல் இன்று வரை கவிதைகள் காதலையும், காதல் கவிதையையும் ஒன்றுக்குள் மற்றொன்றை ஊற்றி நிரம்பியிருக்கின்றன.
காதலியை மனக்கண்ணுக்கு முன்னால் நிறுத்தினால் போதும் கவிதைத் தமிழ் காதலனின் விரல்களில் வழிந்தோடும். அதே நிலை தான் காதலனை நினைக்கும் காதலிக்கும். எனவே தான் இணையத்திலும் காதல் கவிதைகளுக்குப் பஞ்சம் இருப்பதில்லை.

ஆதலினால் … எனும் வலைத்தளம் காதல் சிணுங்கல்களால் நிரம்பி வழிகிறது. நீங்கள் சேவியரா ? எனும் வினாவோடு ஒரு முறை என்னிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார் நவீன். அந்த அறிமுகத்துக்கு முன்பே நாங்கள் வலைத்தளங்கள் மூலம் நன்றாகவே பழகியிருந்ததால் நிகழ்ந்த அந்த சிறு உரையாடல் சுவாரஸ்யமாய் இருந்தது.

ஏன் நிறைய எழுதுவதில்லை, நீண்ட இடைவெளி விட்டு விட்டு எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். கவிதை எழுதவேண்டுமென்று அமர்ந்து எழுதும் பழக்கம் எனக்கில்லை. கவிதையே வந்து என்னை எழுதிக் கொள் என்று சொல்லும் போது தான் எழுதுகிறேன் என்றார். கவிதையாய் ! காதலை மட்டுமே பிரதானப்படுத்தி எழுதினாலும்


எப்படி எப்படிஎல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமேஉணர்த்துவார்
அப்பா.


என ஆங்காங்கே தெரியும் கவிதைகள் நவீன் காதல் கவிதைகளுக்கு மட்டும் உரியவர் அல்ல அதையும் தாண்டி பயணிக்கும் திறமை கொண்டவர் என்பது நிரூபணமாகிறது.

அருட்பெருங்கோ வை எனக்கு இணையம் தவிர்த்து தொலைபேசியில் சில முறை உரையாடிய பழக்கம் உண்டு. நேரில் சந்தித்ததில்லை.


இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள்
என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்


என வசீகரமாய் குறும்புகளுடன் காதல் கவிதை எழுதுகிறார் அருட்பெருங்கோ. அவருடைய தளத்தில் இன்றைய பெரிய கவிஞர்களுக்குச் சவால்விடும் கற்பனைகள் நிரம்பவே இருக்கின்றன.

நீ
சிந்தும்வெட்கத்தை
சேலையென
உடுத்திக் கொள்கின்றன
என் கவிதைகள்!


என காதலுடன் குதிக்கின்றன பிரியனின் கவிதைகள். ஒரு முறை பிரியனைச் சந்தித்திருக்கிறேன். துருதுரு இளைஞர். கவிதைகளைச் சுமப்பது போல கூடவே சில காதல்களையும் சுமப்பவராய் இருக்கலாம் :)

தெரியவில்லை. அவருடைய பிரியன் கவிதைகள் எனும் வலைத்தளம் காதல் கவிதைகளின் சரணாலயம்.

பாலபாரதியின் வலைத்தளத்தில் கவிதைகள் பகுதியைச் சென்று ஒரு முறை பாருங்கள்.

ஒற்றையடிப்பாதையில்
தனித்துப் போகாதே என்றேன்
கேட்டாயா
இப்போது பார்
பயமற்று ஆடைகளைக் களைய முயல்கிறது
காற்று


என தபு சங்கரின் பிம்பம் அங்கே பிரதிபலிப்பாகிக் கொண்டிருக்கிறது. கவிதைகள் குறைவாகவே எழுதுகிறார் போலிருக்கிறது.


எத்தனை தடவையடா
உன்னிடம் கெஞ்சுவது
அம்மா
பக்கத்தில்இருக்கும்போது
முத்தம் கேட்காதே என்று
உன் மரமண்டைக்கு
எப்போதுதான்உறைக்குமோ?


என கவிதைகளால் கொஞ்சும் புனிதாவின் வலைத்தளம் சுவாரஸ்யம்.

குறைவாகவே எழுதினாலும் விக்கியின் குளிர்கால காதல் எனக்குப் பிடித்தமான காதல் கவிதைகளின் வரிசையில்.

காதல் கவிதைகளைப் பற்றி எழுதினால் வருடங்களுக்கே வயதாகிப் போகும் என்பதும், அது நிறுத்த முடியா நயாகரா என்பதும் என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன்.


போகிற போக்கில் நேரமிருந்தால் நில் நிதானி காதலி . முத்தக் கவிதைகள் காதலும், காதலி சார்ந்தவைகளும் இவற்றை ஒரு முறை எட்டிப்பார்த்து விட்டுச் செல்லுங்கள்.

உங்களைப் போல
எனக்குக்
கவிதை எழுதத் தெரியாது…
காற்றில் கேசம் மெலிதாய் புரள
தலையை அசைத்துப்
புன்னகைக்கிறாய்…
அடடா என்ன அழகான கவிதை !!!

5 comments:

  1. நன்றி அண்ணா... இருந்தாலும் சிறப்பாக எழுதக் கூடியவர்கள் வரிசையில் எனது பெயர் நெருடலாக இருக்கிறது...

    ReplyDelete
  2. அந்தக் கவிதை குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் உன்னிடம். :) நல்ல கவிதை எனது ரசனையின் மதிப்பீடுகளில். ஆனா எப்போவாவது ஒரு கவிதை தான் எழுதுகிறாய் ;)

    ReplyDelete
  3. அன்பின் சேவியர்,

    காதல் கவிதைகளில் - நான் படித்தவற்றில் எனக்குப் பிடித்தது நவீன் பிரகாஷ் கவிதைகள். மற்ற தளங்கள் நான் சென்றதில்லை. செல்கிறேன் - படிக்கிறேன் - ரசிப்பேன்

    நல்ல அறிமுகப் பதிவு

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நன்றி சேவியர் அண்ணா...எதிர்பார்க்கவில்லை நீங்களும் என்னை கவனிக்கிறீர்கள் என்று? இனியும் விளையாட்டாய் எழுதாமல் பொறுப்பாய் ஏதாவது எழுது என்று குட்டு வைத்து செல்கிறது உங்கள் விமர்சனம் :-)

    ReplyDelete
  5. நன்றி சீனா.

    நன்றி புனிதா. நீங்கள் அழகாய் எழுதுகிறீர்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது