07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 8, 2008

தேவ மாதா பிறந்த நாள்

ஆரோக்கிய அன்னை


இன்று செப்டெம்பர் 8ம் தேதி "தேவ மாதா மேரியன்னை" பிறந்த நாள். அன்னை மேரி ஆரோக்கிய அன்னையாக அருள் புரியும் தலம்தான் வேளாங்கண்ணி. காரைக்காலில் பணி புரிந்து கொண்டிருந்த போது இப்புனிதஸ்தலத்திற்க்கு பல முறை அடியேன் சென்றுள்ளேன் .

இந்நாளை ஒட்டி கொடியேற்றத்துடன் பத்து நாள் சிற்ப்பு விழா வேளாங்கண்ணியில் நடைபெறுகின்றது. அப்போது பாய்மரக்கப்பலில் உள்ளது போல் உள்ள கொடி மரத்தில் ஆரோக்கிய அன்னையின் கொடி பட்டொளி விசி பறப்பதை காணக் கண் கோடி வேண்டும். தேரோட்டமும் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

கோவா, கேரளா, தமிழ்நாடு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இச்சமயத்தில் கூடுகின்றனர் வேளாங்கண்ணீயில். பக்தர்கள் தங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

அடியேன் சிறுவனாக இருந்த போது அன்னை வேளாங்கண்ணி திரைப்படம் வெளி வந்தது, அதில் வரும்

நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியாமாம்...
தென்னை உயர பனை உயர செந்நெல் உயர்ந்து வளம் செழிக்கும்
வேளாங்கண்ணி என்னும் ஊராம்

என்ற பாடலும்

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ.

என்ற பாடலும் மனதை விட்டு என்றும் அக்லாதவை.

அன்பான மாந்தரே கூடுங்களே
ஆரோக்கிய மாதவைப் பாடுங்களேன்
என்று பாடி மேரியன்னையை ( மாரியம்மனை) வழிபடும் அனைவருக்கும் அன்னையின் இந்த அவதார தினத்தில் நல்வாழ்த்துக்கள்.
ஆரோக்கிய அன்னையின் அருமைக்கதையை அறிந்து கொள்ள சொடுக்குங்கள் KRS ஐயாவின் வலைப்ப்திவு http://madhavipanthal.blogspot.com/2008/09/blog-post_07.html

2 comments:

  1. தேவமாதாவை நானும் வணங்கி பணிந்து கொள்கிறேன். நன்றி கைலாஷி.

    ReplyDelete
  2. அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது