அனைவருக்கும் வணக்கம்.
திறமைமிக்க பலரும் வகித்த இப்பொறுப்பிற்கு அடியேன் என்னையும் தேர்ந்தெடுத்த வலைச்சர குழுவினருக்கும், சீனா அய்யாவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு என் பணியை ஆரம்பிக்கிறேன்.
எனக்கு முன் இப் பொறுப்பை வகித்த கவிதைச் சாலையின் உரிமையாளர் அன்புக்குறிய சேவியர் அவர்கள்,பணிச் சுமையின் காரணமாக இடையில் திடீர் என விடை பெற்றுவிட்டாலும், இடைபட்ட குறுகிய காலத்திலும் தனது முத்திரையை அழுத்தமாக பதிவிட்டுத் தான் சென்றிருக்கின்றார்.
என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகே வெண்ணாற்றின் கரையில் அமைந்துள்ள மாரநேரி எனும் கிராமம் தான் எனது சொந்த ஊர். எங்கள் குலத் தொழில் விவசாயம். பிறக்க ஒரு ஊர், படிக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர் என்ற தமிழனின் தலை எழுத்திற்கிணங்க, மாரநேரியில் பிறந்து தஞ்சையில் படித்து தற்போது சிங்கப்பூரில் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறேன்.
எனது வலைப்பூவை http://maraneri.blogspot.com நான் 2007 டிசம்பரிலேயே தொடங்கியிருப்பினும், முழு வீச்சுடன் வலைப்பூ எழுத ஆரம்பித்தது 2008 ஜீன் மாதக் கடைசியில் இருந்து தான். இயல்பாகவே எனக்கு இருக்கும் கோபம் சில சமூகப் பிரச்சனைகளைப் பற்றி படிக்கும் போதும் எனக்கு எழும் எண்ணங்களைத்தான் பெரும்பாலும் எனது பதிவுகளாக எழுதியிருக்கிறேன்.
என்னைப் பொருத்தவரை நாம் எழுதுவது ஏதாவது ஒரு வகையில் பிறருக்கு உபயோகமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். இப்படி நினைப்பதாலோ என்னவோ அன்பு அண்ணண் புதுகை அப்துல்லா என்னை ஜே கே ரித்தீஷ் மன்றத்தில் சேர்க்க மறுக்கிறார். அதோடு நான் மொக்கை பதிவுகள் எழுதினால் கல்லெடுத்து அடிக்க ஒரு கூட்டமே தயாராகிவிடுகின்றது.
இன்னும் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் வண்ண மலர்களில் என்னுடைய பங்கையும் கோர்க்க இருக்கிறேன். உங்கள் அன்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.
|
|
வாழ்த்துக்கள்!
ReplyDeleteமொக்கையா இரண்டு பதிவு போட்டு மன்றத்துக்கு அனுப்பினா பரீசிலணை செய்வாங்களாம்
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியரே, வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பின் ஜோசப் - நல்வாழ்த்துகள்
ReplyDeleteநானும் தஞ்சையில் படித்தவன் தான் - ஒன்று முதல் எட்டு வரை
ஜோண்ணா, வாழ்த்துகள்...ஒரு வாரத்திற்கு வலைச்சரம் நிச்சயம் ஜொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை :)
ReplyDeleteவாங்கய்யா வாத்தியாரைய்யா...!(ஆசிரியரைத்தான்)
ReplyDeleteவரவேற்க வந்தோமையா...!
வலைச்சரத்தில் எழுதும் அய்யா...!
வாங்கய்யா...!
வாழ்த்துக்கள்!
அசத்துங்கள்...!
வாழ்த்துக்கள் அண்ணா!!!
ReplyDelete//விஜய் ஆனந்த் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா!!!
//
"வாழ்த்த வயதில்லை, பம்முகிறேன் " என்று சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்.
//விஜய் ஆனந்த் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா!!!
//
"வாழ்த்த வயதில்லை, பம்முகிறேன் " என்று சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்.
வலைச்சரம் ஆசிரியரே,
ReplyDeleteவாழ்த்த வயதில்லை, பம்முகிறேன்.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்குங்கள்!
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜோசப்! :-)
ReplyDeleteநாக்கமுக்க!நாக்கமுக்க!நாக்கமுக்க!
ReplyDeleteஆட்ராட்ரா...நாக்கமுக்க...நாக்கமுக்க
அண்ணே இன்னும் ஓரு வாரத்துக்கு பட்டயக் கிளப்புங்க!
:))
அடிச்சி ஆடுங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் பால்.. :)
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்குங்கள்!
ரிப்பீட்டு.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்குங்கள்!
ரிப்பீட்டு.
வாழ்த்துக்கள் !!
ReplyDeleteஉங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDelete//
ReplyDeleteஜெகதீசன் said...
வலைச்சரம் ஆசிரியரே,
வாழ்த்த வயதில்லை, பம்முகிறேன்.
//
ரிப்ப்ப்ப்பீட்டா பம்முகிறேன்
வாழ்த்துக்கள்...அண்ணன்...
ReplyDelete