07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 9, 2009

மரியாதைக்குரியவர்கள்


மரியாதைக்குரிய பதிவர்கள் பட்டியலும் இருக்கு. பிரச்சினை என்னன்னா எழுதுற அவுதியில சில பேர்த்த உட்டுப் போடுவேன். அவிங்க சங்கடப் பட்றாங்களோ இல்லியோ நம்பளுக்கு அங்கலாப்பா ஆயிரும். பாப்பம்.

முக்கியமானவரு ஜ்யோவ்ராம் சுந்தர். நானு சென்னைக்கு வர்ரப்பெல்லாம் சந்திகோணும்னு நெனைப்பேன். அவரும் ’எங்கன்னு சொல்லுங்க? வர்ரம்’பாரு! எங்க முடியிது? கால்ல சுடுதண்ணி ஊத்திகிட்டு உடனே ஓட்ற மாதிரியில்ல இருக்கு. இருந்தாலும் போன தரவ போன் பண்ணதும் ரூம்புக்கு வந்தாரு. அதுக்கு முந்தியே ரமேஷ் வைத்யாவும் ரூம்புல இருந்ததால ஜாலியா இருந்துச்சு சந்திப்பு. (என்னப் பொருத்த வரைக்கும் மேக்சிமம் 4 பேருதான் ஒரு சிட்டிங் சந்திப்புக்கு லாயக்கு. அதுக்கு மேல்பட்டா கொசலமும் புறங்கூறலும்தான் நடக்குது.)

பொதுவா மொதோ தரவ பாக்குற பதிவருங்க லேசாக் காச்சலும் அஜீர்ணமும் வந்து, மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி சங்கடமா ஒக்காந்திருப்பாங்க. இந்தப் பிரச்சின ஜ்யோவ்ராம் சுந்தர்கிட்ட இல்ல. நெம்ப நாளு பழகுனவரு மாதிரிப் பேசுனாரு.

எங்கிட்ட ஒரு கொணம். பேசுறவிங்களுக்கு என்ன இன்ட்ரஸ்ட்னு லேசாத் தெரிஞ்சுக்குவேன். அப்புறம் அவிங்க இன்ட்ரஸ்டுக்குத் தகுந்த மாதிரி விஷயங்களாத் தேர்ந்தெடுத்துப் பேசுவேன். ஒருபோதும் ஆர்கியூமெண்ட் பண்ண மாட்டேன்.

பொதுவாத் தமிழ் இலக்கியம் பத்திப் பேசுறவிங்களோட இலக்கிய அறிவை டெஸ்ட் பண்ணவும் சில மெத்தேட் வெச்சிருக்கேன். க.நா.சு, ஆர்.ஷண்முகசுந்தரம்னு லேசா ஆரமிப்பேன். திரு திருனு முழிச்சா அவிங்களோட தமிழ் இலக்கிய ஸ்டேண்டர்ட்ட லேசாப் புரிஞ்சுக்கலாம்.

ஆனா பல விஷயங்களில ஜ்யோவ்ராம் சுந்தர் மாஸ்டரா இருக்காரு. ஜ்யோவ்ராம் சுந்தர் முதல் தர வாசகர். ஏன்னாக்கா முதல் தர எழுத்தாளர்களைத் தெரிஞ்சு வெச்சிருக்கார். படிச்சிருக்காரு. ஆளும் நெம்ப ஸ்மார்ட்டா இருக்காரு.

நா.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி, சி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, இவிங்கள வாசிச்சவிங்க,

தி.ஜானகிராமன், ல.ச.ரா, சுஜாதா, சு.சமுத்திரம் படிச்சவிங்க

ராஜேஷ்குமார், பாலகுமாரன், ரமணிச்சந்திரன் படிக்கிறவிங்கனு வாசகர்களிலே நெம்ப கிரேடு இருக்கு.

ஜ்யோவ்ராம் எல்லாம் படிச்சிருக்காரு.

கோபி கிருஷ்ணனின் கதைகளை இலவசமா இணைய தள வாசகர்களுக்குக் கொண்டு போற முயற்சிக்கு என்னோட பாராட்டுக்கள். (பெருமைக்காகப் புஸ்தகங்கள் சேமிச்சு ஊட்டுக்கு வர்ரவிங்க பார்வையில படுற மாதிரி வெக்கிற அன்பர்கள் சாக்கிரிதி!)

இவரோட வலைப்பூ முகவரி :
http://jyovramsundar.blogspot.com

லக்கிலுக், அய்யா ஹூஸ்டன் கணேசன், காசி ஆறுமுகம், ரமேஷ் வைத்யா இவிங்க முகவரியெல்லாம் குடுக்கிறது ‘சூரியன் கெழக்க உதிக்குது’னு சொல்ற மாதிரி. அதனால உட்டர்ரேன். பாப்பம்.

ரூம்புல பேசிகிட்டிருக்கறப்போ ”நரசிம்மன்னு ஒருத்தர் பிளாக் எழுதறாரு. இலக்கியமெல்லாம் எழுதுவாரு”. அப்படினு ரமேஷ் வைத்யா சொன்னாரு. ஒடனே போனப் போட்டுப் பேசவுங் குடுத்தாரு. பேசுறப்போவே புடிச்சுப் போச்சு எனக்கு. ரூம்புக்கு வர்ரன்னாரு. எல்லாரும் காத்திருந்தோம். அப்புறம் எங்கிருந்து என்ன தகவல் போச்சோ அவருக்கு...... ’ஆருக்கோ ஒடம்பு முடியலை.அதனால வரலை’ அப்படின்ட்டாரு. பாப்பம். அடுத்த விஸ்கா சென்னை போகுறப்போ அவரைச் சந்திக்க முடியுதான்ட்டு!


இங்க இருக்கிற வலைப்பூவைப் பாருங்க.
http://maddox.xmission.com/
பதிவுக்கு மேட்டர் கிடைக்காமல் அல்லாடுற அன்பர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் இந்த வலைப் பூ. அர கொற இங்கிலீஷ் தெரிஞ்சாலுங்கூடிப் போதும். ஐடியாக்களை உருவி நகாசு வேல பண்ணித் தாளிச்சர்லாம்.


அடுத்த பதிவு exclusively about lady bloggers. Right?
************************************************************************

10 comments:

  1. ஓட்டுப் போட்டாச்சு தல,..,

    ReplyDelete
  2. சுரேஷ்!
    அதுக்குள்ள 13ம் தேதி ஆயிருச்சா?

    சிவகுமரன்!
    ASAP அப்படின்ன என்ன?

    ReplyDelete
  3. தீர்ப்புகள் திருத்தப்படலாம். பதிவுகளும்.

    பின்னூட்டம் நீக்கப்படக்கூடாது :)

    நீக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  4. /ல.ச.ரா,/

    அது லா ச ரா. க நா சுவை கா ந சு என்றும் லா ச ராவை ல சா ரா என்றும் எழுதுவதைப் பற்றி சு ரா சொல்லியதைப் படித்திருப்பீர்கள்தானே!

    ReplyDelete
  5. ASAP என்றால் என்னவென்று இதுநாள் வரை தெரியாமல் இருந்தேன். விவரித்த சிவக்குமரனுக்கு நன்றி :)

    ReplyDelete
  6. வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. //அடுத்த விஸ்கா சென்னை போகுறப்போ அவரைச் சந்திக்க முடியுதான்ட்டு!

    //

    அடுத்தவிஸ்கா சென்னை வரும்போது என்னையும் பாருங்க மாமோவ் :)

    ReplyDelete
  8. ஜ்யோவ்ராம்!
    அது கருத்துப் பிழை அன்று. Typographical error.
    அத உடுங்க. எம்பட பதிவுல ஒங்களப் பத்தி எழுதுனேனே அதச் சொல்லுங்க

    ரம்யா!
    நன்றி

    அப்துல்லா
    அவசியம்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது