07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 19, 2009

நதியலைகள்

நதியலைகள்
===========
உயர்ந்த மரத்தின் வேருக்கு இருந்த காதலால்
உதிர்ந்த பூக்களை
ஏந்திச் செல்கின்றது
எங்கே சேர்ப்பதென்று தெரியாமல்

இப்ப‌டி ஒரு க‌விதையை முத்த‌மிழில் வைத்த‌தும் ஏக‌ப்ப‌ட்ட‌ க‌லாட்டா, க‌விதையில் ஏதோ ஒன்று குறையுதுன்னு. அதுக்கான‌ விவாத‌ங்க‌ள் போய்கிட்டு இருந்த‌ போது, வண‌க்க‌ம் லாவ‌ண்யா என்ற‌ த‌லைப்புடன் ஒரு ம‌ட‌ல், ஒரு‌ ப‌திவ‌ரிட‌ம் இருந்து. நீங்க‌ லேட்ட‌ஸ்டா எழுதி இருக்கும் க‌விதையில் என் பெய‌ர் இருப்பால் உங்க‌கிட்ட‌ பேச‌லாம் என்றும் அந்த‌ க‌விதையை செதுக்க‌லாம் என்றும் என்னுடைய‌ குடை க‌விதை பிடித்த‌தென்றும் என்று சொல்லப்ப‌ட்டு இருந்த‌து அந்த‌ ம‌ட‌லில். நீண்ட‌ உரையாட‌ல் பின் அந்த‌ க‌விதையை இப்ப‌டி ஆக்கினேன்.

http://minnalpakkam.blogspot.com/2008/05/blog-post_2304.html

அவ‌ளோடு பேசும் போது அவ‌ள் க‌விதை மீதான‌ அவ‌ள் புரித‌ல் என‌க்கு விய‌ப்பாக‌ இருந்த‌து. மேலும் க‌விதைக‌ளை ப‌ற்றி பேசினோம் நிறைய‌ பேசினோம். நிறைய‌ பேசிய‌ பின் கேட்டேன் "உங்க‌ இய‌ற்பெய‌ர் என்ன‌, எங்கே இருக்கீங்க‌?"

"இப்ப‌டியே பேச‌ உங்க‌ளுக்கு எதுவும் பிர‌ச்ச‌னையா?" என்றாள் அவ‌ள்.

"அப்ப‌டி இல்லை ஆனா சொன்னா என்ன‌?"

"எனக்கு அது ப‌ழ‌க்க‌மில்லை. ந‌ம‌க்கு தேவையான‌ விச‌ய‌த்தை ம‌ட்டும் பேசுவோம்" என்று க‌ட் அண்ட் ரைட்டாக‌ பேசிய‌வ‌ளின் பெய‌ரோ,முக‌வ‌ரியோ,முக‌மோ தெரியாது.ஆனால் இந்த‌ உல‌கில் மிக‌ உன்ன‌த‌மான‌ முத‌ன்மையான‌ தோழி என்றால் அது அவ‌ளே. அவ‌ள் மிக‌ புத்திக்கூர்மையுள்ள‌வ‌ள். தூய‌ ந‌ட்போடான‌வ‌ள். சிற‌ந்த‌ ர‌ச‌னைக்காரி. என் உயிர்த் தோழி. என் வ‌ள‌ர்ச்சியில் மிக‌ அதிக‌ ப‌ங்குடைய‌வ‌ள். இப்போது க‌விதைக‌ளை மீதான‌ என் புரித‌ல் எல்லாம் அவ‌ளிட‌ம் நான் க‌ற்ற‌து. நான் எழுதும் எதுவும் பிழைத்திருத்த‌, வ‌டிவ‌மைக்க‌ நான் நாடுவ‌து இவ‌ளையே. என் வ‌லைப்பூ உருவாக‌ அவ‌ளே கார‌ண‌ம். நாங்க‌ள் பேசாத‌ விச‌ய‌ங்க‌ளே கிடையாது. ஆனால் நாங்க‌ள் பேசிய‌து, ச‌ண்டையிட்ட‌து, கொஞ்சிய‌து எல்லாமே ம‌ட‌ல்க‌ள் ம‌ற்றும் அர‌ட்டை மூல‌மான‌ மௌன‌ மொழியில் ம‌ட்டுமே. இந்த‌ ப‌திவின் மூல‌ம் அவ‌ளுக்கு ஒரு வேண்டுகோள் நான் இற‌க்கும் முன் என்றாவ‌து ஒரு நாள் ச‌ந்திக்க‌ வ‌ருவாயா?

==========

இதே மௌ‌ன‌ மொழியாலான‌ உரையாட‌ல்க‌ள் மிக‌ சுவார‌சிய‌மான‌வை

http://minnalpakkam.blogspot.com/2009/01/blog-post_24.html

இந்த‌ க‌விதையில்
"ப‌ருகினான்
உருகினாள்"

இந்த‌க் க‌விதையை ப‌டித்த‌ அந்த‌ தோழ‌ர்(ஒரே ஒரு முறை ஒருசில‌ வினாடிக‌ள் ச‌ந்தித்து இருக்கின்றேன்) ரித‌ம் த‌விர்த்து த‌ட்டையா எழுதி பாருங்க‌ லாவ‌ண்யா. ந‌ல்லா வ‌ரும் என்றார். மீண்டும் ஒரு முறை அதே க‌விதையை ப‌டிக்க‌ கிடைத்த‌ போது கிண்ட‌லாக‌ "லாவ‌ண்யா உங்க‌ளை என‌க்கு மிக‌ப் பிடிக்கும்" என்றார்.

http://minnalpakkam.blogspot.com/2008/11/blog-post_24.html

இந்த‌ க‌விதையில் அழ‌கிய‌ல் வ‌ர்ண‌ பூச்சுக‌ள் வேண்டாமே ஆனாலும் இந்த‌ க‌விதை ந‌ல்லா வ‌ந்திருக்கு என்றார். அவ‌றோடு உரையாடும் அத்த‌னையும் நிறைய‌ ப‌திவிற்கு வித்திட்ட‌து.

============

"வ‌ண‌க்க‌ம் என் பெய‌ர் மின்ன‌ல் என்கிற‌ லாவ‌ண்யா. உங்க‌ வ‌லைப்பூ பிடித்த‌து. நேர‌ம் இருந்தால் என் வ‌லைப்பூ பார்த்துவிட்டு பின்னூட்ட‌ம் தாங்க‌ உங்க‌ க‌விதை என்னுடைய‌ ர‌சித்த‌ க‌விதை கிட‌ங்கில் இருக்கின்ற‌து."

"உங்க‌ காட்சிப்பிழை, எல்லை இத‌ன் தெறிப்பு பிடிச்சி இருக்கு." "ந‌குல‌ன் ப‌டிச்சி இருக்கீங்க‌ளா?" "பிரமிள், சுந்தர ராமசாமி, விக்ரமாதித்யன், கலாப்ரியா, தேவதச்சன், தேவதேவன்" இவ‌ர்க‌ளைப் ப‌டியுங்க‌ள். நவீன‌ விருட்ச‌ம் வ‌லையில் கிடைக்குது, ப‌டிங்க‌. கால‌ச்சுவ‌டு ப‌டிங்க‌ என்று ஏக‌ப்ப‌ட்ட‌ அறிவுரை வ‌ழ‌ங்குகின்றார் ம‌ற்றுமொரு தோழ‌ர். முத‌ல் முறை தொலைபேசிய‌ போது "நீங்க‌ ஆனந்தியா?" என்று கேட்டார். ஓரிண்டு முறை த‌விர‌ எல்லா முறையும் இவ‌ருட‌னும் அதே மௌன‌ மொழியில் உர‌க்க‌ பேசி இருக்கின்றேன்.

============

இவ‌ர் வ‌லைப்பூவிலிருந்து அவ‌ருடைய‌... அங்கிருந்து இன்னுமொன்று என்று பார்த்தால் கிடைத்த‌ ஒரு முத்தான‌ வ‌லைப்பூவிலிருந்து நான் எழுதும் க‌விதைக‌ளை சார்ந்த‌ க‌ட்டுரைக்கு பொருத்தமான‌ ஒரு க‌விதை கிடைத்த‌து அதை ப‌ய‌ன்ப‌டுத்த‌ அவ‌ரிட‌ம் உத்த‌ர‌வு பெற‌ ம‌ட‌லிட்டேன். ம‌ட‌ல் க‌ண்டு மகிழ்வுற்ற‌ இந்த‌ தோழ‌ர் எழுதுவ‌தை கொஞ்ச‌ கால‌ம் விட்டுவிட்ட‌தாக‌ சொன்னார். "எழுத்து வ‌ர‌ம் எல்லோருக்கும் கிடைக்காது. எழுதும் ஆர்வ‌ம் ம‌ட்டும் கொள்ளுங்க‌ள், எழுத்து த‌ன‌க்கான‌ நேர‌த்தை தானே தேடிக்கொள்ளும்" என்றேன். அத‌ன் பின் சில‌ க‌விதைக‌ள் அந்த‌ த‌ள‌த்தில் வ‌ந்த‌து. அவ‌ர் க‌விதையை என் க‌ட்டுரையில் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் ந‌ன்றிக்காக என் க‌விதை சார்ந்த‌ க‌ட்டுரைக‌ளை வாசித்துவிட்டு "தோழி ஏதோ ஆராய்ச்சி நோக்கோடு எழுதுவ‌து போல‌ இருக்கே" என்றார். (அட‌ அது தானா என் வ‌லைப்பூவுக்கு வ‌ர‌வங்க‌ எல்லாம் பிட‌ரில‌டிச்சி ஓடிட்டு இருக்காங்க‌)

============

"உயிர் எழுத்து வெளியாகியுள்ள‌ க‌விதைக‌ளுக்கு வாழ்த்துக‌ள்" இந்த‌ பின்னூட்ட‌த்தை என்னுடைய‌ ஒரு ப‌திவில் பார்த்துவிட்டு இவ‌ர் ம‌ட‌ல் முக‌வ‌ரி கேட்டு ந‌ன்றி சொல்லி இவ‌ர் க‌விதையை நான் சிலேகித்த‌தால் எங்க‌ள் உரையாட‌ல்(ம‌ட‌ல், அர‌ட்டை வ‌ழி) தொட‌ர்ந்த‌து. உங்க‌ள் புரித‌ல் திற‌ன் அதிக‌ம் என்றும் க‌விதை ப‌கிர்த‌ல் அருமை என்றும் சொல்லி(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஆள‌ ர‌ண‌க‌ள‌மாக்க‌ வேண்டிய‌து) தொட‌ர்ந்த‌ உரையாட‌ல்க‌ள் உன்ன‌த‌மான‌வை

==============

இதே போல‌ முக‌மே அறியாம‌ல் பேச‌ ஆர‌ம்பித்து பின் ந‌ல்ல‌ ந‌ட்பாகி ச‌ந்தித்து இன்னும் ந‌ட்பாகி நிறைய‌ ப‌டிக்க‌ கிடைத்து அறிவை வ‌ள‌ர்த்த‌து..., இப்ப‌டியாக‌ முத்த‌மிழ் குமும‌த்தில் தோழ‌ர்க‌ள்,தோழிக‌ள், அண்ணாக்க‌ள், சித்தப்பா, த‌ம்பிக‌ள், ஏன் ஒரு ம‌க‌ன் கூட‌..., இந்த வ‌லையுல‌கிற்கு ந‌ன்றி ந‌ன்றி.

8 comments:

  1. ;))

    ஆக மொத்தத்துல யாரோட பதிவு லிங்கும் கொடுக்காம உங்களை நீங்களே ஆக்கிரமிச்சுக்கிட்டீங்க!

    ReplyDelete
  2. இங்கே யார் யார் என்னோட‌ பேசிட்டுட்டு இருக்காங்க‌ன்னு அடையாள‌ம் சொல்ல‌ வேண்டாம்ன்னு நினைச்சேன். அது இப்ப‌டி ஒரு சைட் இஃபேக்ட் ஆகும் என்று நினைக்க‌வில்லை. ட‌ப்பா ரொம்ப‌ அதிக‌மாயிடுச்சோ?????

    ச‌ரி விடுங்க‌ அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் சாத‌ர‌ண‌ம‌ப்பா

    ReplyDelete
  3. //இங்கே யார் யார் என்னோட‌ பேசிட்டுட்டு இருக்காங்க‌ன்னு அடையாள‌ம் சொல்ல‌ வேண்டாம்ன்னு நினைச்சேன். /

    ஆமா. அதுவே ஏதோ சுவாரசியமான துப்பறியும் கதைய படிக்குறா மாதிரி இருந்தது. நல்லவேளையா நடுநடுவுல உங்க கவிதை லிங்க் இருந்ததால ஓடிப்போய் படிச்சுட்டு வந்துட்டேன். எல்லாக்கவிதையும் ரொம்ப அருமை!

    நன்றி பகிர்விற்கு..

    ReplyDelete
  4. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நதியலையலைகளின் நிலை அருமை.

    ReplyDelete
  6. Beautiful poem.
    Whenever you find time, could you please have a look at my poems in http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

    ReplyDelete
  7. நன்றி சென்ஷி. நாளைக்கும் வாங்க.

    வாங்க நட்புடன் ஜமால் நன்றி. மீண்டும் வாங்க.

    வாங்க நர்சிம். "!" இதில் பன்முக கோணம் தெரியுது. ம்ம்ம் நன்றி.

    நாகேந்திர பாரதி. வாங்க. கருத்துக்கு நன்றி. உங்கள் வலை பார்த்தேன். நல்ல கவிதைகள். நேரம் கிட்டும் போது நிதானமாக படித்து மடல் இடுவேன்.

    ReplyDelete
  8. //நல்லவேளையா நடுநடுவுல உங்க கவிதை லிங்க் இருந்ததால ஓடிப்போய் படிச்சுட்டு வந்துட்டேன்.//

    உள்குத்து இல்லைங்களே சென்ஷி. அதுக்கு முந்தின வரியையும் இதையும் relate செய்தால் கொஞ்சம் logic உதைக்குது.

    மீண்டும் சொல்றேன் அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா. :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது