07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 31, 2009

வருகிறேன்

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை - இது பைபிள் வசனம்.
இந்த வாசகத்தை போன்றே என்னை விட்டு விலகாமலும், மனம் சங்கடப்படும் போதெல்லாம் என்னை கைவிடாமலும் இருப்பது எழுத்தும் வாசிப்பும் தான், மனிதர்களை விடவும் மனமெங்கும் என்னை அதிகம் ஆக்ரமித்தது எழுத்துதான்.

கன்னாபின்னாவென்று படித்துக்கொண்டிருந்த நான் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் நிறுத்தினேன். மளிகைக் கடையிலிருந்து வரும் பொட்டலப் பேப்பரைக் கூட விட்டு வைக்காத நான் எதையுமே படிக்காமல் இருந்தேன். மீண்டும் இந்த வலையுலகத்திற்கு வந்த போதுதான் எனது வாசிப்பின் புதிய பரிணாமம் தோன்றியது. ஆச்சரியப்பட்டுப் போனேன். விரிவாக படிப்பது, அதை வேறொரு கோணத்தில் வைத்து யோசிப்பது என்று எப்போதும் என்னை ஏதோ ஒரு உலகிற்கு அழைத்துக்கொண்டு போனது.

எத்தனையோ பேர் எவ்வளவு அருமையாக எழுதுகிறார்கள், இவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு வலைப்பூ என்ற ஒன்று இல்லையென்றால் அவர்களின் டைரி க்குள்ளே தானே இவையெல்லாம் முடங்கிப்போயிருக்கும். மேலும் எழுத தூண்டுதலுமற்று, அப்படியே கேட்பாரற்று அவர்களின் எழுத்துக்குள் எங்கு போயிருக்கும்? இந்த கேள்வி சில நல்ல படைப்புகளை படித்து முடித்தபின் எனக்குத் தோன்றும்.

வலைப்பூவை படிக்க ஆரம்பித்த பிறகு என்னிடமிருக்கும் புத்தகங்களெல்லாம் மீள் வாசிப்பு செய்யப்படுகின்றன. எழுத்து ஒன்றேதான். ஆனால் இடைப்பட்ட காலகட்டங்களில் அதன் புரிதல் வேறாயிருக்கிறது.

அலுவலக அழுத்தம், குடும்பச் சுமைகள் இதற்கு நடுவே நம்மை இளைப்பாற்றிக்கொள்ள நமக்கே நமக்கென்று கிடைத்த தனி ஒரு இடம். மனதை நிறைய வைக்கும் வாசிப்புகள், நல்ல நட்புகள், நெகிழ்ச்சியான சில நிகழ்வுகள் என இந்த வலைப்பூ உலகம்
எனக்கு தந்தது அதிகம்.

முடிந்தமட்டும் கொடுத்தவேலையை செய்திருக்கிறேன்.
நேரமின்மையால் என்னால் இன்னும் பலரின் பல பதிவுகளின் சுட்டிகளைத் தரமுடியவில்லை.

வலைச்சரத்தின் மூலமாக என்னை இன்னும் சிலர், பலருக்கு அறிமுகப்படுத்திய திரு. சீனா அவர்களுக்கு நன்றிகள்

இறுதியாக என்னைப் பிறருக்கு அறிமுகப்படுத்திய எனது சில பதிவுகள். இந்த இரண்டுப் பதிவும் நான் எழுத வந்தது வேறு,ஆனால் எழுதியது வேறு. எழுத ஆரம்பித்த பிறகு மனதில் தோன்றியதை அப்படியே பதிவு செய்தேன்

1. என் அப்பாவைக்குறித்தான இந்தப் பதிவு

2. தெருக்கூத்து

3. அன்புள்ள வர்ஷினிக்கு
(எந்த முன் தோன்றலுமில்லாமல், முந்நாளின் நிகழ்வை என் மகளுக்கு உரைக்காமல் வந்த பின் நான் அவளுக்கு சொல்லுவதைப் போல எழுதிய பதிவு இது.
என் மனதுக்கு மிகவும் நிறைவாய் உணர்ந்த பதிவும் இதே)


(எனக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் பதில் / நன்றி சொல்வது மிகவும் சொற்பமே.
ஏனெனில் எனக்கு அலுவலகத்தில் மட்டுமே கணினி உபயோகம், கிடைக்கும் சொற்ப நேரத்தில், மற்ற பதிவுகளை வாசித்து அதற்கு பதிலிடுவதற்கே சில / பல சமயங்கள் சரியாக இருக்கும் (நேரம் கிடைக்கும் போது அலுவலக வேலையும் செய்வேங்க) இதுவரை எனக்கு பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள்)

21 comments:

  1. கன்னாபின்னாவென்று படித்துக்கொண்டிருந்த நான் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் நிறுத்தினேன். மளிகைக் கடையிலிருந்து வரும் பொட்டலப் பேப்பரைக் கூட விட்டு வைக்காத நான் எதையுமே படிக்காமல் இருந்தேன். மீண்டும் இந்த வலையுலகத்திற்கு வந்த போதுதான் எனது வாசிப்பின் புதிய பரிணாமம் தோன்றியது. ஆச்சரியப்பட்டுப் போனேன். விரிவாக படிப்பது, அதை வேறொரு கோணத்தில் வைத்து யோசிப்பது என்று எப்போதும் என்னை ஏதோ ஒரு உலகிற்கு அழைத்துக்கொண்டு போனது.

    நிஜம் அமித்து அம்மா

    ReplyDelete
  2. மேலும் எழுத தூண்டுதலுமற்று, அப்படியே கேட்பாரற்று அவர்களின் எழுத்துக்குள் எங்கு போயிருக்கும்? இந்த கேள்வி சில நல்ல படைப்புகளை படித்து முடித்தபின் எனக்குத் தோன்றும்.


    எனக்கும் இதே உண்ர்வு தான் அதுவும் இப்பொழுது வரும் பதிவுகள் அத்தனையும் அத்தனை அருமையாக உள்ளது இந்த திறமைகள் எல்லாம் இத்தனை நாட்களாக இவர்களே உணராதது

    ReplyDelete
  3. முடிந்தமட்டும் கொடுத்தவேலையை செய்திருக்கிறேன்.
    நேரமின்மையால் என்னால் இன்னும் பலரின் பல பதிவுகளின் சுட்டிகளைத் தரமுடியவில்லை.

    நீங்கள் மிகச்சிறப்பாய் உங்கள் பணியை
    செய்து முடித்துள்ளீர்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மிக சிறப்பாக செஞ்சீங்க நீங்க

    நன்றி

    ReplyDelete
  5. \\இதற்கு நடுவே நம்மை இளைப்பாற்றிக்கொள்ள நமக்கே நமக்கென்று கிடைத்த தனி ஒரு இடம்\\


    மிக(ச்)சரியாக சொன்னீங்க அமித்து அம்மா

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா!

    ReplyDelete
  7. செய்வதை திருந்தச்செய்தமைக்கு பாராட்டுக்கள். பல நல்ல பதிவர்களைப் பற்றிய தகவல்கள் பரிமாரிக் கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் :)


    //நேரம் கிடைக்கும் போது அலுவலக வேலையும் செய்வேங்க//

    நம்பிட்டோம் !

    நம்பிட்டோம்!!

    ReplyDelete
  10. என்னது முடிஞ்சிடுசாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  11. உங்கள் பதிவுகளில் ''பொருத்தமற்ற தலைப்பு'' ''கவலை தின்னி'' ''பணத்தின் ருசி'' ''சுயம்'' போன்றவைகளும் மிக சிறப்பானவை! அடிக்கடி தோன்றும் அமித்து அப்டேட்சும் அசத்தும்! வலைச்சரம் ஆசிரியர் பணியிலும் அசத்தி விட்டீர்கள் நன்றி ! வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  12. எனக்கு அமிதம்மா கிட்டே பிடிச்ச விஷயமே இது தான்!"வருகிறேன்" என்ற தலைப்புதான்!

    எல்லாரும் என்னவோ எழ்வு வூட்டுக்கு வந்துட்டு போன மாதிரி தலைப்பு வச்சிச்சிட்டு போவாங்க!

    சூப்பர் தலைப்பு!

    இங்க நாங்க யாராவது தப்பா ஒரு வார்த்தை சொன்னா எவனாவதூ ஒருத்தன் "விடுடா விடுடா எதாவது ஒருத்தன் ப்ரே செஞ்ச்சு "ஆமென்" போட்டுட போறான்" அப்படின்னு சொல்லுவான்.

    இந்த வலைசரத்தில் நீங்கள் மட்டும் தான் நல்ல தலைப்பு வைத்து இருப்பதா உணர்கிறேன்!

    இனிமேலாவது "எழவு" தலைப்பு வைக்க ஆசிரியர் சீனா அனுமதிக்க மாட்டார் என நம்புகிறேன்

    ReplyDelete
  13. வாசிக்க நல்ல சுட்டிகளோடு சிறந்ததொரு வாரத்தைத் தந்திருக்கிறீர்கள், அமித்து அம்மா! வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. உங்களது சுட்டிகள் அனைத்துமே பிரமாதம்... தெரிவு செய்வதற்கும் திறமை வேண்டுமல்லவா? முடிவுரையிலும் அமர்க்களப்படுத்திவிட்டீர்கள்! வாராவாரம் இந்த நல்ல பணியை செய்துகொண்டிருக்கும் மிக உபயோகமான தளமாய் இருக்கிறது!

    ReplyDelete
  15. வாழ்த்துகள்

    ReplyDelete
  16. அன்பின் அமித்து அம்மா

    கொடுத்த பணியினை - ஏற்ற பொறுப்பினை அருமையாக நிறைவேற்றி - மன மகிழ்வுடன் சென்று வருகிறேன் எனக் கூறி விடை பெறுகிறீர்கள். மிக்க நன்றி அமித்து அம்மா. நல்வாழ்த்துகள்

    ஆமாம் இந்த அபி அப்பா என்னவோ சொல்றாரே - எனக்குப் புரில - அபி அப்பா தனி மடல்லே எழுதுங்களேன்

    ReplyDelete
  17. நல்லாப் போச்சுங்க!!!

    ReplyDelete
  18. மிக அருமையாகத் வலைச்சரத்தில் தொகுத்துள்ளீர்கள் அமித்து அம்மா. நன்றி மற்றும் வாழ்த்துகள்

    ReplyDelete
  19. நன்றி அமித்து அம்மா.

    ReplyDelete
  20. நன்றியும் வாழ்த்துக்களும் அமித்து அம்மா!

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் அமித்து அம்மா!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது