07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 17, 2011

நட்பு

                                                          நண்பேன்டா!

நல்லெண்ணமே நட்பின் அடித்தளம்.
நல்லெண்ணத்தை பிறர் மனங் குளிர வெளியிடுங்கள்.
உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தைப் பிறர் மனதில் உருவாக்க
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அன்பான அணுகு முறையைக் கையாளுவதே. அன்பு பூக்கும் விழிகள் உங்களிடம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி யாருடைய இதயக் கதவுகளை வேண்டுமானாலும் உங்களால் திறக்க முடியும். முயலுங்கள். வெற்றி கிடைக்கும்.



சிலர் தொட்டதற்கெல்லாம் எதை எடுத்தாலும் பிறரைக் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் தன்மை இருக்கிறது என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பு, வெறுப்பு இருக்கிறது. நீங்கள் நினைத்த படி உங்களாலயே இருக்க முடியாத போது மற்றவர்களால் எப்ப்டி இருக்க முடியும்? இதை சிந்தித்து பாருங்கள்.ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற தனித்தன்மைக்குத் தக்கவாறு அவருடன் பழகுங்கள். அவரிடம் உங்களின் எதிர்பார்ப்பையும் அவருடைய இயல்புக்குத் தக்கவாறு அமைத்துக்கொள்ளுங்கள்.



நேரில் புதிய நட்பு அமையும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பரஸ்பரமாகி பழகும்போது அந்த நட்பு காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது...
ஆனால் பதிவுலகில் நண்பர்களாக பழகிய நாம் எப்படி ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வது. அப்படி தெரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முத்தான வாய்ப்பாக அமைந்தது தான் முத்தான மூன்று முடிச்சு தொடர்....அப்படி என்னோடு தொடர்பாக அமைந்த நட்புகளில் சில அன்பு பதிவர்கள்....
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
அன்பு உலகம் வலைப்பூவின் சொந்தக்காரர் அன்பு சகோ M.Ramesh அவர்கள்... அவர் சகலகலா வல்லவராக பதிவுலகில் பங்கு சந்தை, மருத்துவம் என பல உபயோகமான பதிவுகளை பகிர்ந்துகொண்டு வருகிறார்... அவரின் மூன்று முடிச்சு தொடராக மூன்றின் ரகசியத்தில் அவரைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கலக்கலான காகித பூக்கள் வலைப்பூவின் சொந்தக்காரர் தோழி ஏஞ்சலின் அவர்கள்..ஆங்கில வலைப்பூ papercrafts  ம் இவருடையுதே..  அருமையான விசயங்களை அழகாக பகிரும் திறமை உள்ள இவரைப் பற்றி அறிய மூன்று முடிச்சுகள் .


தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வலைப்பூவிற்கு சொந்தக்காரர் நமது அன்பு சகோதரர் திரு. ரமணி அவர்கள்.. இன்று சாமி கும்பிடுவதில் எவ்வளவு முட்டாள் தனமாக நடந்துகொள்கிறோம் எனற செய்தியை பழநி முருகனும் நானும் என்ற பதிவில் கடவுள் அழகு முருகனிடம் உரையாடுவது போல் இவர் பகிர்ந்த விதம் உண்மையான நிலையை விளக்குகிறது. இந்த அருமையான அன்பருடன் நட்பு முடிச்சு ஏற்பட்ட தொடர் முத்தான மூன்று முடிச்சு

உப்பு மடச் சந்தி என்ற வலைபூவில் கதை பேச வாங்கோ என்று அழைக்கும் நமது சகோ ஹேமா அவர்கள் இவர் ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை பதிவில் உருக்கமாக பகிர்ந்து வருகிறார்... இவரது இன்னொரு வலைப்பூ வானம் வெளித்த பின்னும் என்ற தளத்தில் சமூகத்தில் நடந்த கொடுமைகளை கவிதையாக தந்து நமது மனதை தொட செய்கிறார். இவரைப்பற்றி அறிய மாய உலகம் தேடவிட்ட மூன்றுகள் .



தமிழை நேசிப்பவர்கள் வாசிப்பதற்காக தமிழ் வாசி என்ற வலைப்பூவில் பட்டைய கிளப்பும் பதிவுகளை பகிர்ந்து பரவசப்படுத்துபவர் தான் நம்ம நண்பர் பிரகாஷ் அவர்கள்.. இவர் பிரபல பதிவர்களை எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்து அவர்களை பற்றி பல பேருக்கு அறிய செய்பவர்.. இவருடன் இன்றும் தொடரும் நட்புக்கு காரணமாக அமைந்து மூணுக்கு மூணாக தொடர்.



பதிவுலகில் படத்திற்கு திரைவிமர்சனம் எழுதி பார்த்தீர்ப்பீர்கள்..போஸ்டருக்கே விமர்சனம் எழுதி அசத்தியவர் தான் பதிவுல நாயகன் நமது நண்பர் நாற்று நிரூபன் அவர்கள்..நாற்று என்ற தளத்தில்
பட்டைய கிளப்ப போகும் போஸ்டர் விமர்சனம்.  அதே போல் F.M ல்ஆர்ஜேவுடன் பேசி பாட்டுக் கேட்டிருப்பீர்கள் ஆனால் பதிவுலகில் கேட்டிருக்கிறீர்களா... கேளுங்கள் பதிவுலகில் முதன் முறையாக நேரடி ஒலிபரப்பு- ப்ளாக்கர் எப். எம்! ம்ம்ம் மன்னிக்க பார்த்து ரசியுங்கள்.


பதிவுலகில் பூனை என்று ஞாபகம் வந்தாலே இவரது வலைப்பூவாகத்தான் இருக்கும்.. எவ்வளவோ மனப்பிரச்சனைக்கிடையில் இவரது வலைப்பூவில் நுழைந்து பதிவுகளையும், அதில் அன்பர்கள் இடும் கருத்துகளையும் படித்தால் தானாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவோம்... எதையும் இலகுவாக எடுத்துக்கொண்டு நகைச்சுவை உணர்வுடன் எதார்த்தமான விசயங்களை பகிரும் நல் உள்ளத்துக்கு சொந்தக்காரர் அன்பு தோழி அதிரா அவர்கள்... அவரது
என் பக்கம் என்ற வலைப்பூவிற்கு சென்று மாயாவும் “லேடி” முதலையும்:)) யுடன் உரையாட தேம்ஸில் குதியுங்கள்.


 நண்பர் கோகுல் அவர்களது கோகுல் மனதில் என்ற வலைப்பூவில் அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம் என்ற அவரது எதார்த்தமான பயணத்தை அழகாக பகிர்ந்திருந்தார். அதே சமயத்தில் சமுகத்தில் நடக்கும் அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக பதிவுகளை கொடுப்பதில் இவர் வல்லவர்.


எதார்த்தமான விசயங்களை நகைச்சுவையான நடையில் பதிவுகளை எழுதுவதில் வல்லவர் இந்திராவின் கிறுக்கல்கள் வலைப்பூவின் சொந்தகாரர் தோழி இந்திரா அவர்கள். நான் இந்திரா இம்சிக்கிறேன் படிக்காதிங்க என்று அவர் பாசத்துடன் சொன்னாலும் பதிவர்கள் நேசத்துடன் படிப்பார்கள். நீங்களே சொல்லுங்க நான் பல்பு வாங்கினேனா என்று கேக்கிறார்.. 

==================================================================
***  *** ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***
==================================================================

வலைப்பதிவில் பதிவு எழுதும் பலருக்கும் நமது பதிவுகள் பத்திரிக்கைகளில் வந்தால் நல்லாருக்குமே... எப்படி அனுப்புவது. எந்த பத்திரிக்கைக்கு அனுப்புவது என்ற குழப்பம் இருக்கும். அந்த குழப்பத்தை தீர்க்கும் விதமாக மேடம் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் அவரது சும்மா என்ற வலைப்பூவில் இணைய இதழ்கள்..,பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்புவது எப்படி என்று பகிர்ந்திருக்கிறார்.. படித்து தெரிந்து உங்களது படைப்புகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி புகழ் பெறுங்கள் நண்பர்களே.


பிரபல எழுத்தாளர் மரியாதைக்குரிய மேடம் வித்யாசுப்ரமணியம் அவர்களது வலைப்பூ கதையின் கதை முன்னுரை எழுதுவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. என்னைக் கேட்டால் நாவல் எழுதுவதை விட கடினமானது முகவுரை எழுதுவதுதான் என்கிறார்..கதைக்கு முன்னுரை, முகவுரை மிகவும் முக்கியம் என்கிறார்.
1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
இவரைப்பற்றி எனது கருத்து:
"அன்புக்கு பஞ்சமில்லை" என்ற இவர் எழுதிய கதையில் இவர் சொல்லியிருந்த வரிகளும் அந்த கதையும் என் மனதை மிகவும் கொள்ளை கொண்டது... அந்த வரிகள் : யோசிச்சு பார்த்தா ஒரு உண்மை புரியும். எதுவுமே தியாகம் இல்ல. யாருமே யாருக்குமே எதையும் நோக்கம் இல்லாம விட்டுக்கொடுக்கிறது இல்ல. விட்டுக் கொடுக்கிறதெல்லாம் வட்டியோடு திரும்ப பெறத்தான். தன்னலத்தோடு கூடின பாசத்துக்குத் தான் பாதி பேர் அடிமையாய் இருக்கோம்.
என் வாழ்க்கையில் சில நிமட தெளிய வைத்த கதையாசிரியர்... நன்றி மேடம்.
==================================================================================


மதிப்பிற்குரிய ஐயா புலவர் சா.இராமாநுசம் அவர்களது கவிதைகள் என்ற வலைப்பூவில் சமூக சிந்தனைகள் தூண்டும் விதமாகவும், ஈழத்தில் நடந்த, நடக்கும் கொடுமைகளையும் இலக்கிய வடிவில் கவிதைகளாக கொடுத்து சிந்திக்கவைக்கிறார் நமது புலவர் ஐயா. தமிழின் அருமை இவரது கவிதையில் கலக்கலாக பிரதிபலிப்பதே இவரது திறமைக்கு சான்று.


வேர்களைத்தேடி வலைப்பதிவின் சொந்தக்காரர் அன்பு நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள்..இவர் இலக்கிய தமிழைப்பற்றி அழகிய நடையில் பகிர்ந்து வருகிறார்.. இன்னும் பல வருடங்களில் இலக்கியம் பற்றிய தேடல் என்றாலே இவர் பெயர் தான் முதன்மையில் பேசப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


சகோ வேதா.இலங்காதிலகம் அவர்கள் வேதாவின் வலை என்ற வலைப்பூவில் சிந்தனைச்சாரல் என்ற தொடர் பதிவுகளை இலக்கிய நடையில் நமக்கு ஊட்டி சிந்திக்கவைக்கிறார்... இவரது அருமையான படைப்புகள் இவரது வலைப்பூவிற்கு தொடர்ந்து நம்மை அழைத்துச்செல்லும் என்பது உண்மை.


 எந்த கெட்ட பழக்கமும் ஒரு வியாதி தான், அந்த வியாதி தீருவதற்கான மருந்து மனதிடமும், விடாமுயற்சியும் தான் என்றுMADURAGAVI என்ற வலைபூவில்  குடி குடியை கெடுக்கும் என்ற பதிவில் நம்முடன் பகிர்ந்திருக்கிறார் சகோ RAMVI அவர்கள்.இவர் பதிவுகள் மிக தெளிவாகவும் சிந்திக்க வைக்க கூடியதாகவும் எழுதுவதில் சிறந்தவர்.


======================================================================
நமது லக்ஷ்மி அம்மா அவர்கள் குறை ஒன்றுமில்லை என்ற வலைப்பூவில் மெட்ராஸ் நல்ல மேட்ராஸ் என்ற அவரது பயணபதிவு அனுபவங்களை தொடராக எழுதி நம்முடன் அருமையாக பகிர்ந்துகோண்டிருக்கிறார். வாருங்கள் நாமும் அவரோட பதிவுகளில் பயணம் செய்வோம். தொடர் பதிவு எழுதி வருவது என்பது சாதரண விசயமல்ல.. பதிவர்கள வருகை குறைய வாய்புண்டு ஆனால் இவர்களது எழுத்து திறமையால் பதிவர்களின் வருகை அதிகரித்துக்கொண்டு தானிருக்கிறது.


அதே போல் சகோதரர் செங்கோவி அவர்கள் மன்மத லீலைகள் எனது கிழிந்த டைரியிலிருந்து என்ற உண்மை தொடரை மிகவும் சுவராஷ்யமாகவும் விறுவிறுப்புடன் கிட்டதட்ட 48  தொடர் வெற்றிகரமாக எழுதி நம்முடன் பகிர்ந்திருக்கிறார். இது சாதராண விசயமே அல்ல அநேகமாக பதிவுலகில் இத்தனை தொடர் வெற்றிகரமாக நகர்த்தி கொண்டு செல்பவர் இவராகத்தான் இருக்க முடியும்.




பதிவுலக நம்ம மாம்ஸ் விக்கியுலகம் அவர்கள் விக்கியின் அகட விகடங்கள் என்ற வலைப்பூவில் குட்டிச்சுவர் என்ற தொடரை எழுத ஆரம்பித்து பகிர்ந்து பட்டைய கிளப்பி பரவசபடுத்திக் கோண்டிருக்கிறார்.
வித்தியாசமான கலக்கலான காணொளிகள் என்றாலே இவர் வலைப்பூ உத்திரவாதம்.




சகோ ஜெய்லானி அவர்கள் அவரது வலைப்பூவில் ஒரு...... டைரி....... என்ற தொடர் பதிவில் நண்பர்கள் பல்பு வாங்கின விசயத்தை எழுதுகிறார்...படித்தால் வயிறு புண்ணாகிவிடும் அப்படி நகைச்சுவை உணர்வுடன் எழுதி அசத்தியிருக்கிறார்...


=====================================================================
ஆசிரியர் இமா அவர்கள் இது இமாவின் உலகம் என்ற வலைப்பூவில் சமூக சிந்தனையுடன் கூடிய பதிவுகளை பகிர்ந்து வருகிறார்... அவரது நல் உள்ளம் பிரதிபலிக்கும் விதமாக சின்ன பாதங்கள் என்ற பதிவை பகிர்ந்திருக்கிறார். படியுங்கள் அவரது நல் உள்ளம் நம்மையும் சிந்திக்க வைக்கும்.




நமது சகோ செம்பகம் விடிவெள்ளி அவர்கள் செம்பகம் என்ற வலைப்பூவில் ஈழத்தில் நமது சகோதர சகோதரிகள் பட்ட இன்னலகளை கவிதை வடிவில் பகிர்ந்து வருகிறார் .. வாருங்கள் நண்பர்களே பகிர்வோம்.




கடம்பவன குயில் அவர்கள் கடம்பவன பூங்கா என்ற வலைப்பூவில் எளிய நடையில் அருமையான கவிதைகளை அழகாக கலக்கலாக பதிவிட்டு வருகிறார்... அதுமட்டுமல்ல சமூக சிந்தனைகளையும் கட்டுரைகளாக பதிவிட்டு வருகிறார். தானத்தில் சிறந்த தானம் ? எது என படியுங்கள் நண்பர்களே.


சிந்து சமவெளி நாகரீகத்தை பற்றி யாழினி அவர்கள் யாழ் இனிது என்ற வலைப்புவில் மிக பிரமாதமாக படங்களுடன் விவரித்திருக்கிறார்.. ஒரு முறை இவரது வலைப்பூவிற்கு சென்றால் இந்த வலைப்பூவின் தீவிர ரசிகராகிவிடுவீர்கள்.


 சின்ன தூரல் என்ற வலைப்பூவில் நீ யார் ?என்ற காலத்தை பற்றிய கவிதையை கலக்கலாக பகிர்ந்திருக்கிறார் தோழி சின்ன தூரல்..சமீபகாலமாக எழுதி வருகிறார் சென்று படித்து உங்களது ஆதரவை தாருங்கள் நண்பர்களே

76 comments:

  1. வலைச்சர ஆசிரியராகப்பொறுப்பேற்று
    வித்தியாசமான முறையில் பதிவர்கள்
    அறிமுகம் செய்தது முதல் அனைவரும்
    அவசியம் தொடரவேண்டிய பதிவுகள் அனைத்தையும்
    மிகச் சரியாக அறிமுகம் செய்தததுவரை
    மிகச் சிறப்பான முறையில் தங்கள்
    திறமையை மட்டுமல்லாது பதிவுலகின் மீது
    தங்கள் கொண்டுள்ள அளவிலாஅன்பினையும்
    ஆர்வத்தினையும் மிக அழகாக வெளிப்படுத்தியமைக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  2. அருமை ராஜேஷ்!
    இந்த பதிவில் நமது பதிவுலக நட்பின் வலிமை தெரிகிறது.
    ஒவ்வொருவரையும் நண்பேண்டா !என சொல்ல வைக்கிறது!

    ReplyDelete
  3. மிக்க நன்றி ராஜேஷ், என்னை அறிமுக படுத்தியதர்க்கு.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  5. என்னை இவ்வலைச்சரம் மூலமாக நண்பர்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  6. இனிய காலை வணக்கம் பாஸ்,

    நட்புப் பற்றிய நவரசப் பதிவுகளைத் தொகுத்து அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க.

    ரசித்தேன்.

    "இன்று அறிமுகமான அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்".

    ReplyDelete
  7. நட்புன்னு சொல்லிட்டு பல்ப் வாங்கியதை போட்டு குடுத்திட்டீங்களே பாஸ் ஹி..ஹி.. :-)

    ReplyDelete
  8. நண்பரே.... இன்று நட்புக்கு வலிமை சேர்த்துள்ளீர்கள். என்னையும், மற்ற நண்பர்களையும் இன்றைய பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நட்பை பற்றி அழகாக சொல்லி இருக்கீங்க . இதில் கடுமையான உழைப்பும் தெரியுது . ஒரு சில லிங்க் வேலை செய்யல .நண்பேண்டா :-)))

    இன்னும் தொடர வாழத்துக்கள் :-)

    ReplyDelete
  10. அறிமுகம் செய்யப்பட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். எங்களுடன் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  11. ராஜேஷ்,

    வலையுலக நட்”பூ”க்களை சரமாக தொடுத்து வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கும் விதம் அருமை.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. சகோ!
    என்னையும் வலைச் சரத்தில்
    அறிமுகப் படுத்திய தங்களுக்கு
    பெரும் மகிழ் வோடு நன்றி
    தெரிவித்துக்கொள்கிறேன்
    மேலும் இன்றைய பதிவின்
    முன்னுரையாக எழுதியுள்ள
    ஒப்பற்ற கருத்துக்களுக்கு
    என் உளங்கனிந்த, மட்டற்ற
    மகிழ்வையும் பாரட்டுதலையும்
    தெரிவித்துக் கொள்கிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. எந்த கைமாறும் எதிர்பாரா நட்பு..

    ReplyDelete
  14. நிறைய அறிமுகங்கள். என் இடுகையையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி மாய உலகம்.

    ReplyDelete
  15. ராஜேஷ் என்னையும் மற்றவர்களையும் அறிமுகப்படுத்திய விதம் அருமையா இருக்கு. நன்றி எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அன்புநிறை நண்பரே
    நட்பின் இலக்கணம் கூறி நிற்கின்றீர்....
    வலையுலக நட்பின் பெருமையை போற்றும் வகையில்
    நீங்கள் அணிவித்த கதம்ப மாலைகள்
    மணக்கின்றது.

    ReplyDelete
  17. உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி மாப்ள!...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. பதிவின் தொடக்கத்தில் நல்ல சிந்தனைகளை விதைத்து அறிமுகங்களை அழகாய் வரிசைப் படுத்தி கொடுத்திருக்கும் விதம் சிறப்பு . அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . உங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைவதற்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அருமையான வித்தியாசமான அறிமுகம்
    பல தெரிந்த சில தெரியாத முகங்கள்

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்


    ஒரு சின்ன திருத்தம்

    ஆதிரா இல்லை ( என் அன்பு தோழி - அதிரா)

    ReplyDelete
  20. நட்பு....

    உயிரினும் மேலாக நான் என்றும் கருதுவது... ஏன் யாருமே கருதுவது....

    உறவு இல்லாத ஒருவர் துன்பத்தில் தோளணைத்து இன்பத்தில் மகிழ்ந்து கண்ணீரை துடைத்து தப்பு வழியில் நடக்கும்போது கண்டித்து இறுதிவரை உறுதியாக கைப்பற்றுவது தான் நட்புன்னு ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க ராஜேஷ்....

    முகம் பார்க்காமல் நாம் பெற்ற நட்புகள் இதுவரை உயர்வான நட்புகளே......

    பண்பும் அன்பும் உதவி என்றால் ஓடி வந்து உதவுவதும் இப்படி தான்பா பார்த்திருக்கிறேன்....

    யார் சொன்னது இணைய வழி நட்பு மோசம் என்று... இதோ காண்கிறேனே வைரங்களாக முத்துக்களாக அன்பு மணம் வீசும் உள்ளங்களாக காண்கிறேனே... நட்பை உயர்வென்று நான் கருத இதை விட உதாரணம் எதுவும் சொல்ல முடியாது....

    ஒருவர் திறமையை பார்த்து பொறாமை படாமல் ஊக்குவித்து வெற்றியை அழகுபார்த்து கொண்டாட வைக்கிறது நட்பு...

    அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களின் பலர் வலைப்பூ நான் பார்த்திருக்கிறேன்...

    ராஜேஷ் உங்களை நான் அறிந்ததும் ரமணி சார் படைப்புகளில் முத்தான மூன்று முடிச்சு பகிர்வு மூலமாக தான்....

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்...

    ராஜேஷ்... எனக்கு தமிழ்மணத்தில் இணைக்க தெரியாததால் ஓட்டு போடவும் தெரியலைப்பா.. ஆனால் கண்டிப்பா போடுவேன் கத்துகிட்டு...

    அருமையா தொடர்கிறீங்கப்பா...

    உங்க பாட்டை இதோ இப்பவே கேட்டுட்டு அதற்கான கருத்தையும் சொல்வேன் :)

    ReplyDelete
  21. அன்பின் சகோதரா ராஜேஷ்!
    என்னை இவ்வலைச்சரம் மூலமாக நண்பர்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி ...நன்றி.
    சிறப்பாக உங்கள் ஆசிரிய சேவை செல்கிறது. வாழ்த்துகள்.
    http://www.kovaikkavi.wpordpress.com

    ReplyDelete
  22. நட்பு பற்றிய தங்கள் பகிர்வு அருமை .அறிமுகபடுதியதற்கு நன்றி நண்பா .
    வாழ்வில் நீங்கள் மென்மேலும் முன்னேறி சாதனை படைக்க வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  23. //ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பு, வெறுப்பு இருக்கிறது. நீங்கள் நினைத்த படி உங்களாலயே இருக்க முடியாத போது மற்றவர்களால் எப்ப்டி இருக்க முடியும்? இதை சிந்தித்து பாருங்கள்.//

    சூப்பர் மாயா... சூப்பர் கலக்கிட்டீங்க... பிள்ளையாகட்டும், கணவனாகட்டும், மனைவியாகட்டும், நட்பாகட்டும்... அவர்களை அவர்களாகவே இருக்க விட்டால்தான் சந்தோசம் அதிகமாகும்... மாற்ற வெளிக்கிட்டால் அடங்கி விடுவார்கள், அவர்கள் அவர்களாக இருக்க மாட்டார்கள்.

    எனக்குத் தெரிந்து ஒரு குடும்பம், கணவர் மிகவும் கலகலப்பானவர்... திருமணத்துக்குப் பின், மனைவி அவரை அடக்கத் தொடங்கிட்டா... அவரோடு பேசாதே இவரோடு பேசாதே, எதுக்கு அப்படிப் பகிடி விட்டீங்க என்றெல்லாம்......

    அவர் படித்தவர், பண்பானவர்... அதனால் சண்டையெல்லாம் பிடிக்க வில்லை, தன்னை மாற்றிக்கொண்டார்.. முடிவு? இப்போ கலகலப்பெல்லாம் அடங்கி மிகவும் அமைதியாகிட்டார்... காரோடும்போது அமைதியாகப் போகிறார்.. பக்கத்தில் இருக்கும் மனைவி சொல்கிறார்.... என்ன உங்கள் வாயில் இருக்கு, கொஞ்சம் திறந்து கதைக்கலாமே எதையாவது என:))). நாமும் கூட இருந்தோம் அப்போ>>>.

    ReplyDelete
  24. ஒரேயடியாக அனைத்து நட்புக்களையும் அறிமுகப்படுத்திட்டீங்க அவ்வ்வ்வ்வ்:)))).

    தன்னை அறிமுகப்படுத்தேல்லை என முதலை வாலை வாலை அடிக்குது...:))) முதலைக்கும் ஒரு புளொக் இனி ஓபின் பண்ணிக் குடுக்கோணும் போல:)).

    என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மியாவும் நன்றி மாயா.

    // என்ற வலைப்பூவிற்கு சென்று மாயாவும் “லேடி” முதலையும்:)) யுடன் உரையாட தேம்ஸில் குதியுங்கள்.//

    ஹா....ஹா..ஹா....

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. நான் நினைக்க ஜலீலாக்கா சொல்லிட்டா.... மியாவும் நன்னி ஜல் அக்கா.

    மக்கள்ஸ்ஸ்ஸ் இத்தால் அறிவிப்பதென்னவென்றால் ... என் பெயர் ஆதிரா இல்லை... அ......தி......ரா.....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:))).

    மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  26. கலக்கலான அறிமுகங்கள்.

    ReplyDelete
  27. நட்பின் இலக்கணத்தையும் நட்பின் வலிமையையும் பறைசாற்றிய தங்களின் நட்புக்கு தலைவணங்குகிறேன்..

    கடம்பவன பூங்காவை தங்கள் நட்பில் அறிமுகப்படுத்தி என்னை உயர்த்திய தங்களுக்கு நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  28. நிறைய நண்பர்களை இன்று பிடித்தேன் தங்கள் அறிமுகம் மூலம். நன்றி நண்பரே.

    ReplyDelete
  29. இன்று அதிக அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. Ramani said...
    வலைச்சர ஆசிரியராகப்பொறுப்பேற்று
    வித்தியாசமான முறையில் பதிவர்கள்
    அறிமுகம் செய்தது முதல் அனைவரும்
    அவசியம் தொடரவேண்டிய பதிவுகள் அனைத்தையும்
    மிகச் சரியாக அறிமுகம் செய்தததுவரை
    மிகச் சிறப்பான முறையில் தங்கள்
    திறமையை மட்டுமல்லாது பதிவுலகின் மீது
    தங்கள் கொண்டுள்ள அளவிலாஅன்பினையும்
    ஆர்வத்தினையும் மிக அழகாக வெளிப்படுத்தியமைக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தொடர்ந்து சந்திப்போம்//

    தங்களை வரவேற்கிறேன் சகோ வலைச்சரம் சார்பாக... தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்

    ReplyDelete
  31. கோகுல் said...
    அருமை ராஜேஷ்!
    இந்த பதிவில் நமது பதிவுலக நட்பின் வலிமை தெரிகிறது.
    ஒவ்வொருவரையும் நண்பேண்டா !என சொல்ல வைக்கிறது!//

    வரவேற்கிறேன் கோகுல் வலைச்சரம் சார்பாக...கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  32. RAMVI said...
    மிக்க நன்றி ராஜேஷ், என்னை அறிமுக படுத்தியதர்க்கு.//

    வாங்க..வரவேற்கிறேன்... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி வலைச்சரம் சார்பாக.

    ReplyDelete
  33. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    நல்ல அறிமுகங்கள்//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. M.R said...
    என்னை இவ்வலைச்சரம் மூலமாக நண்பர்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ...//

    வரவேற்கிறேன் சகோ...வலைச்சரம் சார்பாக நன்றி

    ReplyDelete
  35. நிரூபன் said...
    இனிய காலை வணக்கம் பாஸ்,

    நட்புப் பற்றிய நவரசப் பதிவுகளைத் தொகுத்து அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க.

    ரசித்தேன்.

    "இன்று அறிமுகமான அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்".//

    வரவேற்கிறேன் நண்பரே! உங்களது கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் வலைச்சரம் சார்பாக மனம் கனிந்த நன்றிகள்

    ReplyDelete
  36. ஜெய்லானி said...
    நட்புன்னு சொல்லிட்டு பல்ப் வாங்கியதை போட்டு குடுத்திட்டீங்களே பாஸ் ஹி..ஹி.. :-)//


    பாஸ் இப்படி கோர்த்து உடுறிங்களே பாஸ்... ஹா ஹா ஹா :-)

    ReplyDelete
  37. தமிழ்வாசி - Prakash said...
    நண்பரே.... இன்று நட்புக்கு வலிமை சேர்த்துள்ளீர்கள். என்னையும், மற்ற நண்பர்களையும் இன்றைய பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்//

    வரவேற்கிறேன் நண்பரே!... தங்களது கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் கனிந்த நன்றி நண்பா

    ReplyDelete
  38. ஜெய்லானி said...
    நட்பை பற்றி அழகாக சொல்லி இருக்கீங்க . இதில் கடுமையான உழைப்பும் தெரியுது . ஒரு சில லிங்க் வேலை செய்யல .நண்பேண்டா :-)))

    இன்னும் தொடர வாழத்துக்கள் :-)//


    தங்களது கருத்துக்கு நன்றி பாஸ்... எந்த லிங்குன்னு லைட்டா கண்ண காமிச்சீங்கன்னா சரி பண்ணிடுவேன்... எல்லாம் வேல செய்யுதே பாஸ்... நண்பேண்டா.. வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி பாஸ்

    ReplyDelete
  39. Abdul Basith said...
    அறிமுகம் செய்யப்பட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். எங்களுடன் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி நண்பா!//

    கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் வலைச்சரம் சார்பாக மனம்கனிந்த நன்றி நண்பா...

    ReplyDelete
  40. சத்ரியன் said...
    ராஜேஷ்,

    வலையுலக நட்”பூ”க்களை சரமாக தொடுத்து வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கும் விதம் அருமை.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

    ஆஹா... நண்பரே! கருத்தே கலக்கலான கவிதையா கோர்த்துட்டீங்களே ...உங்களது திறமை கருத்துக்களிலிலும் மிளிர்கிறது நண்பா... வாழ்த்துகள்க்கு மனம்கனிந்த நன்றி

    ReplyDelete
  41. புலவர் சா இராமாநுசம் said...
    சகோ!
    என்னையும் வலைச் சரத்தில்
    அறிமுகப் படுத்திய தங்களுக்கு
    பெரும் மகிழ் வோடு நன்றி
    தெரிவித்துக்கொள்கிறேன்
    மேலும் இன்றைய பதிவின்
    முன்னுரையாக எழுதியுள்ள
    ஒப்பற்ற கருத்துக்களுக்கு
    என் உளங்கனிந்த, மட்டற்ற
    மகிழ்வையும் பாரட்டுதலையும்
    தெரிவித்துக் கொள்கிறேன்

    புலவர் சா இராமாநுசம்//

    சகோதரரை வரவேற்கிறேன்...கருத்துக்கு உள்ளம் கனிந்த நன்றி

    ReplyDelete
  42. suryajeeva said...
    எந்த கைமாறும் எதிர்பாரா நட்பு..//

    உண்மை தான் நண்பரே நன்றி

    ReplyDelete
  43. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    நிறைய அறிமுகங்கள். என் இடுகையையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி மாய உலகம்//

    வரவேற்கிறேன் மேடம்... தங்களது கருத்துக்கு வலைச்சரம் சார்பாக மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  44. Lakshmi said...
    ராஜேஷ் என்னையும் மற்றவர்களையும் அறிமுகப்படுத்திய விதம் அருமையா இருக்கு. நன்றி எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.//

    வரவேற்கிறேன்ம்மா... வாழ்த்துக்களுக்கு வலைச்சரம் சார்பாக நன்றி

    ReplyDelete
  45. மகேந்திரன் said...
    அன்புநிறை நண்பரே
    நட்பின் இலக்கணம் கூறி நிற்கின்றீர்....
    வலையுலக நட்பின் பெருமையை போற்றும் வகையில்
    நீங்கள் அணிவித்த கதம்ப மாலைகள்
    மணக்கின்றது.//

    அன்பான கருத்துக்கு அன்பு நன்றி நண்பரே

    ReplyDelete
  46. விக்கியுலகம் said...
    உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி மாப்ள!...வாழ்த்துக்கள்//

    வரவேற்கிறேன் மாம்ஸ்..வாழ்த்துக்கு நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  47. ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
    பதிவின் தொடக்கத்தில் நல்ல சிந்தனைகளை விதைத்து அறிமுகங்களை அழகாய் வரிசைப் படுத்தி கொடுத்திருக்கும் விதம் சிறப்பு . அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . உங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைவதற்கும் என் வாழ்த்துக்கள்//

    தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி நண்பரே

    ReplyDelete
  48. கணிப்பொறி பிரச்சனை இருந்ததால் ஒரு வாரமாக எதையும் பார்க்க முடியவில்லை. உங்கள் பின்னூட்டம் கண்டு இப்போதுதான் வலைச்சரம் வந்தேன். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகம் செய்திருப்பதற்கு மிக்க நன்றி ராஜேஷ். உங்கள் வலைச்சர எழுத்துக்களை இனிமேல்தான் படிக்க வேண்டும். படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  49. மஞ்சுபாஷிணி said...
    உயிரினும் மேலாக நான் என்றும் கருதுவது... ஏன் யாருமே கருதுவது....யார் சொன்னது இணைய வழி நட்பு மோசம் என்று... இதோ காண்கிறேனே வைரங்களாக முத்துக்களாக அன்பு மணம் வீசும் உள்ளங்களாக காண்கிறேனே...//

    நீங்கள் சொன்னது போல்... முகம் காட்டாத நட்பும் ஒரு முத்தான கண்ணியமான நட்பு தான்...

    ReplyDelete
  50. மஞ்சுபாஷிணி said...

    ராஜேஷ் உங்களை நான் அறிந்ததும் ரமணி சார் படைப்புகளில் முத்தான மூன்று முடிச்சு பகிர்வு மூலமாக தான்.... //

    உண்மை தான் இந்த இடத்தில் சகோதரர் ரமணி அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்

    ReplyDelete
  51. மஞ்சுபாஷிணி said...
    தங்களது விரிவான பின்னூட்டம் என் மனதை குளிர வைக்கிறது மேடம்... கண்டிப்பாக பாடலை கேட்டு கருத்துக்களை சொல்லுங்கள்...மனம் கனிந்த இதய பூர்வ அன்பு நன்றிகள்

    ReplyDelete
  52. kavithai said...
    அன்பின் சகோதரா ராஜேஷ்!
    என்னை இவ்வலைச்சரம் மூலமாக நண்பர்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி ...நன்றி.
    சிறப்பாக உங்கள் ஆசிரிய சேவை செல்கிறது. வாழ்த்துகள்.
    http://www.kovaikkavi.wpordpress.com
    //

    வரவேற்கிறேன் சகோ! வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  53. angelin said...
    நட்பு பற்றிய தங்கள் பகிர்வு அருமை .அறிமுகபடுதியதற்கு நன்றி நண்பா .
    வாழ்வில் நீங்கள் மென்மேலும் முன்னேறி சாதனை படைக்க வாழ்த்துகிறேன்//

    வாங்க தோழி! தங்களது ஆசிர்வாத வாழ்த்துக்கு இதயம் கனிந்த அன்பு நன்றிகள்

    ReplyDelete
  54. athira said...

    சூப்பர் மாயா... சூப்பர் கலக்கிட்டீங்க... பிள்ளையாகட்டும், கணவனாகட்டும், மனைவியாகட்டும், நட்பாகட்டும்... அவர்களை அவர்களாகவே இருக்க விட்டால்தான் சந்தோசம் அதிகமாகும்... மாற்ற வெளிக்கிட்டால் அடங்கி விடுவார்கள், அவர்கள் அவர்களாக இருக்க மாட்டார்கள்.//

    ஆமா ஆதிஸ்ஸ்ஸ்ஸ். இறைவன் படைப்பே ஒவ்வோருவருக்கும் தனி சுதந்திர வாழ்க்கையை கொடுத்து பறக்க சொல்லியிருக்கான்...அனால் பலர் சிறைகை உடைச்சு அடச்சு வச்சர்றாங்க ... முடிந்த கிடைத்த ஒரு வாழ்க்கையை ஆதம திருப்தியோட முயற்சி செய்வோம். ஆனால் அன்பால் கட்டி போட்டால் நம் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கலாம்.

    ReplyDelete
  55. எனக்குத் தெரிந்து ஒரு குடும்பம், கணவர் மிகவும் கலகலப்பானவர்... திருமணத்துக்குப் பின், மனைவி அவரை அடக்கத் தொடங்கிட்டா... அவரோடு பேசாதே இவரோடு பேசாதே, எதுக்கு அப்படிப் பகிடி விட்டீங்க என்றெல்லாம்......

    அவர் படித்தவர், பண்பானவர்... அதனால் சண்டையெல்லாம் பிடிக்க வில்லை, தன்னை மாற்றிக்கொண்டார்.. முடிவு? இப்போ கலகலப்பெல்லாம் அடங்கி மிகவும் அமைதியாகிட்டார்... காரோடும்போது அமைதியாகப் போகிறார்.. பக்கத்தில் இருக்கும் மனைவி சொல்கிறார்.... என்ன உங்கள் வாயில் இருக்கு, கொஞ்சம் திறந்து கதைக்கலாமே எதையாவது என:))). நாமும் கூட இருந்தோம் அப்போ>>>.

    ஹா ஹா... நான் கூட சீரியஸா படிச்சுட்டு வந்தேன்... கணவர்க்கு புரிதல் உணர்வு இருக்கு..அவருடைய மனைவிக்கு இல்ல... ஆனா அந்த அம்மா பாசத்தை மட்டமா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க... அவருடைய அடக்கத்தை முடக்கி ஒடுக்கிட்டுருக்காங்க... என்னா பண்றது புரிஞ்சுக்கலன்னாவே ப்ராப்ளம் தான்... சூப்பரா சொல்லிட்டீங்க ஆண்டவா எனக்கு அந்த மாதிரி பொம்பளைய மனைவிய கொடுத்துடாத...அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்பறம் காலம்புல்லா வாயிக்கு பிளாஸ்திரி தான்...

    ReplyDelete
  56. athira said...
    ஒரேயடியாக அனைத்து நட்புக்களையும் அறிமுகப்படுத்திட்டீங்க அவ்வ்வ்வ்வ்:)))).//

    ஒரேடியா அத்தனை பேரையும் அறிமுக படுத்திட்டனா...அவ்வ்வ்வ்... என்ன பன்றது மியாவ்... நாளையோட என்ன அனுப்பிருவாங்க...அதனால தான்...

    ReplyDelete
  57. ///சூப்பரா சொல்லிட்டீங்க ஆண்டவா எனக்கு அந்த மாதிரி பொம்பளைய மனைவிய கொடுத்துடாத...அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்பறம் காலம்புல்லா வாயிக்கு பிளாஸ்திரி தான்...///

    என்னாது? அப்போ முதலையை அம்போ என விட்டிடப்போறீங்களோ மாயா? அவ்வ்வ்வ்வ்:))))... முதலைப்பாவம் பொல்லாதது.

    ஓ நாளையோடு முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச் ஆஆஆஆஆ?:)) கிடைத்த சந்தர்ப்பத்தை இனிதே பயன்படுத்தி அழகாக நடாத்தி முடித்திட்டீங்க. நான் நாளை வரமாட்டேன்... நாளை நைட் அல்லது திங்கள் மீண்டும் பேசலாம்.

    சீயா மீயா.

    ReplyDelete
  58. athira said...

    தன்னை அறிமுகப்படுத்தேல்லை என முதலை வாலை வாலை அடிக்குது...:))) முதலைக்கும் ஒரு புளொக் இனி ஓபின் பண்ணிக் குடுக்கோணும் போல:)).

    என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மியாவும் நன்றி மாயா.//

    முதலையும் சேர்த்து தானே அறிமுக ப்டுத்திருக்கேன்... முதல முதல ஆஹா முதல கோவிச்சுக்கிச்சே...

    வரவேற்கிறேன் ஆதிஸ்ஸ்ஸ் கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

    ReplyDelete
  59. // என்ற வலைப்பூவிற்கு சென்று மாயாவும் “லேடி” முதலையும்:)) யுடன் உரையாட தேம்ஸில் குதியுங்கள்.//

    ஹா....ஹா..ஹா....

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    வலைச்சர சார்பாக நன்றி மியாவ்வ்வ்வ்

    ReplyDelete
  60. Jaleela Kamal said...
    அருமையான வித்தியாசமான அறிமுகம்
    பல தெரிந்த சில தெரியாத முகங்கள்

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்


    ஒரு சின்ன திருத்தம்

    ஆதிரா இல்லை ( என் அன்பு தோழி - அதிரா)//

    ஆஹா...கவனிக்க மறந்துட்டமோ... நன்றிங்க அன்பு தோழி அதிரா என மாற்றிட்டேன்.. தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  61. athira said...
    நான் நினைக்க ஜலீலாக்கா சொல்லிட்டா.... மியாவும் நன்னி ஜல் அக்கா.

    மக்கள்ஸ்ஸ்ஸ் இத்தால் அறிவிப்பதென்னவென்றால் ... என் பெயர் ஆதிரா இல்லை... அ......தி......ரா.....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:))).

    மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.//

    first அவங்க கமேண்ட்ஸ் மிஸ் ஆயிடுச்சு... இப்பதான் பாத்தேன்... இன்று முதல் ஆதிஸ்ஸ்ஸை அதிஸ் என்று அழைக்கபடும் என அன்போடு கீறிக்கொள்கிறேன் சாரி கூறிக்கொள்கிறேன்... பின்னால என்ன ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ... ஒரு வேளை தேம்ஸ்ல குதிச்சுட்டாங்களா

    ReplyDelete
  62. சென்னை பித்தன் said...
    கலக்கலான அறிமுகங்கள்.//
    நன்றி அன்பரே!

    ReplyDelete
  63. கடம்பவன குயில் said...
    நட்பின் இலக்கணத்தையும் நட்பின் வலிமையையும் பறைசாற்றிய தங்களின் நட்புக்கு தலைவணங்குகிறேன்..

    கடம்பவன பூங்காவை தங்கள் நட்பில் அறிமுகப்படுத்தி என்னை உயர்த்திய தங்களுக்கு நன்றிகள் நண்பரே..//

    வரவேற்கிறேன் தோழி!அன்பு நன்றிகள்

    ReplyDelete
  64. கடம்பவன குயில் said...
    நிறைய நண்பர்களை இன்று பிடித்தேன் தங்கள் அறிமுகம் மூலம். நன்றி நண்பரே.//

    நல்லதுங்க.. வாழ்த்துக்களுடன் நன்றிகள்

    ReplyDelete
  65. shanmugavel said...
    இன்று அதிக அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  66. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    கணிப்பொறி பிரச்சனை இருந்ததால் ஒரு வாரமாக எதையும் பார்க்க முடியவில்லை. உங்கள் பின்னூட்டம் கண்டு இப்போதுதான் வலைச்சரம் வந்தேன். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகம் செய்திருப்பதற்கு மிக்க நன்றி ராஜேஷ். உங்கள் வலைச்சர எழுத்துக்களை இனிமேல்தான் படிக்க வேண்டும். படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.//

    வணக்கம் மேடம்! வரவேற்கிறேன்...நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர்... பொருட்டாக மதித்து என்கிற வார்த்தையெல்லம் என்னை போன்ற சிறுவனிடம் ஏன் மேடம்... தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது... மறக்காமல் கருத்துக்களை கூறுங்கள் மேடம்..மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  67. athira said...
    ///சூப்பரா சொல்லிட்டீங்க ஆண்டவா எனக்கு அந்த மாதிரி பொம்பளைய மனைவிய கொடுத்துடாத...அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்பறம் காலம்புல்லா வாயிக்கு பிளாஸ்திரி தான்...///

    என்னாது? அப்போ முதலையை அம்போ என விட்டிடப்போறீங்களோ மாயா? அவ்வ்வ்வ்வ்:))))... முதலைப்பாவம் பொல்லாதது.//

    ஆஹா நான் முதலைய மறக்க மாட்டேன்.. சொல்லி வைங்க முதலைக்கிட்ட... முதல முதல தேம்ஸ் முதல

    ReplyDelete
  68. athira said...
    ஓ நாளையோடு முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச் ஆஆஆஆஆ?:)) கிடைத்த சந்தர்ப்பத்தை இனிதே பயன்படுத்தி அழகாக நடாத்தி முடித்திட்டீங்க. நான் நாளை வரமாட்டேன்... நாளை நைட் அல்லது திங்கள் மீண்டும் பேசலாம்.

    சீயா மீயா.//

    பின்ன ஒரு மாச காண்ட்ராக்டாங்க.... ஒரு வார முதல்வர்...திங்கள் கிழமை விடை தந்திருவாங்க... வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி மாயா

    ReplyDelete
  69. அழகாக அறிமுகம் செய்துவைத்திருக்கிறீர்கள் ராஜேஷ். புதிதாக சில வலைப்பூக்களைப்பற்றி அறிந்துகொண்டேன். என்னையும் என் உலகத்தையும் இங்கு அறிமுகம் செய்துவைத்தமைக்கு அன்பு நன்றிகள்.

    அறிமுகத்துக்கு முற்பட்ட கட்டுரைப் பகுதி அருமை. அதிலும், மூன்றாவது பந்தி... வெகு அருமை.

    அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ள நட்புகள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். வாழ்த்திய அனைவருக்கும் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  70. இமா said...
    அழகாக அறிமுகம் செய்துவைத்திருக்கிறீர்கள் ராஜேஷ். புதிதாக சில வலைப்பூக்களைப்பற்றி அறிந்துகொண்டேன். என்னையும் என் உலகத்தையும் இங்கு அறிமுகம் செய்துவைத்தமைக்கு அன்பு நன்றிகள்.

    அறிமுகத்துக்கு முற்பட்ட கட்டுரைப் பகுதி அருமை. அதிலும், மூன்றாவது பந்தி... வெகு அருமை.

    அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ள நட்புகள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். வாழ்த்திய அனைவருக்கும் அன்பு நன்றிகள்.//

    வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் நன்றி மேடம்

    ReplyDelete
  71. சே.குமார் said...
    நல்ல அறிமுகங்கள்.//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  72. //அதே போல் சகோதரர் செங்கோவி அவர்கள்.....//

    அறிமுகப்படுத்தலுக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.

    சாரி, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.

    ReplyDelete
  73. வணக்கம் சகோ .எல்லோரையும் குறைவில்லாமல் மனம்
    மகிளும்வண்ணம் அறிமுகம் செய்துள்ளீர்கள்.பார்க்கும்போது
    மனதை கவர்ந்தது தங்களின் அறிமுக பகிர்வு .மிக்க நன்றி சகோ
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .......

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது