07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 30, 2008

வழி அனுப்புதலும் வரவேற்றலும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் பரிசல்காரன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏழு பதிவுகள் இட்டு, நூற்றி ஐம்பத்தாறு மறு மொழிகள் பெற்றிருக்கிறார் ( இது வரை ). பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். கொடுத்த பொறுப்பினை பலவிதமான பணிச் சுமைகளுக்கு இடையேயும், கணினியின் வேலை நிறுத்தத்திற்கு இடையேயும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்.

அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்து விடை அளிக்கிறோம்.
------------------------------------------------------------------------------

டிசம்பர்த் திங்கள் முதலாம் நாள் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் இரா.வசந்த குமார். இவர் என் பயணத்தின் பிம்பங்கள் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். மேலும் பல குழுமப் பூக்களிலூம் எழுதி வருகிறார். ஏறத்தாழ ஐனூறுக்கும் மேலாக பதிவுகள் எழுதி இருக்கிறார். மூத்த பதிவர். இவரை வருக வருக - ஆசிரியப் பொறூப்பினை ஏற்க வருக என வரவேற்று நல்வாழ்த்துகளையும் வழங்குகிறோம்.

சீனா
மேலும் வாசிக்க...

விடைபெறுகிறேன்.. அட நெஜமாங்க...!

வலைச்சரத்தில் எழுத என்னை அழைத்தபோது நிறைய புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டும், அரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பதிவர்களை முன்னிறுத்த வேண்டும் என்றெல்லாம் பலவாறு நினைத்திருந்தேன்.

ஆனால் செவ்வாய், புதனில் அலுவலத்தில் ஆரம்பித்த வேலைப்பளு இந்த வாரத்தையே ஆக்ரமித்துவிடவே முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. போதாக் குறைக்கு வீட்டிலிருக்கும் இணைய கனெக்‌ஷன் மக்கர் பண்ணியதால், வீட்டிலிருந்தும் சரியாக மேய முடியவில்லை.

இருந்தாலும் ஒன்றிரண்டு அரிய பதிவர்களை அறிமுகம் செய்த மகிழ்ச்சியில் இந்த ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடைபெறுகிறேன்.

சீனா ஐயாவிற்கு ஒரு வேண்டுகோள்.. என் நண்பன் வெயிலான் நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர். நல்ல நல்ல படைப்புகளைத் தேடிப்படிப்பவர். அவரை ஒரு வாரத்திற்கு ஆசிரியராக்கி அழகு பார்க்க ஆசைப்படுகிறேன். நிறைவேற்றுவீர்களா?


மீண்டும் சீனா ஐயாவிற்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொண்டு, பல பெருந்தலைகள் அமர்ந்த இந்த நாற்காலியில் ஒருவாரம் என்னையும் அனுமதித்ததை பெருமையுடன் நினைவுகூர்ந்து, மேலும்...

சரி.. போடா – என்று நீங்கள் சொல்வதற்குள்.

வுடு ஜூட்!
மேலும் வாசிக்க...

Saturday, November 29, 2008

ஸ்ரீலஸ்ரீ ஜிஞ்சனக்கா ஸ்வாமிகளின் அருள்வாக்கு!

வலைச்சரத்தில் என்னை எழுத அழைத்தபோது, நான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்த பல வலைப்பூக்கள் மிகப் பிரபலம். எல்லோரும் படித்துக் கொண்டிருக்கிற வலைப்பூக்களாய்த்தான் இருந்தன. சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த நேரத்தில் தோன்றி எழுதியதுதான்.

இன்றைக்கு நான் தினமும் படிக்கும் வலைப்பூக்களை பார்க்கலாம்.

தினமும் என்றும் கொள்ளலாம், அல்லது இவர்கள் எதை எழுதினாலும் படிப்பேன் என்றும் கொள்ளலாம். (இதில் சில விடுபட்டிருக்கலாம்.. குறிப்பாக எனது நண்பர்கள் வெயிலான், சாமிநாதன் (ஈரவெங்காயம்) ஆகியோரின் வலைப்பூ பற்றி எழுதி அவர்கள் எழுதாமலே இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்பவில்லை!)

இணைய சஞ்சிகைகளிலிருந்து பத்திரிகைகளில் எழுதி, தற்போது விளம்பரம் குறித்த புத்தகமும் எழுதிவிட்ட தோழர் லக்கிலுக்

ரிப்போர்ட்டராக இருப்பதால் ஒவ்வொரு விடுபட்டவையிலும் தனது அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்ளும் தல யெஸ்.பாலபாரதி

எல்லா சப்ஜெக்டிலும் கலந்துகட்டி கலக்கும் கோவி.கண்ணன்

உருப்படியாக மட்டும்தான் எழுதுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் டாக்டர் ப்ரூனோ

எனக்கு சினிமா சம்பந்தமாக என்ன சந்தேகம் என்றாலும் நான் தொந்தரவு செய்யும் நண்பர் முரளிகண்ணன்

எழுத்தில் இன்னும் பல உயரங்களைத் தொடவேண்டும் என்று வெறியுடன் உழைக்கும் என் நண்பன் அதிஷா (இவருக்கு நான் முதலாளி என்பது உங்களுக்குத் தெரியுமா?)

எளிதில் புரியும் கவிதைகள் மூலம் எல்லோர் மனதிலும் இருக்கும் அனுஜன்யா

கதம்பத்தில் மணம் கமழவைக்கும் வடகரைவேலன்

கவிதைகளில் ஒரு புது அனுபவம் தரும் ஜ்யோவ்ராம் சுந்தர்

கரிசல்காட்டுக்குச் சொந்தக்காரர் - தமிழ்பிரியன்


எதை எழுதினாலும் கலக்கலான நகைச்சுவையில் வயிறு வலியைத் தரும் ராப்

எங்க ஊர்க்காரர் என்று இவரை படிக்க ஆரம்பித்தேன். இப்ப நிறையபேர் கேட்கறாங்க.. ‘நீங்க மகேஷ் ஊர்க்காரரா’

எனக்கு டென்ஷனென்றால் தனது ஏதாவது ஒரு பதிவைப் படிக்க வைக்கும் அபிஅப்பா.

எப்படி எப்போதுமே, எல்லா இடத்திலுமே இவரால் இப்படி கலாய்க்கமுடிகிறது என்று பிரமிக்கவைக்கும் குசும்பன்

கோபப்பட இவர்கிட்டதான் கத்துக்கணும்னு நெனைக்கற சஞ்சய், (அப்பப்ப மொக்கைல படார்னு போட்டுத் தாக்கவும் செய்வார்)

ஹஸ்பெண்டாலஜி-யில் கலக்கும் புதுகைத் தென்றல்

கயல்விழி முத்துலெட்சுமி - மசாலா, காமெடி படங்களுக்கு நடுவே வி.சேகரின் குடும்பப் படம் பார்த்த எஃபெக்டைத் தரும் இவரது பதிவுகள்

சிறுகதை எழுத்தில் நான் பொறாமை கொள்ளும் வெண்பூ

பெருந்தொகை கொடுத்தாலும் ஈடாகாத நட்புக்கு சொந்தக்காரர் – குறுந்தொகை மன்னன் – நர்சிம்

என் உமாவுக்கு – பதிவை ரமாவுக்கு என்று ரீமிக்ஸ் பண்ணி கலக்கிய.. தங்கமணி புகழ் பதிவர் தாமிரா

தம்பிக்கும் தம்பி புதுகை அப்துல்லா

மொக்கையும், சீரியஸும் என்று மாறி மாறி எழுதும் வால்பையன்


விமர்சங்களில் கலக்கி இப்போது சிறுகதைகளிலும் பிரட்டிக் கொண்டிருக்கும் கேபிள்சங்கர்

ஒருகாலத்தில் தினமும் வரும், இப்போது என் வீட்டிற்கு எட்டியே பார்க்காத என் நிரந்தர நண்பன் சென்ஷி

எவ்ளோ சீரியஸ் மேட்டரையும் சிரிச்சுட்டே எழுதற ச்சின்னப்பையன்

சின்னரஜினி – மனசாட்சி கிரி

நண்பர் - அம்பி

மாரநேரி – ஜோசப்பால்ராஜ்

கடகம் - ஆயில்யன்

இணையத்தில் புகழடைந்து இப்போது பத்திரிகைகளிலும் எழுதி வரும் விக்னேஸ்வரன்

கலக எழுத்துக்காரர் செந்தழல் ரவி

இவர் அட்சரபாத்திரம்ன்னு அருமையா எழுதிட்டு இருந்து, சில பல காரணங்களுக்காக அதை டிலீட்டிவிட்டு இப்போ பேனாமினுக்கல்-ன்னு எழுதறாரு. இன்னும் முழுவீச்சில் எழுத ஆரம்பிக்கல. ஆரம்பிச்சார்னா கலக்குவாரு!

அப்பறம் வேறவழியே இல்லாம (படிக்கலைன்னா என்னமோ மிஸ் பண்ணினா மாதிரி இருக்குல்ல!) தினமும் படிக்கற - நம்ம சகா கார்க்கி!


இதெல்லாம் படிக்கறது..

பேசற மேட்டர் ஒண்ணு இருக்கு. எனக்கு ஆஃபீஸ்ல எதுனா டென்ஷன், கொஞ்சம் ரிலாக்ஸா மூடை மாத்திக்கணும்ன்னா இவருகிட்டத்தான் கூப்ட்டு பேசுவேன்.. மனுஷன் நடு ராத்திரி 12 மணிக்கு கூப்ட்டாலும் பயங்கர ஜோவியலா பேச ஆரம்பிப்பாரு. ஒரு அஞ்சு நிமிஷம் பேசினா ரொம்ப ஃப்ரீயா, ரிலாக்ஸ்டா உணர்வேன்.

அவர்தான்..

தொழிலதிபர் (தெரிஞ்சுடுச்சா..)

நந்து f/o நிலா


இது தவிர தினமும் ஒரு நாளைக்கு நான் பல தடவை திறந்து, திறந்து பார்த்து படிக்கற வலைப்பூ ஒண்ணு இருக்கு. படிக்காமயே இருக்க முடியல... எத்தனை தடவை படிச்சாலும் சலிக்கல..

நீங்களும் இந்தப் பதிவரை தினமும் மூணு அல்லது அதற்கு மேல் படித்தால் இரயில் பயணங்களின் போது நல்ல ஃபிகருக்கருகில் பெர்த் கிடைக்கும் பாக்கியமும், பஸ் பயணங்களில் சொகுசான சீட்டில் இடம் கிடைக்கும் பாக்கியமும் கிடைக்கும் என்று ஸ்ரீலஸ்ரீ ஜிஞ்சனக்கா ஸ்வாமிகளின் ‘பதிவோபநிஷத்’தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...

Friday, November 28, 2008

தமிழ்மணம் சூடான இடுகையில் இடம்பெற வழிகேட்ட பதிவர்!

இதுவரை நான் பார்த்த வலைப்பூக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ டிசைன் இதுதான். தினமும் இவர் எழுதியதைப் படிக்கிறேனோ இல்லையோ, ஒருமுறை திறந்து இவரது வலைப்பக்கத்தைப் பார்த்துவிடுவேன். அவ்வளவு பிடிக்கும்!

இதுபோல நம் வலைப்பக்கத்தை மாற்ற என்ன செய்யவெண்டும் என்று கணிணியில் தேர்ந்த யாராவது சொன்னால் பரவாயில்லை.

அந்த வலைப்பூ கரையோரக்கனவுகள். ஸ்ரீமதி.

கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....


இப்படி காதலர்களுக்குப் பிடித்தமான வார்த்தைகளை பொருத்தமான இடங்களில் உட்காரவைத்து புனைகிறார்!

நல்ல நகைச்சுவை உணர்வும் இருக்கிறது..

தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம்பிடிப்பது எப்படி என்றொரு பதிவு எழுதியிருக்கிறார் பாருங்கள்... Best Mokkai Award கொடுக்கலாம் அந்தப் பதிவுக்கு!

பிரசித்திபெற்ற சினிமா பற்றிய தொடரொன்றில் கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த படம் எதுவென்ற கேள்விக்கு இவரது பதிலை இப்படி முடிக்கிறார்...

முக்கியமான விஷயம் நான் எந்த படம், அரங்கு மட்டுமல்ல... எங்க பார்த்தாலும், அமர்ந்துப் பார்க்கறதுதான் வழக்கம்.. சோ நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி அமர்ந்து பார்த்தப் படம்னெல்லாம் கேட்கக்கூடாது... ஓகே?? ;)))

என்னா ஒரு வில்லத்தனம்!!!

காதல்திருத்தம்
என்று தொடர்கதைகூட எழுதுகிறார். நல்ல நடை!

நிறைய வாசகர்களை குறுகிய காலத்தில் பெற்றிருக்கிறார்.

இன்னும் ஊக்குவித்தால், தனது எழுத்தை மேலும் மேம்படுத்தி இன்னும் பல காதல் கதைகளையும், கவிதைகளையும் புனைவாரென்பதால் இவரைப் பற்றி எழுதுகிறேன்.

கரண்ட் கட்!

ஆகவே அடுத்த பதிவரை இன்று மாலை சந்திக்கலாம்!
மேலும் வாசிக்க...

Wednesday, November 26, 2008

வாங்க எசமான்.. வந்து படிச்சுத்தான் பாருங்களேன்!

எனக்குத் தெரிந்து தற்போது வலையுலகத்தில் மனம் தளராமல் மொக்கைக்கு அதிக இடம் தராமல் உருப்படியான விஷயங்களை மட்டுமே எழுதுவது என்பதை சிரமேற்கொண்டு எழுதிவரும் பதிவர்களில் ஒருவர் என்று இவரைச் சொல்லலாம். (‘அதாவது உங்களை மாதிரி இல்ல-ன்னு சொல்லுங்க’ - இப்படி பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது)

அவர்தான்... பழமைபேசி
!


பெயருக்கு ஏற்றாற்போல தமிழில் வழக்கொழிந்து வரும் பழஞ்சொற்களைப் பற்றியும், நாம் அர்த்தம் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும் சில வார்த்தைகளின் அர்த்தங்கள் என்று எல்லாப் பதிவுமே ஏதாவது ஒரு செய்தியைத் தாங்கித்தான் வருகிறது.

சோமாறி, மொல்லமாறி
, அந்தலை சிந்தலை, ஏழஞ்சு மையன், கூமட்டை இந்த மாதிரி பல வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லியிருக்காரு.

அதுபோக பாடலும் புனைகிறார்.. இதோ சாம்பிளுக்கு ஒரு பாடல்.. (ராப் நீங்க கோவிச்சுட்டு களத்துல எறங்கீடக் கூடாது.. இது வேற மாதிரி..)

பா வா மை வை,
நீ மீ ஊ ஈ,
வீ மோ கோ போ,
தீ தா ஐ ஓ!

என்ன திட்டற மாதிரித்தெரியுதா.. அதுதான் இல்ல! கவி காளமேகத்தின் அதிதீவிர ரசிகரான இவர் அவருடைய தாக்கத்தில் பல பாடல்களை எழுதிருக்காரு. அதுல ஒண்ணுதான் இது. ஓரெழுத்துலயே பொருள் தரக்கூடிய பாடல் இது! பொழிப்புரை வேணும்னா இங்கே போங்க. கவிகாளமேகத்தின் தாக்கத்தில் அவரெழுதின பதிவுகளை ஒட்டுமொத்தமாப் படிக்க இங்கே க்ளிக்குங்க.

(பாருங்களேன்.. இந்த மாதிரி தமிழ் ஆர்வலர் ஒருவருடைய பதிவை அறிமுகப்படுத்தறப்போகூட, சாம்பிளுக்கு, க்ளிக்குங்க - ன்னு ஆங்கிலம் கலந்து எழுதித் தொலைக்கறேன்!)

அதே மாதிரி இவரு யூ-ட்யூப்ல லிங்க் கொடுத்து ஒரு பதிவு போட்டாரு. அதைப் பார்த்து கணக்கில்லாம சிரிச்சேன். நீங்களும் பாருங்க அதுல வர்ற தம்பதிக கணக்கு போடற அழகை!

****************************


அடுத்தவர் நாடோடி இலக்கியன்!

தமிழ்மணத்தில் அவியல் என்ற தலைப்பில் ஒரு பதிவைப் பார்த்து ‘யாருடா இது நம்ம தலைப்புல எழுதறது'ன்னுதான் இவரோட பதிவுக்குப் போனேன். பார்த்தா இவரு 2007லேர்ந்து எழுதறாரு. (ஆனா அவியல்ன்னு இப்போதான் எழுத ஆரம்பிக்கறாரு. அதுக்காக சீனியர்கிட்ட போய் வம்பு பண்ண முடியுமா சொல்லுங்க...)

அவியல்-ன்னு நான் எழுதறமாதிரி கலந்து கட்டி எழுதியிருந்தார். அப்புறம் சில பதிவுகளைப் படிச்சேன். கவிதைகள் நல்லா எழுதறார்.


அழகு!!!

அச்சம்,மடம்,நாணம் போன்ற
பெண்ணுக்கே உரிய
எதுவும் இல்லை உன்னிடம்,
ஆனாலும் உன்னை எனக்குப்
பிடித்திருந்தது,
வீரம்,கல்வி,கொடை போன்ற
ஆண்மைக்கே உரிய
அத்தனையும் உண்டு என்னிடம்,
ஆனாலும் உனக்கு என்னைப்
பிடிக்கவில்லை,
நான் உன்னை நேசிக்கவும்
நீ என்னை வெறுக்கவும்
இருந்தக் காரணம் ஒன்றே- அழகு!!!


இப்படி ஒரு கவிதை.


இன்னொரு கவிதையை (ஒரு கணிப்பொறியாளனின் கனவுகள்) முடிச்சிருந்த வரிகள் அருமையா இருந்தது..

என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது!!!

சூப்பர்ல?


அதே மாதிரி 2003-2004 ம் ஆண்டு தஞ்சைப் பகுதியில் நிலவிய வறட்சியால் விவசாயிகளின் துயர் கண்டு இவர் எழுதின

அன்று
வேளைக்கு உணவு
இன்று
உணவிற்கு வேலை!!

போன்ற வரிகள் புதுக்கவிதை ப்ரியர்களுக்குப் பிடிக்கும்!

இவர் கவிதைகளுக்கு இந்தவழியா போங்க!

'எனக்கு இலக்கியம் குறித்தெல்லாம் பெரிய பரிச்சயமோ, புரிதலோ இல்லை என்று ஒப்புக் கொள்கிறார். சமீபமாக காணாமல் போன பின்னணி பாடகர்கள்
என்ற தலைப்பில் தீபன் சக்கரவர்த்தி, எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி பற்றியும் அவர்கள் பாடிய சில பாடல்களையும் குறிப்பிட்டு ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பாடல்கள் அவ்வளவு Rare Songs! அந்தப் பதிவுதான் இவரைப் பற்றிய ஒரு அறிமுகம் தரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது!

இவர்கள் இருவரையும் நீங்கள் ஊக்குவித்தால் நான் மிக மகிழ்வேன்!
மேலும் வாசிக்க...

5000 பின்னூட்டங்களுக்கு மேல் பெற்ற தமிழ்ப்பதிவர்!திருச்சியைச் சேர்ந்த பெங்களூரில் இப்போது இருக்கும் மோகன்தாஸின் செப்புப்பட்டயம்!

இவர் எனக்கு அறிமுகமானது நண்பர் வெயிலான் மூலமாக. (எனக்கு நிறைய வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியவர் வெயிலான் என்பதை நன்றியோடு இங்கே குறிப்பிடுகிறேன். வலைச்சர ஆசிரியராக முழுத்தகுதியும் அவருக்கு உண்டு. ஏனென்றால் குறைவாக எழுதி, நிறைய படிக்கும் பழக்கம் உள்ளதால் நல்ல பல பதிவர்கள், வலைகளை அவர் மூலம் நண்பர்கள் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு!)

மோகன்தாஸின் பக்கத்தைத் திறந்ததுமே பிடித்துப் போனது, காரணம் சேகுவேராவின் அமர்த்தலான புகைப்படம்!

அவரது பதிவுகளின் எழுத்து வித்தியாசமான நடையில் இருக்கும். இவரும் சுஜாதாவின் ரசிகன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். செப்புப்பட்டயம் இல்லாமல் பூனையாக இல்லாமல் போன சோகங்கள் என்ற வலைப்பூவும் இவருடையதே.

அக்கா பெண்ணே அழகே! என்கிற ஒரு கதையில் வரும் வர்ணனை/உவமை மிகவும் கவர்ந்தது. படித்துவிட்டு அன்றே ஒன்றிரண்டு நண்பர்களை அழைத்து இதைப் பகிர்ந்துகொண்டேன்..

'அழும் பெண்ணின் அருகில் நிற்பது கனன்று கொண்டிருக்கும் எரிமலையில் அருகில் குடிசை போட்டு தங்குவதை விடவும் பாதுகாப்பற்றது'

'முன்னிரவு பெய்த பனியினால் கருவாகி, காலைப் பொழுதின் இளம் சூட்டில் உருகி ரோஜாவில் வழிந்தோடும் ஒற்றைத் துளியாய் கண்ணீர் கன்னத்தில் வழிய..'அதே போல அவளை அவன் கண்விடல் என்கிற கதையின் ஆரம்ப வரிகளை ஒரு நல்ல சிறுகதைக்கான ஆரம்பம் என்பேன்...

அன்று ஒரு அதிர்ஷ்டமான நாள் என்பதற்கான அறிகுறி காலையிலேர்ந்து தெரியவில்லை, பாட்டரி தீர்ந்திருந்ததால் நின்று போன அலாரம் க்ளாக், தலைநகரின் டிசம்பர் மாதக் குளிரில் குளிக்க அயர்ன் ராட் போட்டுவிட்டு ஞாபகமறதியில் சுவிட்சை அணைக்காமல் சூடுபார்க்கிறேன் பேர்வழி என்று கையில் நறுக்கென்று வாங்கிய மின்சாரக்கடி, இனிமேல் ஆபிஸ் போனாலும் அரைநாள் விடுப்புதான் எனத் தெரிந்தாலும் பார்க்கவேண்டிய வேலை பாக்கிக்காக, அவசரஅவசரமாக எடுத்த பல்ஸர் பெட்ரோல் இல்லாமல் பங்கிற்கு 100 மீட்டர் முன்பே நின்றுவிட நான் நிச்சயமாய் நினைக்கவில்லை இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்குமென்று. எல்லாம் மாறியது ஒரு நொடியில்.


ஒரு ஜொள்ளுப்பதிவு
என்று ராப்புக்குப் போட்டியாக கவுஜயும் படைக்கிறார்..

அழகே ஜெஸ்ஸிகா!!!
உன்கையில் இருப்பதென்ன "Trash"ஆ
ஆகிப்போனனே "Nash"ஆகுப்பைக்கும்
அளித்தாயே முக்கியத்துவம்
இதைவிடவாபெரிது
பின்நவீனத்துவம்


..இப்படி..!


கணினி அறிவு நிரம்பப்பெற்றவர். ஓவியமும் அழகாக வரைகிறார். இவரைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள்.

இவரது கணினித்துவத்திற்கு இந்தப் பதிவு ஒரு சான்று..........

//பதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்

இப்படி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு வருடமாகவே உண்டு. நானும் எனக்கு அரசியல் சம்மந்தம் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இணைய அரசியலில் என்னையும் எப்பொழுது சம்மந்தப்படுத்தும் ஒரு குரூப் உண்டு. இப்பொழுது எனக்குத் தெரிந்த இணைய அரசியலைப் பற்றி எழுதுகிறேன்.

இதுதான் அந்தப் பதுவு கொஞ்சம் வித்தியாசமாகயிருக்கிறதா - பின்ன தமிழ்ல எழுதிப்போட்டா ஆட்டோ அனுப்பிட மாட்டாங்க, அதுமட்டுமில்லாம எனக்குத் தெரியும் தெரிந்த அரசியல் அவ்வளவு ஈசியா உங்களுக்கு சொல்லிடுவேனா. Encrypt பண்ணியிருக்கேன்.

இதை Decrypt செய்து படிச்சிக்கலாம். தமிழ் பதிவுலகில் முதன் முதல் Encrypted பதிவு போட்ட பெருமையும் இப்ப என்னையே சேரும் ;).//

இதைப் படிச்சுட்டு என்னான்னு சொல்லுங்கப்பா. நம்ம.. சாரி.. என் அறிவுக்கு எட்டல.

இதையெல்லாம் சொல்றதால இவர் நம்மகிட்டேர்ந்து அந்நியப்பட்டவர் என்ற எண்ணம் வேண்டாம்..

"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்..”

என்று ஆரம்பிக்கிற கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் என்ற புனைவிலும்,

கேர்ள் ஃப்ரண்ட் தேவையா என்ற மொக்கையிலும் இவர் நம்மாளுதான் என்பது தெரியவரும்.

ஆனால் இவருக்கு சாதாரண கும்மிகளோ, மொக்கைகளோ பிடிக்காது என்பது அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டிய ஒன்று!!!


தலைப்பு சும்மா லொள்ளுக்கு வைக்கல நண்பர்களே.. G3 ஒரு பதிவுக்கு (இந்தாங்க லிங்க்) 3211 பின்னூட்டங்கள் வாங்கறாங்க. சாட்ல சில நண்பர்கள் கூட சவால் விட்டு, நம்ம மோகன்தாஸ் 5000 பின்னூட்டம் வாங்கியிருக்காரு. (போட்டிருக்காருன்னும் சொல்லலாம்!) நமக்குநாமே திட்டம்னாலும் அதைச் செயல்படுத்தறதுல இருக்கற தொழில்நுட்ப அறிவைப் பாராட்டியே ஆகணும்!

புலிக்குட்டியாய் ஒரு வாழ்க்கை என்கிற பதிவைப் போய்ப் பாருங்க... 5005 கமெண்ட் இருக்கு! நான் மட்டும் இல்லீன்னா 5005 கமெண்ட் சாத்தியமில்லை. 5004தான் வந்திருக்கும்! ஏன்னா கடைசி கமெண்ட் நேத்துதான் நான் போட்டேன்!

(என்ன ராப்.... களத்துல எறங்குவோமா...)

பி.கு: சில தகவல்களுக்கு நன்றி - தொழிலதிபர் நந்து.

மேலும் வாசிக்க...

Tuesday, November 25, 2008

பரிசல்காரனுக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்..

சுரேஷ் கண்ணன் - பிச்சைப்பாத்திரம்

இவரது பதிவுகளுக்கு நான் முதலில் போனது ‘…த்தா.. கீழ எறங்குடா’ என்ற இந்தப் பதிவிற்குதான்.

என்னமோ ஒரு மாதிரியான வாசிப்பனுபவம் கிடைக்கிறது இவரது எழுத்தில். என்னவென்று சொல்ல முடியவில்லை. சென்னை பதிவர் சந்திப்புக்கு சென்றிருந்தபோது இவரைச் சந்தித்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைத்தேன். இவரும் வந்தார். எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு, அவரைப் பார்த்தபோது “வந்துட்டானுகடா.. இதுக்குன்னு அங்கேர்ந்து வந்திருக்கான் பாரு. லூஸூப்பய’ என்று அவர் பார்ப்பதுபோலப் பட்டது. (ஒரு வேளை அவரது எழுத்துக்களைப் படித்துவிட்டு அவரை ஒரு அதிதீவிர முற்போக்குவாதியாக கற்பனை செய்து வைத்ததன் விளைவாகக் கூட இருக்கலாம்.) அந்தப் பார்வைக்கு பயந்துபோய் பேசாமலே வந்துவிட்டேன்!


அந்தப் பதிவில் இவரது மருந்துக்கடைப் பணி அனுபவங்களைச் இப்படிச் சொல்கிறார்..


“மருந்துக்கடைகளில் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. 'ரெண்டு நாளா ஒரே இருமலா இருக்கு. ஏதாவது மருந்து கொடேம்ப்பா" என்று டாக்டர் செலவை தவிர்க்கும் உத்தேசத்துடன் வருபவரிடம் முகத்தை ஏதோ இருநூறு ஹார்ட் சர்ஜரி செய்தவன் போன்ற கெத்துடன் தீவிரமாக வைத்துக் கொண்டு மருந்துக் கம்பெனி விற்பனை பிரதிநிதிகள் இலவசமாக தரும் மாத்திரைகளை தோல் உரித்து "மூணு வேளை சாப்பிடுங்க. சரியாயிடும்" என்று ஜோசியக்காரன் போல் சொல்லி அனுப்ப வேண்டும். விளக்கெண்ணைய் குடித்தவர் போன்ற முகபாவத்துடன் வருபவர்களை ஓரம் கட்டி ஆணுறை பாக்கெட்டுக்களை கொடுத்தனுப்ப வேண்டும். பெண்களுக்கான மாதவிலக்கு நாப்கின்களை கண்டிப்பாக பேப்பர் உறையிலிட்டு வெளியே தெரியாதவாறு தர வேண்டும். வலி நிவாரண மருந்துகளின் பெயர்களை சரியாக தேர்ந்தெடுத்து கேட்கும் நபர்களை உற்றுப்பார்த்து சந்தேகமான ஆசாமி என்றால் அவர்களை மறுத்து அனுப்ப வேண்டும். மருந்துச்சீட்டில் உள்ள லிஸ்டில் ஏதாவதொன்று ஸ்டாக் இல்லையென்றால் 'இல்லை' என்று திருப்பியனுப்பாமல் 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்' என்று சற்று தூரத்தில் உள்ள கடையில் வாங்கி வந்து அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அக்கம்பக்கத்தில் கடை விரித்திருக்கும் மருத்துவர்களுக்கு மருந்துச்சீட்டு இலவசமாக (விளம்பரத்துடன்தான்) அச்சிட்டுத்தர வேண்டும். இப்படியாக நானே ஒரு டாக்டராக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில்....”

எவ்வளவு சுவாரஸ்யமான நடை...

அதேபோல எம்.ஜி.ஆரால் அடி வாங்கினேன் என்ற பதிவில் இப்படிச் சொல்லியிருப்பார்.


“சில சமயங்களில் வீட்டிற்கு இனிப்பு வாங்கிச் செல்லும் போது "இன்றைக்கு என்ன விசேஷம்?" என்பார் மனைவி. "இனிப்பு சாப்பிடுவதற்கு என்ன விசேஷம் வேண்டியிருக்கிறது. சாப்பிட வேண்டும் போல் இருந்தது, அவ்வளவுதான்." குழந்தைகள் அந்தக் கேள்வியை கேட்பதில்லை. சந்தோஷமாக வாங்கிச் சாப்பிடுவார்கள். பல விஷயங்களை குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மழை பெய்தாலோ, மின்தடை ஏற்பட்டாலோ நம்மைப் போல் அவர்கள் எரிச்சலடைவதில்லை; அதையும் கொண்டாடுகிறார்கள்.


இந்த வரிகள் எனக்குப் பிடித்தமானவை!

இவரது புகழ்பெற்ற சாமியாராக பத்து குறுக்கு வழிகள் படித்துவிட்டு சிரிக்கவோ, சிந்திக்கவோ முடியவில்லை என்றால் நல்ல டாக்டரைப் பார்ப்பது நலம்!

(சுரேஷ் கண்ணன்கிட்ட எனக்குப் புரியாத விஷயம் எல்லா பதிவுக்கு முடிவுலயும் suresh kannanன்னு ஏன் எழுதியிருக்கார்ன்னுதான். அதுதான் எழுதினவர் யார்னு வருதே...)

இன்னொருவர் நண்பர் செல்வேந்திரன்.

இவரது வலைப்பூவின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவரது வலைப்பூ தமிழ்மணத்தில் தெரிவதில்லை. சில நாட்களுக்கு முன் சந்தித்தபோது கணினியில் இணைய இணைப்பு வாங்கிவிட்டதைக் கூறியிருந்தார். அதேபோலவே, அதற்குப் பிறகு நிறைய எழுதத் தொடங்கினார்.

பணப்பிரச்சினை என்கிற தலைப்பில் ஜே.கே.ரித்தீஷ் பற்றி எழுதியிருக்கிறார். அதுக்கு ஏன் இந்தத் தலைப்பு என்பதை பதிவின் முடிவில் பார்க்கவும்!

இயற்றலும் ஈட்டலும் காத்தலும்
என்று வரவு செலவுகணக்கு எழுதுங்கடா என்கிறார்.

மின்வெட்டைப் பற்றி தமிழன் என்றோர் இனமுண்டு என்று எழுதுகிறார்.


இவரது வலைப்பூவைப் படிக்கும்போது, உங்கள் நண்பனோடு அரட்டை அடித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு வருவதைத் தவிர்க்க முடியாது. நீட்டி முழக்காமல் நச் சென்று சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போவார்! ஆகவே இதைத்தான் என்று சொல்ல முடியாது... எல்லா பதிவுகளையும் ஒரு நடை பார்த்துட்டுப் போங்க...


சுரேஷ் கண்ணனுக்கும், செல்வந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை முகஸ்துதிக்காக எதையும் சொல்லமாட்டார்கள். பிடிக்கலியா, பிடிக்கல. நல்லாயிருக்கா - நல்லாயிருக்கு. தட்ஸ் ஆல்.

சுரேஷ் கண்ணன் - எம்.ஜி.ஆர். படம்னா எனக்கு அலர்ஜிங்கறாரு.

செல்வேந்திரன் ஒரு பதிவுல (எந்தை) தவமாய் தவமிருந்து படத்தை எல்லாரும் புகழறப்போ, அப்பா மேல இருக்க வேண்டிய பாசத்தை, இருக்குன்னு சொல்றதை எதுக்குடா இவ்ளோ ஆச்சர்யமா பாக்கறீங்க'ன்னு சாட்டைல அடிக்கறார்.

இவங்க பதிவைப் படிக்கறப்போ எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்ன்னு தோணும்... படிக்கப் படிக்க முடியக்கூடாதேன்னு நெனைக்க வைக்கும்ன்னு சொல்ல வந்தேன்.. (அப்பாடா.. தலைப்பு வந்துடுச்சா...)


இந்த ரெண்டு பேரோட பதிவுகளையும் படிங்க. வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்!
மேலும் வாசிக்க...

Monday, November 24, 2008

ரஜினிக்கு பிடித்த பதிவு!
போன வாரம் நான் சென்னைல அப்துல்லா கூட இருந்தப்ப.., சீனா ஐயாவிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. 'வலைச்சர ஆசிரியரா இருங்க’ என்று. ஏற்கனவே தமிழ்மண ஸ்டாரா இருக்கச் சொல்லி, மெயிலனுப்பின குசும்பனோட குசும்பிலிருந்து மீளாம இருந்த நான், சந்தேகத்துக்கு அவருகிட்ட 'இது ஒரிஜினல்தானே'ன்னு கேட்டுகிட்டேன். அவரு ரெண்டு வாரம் முன்னாடி ஆசிரியரா இருந்திருக்காரே.. அவரும் ஆமான்னுட்டார். அப்பறமென்ன, களத்துல எறங்கீட வேண்டியதுதானேன்னு இறங்கீட்டேன்..!

********************

பள்ளிக்கூடம் படிக்கும்போதே, ‘நீ என்னவாக ஆசைப்படற’னு கேட்டதுக்கு
ஆசிரியர்-ன்னு சொன்னவன் நான். அதுக்கேத்தமாதிரி ஒரு பத்திரிகையின் ஒரு இஷ்யூ-வுக்கு ஆசிரியர் குழுவில் ஒருவனா பணியாற்றின அனுபவம் உண்டு. இப்போ இந்த வலைச்சரத்துக்கு ஆசிரியரா...


ரம்பம்ன்னா ஒரு பக்கம்தான். பரிசல்காரன்-ங்கற வலைப்பூவுல ரம்பமா உங்களை அறுத்துக்கிட்டிருக்கற நான் இந்த ஒரு வாரம் மட்டும் ப்ளேடா இருந்து ரெண்டு பக்கமும் அறுக்கப் போறேன்..

இது என்னடா வலையுலகத்துக்கு வந்த சோதனை!


சரி மேட்டருக்கு வருவோம்...


ஐயையோ.. அந்த மேட்டர் இல்லீங்க. அறிமுக மேட்டர்.


உலகத்துலயே ஈஸீயான விஷயம் நம்ம பெருமைகளை நாமளே பீத்திக்கறது. கஷ்டமான விஷயம், அடுத்தவன், அவனைப் பத்தி விடற பந்தாக்களை கேட்கறது.. ம்.. உங்களுக்கு இந்தத் திங்கள் இப்படி விடியணும்ன்னு இருக்கு. யாரால மாத்த முடியும்...

நான் யாரு, ஏன் எழுத வந்தேன் (அதைத்தாண்டா நாங்களும் கேட்கறோம்..), பரிசல்காரனோட பெயர்க்காரணம் எல்லாமே என்னோட 100 வது பதிவான நானும், வலைப்பூவும் என் நண்பர்களும்-ல இருக்கு. (அடப்பாவி.. 100 பதிவு எழுதியிருக்கியா நீ? கிழிஞ்சது போ!)

என்னோட பதிவுல மொதல்ல ஹிட்டானதுன்னா (அத நாங்க சொல்லணும்டா) தந்தை எனக்கெழுதிய கடிதம் தான்.

ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னா (ஆரம்பிச்சுட்டாண்டா.. கொசுவத்தி சுத்த..) தந்தையர் தினத்துக்கு நான் அப்பாவுக்கு ஒரு கடிதம் உருக்கமா எழுதணும்ன்னு நெனைச்சுகிட்டிருந்தேன். ஆனா சரியா வார்த்தைகள் உட்காரல (நீ சேர் போட்டிருக்கமாட்ட) அப்படி இப்படின்னு தந்தையர் தினமும் வந்துச்சு. அன்னைக்கு காலை வரை அந்த கடிதத்துக்குண்டான விஷயமோ, ஆரம்ப வரிகளோ மனசுல வரவே இல்லை. சரின்னு ஏதோ ஒரு மொக்கையைப் போட்டுட்டு, ஆஃபீஸுக்குப் போய்ட்டேன். சாயந்திரம் வரைக்கும் ‘தந்தையர் தினத்துக்கு உருப்படியா அவருக்குன்னு ஒரு பதிவு போட முடியலியே’ன்னு வருத்தம் இருந்துச்சு. ‘டக்’னு மூளைக்குள்ள பல்பு எரிஞ்சது. (அப்போ பவர் கட் அவ்வளவா இல்ல) எழுதமுடியலியேன்னு நாம வருத்தப் படறா மாதிரி ‘இவன் எழுதலியே’ன்னு அப்பா வருத்தப்பட்டு எனக்கு கடிதம் எழுதினா எப்படி இருக்கும்ன்னு. அது மனசிலேர்ந்து எழுதினது. அதுனால ஹிட்டாச்சு. அது வரைக்கும் அவியல்-ன்னு கலந்து கட்டி எழுதற பதிவுகளுக்கு வாசகர் எண்ணிக்கை அதிகம் வரும். வெறும் மொக்கை, நகைச்சுவைன்னு அதிகமா எழுதிட்டிருந்த நான் இந்தக் கடிதம் மூலமா அதிக அளவிலான வாசகர்களைப் பெற்றேன் என்றால் .. இங்கெ என்ன வரணும்.. ஆங்.. அது மிகையில்லை.

அதே மாதிரி திருமண நாளுக்காக என்னோட மனைவிக்கு நான் எழுதின உமாவுக்கு கடிதம் உலக அளவுல (டேய்.. டேய்... ங்கொய்யால. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா) பிரசித்தி பெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட இதைப் பாராட்டிருக்காரு. (டேய்.. எந்திரிடா.. ராத்திரி 12 மணிக்கு பதிவு எழுதாதேன்னா கேட்கறியா.. தூக்கத்துல ஒளறிகிட்டு. அது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்ல. உன் ஃப்ரெண்டு புதுகை அப்துல்லா) இந்த உமாவுக்கு கடிதம் பிறகு ஜூனியர் விகடனில் வெளியாகி எல்லாரையும் சோதிச்சது!

நான் எழுதின 150வது பதிவான திமிரானவனும் வேற டைப்ல எழுதப்பட்ட பதிவு. (150ஆ? எப்படிடா ஒன்னையெல்லாம் விட்டு வெச்சாங்க?)

எப்ப எழுதும்போதும் என் மனசாட்சியோடதான் எழுதுவேன். இப்பகூட பாருங்க. எழுத எழுத ப்ராக்கெட்ல என் மனசாட்சி என்னை கேள்விகளால துளைக்கறதை.. இதுக்கு மேல பேசினா ஒதைக்கும். அதுனால சுயபுராணம் ஓவர்!

சரி.. டெய்லி சில பதிவுகளையும், பதிவர்களையும் பார்க்கலாம்.. ஓக்கே?

டிஸ்கி: பதிவுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்கறீங்களா? என் தோழி ஒருத்தங்க இருக்காங்க.. ரஜினி-ன்னு. அவங்க எப்போ பார்த்தாலும் சொல்லுவாங்க... “கிருஷ்ணா.. உமாவுக்கு’தான் உங்களோட மாஸ்டர் பீஸ்” ன்னு! நீங்க வேற ரஜினியை நெனைச்சுட்டு வந்தீங்கன்னா நானா பொறுப்பு?
மேலும் வாசிக்க...

Sunday, November 23, 2008

நன்றி உரையும் வரவேற்புரையும்

கடந்த ஒரு வார காலமாக அருமை அந்தோணி முத்து ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏற்றுக்கொண்ட பொறுப்பினை செவ்வனே செயல்படுத்தி, எட்டு பதிவுகள் போட்டு, ஏறத்தாழ ஐம்பது மறு மொழிகளுக்கும் மேலாகப் பெற்றிருக்கிறார். பன்முகப் பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பல புதிய பதிவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

தன் உடல் நிலை சரி இல்லாத நிலையிலும், உள்ளமும் உடலும் ஒத்துழைக்காத நிலையிலும் எடுத்த செயலை நிறைவேற்றியே தீருவதென வைராக்கியத்துடன் பணி ஆற்றி விடை பெறும் அருமை அந்தோணி முத்துவிற்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளை வலைச்சரம் சார்பினில் நல்கி விடை அளிப்பதில் பெருமைப்படுகிறேன்.
-----------------------------------------------------------------------------------
அடுத்து இந்த வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் பரிசல்காரன். திருப்பூரில் வசிக்கும் இவர் தன் வலைப்பூவின் கொள்கையாக - தான் எழுதுவதை அனைவரும் படிக்க வேண்டும் என நினைப்பவர். அதே நேரத்தில் எழுதுவது அனைவருக்கும் பிடிக்கவேண்டும் என நினைப்பதில்லை. படிப்பதிலும், புகைப்படம் பிடிப்பதிலும், வலைப்பூவினில் எழுதுவதிலும் பொழுதைக் கழிக்கிறார். இளையராஜாவின் இசை ரசிகர். கவிஞர் வாலியின் சுய சரிதம் படித்தவர்.
இவரை வருக வருக - பல பதிவுகளைத் தருக தருக என வாழ்த்தி வரவேற்கிறேன்.

சீனா
மேலும் வாசிக்க...

சந்தோஷ நன்றிகள்...!


கொஞ்சம் உடல்
களைத்துச் சோர்ந்திருந்த நேரம்
அயர்ச்சியின் அழுத்தத்திலும்
வந்த ஒரு நல்வாய்ப்பு இது...

மீண்டும் எழுந்து கொள்ள
உதவிய ஊன்று கோல்.....
இந்த வலைச்சர ஆசிரியர் பதவி....
எழுந்து நின்றேன்......

இந்த ஒரு வரி நன்றி சொல்வது
எனக்கு ஏற்படுத்தும் உணர்வை
என்னால் விளக்க முடியாது
இந்த ஒரு வரி நன்றி அந்த
உணர்வுகளை உங்களிடம்
கொண்டு சேர்த்ததா?

இந்த ஒருவாரம் எப்போதும்
கடற்கரை மணலில் அலை
அழித்துப் போகும் மணல் பெயர்
போல என் பெயர் எழுதிப் போயிருக்கலாம்.....

அலை அழித்துப் போகும் முன்
சிலர் மனம் தொட்டுப் போயிருக்கலாம்
சிலர் மனம் மகிழ்ந்திருக்கலாம்
அது ஒன்றே அன்றி வேறொன்று
வேண்டேன்........
வாய்ப்புக்கு நன்றி சீனா அப்பா.
மேலும் வாசிக்க...

இன்னும் கொஞ்சம் என்னைக் கவர்ந்த பதிவுகள்.......


எனக்கு குவாண்டம் பிசிக்ஸ் இல் இனம்புரியாத விருப்பம் உண்டு. வாழ்வு பற்றிய விளக்கங்கள் சொல்லும் கற்றை இயல் (குவாண்டம் பிசிக்ஸ்) "அது நிலையற்ற தன்மை நோக்கிய தொடர்ந்த ஓட்டம்" என்கிறது. உலகில் எல்லாப் பொருட்களும் அழிகின்றன, உருமாறுகின்றன. கால ஓட்டத்தை எதிர்த்து ஒன்றைத் தக்க வைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

இதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாக அறிவகம் வலைப் பூவில்.....

இன்னும் தெளிவாக எஸ்.ராமநாதன் இங்கே சொல்கிறார்.

ரமேஷ் சதாசிவம்....இவரின் திரும்பிப் பார்க்கிறேன் பதிவு.....அதில் அவர் அவருக்கே இட்டுக் கொள்ளும் பத்துக் கட்டளைகள்...நாம் ஒவ்வொருவரும் போட்டுக் கொள்ள வேண்டிய கட்டளைகள்....

ஜே.ஜே.ரீகனின் தன்னம்பிக்கை தரும் பதிவு.....
வெற்றி ஒருவகையில் சிறைவாசம். தோல்வி ஒருவகையில் விடுதலை...
//தோல்வியை
மீண்டுவரவே இயலாத
மரணமாகப் பார்ப்பது
மனிதநேயம் மட்டும்தான் //

அப்புறம் மீனா.....அதிகம் எழுதவில்லையென்றாலும் இவரின் இந்தக் கதை "யாத்தீ" என் மனதை அதிகம் பாதித்தது...

அப்புறம் மோஹன் பாலகிருஷ்ணன்.இவர் ஒரு சைக்காலஜிஸ்ட்/ஹிப்னோதெரபிஸ்ட்.ரொம்ப உபயோகமான பதிவுகள்.இவர் அமைதி பற்றிச் சொல்கிறார்.

//ஒரு துளி அமைதி
ஓராயிரம்
தெய்வீக
வார்த்தைகளைக் காட்டிலும்
புனிதமானது! //
மேலும் வாசிக்க...

Friday, November 21, 2008

கர்ணன் ஏன் கொடுத்தான்?

புராணங்களில் என்னை மிகக் கவர்ந்த ஆதர்ச ஹீரோ "கர்ணன்."

அவன் ஏன் கொடுத்தான் என்பதற்கு என்னுடைய, "என் இனிய கர்ணா-" வில் அழுத்தமான காரணம் சொன்னாலும்...
இன்னும்....
அது பற்றி இன்னும் எழுத வேண்டும் போலத் தோன்றுகிறது.

பல ஆன்மீகப் பெரியவர்கள்... இதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

ஒரு சாதாரணத் தேரோட்டியின் மகனனான கர்ணனை "துரியோதனன்" தன் நண்பனாக்கிக் கொண்டு.. அவனை அங்கத தேசத்து அரசனாக்குகிறான்.

காரணம் அர்ஜுனனை எதிர்த்து நிற்க அவனுக்குச் சரி நிகரான வீரன் கர்ணன் மட்டுமே.

ஆக துரியோதனின் நட்பில் ஒரு வியாபாரத்தனம் மறைந்திருக்கிறது.

இதை கர்ணன் நன்கு உணர்ந்தே இருந்தான்..

அதற்கு நன்றிக் கடனாகத்தான்.......
துரியோதனன் தீயவன் எனத் தெரிந்திருந்தும் இறுதி வரையில் அவனோடேயே இருந்து அவனுக்காக தன் உயிரையும் கொடுத்தான்.

துரியோதனன் நேர்மையற்றவன்.
எப்போது எதைச் செய்வான் என்று யாராலும் யூகிக்க முடியாது.

(மிகக் கெட்டவனிலும் கெட்டவனான துரியோதனன் தன் வாழ்வில் செய்த ஒரே நல்ல காரியம் என்ன தெரியுமா? கர்ணனை நண்பனாகக் கொண்டது.
அதே போல...
மிக நல்லவனிலும் நல்லவனான கர்ணன் தன் வாழ்நாளில் செய்த ஒரே கெட்ட காரியம்...
துரியோதனனை நண்பனாகக் கொண்டது.)

அவன் கொடுத்த அங்கத நாட்டை திரும்ப எப்போது வேண்டுமானாலும் பிடுங்கிக் கொள்ளவும் செய்யலாம் எனறு கர்ணன் எதிர்பார்த்திருக்கக் கூடும்.
அதோடு அவனுக்காக எந்த வினாடியும் தன் உயிரை இழக்க நேரிடும் என்பதற்கும் தயாராய் இருந்தான்.

அதற்கு முன்பாக எந்த அளவு தன்னால் பிறருக்குக் கொடுக்க முடியுமோ அந்த அளவு கொடுத்து முடித்துவிட வேண்டும், பிறரின் வறுமைத் துயர் தீர்த்துவிட வேண்டும் என எண்ணியிருக்கலாம்.

ஏனெனில் இளவயதிலேயே சாதாரண தேரோட்டி மகனாக இருந்து.., வறுமையின் கொடுமையை நன்றாக அறிந்தவன் கர்ணன்.

இந்த உலக வாழ்வும்... வசதிகளும்.... உயிரும்...
நிலையற்றது....

எப்போது வேண்டுமானாலும்.... இவை போய் விடும்... என்ற நிலையாமைத் தத்துவத்தை பூரணமாக உணர்ந்தவன் கர்ணன்.

இருப்பது தீர்ந்து போகுமுன்னால்... அடுத்தவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்கிற நெருப்பு
எப்போதும் சுட்டுக் கொண்ட இருந்தது.

சாகும் வினாடியில் கூட "கிருஷ்ண பரமாத்மா" "உன் தர்மத்தின் பலனையெல்லாம் கொடு" என்று கேட்டபோது...
"இந்த வினாடியில் கொடுக்க என்னிடம் இதுவாவது இருந்ததே" என்று மகிழ்ந்தானாம் கர்ணன்.
-------------------------------------------------------------------------------------

கடவுள் எனும் அந்த பெயரற்ற பிரபஞ்ச மகாசக்தியிடம் நான் நித்தமும் பிரார்த்திப்பது இதைத்தான்.
"இறைவா..! எனக்கு எப்போதும் கர்ணனின் மனநிலையிலேயே இருக்கும் வரம் தா...!"

என்னுடைய இந்த வாழ்வும், வசதியும்ம், உயிரும்...எப்போது வேண்டுமானாலும்...
என்னை விட்டுப் பிரியக் கூடும்

எனவே அதற்கு முன்பாக நான்....
என்னால் முடிந்த வரையில்...
பிறருக்கு...
எந்த அளவு நன்மை செய்ய முடியுமோ...
அந்த அளவு....
செய்துவிட வேண்டுமென விரும்புகிறேன்.

வேறென்ன சொல்ல..!

--------------------------------------------------------------------------------
இன்றைக்கு நான் சமீபத்தில் படித்த புராணக் கதைகளின் வலைதளம் அறிமுகம்.

மழலைகள்

(மற்ற சில Link- களை நான் மேலோட்டமாய் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு முழுக்கப் படிக்காமல் அவசரத்தில் நேரமின்மை காரணமாக இங்கே இட்டு விட்டேன்.
பதிவெல்லாம் போட்டு முடித்த பிறகு போய்ப் பார்த்தால் எல்லாமே பிரச்சினைக்குரிய விஷயங்கள்.
ஆ....! ஐயோ! இப்பவே பாத்தியே...! தப்பிச்சடா அந்தோணி முத்து- ன்னு எல்லாத்தையும் எடுத்துட்டேன்.
யார் ,மனமாவது புண்பட்டிருந்தால்... தயவு செய்து மன்னித்து விடுங்கள்!)
மேலும் வாசிக்க...

Thursday, November 20, 2008

கொஞ்சம் கவிதை பார்ப்போமாங்க???

கவிதைகள் எழுதாதவர்கள் உலகில் உண்டா என்ன?

கனவோ,காதலோ,சுகமோ, சந்தோஷமோ, துக்கமோ, மனம் நிரம்பி வழியும் போது உணர்வுகளை வார்த்தைகளாய் கொட்டினால் கொஞ்சம் நிம்மதி.
அதுவே கவிதை.
சிலருக்கு இயல்பாக வருகிறது.சிலருக்கு கொஞ்சம் கஷ்டப் பட்டு வருகிறது.
நிறைய புதியவர்கள் எழுதுகிறார்கள்..
வார்த்தைப் பிரயோகங்களும் நன்றாகவே இருக்கிறது....
நான் சமீபத்தில் ரசித்த கவிதைகள் சில....

இது சரவணகுமரனின் "நிரம்பி வழிகிறது மனசு... "

//காரணங்கள் ஏதுமில்லை.
யார் மீதும்
எந்த கோபமும் வருத்தமும் இல்லை..
வலிகள் மறந்தோ மறத்தோ போய்விட்டது..
ஓர் உற்சாகம் மட்டும்
மூளைக்குள் விம்மி விம்மி சுரக்கிறது..//

இது குட்டிச் செல்வனின் "நிலையாமை" பற்றிய கவிதை

//சில‌ மழை நாட்க‌ளும்
சில‌ ம‌கிழ்ச்சி கிழ‌மைக‌ளும்
என்னில் ஏற்ப‌டுத்திய‌ தாக்க‌ங்க‌ளை
ஏதொன்றாலும் ச‌ம‌ன்ப‌டுத்த‌ இய‌ல‌வில்லை //

இது நதியலையின் வன்மக் கசடுகள்.....

//இப்பொழுது அணைக்கவியலாதெனத்தெரிந்தும்
அணையும் பாவனையில்
உனக்காகக் காத்திருக்கிறேன்
வந்து மழை பொழிவதாக
பொழிந்துவிட்டுச் செல்!//

இது சகாரா தென்றலின் காட்சிப் படுத்துதல்
//வலிந்து தவிர்த்தலில்
உறுத்திக் கொண்டேயிருக்கின்றன‌
சில நினைவுகளும் கவிதைகளும்..//
மேலும் வாசிக்க...

Tuesday, November 18, 2008

இதுதாங்க ."மஸ்த்" பதிவு...!

"மஸ்த்" அப்பிடின்னா ஹிந்தியில,
ஜாலி-ன்னு நம்ம "ஜெய்ப்பூர் (வைஸ் ப்ரின்ஸி) அருணா மேடம்" சொன்னாங்க.

சரிதான். இன்னிக்கு தலைப்பு அதையே வச்சிடலாம்னு.... ஹி... ஹி...!

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு.

தினமும் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்கத் தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.

கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார்.

பிச்சைக்காரன் பயந்து போனான்.

"எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?"

"நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!"

"இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க?"

"எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே!
யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்'"

"அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?"

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...
அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடித்துப் போனான்.

"சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து அந்த ஓடுதான்.
நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ!"

கடைக்காரர் சிரித்தார். சுரண்டுவதை நிறுத்தவில்லை.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

"ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு!"

கடைக்காரர் ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார்.

சுரண்டச் சுரண்ட... அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...
மெள்ள மெள்ள...
மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்கத்துவங்கியது.

பிச்சைக்காரனின் கையில் அந்தத் தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!

"அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,
இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க கடைசீல,
அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?"


இதே போலத்தான்... நாமும் நமக்குள் இருக்கும்...
ஆழ்மனத்தின்...,
தன்னம்பிக்கை- யின்,
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை....,
உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


நம்முடைய ஆழ்மனம் ஒரு கம்ப்யூடருக்கு ஒப்பானது.

நாம் அதற்குக் கொடுக்கும் ஆணைகளுக்கேற்ப (Commands) அது செயல்படுகிறது.

"வெற்றி பெறுவோம்" என்ற ஆணையைக் கொடுத்தால்... வெற்றியைக் கொண்டு வரும்,
(அதற்கு பெரிய காரியம், சின்ன காரியம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல.)

மாறாக "தோற்றுப் போவோம்" என்ற ஆணையைக் கொடுத்தால் தோல்வியைத்தான் கொண்டு வரும்.

(நாம வெற்றியடைந்தால்; அதைவிட "மஸ்த்" [ஜாலி]
வேறு என்ன? ---தலைப்பக் கோத்து விட்டாச்சுங்களா--- )

:-)

ஆக நீங்கள் என்ன ஆணை கொடுக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

இப்போது....

உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....!


---------------------------------------

சரி! இன்றைய வலைப்பூ அறிமுகம்... இதோ....

வானம் தொட்டு விடும் தூரம்தான்.

இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.....
இதைவிட நம்பிக்கை தரும் வார்த்தைகள் உண்டா என்ன?ஒரு காரியம், முடியுமா என்ற சந்தேகமும், அது முடியாது என்ற விடையும் எழுவதற்குக் காரணம், தன்னம்பிக்கை குறைவு மட்டுமல்ல, மனச்சோம்பலும்தான்.

அதை விட்டொழித்து விட்டால் வானம் கூடத் தொட்டு விடும் தூரம்தான்.

அப்படித் தன்னம்பிக்கை தரும் பதிவு இன்றைக்கு.


"விசாராவின்" இந்தப் பதிவு
மேலும் வாசிக்க...

அன்புள்ள அப்பா- 2

என் மனம் தொட்ட அப்பா பதிவுகள் சில....


"நினைவுகள் கலைய
என் கர்வத்தின் காரணம்
உணர்ந்தேன்

அது என் உடல்மீதிருந்த
இறுக்கமான
அப்பாவின் சட்டை"
இது முத்துக் குமரனின் அப்பா

"அப்பாவின் வியர்வை வாசம் ஞாபகத்தில்;
எங்கோ மழை பெய்திருக்க வேண்டும்
நாசியை வருடும் மண்மணம்."

இது கலையரசனின் அப்பாவின் வாசம்.படித்தவுடன் அப்பாவின் வாசம் நினைவுக்கு வருகிறது.


//எனக்கான உணவு நேரம் வரும்வரை என் பசி தாங்கி நிற்கும் அவர் கொடுக்கும் அந்த கைச்சோறு. திருப்பி நான் அவர் கையில் கொடுத்திராத கைச்சோற்றை என்னால் அவருக்கு வைக்கவே நேர்ந்தது. //

இது கிருத்திகாவின் அப்பாவின் நினைவு நாள்.....படிக்கப் படிக்க வலி கொடுக்கும் வார்த்தைகள்.

அப்புறம் அமிர்தவர்ஷினி அம்மாவுடைய இந்தப் பதிவு
சற்றேறக்குறைய என் சொந்த அனுபவம்.

படிக்கும்போது கண் கலங்கி மனம் கனத்து விட்டது.

அங்கே நான் இட்ட பின்னூட்டத்தை இங்கேயும் இடுகிறேன்.

--------------------------------------------------

தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட உங்களின் நேர்மை வியப்புக்கும், பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.

உங்களைப் போலவே நானும் என் பெற்றோருக்கு வயதான பிறகு பிறந்தவன்தான்.

(அண்ணனுக்கு திருமணமாகி, அவருக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு, நான் பிறந்தேன்.)

உங்களைப் போலவே நானும் என் தந்தையை அவர் வாழும் காலத்தில் மதித்ததில்லை.

இத்தனைக்கும் என் அறிவு, திறமை, அவ்வளவு ஏன்...?, சில மாதங்கள் முன்பு வரையிலான சாப்பாடு வரையில்.... எல்லாமே அவருடையதுதான்.

அவ்ர் இறப்பதற்கு சுமார் ஒரு வருடம் முன்புதான் அவரது முழு அருமை, உணர்ந்து...
அன்பின் ஊற்றுக்கண் திறக்கப்பட்டு...,

அவரிடத்தில் பெற்ற கடலளவு நன்மையில், கடுகளவேனும் திருப்பித் தர முழு இருதயத்துடன் தவமிருக்கத் தொடங்கினேன்.

என் தவம் ஈடேறுமுன்னே தந்தை என்னை விட்டுச் சென்றார்.

இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வினாடியிலும் அழுகிறேன்.

எத்தனை முறை கதறினாலும், அழுதாலும், இழந்த அந்த நாட்கள் திரும்ப வரப்போவதில்லை.
மேலும் வாசிக்க...

Monday, November 17, 2008

அன்புள்ள அப்பா- 12007 ஜூன் 27 அன்று அப்பா எங்களை விட்டுப் போன நாள்.

இன்றளவும் பல முறை அவரைக் கனவில் காணும்போதெல்லாம்,
பிரிவுத் துயரின் கொடூர துக்கத்தில்...
அலறி அழுகிறேன்.

விழித்துப் பார்த்தால் நிஜமாகவே சப்தமிட்டு அழுது கொண்டிருப்பேன்.

அக்கா என்னை "டேய்..! டேய்..! ராஜா..! என்னடா ஆச்சு?" என்று உலுக்கிக் கொண்டிருப்பார்கள்.

அவர் இருந்த வரையில் "அப்பா இருக்கிறார்" என்கிற நினைப்பே
ஒரு அரசனுக்குரிய மனோதைரியத்தை எனக்கு வழங்கிக் கொண்டிருந்தது.

அவர் போன பிறகு அனைத்துமே...
இருள் சூழ்ந்து விட்டதைப் போல...
சர்வ சூனியமானதைப் போன்ற ஒரு நிலை.

அப்போதுதான் (2007-நவம்பர்-13) என் வாழ்வின் வெளிச்சக் கீற்றாய் என் அன்பு விஷி அண்ணன் வந்தார்.

இன்று என் தந்தைக்குரிய ஸ்தானத்தில்...
அவரோடு சேர்த்து,
என் மீது பாசத்தை மட்டுமே பொழியும் "என் சுரேஷ் அண்ணன்",
அன்போடு கருணையையும் சேர்த்துப் பாய்ச்சும் "சீனா அப்பா"...
எனக்கு வேலை கொடுத்துப் பேணி வரும்
"வி. கே. டி. பாலன் ஐயா"....

ஓ...! வானத்திலிருக்கும் என் அப்பா...
என்னைப் பார்த்துப் பெருமையாகப் புன்னகைத்துக் கையசைப்பதாகத்
தோன்றுகிறது.

நீங்க என்ன சொல்றீங்க?
மேலும் வாசிக்க...

என் முதல் குருவுக்கு சமர்ப்பணம்.

இன்றளவும் எனக்குப் பல வகைகளில் ஆதர்ச துணையாய் இருந்து பல விதங்களில் உதவி வரும் சீனா அப்பாவுக்கு என் மனது நிறைந்த நன்றிகள்.

வலைச் சரத்தில் என்னை எழுத அவர் அழைத்த போது சற்று கலக்கமாகவே உணர்ந்தேன்.

(இடது கையினால் மட்டுமே டைப் செய்தாக வேண்டும். தவிரவும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லை.)

முன்பே ஒப்புக் கொண்ட பணி. இந்த ஒரு வாரத்தில் என்னால் முடிந்த வரை நல்ல விஷயங்களை எழுத முயற்சிக்கிறேன்.

முதல் பதிவாக "நான் வலைப்பூ உலகிற்கு அறிமுகமானவுடன் எழுதிய முதல் பதிவு."

என்னவோ இதை முதலில் உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
----------------------------------------------------------------
என் அண்ணன்அண்ணன் என்ற வார்த்தைக்கு, எனது அகராதியில் அப்பா என்ற ஒரு மிகப் பெரிய அர்த்தமுண்டு।

நாங்கள் உடன் பிறந்தோர் ஒன்பது பேர்। மூத்தவர் அண்ணன். பெயர் லூர்துசாமி.அடுத்து ஆறு பேர் அக்கா. பிறகு நான். எனக்கடுத்து ஒரு தங்கை.

என் அண்ணனுக்குத் திருமணமாகி, அவருக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு, (பிறந்த மறு நாளே, இறந்து விட்டது.) எட்டு மாதங்கள் கழித்து பிறந்தவன் நான்.

என்னை பெற்றது மட்டுமே என் பெற்றோர். வளர்த்ததெல்லாம் அண்ணன், அண்ணி..., பெரிய அக்கா, மாமா..., மற்றுமுள்ள அக்காக்கள்தான்.

குறிப்பாக அண்ணனது குழ்ந்தை இறந்து போனதால்..., அந்த அன்பையும், பாசத்தையும்... என்னிடம் மட்டுமே செலுத்தி வளர்த்தார்கள்.

என் அண்ணன் தான் எனது முதல் குரு.
(அந்தக்காலத்து S.S.L.C முடித்தவர்)

நான் இன்றைக்கு ஏதோ கொஞ்சமாவது, அறிவுத்தெளிவுடன் இருக்கிறேன் என்றால்...,
என் அன்பு அண்ணன் அன்று...,
என்னை அடித்து அடித்து சொல்லிக்கொடுத்ததுதான்.
அவர் எனது இரண்டாவது தந்தை.

அம்மா என்ற வார்தைக்கு, நான் அர்த்தம் கண்டது என் அண்ணியிடம்தான்.நான் நடக்கத் துவங்கும் வரை, அவ்ர்களின் இடுப்பிலேயே என்னைச் சுமந்து சென்றவர்கள்.
Toilet போனால் அவர்கள்தான் கழுவி விடுவார்கள்.

எனது 11-வது வயதில், இந்த விபத்து நிகழ்ந்த நாள் வரை, என் அண்ணனை கட்டியணைத்துக் கொண்டு, அவர் மீது கால் போட்டுக் கொண்டுதான் தூங்குவேன்.

நான் முதன்முத்லாக ரசித்து, நேசித்த..., முதல் 'HERO' என் அண்ணன்தான். (இப்போதும் கூட என் பேச்சில் செயல்களில், அவருடைய பாதிப்புக்கள் நிறைய இருக்கும்.)

நடிகர் சத்தியராஜின் உயரம். சுருள் சுருளாக தலை முடி. வீட்டிலிருக்கும் நேரம் தவிர, எப்போதும் Polyester வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கைச் சட்டை.

அவரது சிவப்பு நிற RAJDOOT-ல்... அவர் ஆரோகணித்து வரும் Style-ல், சத்தியமாய் அந்தக்கால எம்.ஜி.ஆர்., சிவாஜி தோற்றுப் போவார்கள்.

சிறு வயது, நினைவென்றால்...
குந்தாணிசுனை கிராமத்தில், பரந்து விரிந்து கிடக்கும் எங்களுக்குச் சொந்தமான கழனி வயல்களுக்கு நீர் பாய்ச்ச, பம்பு செட் விட, என்று என் அண்ணன் வரப்பில் நடந்து செல்லுவார்.

அவரது தோளில் நான்.

அப்போதெல்லாம் அண்ணன் ஒரு பாடலை,
அடிக்கடி பாடுவார்.

பெரியவனானதும்தான்....
அது என்ன பாடல்?
என்ன படம்॥?
அதற்கு என்ன அர்த்தம்?
என்று புரிந்தது.

"அன்பு சகோதரர்கள்" படத்தில்
"கண்டசாலா" பாடிய
"முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக,
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம், கண்ணுக்குக் கண்ணாக," பாடல் அது.

இபோதும் கூட அந்த பாடலைக் கேட்டாலே... என் கண்களில் நீர் சுரக்கத் துவங்கி விடும்.அந்தப் பாடலை எனக்காக ஒரு முறை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.இந்தப் பாடலின் முதல் சரணத்தில்...,
"தாயாரும் படித்ததில்லை,
தந்தை முகம் பார்த்ததில்லை,
தாலாட்டு கேட்டதன்றி,
ஓர் பாட்டும் அறிந்ததில்லை.
தானாகப் படித்து வந்தான்,
தங்கமென வளர்ந்த தம்பி...!
தள்ளாத வயதினில் நான்...
வாழுகிறேன் அவனை நம்பி."

'(Sorry! இதை எழுதும்போதே அழுகை வருகிறது.)

என் அண்ணனுக்கு இபோது அறுபது வயது ஆகப் போகிறது. அவருக்கு நான்கு பிள்ளைகள்.

இருந்தாலும் அவர்களயெல்லாம் தாண்டி...,
அவரது மூத்தப் பிள்ளை நான் தான்.

அவர் என் மீது எந்த அளவு அன்பு வைத்திருந்தார் என்றால்....

விபத்தில் நான் படுக்கையில் விழுந்த உடன்...,

முழுவதுமாக உடைந்து போய் விட்டர்.

இருபத்தைந்து வருடங்களாகியும்...,

இன்னும் அதிலிருந்து மீளவில்லை.
மேலும் வாசிக்க...

Sunday, November 16, 2008

விடை அளிக்கிறோம் - வரவேற்கிறோம்

ஒரு வார காலமாக சகோதரி சந்தனமுல்லை அருமையான ஒன்பது பதிவுகள் இட்டு பலப்பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றி மகிழ்வுடன் விடை பெற்றிருக்கிறார். பலதரப்பட்ட பதிவர்களின் பன்முகப் பதிவுகளை அறிமுகம் செய்திருக்கிறார். சகோதரி சந்தனமுல்லைக்கு பிரியாவிடை அளிக்கிறோம்.
-------------------------------------------------------------------------
அடுத்த வாரத்திற்கு அருமைச் செல்வன் அந்தோணிமுத்து ஆசிரியராகப் பொறுப்பேற்கிறான். அவனைப்பற்றிய அறிமுகம் நான் கொடுப்பதை விட இப்பக்கத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாமே ! தன்னம்பிக்கையின் சிகரம் - விடாமுயற்சியில் மன்னன் - பாடல்கள் கவிதைகள் கட்டுரைகள் என்று கலக்குபவன். சிறந்த அறிவாளி. பல பதிவர்கள் இவனைப்பற்றி பதிவுகள் இட்டிருக்கின்றனர். இச்செல்வனை வருக வருக என வரவேற்கிறோம்.

சீனா
மேலும் வாசிக்க...

நன்றிகளுடன்..

சொல்லப்பட்ட பதிவுகளைவிட சொல்லப்படாதவைகளே அதிகம்! கிடைத்த நேரத்தில் என் விருப்பப் பதிவுகளை பகிர வாய்ப்பளித்த சீனா அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்!

விடைபெறுமுன், ஒரு சில பதிவுகள்..

ஒரு குட்டிப்பாப்பாவின் பதிவு உங்களுக்காக!

பட்டூ! நான்கு வயது ரிதன்யாவின் வான்வில்லை பார்க்க இங்கே போங்க....

நம்ம ஜூனியர் தமிழ்பிரியன்..

அப்புறம், நிலாவின் போட்டோ போஸ்கள்!! பாப்பாவின் படங்கள் இங்கே!!

ஒரு வாரமாய் என்னுடைய வலைச்சர பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்! மீண்டும் சித்திரக்கூடத்தில் சந்திப்போம்!
மேலும் வாசிக்க...

Saturday, November 15, 2008

குழந்தைகளுக்காக...

குழந்தைகளுக்கான பாடல்கள் ஆங்கிலத்தில் கிடைக்குமளவிற்கு இணையத்தில் தமிழில் காணக்கிடைக்கவில்லை என்ற எண்ணமுண்டு எனக்கு !! ஆனால், அந்த எண்ணம் மாறிவருகிறது இப்போது!!

ராம்மலரின் குழந்தைப்பாடல்கள்

சிறுவர் பாடல்களுக்குன்னே ஒரு தளம் தொடங்கியிருக்காங்க சுந்தரவடிவேலுவும் மதியும்.
மிகவும் சுவாரசியமா இருக்கு! தொடர்ந்து புதுப்பித்தால் நலமாயிருக்கும்!!

மரப்பாச்சிக்கு காய்ச்சலடி என்ற பாடல் இங்கே!!

மிருகக்காட்சி சாலை என்ற இந்த பதிவும் சுவாரசியம்!! சிறுவர்களுக்கு பாட எளிதாகவும், பயனுள்ளதாயும் இருக்கும்!!இந்தப் வலைப்பூவிலேயே ஓவியர்களிடையேயும், இசைஆர்வலர்களிடையேயும் உதவி கேட்டிருக்கிறார்கள்..கொஞ்சம் லேட்தான்...இதன்மூலம் ஏதாவது உதவி கிடைக்குமாயின் நலமே!! இதோ..அந்தப் பதிவு!!


ஜெய் என்பவரின் உள்ளோட்டம் எனும் பேரிட்ட வலைப்பூ இது!! குழந்தைப்பாடல்களும், நாட்டுப்புறப் பாடல்களும் (ஒலி வடிவிலும்)
கொண்ட வலைப்பூ!!

ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம்

கோலு கோலு கோலு - நாட்டுப்புறப் பாடல்கள்

இன்னமும் உண்டு..அவரின் வலைப்பூவில்!! வலைப்பூ எல்லாருக்கும் பலனளிக்கிறது தெரிந்தால் இன்னும் புதுப்பிக்கப்படலாம் என்ற எண்ணத்தோடு!!


குழந்தைகளுக்கான கதைகள் - இதோ என்னுடைய சிறுவயது பேவரிட் கதை..ஏழுநிறப் பூ சோவியத் கதைகள் படிக்கவென்றே ஒரு வலைப்பூ!! நன்றி சரவணன்!

வலைஞனும் மீனும் -இந்த கதையை அந்த படங்கள் தரும் உணர்வுக்காகவே படிக்கவேண்டும்..ஆனால் படங்கள் இல்லையெனினும் கதைஇங்கே!

தமிழில் குட்டிக் கதைகள் சொல்கிறார்..ந.உதயக்குமார்!

காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது வளர்ந்த பிள்ளைகளுக்குச் சொல்லலாம்!!


ஒளிஒலிக் காட்சிகள் கதைகளுடன் இங்கே!!


அரும்புகள் எனும் வலைப்பூவை குழந்தைகளுக்காக நடத்துகிறார் கண்மணி! அதில் சுவாரசியங்கள்!!
மேலும் வாசிக்க...

Friday, November 14, 2008

சாரலும்,மலர்வனமும் கொஞ்சம் யாழன் ஆதி கவிதையும்!

யாழன் ஆதி..கோபமான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். யோசித்துப் பார்த்தால் அந்தக் கோபத்திலும் நியாயமிருப்பதாய் படுகிறது!!
குட்டக் கொழப்பியின் பதிவில் யாழன் ஆதி கவிதை! அன்பு என்பவரின் அன்பின் பக்கங்களில் இருக்கும் இன்னொரு கவிதை!

மலர்வனம் லஷ்மி..அவரது சமூகம் எனும் லேபிளின் கீழ் வரும் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்கிறேன்..சில பதிவுகளைத் திரும்பத் திரும்ப!! அவரது அநேகக் கருத்துக்கள் எனக்குமிருந்ததுண்டு, ஆனால் சொல்ல வரும் கருத்துக்களை தெளிவாக, சொல்லிவிடும் அவரது மொழிநடையின் பாங்கை கண்டு பிரமித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு கைவராத அந்த வித்தையை ஒரு ஏக்கத்தோடு!!

ஒருபோதும் பின்னூட்டமிட்டதில்லையெனினும்
வசந்தனின் பதிவுகளையும், சயந்தனின் பதிவுகளையும் தவற விட்டதில்லை!

வசந்தனின் ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்? அவரது கடகம் - பெட்டி - ஓலை - நார் - நான் மேலும் கவளம் - ஒரு நினைவு.அந்தத் தமிழில் படிக்க இன்னும் இனிமை!!

இதையும் படியுங்களேன்..எலியுஞ் சேவலும்

சயந்தனின் பதிவுகள் சுவாரசியமாகவும், சில பதிவுகள் மனதை நெகிழ்த்துபவையாகவும், ஒரு சில கிண்டலுடன் யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவையுடனும்..இருக்கும்!!
அவரின் நடையில் அந்தக் கண்களும் சில காதல்களும் மேலும் நினைவழியா நாட்கள்!! ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சயந்தனுக்கு வலைச்சரத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!! :-))

நாளைக்கு எட்டிப்பார்க்க முடியாது போகலாம என்பதால் இன்றே பதிவிடுகிறேன்!!
மேலும் வாசிக்க...

மனதில் நின்ற பதிவுகள் சில!

"இந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன்"

இப்படி ஆரம்பிக்கற ஜெஸிலா எதைப்பத்தி சொல்றாங்கன்ன்னு பாருங்களேன்! அப்படியே பின்னூட்டங்களையும் படிங்க..அதுவும் சுவாரசியம்!! :-))

இ.கா.வள்ளி..இவரது எழுத்துக்கள் ஏதோ நேரில் பேசிக்கொண்டிருப்பதைப் போல், மனதிலிருப்பதை வார்த்தைகளாக்கிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கும்! அவரது வலைப்பூவில் நான் முதலில் படித்த பதிவு இது! உயிர் மெய் மலர்களின் பிற பதிவுகளும் கருத்துப் பூர்வமானவை!

சக்தி எனும் கூட்டுப்பதிவில் பத்மா அர்விந்த்-இன் நாங்கள் நாங்களாகவே... ஏனோ 2007-க்கு பிறகு புதுப்பதிவுகள் இல்லை..தொடர்ந்தால் நன்று!! கற்றதனால் ஆன..தொடர்பதிவுகளும் ஆக்கப்பூர்வமானவை!!

ஒலிக்கும் கணங்கள் எனும் வலைப்பூவில் படித்துப்பாருங்கள் நிர்மலாவின் கவிதையை!! அம்பையின், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை எனும் கதையில் வரும் ஆக்டோபஸின் கைகள் நினைவுக்கு வருகிறது.

மேற்கண்ட பதிவுகளை மட்டுமல்லாமல், அதன் பின்னூட்டங்களையும் தொடர்ந்து படித்ததுண்டு!

மலைநாடன் மற்றும் கானாவின் பதிவுகளையும் சிறிதுப் எட்டிப் பார்த்துவிடலாமே!!என்ன, ப்பபுவின் பெயரில் ஒரு வலைப்பூ இருக்கிறதே என்றெண்ணித்தான் மலைநாடனின் பதிவிற்குள் சென்றேன்!!

ஏறுபடி! இதனைக் குறித்து இவரது பதிவில்தான் அறிந்துக் கொண்டேன்! மலைநாடன்! சுவாரசியங்களுக்கும் மனதை தொடும் எழுத்துக்களுக்கும் இவரது பதிவுகளை படிக்கலாம்!
இன்னும் அந்தக் கலையினைப் பற்றிய விபரங்களுக்கு!

அவரது என் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக். சொல்லப்போனால், நான அவரது எல்லாப் பதிவுகளுக்கும் சுட்டிகள் கொடுத்து விடுவேன்!!

வடே வடே" , "பார்லி பார்லி"..என்னன்னு தெரியணுமா...நம்ம சவுண்ட் சர்வீஸ் கானாஸின் இந்தப் பதிவில் பாருங்களேன்! அப்புறம் கானாவின் யாழ்ப்பாணத்து சமையல்!!அந்த மாம்பழப் பதிவை மறக்கமுடியுமா?!
மேலும் வாசிக்க...

Thursday, November 13, 2008

என்றென்றும் புன்னகை..வாழும் புன்னகை!

விவசாயத்தை, நம் நாட்டின் முதுகெலும்பை பற்றி இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் கருத்துகள் எவ்வளவு செறிவானவை!!

ரயில் நிலையமோ அல்லது கடைகளோ..எங்கு படிக்கட்டுகளைப் பார்த்தாலும் இந்தக் கட்டுரை ஒரு முறை நினைவுக்கு வந்துப் போகும்!!வாழ்க்கை என்னும் பிசாசு..!

நடைவண்டியின் கிராமத்துக் கதைகளும் படிக்க நன்றாயிருக்கும்!

அடுத்ததாக,

இவரது எழுத்துக்களினாலும், இவர் எழுதிய ஒரு புத்தகத்தினால் மட்டுமே எனது கண்ணோட்டம் மாறியது என்று சொன்னால் அது மிகையல்ல! இவரது வலைப்பூவை படிக்கும்வரை ஒருவித அச்சத்தோடும், திருநங்கைகளை குறித்து எந்தவொரு பிரக்ஞையுமின்றியே இருந்திருக்கிறேன்! அவர்கள் எதிர்வரும்போது வித்தியாசமாய் நோக்கியிருக்கிறேன்..ஆனால், திருநங்கைகளும் மனிதர்களே..என்னைப் போன்ற பெண் வர்க்கமே என்று உணர வைத்தது அவரது வலைப்பூவும், அவரது புத்தகமும்!

நாம் எனும் அவரது கவிதை...

அவரது விரும்புவதெல்லாம் ஒன்றே !! அப்படியே அவரது இந்தக் கட்டுரையையும் படிச்சிடுங்க!! வாழ்க்கையை இயல்பாய் வாழவே எவ்வளவு போராட்டங்கள்!!

என்ன முரண் எனில், என்னைப் பாதித்த/ஈர்த்த இந்தப் பதிவுகளையெல்லாம் படித்திருக்கிறேனேயொழிய ஒரு பின்னூட்டம் கூட போட்டதில்லை! மறுமொழியாக சொல்வதற்கு வார்த்தைகள் என்னிடம் இல்லை என்பதே உண்மை!!
மேலும் வாசிக்க...

Wednesday, November 12, 2008

சில கதைகள்

இதுவும் கதை பற்றிய போஸ்ட் தான்!! அனுபவங்களோ, அடுத்தவர் வாழ்வின் நிகழ்வுகளின் பாதிப்போ..சுவாரசியமாய் சொல்லும்போது நினைவில் தங்கிவிடுகிறது..அப்படி ரசித்து படித்தவை..

கொங்குராசாவின் வென்னிலா கேக்!! . அவரது பதிவுகளில் மறக்க முடியாதது, யார் என்றே தெரியாமல், பலனை எதிர்பாராமல் மிக இயல்பாய் நடந்ததை
கொங்கு ராசாவின் நடையில்... படித்துப் பாருங்கள்!!

அப்புறம் இன்னொரு ஜாலியான கதை படிச்சது ஞாபகத்துக்கு வருது! அந்த கதைக்குக்(!)சொந்தக்காரர் இளா!! சக்தி ட்ரான்ஸ்போர்ட்!!

பாகம் 1
பாகம் 2

இந்த மாதிரி ஹாப்பி எண்டிங் கதைகளை படிக்கவே நல்லாருக்கும்.. வேலை நேரத்தில் பிளாக் பக்கம் வர்றது ஒரு மாற்றத்திற்காக இல்லன்னா ஒரு ரெஃப்ராஷிங்-க்காகதான். :-)

கதைகளில் முக்கியமாய் தவற விடக்கூடாதவர் தேவ்! இவரது பக்கம் 78 மிகவும் பேவரிட்!
சுவாரசியமாய் கதைகளை நகர்த்தி செல்வதிலும், சஸ்பென்ஸாக அடுத்த பாகத்தில் வெயிட் செய்ய வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே! அவரது கதைகளில் விடாமல் வெயிட் செய்து படித்தது..நண்பனின் காதலி மற்றும் சின்னக்குளமும் விடுமுறைகளும்!!!

நண்பனின் காதலி - பகுதி 1

நண்பனின் காதலி - பகுதி 2

நண்பனின் காதலி - பகுதி 3
மேலும் வாசிக்க...

Tuesday, November 11, 2008

மழையும் இளவேனிலும்!!

தமிழ்நதியின் பதிவுகள் என்னை மிகவும் பாதித்தவை! ஆற்றல் மிக்கவை! ஒரு மெல்லிய சோகத்தை, வாழ்வின் அனுபவங்களை, நிகழ்வுகளை அவருக்கேயுரிய மொழிநடையில் கவிதையாக மறக்கவியலாக் குறிப்புகளாக செய்து விடுவார்! மனதை கனக்கச் செய்யும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்!

ஒரு மரணம்..ஒரு தற்கொலை..நமக்குள் என்னென்ன கிளறிவிடும்..பிரியமானவர்களை இழக்கக் கொடுத்தபின் வரும் தூக்கம் கலைந்த,நினைவுகள் துரத்தும் அந்த இரவுவேளைகள் எவ்வளவு கொடுமையானவை!!

"நேற்றிரவு தூக்கமாத்திரையையும் மீறி விழிப்பு வந்தது. நீ தனியே பிணவறையில் படுத்திருப்பாய் என்பது அமானுஷ்யமான பயத்தை ஊட்டியது. எழுந்தமர்ந்து எழுதத் தொடங்குகிறேன். எழுத்தைத் தவிர வேறெவர் என்னைத் தாங்கிக்கொள்ளக்கூடும்…? அதன் தோள்கள் ஒரு பறவையினுடையதைப்போல மிருதுவானவை. புகைப்படத்தில் உன்னை முற்றிலுமாக அடைத்து விடும்முன், நீ மரணத்தின் மூலம் என்னோடு பேசியிருப்பதைச் சேமிக்க விரும்புகிறேன்."


மரணம் பற்றிய குறிப்புகளில் நீங்களே படித்து விடுங்கள்!!


"இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும்."

முகத்திலறையும் உண்மை!! என்னிடம் வார்த்தைகளிலில்லை..மீண்டும் தமிழ்நதியிடமே விட்டு விடுகிறேன்!!

ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.

மழை என்ற பதிவுவினூடாக அமிர்தவர்ஷினி அம்மா என்று அறிமுகப்படுத்தி கொள்கிற இவர் அமித்துவைப் பற்றியும், கவிதைகளையும், மனதை பாதித்தவை பற்றியும் எழுதுகிறார்! அனுபவங்களை கவிதைகளாகவும், பதிவுகளாகவும் ஆக்குகிற வித்தை கைகூடியிருக்கிறது இவரிடம்!!

அனைவராலும் இப்படி தவறை பகிரங்கமாக ஒப்புகொள்ள முடியுமா என்பது சந்தேகமே!! ஆனால் தவறென்றே அறியாத தருணத்தில் செய்தவைகளுக்கு மன்னிப்பு உண்டல்லவோ!! மனதை நெகிழ்த்தும் பதிவு இதோ!


இந்த இரு பதிவுகளின் தளங்கள் வெவ்வேறாயினும் அவைகளின் அடிநாதம் ஒன்றுதான்!

மரணங்கள் கற்றுத் தரும் பாடங்கள்...
வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள்...
நாம் செய்த செய்கைகளை விட செய்யாமல் விட்டவைகள் சொல்லும் பாடங்கள்...
என்று பாடங்கள்தான் எத்தனையெத்தனை!!
மேலும் வாசிக்க...

Monday, November 10, 2008

பறவையின் தடங்களும் சித்தி ஜுனைதா பேகமும்

நான் நல்லா எழுதல்லைன்னாலும், நல்லா கதை படிப்பேன்! பிடித்த கதைகளை திரும்ப திரும்ப படிக்கப் பிடிக்கும்! அப்படி நான் படிக்கும் கதைகளில் ஒன்றுதான் குட்டியாப்பா! சற்றே பெரிய கதை ! இதுதான் அவரது முதல் கதை தொகுப்பு!

அந்த புத்தகம் வரும் வரை அவர் ஒரு எழுத்தாளர் என்றே நான் அறிந்திருக்கவில்லை!
அதனால் என்ன பெரிய நட்டம் என்கிறீர்களா? ஒன்றும் இல்லைதான்! ஆனால்,எங்கள் வீட்டை கடந்து செல்பவரை அதன்பின் கொஞ்சம் மரியாதை கலந்த வியப்புடன் பார்க்க ஆரம்பித்தேன்! ஹவுசிங் போர்ட் குடியிருப்பில் அடுத்தடுத்த பிளாக்குகளில்தான் குடியிருந்தோம் அப்போது! எங்கள் ஊர் ஆண்கள் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் அவர்.

எனது பெரியம்மா எங்கள் ஊரில் கொஞ்சம் பிரசித்தம். கொஞ்சம் இலக்கிய ஆர்வம், புத்தக விரும்பி. எங்கள் ஊரில் எந்த ஒரு விழாவும் (கட்சிக் கூட்டங்கள் தவிர ) அவரின்றி நடைப் பெற்றுவிடுவதில்லை! அவரது முதல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று வந்த பெரியம்மாவுடன் வந்ததுதான் இச்சிறுகதைத் தொகுப்பு! நாகூரிலிருந்து வந்திருந்ததாலும், ஊர்ப் பாசத்தின் காரணமாகவும் இணைத்துக் கொண்டவர். கரெக்ட..நாகூர் ரூமிதான் அவர்! அவரது படைப்புகளைப் பற்றி விபரங்கள் அங்குண்டு! தமிழோவியத்தை அறிந்தவர்களுக்கு இவர் புதியவரல்ல என்றெண்ணுகிறேன்!!

நாகூர் ரூமியை பற்றி அவரது அன்பர் நாகூரியின் இந்தப் பதிவிலிருக்கிறது. அவரது குட்டியாப்பா என்ற கதையும்! ஒருமுறைப் படித்துதான் பாருங்களேன்!


பறவையின் தடங்கள் என்ற அவரது வலைப்பூ இதோ!!

நாகூரியின் வலைப்பதிவிலேயே இருக்கிறது இந்த தமிழின் முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளரைப் பற்றி!

சித்தி ஜுனைதா பேகம்! இவர் நாகூர் ரூமியின் உறவினர் (பெரியன்னை).சித்தி எனபது அரபிப் பெயர்!
இவரது மகிழம் பூ நாவல் இதோ! அவ்வளவாக படிப்பறிவில்லாத இப்பெண்மணியின் எழுத்தாற்றல் வியக்க வைக்கிறது!!
மேலும் வாசிக்க...

வணக்கம் வலைச்சரம்!!!

வலைச்சர மக்கள் அனைவருக்கும் வணக்கம்! வாய்ப்பளித்து வரவேற்ற சீனாவுக்கு நன்றி!

ஒரு அறிமுக பதிவு போட்டுக்கலாம்னு சீனா சொல்லியிருக்கார். அப்படி போட்டுக்கற அளவுக்கு நான் எதுவும் பெரிசா எழுதிடலை! ஆனா, பழசெயெல்லாம் படிக்க வைக்க இது ஒரு நல்ல உத்தின்னு தோணுது!! :-))

நினைவுகள்-ன்னு என்னோட ஆரம்ப பள்ளி நினைவுகளை இங்கே எழுதியிருக்கேன்! முடிஞ்சா படிச்சி பாருங்க..எல்லாம் கொசுவத்தி பதிவுகள் தான்!!

மயில் வளர்த்த கதை!


பரீட்சை எழுதப் போன கதை!

நகைச்சுவைங்கற பேர்ல நானும் ஏதோ ட்ரை பண்ணது..ஜில்லுன்னு ஒரு காதல் கதை-க்கு

கொல்லுன்னு ஒரு காதல்

இப்படித்தான் மொக்கை போட்டிக்கிட்டிருந்தேன்..நான் சின்னக் குழந்தைன்னு நினைச்சிக்கிட்டிருந்த எங்க பப்பு கொஞ்சம் கொஞ்சமா வளர்றது, பேசறது, அவள் செய்கைகள் எல்லாம் எனக்கு அதிசயமா தெரிஞ்சது. (அது வரைக்கும் ஒரு குழந்தை வளர்றதை இவ்வளவு டீடெய்லா பார்த்ததில்லை!!)அவளோட வளர்ச்சியை பதியறதுக்காக பப்புவின் பக்கங்கள்-னு ஆரம்பிச்சேன்..ஆனா அதை அப்டேட் பண்ணல..அப்புறம்தான் ஒரு ஞானம்..ஒரே ஒரு பிளாக் வச்சி ஒழுங்க்கா மெயிண்டெய்ன் பண்ணனும்னு! அப்புறம் பப்பு பத்தி எழுத ஆரம்பிச்சு, இப்போ சித்திரக்கூடம் பப்புவின் கூடமாகவே ஆகிடுச்சு!!

என்னோட வலைச்சர பதிவுகளை ஆரம்பிக்குமுன் தேன்கூடு சாகரனை நினைவுகூர விழைகிறேன்!
அவர்கூட அவ்வளவா பரிச்சயம் இல்லாவிட்டாலும், தேன்கூடும், தமிழ்மணமும் நான் தினமும் செல்லும் இடங்கள்! தினம் இல்லை..மணிக்கொரு தடவை!

குழந்தைகள் பற்றி எழுதலாம் என்று எனக்கு தோன்ற வைத்தது அவரது மகள் வர்ணிகா பற்றிய பதிவுகள்!! சாம்பிளுக்கு இதோ

அவருடைய வர்ணிகா-வை எல்லாம் வல்ல இறைவன் எல்லா வளங்களோடும் செல்வங்களோடும் காத்து வழிநடத்தட்டும் என்ற பிரார்த்தனகளோடும், வாழ்த்துக்களோடும்..
அடுத்த பதிவில் சந்திப்பதற்காக விடைபெறுகிறேன்!!
மேலும் வாசிக்க...

Sunday, November 9, 2008

வழி அனுப்புதலும் வரவேற்பதும் .......

அன்பின் நண்பர்களே !

ஒரு வார காலம் அருமை நண்பர் நவீன் பிரகாஷ், அவருடைய பணிச்சுமைகளுக்கு நடுவிலேயும், அருமையாக பதிவுகள் இட்டு, அதில் அழகான காதல் கவிதைகளின் சுட்டிகள் கொடுத்து, பல பதிவர்களை அறிமுகம் செய்து, மெல்லிய காதலினை பல நேர்த்தியான படங்களுடன் பதிவு செய்து காதல் மழையில் பதிவர்களை நனைய வைத்துச் சென்றிருக்கிறார். கொடுத்த பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி இருக்கிறார்.

அவருக்கு, அருமை நண்பர் நவீன் பிரகாஷுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து வழி அனுப்பி வைக்கிறோம்.
--------------------------------------------------------------------------------

10.11.2008ல் துவங்கும் வாரத்திற்கு அருமைச் சகோதரி சந்தன முல்லை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் சித்திரக்கூடம் என்றொரு வலைப்பூவினில் எழுதி வருகிறார். அழகான பெண் குழந்தையான பப்புவின் விரிந்த உலகத்தினைப் பற்றியும் தன் குறுகிய (??) உலகத்தினைப் பற்றியும், சூலை 2006 முதல் எழுதி வருகிறார். இது வரை நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார்.

சகோதரி சந்தனமுல்லையை வாழ்த்தி வரவேற்கிறோம்.

சீனா ( Cheena )
மேலும் வாசிக்க...

இனிய முத்தங்களுடன்....
முத்தம்... மிக அழகான... மென்மையான... உற்சாகமான... நேசமான .. ஒரு நிகழ்வு காதலில்...
பாலும் தேனும் கலந்தது போன்ற சுவை உடையது காதலியின் வாயில் ஊறிய நீர் என இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கிழவனார் எம் தாத்தா திருவள்ளுவரின் வாக்கின்படி
முத்தம் தரும் சுவையினையும் இன்பங்களையும் அள்ளி அள்ளி பருகிய பருகிக்கொண்டிருக்கிற பரம்பரை நாம்...
வெறும் சத்தங்களால் உருவாவது இல்லை முத்தங்கள்... இதழும் இதழும் மட்டும் அங்கு
பின்னிப்பிணைவதில்லை... அங்கே இதயமும் இதயமும் இரண்டறக்கலந்து ஏற்படுத்தும் ஓர் ஒத்ததிர்வு...
முத்தம் இல்லாத காதல் என்ன காதல்...? ரத்தம் தோய்ந்த வாட்கள் யுத்ததிற்கு அழகுபோல முத்தம்
தோய்ந்த இதழ்கள் காதலுக்கு அழகு... ஈரமான இதழ்களோடு வாருங்கள்... இணையத்தின் சில
பிரபல கவிஞர்களில் முத்த சத்தம் எப்படி இருக்கிறதென கேட்போம்...


மிகப்பெரும் கவிஞர்.. இனிய தோழர்.. வார்த்தைகளுக்குகூட வலிக்கும் என்ற அளவுக்கு மென்மையாகப்
பேசும் இனிய நண்பர் கவிஞர் சேவியர் அவர்களின் தளம் ஒரு கவிதை கடல்... இவரின் தளம் புகுந்தால்
வருடமெல்லாம் இன்பமாக நீந்திக்கொண்டே இருக்கலாம்...

எதையும் தடுமாறாமல்
தாங்கிக் கொள்ள
முடியும்
உன்
மெல்லிய
முத்தத்தைத் தவிர


முத்தத்தைக் கூட தோழர் சேவியர் மெல்லினமாகக் குறிப்பிடுவதிலேயே தெரிகிறது ஏன் மலரினும் மெல்லிது
என கூறினார்களென...

முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்

என்று தான்
நினைத்திருந்தேன்.

உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.


முத்தம் வெறும் இதழில் வழியும் அமுதம் மட்டுமல்ல...அது உயிரில் கலந்த அமுதம் என மிக அழகாக
முத்தமுணர்த்துகிறார்....

அமராவதி ஆற்றங்கரையிலமர்ந்துகொண்டு மழைகாலங்கள் தவிர மற்றகாலங்களில் அமராவதி வற்றினாலும்
வற்றாத கவிதைகளை இணையமெங்கும் ஓடவிட்டுக் காதலால் நனைத்துக்கொண்டிருக்கும் இனிய நண்பர்
கவிஞர் அருட்பெருங்கோவின் முத்த வரிகளைப் பாருங்களேன்...

உன்னைப்போலவே உனது
முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.

முதல் நாளின் கடைசி முத்தம்

அடுத்த நாளின் முதல் முத்தத்தை

சந்திக்கும் வரை
உறங்குவதேயில்லை.


கவிஞரின் கவிதைகளில் காதலும் இதழ்களும் என்றுமே உறங்குவதில்லை...


காதலோடு இதழ்களில் கொடுக்கப்பட்ட முத்தம் ஏற்படுத்தும் இனிய உணர்வுகளை
தோழி சத்தியா மிக மிக நுட்பமாக காதல் குன்றாமல் காதலான வரிகளால் உணர்த்துகிறார்
பாருங்கள்...

செவ்விதழ்
என் இதழ் மீது உரச
இமைகள் செருக
கரங்கள் இறுக்கி
சுரங்கள் மீட்டி…

நொடிக்குள் பல யுகங்கள்
தொலைந்து
நாடி நரம்புகள் புடைக்க
நளின நெளிதலுக்குள்
இன்பத் தேன் பருகி…

ம்!…
தந்தாயே
தித்திப்பாய் ஒரு முத்தம்!


தோழி சத்தியாவின் கவிதைகள் அனைத்துமே முத்தங்களைப் போலவே

படிக்க படிக்க சலிக்காது மேலும் மேலும் கொஞ்சத்தூண்டும் ...காதலில் ஒரு சிறு முரட்டுதனம் எப்பொழுதுமே காதலிகளால் ரசிக்கப்படுகிறது...

உன் அணைப்பு வேண்டுமானால் முரட்டுத்தனமாய் இருக்கட்டும் ஆனால் முத்தங்கள்

என்றுமே மென்மையாய் இருக்க வேண்டும் என மிக அழகான வரிகளால்

முத்தமுணர்த்தியிருக்கிறார் தோழி எழில்பாரதி....


முரட்டுத் தனமான‌
அணைப்புகளையும்
மென்மையான‌
முத்தங்களையும்
ஒரு சேர‌
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!


தோழியின் தளம் எங்கும் காதல் அருவியாய் முத்தமழையாய் பொழிந்துகொண்டிருக்கிறது...


முத்தம் எப்பொழுதும் இதழ்களில் மட்டும் தான் தரவேண்டுமா என்ன... எங்கு முடிகிறதோ

அங்கேயே பதிக்கலாம் என குறும்பாக இதழ் பதித்திருக்கிறார் தோழர் ஸ்ரீ . ஒற்றை அன்றிலாய்

தன் இணைஅன்றிலைத் கவிதைகள்தோறும் தேடியிருக்கிறார் கவிஞர் ஸ்ரீ...


உதட்டில் முத்தமிடவந்தால்

வழிமறித்துவிடுகிறாய்..

அந்த அழகைப் பார்த்து

முத்தங்களை

உன் கண்களிலேயே

தரையிறக்கிவிடுகிறேன்

எப்போதும்...


அழகான தரையிறக்கம் இதழ்களுக்கு அல்லவா.??இந்த வாரம் முழுதும் நான் படித்த... படித்துக்கொண்டிருக்கிற பல்வேறு

காதல் கவிஞர்களைப் பற்றி கூற எனக்கு இந்த வாய்ப்பினை அளித்த சீனா

அவர்களுக்கும்... பொறுமையாகப் படித்த அனைவருக்கும் என் நன்றிகள்...

இனிய முத்தங்களுடன் உங்களுடனிருந்து விடை பெறுகிறேன்... வணக்கம்...

மேலும் வாசிக்க...

Friday, November 7, 2008

ம்ம்ம்... மழைபெய்கிறது....

பெண்களைப் போலல்லாது ஆண்கள் எப்பொழுதுமே காதலை உணர்வுப்பூர்வமாகப் பார்ப்பவர்கள்.
ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால் அவர்களுக்கு அவளைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை..
அவளுக்காக பந்தங்களை உதறித்தள்ளிவிட்டு வர எப்பொழுதுமே அவர்கள் தயங்கியதில்லை...
பெண்கள் அந்த அளவுக்கு இல்லாத்து இயற்கை அவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை உணர்வாகக் கூட இருக்கலாம்... இணையத்தில் கவிதைகளால் பூத்துகுலுங்க வைத்திருக்கும் சில ஆண் கவிஞர்களின் கவிச்சோலையிலே உலவலாம் வாருங்கள்...


ஒரு நகரப்பேருந்தில் பயணிப்பது போல் இருக்கிறது
தோழர் செல்வ கருப்பையாவின் தளம் எங்கும் விரவிக்கிடக்கும் கவிதைகள்... நட்பா காதலா என பகுத்தறிய முடியாமல்
காணப்படும்

இன்றைய ஆண் பெண் நட்பை நாளைமுதல் நட்பு என மிக அழகாக எளிமையாக சொல்லி இருக்கும் விதம் மிக அருமை...

தோழரின் அழகு கவிதை எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும் ஒரு குறும்பான கவலை...

கடந்து செல்லும் ஒவ்வொரு பேருந்திலும் தென்படும் ஏதோ ஒரு அழகியபெண்ணின் முகம் போல கடந்து செல்லும் ஒவ்வொரு கவிதையிலும் ஏதோ ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது தோழர் செல்வ கருப்பையாவின் படைப்புகளனைத்தும்...


கவிதையின் இன்பம் தேடும் இளைஞன் என தன்னிலை விளக்கத்தோடு வெற்றுக்காகிதத்தில் தன் எண்ணக்குவியல்களால் கவிதை தேர் கட்டி அழகாக வலம் வரவிட்டிருக்கிறார் தோழர் தணிகை...

மழையை நான் ரசிப்பதற்கு
காரணம் கேட்கிறாய் நீ!
நான் மழையை விட

அதில் நனையும் உன்னை

ரசிப்பதற்கு ஆயிரம் காரணங்கள்

சொல்லுவேன் என தெரிந்தே


தணிகையின் கவிதைகள் முழுதும் மெல்லிய குறும்பு சீரான புன்னகையோடு பயணிக்கிறது...

சத்தம் போடாமலிருந்தால்
முத்தம் கிடைக்குமென்கிறாய்
முத்தம் கொடுத்தாலே
சத்தம் வராதென்கிறேன் நான்!

அழகான குறுப்புகளோடு காதல் மட்டும் அல்லாத பல அருமையான கவிதைகளோடு கொஞ்சிக்கொண்டிருக்கிறது தோழரின் தளம்...

மழையை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா....? பட்டுத்தெறிக்கும் முதல் துளி கிளர்த்தும் மண் வாசனை போல தோழர் சார்லஸ் ஆண்டனி யின் தளம் எங்கும் கவிதைவாசனை...

நீ பூ கட்ட
போகிறேன் என்றாய்
நான் அடுக்கிக் கொடுக்கிறேன்
என்றமர்ந்தேன்
காதல் மாலை கட்டி
நமக்குச் சூடியது

என அழகான காதல் மாலை சூட்டிய மழைக்காதலன் தன் கவிதைச் சாரலால்
நட்பின் அழகிய பக்கங்களையும் மிக அழகான நனைத்திருக்கிறார்

நீ நீயாகவும்
நான் நானாகவும்
சுயம் இழக்காமல்
இருக்கமுடிவது
நட்பில் மட்டும் தான்


மழையை காதலிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தான் பெற்ற இன்பத்தை
அனைவருக்கும் மிக எளிய வார்த்தைகளில் கவிதையாக பொழிந்து
தளம் நுழையும் அனைவரையும் இதமான சாரலில் நனையவிட்டிருக்கிறார்
இந்த மழையின் காதலன்...


அழகான கவிதைகளால் இதயம் களவாடும் கவிஞர்கள் மேன் மேலும்
பல இதயங்களை தங்கள் வரிகளால் தாலாட்ட வாழ்த்துக்கள்....


மேலும் வாசிக்க...

Thursday, November 6, 2008

தொலைந்த‌போது....

பெண்மை என்றாலே மென்மை... நேர்த்தி... அன்பு... பாசம் .. நேசம்...
காதல்... என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது... பெண்ணின் மனது மட்டும் ஆழம் இல்லை... அவளின் முடிவுறா நேசமும் தான்... நிராகரிப்பும்... நிராகரிப்பின் வலிகளும்... நிராகரிப்பின் கோபமும்... நிராகரிப்பின் ஏக்கமும் நம் பெண் கவிஞர்களின் கவிதைகளில் நீக்கமற பூத்துக்கிடக்கின்றன்... தடமெங்கும் கொட்டிக்கிடக்கும் பூக்களிடையே கூடப் பூத்துக் கிடக்கும் முட்கள் போலே ஆங்காங்கே வார்த்தை அம்புகள் இதமாக தைக்கின்றன வாசிக்கும் இதயத்தை...

தோழி இனியவளின் வலையெங்கும் வலிகளின் வீச்சு அதிகமாகத் தென்படுகிறது. இவரின் தளத்தை முதலில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள்... காதலை... காதல் தரும் வலிகளைக் கூட மிக அழகான வார்த்தைகளால் எளிய தமிழில் மிக அழகாக படைத்துள்ளார்...

நட்பாய் என்னில் அமர்ந்து
காதலாய் என்னில் உறங்கி

இன்று கானலான
எனது
நாட்குறிப்பின்
நனைந்து போன பக்கங்கள்
கண்ணீரில்....


என ஆரம்பித்து இவர் படைத்துள்ள கவிதைகள் சுகமான சோகம்...

ஏராளமான கோபங்களோடும் வலிகளோடும் வரிகளை பிரசவித்திருக்கும் தோழியின் கவிதைகள் என்னதான் கோபம் இருந்தாலும் பெண்மைக்கே உரிய தாய்மையோடு தன் காதலனுக்கு வழங்கியிருக்கும் வாழ்த்து தண்டனை மிக அழகு...

எங்கிருந்தாலும் உந்தன்
இந்நாள்
காதலையாவது நீ
நம்பிக்கையோடு எதிர்கொண்டு
நலமாக வாழ ...

இன்றும் வேண்டுகிறேன்

இறைவனிடம் ....

இனியவளாய் !!!.....தோழி மேகாவின் தளம் நுழைத்தாலே பசுமை சோலைக்குள் விழுந்தது போல தளமெங்கும் அன்பின் வாசனை.... மழைபெய்த வீதியை நனைத்துவிட்டுப் போகும் இளங்சூட்டுச் சூரியன் போலே அழகான வரிகளுக்குள் மெலிதான சோகங்களை மென்மையாக மலரவிட்டு இருக்கிறார்...

நட்சத்திரங்கள் எரிந்த போன இரவிலும்
நிலாக்கள் மரிந்து போன அறையிலும்

உன்னோடு நான் மட்டும் பேசிக்கொள்ள

இருட்டு பிரசவத்தில்

இதயத்தில் ஈன்றெடுக்கிறேன்

எல்லாம் கடந்த பின்னும்

விரும்பியே கொன்ற பின்னும்

புதுப்பித்து புதுப்பித்து
என்னுள்
புதைத்து வைக்கிறேன்
நேசம் கொள்ள நாளெல்லாம்


நிலாக்கள் மரித்துபோன அறையில் பிரசவிக்கப்பட்ட இதயத்தின் வரிகள் அழகான வலிகள்...


குடையிருந்தும் நனைவதாகச் சொல்லிவிட்டு தளத்தில் நுழையும் நம்மையும் சேர்த்து தன் இதமான கவிதை வரிகளால் நனையவிட்டு மழையில் நனையும் இன்பம் காட்டும் தோழி லக்ஷ்மி சாஹம்பரியின் நிலாக்காலக் கவிதைகள்....


அறிவிப்பற்ற மழையாய்
நீ என்னை
நனைக்கத்
தொடங்கிய பொழுதில்

உனக்கான தாகம் வற்றத் துவங்கி

உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது

உன்னைகாட்டிலும் போலியானது

என் காதலை கொழுத்து வளரவிட்ட

உன்னைபற்றியதான என் அனுமானங்கள்

என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..


சாதரண வார்த்தைகள்தான்.. கோர்த்திருக்கும் விதத்தில் மிக அழகான மாலையாய் மீண்டும் மீண்டும் சூடிக்கொள்ளத்தோன்றுகிற‌து... சூடியபின் கனத்துபோகிறது வாசித்த மனதும்...

பிரிவின் வலி உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்... வலிகளையும் சுகமாக ஏற்றுக்கொள்வது பெண்மைக்கே உரிய உயரிய குணம் என்பதை தோழி மது வின் தளம் விளைந்த அழகான கவி வரிகள் உணர்த்துகின்றன...

அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின்
பதிவுகள்
அப்படியே
தலைகீழாக

துக்கத்தை
தருகின்றன ?

என சாதாரணமாக கேட்டுவிட்டுச் செல்லும் வரிகளில் காதலின் ரணம் ஆழமாக உணரப்படுகிறது...

ல்லையற்று குவியும்
உன் நினைவு தரும்
கனவுகளுக்குள்
என்னை நான்
தொலைக்கு முன்
உன் நினைவுகளை
தயவு செய்து
வெளியேற சொல்!

இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா..
மன்னித்துவிடு இனியும்
இரங்காதாம் என் இதயம் ..
அட இன்னுமா போகவில்லை
...
சீக்கிரம்..!!


இதைவிட பிரிவின் வலியை மிக அழகாக மென்மையாக சொல்லமுடியுமா..? ஒரு தாய் தன் குழந்தையை செல்லமாக‌ அதட்டுவதுபோல மிக மென்மையாக எழுதியிருக்கிறார்...

இதமான சாரலில் நனைய ஆசையா..? வாருங்கள் தோழி நாணலின் தளத்திற்கு... வேகமாக‌ நடக்க வேண்டாம்... மழைநாளில் நாணல்கள் தழுவ சோலையில் நடப்பதைப் போன்ற‌ உணர்வைத்தரும் இதமாக வரிகள் இவர் தளம் நெடுகிலும்... மெதுவாக ரசித்து நனையுங்கள்...

மழைக்கு மறியல் செய்து
குடையோடு
செல்லும் பலர்
எனை
பார்த்தனர் பரிதாபமாக..
பெருமிதத்துடன்
சொல்லிக் கொண்டேன்
நான் நனைவது

மழையில் அல்ல
உன் நினைவில்..என்னதான் அதட்டினாலும் அடங்காது மீண்டும் மீண்டும் கரையை முத்தமிட்டு முத்தமிட்டுத் தப்பி ஓடும் அலைகள் போலே அடங்கமாட்டாமல் மீண்டும் மீண்டும் வரும் காதல் நினைவுகளை அதட்டாமல் மிக அழகாக அரவணைத்து செல்லும் வரிகள்... மிக ரசனையோடு எழுதியிருக்கிறார்...


வலிகளான வரிகளையும் வளமையாக தந்திருக்கும் கவிஞர்கள் மேன்மேலும் கவிமழையில் அனைவரையும் இதமாக நனையவைக்க வாழ்த்துகள்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது