07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 30, 2013

வெற்றிவேல், கூடல் பாலாவுக்கு ஆசிரியர் பொறுப்பை அளிக்கிறார்!


வணக்கம் வலை நண்பர்களே,

 இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த வெற்றிவேல்" அவர்கள் தமது பணியை மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும், மிகச் சிறப்பாக முடித்துள்ளார். 

இவர் பொறுப்பேற்றிருந்த வாரத்தில், வணக்கத்துடன் வெற்றிவேல்..., நான் வாசிப்பவர்கள்..., நாங்கள் ங், ஞ், ண், ந், ம், ன் படித்த தமிழர்கள்......, அவள் கடைக்கண் பார்வையில் விண்மீனுக்கும் வலை வீசுவோ... , 5-ஆவது நாளைத் தொட்டுட்டேன்.., கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மருத்துவம...,விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.... ஆகிய தலைப்புகளில் பதிவர்களை அறிமுகம் செய்து சுமார் 150 மறுமொழிகளைப் பெற்று மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு மகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் (01-07-2013) துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க கூடல் பாலா என்ற வலைப்பூவை எழுதி வரும் நண்பர் N. பால கணேசன் அவர்களை அழைக்கின்றேன். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் வசித்து வரும் நண்பரைப் பற்றி சொல்வதென்றால், இளங்கலை இயற்பியல் கல்வி முடித்து, தற்போது அனிமேஷன் துறையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். 

நண்பர் பாலாவை "வருக.. வருக..." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் வெற்றிவேல்....
நல்வாழ்த்துகள் பால கணேசன்.....

ப்ரியமுடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....

மேலும் வாசிக்க...

விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்....

வணக்கம்.

கடந்த இரண்டு பதிவுகளாகவே என்னால் நான் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக எழுத இயலவில்லை. வேலைப்பளு அதிகமாகி விட்டமையாலும், நேரமின்மையாலும் இன்று கூட என்னால் காலையில் பதிவு எழுத இயலவில்லை. கடந்த கடைசி இரண்டு பதிவுகளும் ஏதுமே எழுதாமல் இருப்பதற்குப்பதில் முடிந்தவரை எழுதலாம் என்று நேரம் கிடைக்கும் பொது எழுதினேன். ஆதலால் தான் அப்பதிவுகளை நான் நினைத்தது போல் எழுத இயலவில்லை. இயலாமைக்கு வருந்துகிறேன். மருத்துவம், தொழில்நுட்பம், அறிவியல், சிறு கதை என பல்வேறு தலைப்புகளில் எழுதலாம் என திட்டமிட்டுருந்தேன். கடந்த கடைசி சில நாட்களில் வந்துவிட்ட திடீர் வேலைகளால் என்னால் நேரம் ஒதுக்க இயலவில்லை. இந்த அழகான வாய்ப்பளித்த வலைசரம் பொறுப்பாசிரியர் சீனா அய்யா அவர்களுக்கும், என்னைப் பின் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிளித்து என்னை உற்ச்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்....

வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...
மேலும் வாசிக்க...

Saturday, June 29, 2013

கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மருத்துவம்- எல்லாம்

வணக்கத்துடன் வெற்றிவேல்...


சிறந்த எழுத்தாளர், பதிவுலக நண்பர்களை சொந்தமே என்று மிகவும் அன்பாக அழைப்பவர். நீண்ட பெரும் இடைவெளிக்குப் பின் வந்துள்ளார், அவருக்கு நம் அன்பான வரவேற்ப்பையும், ஆதரவையும் அளிப்போம். காற்றுக் காதலே கவிதை, காட்சிப்பிழைகள், விடைகேட்டு வருகிறேன் வாசக் திறவுங்கள் இவையெல்லாம் இவரது சிறந்த எழுத்துக்கு உதாரணங்கள்.... வாழ்த்துவோம்.

௨) சிறுவர் உலகம்- சோபியா ஆண்டன்

இவர் ஓர் ஆசிரியை, இவரது பதிவுகளிலிருந்து இவர்களின் மாணவர்களை இவர் எவ்வளவு அன்பாக அக்கறையாக சொல்லிக்கொடுக்கிறார் என்பது புரியும். சூழலை அறிதலும் உடற் பயிற்ச்சியும்விளையாட்டு மைதானம் போன்ற பதிவுகள் அனைத்தும் உதாரங்கள் தான். இவர் இணைய பதிவுலகத்திற்கு புதியவர். இவரை வரவேற்று நம் அன்பையும், வாழ்த்துகளையும் அறிவிப்போம்.


இவர் டேலி (Tally) மென்பொருளை இவர் தளத்தில் மிகவும் எளிமையாக அழகாக சொல்லிக்கொடுக்கிறார். படித்து, பகிர்ந்து பயன் அடையுங்கள். புது வருடமும் புது கணக்கும்30 நாட்களில் டாலி, டெலி ஷாப்பிங் பதிவுகள் நிச்சயம் அனைவருக்கும் பயன்படக்கூடியவை.


தொடர்ந்து பொன் முட்டையிடும் வாத்து போல இவர் தினம் நான்கைந்து பதிவுகளை போட்டுக்கொண்டே இருப்பார். எப்படித்தான் இவரால் இவ்வளவு வேகமாக சலிக்காமல் எழுத முடிகிறதோ தெரியவில்லை. வியப்புதான். தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை அவசியம். அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. பயன் பெறுங்கள்.

௫) COUNSEL FOR ANY -ஷண்முக வேல்.

மருத்துவம், மன நல சந்தேகங்கள் பற்றிய பல பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். உணர்ச்சிகளை வெளியே காட்டுங்கள்,  எய்ட்ஸ் தெரிந்தும் தெரியாததும் என்பன உதாரங்கள். 


இவர் தளத்தில் அனைத்தையும் பற்றியும் எழுதுகிறார். உங்கள் குழந்தையை வளர்க்காதீர்கள், வளர விடுங்கள், ஆண்களே உஷார், சாம்சங் குறுக்கு விசைகள் என பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி மிகவும் அழகாகவே பேசுகிறார். அவருக்கு நமது வாழ்த்துகள்.

௭) ஹ ஹா - ஹாஸ்யம் 

நகைச்சுவை பதிவுகள் எழுதுபவர், மிகவும் கருத்தாக பேசுவார். தமிழனுக்கு கணிதம் வராதா?வெட்கப் படாதே சகோதரி இவை உதாரணங்கள் தான். அப்புறம் ஒலிம்பிக்கில் சொதப்புவது எப்படி. அவருக்கு நம் வாழ்த்துகள் தெரிவிப்போம்.


இவரது கவிதைகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். உதாரணம் முதிர்கன்னி மற்றும் இவரது காதல் கவிதைகளை படித்துப் பாருங்கள் சிறப்பானதாக இருக்கும்.


தாய்மை பற்றி பேசும் ஜன்னலோரத்து மழை, அழகான என் தோழிக்கு கவிதை உதாரணங்கள். இவரது கவிதைகள் தனி நடையில் மிளிர்ந்து விளங்கும். படித்துப் பாருங்கள்...


இவரது பதிவுகள் அமெரிக்க முக்கிய வழக்குகள் பற்றி நிறைய குறிப்பிடுகிறார், ஒற்றை குழந்தை ஆய்வு அனைவரும் பார்க்க வேண்டிய பதிவுகள். பாராட்டுகள்...

அனைவருக்கும், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்...

வெற்றிவேல் 
சாளையக்குறிச்சி...

மேலும் வாசிக்க...

Friday, June 28, 2013

5-ஆவது நாளைத் தொட்டுட்டேன்....

வணக்கம்...

இவது பெயர் அஷ்ரப். திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத பல தகவல்களை   திருவள்ளுவர் பற்றி அறியாத தகவல் என்று புது கோணத்தில் குறிப்பிடுகிறார். பறக்கும் விமானத்தை முதன் முதலில் யார் கண்டுபிடித்தார், அவர்கள் ரிக் வேதம் கொண்டு இயற்றிய விமானத்தை படங்கள் மூலம் ஆதாரத்துடன் மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில் என்ற பதிவில் விளக்குறார் இந்த நண்பர்.  தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி தாய்ப்பாலை தவிர்க்காதீர்கள் என்ற பதிவில் குறிப்பிடுகிறார். மேலும் இவர் தனது பதிவில் பெண்கள் ஏன் காதலை ஏற்க்க மறுக்கின்றனர் என்பது பற்றியும் அழகாக குறிப்பிட்டுள்ளார். 

இவர் விமரிசனம்- காவிரி மைந்தன் என்ற அழகான பெயரில் எழுதுகிறார். தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் என்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், பார்த்தது ஷாக் ஆகிட்டேன். நீங்களும் பாருங்கள். சிவனையே சாய வைத்த சிவனின் மனைவி என்று உத்ராகன்ட் பேரழிவு பற்றி சில படங்களுடன் குறிப்பிட்டுள்ளார். 

உங்களுக்காக வலைப்பூவில் எழுதும் இவர் ஏராளமான மருத்துவ பதிவுகளை வெளியிட்டுள்ளார். குழந்தைகள் தேடும் தேடு பொறி இயந்திரம் பற்றி மிக அழகாக கூறுகிறார். இவர் குடு குடு மத்திய அமைச்சரவை முதல் சேக்கிழார் குருபூஜை வரை பேசுகிறார். மேலும் இவர் எழுதியுள்ள வைரமனியின் வெட்டியாள் வேலை பற்றி படிக்கும் பொது மனம் வெதும்புகிறது.

அடுத்து இவர் பெயர் ராஜ முகுந்தன், இவர் தளம் வல்வையூரான். அழகான ஹைக்கூக்கள் எழுதுவதில் வல்லவர். இவர் எழுதிய தித்திக்கும் வெளிநாடு என்ற கவிதையை படியுங்கள். அவர் மகன் ஏழு வயது குட்டி வல்வையூரான் எழுதிய அழகு கவிதையையும் படியுங்கள்... சொக்கிப்போவீர்கள்....

அடுத்த பதிவு சிறிய பறவை. சம்சாரம் அது மின்சாரம் பதிவை படிங்க. மின்சாரம் பற்றி நல்லா சொல்லிருப்பாரு. அடுத்து 2030ல் மணமகளுக்கு என்ன செய்யப் போறோம் பதிவப் பாருங்க. அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

ஆனால் இவரை கடந்த இரண்டு வருடங்களாக காணவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த பதிவு அம்மாக்களின் பகிர்வுகள். அனைத்து குழந்தை வளர்ப்பவர்களும் படிக்க வேண்டியது. இவர் குழந்தைகள் பற்றி நிறைய பதிவுகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் குழந்தைகளின் மொழி கற்கும் திறன். அவசியம் அனைத்து பெற்றோர்களும் பின் தொடர வேண்டிய வலைப்பூ.

அடுத்த பதிவர் ஆகாய நதி. இவர் தன மகன் பொழிலன் பற்றி அழகா தன்னோட தளம் முழுக்க சொல்றாங்க. படிச்சி பாருங்க... அம்மா உன் வயிற்ருக்குள்ள... பதிவ படிங்க, குழந்தை எவ்ளோ புத்திசாலித்தனமா கேட்ட கேள்விய அசால்டா சமாளிசிருப்பாங்க!

வலைதளத்தின் பெயர் சித்திரன். குழந்தைகள் எதற்க்காக என்ற பதிவின் மூலம் குழந்தைகள் விருப்பம் பற்றி அவர் எழுதிய பதிவு சிறப்பாக இருக்கிறது.

அடுத்த பதிவு, மழைச்சாரல்.இவரின் அமிலம் தொட்ட மலர்கள், அம்மாவிற்காய் கவிதைகள் சிறப்பாக இருக்கும்...

என்னுயிரே. இவரின் தளம் முழுக்க காதல் கவிதையாய் சிதறிக்கிடக்கிறது, படித்துப் பகிருங்கள்...

அடுத்த வலைப்பூ எனக்குள் ஒருவன். இவரின் ஆடிப்பெருக்கு அரை குடத்தில் ஒரு உதாரணம். 


கடந்த வலைச்சர ஆசிரியர் ஆசியா உமர் அவர்களுக்கு காப்பி, டீ போட்டுக கொடுத்தது போல எனக்கு யாரும் காப்பி போட்டுகொடுக்காததால் இன்றைய பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்...

நன்றி, வணக்கம்....

வெற்றிவேல்,
சாளையக்குறிச்சி...மேலும் வாசிக்க...

Thursday, June 27, 2013

அவள் கடைக்கண் பார்வையில் விண்மீனுக்கும் வலை வீசுவோர்!!!

வணக்கம்...

இவர்கள் எழுத்துகளே இவர்களைப் பற்றி கூறும், ஆதலால் நான் எந்த அறிமுகமும் இவர்களைப் பற்றி கூற முற்ப்படவில்லை. அவர்களின் இணைப்பை கொடுத்துள்ளேன், படித்து கருத்துகளைக் கூறுங்கள். நாளை சந்திக்கலாம். வழக்கம் போல முதல் கவிதை என்னோடது...மெழுகு தன்னை 
உருக்கி 
ஒளியூட்டுவது போல்

என்னை உருக்கி
உன்னைக் 
காதலிக்கும் 
என் மனம்...

-வெற்றிவேல்
சாளையக்குறிச்சிஅடிக்கடி உன் கை கடிகாரத்தில் 
நேரத்தைப் பார்க்காதே, 
நீ பார்க்கிறாய் என்கின்ற சந்தோஷத்தில் 
என்னைப் போன்று அதுவும் 
ஸ்தம்பித்து விடப் போகிறது!என் காதலி 
உன்னிடம் வெதும்பியே வந்தேன்
சூரியனாய் 
என்னை சுட்டெரித்துச் செல்கிறாய்...க‌ட‌ற்க‌ரை ம‌ண‌ல்
அந்தி வான‌ம்
ஏங்கும் அலை
ஒழிந்த‌ சூரிய‌ன்
நீ நான் காத‌ல்!!!

பின் க‌விதைக‌ளாய்
என்ன‌ சொல்வ‌து
நீ நான் நாம் என்ற‌
காத‌லை த‌விற‌!!!இதயத்தின் நீரெல்லாம் 
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடிமனமே, அவனை மறப்போம்
நீயும் நானும் இன்றிரவே!
நீ அவன் வெம்மையை மற
நான் அவன் ஒளியை மறப்பேன்

நீ முடித்ததும் எனக்கு சொல்
எனவே என் எண்ணங்கள் மங்கும்
சீக்கிரம் ! நீ தாமதம் செய்தால்
அதுவரை மனதில் அவன் நினைவுகள் தங்கும்!
உன்னிடம் சொல்லலாமல்
உறைந்து போனது 
என் காதல் மட்டுமல்ல
என் உயிரும் தான்....
எனக்காக‌
கவிதை
எழுதிக்கொடு
என்று கேட்டதும்
அழகிய
கவிதைகளை
எழுதி விட்டு
சென்றன‌
உன் உதடுகள்நான் சும்மா இருந்தாலும்
உன் காதல் திசையை நோக்கி
நடக்க செய்யும் என் கால்களின்
அனிச்சை செயலை
என்னவென்று சொல்வது?
உன் இதயத்தை கேட்டு பார் ஒவவொரு துடிப்புக்கும்
ஒரு அர்த்தம் சொல்லும் ஆனால்
என் இதயத்தை கேட்டு பார் துடிப்பின் அர்த்தமே
நீ தான் என்று சொல்லும்....கோபத்தால்
என் இதயத்தை
துண்டு துண்டாக்குகிறாய் !

முத்தத்தால்
காந்தம் போல் 
சிதறிய இதயத்தை
சேர்க்கிறாய் !
பகலில் பெய்யும் மழையை
பிடிக்காததற்கு
பலருக்கு
பல காரணம் இருக்கலாம்
எனக்கு ஒரே காரணம் தான்
உன்னை பார்க்க முடியாமல் போகும்
ஆதலால்….


எனது விழிக்கு 'ஒளி'யை...
உனது புன்னகையில் இருந்தும்...

எனது வாழ்க்கைக்கு 'வழி'யை
உனது கண்களில் இருந்தும்
தேடிக் கொண்டேன்.கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து 
தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப்பார்த்துதான் 
கவிதையெழுதுகிறேன் !நீ
ஊருக்குச்சென்ற‌
நாளொன்றில்
உனக்கான முத்தங்கள் 
அனைத்தையும் வாங்கி
சிரித்துக்கொன்டிருக்கிறது !
வீட்டிலிருக்கும்
உன் புகைப்படம்!


இதய ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்த்தைக்காக
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றன சாபங்கள்....


அன்புடன்...

வெற்றிவேல் 
சாளையக்குறிச்சி...

மேலும் வாசிக்க...

Wednesday, June 26, 2013

நாங்கள் ங், ஞ், ண், ந், ம், ன் படித்த தமிழர்கள்...

வணக்கத்துடன் வெற்றிவேல்,

நண்பர்கள் அனைவரையும் மூன்றாம் நாளில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. நேற்று நண்பர்கள் அனைவரும் பின்னூட்டத்தில் வாழ்த்தியது எனக்கு பெரும் ஊக்கமாய் இருக்கிறது. அண்ணன் பால கணேஷ் அவர்கள் சில பிழைகளை சுட்டிக்காட்டினார்,  அரசன் அவர்கள் எழுத்துப் பிழை இருப்பதை கூறினார். தெரிந்த பிழைகளை சரி செய்தி விட்டேன் என நம்புகிறேன். கணினியில் பார்த்துக்கொண்டே தட்டச்சு செய்வதனால் சில பிழைகளை கவனிக்க இயலாமல் போகிறது. அதற்க்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த குழந்தை ஏதேனும் சொற் பிழை செய்தால் பொறுத்தருளும்படி கேட்டுக்கொள்கிறேன்...

பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
    பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் கரையும்போதும்
    ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்...

------எனக்கு பிடித்த பாடல் வரிகள்....

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு வருத்தம் இருந்தது. தமிழ் இலக்கணத்தில் இளங்கோவடிகள் கூறிய இலக்கணம் யாவும் அனைவராலும் மறக்கப்பட்டு விட்டது என்பதுதான், ஆனால் இந்த தமிழடிப் பொடியான் அய்யா கவிஞர் கி.பாரதிதாசனின் தளத்திற்கு சென்ற பின் எனக்கு அந்த கவலை தீர்ந்தது. எதுகை, மோனை, இயைபு என்று இளங்கோ கூறிய அனைத்து யாப்பையும் மிக அழகாக பயன்படுத்துபவர். அவரது சில பதிவுகளின் இணைப்பை கொடுத்துள்ளேன் படியுங்களேன். காதல் தேன் வடியும் காதல் ஆயிரம் பாமாலை, காதல் கவிதைகளின் தொகுப்பு

அடுத்து இவரின் பெயர் குமரன் அவர்கள், மதுரையைச் சார்ந்த இவர் தற்பொழுது அமெரிக்காவில் வசித்துக்கொண்டு இருக்கிறார். இவரின் தளத்தில் தமிழ், தமிழ் இலக்கியம் சார்ந்த பதிவுகள் ஏராளம். படித்து பயன் பெறவும். இவர் ராமனே ஒரு திராவிடன் தான் என்று புது குண்டை எடுத்து வீசுகிறார், படித்து பாருங்கள்.  தமிழிற்கு இல்லாத ஒரு தகுதி (படித்து நாம் அனைவரும் இதற்க்கு வெட்கப் பட வேண்டும்), பத்துப்பாட்டு மீட்கப்பட்ட கதை, உடுக்கை  இழந்தவன் கை (பாரி வள்ளலின் கதை) இதில் சுமார் 17 பதிவுகள் வள்ளல் பாரியைப் பற்றி எழுதியிருக்கிறார். அனைவரும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பல நூல்கள், பல சங்க இலக்கிய பாடல்களை மேற்கோள் காட்டி சிறப்பாக எழுதியுள்ளார். கண்டிப்பாக இவரது உழைப்பு இந்த பதிவில் தெரியும், அனைவரும் படித்து இன்பம் பெறுமாறு கேட்டுக்கொகிறேன்.... இவர் வள்ளுவன் எழுதிய இன்பத்துப்பால் பற்றி எழுதியுள்ளார் படியுங்கள், சொக்கிப்போவீர்கள் அவளது கடைக்கண் பார்வையில்.

இவரது பெயர் பிரபாகரன், இவரது தளம் பிரபாகரனின் தத்துபித்துவங்கள். அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் கடையேழு வள்ளல்களின் வரலாற்றை தேடும் ஓர் சிறந்த பணியை ஆரம்பித்துள்ளார். நமக்கு அனைவருக்கும் பாரி, அதியமான், ஓரி இன்னும் சிலரது வரலாறு மட்டுமே தெரியும் இவரின் ஆய்வுப் பணிக்கு நாம் நமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோமாக! இவர் முதலில் அதியமானின் வரலாறு பற்றி எழுதியுள்ளார். படித்து பாராட்டுங்கள்.

அடுத்து இவரின் பெயர் வவ்வால் (வேறு எந்த தகவல்களும் அறியப்பட இயலவில்லை.) இவர் எழுதிய வள்ளல் பாரி வேள் வரலாறு பற்றி படித்துப் பாருங்கள். பல அறியாத தகவல்களை வள்ளல் பாரி பற்றி அறிந்துகொள்ளலாம். 

இவரின் தளம் தமிழாசான் பதிவேடு. பெயர் அறிய இயலவில்லை. இவரது தளத்தின் வலது பக்கத்தைப் பாருங்கள் பல செய்திகளை சொல்லியிருப்பார். இவற்றின் தமிழ் பற்றிற்கு நாம் தலை வணங்க வேண்டும். மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு (காணொளி), புறநானூற்றில் தமிழர் வரலாறு, வடக்கிருத்தல், தமிழ் எழுத்துகள் பிறந்த கதை, தமிழ் அறிவியல் (காணொளி). 

தமிழ் இலக்கிய பாதையில் சிறு குறிப்புகள் என்ற தளத்தில் சில பதிவுகளை எழுதி பின் கடந்த மூன்று வருடங்களாக இவரை காண இயலவில்லை. இலக்கியம் சார்ந்த பல செய்திகளை கூறியுள்ளார். 

நான்காயிரம் அமுதத் திரட்டு என்ற தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார். பதிவிட்டவர் பெயர் தமிழ் என்று வருகிறது. ஆனால் உண்மையான பெயர் அறியப்பட இயலவில்லை. இவர் தளத்தில் தமிழ் இலக்கிய (பக்திப் பாடல்கள்) பற்றி நிரம்பிக் கிடக்கிறது, படித்துப் பாருங்கள். இவரது பதிவுகள் அனைத்தும் மதம் சார்ந்ததல்ல தமிழ் சார்ந்தது என்று அவரே கூறியுள்ளார். 

இவரது பெயர் அருள் (கிரேஸ் என்பதைத்தான் அருள் என்று மாற்றி விட்டேன், மன்னிக்கவும்). தேன் மதுரத் தமிழ் என்ற தளத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறார். இவர் தளம் முழுதும் ஆத்திச்சூடி, ஐங்குறு நூறு, குறுந்தொகை என சங்க இலக்கியங்களை வாரி இறைத்துள்ளார் நெல் மணிகளாய். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பாடல்கள். 

இவரின் பெயர் T.V. ராதாகிருஷ்ணன். இவரது தளத்தின் பெயர் மகாபாரதம். ஒரு குழு செய்ய வேண்டிய வேலையை இவர் மட்டுமே தனியாளாக செய்துள்ளார் என்பதை நினைக்கும் போது மனம் பிரமிப்படைகிறது. இவர் மகாபாரதத்தை தனியாளாய் அழகுத் தமிழில் எளிய உரைநடையில் மொழி பெயர்த்துள்ளார். அனைவரும் பாராட்டப்பட வேண்டிய செயல். இவருக்கு நாம் நமது வாழ்த்துகளை பாராட்டுகளுடன் தெரிவித்துக்கொள்வோம்.

இவரது தளத்தின் பெயர் சங்கம் தமிழ் மன்னர்கள். பெயர் அறிய இயலவில்லை. இவர் சங்ககால வள்ளல்கள், பல தமிழ் மன்னர்கள் மற்றும் புலவர்களைப் பற்றி விரிவாக தமிழ் இலக்கியத்தின் துணை கொண்டு எழுதியுள்ளார். இவரும் பாராட்டப் பட வேண்டிய பதிவர். இவரது தளத்திலே ஆரம்பத்தில் அனைத்து பதிவுகளின் தலைப்புகளும் வந்துவிடுவதால் தனிப்பட்ட பதிவுகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

இவரது பெயர் அம்பாள் அடியாள். இயற்பெயர் தெரியவில்லை (ரூபிகா என்று இருக்கும் என மதிப்பிடுகிறேன்). இவர் பாக்கள் புனைவதில் வல்லவர். இவரது பாக்கள் அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்க இலக்கியம் சார்ந்த நடையிலே எழுதுவதில் வல்லவர். இவர் எழுதிய தமிழா தமிழா நீ என் தமிழால் தமிழ் பேசிட வா. அழகான பாடல்.


அம்மா மடியில் இருந்திருந்தால்
அகதி வாழ்க்கை எமக்கெதற்கு ?.......
இம்மாநிலத்தில் அனைத்தும் உண்டு
இருந்தும் தமிழ் போல் வருமா சொல்லு ?...

என இவர் வரிகளை படிக்கும் போது இவர் ஏக்கம், தமிழ் பற்று நமக்கு புரியும். இவருக்கு நமது பாராட்டுகளையும், நம் அன்புக்கரத்தையும் நீட்டுவோமே!!!

இவரது பெயர் பலராமன். இவர் தளத்தின் பெயர் எறுழ் வலி (அர்த்தம் தெரிந்தால் யாரேனும் கூறுங்கள்). இவர்  தமிழ் இலக்கணம் பற்றி இரு பதிவுகளாய் கூறுகிறார். மேலும் இவர் எழுதியிருக்கும் தமிழ் விளையாடுவோம் எனும் விளையாட்டையும் சென்று விளையாண்டு பாருங்கள்.இவரது பெயர் செழியன். இவர் தளத்தின் பெயர் செம்மொழி. இவர் எழுதிய தமிழ் மண் எடுப்போம் தமிழ் ஈழத்திலே என்ற கவிதையை படித்துப்பாருங்கள். சிறப்பாயிருக்கும்.

இவர் பெயர் ராஜேந்திரன், இவர் தளத்தின் பெயர் கிறுக்கல்கள்-௧௦௦. இவர் எழுதிய இப்படியும் ஓர் புத்தாண்டு என்ற பதிவைப் பாருங்கள். நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டியவற்றைப் பற்றி குறிப்பிடுகிறார்.

அடுத்து இவரின் பெயர் தமிழ் பிரியன். இவர் சில மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கிறார் என்பது இவர் இலக்கிய பதிவுகளை படித்தபோது அறிந்துகொண்டேன். இவர் பாரி நிஜ வள்ளலா? என்று கேட்டுள்ளார். கற்றவர்கள் பதில் கூறுங்கள். இவர் இலக்கியத்தில் இரண்டு என்ற பதிவையும் படித்துப் பாருங்கள்.

மறக்காமல் படித்து தங்கள் கருத்துகளை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்... நாளை சந்திப்போம். நேற்று நான் எழுதிய பொய்க்கும் நதிகள் என்ற கவிதையையும் அப்படியே படித்துவிட்டுச் செல்லுங்கள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

மேலும் வாசிக்க...

Tuesday, June 25, 2013

நான் வாசிப்பவர்கள்...

வணக்கம்...

நண்பர்களை இரண்டாம் நாளில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நேற்று எனக்கு பின்னூட்டமளித்து வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல.  நாளைய பதிவில் இருந்து புது பதிவர்களை பார்க்கலாம், அதற்கு முன் நான் விரும்பும் வலைத் தளங்கள். என் நண்பர்களின் தளங்கள் பற்றி ஒரு பார்வை பார்த்து விடுவது சாலச் சிறந்தது என நினைக்கிறேன்.

நாம் எல்லாம் நமது எட்டு வயதில் என்ன செய்திருப்போம், எனக்கு தெரிஞ்சி நான்லாம் கோலி, கபடி, பாரி'ன்னு விளையாண்டுகிட்டு இருந்திருப்பேன். அப்போதான் அ'ன்னா ஆ'வண்ணா கத்துகிட்டு இருப்போம், இவுங்க அப்பவே கவிதை எழுதற அளவுக்கு பழுத்துட்டாங்க அவுங்களோட எட்டு வயதிலேயே! நீங்களே படித்து பாருங்கள், அவரது எட்டு வயது கவிதையை. காதல் கள்வன், முத்தம் க/கு 2011, அவன் மற்றும் வித்தை கற்றவளின்  கனவு ஆகியவை மேலும் அவரின் படைப்பிற்கு .

இவர் வள்ளுவருக்கு பக்கத்துவீட்டுக் காரரு. ஏன்னா இவரது கவிதை நாலு வரிக்கு மேல இருக்காது, இந்த நாலு வரியிலேயே சொல்ல வந்ததை சிறப்பா சொல்லிடுவாரு,  இவரது தளம் இதுதாங்க! ரைசேரா அலை. ஒடம்பு பூரா அறிவு. இவர் எழுதுன லேட்டஸ்ட் ஹிட் இதுதாங்க! அவள் வெளியூர் சென்ற தருணங்களில் மற்றும் நீ வெளியூர் சென்ற தருணங்களில். இவரது மற்ற எனக்கு பிடித்த பதிவுகள் செம்மண் தேவதை, சினை மீனோன்றை.. 

இவர் தான் வலையுலக பின்னூட்டப் புயல், கருத்துரை வழங்கும் சிங்கம் யார் பதிவு போட்டாலும் முதன் முதலில் வாசித்து கருத்து வழங்குபவர் இவராகத்தான் இருப்பார். பதிவர்களை ஊக்குவிப்பதற்காகவே இவர் பெரும் நேரத்தை செலவழிக்கிறார். இவரது எழுத்தும் அழகானது, இடையிடையே குட்டிப் குட்டி பாடல்கள், கதை என்று இவரது பதிவுகள் கட்டம் கட்டமாக தனி விதமாக ஒளி வீசும்.. இவரது பதிவு. எனக்கு வலைப்பூ பற்றிய தொந்தரவுகள் வரும்போதெல்லாம் நான் இவரைத்தான் நாடுவேன், உடனே தீர்வு வந்துவிடும்.  காதல் காவியமானது, மனிதனின் மிகப்பெரிய எதிரி யார்? இவை சில உதாரணங்கள்.

கடந்த சில மாதங்களாக இவர் எங்கோ காணாமல் போய் விட்டார். இவரது தளம்- எத்தனம். இவர் எழுதிய ரைம்ஸ் வரலாற்றை படியுங்கள், சிரிப்பு வரும். இவர் சினிமா விமர்சனம் எழுதுவதில் ஆர்வம் உடையவர், அழகாகவும் கதை சொல்லுவார், சில இணைப்புகள். நீதானே என் பொன் வசந்தம், முகமூடி, பில்லா-2. உலகை ஆண்ட தமிழர்கள் இனம் பற்றி இவர் மிக அழகாக கூறுவார். படித்துப் பாருங்களேன், நம் தமிழ் இனம் பற்றி அறிந்துகொள்வோம் மேலும்.

இவரது இயற்ப்பெயர் இலக்குமணன். இவரது தளம் பெயர் சிகரம் பாரதி. இவரது புனைப்பெயரும் இதுவே. கவிதை எழுதுவதில் வல்லவர். மேலும் இவர் இணைய நாவல் எழுதுவதிலும் வல்லவர். இவர் எழுதிய கல்யாண வைபோகத்தை படியுங்களேன். ஆனால் நேரமின்மை காரணத்தால் இவரால் தொடர்ந்து எழுத இயலவில்லை என நினைக்கிறேன். விரைவில் இந்த கதையை முடிப்பார் என நினைக்கிறேன்.

அடுத்ததாக நண்பர் பெயர் அருண் பிரசாத். இவர் வரிக்குதிரை என்ற தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவர் இலங்கையில் வாழும் மலையக மக்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். அது புத்தகமாக மாறி சேமிக்கப்பட வேண்டிய ஒன்று. இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள், தமிழ் பற்றிய கட்டுரைகளையும் படியுங்கள். நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

அடுத்ததாக எங்கள் அரியலூர் மண்ணின் மைந்தர் திரு.கருணாக்கரசு அவர்களை பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகா வேண்டும், ஏனெனில் இவர்தான் அரசன் மற்றும் சத்திரியன் போன்றோரை வலைப்பூ பக்கத்திற்கு இழுத்தவர். எனக்கும் இவருக்கும் அறிமுகம் கிடையாது ஆனால் நான் இவரது கவிதை ரசிகன். சொல்லவரும் கவிதையை நான்கே வரிகளில் சொல்லிவிடுபவர். இவரது காதல் தின்றவன் கவிதைத் தொகுப்பை படித்துப் பாருங்கள். மனம் கொள்ளை கொள்ளும்.

தோழி எழில். இவர் வலைப்பூ பெயர் நிகழ்காலம். இவர் எப்போதுமே வாழ்க்கை அனுபவம் சார்ந்த பதிவுகள் எழுதுவதில் வல்லவர். இவரது பதிவுகள் அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் மற்றவர்களுக்கு உபயோகப் படும்படியாகவே இருக்கும் என்பதில் எனக்கு சிறு ஐயமும் இல்லை. சில பதிவுகள் காட்சிக்கு: அனில் பிள்ளை, பொறியியல் கலந்தாய்வு செல்வோர்களுக்கு, சில கவிதைகள், இவர் மாதம் ஒரு புத்தகத்தை அறிமுகப் படுத்துவார், அழகாக அப்புத்தகம் பற்றி தெளிவாக விமர்சனம் செயார்.

இளைய நிலாவில் எழுதிக்கொண்டிருக்கும் இளமதிதான் அடுத்தவர். இவரின் கவிதை வாசிப்பதற்கே தினமும் இவரது தளம் செல்வேன். அழகான கவிதையை எளிய நடையில் எழுதுவார். இவர் ஐம்பூதம் பற்றி எழுதிய கவிதையை படியுங்களேன். சிறப்பாக இருக்கும். தமிழே உயிரே, நம் வாழும் காலம் போன்ற பதிவுகள் அனைவரும் படிக்க வேண்டியவை. அடுத்து ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். இவர் க்விலிங் செய்வதில் வல்லவர்.

அடுத்து நம்ம சிட்டுக்குருவியைப் பற்றி பார்த்தேயாக வேண்டும். மன்னிக்கவும் இப்போ இவரோட பேர வாஸ்து படி ஆத்மா'ன்னு மாத்திகிட்டாராம். இவர் படம் போட்டு விளக்குரதுல ரொம்ப கெட்டிக்காறரு. சில உதாரங்களை பார்ப்போம். நிச்சயதார்த்தம் பண்ணப் போறீங்களா?, ஜாலியா ஜல்சா பண்ணி...., கருமை மேகமும், காதல் தோல்வியும், அடுத்து பாருங்க மாத்தியோசிப்பவர்களுக்கு சவால்'னு இவரு நம்ம மாத்தியோசி மணி மன்னிக்கவும் மாட்ஜியோஜ்ஜி மனி மனி (இதான் இப்போ ஸ்டைலாம்)யவே வம்புக்கு இழுக்குறாரு!

நண்பர் சீனி! கவிதைய சீனி(சர்க்கரை)யா எழுதுவாரு. பெண்ணினம், தேடலுடன் தேனீ, நினைவெல்லாம் ரத்தம், சுவாசமெல்லாம் மாற்றம் போன்ற தொடர் கவிதைத் தொகுப்புகள் அனைவரம் படிக்க வேண்டியது.

அடுத்து நம்ம மாத்தியோசீ மணி மன்னிக்கவும் மாட்ஜியோஜ்ஜி மனி மனி (இதான் ஸ்டைலாம்), காமெடி பதிவுகள் எழுதுவதில் வல்லவர். இப்போ கடந்த இரண்டு முறையா சீரியஸ் பதிவா போட்டு கலக்குறாரு... வானூர்தி பற்றி மிக அழகான பதிவை போட்டுக்கிட்டு இருக்காரு... அவனா நீஏறுதுங்க..., எறங்குதுங்க..... பாயுதுங்க.... பறக்குதுங்க....!! 

நம்ம சத்திரியன் இவர் மனவிழி என்ற தன வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது ஆலிங்கனாவை படியுங்கள், பலவற்றை இவர் சொல்லியிருப்பார். இவரது கவிதைத் தொகுப்பையும் வாசித்து விடுங்களேன்... காதல் தேன் சொட்டும்.

தளிர் சுரேஷ். இவர் புகைப்பட ஹைக்கூ எழுதுவதில் வல்லவர். 

அடுத்ததா நம்ம திடங்ங்கொண்டு போராடு சீனு. இவருக்கு திடீர்னு ஞானோதயம் வந்து பரிசுப்போட்டிலாம் அறிவிச்சிருக்காரு, அதனால இவருக்கு வாழ்த்துகளை சொல்லிடுவோம். இவருபோட்ட கடைசி ரெண்டு மொக்கைய அனைவரும் கண்டிப்பா படிக்கனும், மொக்கை 1, மொக்கை 2 (ஹி ஹி.. ஹா)

ஒரு திரு நங்கையா இவர் அழகா எழுதிகிட்டு இருக்கார். ஆயிஷா பரூக் இதுதான் இவரு தளம். புணர்ச்சி மகிழ்தல், பெண்மையை போற்றுவோம், உழவை காப்போம், போன்ற பதிவுகள் கண்டிப்பாக படிக்க வேண்டியது. ஆனால் இவரை கடந்த இரு மாதங்களாக காணவில்லை. யாராவது எந்த காவல் நிலையத்திலாவது புகார் அளியுங்களேன்!!!

யாரையும் விட்டுவிடவில்லை என்று நம்புகிறேன்... நாளை முதல் புது பதிவர்கள் பற்றி பேசலாம். இன்று ஜூட் விடறேன். அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்...

அன்புடன் வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
மேலும் வாசிக்க...

Monday, June 24, 2013

வணக்கத்துடன் வெற்றிவேல்...

வெற்றி'யின் வணக்கம்...

அன்பின் வலைச்சர மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். எதுவுமே தெரியாத (வாய்ல விரல வச்சாக்கூட கடிக்கத் தெரியாத, நம்பனும்!!!) இந்த 22 வயது குழந்தைய புடிச்சிகிட்டு வந்து எதை எதையோ சொல்லி என்னையும் ஆசிரியராக இருக்க ஒத்துக்க வச்சிட்டாங்க. ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மிகவும் தயக்கமாக இருந்தது உடனே நம்ம அடியாள், எங்கள் மண்ணின் மைந்தர் அரசன் அண்ணாவுக்கு போன போட்டு விஷயத்த சொன்னேன், உடனே அவுங்க வாழ்த்துகள் தம்பின்னு ரொம்பவும் சந்தோசப்பட்டாங்க... நானும் தயக்கத்துடன் ஒத்துக்கொண்டேன், இப்பெரும்பணியை எப்படியாவது மன நிறைவோடு முடித்துவிட வேண்டும். தங்கள் அனைவரின் ஆதரவோடும் வெற்றிகரமாக முடிப்பேன் என்று நம்புகிறேன்...

இது முதல் பதிவு, ஆதலால் நான் கண்டிப்பாக என்னைப் பற்றியும் என் அறிமுகத்திற்க்காகவும் இந்த முதல் பதிவை எழுத வேண்டுமாம். ஆதலால் நான் சொல்லப் போற பொய்யை அனைவரும் படித்து, கருத்துகளை  வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் (படிக்காம, கமென்ட் போடாம போறவங்க பிளாக் நாளைலேருந்து முடக்கிடடும்னு நம்ம விக்கிலீக் ஜூலியன் அசாஞ்சே'கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கேன், பார்த்துகோங்க. ஹ ஹா ஹா) அப்புறம் உங்க இஷ்டம்...

என் பெயர் வெற்றிவேல், அரியலூர் மாவட்டம் சாளையக்குறிச்சி தான் என் கிராமம். சிறு வயதிலேயே படிப்புடன் வயல், உழைப்பு, ஆடு, மாடு என்று வளர்ந்தவன். இன்றோ நான் ஒரு கெமிகல் என்ஜினீயர். மழை பொழியும் முன்னரே மழையுடன் மண் வாசனை இதயத்தை தொட்டுவிடும் கிராமத்தில் வளர்ந்தவன் இப்போது பல ராசயனங்களின் மூக்கைத் துளைக்கும் வாடையில் பிழைப்பைத் தேடிக்கொண்டிருப்பவன். கல்லூரியில் என் நண்பன் தான் எனக்கு பிளாக் பற்றி முதலில் கூறினான், ஆனால் அவன் ஆரம்பித்ததோடு சரி, காணாமல் போய் விட்டான். தமிழ் மீது கொண்ட ஆர்வம். என் தோழியின் சிறு சிறு உற்ச்சாகங்கள் என என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டது. ஒரு காலத்தில் அவளிடம் வாசித்துக் காட்டவே எழுதத் தொடங்கியது தான் இந்த பழக்கம், அவள் சென்ற இடம் இன்று தெரியவில்லை. அவள் பதித்துவிட்டுச் சென்ற இந்த தடத்தை மட்டும் நான் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்... நீங்கள் என்னைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த இணைப்பை சொடுக்குங்கள்.

எனக்கு பல பல சமயங்களில் ஆதரவாக, உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப் படுத்திய தோழி கவிச்சக்கரவர்த்தினி, கவிதாயினி ஹேமாவிற்கு நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

எனது ஆரம்ப கால கவிதைகளை என்னாலேயே மீண்டும் படிக்க இயலாது, ஆதலால் அதைப் பற்றி பார்க்க வேணாம். 

எப்போதுமே எனக்கு நான் இழந்துவிட்ட அந்த கிராமத்து வாழ்வின் மேல் எனக்கு ஒரு பொறாமையும், வருத்தமும் எப்போதுமே இருக்கச் செய்யும். அதை நினைத்து மனம் நொந்து எழுதிய கவிதைதான் தடம் மாறிய பொழுதுகள்.

என்னோட எதிர்கால நினைவுகள் பற்றி எழுதியவை: எதிர்கால நினைவுகள்

எங்க வீட்டுல ஒரு அழகான சிட்டுக்குருவி இருந்துச்சு, அத நெனச்சிகிட்டு எழுதுன கவிதைதான் எனக்கு மிகவும் பிடித்த் கவிதை... எந்தன் வீட்டுச் சிட்டே. பிறகு களவாடப் படும் கனவுகள், விட்டில் பூச்சியல்லடி நான், எந்தன் இறைவா இது நியாயமா போன்ற கவிதைகள் மிகவும் பிடிக்கும். 

எல்லாரும் தீபாவளிக்கு எதை நினைத்து கொண்டாடுவீங்க, நான் எப்படி, யாரை நெனச்சிகிட்டு இருந்தேன்னு தெரியனுமா அப்போ இதை படிங்க: இன்று எனக்கு தீபாவளி தானா! 

தமிழ் மீது எனக்கு எப்போதுமே தீராக் காதல் உண்டு ஆதாலால் சீரான இடைவெளியில் தமிழ் பற்றிய பதிவுகள் எழுதிக்கொண்டே இருப்பேன். அதில் உங்களுக்கு சில ஔவையாரையும் கிறங்கடித்த காதல் & பகுதி இரண்டு, தமிழிற்கு தி.மு.க செய்த துரோகம் மற்றும் ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா

அடுத்து சில அரசியல் பதிவுகளும் கார சாரமாக போட்டேன், எனக்கும் அரசியல் ஞானம் கொஞ்சம் உள்ளது என்பதால், பிசுபிசுத்த ஜனாதிபதி தேர்தல், அதிர்ச்சி தரும் ஜெயலலிதாவின் நடவடிக்கை என நீளும்.

தேடல் என்பது எனக்கு எப்போதுமே மிகவும் பிடிக்கும் அதிலும் நமக்குப் பிறகு என்ன என்பது பற்றிய தேடல்கள் மரணத்திற்குப் பின்னால், மரணத்திற்குப் பின்னால் மறு ஜென்மமா?, மனித மூளை பற்றிய அசாத்திய தகவல்கள், அசோகர் பற்றி நாம எல்லோருமே மரம் நட்டார், சாலை அமைத்தார் என்றுதான் படித்திருக்கிறோம் ஆனால் அவரது சுய ரூபம் பற்றி இந்த பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன். படித்துப் பாருங்களேன். அசோகர் வரலாற்றின் கரும்புள்ளி.

எல்லோரும் ஆட்படும் காதலாம் நானும் ஆட்பட்டு என்னை மறந்த காலங்கள் உண்டு அப்போது எழுதிய கவிதைகள் தான் உதிரும் நான், என் மறு ஜென்மக் கனவை இதில் வெளிப்படுத்தியுள்ளேன் படித்துச் சொல்லுங்களேன். மற்றுமோர் ஜென்மம் உண்டெனில்.

அடுத்து விநாயகர் எப்படி நம்ம தமிழ் நாட்டுக்கு வந்தாருங்கற கதை தெரியனுமா? இதை படிங்க முதல்ல. புள்ளையார் அதிர்ஷ்ட்டமும், தென்னகத்தில் அவர் வேரூன்றிய விதமும்...

என்னைப் பற்றிய புராணங்கள் போதுமென நினைக்கிறேன், இனி அடுத்த பதிவு முதல் பதிவுலக நண்பர்கள் பற்றி பேசலாம்...

எனக்கு இந்த வாய்ப்பளித்த அன்பின் சீனா அய்யா அவர்களுக்கும், அடுத்த ஒருவாரம் என்னைத் தொடரப்போகும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

அன்புடன் வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
மேலும் வாசிக்க...

Sunday, June 23, 2013

வெற்றி வேல் ஆசியா உமரிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஆசியா உமர் - அறிமுக மலர், கல்வி மலர், கதை மலர், டயட் மலர், அனுபவ மலர், கவிதை மலர், பல்சுவை மலர் என் பல்வேறு தலைப்புகளில் பதிவுகள் எழுதி,  தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                      : 0007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்       : 0211
அறிமுகப் படுத்திய பதிவுகள்          : 0227
பெற்ற மறுமொழிகள்                           : 0328
வருகை தந்தவர்கள்                             : 1302

பொறுப்பேற்பதற்கு முன்னர் மிகவும் தயங்கிய இவர் பொறுப்பேற்ற பின்னர் அருமையான பதிவுகளையும் அவற்றை எழுதிய பதிவர்களையும்  ஆர்வத்துடன் அறிமுகப் படுத்தி தன் கடமையினைச் சரிவர செய்து ஏற்ற பொறுப்பினை பாராட்டத்தக்க முறையில் செய்து முடித்த மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறார். 

ஆசியா உமரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச் சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் வெற்றிவேல்.  

வெற்றி வேல்  B.tech-Petrochemical Technology - அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து விட்டு- இப்போது சென்னை உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்-  படித்ததும் பணீ புரிவதும் பொறியியல் படிப்பினைச் சேர்ந்த வேதியியல் துறையானாலும், தமிழ் மீது கொண்ட காதலால் இங்கும் எழுதிக்கொண்டு இருக்கிறார்.  கல்லூரியில் படிக்கும் காலத்தில் விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக பணியாற்றியிருக்கிறார். 

இவர் அரியலூர் மாவட்டத்தினைச் சார்ந்த சாளையக்குறிச்சியினைச்  சொந்த ஊராகக் கொண்டவர்.  இவர் தன்னைப் பற்றிக் கூறும் பொழுது, எப்போதுமே தழுவிக் கொண்டிருக்கும் தென்றலிலும், பூக்கள் மணம், கண்களுக்கு விருந்தாய் பச்சைப் பசேல் என்ற பசுமை என்று வாழ்ந்த இவர் தான்,  இன்று நகரத்து புழுதியிலும், அதன் போக்குவரத்து சத்தத்திலும் தானாக உழன்று கொண்டிருக்கும் ஓர் கிராம நாடோடி யாக வாழ்கிறார் எனக் குறிப்பிடுகிறார்.

அருமை நண்பன் வெற்றிவேலினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரம் குழுவினர் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் ஆசியா உமர்

நல்வாழ்த்துகள் வற்றிவேல் 

நட்புடன் சீனா
வலைச்சர பொறுப்பாசிரியர். மேலும் வாசிக்க...

பல்சுவை மலர்

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

வலைச்சரத்தின்  ஒரு வார ஆசிரியப்பணியில்  இறுதி நாளான இன்று பல சுவையான பகிர்வுகளைத் தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கதம்ப மலர், அறுசுவை மலர் என்ற தலைப்புகளில் பார்க்கலாம்.

கோலங்கள் சாருஸ்ரீ பகிர்ந்த தினமும், அவருக்கு படித்ததில் பிடித்ததாம். நமக்கும் நிச்சயம் பிடிக்கும். வாசித்து பாருங்க.

ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் வலையுலகில் அற்புதமான பணி செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே!
புதிய பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன ? என்ற அவரின்  பகிர்வு, நிச்சயம் பலருக்கும் உதவியாக இருக்கும்.

சுமஜ்லாவின் மவுஸ் ரைட் கிளிக் இயங்காமல் செய்ய - இந்த பகிர்வைப் பாருங்கள்.காப்பி பேஸ்ட் செய்ய முடியாமல் தடுத்து விடலாம்.

நம் வலைப்பூவை இழந்து விட்டால் - அறிவுக் களஞ்சியத்தின் பகிர்வு. உபயோகமான பகிர்வு.

மாய உலகம் ராஜேஸ் நம்மை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்த இளம் வலைப்பதிவர். அவர் நமக்காக பயன் தரும் வகையில் தொகுத்த பிளாக், கணினி, மென் பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள்என்ற பகிர்வு. வலையுலக தொழிநுட்பத்தில் பிரச்சனை என்றால் இந்த தொகுப்பில் உள்ள வலைப்பூக்களில் நுழைந்து பாருங்க.

பொன்மலர் பக்கத்தில் இறப்பிற்கு பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்கதகவல்களை மாற்ற –  இந்த பகிர்வையும் பாருங்கள்.

ரஜின் அப்துல் ரஹ்மானின் இல்லத்தரசி யார் அவள்?வாசித்து பாருங்க.

உணவு உலகம் சங்கரலிங்கம் சாரின் விழிப்புணர்வு பகிர்வு
இறைச்சி தரும் இன்னல்கள், தேவையான பகிர்வு.உணவு கலப்படம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரு விழிப்புணர்வாக பகிர்ந்து வருகிறார்.

சகோ.எல்.கே.எஸ்.மீரானின் அதிர்ச்சி அலைகள், எனக்கு பிடித்த பகிர்வுகளில் ஒன்று.

உங்களுக்காகவின் பகிர்வு செல்போன் டிப்ஸ்.

புதுகை தென்றலின் இல்லதரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ் .பயனுள்ள பகிர்வு.

மண், மரம், மழை, மனிதன் சம்பந்தப்பட்ட அனைத்து பகிர்வுகளும்
இங்கே சென்று தெரிந்து கொள்ளலாம்.


விவசாயம் ஒரு ஆழமான பார்வை ஈரோட்டைச் சேர்ந்த சதீஸின் பகிர்வு கழுகில்.


மரங்களை வெட்டுங்கள்மனதோடு மட்டும் கௌசல்யாவின் விழிப்புணர்வு   பகிர்வு.

துளசி  மேம் உங்க தளத்தில் எதை அறிமுகப்படுத்த. நான் ! ! ! இத்தனை வருஷமாக ஆயிரக்கணக்கில் பகிர்ந்திருக்கீங்க, இனி மேல் வருஷதிற்கு மூணு பகிர்வை பார்த்ததும் ரோசாரோசா!.. ரோசாரோசா!... ரோசா ! பாடத் தோன்றியது.அழகோ அழகு.
துளசிதளம் போல் யாரும்  இந்த அளவு பயணக்குறிப்புகள் கொடுத்திருக்கமாட்டங்கன்னு நினைக்கிறேன். வாசிக்கவும் பார்வையிடவும் நிறைய பகிர்வுகள் குவிந்து கிடக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் பார்வையிடுவேன்.

இதயம் பேசுகிறது  இலாவின் சிட்டப்பூஊஊ சுவாரசியமான பகிர்வு.

ஏஞ்சலினின் தோட்டத்துப் பூவும், காகிதப்பூவும், மிக அருமை. இவர் தளத்தில் க்வில்லிங், வாழ்த்து அட்டைகள் உண்டாக்குவது பற்றிய பகிர்வுகள் ஏராளம். அனைத்தும் அருமையான பகிர்வுகள் தான்.

அப்சராவின் இல்லத்தில்  மாமியாரின் கைவண்ணம் மிக அழகான பகிர்வு.


இத்தனை பகிர்ந்த பின்பு விருந்தில்லாமல் எப்படி, அறுசுவை மலர் உங்களுக்காக..!

மனோ அக்காவின் மலாய் குலோப் ஜாமுன் , தனித்துவம் மிக்க இந்தக் குறிப்பை செய்து பாருங்க, நிச்சயம் அசத்தலாக இருக்கும்பக்குவமாக செய்ய வேண்டிய குறிப்பு.

சாம்பார் சாதம்பார்க்கவே ருசிக்கத்தோணும். நாவில் நீர் ஊறும் பகிர்வு.

அசத்தலான பகிர்வு, அதன் கலரும் செய்முறையும் எல்லோரையும் செய்யத் தூண்டும், இஸ்லாமிய இல்லக் குறிப்பு. ஜலீலாவின் சமையல் குறிப்புகளில் ருசி அருமையாக இருக்கும்செய்து பாருங்க.

முர்தபா வாவ் ! மிக அசத்தலான குறிப்பு.

தேனக்காவின் செட்டிநாடு ஸ்பெஷல் கவுனரிசி ,நாங்க எங்க ஊரிலும் இந்த கவுனரிசி செய்யும் பழக்கம் உண்டு, இன்னொரு  பகிர்வு வெண்டைக்காய் மண்டி, செட்டிநாடு குறிப்புக்களுக்கு அக்காவோட ப்ளாக் போய்ப் பாருங்க.அசந்துடுவீங்க.

கீதா சாம்பசிவத்தின் பட்டூரா செய்து பாருங்க, உப்பலாகவே இருக்குமாம்.

அன்னை மீராவில் - நவரத்ன குருமா.அருமையான பகிர்வு.

மேனகா சத்யாவின் ஜாங்கிரி செய்து பாருங்க, சூப்பராக செய்து காட்டியிருக்காங்க.இவங்க ப்ளாக்கில் குறிப்புக்கள் மலை போல் குவிந்து கிடக்கு,நாம் தேடும் அத்தனை ரெசிப்பியும் இருக்கும்.

மற்றும் செட்டிநாடு மட்டன் பிரியாணி பார்க்கவே செய்யத் தூண்டும்.

கீழக்கரை ஸ்பெஷல் சிக்கன் 65. அட, ஈசியாக இருக்கே!

மகியின் வெஜ் பேஸ்ட்ரி வீல், இந்த குறிப்பை பார்த்து அசந்தே போயிட்டேன் நான்.

மகியின் கலகலா எத்தனை நேர்த்தியான செய்முறை.

இனிய இல்லம் ஃபாயிஜாவின் ரிச் நட்ஸ் & மட்டன் பிரியாணி
ஃபாயிஜா இந்த பிரியாணியை அவங்க ஊர் ஸ்பெஷல்ன்னு சொல்றாங்க. கையும் வாயும் மணக்கும்.

மற்றும் கிரில் பிரியர்களுக்காக தந்தூரி சிக்கன், சூப்பர்.

பாசமலரின் காளிப்ளவர் முட்டைப் பொரியல், எத்தனை இலகுவான சத்தான  பொரியல்.

வாங்க சமைக்கலாமில் சூப் வகைகள் , மிக அசத்தலான பகிர்வு, சூப் யாருக்குத்தான் பிடிக்காது.

மீன் குழம்பு - மனோகரி மன்றத்தில்,பகிர்ந்திருக்காங்க, சூப்பராக இருக்கும்.

விஜிஸ் வெஜ் கிச்சனில்  மைசூர் ரசம்  & கேரள மிளகூட்டல்  விஜியின் கைமணமே தனி தான்.

சித்ரா சுந்தரின் புரிட்டோ, ஆரோக்கியமான குறிப்பு.

கோவை2தில்லியின் கருவேப்பிலைக் குழம்பு & சூப்பர் கஷாயம், மாமியார் கிட்ட இருந்து கத்துக்கிட்டாங்களாம்.நல்ல பகிர்வு.

ராதாஸ் கிச்சன்கிரீன் குழம்பு, வித்தியாசமாக செய்து அசத்தியிருக்காங்க.

மின்மினியின் கோதுமைமாவுப் பணியாரம், அட, இதைச் செய்து பாருங்க அத்தனை ருசி.

அன்னுவின் ஒரு ரெசிப்பி – பல காம்பினேஷன், ஆரோக்கியமாகவும் ஈசியாகவும் செய்யக் கூடிய குறிப்புக்கள்.


விஜி பார்த்தியின் நெய்யப்பம் ஸ்வீட், பார்க்கவே ஆசையைத் தூண்டுது.

பயணிக்கும் பாதை அஸ்மாவின் மரவள்ளிக்கிழங்கு அடை, மரவள்ளிக்கிழங்கில் இத்தனை ருசியாக ஒரு பதார்த்தம்! சூப்பர்.

தெய்வ சுகந்தியின் ஃப்ரூட் சாலட் வாவ் ! அசத்திட்டாங்க..

அநன்யாவின் பன்னீர் சோடா சாப்பிடுங்க, கொண்டாடுங்க !

இத்துடன் இன்றைய பகிர்வை முடித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறிய மனச்சங்கடம், நான் பகிர நினைத்த ஒரு சில பதிவர்களின் வலைப்பூக்கள் துடிப்பதால் என்னால் பார்வையிட முடியவில்லை.

நன்றி நவில்கிறேன், விடை பெறுகிறேன்...!

எனக்கு இந்த  வாய்ப்பளித்த,  வலைச்சரப்  பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா ஐயா மற்றும் குழுவினருக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வாழ்த்தி, பாராட்டி, கருத்தும், தொடர்ந்து ஊக்கமும் அளித்த   சக பதிவுலக அன்பு நட்புள்ளங்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

வலைச்சரத்திற்கு வந்த பின்பு பல நல்ல அறிமுகங்கள் கிடைத்தது நான் பெற்ற அதிர்ஷ்டமே !

நான் இந்தப் பணிக்காக அமரும் பொழுதெல்லாம், என் கணவர், தெம்பாக வேலை செய் என்று முதுகில் தட்டிக் கொடுத்து அப்ப அப்ப டீ, காஃபி போட்டுத் தந்து ஊக்கம் கொடுத்ததை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
இந்த அனுபவம் எனக்கு மிக சந்தோஷத்தைக் கொடுத்தது.

மீண்டும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன்  விடைபெறுகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது