07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 5, 2013

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!பெங்களூருவில் ஒரு வாரம் மேகமூட்டமும் மழையுமாக இருந்து விட்டு இப்போது தான் கொஞ்சம் வெயில் எட்டிப் பார்க்கிறது. 

விநாயக முருகனின் மற்றுமொரு கவிதையை இங்கே குறிப்பிட அனுமதியுங்கள்.


ஒரு மழை சில 
கணங்கள்
 கால இயந்திரத்தில்
 பின்னோக்கி
 இழுத்து செல்கிறது 

ஒரு மழை 
புறக்கணிக்கப்பட்ட 
சில பிரியங்களை
நினைவூட்டுகிறது 

ஒரு மழை 
பிரிந்து சென்றவர்களை 
நினைவூட்டுகிறது 

ஒரு மழை 
பழைய காயங்களை கீறி 
வலியை நினைவூட்டுகிறது 

ஒரு மழை 
காதலியை
நினைவூட்டுகிறது கோடை கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து விடை பெறுகிறது. கோடை ஒரு வித அழகு தான்...மாம்பழங்களுடன் , கோடை மழையுடன் , சீக்கிரமே விடிந்து விடும் இரவுகளுடன், நீண்ட மாலைப் பொழுதுகளுடன் , பள்ளி விடுமுறைகளுடன், சூரியனுடன், வியர்வையுடன் மாடியில் காயும் வடகங்களுடன் .. கோடை அழகுதான்...மட்சுவோ பாஷோ (ஜப்பானியக் கவி) சொல்கிறார்: படித்தது: இங்கே:
(தளம்: முத்துச்சரம்- ராமலக்ஷ்மி)


குளிர்மழை 
ஆரம்பமாகிறது.
குடையில்லை.
அதனாலென்ன?

So what ! இது ஒரு டானிக் மந்திரம்...இன்று ஒரு நாள் மட்டும் சொல்லிப் பாருங்களேன். so what ..ஏன் சலித்துக் கொள்கிறீர்கள்...ஸோ வாட்? மழை பெரிதாக வருகிறது..ஸோ வாட்...குடை இல்லை..ஸோ வாட்? ஆட்டோ கிடைக்கவில்லை..ஸோ வாட்...நனைந்தால் ஜலதோஷம் வரும்...ஸோ வாட்..??!


சி.சரவண கார்த்திகேயனின் ஒரு கவிதையையும் பார்த்து விடுங்கள்:

"இங்கே மழை வருவது போல் இருக்கிறது"
என்கிறாள் அவள்;
"இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது"
என்கிறான் அவன்;
இடைப்பட்ட 350 கிமீ தேசிய நெடுஞ்சாலை
புன்னகைக்கிறது.

சில வாக்கியப் பிரயோகங்கள் சில மொழிகளுக்கு  பிரத்யேகமானவை. ஆங்கிலத்தில் அபூர்வமான நிகழ்வை once in a blue moon என்பார்கள்.. அதை தமிழில் மொழிபெயர்த்தால் சரி வராது. அப்படி தமிழில் இந்த 'குடைக்குள் மழை ' என்ற பிரயோகம் உள்ளது. அப்படியென்றால் என்ன? குடை ஓட்டை என்று அர்த்தமா? :):)

குடைக்குள் மழை என்பது மறைமுகமாக காதலை குறிக்கிறதோ? 


இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் out -of -box கற்பனைகளைப் படிக்க இங்கே:

இந்தப் பதிவில் சில out -of -box புதிர்கள் உள்ளன.உதாரணத்துக்கு ஒன்று:


 "தனது படையில் உள்ள யானைகளைக் கணக்கெடுக்கச் சொன்னார் மன்னர். அதிகாரி வந்து 60 தலைகள் என்று சொன்னார். இன்னொரு முறை கணக்கெடுக்கும்படி வேறு ஒரு அதிகாரியை அனுப்பினார் மன்னர். அவர் வந்து 64 தலைகள் என்று சொன்னார். அவையோர் புரியாமல் குழம் பினார்கள். ஆனால், மன்னர் 'இரண்டுமே சரி' என்றார். எப்படி?"


விடை: சுட்டியில் 


வரும் ஜூன் -21 ,(summer solstice) அதிக பகல் பொழுதாக இருக்கப் போகிறது. அதற்குப் பிறகு சம்மருக்கு official -ஆக விடை கொடுத்து விடலாம். ஹி ஹி,,, சென்னைக்கு இது பொருந்தாது...சென்னையின் மூன்று பருவங்கள் summer, summerer, summerest, என்கிறார் ஒரு பதிவர்.. மே மாதம் summerest ஆம்! :)

சாரி,,பதிவர் லிங்க் மறந்து விட்டது.


கோணலாக இருந்தாலும் என்னுடையதாக்கும் என்று குர் குரேவோ ஏதோ ஒரு விளம்பரம் வருகிறது. டேய் இது டபிள் மீனிங் வசனம் என்றான் நண்பன் ஒருவன். டபிள் மீனிங்கோ ட்ரிபிள் மீனிங்கோ கோணலாக இருக்கும் எதுவும் கெட்டது அல்ல என்று நினைக்கத் தோன்றுகிறது. பூமி கொஞ்சம் கோணலாக நிரந்தர கழுத்துவலி வந்ததுபோல சுற்றவில்லை என்றால் நமக்கு பருவங்கள் இல்லை. காலங்களில் அவள் வசந்தம் போன்ற பாடல்களும் இல்லை!பூமி கொஞ்சம் சாய்வாக சுற்றாவிட்டால் இந்த பருவங்கள், கற்பனைகள், கவிதைகள் ஒன்றுமே இல்லை...


“If time and space are curved where do all the straight people come from?”

― R.J. Scott

காலமும் வெளியும் வளைந்து கொடுக்காமல் ஜிம் பாடி தமிழ் ஹீரோக்கள் மாதிரி இருந்தால் கோள் , துணைக்கோள், துணை-துணைக்கோள்   ஒன்றுமே இல்லை. நம் சூரியனை நாம் உரிமை கொண்டாட முடியாது. காலமும் வெளியும் வளைவதைப் பற்றி இங்கே:

வளையாத இரண்டு இணை நேர்க்கோடுகள் பிரபஞ்சத்தில் எங்கேயோ சந்தித்தே தீர வேண்டும் என்கிறது இயற்பியல்.:)

(சைக்கிள் கேப்பில் என் பதிவை நுழைத்து விட்டேனே!):):)

சரி. அது என்ன சைக்கிள் கேப்? சிக்னலில் பெரிய வாகனங்கள் கால் கடுக்க சாரி டயர் கடுக்க நின்று கொண்டிருக்க அங்கே ஒரு சைக்கிள் கம்பீரமாக கிடைத்த கேப்பில் எல்லாம் புகுந்து நுழைந்து வளைந்து நெளிந்து ஜோராக சிக்னல் விளக்கின் அருகே வந்து நிற்குமே? இது தான் சைக்கிள் கேப்பா??? 

நிற்க. பெங்களூருவில் சப்-வேக்கள் குறைவு. சாலைகளைக் கடப்பது ஒரு பகீரதப் பிரயத்தனம். கிடைத்த கேப்பில் உயிரைக் கையில்  பிடித்துக் கொண்டு குல தெய்வத்தை தாயார் சகிதம் மானசீகமாக வேண்டிக் கொண்டு  உள்ளே இறங்கி விட வேண்டியது தான். லாரி மெதுவாகத் தானே வருகிறது என்று திட சித்தத்துடன் இறங்கி விட்டால் எதிர்பாராத முக்குகளில் இருந்து வரும் ஆட்டோக்களும் , கேர்ள் பிரண்டை அமர்த்திக் கொண்டு அவளை இம்ப்ரெஸ் செய்ய அதிவேகத்தில் வரும் பைக்குகளும் நமக்கு பயங்கர விரோதிகள். பாத சாரிகளுக்கு இந்த பைக்குகள் தான் முதல் எதிரி! நாம் ஏன் நம் நாட்டில் பாதசாரிகளுக்கு முக்கியத்துவமே தருவதில்லை?

well , பைக் ஓட்டி , கார் ஓட்டிகளின் frame of reference இல் பாதசாரிகள் எதிரிகளாகத் தெரிவார்களோ என்னவோ? 'ஏதோ ஒரு சாவு கிராக்கி ரோட்டை க்ராஸ் செய்யுது,,என்னவாகப் போகிறதோ ..சனியன்கள்'..என்று திட்டியபடி அவர் கிளட்சில் கால் வைக்கக் கூடும்'! 'எங்க இருந்துதான் வர்றானுகளோ '

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே...

நாம் சந்திக்கும் எல்லாமும், எல்லாரும் 'நேராக' 'ideal ' ஆக  இருக்க வேண்டும் என்று நாம் ஏன் எதிர்பார்க்கிறோம்? டெர்மினலில் உள்ள ஒருவர் மெதுவாக டைப் அடித்தால் சலித்துக் கொள்கிறோம்! கோணல்களை, விகாரங்களை, கண்டு முகம் சுளிக்கிறோம்? இதைப் பற்றி என்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? பஸ்ஸில் போகும் போது மாற்றுத் திறனாளி ஒருவர் உள்ளே ஏறுவதை நாம் எதிர்பார்ப்பதே இல்லை. நம்முடைய பஸ்கள் அவர்களுக்கு வசதியாக அமைக்கப் பட்டிருப்பதும் அல்ல. மாற்றுத் திறனாளிகளுக்காக என்று எழுதப்பட்டிருக்கும் இருக்கைகளில் வேறு யாரோ தான் அமர்கிறார்கள். நம்முடைய உலகம் எல்லாருமே நார்மல் தான் என்ற பார்வையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.  நோயாளிகளையும் , முதியவர்களையும், மன நிலை பாதித்தவர்களையும், சுயபால் ஈர்ப்பாளர்களையும் நாம் ஏனோ விரோதமாகவே பார்க்கிறோம். அவனா நீயி என்று ஒருவரை கிண்டல் செய்ய நாம் ஏனோ தவறுவதே இல்லை... 'உனக்கு என்ன ப்ராப்ளம்...என்னிடம் மனம் விட்டு சொல்லு..என்னால் ஆனதை செய்கிறேன்' என்று சொல்ல நேரம் இல்லாத நமக்கு ஒருவரை புண்படுத்த, குத்திக் காட்ட, கிண்டல் செய்ய மட்டும் எங்கிருந்தோ நேரம் வந்து விடுகிறது.


பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் பக்கம்:


அஷ்ட வக்கிரர் பற்றி கேட்டிருக்கிறீர்களா? அவரது உடம்பில் எட்டு கோணல்களாம் ...அவரைப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறார்கள். என் உடம்பு கோணி இருக்கலாம். ஆனால் என் ஆத்மா கோணுமா ? தோலைப் பார்த்து மட்டுமே மாட்டை மதிப்பிடும் மாட்டு வியாபாரிகள், கசாப்புக் கடைக்கார்கள் நீங்கள் என்று சொல்கிறார் அஷ்ட வக்கிரர் ...முழுக் கதையை  இங்கே   படியுங்கள். 'சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ'சிங்கம், புலி இவற்றை வைத்து கதை சொல்லுங்கள் அப்பா என்று குழந்தைகள் கேட்டால் நீங்கள் இனிமேல் பெப்பப்பே என்று முழிக்க வேண்டாம். இந்தத் தளத்துக்கு சென்று அதில் உள்ள ஏதேனும் ஒரு கதையை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் நச்சரிப்புகள் ரொம்பவே வித்தியாசமானவை. கதை சொல் என்று நச்சரிக்கும். பிளம்ஸ் பழம் கேட்டு நச்சரிக்கும். ச்சோட்டா பீம் பில்லோ கேட்டு நச்சரிக்கும்.ஹிப்பி நூடூல்ஸ் கேட்டு அதகளம் பண்ணும். ஒரு நாள் ரிமோட் ஏரோப்ளேன் கேட்கும். ஒரு நாள் டூர் போகலாம் என்று நச்சரிக்கும். 

பயணம் என்றாலே இனிமையானது. ஜவஹர் அவருடைய பயணக் கட்டுரைகள் நகைச்சுவை ததும்பபவை. படித்துப் பாருங்கள்:

Simplicity is making the journey of this life with just baggage enough.
Charles Dudley Warner 

உதாரணத்துக்கு:


சந்தித்த போது யார் யார் என்னென்ன வாங்கினோம் என்று பேசிக் கொண்டோம். நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்ன வாங்கினார் என்று கேட்டால் ஒரு மாதிரி சிரித்து மழுப்பிக் கொண்டே இருக்க, பையைப் பிடுங்கி சோதனை செய்ய முற்பட்டோம்.
 “இரு… இரு…” என்று தடுத்து விட்டு
“இந்த காத்தடிக்கிற இது… அதான் பொம்மை…. காத்தடிச்சா…” என்று குழற,
“ஐய்யய்யோ… அதெல்லாம் ப்ரோஹிபிட்டட் ஐட்டம், கஸ்டம்ஸ்ல பாத்தா அரெஸ்ட் பண்ணிடுவாங்க” என்றோம்.


பொம்மை- மனதை உருக்கக் கூடிய ஒரு சிறுகதை.ஜெயகாந்தனின் இந்த சிறுகதையை இங்கே படியுங்கள்

ஓஷோ ஜோக்.

.ஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள்.... பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் அதைத் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...அதை அவன் அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்....சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ உள்ளே வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...இந்த முறையும் அவன் அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்...சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது...அதை அவன் தட்டி விட ,அது இந்தியன் மேல் வந்து அமர்ந்தது...

இந்த முறை அந்த ஈயை அவன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கனிடம் சென்று
"சார், சுவையான ஈ இருக்கு,,,வாங்கறீங்களா? பத்து ரூபாய் தான்" என்றான்.. 


சமுத்ரா 

19 comments:

 1. ஒவ்வொரு தளமும் வித்தியாசம்... இனிமையான பாடலின் தலைப்பு உட்பட உங்களின் தேடலுக்கு... நகைச்சுவைக்கு... வாழ்த்துக்கள்... சிந்திக்க வேண்டிய விசயங்களும் அருமை...

  சி.சரவண கார்த்திகேயன் அவர்களின் தளமும் தமிழ் மீரான் - அவர்களின் தளமும் இன்று தான் தெரியும்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. /// (சைக்கிள் கேப்பில் என் பதிவை நுழைத்து விட்டேனே!):):)///

  புதிய பதிவர்களுக்கும் உதவும் சில வலைத்தள குறிப்புகள்...

  1. உங்கள் பதிவின் Copy and Paste அறிய...

  2. ஒவ்வொரு பதிவிற்கும் உட்பட உங்கள் தளத்திற்கும் பிரத்யோக குறிப்பை உருவாக்க...

  3. கதை, கட்டுரை, செய்தி அல்லது மற்றவை, ஏற்கனவே இணையத்தில் உள்ளதா என்று அறிந்து, அதற்கேற்ப பகிர்வுகளை பதிவிட...

  Click Here --> பைரவா...! பதிவருக்கு நல்வழிகாட்டுப்பா...! (வே.வி.2)

  ReplyDelete
 3. அன்பின் சமுத்ரா - அருமையான பதிவு - சுட்டிகளைச் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழிகளை அங்கேயே விட்டு விட்டு வருகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. அன்பின் சமுத்ரா - தங்களைப் புரிந்து கொள்ள இயலவில்லை - சோ வாட்

  ReplyDelete
 5. அன்பின் சீனா, புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்
  பேசலாமே? பழகலாமே? முதலிலேயே இப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டால் எப்படி?

  complicate ஆக எழுதுவதால் ஆளும் பழகுவதற்கு complicate ஆக இருப்பார்
  என்று நினைத்து விட்டீர்கள் போலும்:):)

  ReplyDelete
 6. அன்பின் சமுத்ரா - ஸோ வாட் என்றும் புரிந்து கொள்ள இயலவில்லை என்ற சொற்றொடருக்கு அடுத்து சொல்லி இருக்கிறேனே - அதன் பொருள் கவலைப் படாமல் பேசலாம் பழகலாம் என்று தானே ...... பேசலாம் பழகலாம் - ஒரு பிரச்னையும் இல்லை - சரியா நணபா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. அன்பின் சமுத்ரா - சம்மர் சம்மரர் சம்மரெஸ்ட் -சூப்பர் விளக்கம் - நன்று பெயர் மறந்து போன அப்பதிவருக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. மழைச்சாரலில் நனைந்த உணர்வைத் தருகிற அருமையான தொகுப்பு. ஒவ்வொரு பகிர்வையும் ஒட்டிய தங்கள் சிந்தனைகள் அருமை. ஜப்பானிய கவித்துளியையும் இணைத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி:)!

  வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகளும்!

  ReplyDelete
 9. . so what ..ஏன் சலித்துக் கொள்கிறீர்கள்...ஸோ வாட்? மழை பெரிதாக வருகிறது..ஸோ வாட்...குடை இல்லை..ஸோ வாட்?

  கவித்துளிச்சாரலில் நனையவைத்த ரசனையான வலைச்சரப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 10. எனது தளத்தை (எனக்கும்) அறிமுகப்படுத்தி ஆர்வமூட்டியமைக்கு மிக்க நன்றி சகோ. சமுத்ரா!
  நினைவூட்டிய திண்டுக்கல் தனபாலன் சகோ.வுக்கும்
  மீண்டும் எழுத ஆர்வமூட்டிய சீனா ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 11. கதையோட்டத்துடன் அழகாக வலைத்தளங்களை அறிமுகம் செய்கிறீர்கள்,தொடருங்கள்

  ReplyDelete
 12. வணக்கம்

  இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 13. கோலங்களில் புள்ளிக் கோலம் கொஞ்சம் கஷ்டம். அதனாலேயே 'சிக்குக் கோலம்' என்று கூட அதற்கு ஒரு பெயருண்டு. உங்கள் பதிவைப் படிக்கையில் ஏனோ அது நினைவு வந்தது :) ஒன்றிலிருந்து ஒன்றிற்கு எவ்வளவு லாவகமாக வளைத்து இணைக்கிறீர்கள்! மிகவும் ரசித்தவை "ஸோ வாட்?" மற்றும் ஓஷோ ஜோக் :) மிக்க நன்றி!

  ReplyDelete
 14. வளையாத மூங்கிலி பாட்டைக் கேட்டுக் கொண்டே உங்கள் பதிவைப் படித்தேன். உங்களின் மன விசாலம் நன்றாக இருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. வலைத்தள அறிமுகங்களுக்கு நன்றி.

  அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. பச்சை பொய் என்று சொல்கிறோம்.

  அதுவே இந்தியில் ஸபேத் ஜூட் ஆகி விடுகிறது.

  ஆங்கிலத்திலும் வைட் லை என சொல்கிறோம்.


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 17. //சில வாக்கியப் பிரயோகங்கள் சில மொழிகளுக்கு பிரத்யேகமானவை. ஆங்கிலத்தில் அபூர்வமான நிகழ்வை once in a blue moon என்பார்கள்.. அதை தமிழில் மொழிபெயர்த்தால் சரி வராது. அப்படி தமிழில் இந்த 'குடைக்குள் மழை ' என்ற பிரயோகம் உள்ளது. அப்படியென்றால் என்ன? குடை ஓட்டை என்று அர்த்தமா? :):)//

  ReplyDelete
 18. So what? ஏன் சலித்துக் கொள்ள வேண்டும்......

  அதானே.... இது மட்டும் பழகிவிட்டால் இன்பம் தான்.

  நல்ல அறிமுகஙக்ள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது