07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 31, 2009

வலைச்சரத்தில் ஏழாவது நாள் (விடை பெறுகிறேன்)

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ..!

வலைச்சரத்தில் ஆசிரிய பொறுப்பு வழங்கிய மதிப்பிற்க்குரிய சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.!


சற்று பதட்டத்துடன் தொடங்கிய இந்த பணியை நல்ல படியாக முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்..!


எனக்கு பின்னுட்டங்கள் அளித்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறி விடை பெறுகிறேன் ..!

நன்றி.! நன்றி.!!நன்றி.!!!


இவன்

ஜீவன்
(எ)
என்.தமிழ் அமுதன்---------------------------------------------------
மேலும் வாசிக்க...

Friday, October 30, 2009

ஆறாம் நாள் வலைச்சரத்தில்

நான் மிகவும் மதிக்கின்ற பதிவர்களில் பதிவுகளின் பகிர்வு
வால் பையன்

தனக்கு தோன்றியதை எந்தவித சமரசமும் இன்றி மிக தைரியமாக எடுத்து சொன்ன இந்தபதிவு இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது .

பகுத்தறிவு மூட நம்பிக்கைகள்
தேவன் மாயம்

வலையுலகில் மிக முக்கியமானவர் இவர்.இவரின் முந்தய பதிவுகளில் மிகவும் அவசியமான குறிப்புகளையும், மருத்துவ குறிப்புகளையும் வழங்கி உள்ளார் மேலும் வழங்குவார். இவரின் அனைத்து பதிவுகளும் படிக்க வேண்டியவை.

தமிழ் துளி
லவ்டேல் மேடி

குழந்தை தொழிலாளர்கள் பற்றி இவர் படங்களுன் போட்ட இந்த பதிவை பாருங்கள்.!

அரும்புகள்


பக்கோடா பேப்பர்கள்

சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு உதவும் நல்ல பதிவு இது.

சிறுநீரக சிகிச்சை சேவை


இளையராஜா

இளையராஜாவின் பாடல்களை வழங்கும் அற்புத தளம் து இளையராஜாவின் காண கிடைக்காத அருமையா புகை படங்களும் இங்கே உள்ளன.

இளையராஜா
தமிழ் முல்லை


முல்லை பெரியார் அணையின் வரலாற்றை ஒரு தொடராக வழங்கி இருக்கிறார்கள் இந்த தளத்தில் .!

முல்லை பெரியாரின் வரலாறு
பங்கு சந்தையில் கலக்கும் தமிழ் தளங்கள்

பங்கு வர்த்தகத்தில் கலக்கும் தமிழர்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பு....விமர்சனஙக்ளும் தகவல்களும் ..!

இங்கே


சிவ குமாரின் சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் பற்றிய நல்ல பல தகவல்கள் இறைந்து கிடக்கின்றன இந்த தளத்தில்

சித்த மருத்துவம்
அத்திவெட்டி அலசல்அத்திவெட்டியார் விவசாயிகளுக்கு அரசு ஏன் உதவ வேண்டும் ..? கவிதை வடிவில் அலசுகிறார் இந்த பதிவில்..!


விவசாயிகளுக்கு அரசு ஏன் ? உதவி செய்ய வேண்டும் பொது புத்தியும் ஆதங்கமும்

புலவன் புலிகேசி

இவரின் இந்த பதிவை அவசியம் படியுங்கள்

அரசு வேலைக்கு ஆட்கள் தேவை

கே.பாலமுருகன்
மலாய் கவிதைகளை அழகு தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் பால முருகன்

சமாட் சைட் மலாய் கவிதைகள் -தமிழில்
மேலும் வாசிக்க...

Thursday, October 29, 2009

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

நான் மிகவும் மதிக்கின்ற வலை பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு

முனைவர்
கல்பனா சேக்கிழார்

வலையுலகில் தமிழ் இலக்கியம் வளர்க்கிறார் இவர். கிட்டத்தட்ட இவரின் அனைத்து பதிவுகளுமே படிக்க வேண்டியவைதான்.

உதாரணத்துக்கு சில

நெடுநல் வாடை

மலையின் வகை

இயற்கையே தெய்வம்

மிளகின் கதைடவுசர் பாண்டி

தமிழுக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய சேவை பற்றி மிக அருமையாக இவர் தனது
பதிவுகளில் விளக்கி இருக்கிறார் ...! அநேகம் பேர் அறியாத அபூர்வ தகவல்கள் இவை...!இஸ்லாம் -தமிழ் -ஒரு வரலாற்று பார்வை -ஒன்று

இஸ்லாம் -தமிழ் -ஒரு வரலாற்று பார்வை -இரண்டு

பா .ராஜாராம்

இவரது கவிதைகள் ரொம்பவே தாக்கத்தை உண்டாக்குகிறது . இவரது இந்த கவிதை .... படித்து பாருங்கள் ....!
தகப்பனாக இருப்பதுஅன்புடன் அருணா

இவரின் இந்த பதிவை அனைவரும் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் அந்த அளவிற்கு முக்கியமானது, அவசியமானது . இந்த பதிவிற்க்காக இவருக்கு நன்றி சொல்லவும் நாம் கடமை பட்டு இருக்கின்றோம்.கடவுள் ....108


உமா சக்தி

ஆங்கில பட விமர்சனங்களையும்,கவிதைகளையும் அதிகம் எழுதும் இவர் எழுதிய ஒரு உண்மை நிகழ்ச்சி இந்த பதிவு ..! இதை அருமையான சுவாரஸ்யமிக்க ஒரு சிறுகதையாக வடித்து இருக்கிறார்..!


கிட்டங்கி எண் 13
அபு அப்சர்


குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுபவர்களில் இவரும் ஒருவர் தமிழர்களின் நிலையை மிக துல்லியமாய் அலசி பதிந்து இருக்கிறார் இவர் இந்த பதிவில்
தமிழர்களாகிய நம் நிலை
பின்னோக்கி

சமீப காலமாக வித்தியாசமான பதிவுகளை தருகிறார் இவர்.தன் தாயாரின் நினைவில் இவர் அளித்து இருக்கும் நெகிழ்வில் சங்கமிப்போம் ..!
போய்விடு அம்மா என் நினைவிலிருந்து ..!

அகல் விளக்கு

பிச்சை எடுக்கும் இவர்களைப்பற்றி இவர் படைத்து இருக்கும் இந்த பதிவுகளை
படித்து பாருங்கள்.


பிச்சை பாத்திரம் -ஒன்று

பிச்சை பாத்திரம் -இரண்டு

வெண்ணிற இரவுகள்
நட்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அருமையாய் செதுக்க பட்டு இருக்கிறது இந்த பதிவு ..!

யார் சொன்னது கடவுள் இல்லைஎன்று ..?


சி .கருணாகரசு

திருக்குறளைப்பற்றி இவர்தம் குரலில் எப்படி கவிதை வடித்து இருக்கிறார் பாருங்கள் ..!

கல்வெட்டாக்கிய காப்பியம்
ராஜா சபை

எகிப்து நாட்டை சுற்றி காட்டுகிறார் இவர் தனது இந்த பதிவுகளில் அருமையான படங்கள் இதுவரை ஐந்து பாகங்கள் எழுதி உள்ளார் இன்னும் தொடர்கிறார் . ஐந்து பாகங்களுக்கான லிங்கும் இதில் உள்ளது .

எகிப்தில் ஒரு வரலாற்று பயணம்

மண், மரம், மழை, மனிதன்

சுற்றுப்புற சுழல்,இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு,மருத்துவ செடிகள்,அழகு செடிகள் வளர்த்தல் ஆகியவற்றை பற்றி விளக்குகிறது இவரது பதிவுகள் மிக அவசியமான ஒரு வலைத்தளம் இது..!
மண், மரம், மழை, மனிதன்
மேலும் வாசிக்க...

Wednesday, October 28, 2009

வலைச்சரத்தில் நான்காம் நாள்

நான் மிகவும் மதிக்கின்ற வலைப்பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு ..!


வீணை காயத்ரி


இசைத்துறையில் பிரபலமான வீணை காயத்ரி அவர்களின் வலைத்தளம் இசை பிரியர்களுக்காக ..!

இங்கே

சந்தன முல்லை

வலையுலகில் பிரபலமான பப்புவின் அம்மா ..! இவரின் இந்த பதிவை சிரிக்காமல் படிக்க முடியுமா ?


வாசகர் எனக்கும் கடிதம் எழுதிட்டாரே !


வானம்பாடிகள்

சிந்திக்க வைக்கும் இவரின் இந்த அவசிய பதிவை படியுங்கள்.!

வாத்தி வேலைக்கு போறதுக்கு வாத்து மேய்க்கலாம்
கதிர்-ஈரோடு

அநீதிக்கு எதிராக சவுக்கடி கொடுக்கிறது..! இவர் பதிவுகளும் விதைகளும்.!

///பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி
வைத்திடுங்கள்...///

இந்த வரிகளை இந்த பதிவில் பாருங்கள்

ஏமாற இந்த காரணம் போதும்

நம் நாட்டின் விவசாய நிலையை இந்த பதிவில் நன்கு விளக்கி இருக்கிறார்

ஒரு பிடி சோறு
பிரியமுடன் வசந்த்

சிலருக்கு மூளை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் சிலருக்கு மூளையிலேயே
உடல் இருக்குமோ என ஒரு சந்தேகம் வரும் ..! அப்படி நினைக்க வைக்கிற ஆளு இந்த வசந்து...! புதுசா பதிவு போட்டா இன்னிக்கு என்ன பண்ணி இருக்காரோ ??அப்படின்னு ஆர்வத்த தூண்டும் இவர் பதிவுகள்..!

இவரின் சிறந்த பதிவுகளில் இவையும் உண்டு ..!

செங்கல்லும் நானும்

டயரும் பெரியவரும்


நட்புடன் ஜமால்

பொறுமையாக தடுத்து ஆடிக்கொண்டு இருந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலே ஏறிவந்து அரங்கம் அதிர சிக்சர் அடித்தால் எப்படி இருக்கும் இவர் அப்படி அடித்ததுதான் இவரின் இந்த பதிவு ...!

இவரின் வலைத்தளம் ஹேக் செய்ய பட்டதால் இந்த லிங்கில் இந்த பதிவு ..!

வேதியல் மாற்றங்கள்சி @ பாலாசி

பாலாசி இவரின் அருமையான இந்த சிறுகதை

குடியானவன்


அகசூல்

மண்ணை வளமாக்கும் இயற்கை உரங்களை தயாரிக்கும் முறைகளை மிக அருமையாய் சொல்லி இருக்கிறார் விஜய். அவசியம் இந்த தளத்தை பாருங்கள் .

அகசூல்மன விலாசம்

குறைவாக எழுதினாலும் ..!அவ்வப்போது அசத்துகின்றன இவர் பதிவுகள்..!
வெளிநாட்டில் பணிபுரிவோரின் நிலையை எப்படி விளக்கி இருக்கிறார் பாருங்கள் நவாசுதீன் இந்த கவிதையில்...!விடை தெரிந்த புதிராய்

ஜெஸ்வந்தி

ஒரு புதிய எழுத்து நடை..! ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் எழுதுகிறார் . இவரின் இந்த பதிவுகளை பொறுமையாக படியுங்கள்.யார் குடியை கெடுத்தேன் ? முதல் பகுதி

யார் குடியை கெடுத்தேன் ?இரண்டாம் பகுதி

யார் குடியை கெடுத்தேன் ? மூன்றாம் பகுதிவானம் வெளித்த பின்னும்

ஈழத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் எழுதப்பட்ட ஹேமாவின் இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது ..!


தீபத்திருநாள் ஈழத்தில்
மேலும் வாசிக்க...

Tuesday, October 27, 2009

பதிவர் சந்திப்பும் -பதிவுகளும் -வலைசரத்தில் மூன்றாம் நாள்

நான் மிகவும் மதிக்கின்ற வலை பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு ..!


சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது.சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு ஹோட்டலில்...! அதில் கலந்து கொண்டவர்கள்
அண்ணன் ராகவன்,ரம்யா,நாமக்கல் சிபி,தாமிரா,புதுகை அப்துல்லா,அமு செய்யது, ராஜி ..மற்றும் நண்பர் சுரேஷ் ரம்யாவின் அக்கா கலை அக்கா மற்றும் நான்..!பதிவர் சந்திப்பை பொறுத்தவரை நான் அதுவரை யாரையும் சந்தித்தது இல்லை
அதுதான் என் முதல் பதிவர் சந்திப்பு...! யாரை எப்படி எதிர்கொள்வது என்றும் புரியவில்லை முடிந்தவரை அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கலாம் என ஒரு எண்ணத்தில் இருந்துவிட்டேன் . அதனாலேயே என்னை அமைதியானவன் என்று
தவறாக நினைத்து விட்டனர் நண்பர்கள்..! ;;))


அந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் வர்களின் சிறந் பதிவுகளையும் பற்றி சொல்லுகிறேன்.

அண்ணன் ராகவன்

நான் எதிர்பார்த்ததைவிட இளமையாகவும் சுறு சுறுப்பாகவும் இருந்தார்.ஒரு புதியவரை பார்க்கிறோம் என்ற எண்ணம் துளியும் ஏற்படவில்லை.

இவர் பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த பதிவுதான்...!போய்விட முடிவு
செய்துவிட்டேன்
ரம்யா

ஆரம்பத்தில் வெகு சாதாரணமாக தோன்றி..! பின்னர் அணைக்கட்டில் இருந்து பீறிட்டு கிளம்பும் வெள்ளத்தைபோல பதிவுலகில் கலக்கியவர். தன்னம்பிக்கைக்கும்,தைரியத்திற்கும் உதாரணம் இவர். இவரை பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால்.

''இரும்பு இதயம் படைத்த பீனிக்ஸ் பறவை ''


இவரது பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தது
பெற்றோர்கள் சிந்திக்க

ஆதரவற்ற குழந்தைகளும் -முதியவர்களும்படத்தில் அண்ணன் ராகவன் ,நாமக்கல் சிபி,போன் பேசுவது தாமிரா

நாமக்கல் சிபி

முதலில் தன்னை கோவி .கண்ணன் என அறிமுக படுத்தி கொண்டார் அவர் சொன்னதை முதலில் நான் சரியாக கவனிக்கவில்லை செய்யதுவிடமும் அப்படியே சொல்ல..! கோவி .கண்ணனா ? அவர் படத்தை பதிவுகளில் பார்த்து இருக்கிறேன் அவரா நீங்க ...? என சொல்ல.. பார்த்து இருக்கீங்களா ? அப்டினா நாந்தான் நாமக்கல் சிபி என்றார். விளையாட்டாய் பேசுகிறாரா?? இல்லை சீரியஸா பேசுகிறாரா?? என உடனடியாக கண்டுபிடிக்க முடியாத வகையில் சுவாரஸ்யமாய் பேசுகிறார் இந்த நக்கல் நாயகன்..!

மரம் வளர்ப்போம் வாருங்கள்

என்ற இவர் பதிவு முக்கியமானதுதாமிரா

ரொம்ப அழகாய் சிரிக்கிறார்..! ரிஷப ராசிக்காரர்களை போன்ற சாந்தமான முகம் பார்த்தவுடன் பிடித்து போகும் இயல்பான மனிதர்

மோகம் முப்பது நாள்


இவரின் இந்த பதிவ படிச்சு பாருங்க


புதுகை அப்துல்லா


கலகலப்பானவர் பதிவுகளில் சொல்வது போலவே நேரிலும் அண்ணே என்று அழைக்கிறார்..!


இவர் பதிவுகளில் இந்த பதிவு மிகவும் சிறப்பானது

தீபாவளி நினைவுகள்

.மு.செய்யது

அருமையான படைப்பாளி..! வலையுலகில் ஒரு சிறந்த இடத்துக்கு வருவார்.! அசத்துகிறார் இவர் இந்த பதிவுகளில் ..!

கரையான் அரித்த மீதி கதவுகள்

ஜூன் 10 சில நியாபக குறிப்புகள்
ரசனைக்காரி

சமீபத்தில் இல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சகோதரி துள்ளலான எழுத்துக்கு சொந்தகாரர்..!

மனதை கணக்க வைத்த இந்த பதிவினை படித்து பாருங்கள்
மீனாட்சி அக்கா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது