07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 31, 2010

சினிமா செவ்வாய் (வலைச்சரம் - இரண்டாம் நாள்)

வலையுலக மக்களுக்கு வணக்கம்.

நான் இப்படி டென்ஷன் ஆனதே இல்லை. ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே வலைப்பூவை உருவாக்கி எனக்குத் தோன்றியதை எழுதிக் கொண்டிருந்த நான் வலைச்சரத்தின் தற்காலிக ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு பின்னால்தானோ என்னவோ, அலுவலகத்தில் அதிக ஆணி. அறிமுகப் பதிவிற்குப் பின் இப்போது தான் புதிய பதிவு. எனவே, மன்னிக்க வேண்டுகிறேன்!

பொதுவாக நான் வளர்ந்த சூழலில் சினிமா பார்ப்பது மிகவும் அரிது. அப்படியே பார்த்தாலும், சம்பூர்ண ராமாயணம், பக்த பிரகலாதா போன்ற பக்திப் படங்கள்தான் பார்த்திருக்கிறேன். (அதற்காக நான் வருத்தப் பட்டதும் இல்லை.) பின்னாளில் சொந்தமாக டிவி வாங்கி அதன் உதவியால் பல புதிய பழைய திரைப்படங்கள் நிறைய பார்த்துவிட்டேன். ஆனாலும்,  அநேகமாக எல்லாத் திரைப்படங்களுக்கும் திரை விமரிசனங்கள் படித்துவிடுவேன். குறிப்பாக கேபிள் சங்கர் எழுதும் விமரிசனங்கள் பெரும்பாலும் நடுநிலையோடு இருக்கும். ஒருவேளை, இவர் துணை இயக்குனர் என்பதாலோ என்னவோ? தமிழ்ப் படம்தான் என்றில்லை, பீப்லி (லைவ்) என்ற  ஹிந்தி படத்துக்கு இவர் எழுதியுள்ள விமரிசனத்தைப் படியுங்கள். அதேபோல், படங்களைப் பற்றிய விமரிசனத்தை விட, அந்தப் படம் பார்க்கும்  போது தியேட்டரில் நடந்த சுவையான விஷயங்களை எழுதுவதில் நம்மை ஈர்க்கும் ஒரு தளம்  பார்த்ததும் படித்ததும்  ஜெட்லியின்  இந்த லேட்டஸ்ட் விமரிசனம்  படியுங்கள் புரியும். வேறு யாராவது திரைப்படங்களைப் பற்றி சுவையாக சொல்கிறார்களா என்று தேடியபோது கிடைத்தவர்தான்  சார்லஸ். இவர் தொலைக்கட்சிகளில் தொடர்கள் இயக்குவதாக அறிவிக்கிறார். இவர் திரைத்துறையில் எடிட்டிங் செய்யும் மாயாஜாலங்களை இந்தப் பதிவில் எப்படி கூறுகிறார் பாருங்கள்!

ஓகே. நான்கூட  திரை விமரிசனங்கள் எழுதியிருக்கிறேன். இங்கே பாருங்கள்:-
விமரிசனம் ஒன்று.
விமரிசனம் இரண்டு.

பிறகு சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

Monday, August 30, 2010

எந்தரோ மகானுபாவுலு.............

எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு.....!
எத்தனையோ மகான்கள் இந்த வலை பூமியில், அவர்கள் அத்தனை பேருக்கும் என் வணக்கங்கள்!
என்னைப் பெற்ற தாய் தந்தையருக்கும், என் அறிவை வளர்த்த ஆசிரியர் பெருங்குழுவுக்கும் என்னை ஒரு நல்லோனாய், நன்மதிப்புடன் இந்த உலகத்தில் வலம் வரச் செய்து கொண்டிருக்கும் என் இறைவனுக்கும் என் நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

பல வருடங்களாக பிறருடைய வலைத்தளங்களைப் படித்துக் கொண்டிருந்த நான், எனக்கென்று ஒரு வலைத்தளம் அமைத்துக் கொள்ள விரும்பி சென்ற அக்டோபர் மாதம் முதல் வந்துட்டான்யா வந்துட்டான் என்ற பெயரில் ஆரம்பித்தேன்.

பெயர் சொல்லக் கூடாது என்றில்லை, ஆனால் ஒரு சுவாரசியத்திற்காக "பெயர் சொல்ல விருப்பமில்லை" என்ற பெயரில் பதிவுகளும் பின்னூட்டங்களும் இட்டு வருகிறேன். தெரிந்த ஒரு சிலரிடம் என் உண்மையான பெயரையும் தெரிவித்திருக்கிறேன்.

பதிவுலகம் ஒரு அருமையான மேடை. இதில் நமது தனித்திறமைகளையும் சில பொதுவான விஷயங்களில் நம்முடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளத் தோதான இந்த பதிவுலகத்தில் தான் எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்க, படிக்க முடிகிறது!

அன்பின் சீனா அவர்கள், இந்த வாரம் என்னை ஆசிரியர் பொறுப்பேற்கச் சொன்ன போது, முதலில் கொஞ்சம் தயங்கினேன். ஆனாலும் இது ஒரு அருமையான வாய்ப்பு என்பதால் ஒப்புக் கொண்டேன். இத்தனை ஆயிரம் பதிவர்கள் இருக்க, பல பதிவுலக ஜாம்பவான்கள் எழுதிய ஒரு வலைத்தளத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு வருகின்றபோது அதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான் என்று உள்மனம் என்னை உசுப்ப, இந்த வாரம் உங்கள் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்கிறேன்!

பிறிதொரு பதிவில் மீண்டும் சிந்திப்போம்! 
மேலும் வாசிக்க...

Sunday, August 29, 2010

நல்வாழ்த்துகள் கதிர் - வருக வருக பெயர் சொல்ல விருப்பமில்லை

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஈரோடு கதிர், தான் ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்றி, ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 130க்கும் மேலான மறுமொழிகள் பெற்று, நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். இவர் துறை வாரியாக அறிமுகங்கள் செய்தது நன்று.

அன்பின் கதிரினை நல்வாழ்த்துகள் கூடிய நன்றியுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் மன்னார்குடியினைச் சார்ந்த நண்பர் "பெயர் சொல்ல விருப்பமில்லை". இவர் "வந்துட்டான்யா வந்துட்டான்" என்ற பதிவினில் எழுதி வருகிறார். பெற்றோரைப் போற்றும் பெருங்குணமிக்கவர். அன்னாரை வருக ! வருக ! என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் பெயர் சொல்ல விருப்பமில்லை
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

நன்றி

கடந்த ஒரு வாரமாக வலைச்சரம் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பளித்த சீனா அவர்களுக்கும், ஊக்கமளித்து பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்திய வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் என் நன்றி.

அன்புடன்

கதிர்
மேலும் வாசிக்க...

Saturday, August 28, 2010

சிக்கு இல்லாத வரிகள்

வார்த்தைகளை பிசைந்து பிசைந்து வாசிப்பவர்களை சிக்கெடுக்க விடாமல் எழுதப்படும் கவிதைகள் வாசிக்கும் போது இதயத்தின் மையத்தில் உட்கார்ந்துகொள்ளும்.

அள்ளிச் சுவைக்கும் போது தித்தித்தாலும், சுவை நீர்த்துப்போன நேரங்களில் பள்ளிடுக்களில் இருந்து நாவில் உதிர்ந்து சின்னதாய் சுவையூடுவது போல், அவ்வப்போது நினைவுகளில் வந்து போய்க் கொண்டிருக்கும் கவிதைகளை வாசிப்பதும், வாசித்த பின் சுவைப்பதும் நிறைவான ஒன்று.

சின்னச் சின்ன வார்த்தைகளைக் கோர்த்து
இனிக்க இனிக்க கவிதையெழுதும் ராஜா சந்திரசேகர் அவர்களின்

ராஜா சந்திர சேகரின் கவிதைகள்
எப்போழுதுமே என்னுடைய வாசிப்பின் முதல் வரிசையில் இருப்பவை

அனுபவ சித்தனின் குறிப்புகள் என்று தொடர்ந்து எழுதிவரும் கவிதைகள் சிந்தனையின் எல்லைகளை நீட்டிக்கொண்டேயிருப்பவை.

அவரே பென்சில் நதி என்ற வலைப்பூவிலும் குறுங்கவிதைகளை தொடர்ந்து படைத்துக்கொண்டிருக்கிறார்.

மிதந்தபடி செல்லும் இசையை வாசித்துவிட்டு, நீண்ட நேரம் பிடித்தது கொஞ்சம் நகர.

00000

வலைப்பூ பெயரையே காகித ஓடம் என கவிதைத் தனமாக கொண்டு எழுதி வரும் பதிவர் பத்மாவின் கவிதைகள் குறிப்பிடத் தகுந்த வாசிப்புக்கு உரியவை.

அம்மா கவிதை வாசிக்கும் போது மனது முழுதும் வலியை நிரப்பிவிட்டுப்போகும் என்பதில் மறுப்பில்லை00000

எழுத வந்த சிறிதுகாலத்திற்குள் தன்னை நன்றாக அடையாளப் படுத்திக்கொண்டவர் வேலு

Gee Vee என்ற வலைப்பூவில் கவிதைகளையும், பொருள் பொதிந்த சிந்தனை நிரம்பிய எழுத்துக்களையும் சீரான இடைவெளியில் அழகுற படைத்து வருகிறார்.

வக்ரம் கவிதை வக்ரங்களை மிக இயல்பாக அடையாளமிடுகிறது

000000
மேலும் வாசிக்க...

Friday, August 27, 2010

திரைகடலோடித் தேடும் திரை

கலைகளின் சிறகுகளில் அழியாத இடத்தைப் பிடித்தவை திரைப்படங்கள் என்றால் மிகையில்லையென்றே சொல்ல வேண்டும். மாநிலத்தின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தென்னிந்தியாவில் கொடி நாட்டியிருப்பதும் கூட திரைப்படம் என்றால் மிகையில்லை.

அதே சமயம் ஆழ்ந்து பார்க்கும் போது தமிழ் சினிமாவின் எல்லைகள் காதல், சண்டை, தனியாக ஒட்டாமல் இணைந்து வரும் காமடி ட்ராக் என முடங்கிப்போய் விட்டதாகவே இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

சினிமாக்களின் மறுபக்கமாக மாற்று மொழிகளில் வரும் பல படங்களை காண முடியும். இது போன்ற படங்களை உலகப்படங்கள் என்ற அடைப்புக்குள் நம் வசதிக்காக அடையாளப்படுத்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்க ஆரம்பித்தால், அதுவொரு மிகப் பெரிய வெளியாக பிரமிக்கும் கலையாக கண் முன் விரிகிறது.

சில படங்களை பார்க்கும் முன்பும், சில படங்களை பார்த்தபின்பும் அது குறித்த விமர்சனங்களை வாசிப்பது இனம் புரியாத சுகத்தை புகுத்துகின்ற ஒன்று.


உலகப்படங்கள் குறித்து ஆழ்ந்து எழுதும் பதிவர்களை இங்கு அடையாளப் படுத்துவது என் மனதிற்கு மிக நெருக்கமான, மிக மகிழ்ச்சியான ஒன்று.மிகப் பெரிய வாசகர் வட்டத்தோடு உலகசினிமா குறித்து தன்னுடையஎன்ற வலைப்பூவில் அழகாக எழுதிவரும் பட்டர்பிளை சூர்யா என்னுடைய நேசிப்புக்குரிய ஒரு பதிவர்.


சமீபத்தில் உலகத் திரைப்படங்கள் குறித்து ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறைய செய்திகளைப் பகிர்ந்தவர்.

உலகப்படங்கள் குறித்து அறிந்து கொள்ள தமிழில் இருக்கும் வலைப்பூக்களில் வண்ணத்துப்பூச்சியார் குறிப்பிடத்தகுந்த ஒரு தளம்.இடுகையில் உலகத்தின் பெரும்பாலான ரசிகர்களைக் கொண்டிருக்கும் மஜித் மஜிதி குறித்து மிக அருமையான தொகுப்பை எழுதி நிறையப் பேருக்கு எடுத்து சென்றவர்.


000000வலைப்பூவில் உலகத்திரைப்படங்கள் குறித்து மிக நேர்த்தியாக எழுதிவரும் உமாசக்தியின் எழுத்துகள் வாசிப்பவரை எழுத்தோடு கட்டிப்போடும் வல்லமை கொண்டது.

இடுகையில் இயக்குனர் அபர்னா சென் குறித்த பகிர்வும், அவருடைய தி ஜேபனிஸ் வைஃப் படத்தின் மிக நேர்த்தியான விமர்சனமும் வாசிக்கும் போதே உடன் பயணிக்கச் செய்பவை.


000000


உள்ளூர் சினிமா – உலக சினிமா என
என்ற கொஞ்சம் வித்தியாசமான பெயரில் அமைந்த வலைப்பூவில் இருக்கும் விமர்சனங்கள் வாசிப்புக்கு மிகவும் உகந்தவை.கிம் கி டுக்வின் 3-iron படத்தின் விமர்சனத்தை ஒரு முறை ஆனந்த விகடனில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தில் படிக்கும் போது நொந்து போனேன். அவ்வளவு மோசமாக, பொய்கள் கலந்து ஒரு விமர்சனத்தை பெயர் பெற்ற ஒரு எழுத்தாளரால் எப்படி எழுத முடிந்தது என்று பல நாட்கள் நினைத்திருக்கிறேன்.


அந்த ஆற்றாமையை கருந்தேள் கண்ணாயிரம் வலைப்பூவில் ஒரு முறைவாசித்த போதுதான் கரைத்தேன். இந்தப் படம் குறித்து என் மனதிற்குள் என்ன தோன்றியதோ, அதை அப்படியே அவருடைய எழுத்தில் படிக்கும் போது, ஏனோ என்னையறியாமலே அந்த எழுத்தோடு ஒரு நெருக்கம் ஏற்பட்டது.


0000000
மேலும் வாசிக்க...

Wednesday, August 25, 2010

சகலகலா வல்லவர்கள்

இருக்கும் விரல்களுக்கு ஒரு வித்தையாய் கற்றுத் தேர்ந்து கலக்கி வரும் நட்புகளைப் பார்க்கும் போது, எப்படி இவர்களால் மட்டும் இப்படிச் செயல்பட முடிகிறது என்ற ஆச்சரிய விதை மனதிற்குள் விழுந்து கொண்டே இருக்கின்றது.

எழுத்தை ரசிப்பதற்கு இணையாக படங்களை ரசிக்கும் மனதிற்கு…

இதோ..


எது கேட்டாலும் அதிகம் பேசாத கருவாயன் (எ) சுரேஷ்பாவுவின் படங்களைப் பார்க்கும் போது மனது குழைந்து, மீள முடியாமல் நிலைத்துப்போவதுண்டு.
புகைப்படக் கலையில் சிறிதும் சமரசம் இல்லாமல் தெளிவோடு இவர் எழுதும் பாடங்களும், சக புகைப்பட ஆர்வலர்களோடு, படத்தின் தரத்திற்காக இவர் காட்டும் கண்டிப்பும் காணும் போது மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும்

தமிழில் புகைப்படங்கள் குறித்து அறிய தமிழில் புகைப்படக் கலை வலைப்பூ மிகச் சிறந்த ஒன்று.
தமிழில் புகைப்படக் கலை வலைப்பூவில் இவருடைய பங்கு மிகப்பெரியது

கருவாயனின் படங்களை ஃபிளிக்கரில் பார்த்து ரசிக்க இந்த சுட்டியை சுட்டுங்கள்.

*******


கவிதை, வித்தியாசமான சிந்தனைகள், போட்டிகள் என தன் எண்ணங்கள் இனியவை என்ற தளத்தில் மிக நேர்த்தியாக எழுதி வரும் ஜீவ்ஸ் ஒரு சுவாரசியமான பதிவர்.யதார்த்தத்தை, கொஞ்சம் கூடுதல் கனமாய் இருக்கும் வார்த்தைகளில் பதிவது இருவருடைய சிறப்பு. அவருடைய ரௌத்திரம் பழகு கவிதை மிகவும் யோசிக்க வைத்த ஒன்று. புகைப்படக்கலையில் ஒரு தீவிரவாதி என்றே இவர் குறித்து அறியப்பட்டிருக்கிறேன்.

ஜீவ்ஸ் அவர்களின் படங்களை ஃபிளிக்கரில் பார்த்து ரசிக்க இந்த சுட்டியை சுட்டுங்கள்.


********கவிதைகளிலும், சிறுகதைகளிலும், புகைப்படங்களிலும் யதார்த்தத்தை மிக நேர்த்தியாக தன்னுடைய முத்துச்சரத்தில் கோர்த்து வருபவர் பதிவர் ராமலட்சுமி.பெருமைக்குரிய விடயம், இவருடை வலைப்பூவில் பதியும் படைப்புகள், அதற்கு முன்பே ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் இவர் எழுதிய படைப்பாகவே இருக்கும்.


வாழ்வியலை யதார்த்தமான வார்த்தைகள் உள்ளடக்கிய ஒரு நதியின் பயணம் கவிதை மனதில் பதிந்த ஒன்று


ராமலட்சுமி அவர்களின் படங்களை ஃபிளிக்கரில் பார்த்து ரசிக்க இந்த சுட்டியை சுட்டுங்கள்.
மேலும் வாசிக்க...

Tuesday, August 24, 2010

நம்பிக்கை நாற்றுகள்

வெட்டிய மரம் கசிய விடும் கடும் வாசம், இந்த பூமிக்கான சாபக்கேடு என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தன் வாழ்நாளில் எந்தவொரு கெடுதலையும் பூமிக்குத் தராமல், மனித சமூகம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உண்டு மீண்டும் சுவாசிக்க சுத்தமான காற்றைத் தரும் மரத்தின் மேல் நாம் காட்டும் துவேசம் படுபயங்கரமான ஒன்று…

மனதைத் தொட்டுச் சொல்வோம், நம்மில் எத்தனைபேர் இதுவரை விதை போட்டோ, செடியை நட்டோ ஒரு மரத்தை வளர்த்தெடுத்திருப்போம்

மண் – மரம் – மழை…….. இது இருந்தால்தான் மனிதன் என்பதை மறந்து வரும் நேரத்தில் இதற்காக

மண் மரம் மழை மனிதன்


எனும் அற்புதமான வலைப்பூவை நடத்தி வரும் மரியாதைக்குரிய மனிதர் திரு. வின்சென்ட் போற்றுதலுக்குரியவர்.
இவர் வலைப்பூவை அறிந்த நாள் முதல் வாசித்து வருகிறேன். 55 வருடங்களாய் மனிதனுக்கு விஷத்தை உண்டு அமுதத்தை தந்த அகலப் படர்ந்த அரச மரத்தை வெட்ட வந்த மனிதர்களுக்கு எதிராக மனிதர்கள் போர் தொடுக்க மறந்த நேரத்தில் ஒரு மாணவன் போர் தொடுத்தை, வெளிப்படுத்திய இடுகை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ”என்ன நடந்தா எனக்கென்ன” என்று ஒதுங்கிச் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் நேயத்தோடு மரத்தைக் காப்பாற்றிய மாணவன் குறித்த இடுகை...

மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும்
*************


நியாயமாக செய்ய வேண்டிய ஒரு அடிப்படை வேலைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், விவசாயிடம், அனாதை ஊதியம், மூப்பு ஊதியம் வாங்கும் சாமானியர்களிடம், ஏழைகளிடம் அரித்து பிடுங்கும் கையூட்டுப் பணம் மலம் தின்பதற்கு ஒப்பானது.


நியாயமான காரியங்களைக்கூட செய்வதற்கு கையூட்டு கொடுக்கும் நிலை வரும் போதும் மிக எளிதாக சகித்துக்கொண்டு போகிறோம். காரணம் இதற்கு தீர்வே இல்லை என்ற எதிர்மறை எண்ணம் மட்டுமே. ஆனால், தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கையூட்டு பெற்றதற்காக தினந்தோறும் ஒரு அதிகாரியாவது கைது செய்யப்படுகிறார். இந்தக் கைதுகளுக்கு அடிப்படையானது புகார்களே. அப்படிப்பட்ட கைதுகளைக் குறித்த செய்திகளைத் தேடித்தேடி தன்


வச்சுட்டான்யா ஆப்பு


வலைப்பூவில் வெளியிடுகிறார் திரு. ராம்.
இந்தக் கைதுகள் அரசாங்கம் குறித்து நழுவி வரும் நம்பிக்கைகளைச் சற்றே தாங்கிப் பிடிப்பதாகவே இருக்கின்றன. வாசித்துப் பாருங்கள், நீங்கள் கையூட்டு கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆட்படும் போது, அதற்கு எதிராக போராடும் எண்ணம் வந்தால் இந்த தளத்தில் உள்ள தகவல்கள் கை கொடுக்கும்


*************


தன் குறையைச் சொல்ல வரும் ஒரு விவசாயியை காக்க வைக்கக்கூடாது என்ற எண்ணத்தில், நேர்மையை தன் அடையாளமாகக் கொண்டு ஆட்சி செய்யும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம், தன் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கான குறைகள் குறித்த மனுக்களை அளிக்க இணையத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி வருகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் கனிணிகளை நிறுவி, அதைப் பயன்படுத்த பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. புகார்களை கனிணி மூலம் நேரிடையாக ஆட்சியருக்கு அனுப்பலாம். பெற்ற புகார்கள் குறித்த விபரங்களை வெளியிட்டு, அதற்கான தீர்வை எட்டிய விபரங்கள் அனைத்தையும்


தொடுவானம்


வலைப்பூவில் பதிந்து வைத்திருக்கின்றனர்


இது வரை தொடுவானம் திட்டம் மூலம் 1630 புகார்கள் பெறப்பட்டு அதில் 1454 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியது.


வலைப்பூ மூலம் குறைகளை / மனுக்களை தெரிவிக்கலாம் என்பதை நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், இது போல் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தலாம் என்பதை அதிகாரிகளுக்கு உணர்த்துவதும் நம் கடமை


*************************
மேலும் வாசிக்க...

Monday, August 23, 2010

சிந்தும் சில துளிகள் - வலைச்சரத்தில் நான்

எழுத்தின் மீதான வேட்கை பள்ளி முடிக்கும் பருவம் முதலே மனதின் ஏதோ ஒரு மூலையில் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. ரகசியமாய் பழைய நோட்டுகளில் கிறுக்கி பதுக்குவதும், கல்வியாண்டின் இறுதிகளின் ஆட்டோகிராப் புத்தகங்களில் வித்தியாசமாய் எதையாவது எழுதுவதையும் வடிகாலாய் பயன்படுத்தி தாகம் தணித்துக் கொண்டிருந்த நிலையில் எழுத்தையும் பேச்சையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்கொண்டது ஜேஸிஸ் மற்றும் அரிமா சங்கங்கள். ஜேஸிஸ் இயக்கத்தின் பயிற்சி வகுப்புகளும் சில வருடங்கள் ஆக்கிரமித்துக்கொண்டது. அதன் மூலம் காவல் துறை உட்பட்ட பல துறைகளைச் சார்ந்தவர்களிடம் பயிற்சிகளை நடத்த இயல்பிலேயே இருந்த எழுத்து ஆர்வம் பெரிதும் துணை நின்றது.

மாற்றம் நிலையானது என்பதற்கிணங்க, தேடலின் ஒரு ஆச்சரியமாய் 2008ஆம் ஆண்டின் இறுதிப் பருவத்தில் தமிழில் தட்டச்ச முடியும், கூடவே நம் மனதில் இருப்பதை வலைப்பூக்களில் பதிய முடியும் என்பதுவும் தெரியவந்தது.

தட்டுத்தடுமாறி வலைப்பூவை உருவாக்கி முதல் இடுகையாய் கண்தானம் குறித்து சின்னதாய் எழுதிய போது, எதையோ சாதித்த திருப்தி மனதை நிறைத்தது. அதே வேகத்தில் ஒரு சில இடுகைகள் வந்த போதும், அடுத்த சில நாட்களில் ஒரு வெற்றிடம் கனமாய் எழுத்தைக் கவ்விப் பிடிக்க, அடர்த்தியாய் எனக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு மௌனம் கிடந்தது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், ஒன்றும் எழுத முடியாமல் அந்த வெற்றிடம் ஆட்கொண்ட நிலையில், வெறும் வாசிப்பு மட்டுமே தொடர்ந்து என்னை வலைப்பூக்களோடு சுவாசிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு கட்டத்தில் என்னை எழுத்து துரத்த கொஞ்சம் கொஞ்சமாய் என்னைச் சுற்றியுள்ள விடயங்களை பகிர ஆரம்பித்தேன்.

அதற்குப் பின்னர் தான் திரட்டிகள் என்று ஒன்று இருக்கிறதென்பதைக் கண்டுபிடித்து, அதில் இணைக்க பல நாட்கள் வேர்த்து விறுவிறுக்க போராடி, அடுத்து வாக்கு என்றிருப்பதை பாலாசியும் நானும் கண்டுபிடித்த கதையை ஒரு தொடராகவே எழுதும் அளவிற்கு சுவாரசியமானது.

நாட்கள் நகர நகர திரட்டிகள் மற்றும் சக பதிவர்களின் உதவியோடு எழுத்து பரவலாக பலரைச் சென்றடைந்த நேரத்தில், சக பதிவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக ஈரோட்டில் நடத்திய பதிவர் சங்கமம் எதிர்பாராத வெற்றியை ஈட்டித் தந்தது. அதே நிகழ்வில் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களை ஒன்றிணைக்க ஈரோடு தமிழ் வலைப் பதிவர்கள் குழுமத்தை துவக்கினோம். அருமையான பதிவுலக நண்பர்களை கொண்டுள்ள ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் நானும் இருக்கின்றேன் என்பது பெருமிதமான ஒன்றாகவே தோன்றுகிறது.

அடுத்து, தமிழ்மணம் திரட்டி நட்சத்திரமாக அங்கீகரித்து ஒரு வாரம் இடுகையிட அளித்த வாய்ப்பு இன்னும் பல நண்பர்களிடம் என் எழுத்தைக் கொண்டு சேர்த்தது. வலைப்பக்கத்தில் எனக்கு அது ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும்.

விவசாயம் சார்ந்த வாழ்க்கையை கால் நூற்றாண்டுகாலம் சுவாசித்த எனக்கு, வளரும் பொருளாதார மாற்றங்களும், அறிவியல் மாயையும், தொழில் வளர்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தை கபளீகரம் செய்வதை பொறுக்க முடியாமல் எழுதிய


மற்றும்


சினிமாவைக் கொண்டாடும் சமூகமும், அரசும் உயிர்வாழ, தன்னை இழந்து உணவு கொடுக்கும் விவசாயி குறித்து இல்லையே என்று ஆதங்கப்பட்ட


வர்ணம் பூசி கண்கள் வழியே மூளையை கவர்ந்திழுத்து விற்கப்படும் கோழிக்குஞ்சுகளைப் போல் நாம் வளர்க்கும் நம் குழந்தைகள் குறித்து எழுதிய


மற்றும்


இடுகைகள் இன்று வாசிக்கும் போதும் என் அடுத்த தலைமுறைக்கு நாம் விடுத்துச் செல்லும் உலகத்தைப் பற்றிய பயத்தை சற்றேனும் கூட்டுவதாகத்தான் இருக்கின்றது.

நம்மைச் சுற்றி நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துச் செல்லும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் தங்கள் வாழ்க்கையை அர்பணித்து, சுற்றுச் சூழல் காக்க எந்த வொரு சுயநலமும் இன்றி பல்லாயிரக்கனக்கான மரங்களை நட்டு வளர்த்தெடுத்த வாழும் கடவுள்களான திரு. நாகராஜன், திரு அய்யாசாமி குறித்து எழுதிய


ஒரு கிராமத்திற்கு கண் தானம் பெற சென்ற போது நடந்த விசயங்களை சுவாரசியமாக பகிர்ந்த


இடுகைக்கு கிடைத்த வரவேற்பு வலையுலக வாசகர்கள் மேல் மிகுந்த மரியாதையைக் கொண்டு வந்தது.

காதலும், சமூகம் சரி விகிதமாய் கலந்து எழுதிய நிறைய கவிதைகளில்...

இன்றும் வலியாய் கிடக்கும் கனமான கவிதையான


இன்னும் மனதுக்குள் வாசனையாய் வீசும்


ஆகியவை நான் என்னிடம் ரசித்தவைகள்

முதல் நாளில் என்னைப்பற்றிய பகிர்வை….

மேகக் கூடலில் பிறந்த மழைத்துளிபோல்
தொப்புள் கொடி அறுந்த நாள் முதல்
வாழ்க்கையில் வளைந்துநெளிந்து ஓடுகிறேன்
நானும் ஒரு மனிதத் துளியாய்....

தொண்டைக்குழிக்குச் சற்றுக்கீழே தொங்கும்
துலாக்கோல் இடவலமாய் ஊசலாடுகிறது
ஒருபக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும்
துகள்களாகப் தொடர்ந்து படிகிறது....

அன்பு, கோபம், கனிவு, குரோதம், காதல்,
செருக்கு, பணிவு, காமம், கர்வம், துரோகம்
என ஏதேதோ இயல்பாய் திணிக்கப்படுகிறது
இன்னும் சில தேடித் தேடிப் பற்றுகிறேன்

விதவிதமாய் வர்ணங்களைப் பூசுகிறேன்...
நித்தமும் மாற்றி மாற்றி வேடம் பூணுகிறேன்
மிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக
ஆனாலும் மிதக்கிறது நல்லவன் தட்டு மேற்பக்கமாய்

என்று என்னைப் பிரதிபலிக்கும் என் கவிதையோடு அறிமுகத்தை நிறைவு செய்யும் நேரத்தில் வலைச்சரத்தில் இந்த வாரம் பணியாற்ற வாய்ப்பளித்த அருமை நண்பர் பதிவர் சீனா மற்றும் வலைச்சரம் குழுவிற்கு நன்றிகளை சமர்பித்து மகிழ்கின்றேன்.

நன்றி

பிரியங்களுடன்
- ஈரோடு கதிர்
மேலும் வாசிக்க...

Sunday, August 22, 2010

வருக! வருக ! கதிர் ---- நல்வாழ்த்துகளுடன் நன்றி குமார்

அன்பு நண்பர்களே !

கடந்த ஒரு வார காலமாக நண்பர் குமார் ஆசிரியப் பொறுப்பேற்று, ஏற்ற பொறுப்பினை திறமையாக நிறைவேற்றி, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 150க்கும் மேலான மறு மொழிகள் பெற்று,மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் வித்தியாசமான முறையில் புதுப்புது பதிவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களைப் பற்றிய சிறு குறிப்புடன் அறிமுகப் படுத்திய விதம் நன்று. துறை வாரியாக - நாளுக்கு ஒவ்வொரு துறையாக - அறிமுகப் படுத்தியமை நன்று.

அருமை நண்பர் குமாரினை - வலைச்சரம் குழுவினர் சார்பினில் நல்வாழ்த்துகளுடன் நன்றி கூறி விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை 23.8.2010 துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்த அருமை நண்பர் ஈரோடு கதிர் அவர்களை வருக வருக என வலைச்சரம் குழுவினர் சார்பினில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இவரைப் பற்றிய அறிமுகம் எதற்கு ? ஊரறிந்த .... என்னும் பழமொழி நினைவிற்கு வருகிறது.

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

வானவில்இன்று வலைச்சரத்தின் இறுதி... இல்லையில்லை இந்த வலைச்சர வார ஆரம்பத்தின் முடிவு நாள். இந்த முடிவு மீண்டும் ஆரம்பமாக மாறலாம். திங்கள் முதல் சனிவரை ஆறு நாட்கள் ஆனந்தமான நாட்கள். இன்று விடைபெறும் நாள்... சந்தோஷங்கள் நிறைந்த பிரிவாக இருந்தாலும் பிரிவு பிரிவுதானே. நாளை முதல் நானும் பின்னூட்டத்தில் உங்களுடன்.

அப்புறம் இன்னைக்கு வானவில்... வானவில் எவ்வளவு அழகானது என்பது எல்லோரும் அறிந்ததே. அதுவும் சின்ன வயதில் நான் படித்த நடுநிலைப்பள்ளியில் மழை வருவது போலிருந்தால் போதும், கிராமத்துப் பிள்ளைங்க எல்லாம் போகலாம் அறிவிப்பு வந்து விடும். புத்தகப்பையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு சத்துணவுக்காக கொண்டு செல்லும் தட்டை மட்டும் தலையில் மழைக்காக கவிழ்த்துக் கொண்டு செல்லும் அந்த சந்தோஷ தருணத்தில் எங்கள் ஊர் கண்மாய்க்குள் அந்த பரந்த வெளியில் வானத்தில் தெரியும் வானவில் கண்கொள்ளாக் காட்சி... அந்த அழகை ரசித்த காட்சி இன்னும் மனசுக்குள் மங்காமல்.

வலைச்சரத்தில் எனது பதிவுகளை அறிமுகப்படுத்திய நண்பர்களை நினைவு கூர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னை அறிமுகப்படுத்திய நட்புகள் எத்தனை பேர் என்பதை நான் அறியேன். இருந்தாலும் நான் வாசித்தவரை எனது பதிவை வலைச்சரத்ததில் வாசிக்க வைத்த நட்புக்கள் இதோ...

காயத்ரி. R
அக்பர்
புலவன் புலிகேசி
ஸ்டார்ஜன்
டி.வி.ஆர்.
கே.ஆர்.பி.செந்தில்

இவர்கள் அனைவரும் எல்லாரும் அறிந்த பதிவர்களே. இவர்களின் அறிமுகத்தால்தான் வலைச்சர ஆசிரியனாய் இந்த ஒரு வாரம் வலம் வர சீனா ஐயா அழைத்தார்கள் என்றால் மிகையாகாது.

இனி, நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களில் சிலரின் வலைப்பூக்களின் அணிவகுப்பு வானவில்லாய்...

கவிதைக்கு

பனித்துளி சங்கர் கவிதைகள்.
மனவிழி
நிலரசிகன் பக்கங்கள்

சிறுகதைக்கு

Vanathy's
நிலாமதியின் பக்கங்கள்
சி@பாலாசி

விமர்சனத்துக்க

Butterfly Surya
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்
Cable சங்கர்


சமூக அக்கறைக்கு

புலவன் புலிகேசி
கழுகு
எங்கே செல்லும் இந்த பாதை


சிந்தனை பதிவுக்கு

மாதவராஜ்
பாமரன் பக்கங்கள்


புத்தக விமர்சனத்துக்கு

செ.சரவணக்குமார் பக்கங்கள்

பாடம் படிக்க

வேலன்
பிலாக்கர் டிப்ஸ் / Blogger tips


நான் மேலே சொல்லியிருக்கும் நண்பர்கள் மட்டுமல்ல இன்னும் நிறைய முகங்கள்... என் வாசிப்பில். இவர்கள் எல்லாமே வலைப்பூவில் பிரபலமானவர்கள் மட்டும் அல்லர், அதையும் தாண்டி எல்லோருக்கும் பிடித்த எழுத்துக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக லிங்க் கொடுப்பது என்பதைவிட இவர்களையும் மற்ற என் நண்பர்களையும் படிக்க...

படிக்க நீங்க...

படிக்க நீங்க வரவேண்டியது...

எங்கே தெரியுமா...?

சொல்லிடவா...

அப்புறம் அடிக்க வரக்கூடாது...

அது...

அட அதுதான்...

அப்புறம் என்ன சரியாத்தானே கண்டுபிடிச்சிருக்கீங்க...

நீங்க சொல்றீங்களா... நான் சொல்லட்டுமா...?

அய்யோ... எல்லோரும் இப்படி ஒரே நேரத்துல சொன்னா எப்படி... பயந்துடமாட்டாங்க நம்ம புள்ளைங்க...

சரி... இப்ப உங்க சார்பா நானே சொல்லிடுறேன்.

நம்ம சே.குமார் இருக்காருல்ல...

இருக்காரா (அட யாருப்பா இது மங்குனி அமைச்சரா... சரி... சரி... தனியா பேசிப்போம்.)

அவரு வலைப்பூவான மனசுக்கு போங்க... அங்க...

என்ன கள்ளாட்டம் பாருடா (இது யாரு... உழவனா... அதான் உங்களுக்காக விளைச்சல் போட்டோமுல்ல... வயக்காட்டுக்கு போய் உழுகாம இங்க உழுதுக்கிட்டு...)

அங்க அவரு பின் தொடர்றவங்க வரிசையை வரிசையா அழுத்தி...

அடங்கொப்புறானே... (சும்மா பேசும் போது குறுக்க வரக்கூடாது தமிழ்க்கவிதைகள் மோகனன்... அப்புறம் அண்ணிக்கிட்ட சொல்லிடுவேன்)

அவங்க வலைக்குப் போய் படித்து...

ஏன் நாங்க நேர போனா... (ஏன் இப்பூடி... நான் என்னத்தை சொல்லிப்புட்டேன்... அப்பாவி தங்கமணி)

அவங்களுக்கு பின்னூட்டமிட்டு அசத்துங்க. மறுபடியும் சொல்றேன்...

மறுபடியும் வேறயா...? (அடச்சுக்கப் போகுது தண்ணி குடிங்க கமலேஷ்)

மறக்காம சே.குமாரின் மனசுக்கு போங்க.

என்னத்தை சொல்ல என்னமா பிட்டைப் போடுறாங்க (கண்டுக்காதீங்க மீன் துள்ளியான்... உங்களுக்கு நெய்மீன் வாங்கித்தாரேன்)

ஹி...ஹி... எல்லாம் ஒரு விளம்பரம்தான்...

என்னடா விளம்பரம்... இந்த சினிமாக்காரங்கதான்... (வேண்டாம் நேசமித்ரன் அண்ணே... அப்புறம் நான் அழுதுறுவேன்...)

சரி விடுங்கப்பா... ஏதோ பயபுள்ள ஆசப்பட்டுட்டான்... (கதிர் அண்ணே... நீங்க ரொம்ப நல்லவரு... நமக்கு கதிர் அண்ணன் ஆதரவு எப்பவும் இருக்குப்பு... நம்மளை அசைக்க முடியாதுடி... ஆமா...)

இரு... நான் சொல்ல வந்தது என்னன்னா.... (அண்ணே... எனக்கு ஒண்ணும் கேக்கலை... மறுபடியும் கூப்பிடுங்க... வச்சிடவா)

என்ன உடன்பிறப்புக்களே நமக்கும் ஒரு விளம்பரம் வேணுமில்ல...

உங்களுக்கு நன்றிகள்:

என்னையும் நம்பி வலைச்சரத்தில் மாலை தொடுக்க அழைத்து நான் தொடுத்த சரங்களுக்கு பின்னூட்டம் இட்டதுடன் மட்டுமல்லாமல் எனது வலைக்கும் வந்து பதிவுகளை படித்து வாழ்த்திய சீனா ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..!

வலைச்சரக்குழுவில் இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!

என்னை ஊக்கப்படுத்தி பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்..!


இதுவரை வலைச்சர ஆசிரியர்களாய் இருந்தவர்களுக்கும் இனிமேல் இருக்கப் போகிறவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்க்ளும்..!

நான் இரவு நெடுநேரம் கணிப்பொறியில் உட்கார உவகையுன் அனுமதித்த அறை நண்பர்களுக்கு (அதிகாலையில் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் இருப்பதால் இரவு 11 மணிக்கு படுக்க வேண்டும் என்பது அறையின் எழுதப்படாத விதி... ) என் மனம் நிறைந்த நன்றிகள்..!

என்னைவிட சிறப்பாக வலைச்சர வாரத்தை நகர்த்த இருக்கும் நாளைய ஆசிரியரை மனதார வரவேற்பதுடன் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றிகள்.

இன்று விடை பெறுகிறேன்.. நாளை சந்திப்போம் என்ற நம்பிக்கையில்...

நட்புடன்
சே.குமார்
மேலும் வாசிக்க...

Saturday, August 21, 2010

சாப்பிடலாம் வாங்க

வலைச்சரத்தில் இது ஆறாவது நாள் நண்பர்களே... ஐந்து நாட்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்ட சந்தோஷத்துடன் இன்று எல்லாரும் சாப்பிடப் போகலாம் வாங்க என்று அழைக்கிறேன். வித்தியாசமான உணவு முறைகளை தங்களது தளத்தில் எழுதிவரும் நண்பர்கள் குறித்து இங்கு பகிர்ந்து கொள்வோம்.சாப்பாடு...

எல்லோருக்கும் பிடித்த ஒன்று... யாரும் சாப்பாட்டை வெறுப்பதில்லை. தங்களது உடல் நலம் கருதி சாப்பாட்டில் கட்டுப்பாட்டை கடைபிடித்தாலும் மிகவும் பிடித்த பதார்த்தத்தை பார்த்ததும் நாவில் எச்சில் ஊறுவது என்பது இயற்கையே. அப்படிப்பட்ட சாப்பாட்டுக்கு பெயர் போனது எங்கள் செட்டிநாட்டுப் பகுதி, சாப்பாட்டுக்கு என்று அதிகம் செலவு செய்பவர்கள் நாங்கள். விருந்து விஷேசம் என்றால் தடபுடலான விருந்து சமைத்து வாழையிலையில் சாப்பாடு போட்டு உவசரிக்கும் அழகே தனிதான்.

சாப்பாடு குறித்த பகிர்வில் நாமும் அதனுடன் தொடர்பு உடையவர் குறித்து சில தகவல்களை பார்க்கலாம் என்றால் யாரைப்பற்றியும் என்னிடன் விரிவான தகவல்கள் இல்லை எனவே சிலரை வரிசைப்படுத்துகிறேன்.

உறவில்...

என் அம்மா
என் மனைவி
என் அத்தை
என் சமையல்கார மாமா

வலை உறவில்... (எல்லாரையும் பகிர்ந்து கொள்ள முடியாது, விடுபட்டவர்கள் மனதில் இருக்கிறீர்கள்)

சிநேகிதி மேடம்
மலிக்கா அக்கா
சகோதரி ஆயிஷா உமர்
சகோதரி மேனகா இன்னும் பலர்.

இனி...

"அடியேய் இதுவரை ஆஸ்டல்ல தங்கி படிச்சே சரி... இப்ப படிப்பு முடிஞ்சாச்சு. உனக்கு கல்யாணம் பண்ணிப்போனா புருஷனுக்கு சமைச்சுப் போட வேணாமா... சும்மா டிவி முன்னால தூங்கி விழுகாம அம்மாகிட்ட கூடமாட நின்னு சமையல் கத்துக்கலாமே..?"

"போ பாட்டி சமையல் எதுக்கு கத்துக்கணும். கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் போறப்ப சமையலுக்கு ஆள் வைப்போம். இல்ல பாக்குற மாப்பிள்ளைய சமைக்கத் தெரிந்தவரா பாத்து கட்டுங்க..."

"அடியேய்... எத்தனை சமையக்காரன் வைத்தாலும் பொண்டாட்டி கையால வரக்காப்பி வாங்கிக் குடிச்சா கிடைக்கிற சந்தோஷம் சமையல்காரி கொடுக்கிற எதுலயும் கிடைக்காது"

"பாட்டி விஜய் பாட்டு... சும்மா கத்தாத..."

"ஆமாண்டி நாளைக்கு அவன் தான் உன்னை கட்டிக்கப் போறான். இங்கவாடி..."

"போம்மா... பாட்டி மாதிரி நீயும் பாடம் நடத்தாதே"

"இங்க வாடின்னா... நம்ம கமலம் மக ரம்யா வீட்லதான் இருக்கா. நீ எனக்கிட்ட கத்துக்க வேண்டாம். அவ எதோ சமையல் படிப்பு படிச்சிருக்கா. அவகிட்ட தினமும் கொஞ்ச நேரம் போய் கத்துக்கோயேன்."

"என்னம்மா... சரி போறேன்... ஆனா வீட்ல சமச்சுக் காமின்னு சொல்லிடாதே"

மறுநாள்...

"வா கவி... அத்தை சொன்னாங்க... சமையல் கத்துக் கொடுக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளு இல்ல அதுவும் இல்லாம நான் படிச்சது பைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் யூசாகும். நம்ம சமையல்ல நானும் தத்துப்பித்துதான். இப்ப நெட்ல நிறையப் பேரு சமையல் குறித்த பகிர்வுக்காக வலைப்பூக்கள் வச்சிருக்காங்க. அதுல பார்த்துத்தான் கத்துக்கிறேன். வா உனக்கும் சில் பிளாக்ஸ் (வலைப்பூக்கள்) முகவரி தாரேன்."

இருவரும் கணிப்பொறி முன் அமர, 'நாம படம் பார்க்கவும் சாட்டிங் பண்ணவும் மட்டுமே பயன்படுத்துற கம்ப்யூட்டரை இவ பயனுள்ள வகையில பயன்படுத்துறாளே' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் கவிதா.

"இது தூயாவின்ட சமையல் கட்டு, இதுல போய் மீன் பொரியல் கத்துக்கிட்டேன். சாம்பார் வைக்க எங்க கத்துக்கிட்டேன் தெரியுமா யோகேஸோட சமையல்..சமையல்.. வலைப்பூவுலதான்."

"ம்"

"கல்யாணகமலாங்கிறவங்க தாளிக்கும் ஓசைன்னு சொல்லி பொடி வகைகள் செய்யிறது குறித்து சொல்லியிருக்காங்க.

"அது சரி... இதப் பாத்து சமையல் செய்தா சரியா வருமா..?"

"ஏன் சரியா வராது... இந்தா இந்த பணியாரத்தை சாப்பிடு... சொல்றேன்"

"ம்.. சூப்பரா இருக்குடி... அத்தை செஞ்சாங்களா?"

"நாந்தான் செஞ்சேன்..."

"நீயா?"

"ஆமா... Home of Indian Cuisine Recipes அனுராதா முரளிதரன் எழுதியிருந்த குறிப்பப் பார்த்து செஞ்சேன். எங்கம்மா செஞ்சா சட்டியில ஒட்டிக்கிட்டு பிச்சுதான் எடுக்கணும். இதை பார்த்து அம்மாவுக்கே ஆச்சர்யம். நிறைய சாப்பிட்டாங்க."

"அப்புறம் பூண்டுக்குழம்புக்கு தமிழ் சமையல் வலைப்பூ திரட்டிக்கு போனேன். கோழிப்பையன் சமையல் குறிப்பு பார்த்து கொத்தமல்லி சேமியா கூட பண்ணியிருக்கேன் தெரியுமா?

"அது என்னடி கொத்தமல்லி சேமியா... புதுசா இருக்கு..."

"ஆமா... புதுசு புதுசா திங்க் பண்றதுன்னா இவருக்கு ரொம்ப பிடிக்கும்."

"ஏண்டி சிக்கன், மட்டன்..."

"அதானே... சிக்கன் பிரியையில்ல நீ... அதுக்கும் ஒரு வலைப்பூ இருக்கு... ராகினியோட சமையல் குறிப்புகள் வலைக்குப் போ அழகாச் சொல்லித்தாராங்க."

"கவி... ஒரு கிராமமே சமையல் குறிப்புக்காக வலை ஆரம்பிச்சிருக்குன்னா பாரேன்."

"கிராமமா... என்னடி சொல்றே?"

"ஆமா.. காசாங்காடு கிராம சமையல்ன்னு வலைக்குப் பேருடி..."

"இணையத்துல இவ்வளவு இருக்கா... எனக்கு சாட்டிங் மட்டுந்தான் தெரியும்"

"சரி இனி கத்துக்க... அப்புறம் கீதா தெய்வசிகாமணிங்கிற அம்மா சமையல் குறித்து புத்தகமே போட்டிருக்காங்க. அது குறித்து அவங்க ILAKKIYA POONGAங்கிற இந்த தளத்துல பகிர்ந்து இருக்காங்க.

"சரிடி நான் போறேன்... எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு..."

"என்ன வேலை..."

"அது வந்து... தூங்கணும்... இங்க வந்தப்புறம் தினமும் கரெக்டா பதினொன்றை மணிக்கு படுத்து ரெண்டு மணிக்கு எந்தரிச்சு சாப்பிடுவேன்... அது பழக்கமாயிடுச்சு. நாளைக்கு பாக்கலாம்."

"இரு நான் காலிப்பிளவர் சூப் ரெடி பண்ணித்தாரேன். சாப்பிட்டுப் போய் தூங்கு.."

"காலிபிளவர் சூப் கூட வைப்பியா..."

"ஆமா... நேத்து அம்மாவின் சமையல் பாத்தேன். அதான் இன்னைக்கு செய்ய ரெடி பண்ணியிருக்கேன்."

"அத்தைக்கிட்ட கத்துக்கிட்டியா..."

"இல்லடி... இதுவும் வலைப்பூதான்.."

சமையல் அறைக்குள் நுழைந்த ரம்யா 'என் சமையல் அறையில்' என்று பாட,

"அடியேய் பாடுறேன்னு சூப்பை கெடுத்துடாதே" என்றபடி உள்ளே வந்தாள் கவிதா, "பாட்டில்லைடி இந்த சைட்ல கீதா, பீட்ரூட் ஜாமுன் அல்வா செய்ய சொல்லியிருந்தாங்க... ப்ரிட்ஜ்ல பீட் ரூட்டை பார்த்ததும் அவங்க வலை ஞாபகம் வந்துச்சு."

"இந்தா சூப்... அப்புறம் சிவாஜினி பாலராஜனின் சமையல் பொழுதுங்கிற வலைப்பூ பாரு... அப்பா... சமையல் வலைப்பூக்களின் தொகுப்பே இவர்கிட்ட இருக்கு. இது ஒண்ணு போதும் அழகா சமையல் கத்துக்கலாம்."

"சூப் சூப்பர்டி... நீ சமையல்ல கில்லிடி... நான் வர்றேன்"

வீட்டுக்குள் நுழைந்தவளிம் "என்னடி சமையல் கத்துக்கிட்டியா... இல்ல அவளையும் கெடுத்துட்டியா..." அம்மா கேட்க-

"ஒரே வாரத்துல நான் உனக்கு சமைச்சுக் காட்டுறேன். நானே கத்துக்குவேன்." என்றபடி மடிக் கணியை உயிர்பித்து வயர்லெஸ் நெட் கிடைக்குதான்னு தேட ஆரம்பித்தாள்.

சரி நண்பர்களே... சமையல் குறித்த தளங்களுக்குப் போய் பார்த்து பின்னூட்டம் இடுங்கள். நாளை விடைபெறும் நாள். வானவில் கோலங்களோடு வருகிறேன்.

ஆதங்கம்: மற்ற பதிவுகளுக்கு வந்தது போல் இல்லாமல் எனது விளைச்சல்கள் பதிவுக்கு வறண்ட வயல்களாய்தான் பின்னூட்டங்கள். விவசாயத்தை மறந்த நாம் அது குறித்த பதிவுகளுக்கும் ஊக்கம் அளிக்க ஏனோ மறுக்கிறோம். அதனால்தான் விவசாய வலைப்பூக்கள் விளைச்சலை தரவில்லை போலும். கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நட்புடன்
சே.குமார்
மேலும் வாசிக்க...

Friday, August 20, 2010

விளைச்சல்கள்

வலைச்சரத்தில் இன்று ஐந்தாவது நாள் நண்பர்களே... இதுவரை தமிழ், கவிதை, சிறுகதை என பல்வேறு விளைச்சல்களை பகிர்ந்து கொண்ட நாம் நம் நாட்டின் உயிர்நாடியாம் விவசாயம் குறித்த பதிவை பார்க்கலாம் தோழர்களே..."கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" என்றான் கவிஞன். அப்படிப்பட்ட விவசாயி குறித்து பார்க்கலாம் என்று விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த எனக்குள் உதித்த எண்ணத்தை செயல் படுத்த நினைத்து விளைச்சல்கள் என்று தலைப்பிட்டு விளைச்சல்களை தேடிய எனக்குள் மிஞ்சியது ஏமாற்றமே...

ஒரு சிலர் மட்டுமே சில கட்டுரைகளை பகிர்ந்திருக்கிறார்கள். சிலர் விவசாயம் தொடர்பான வலைப்பூவை ஆரம்பித்து அதில் சில இடுகைகளை இட்டு பின் தொடர்பவர்கள் இல்லாமல் தாங்களும் தொடராமல் நம்ம ஊர் விவசாய நிலம் போல் வறண்டு போய் இருக்கின்றது.

நான் இங்கு பகிர இருக்கும் நண்பர்களிம் இடுகைகள் கூட 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதியவைதான். நான் தேடியதில் கிடைக்காத விவசாயம் உங்களுக்குத் தெரிந்து விளைந்திருந்தால் எனக்குத் தெரியப் படுத்துங்கள்.

சரி... வழக்கம் போல் இந்த இடுகையின் தலைப்பு தொடர்பான ஒருவர் குறித்து பகிரலாமே... அந்த ஒருவர்....

விவசாயத்துறையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் எனக்கும் விவசாயம் பற்றி அறியத் தந்த எனது தந்தை என்னைப் பொறுத்தவரை விவசாயத்துறையில் வானுயர நிற்கிறார்.

கண்மாய் நிறைந்ததும் விதை நெல்லை சாக்கில் கட்டி தண்ணீருக்குள் வைத்து முளைக்க வைத்து நாற்றங்காலை உழுது விதை விதைத்து மறுநாள் விதை விதைத்த வயலில் தண்ணீரை வடித்து வயலை காயவைத்து பயிர் முளைத்தது முதல் அதை பறித்து நடுவது வரை பக்குவம் பார்ப்பதாகட்டும்...

நாற்றைப் பறித்து சிறு சிறு கட்டுகளாக கட்டி (நாற்று முடி) அவற்றை நூறு நூறாக எண்ணி (குப்பம் என்பார்கள்) நடவு வயலில் நட்டு, அதற்கு உரமிட்டு நட்ட பயிர் நிமிர்ந்த வளர்வதை (கருநடை திரும்புதல்) பார்த்து மகிழ்ந்து நீர் பாய்ச்சி, உரமிட்டு வளர்ப்பதாகட்டும்....

கதிர் பருவம் அடைந்து பால் பிடிக்கும் காலத்தில் (பொதி கட்டுதல்) அதற்கு வேண்டிய உரங்கள், மருந்துகள் இட்டு பார்த்துப் பார்த்து வளர்த்து கதிரானது அறுவடை செய்து கட்டுக் கட்டுகளாக கட்டி அவற்றை களத்திற்கு கொண்டு செல்வதாகட்டும்...

கதிரை அடித்து நெல்லை எடுத்து அவற்றை தூற்றி காற்று போதவில்லை என்பதால் சொளகு (முறம்) வீசி தூசிகளை நீக்கி மூடைகளில் பிடித்து வீட்டிற்கு கொண்டு வருவதாகட்டும்...

இப்படி அந்த மூன்று மாதங்கள் வயல் வேலையில் வெயில் மழை பாராது உழைத்துக் களிக்கும் மனிதர்கள் என் தந்தை போல் பலருண்டு. அவரிடம் இருந்து விவசாய வேலைகள் நான் கற்றபோது அவர் சொல்லும் வேலையை செய்ய மறுத்து திட்டு வாங்கிய அனுபவங்கள் இருந்தாலும் தற்போது விவசாயம் இழந்த பூமிக்கு நடுவே இருக்கும் எங்கள் ஊரைப் பார்க்கும் போது மனசு வலிக்கத்தான் செய்கிறது.

சரிங்க... இனி விவசாயம் சம்பந்தமான இடுகைகள் இடும் நண்பர்கள் குறித்து பார்ப்போமா?.


விவசாயம் அழிவதற்கு அரசியல்வாதிகள்தான் காரணம் என்று அடித்துச் சொல்கிறார் வலைப்பூவில் இயற்கை விவசாயம் செய்யும் ராஜராம்குமார். தனது கட்டுரையில்

"இன்றைய தேதியில் விவசாயியாக பிறக்க யாருக்குமே விருப்பம் இல்லை. இந்த ஈனத் தொழில் என்னோடு போகட்டும். என் மகன் விவசாயம் செய்ய வரவே கூடாது. எப்பாடு பட்டாவது எட்டாவதோ, பத்தாவதோ படிக்க வைத்து, ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறான். மில் வேலையில் கிடைக்கும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தை வாங்கத்தான் ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்படுகிறானே தவிர, வேளாண்மை செய்ய ஆசைப்படுவதில்லை. அவ்வளவு ஏன், பட்டரை வேலைக்கெல்லாம் தயாராக இருக்கிறார்கள். மண்வெட்டியை எடுத்து வரப்பை வெட்ட வேண்டும் என்றால் சிதறி ஓடி விடுகிறார்கள்." என்று தனது வேதனையை விதைத்து இருக்கிறார்.

என்ன நண்பர்களே இவர் கூறுவது உண்மைதானே...
விவசாயம் - லாபம் மிக்க தொழில் என்று சொல்லும் செந்தில்நாதன் செல்லம்மாள், அதற்குத் தேவை ஒரு விவசாயப் புரட்சி மட்டுமே என்கிறார். இவரது பதிவில்

"இந்தியாவின் இதயம் கிராமம்.
இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.
அடடா...
ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer..
மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,
விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...
தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்... "
என்கிறார். மேலும் என்ன சொல்கிறார் என்று படித்துப்பாருங்கள் தெரியும்.
பருத்திக் காடு - விவசாயம் பற்றி போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் கோயமுத்தூர்க்காரரான சஞ்சய்காந்தி. இவர் சொல்லும் பருத்தி விவசாயம் செய்வதை எவ்வளவு அழகா சொல்கிறார் பாருங்கள்.

"வயலின் இரு எல்லைகளுக்கும் எட்டும் வகையில் நீளமான ஒரு கயிறில் இரண்டு அடி இடைவெளிவிட்டு சிறு சிறு துணிகளை இடையில் திணித்துவைத்துக் கொள்வோம். கயிறின் இரண்டு முனைகளையும் ஆளுக்கொருவராகப் பிடித்துக் கொண்டு வயலின் இரண்டு எல்லைகளிலும் இருவர் நின்றுக் கொள்வார்கள். பருத்தி நட வேண்டிய வயல்களின் பரப்பளவுக்கு ஏற்ற மாதிரி கயிறுகளின் எண்ணிக்கையும் நடுபவர்களின் எண்ணிக்கையும் இருக்கும். கயிற்றில் இரண்டடிக்கு ஒரு துணி வைத்திருபப்து போல் கயிறு பிடித்திருப்பவர்களின் கையிலும் இரண்டடி நீளத்தில் ஆளுக்கொரு குச்சி வைத்திருப்பார்கள். அப்போது தான் எல்லாப் பக்கமும் இரண்டு அடி சீரான இடைவெளி இருக்கும். ". என்று பருத்தி விவசாயம் குறித்து பக்குவமாக விளக்குகிறார்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று சொல்லும் மா. சிவக்குமார், விவசாயி - ஒரு சிறு முயற்சி என்று தலைப்பில் இப்படி வரிசைப்படுத்துகிறார்.

அ. விவசாயத் திட்டமிடல்

ஆ. ஆண்டின் சராசரி நுகர்வு மற்றும் ஒரு ஆண்டின் சராசரி நுகர்வின் அதிகரிப்பு (உதாரணம்: ஒரு ஆண்டிற்கு 1000 கிலோ நுகர்வு மற்றும் ஒரு ஆண்டிற்கு 10 கிலோ நுகர்வின் அதிகரிப்பு என்று கொள்ளலாம்.)

இ. விளைவுத்திறன் (10 % இயற்கையின் பாதிப்பு என்று கொள்ளலாம்). இது 1000 + 10 % க்கு அதிகமாக இருந்தால் அதனை விளைவிக்க கட்டுப்பாடு அவசியம். குறைவாக இருந்தால் அதிகரிக்க ஆராய்ச்சிகள் தேவை. நாம் இப்போதைக்கு 1000 +10 % சரியாக விளைவிக்கபடுவதாகக் கொள்ளலாம்.

ஈ. இந்த விளைவுத் திறனை சமச்சீராக 360 நாட்களுக்குப் பிரித்தால் நாளுக்கு 3 கிலோ வருவதாக் கொள்வோம்.
சுடுவது சுகம் (Its HOT...yaa!!) என்ற வலைப்பூவில் ஆசிரியர் யாரென்று சொல்லவில்லை ஆனால் இந்தக் கட்டுரையின் கீழே சந்திப்பு: வி.சி.வில்வம் என்று கொடுத்துள்ளார். இவர்தான் ஆசிரியர் என்று நினைக்கிறேன். இவர் நம்மாழ்வார் என்ற விவசாயியின் பேட்டியை அழகாக தொடுத்துள்ளார்.

"என் பெயர் கோ. நம்மாழ்வார். பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் இளங்காடு கிராமம். கோவிந்தசாமி - ரெங்கநாயகி என் பெற்றோர்கள். தொடக்கக் கல்வியைக் கிராமத்தில் முடித்த நான், இளங்கலை வேளாண்மைப் பட்டப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முடித்தேன். பின்னர் 1963 இல் கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தேன்" என திரு. நம்மாழ்வாரின் பேட்டி பயிராய் வளர்கிறது.
ரமீஸ் ஹுசேன் இப்படியும் விவசாயம் செய்யலாம் என்கிறார். நீங்களும் பாருங்களேன். (இது ஜாலிக்காக...)
விவசாயம் குறித்த இந்த இடுகைகள் எல்லாம் புதுப்பிக்கப்படாத வலைகளில்தான் இருக்கின்றன என்ற வருத்தத்துடன் இன்னும் சில வலைகளை பார்க்கலாம் என்று தேடியதில் கண்ணில் பட்டது விவசாயம்/விவசாயி (கூட்டுப்பதிவு) என்ற வலைப்பூ.

இதை டண்டணக்கா மற்றும் ஸ்ரீ இருவரும் இணைந்து ஆரம்பித்து "இது விவசாய வாழ்கை, உணர்வுகள், செய்திகள், செய்முறை, தகவல்கள், பரிந்துரைகள், மற்றும் விவசாயம் சார்ந்த எழுத்துக்ள் கொண்ட கூட்டுப் பதிவு ... இங்கு எழுத உங்களையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம் !!!" என்று நாற்றுப் பாவியதுடன் விட்டுவிட்டார்கள். அதில் விளைச்சலைக் கொண்டு வந்தால் நல்லாயிருக்கும்.

சரி நண்பர்களே... விவசாயம் தொடர்பான இந்த இடுகையில் விவசாயம் செய்து அறுக்காத வயல்களே அதிகம். வாசிப்பதோடு நிறுத்திவிடாமல் தொடர்பதிவுகளை சில நாட்கள் தள்ளிவைத்து விட்டு விவசாயம் குறித்து ஒரு பதிவிடலாமே.

சரி நண்பர்களே இன்று விவசாயம் பண்ணியாச்சு... நாளை புத்தரிசி இட்டு புதுப்பொங்கல் வைத்து கூட்டு பொரியல் என விதவிதமாக சமைத்து ஒரு விருந்தே படைக்கலாம் என்றிருக்கிறேன். மறக்காம நட்பும் - சுற்றமும் வந்துருங்க.

நட்புடன்,
சே.குமார்.
மேலும் வாசிக்க...

Thursday, August 19, 2010

சிறுகதை சிற்பிகள்வணக்கம் நண்பர்களே, உங்கள் உடலும் உள்ளமும் சுகந்தானே? நேற்று கவிஞர்களின் கவிமழையில் நனைந்த நாம் இன்று சிறுகதை சிற்பிகளின் செதுக்கல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

அதற்கு முன்னர் கடந்த இரண்டு தினங்களில் தமிழுக்காக உ.வே.சாவையும் கவிதைக்காக பாரதியையும் பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்ட நான் இன்று சிறுகதைக்காக அதேபோல் ஒரு பகிர்வுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

சிறுகதை இலக்கியத்தில் ஜீவா, வல்லிக்கண்ணன், பொன்னீலன் உள்ளிட்ட ஜாம்பவான் ஜொலித்த தமிழகத்தில் நான் எல்லோரும் அறிந்த எழுத்தாளரை பகிர்ந்து கொள்வதைவிட நான் மதிக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர் ஒருவரைப் பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன்.

அவர் எனது கல்வித்தந்தை பேராசான் மு.பழனி இராகுலதாசன்.

மதுரைக்கு அருகில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் பிறந்தவர். பழனி என்ற தனது பெயருடன் புத்தரின் மகனான இராகுலனின் பெயரையும் சேர்த்து பழனி இராகுலதாசன் எனற புனைப்பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என முப்பரிமானத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்மீதான காதலால் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் படித்து தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது பணிக்காலத்தில் மாணாக்கர்கள் மேல் பேரண்பு கொண்டு அவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்தவர், தற்போதும் செய்து வருபவர்.

அகில இந்திய இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமிக்காக நான்கு நூல்கள் படைத்தவர். இவரது நிகழ்காலங்கள் சிறுகதைத் தொகுப்பு 1989ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ''ஜீவா விருது" பெற்றது.

சிறுகதை குறித்த இவரின் கருத்து "சிறுகதை என்னும் மிக நுண்மையான உருவம் இன்னும் கைக்குள் அகப்படத்தான் இல்லை. நழுவி நழுவிப் போய்விடுகிறது. எழுத்துலகில் இமயம்போல் நிற்கின்ற கார்க்கியும் கூட தனது படைப்புக்களில் 'கிழவி இஸெர்கில்' என்ற படைப்பில் மட்டும்தான் இசைவான வடிவமைப்பு அமைந்துள்ளதாக கருதுகிறான். எனது கருத்துகளுக்கு உருவம் கொடுக்க முனைந்து தோல்வியுற்றதின் அடையாளங்களாகவே எனது கதைகளை கருதலாம்." இதுதான்.

சரி, இனி நாம கதைக்குள்ள போவோமா...?

"டேய் மணி... அங்க என்னடா பண்றே... நான் கழுதையா கத்துறது காதுல கேட்கலை... அந்த கம்பியூட்டர் பொட்டியில அப்புடி என்னதான் வச்சிருக்கியோ...?"

"ஏம்மா... கத்துறே.. இப்ப உனக்கு என்ன வேணும்...?"

"இங்க வாடா... அங்கிருந்து கத்தாம... உங்கப்பா மாடசாமி அண்ணன் கடைக்கு பொயிட்டாரு வெட்டிப்பேச்சு பேச... நேரத்துக்கு சாப்பிட வரமாட்டாரு... போயி வரச்சொல்லுடா..."

"ஏம்மா... போன் பண்ணி வரச்சொல்லும்மா..."

"ஏந்தொரை... போகமாட்டிங்களோ... அப்படியே சித்ரா அத்தைக்கிட்ட பணம் கேட்டிருந்தேன் அதையும் வாங்கிட்டு வாடா... உங்கப்பனுக்கு தெரியவேண்டாம்..."

"ஆமா... இந்த வெயில்ல போகணுமாக்கும்..."

"என்னடா முணங்குறே... கம்பியூட்டரை கட்டிக்கிட்டு அழுகுறே... அதை தொலைச்சாத்தான் நீ உருப்புடுவே..."

"இப்ப என்ன... தேவையில்லாம பேசாதே... இந்தா போறேன்..."

அடச்சே... பதிவர் அறிமுகமுன்னு சொல்லிட்டு நான் கதை சொல்லிக்கிட்டு இருக்கேனே... என்ன சீனா ஐயா நீங்களாவது ஞாபகப்படுத்தக்கூடாதா?

சரி... சரி... கதை எழுதுவதில் சிறந்த சகோதரிகள் பவித்ரா, ஹேமா நண்பர்கள் ஸ்டார்ஜன், அக்பர் இவங்கிட்ட விட்டுடுறேன். இனி இந்தக் கதையை அவங்க பார்த்துப்பாங்க.

இப்ப பதிவர்களோட அறிமுகம் பார்க்கலாம். இவருதான் அவரு.... இந்த பேர்ல எழுதுறாரு... அவரோட பதிவுல சில வரிகள்ன்னு கவிதை ஊர்வலத்தில் போட்டது போலில்லாமல் சற்று மாறுதலாய் பதிவர் அறிமுகம் இஙகே.

ப.செல்வக்குமாரின் 'பெட்டிக்கடை எங்கே ..??'

"ஐயா ,இங்க பக்கத்துல பொட்டிக்கடை ஏதாவது இருக்குதுங்களா ..?

"பொட்டிக்கடையா எதுக்கு ..?

"ஒரு Cigarette வாங்கலாம்னு கேட்டேனுங்க ..!

"உனக்கு என்ன வயசாச்சு தம்பி ..?

"22 ங்க..

"பாத்தா படிச்சா பையனாட்டம் தெரியுற , Cigarette பிடிக்கறது தப்புன்னு தெரியாத..?"

விஜய் மகேந்திரனின் 'அடைபடும் காற்று'

திருவாளர் மகாலிங்கம் பிள்ளை அவர்களுக்கு,

வணக்கம்.

நலந்தானே. நீங்கள் சென்னை நகரத்தை விட்டுச் சென்ற சில நாட்களில் பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. இரண்டு நண்பர்கள் மரணமடைந்து விட்டனர். நமது வயதுடைய அவர்களின் மரணமும் பேரடைஸ்ஸோ ஈவினிங் டிரைவ் இன் மூடப்பட்டதும் தான் இக்கடிதம் எழுதக் காரணமாக அமைந்து விட்டது. செல்போனில் பேச எப்போதும் எனக்கு ஒருவித தயக்கம்.

கடந்த மூன்று வருடங்களில் நாம் பேசிக்கொண்ட தகவல்கள், பகிர்ந்து கொண்ட செய்திகள், உறவுமுறை குறித்த உரையாடல்கள், பரஸ்பர உடல் வியாதி குறித்த காரணங்கள் இவையெல்லாம் ஒரு வகையில் முடிவுக்கு வந்து விட்டன. அது குறித்த வேதனையின் வடிகாலே இக்கடிதம். நாம் இருவரும் இதுவரை செல்போனில் பேசிக்கொண்டதை நினைவு கூர்கிறேன்.

சுப.வீர. சுப்பையாவின் 'ஆட்டியவனும் தள்ளியவனும்'

இராமநாதன் செட்டியார் தன் மனைவி சீதை ஆச்சியுடன் அங்கே போய்ச் சேர்ந்தபோது காலை மணி பத்து.

வெயில் சூடு பிடிக்கத் தொங்கியிருந்தது. காரை ஓட்டிக் கொண்டு வந்த அவர் வீட்டு டிரைவர் ஒரு புளிய மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினார். செவர்லே ஸ்டேசன் வாகன் வண்டி. முன்பக்கம் மெட்டல் பாடி, பின்பக்கம் மரத்தினால் பாடி கட்டப்பட்டிருக்கும். ராசியான வண்டி என்பதற்காகச் செட்டியார் அதை விடாமல் வைத்திருந்தார்.

இராமனாதன் செட்டியாருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள். இங்கே மட்டுமல்ல, மலேசியா, பினாங். கிள்ளான்ங், சிரம்பான் போன்ற இடங்களிலும் ஏகப்பட்ட சொத்துக்கள். அவர் மனைவி சீதை ஆச்சியும் வரும்போது வெள்ளமாகக் கொண்டு வந்தார்கள்.

வானவர்கோனின் 'வயலோர நினைவுகள்'

மோட்டார் சைக்கிளை வீதியால் விரைவாகவும் ஓட்ட முடியுதில்ல, கண்ட கண்ட இடத்தில் எல்லாம் வேகத் தடையும் காணாக்குறைக்கு சோதனைச் சாவடிகளும்........ , மோட்டார் சைக்கிளை மெதுவாக உருட்டிச் சென்று எதிரே நிற்கும் ஆமிக்காரனிடம் அடையாள அட்டையைக் காண்பித்து, அவனின் சைகை கிடைக்கும் வரை காத்து நின்று, அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தேன்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முருகேசியையும் கூட்டிக் கொண்டு வயலுக்க போயிற்று வருவம். ஆத்தில குளிச்சி எவ்வளது நாளாயிற்று ?

அந்தப் பசுமையான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை, பசுமையான சூழல் கூடவே இருந்தும் அனுபவிக்கத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் தானே? அந்த வரிசையில் தான் நானும் இருக்கிறேனோ!

ஜீவியின் 'சங்கிலி'

அறிவுடைநம்பி ரொம்பவும் சுவாரஸ்யமான மனுஷன். எங்கள் தெருக்கோடியில் 'ஆட்டோமொபைல் வொர்க்ஷாப்' வைத்திருக்கிறான். என்னிடம் ஒரு இரண்டாம் கை' மொபெட் இருக்கிறது. அதற்கு அடிக்கடி வரும் 'நோவு'க்கெல்லாம் கைகண்ட மருந்து தரும் வைத்தியன் அறிவுடைநம்பி தான்.

முதல்முறை என் வண்டியை அவனிடம் ரிப்பேருக்குக் கொண்டு போனபோது, "ஸ்டார்ட் ஆகலேப்பா.." என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தேன்.

"ஸ்பார்க் ப்ளக் க்ளீன் பண்ணீங்களா?.." என்று கேட்டுவிட்டுக் கீழே குனிந்தான்.

மதிபாலாவின் 'காவ்யா'

ரயிலில் காற்று வருவதும் போவதுமாய் இருந்தது…கண்ணாடியை மேலும் , கீழுமாய் தூக்கிவிட்டுக்கொண்டிருந்த என்னை ஒரு தினுசாய்ப் பார்த்தார் அந்தப் பெரிசு…என்ன நினைத்தாரோ எதிர் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். வாழ்க்கைத் துணை சரியில்லாத போது , இது போன்று அவ்வப்போது கிடைக்கும் வெளியூர் பயணங்களும் , இரயில் பயணங்களுமே நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும்.

எந்நேரமும் , அந்தக் காலத்து “வால்வு” ரேடியோ போலக் கதறிக்கொண்டிருக்கும் மனைவி அமைவதெல்லாம் , இறைவன் கொடுத்த சாபம் என்பதை உணர்ந்தவன் நான்…நீங்கள் எப்படி? நினைவுகள் எங்கேயோ இருந்தன……..


அந்த வீட்டுத் தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. அந்த வீட்டுப் பெண்மணி தான் எடுத்தார். பேசிவிட்டு வந்தவர் கணவனிடம், "கிராமத்திலிருந்து ஃபோன் வந்திருக்கு. என் கூடப் பிறந்த அண்ணன் சீனிச்சாமி இறந்துட்டானாம். நமக்கும், அவனோட பத்து, பதினெஞ்சு வருஷமா தொடர்பே இல்லாமப் போச்சு. என்ன பண்றது? கூடப் பொறந்துத் தொலைச்சுட்டானே" என்றார்.

கணவர், "இப்ப என்ன பண்ணலாம்? சாவுக்குப் போகலாமா, வேண்டாமா?".

மனோகரன் கிருட்ணனின் 'மனக்கதவுகள் நனைகின்றன'

“ டேய் மழையிலே நனையதடா காச்சல் வந்துட போதுடா” என்று அம்மா கத்தும் கத்தல் இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

மழைக் காலங்களில் மழையில் நனைந்து காச்சல் வந்தது போல் நடித்து மறுநாள் பள்ளிக்கு மட்டம் போட நினைத்து மழையோடு ஒட்டிக் கொண்டு அண்ணனிடம் அடி வாங்கிய நினைவுகள் எல்லாம் எள்ளி நகையாடுகின்றன.

“ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... ஜூரமாவது மன்னாங்கட்டியாவது. போடா ஸ்கூலுக்கு” என்று துரத்தும் அண்ணனும். வந்து வந்து தலையை அனைத்துபடி முகத்தில் கையை வைத்து தொட்டுப் பார்த்து காச்சல் அடிக்குதா கண்ணு ஏன்று தாலாட்டும் தாயின் பாசமும் மழைக்காலத்தில் நிழற்படமாய் விரிந்துக் கொண்டிருந்தன

நாகூர் இஸ்மாயில் 'ராத்திரி சாப்பாடு'

எனக்கு பசி எடுத்த போது சாயங்காலம் மணி 5. நான் அன்று மதியாணம் சாப்பிட வில்லை. ஏனென்றால் அலுவலகத்தில் வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, ஆயிடுச்சு என்பதை விட ஆக்கி விட்டேன் என்பது தான் பொருந்தும்,

மேலாளருக்கு என் மீது ஏற்கனவே காண்டு, நான் எப்போ தப்பு செய்வேன் என்று தான் காத்துக் கொண்டிருந்தார், அவருக்கு நானே ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விட்டேன். கேட்கவா வேணும்.

ப்பாதுரையின் 'கடைசி வண்டி'

'இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு' என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான்.

பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல். நிலவொளி இனம் புரியாதபடி அச்சமூட்டியது. தேசிய நெடுஞ்சாலை 94ல் சீராகச் சென்று கொண்டிருந்தது அவனுடைய பால்வண்டி. விடிவதற்குள் மினியெபொலிஸ் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தான். தன் தொழிலுக்கென்றே வடிவமைக்கப்பட்ட இருபதாயிரம் கேலன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்தொட்டி பொருத்திய பதினெட்டு சக்கர க்ராஸ்லேன்ட் டிரக்கில், விஸ்கான்சின்-மினசோடா எல்லையருகே வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். பால் ஏற்றி வரும்போது அதிக எடை காரணமாகச் சோதனை அதிகாரிகளிடம் பலமுறை அகப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

துக்ளக்கின் 'நாயம்'

காலைல முளிச்சபோதே தெரிஞ்சு போச்சு. இன்னக்கி பொளுது போனாப்புலதான்னு. மானம் வேற கொஞ்சம் மப்பாவே இருந்துச்சு. காந்திராசு சைக்கிளுக்கு சேண்டு போட்டு நிப்பாட்ட முடியாம கன்னுக்குட்டி கட்ற கம்பத்துல சாச்சாப்ல வெச்சுட்டு வந்தான். இவன் எங்க இப்ப இங்கிட்டுன்னு மண்டையை சொறிஞ்சுக்கிட்டே வெளிய வந்தேன்.

செயாவுமு செல்லாளுமு சந்தைக்கி கெளம்பிக்கிட்டுருந்தாங்க. தூக்குப் போசீல டீத்தண்ணி இருந்துச்சு. எனக்குமு, காந்திராசுவுக்குமு கெளாஸ்ல வெச்சுக் குடுத்துப் போட்டு செயா போயிருச்சு. வாயை கொப்புளிச்சுப்போட்டு ரெண்டு பேரும் டீயை குடிச்சுட்டு.....

"அப்பறம்.. .என்ன காலங்காத்தால் இங்கிட்டு?"

மதனின் 'மாறுதல்'

முன்னுரையே இல்லாமல் ஆரமிக்கப்பட்ட கதை போல, தீடீரென்று முன்னால் வந்து ப்ரேக் போகலாமாஎன்றாள் அர்ச்சனா.

அவள் அலுவலகம் வந்து அரை மணி நேரம் ஆகி இருந்தது. அலுவலக பேருந்தில் என்னுடன் ஒன்பது மணிக்கு தினம் வருபவள் இன்று பத்து மணிக்கு தான் வந்தாள். எப்போதும் வந்த உடன் GMடா என்று ஒரு ஸ்மைலியுடன் கம்யூனிக்கெட்டரில் பிங் பண்ணுவாள். இன்று அப்படி எதுவும் இல்லாமல்,காலையில் அலுவலக பேருந்தில் என்னோடு வராத காரணத்தை பற்றியோ, எனது செல்லின் அழைப்பை ஏற்காததைப் பற்றியோ எதுவும் பேசாமல் வந்து ப்ரேக் போகலாமா என்கிறாள். ஒருவேளை அதை எல்லாம் சொல்வதற்கு கூட இருக்கலாம்.


"குட்டி எப்போ பார்த்தாலும் இப்படி tom & jerry பார்த்துக்கிட்டு இருக்கியே உனக்கு tom & jerry பைத்தியம் தான் பிடிக்க போகுது பாரு."

"நீயும் தான் மம்மி டெய்லி சூப்பர் சிங்கர் பார்க்குற, அப்போ உனக்கும் தான் சூப்பர் சிங்கர் பைத்தியம் பிடிக்க போகுது.."

"எதுக்கெடுத்தாலும் இப்படி எடக்கு முடக்கா பேசிக்கிட்டே இரு உன் அப்பா மாதிரி.."

என்ன நண்பர்களே மேலே பகிர்ந்திருப்பவை துளிதான். இந்த தளங்களுக்கு சென்று சிற்பிகள் செதுக்கிய சிறுகதைகளை படியுங்கள். நாளை நாம வயக்காட்டுப் பக்கம் போய் விளைச்சல் எப்படியிருக்குன்னு பார்த்துட்டு வரலாம்.

-நட்புடன்,
சே.குமார்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது