07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 30, 2010

கற்றதும் பெற்றதும் - வலைச்சரம் ஐந்தாம் நாள்

வலைப்பூ எழுத வந்த போதில் மற்ற யாருக்கும் கிடைக்காத சிபாரிசுகள், வரவேற்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு நல் உள்ளமும் என்னைத் தூண்டி துலங்க வைத்தது. திரும்பத்திரும்ப அவர்களின் பெயர்களைச்சொல்வது அவர்களைச்சங்கோஜப்படுத்தும். ஆகவே, அவர்களிடமிருந்து கற்றதையும், பெற்றதையும் மட்டும் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!

வலையில் வந்த புதிதில் வலைப்பூக்களைப் படிப்பது, கருத்துரைகள் எழுதுவது, ஓட்டுப்போடுவது இதெல்லாம் குறித்து எந்த அனுமானமும் இல்லை. முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் தான் தமிழ் மணம் தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். தமிழ்மணத்தில் இணைந்த போதிலும், எனது வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் நண்பர்களின் வலைப்பூவை மட்டும் படித்து தயங்கித்தயங்கி பின்னூட்டமிடுவேன். அப்போது, சகோதரி! நாங்களும் வலைக்குப் புதியவர்களாய் இருந்து பழையவர்கள் ஆனவர்கள் தான் என்று எனது தயக்கத்தை உடைத்தெரிந்த வலையுலகச்சகோதரர்கள் இவர்கள்.

1. கிளியனூர் இஸ்மத் அண்ணன் அவர்கள் - http://kismath.blogspot.com/
2.முனைவர் ரத்தினப்புகழேந்தி அவர்கள் - http://mankavuchi.blogspot.com/
3. சகோதரர் பலாப்பட்டறை சங்கர் அவர்கள் - http://palaapattarai.blogspot.com/
4. வாழ்க்கை வாழ்வதற்கே பிரபாகர் அவர்கள் - http://abiprabhu.blogspot.com/
5. திருப்பூர் தேவியர் இல்லம் ஜோதிஜி அவர்கள் - http://deviyar-illam.blogspot.com/
6. தெக்கிக்காட்டான் பிரபாகர் அவர்கள் - http://thekkikattan.blogspot.com/

முகத்தைப்பாராமல் எழுத்து முகம் அறிந்து அன்போடு உறவு கொண்டாட முடியும் என்று உணர வைத்தவர்கள். வாழ்க வளர்க!

வலை ஆரம்பித்த நாட்களில் சக நண்பர்களின் வலையின் அழகும், அமைப்பும் என்னை ஈர்த்தது மட்டுமல்ல, என்னை பொறாமைப்படவும் வைத்தது.இதெல்லாம் எப்படி செய்கிறார்கள், ஒருவேளை மென்பொருள் நுட்பம் தெரிந்தவர்கள் மட்டும் தான் உருவாக்க முடியுமோ என்று எனக்குள்ளே தர்க்கித்து சோர்ந்த நாட்கள் உண்டு.வலை எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு Gadjet, widget, HTML இதற்கான அர்த்தங்கள் புரியவில்லை.நானே முயன்று கூகிளில் படித்து ஒருவாறு அர்த்தம் புரிந்தாலும் எப்படி செயல்படுத்துவது, மாற்றங்களை எப்படிக்கொண்டுவருவது என்று புரியவில்லை. அதற்கு வழிகாட்டிய வலைஞரை உங்களுக்குச்சொல்கிறேன். இது கண்டிப்பாக அறிமுகமில்லை. அவரின் வலையைப்படித்து பயன் பெற்றவர்களில் நானும் ஒருத்தி என்ற முறையில் ஒரு நன்றி நவிலலாக இந்தப்பதிவு.

1. சுமஜ்லாவின் இந்த வலையில் டெக்னிக்கல் என்ற தலைப்பில் எழுதியுள்ள தொழில் நுட்பப்பதிவுகளில் புதிய வலைஞர்களுக்கான டிப்ஸில் ஆரம்பித்து, nav bar நீக்குவது, ஓடும் எழுத்துக்களை உருவாக்குவது, இடுகைகளுக்கு சுலபமான இணைப்பு கொடுப்பது, கூகுள் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் முதலான அத்தனை நுட்பங்களையும் படங்களுடன், எளிமையாக சொல்லித்தருகிறார். சுமஜ்லா! வலைப்பூவில் பூக்கொட்டுவது மட்டும் எப்படி என்று இன்னமும் கைவரவில்லை. http://sumazla.blogspot.com/

என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் பத்து ஓட்டு வாங்குவதற்குள் ஒரு நாளில் பத்து முறை கணினியை உயிர்ப்பித்து, யார் யார் ஓட்டுப்போட்டது என்று பார்ப்பது என் வழக்கம். சில வலைஞர்களின் பதிவுகள் பெறும் ஓட்டுக்கள், பின்னூட்டங்கள் பார்த்து ம்... நிச்சயம் நல்ல பதிவு என்று முடிவு கட்டி படிக்கத்தொடங்கிய வலைப்பதிவுகள்.

1. கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா அவர்களின் சிரிக்க வைக்கும்,சமயங்களில்
சிந்திக்க வைக்கும் (!!!) சரளமான கட்டுரைகள் கொண்ட வலைப்பூ
2. அண்ணாமலையான் அவர்களின் நீங்களும் ஹீரோ ஆகலாம் பதிவு
3. ஈரோடு கதிர் அவர்களின் வலைப்பூ
4. பாமரன் பக்கங்கள்
5. முத்துச்சரம் ராம லெக்ஷ்மி அவர்கள்

இன்னும் நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன. பதிவு சுருக்கம் வேண்டி இத்துடன் முடிக்கிறேன்.நல்ல பல வலைப்பூக்கள் விட்டுப்போயிருந்தால் அதற்குக்காரணம் என் அறியாமையே அன்றி வேறில்லை. நன்றி!

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

மேலும் வாசிக்க...

Thursday, April 29, 2010

கவிதைகள் - வலைச்சரம் நான்காம் நாள்

கவிதைகள் - காலத்தின் உயிர்ப்பதிவு என்பார் கவியரசு வைரமுத்து. கவிதைக்கு இதைவிட அழகாக வரைவிலக்கணம் தர முடியுமா? தெரியவில்லை!

கவிதை காலத்தின் உயிர்ப்பதிவு மட்டுமல்ல. கவிஞனின் எண்ணங்களை, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.அவனின் துயரங்களை, துக்கங்களை, வியப்பை, சந்தோசத்தை, இன்பத்தை வடிக்கும் வார்த்தை வடிகால்.

கவிதை எழுதுபவர்களாலும், கவிதை படிப்பவர்களாலும் வன்முறை செய்ய இயலாது. கவிதையால் ஈர்க்கப்பட்டவர்களின் மனதை மென்மையாக மாற்றிவிடும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. நல்ல கவிதை நம்பிக்கை ஊட்ட வேண்டும், படிப்பவர் மனதை பரவசப்ப்டுத்த வேண்டும், படைப்பவனின் முகவரியாக இருக்க வேண்டும், ஞாபக அடுக்கில் சதா சுழல வேண்டும். அப்படி நல்ல கவிதைகளைத்தரும் வலைஞர்கள் பலர்.

அவர்களில் சிலரின் படைப்புகளைக் காண்போமா!.அந்தக்கவிஞர்கள் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர்கள் தாம்.

1.நேசமித்ரன் - இவரின் கவிதைகளின் நவீன சொல்லாட்சி என்னைக் கிறங்கடிக்கும். ஆனால் புரியாது!!இவரின் கவிதைகளுக்கு பின்னூட்டம் பார்த்தே பிரமித்துப்போனவள் நான். ஐயா! தங்கள் கவிதைகளுக்கு கொஞ்சம் விளக்கம் எழுதினால் இன்னும் மகிழ்வேன். http://nesamithran.blogspot.com/

2. பா.ரா. - இவரின் கவிதைகள் எளிமை + சிலேடை + நகை + உருக்கம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எழுத்தில் வடியும் அன்பு, பாசம் படிப்பவர்களை புரையேற வைக்கும். அது எப்படி அண்ணா, உங்களுக்கு மட்டும் வாய்த்தது இப்படி ஒரு எழுத்து நடை? http://karuvelanizhal.blogspot.com/

3கவிஞர் கவிமதி - கனல் பறக்கும் கவிதைகளுக்கு சொந்தக்காரர் http://kavimathy.blogspot.com/

4. சும்மா - அன்பின் தேனம்மை அக்கா, ஆச்சி! சும்மா எழுத வந்தே இப்படி ஒரு எழுத்தும் கவிதையும் உங்களுக்கு வாய்க்கிறது என்றால், இன்னும் வீர்யத்துடன் எழுதினால்? அன்பும், சமூகச்சாடலும் நிறைந்த இவரின் கவிதைகளின் மறைபொருள் புரியாது, நேரடி அர்த்தம் கொண்டு, பின்னூட்டமிட்டு அசடு வழிந்த நாட்கள் உண்டு. http://honeylaksh.blogspot.com/

5.அகநாழிகை வாசு அவர்களின் கவிதைகள் மிகவும் பிடித்தமானது. வாசிக்க சுகமான கவிதைகள் http://www.aganazhigai.com/

6.நாவிஷ் செந்தில் குமாரின் இந்த கவிதை வலை நல்ல, அழகான கவிதைகளுக்கான ஒரு தளம் http://navishsenthilkumar.blogspot.com/search/label/கவிதை

7.சகாராத்தென்றல் கவிதைகள் சின்னச்சின்ன சிலிர்ப்புகளை சிந்தவிடும். உயிரை வருடும் http://saharathendral.blogspot.com/

8. சுயம் தேடும் பறவைகள் வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்த முத்தான கவிதைகள். http://kkamalesh.blogspot.com/

இன்னும் கவிதைகள் சொல்லும் தளங்கள் உண்டு. பதிவின் நீளம் கருதி சுருக்க முடிக்கிறேன். இன்னும் நான் அறியாத அருமையான கவிதை வலைகள் இருப்பின் நண்பர்கள் தெரிவியுங்கள் தயவுசெய்து!

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்


மேலும் வாசிக்க...

Wednesday, April 28, 2010

பெண்ணீயம் - வலைச்சரம் மூன்றாவது நாள்

பெண் சுதந்திரம் என்பது சமூகமேம்பாட்டிற்கு வித்திடும் ஒரு தளம். எந்த ஒரு நாட்டில் பெண் இனம் அடிமைப்பட்டுக்கிடக்கிறதோ அந்த நாடும், எங்கே பெண் கண்ணீர் வடிக்கிறாளோ அந்தக்குடும்பமும் மிளிர்வதில்லை. அதே சமயத்தில் குடும்பங்கள் மிளிர்வதும் பெண் என்பவளின் தியாகத்தாலும், உழைப்பாலும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

குடும்ப வன்முறையிலும், வரைமுறையற்ற அடிமைத்தனத்திலும், பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகி, சிக்கிச்சீரழிந்து கண்ணீரில் மூழ்கி, தம்மை இழந்த பெண்கள் ஒரு புறம்.அடிப்படை உரிமைகள், கல்வி, சமுதாய மேம்பாடு, போதுமான விழிப்புணர்வு இத்தனையும் கிடைத்த போதிலும் விட்டுக்கொடுப்பதற்கும், அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் புரியாமல், குடும்பங்களைப் போர்க்களமாக்கி, குழந்தைகளின் வாழ்வை சீரழித்து, சொந்தங்களோடு உறவை பலப்படுத்தத்தெரியாது,பொய் வழக்குப்போட்டு உறவை அறுத்தெரிந்து, கொண்டதே கோலமெனும் பெண்கள் அதிகரித்துக்கொண்டே வருவது ஒரு புறம்.

அடிமையாய்க் கிடக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி, அவர்களை அந்தத்துன்பங்களில் இருந்து மீட்டெடுத்து, மறுவாழ்வு கொடுக்க தமது சுகதுக்கங்களை மறந்து பாடுபடும் சமூக சேவகர்களின் எழுத்தும், பேச்சும் உரியவர்களைப்போய்ச்சேருவதில்லை. மாறாக விழிப்புணர்வுடன் இருக்கும் பெண்களுக்கு அதீத விழிப்புணர்வு தர உதவுகிறது என்பது தான் உண்மையோ என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதனாலேயே பெண்ணீய எழுத்துக்களை அதிகம் வாசிப்பதிலை.ஆனால் நிதர்சனங்களை, எங்கோ மூலைகளில் நடக்கும் அநியாயங்களை நியாயமாக எடுத்துரைக்கும் பெண்ணீய எழுத்தாளர்கள் நம் வலையுலகில் உண்டு.

எழுத்தாளர் குட்டி ரேவதியின் இந்தப்பதிவு கயர்லாஞ்சியின் சம்பவம் சொல்லும் இந்தப்பதிவு மனதை உருக்கி கண்ணீர் வழிவதைத் தவிர்க்கமுடியவில்லை எனக்கு. http://kuttyrevathy.blogspot.com/2010/04/2_20.html

தீபாவின் நீரோவின் விருந்தாளியா நீங்கள் பதிவு கூறுவதும் அதே சம்பவத்தைப்பற்றியது தான். http://deepaneha.blogspot.com/2010/04/blog-post_06.html

சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடிப் பெண்கள் - மு.வி நந்தினியின் இந்தப்பதிவு சம்பந்தப்பட்டவர்களைப் போயடைந்து அந்தப்பெண்களுக்கு விழிப்புணர்வைத்தருமா? http://mvnandhini.wordpress.com/2010/03/31/சோதனை-எலிகளாக்கப்படும்-ப/

தமிழச்சியின் தோட்டியும், மலக்குழியும் என்ற பதிவு மலம் அள்ளும் பெண்களின் அவலத்தைச்சொல்லும் பதிவு. http://www.tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=2047

சந்தன முல்லையின் குட் பை ஜெய் ஸ்ரீ மற்றும் இனிஷியலைப் பற்றி இனிஷியலாக பதிவுகள் அதீத வர்ணனையற்ற இயல்பான பதிவுகள் http://sandanamullai.blogspot.com/2010/03/blog-post_27.html

படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம். தந்திரமற்று, ஜாலங்கள் இன்றி மனதில் நல் எண்ணங்களோடு வாழ்க்கையை வாழ்வோம். ஒன்றுபட்டு அநீதிகளை எதிர்ப்போம்.இனியொரு கயர்லாஞ்சி சம்பவம் உலகின் எந்த மூலையிலும் நடந்துவிடக்கூடாது என்ற பிராத்தனைகளுடன்.

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
மேலும் வாசிக்க...

Tuesday, April 27, 2010

தனித்தமிழ் ஆவர்த்தனம் - வலைச்சரம் இரண்டாம் நாள்

தமிழே! என் தாய் தந்த சீதனமே! சங்கரனார் இறங்கி வந்து சங்கம் அமைத்து, தரணியில் வளர்ந்த மொழியே! உன்னை வணங்குகிறேன்.நமது தமிழ் மொழி உயர்ந்த வளமான இலக்கியப்பின்னணியையும், தொன்மையும் கொண்டது. காலப்போக்கில் சங்க இலக்கியங்களும், காப்பியங்களும் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணாக்கர்களுக்கானது என்று ஒதுக்கப்பட, அந்த பொக்கிஷங்கள் கால ஓட்டத்தில் நம்மால் அறியப்படாமல் போனது. பத்திரிக்கைகளும், ஊடகங்களும் வியாபார நோக்கில், ஜனரஞ்சகமாக, வாசகர்களின் விருப்பத்திற்கு படைப்புகளை முறைப்படுத்த, இன்று யாப்பு,செய்யுள்,வெண்பா, மரபுக்கவிதை இவையெல்லாம் அர்த்தம் புரியாத அகராதி வார்த்தைகளாக.

அன்னைத்தமிழின் அத்தனை அழகியல் ஆபரணங்களையும் மீட்டெடுக்கும் தமிழ் இலக்கியம் குறித்த வலைப்பூக்களை இன்று பார்ப்போமா!

முத்தமிழுக்கு சேவை செய்யும் பெரியோர்கள் மற்றும் புலவர்களைப் பற்றிய அறிமுகம், அவர்களைக் குறித்த உரைகள், அவர்தம் சேவைகள், தமிழ் இணையப் பயிலரங்கம் குறித்த கட்டுரைகள், நாட்டுப்புறப்பாடல்கள், சங்க இலக்கியங்கள் என்று அத்தனை பதிவுகளும் பயனுள்ள பதிவுகள் தாம்.பலர் படித்துப் பயன் பெறும் ஒரு தளம் இது.முனைவர்.மு.இளங்கோவன் ஐயா அவர்களின் வலைhttp://muelangovan.blogspot.com/

ஆண்டாள், கண்ணகி, சங்க இலக்கியத்தில் காதல் இப்படி தமிழில் இலக்கியப்பாடம் சொல்லித்தரும் ஒரு ஓய்வு பெற்ற தமிழ்ப்பேராசிரியை எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களின் வலை இது.http://masusila.blogspot.com/

தமிழ்மொழி, தமிழர்கள் பண்பாடு,வாழ்வியல் குறித்த அனைத்து செய்திகளையும் தமிழ்ப்பற்றுடன் தொகுத்து வழங்கும் சுப.நற்குணன் ஐயா அவர்களின் வலை. http://thirutamil.blogspot.com/

நெடுநல் வாடை,குறுந்தொகை,அகநானுறு இன்னும் பல சங்க இலக்கியங்களின் பாடல்கள் விளக்கங்களுடன் தரப்பட்டுள்ள ஒரு பயனுள்ள தளம் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அவர்களின் வலை. http://gunathamizh.blogspot.com/

தமிழ் இலக்கியம் குறித்த சிந்தனைகளை வழங்கும் இன்னொரு வலைப்பூ முனைவர் மு.பழனியப்பன் ஐயா அவர்களின் வலை. http://thirutamil.blogspot.com/

இந்த வலைப்பூக்கள் அனைத்தும் நான் அறிந்த வரை எனக்குத் தெரிந்தவை. இன்னும் கூட நிறைய இருக்கலாம். பொழுது போக்கும் தளங்களை பல வேளைகளில் படித்தாலும் இப்படியான பொழுதை ஆக்கும் தளங்களை சில வேளைகளிலாவது படிப்பதால் தமிழின் இலக்கியப் பரிமாணங்களை உணர முடியுமென்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

நன்றி நண்பர்களே!
மேலும் வாசிக்க...

Monday, April 26, 2010

விமர்சனங்களைத் தேடும் என் எழுத்து - வலைச்சரம் முதல் நாள்

சின்ன வயதில் வாசிக்கும் ஆசை இருந்த போதிலும் ஆசைக்கேற்ற தீனியாக புத்தகங்கள் கிடைக்கவில்லை.மளிகைப்பொருட்கள் கட்டிவரும் காகிதங்கள், எங்கள் கடையில் வாங்கப்படும் தினத்தந்தி, அம்மாவிற்காக வாங்கப்படும் ராணி, ராணிமுத்து ஆகியன தான் வாசிக்கக்கிடைத்தவை.அதைத்தாண்டி வாசித்தது விகடன்,குமுதம், மங்கையர் மலர்

இன்று வலையுலகப் படைப்பாளிகள் பலரும் சொல்வது போல் ஆங்கில நாவல்கள்,பிற மொழி, நாடு சார்ந்த எழுத்துக்களைப்படித்ததில்லை.அதனால் பரந்து பட்ட அறிவு, எந்த ஒரு கருத்தையும் தீர்க்கமாக அலசி ஆராயும் ஞானம் கிடையாது. ஏதோ ஆர்வக்கோளாறால் என் மனதில் பட்டதை எழுதி வருகிறேன்.

கவிதைகள் எனக்குப்பிடிக்கும். என் வரை, கவிதைகள் நமது உணர்வுகளின் நுண்ணிய வெளிப்பாடு, நம் எண்ணங்களை அழகுற வடிக்கும் ஒரு படிமம், இப்படித்தான் எழுத வேண்டுமென்ற வரையறையை, கவிதைக்கு யாரும் கொடுத்து விட முடியாது.

எனது கவிதைகள் எனக்கு முதலில் பிடிக்கவேண்டுமே! அப்படி எனக்குப்பிடித்தவை.
கட்டுரைகள் பல எழுதியிருந்தாலும் கூட எனக்கே 'அட பரவாயில்லையே 'என்று எண்ண வைத்த எனது கட்டுரைகள்.

பிடித்தவர்கள் பாராட்டினால் நன்றி. பிடிக்காதவர்கள் விமர்சித்தால் இரட்டை நன்றி. காரணம் ஒரு படைப்பாளியை விமர்சனங்கள் பக்குவப்படுத்துகிறது. வலைச்சரத்தின் மூலம் நான் பக்குவப்படவே விரும்புகிறேன் தோழர்களே! தங்கள் அனைவரின் வழிகாட்டலில் மிளிர விரும்பும்,

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
நன்றி!
மேலும் வாசிக்க...

அறிமுகம்

வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக என்னை அழைத்தற்கு மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களை பணிவன்புடன் வணங்குகிறேன். ஐயா தாங்கள் வழங்கிய இந்த வாய்ப்பை என் வலையுலகப் பயணத்தில், எனக்குக்கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறேன்.நன்றி! நன்றி! நன்றி!

வலைச்சரத்தின் ஆசிரியர் குழுவிற்கும் மற்றும் வாசக நண்பர்களுக்கும் முதற்கண் பணிவன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரது படைப்புகள், ஆன்ம திருப்தியைத் தரவேண்டும். ஆன்ம திருப்திக்காக எழுதப்படும் ஒரு படைப்பு வாசிப்பவர்களையும் கவர்ந்து விட்டால் அது படைப்பவனுக்கு கிடைக்கும் வெற்றி என்பது என் தாழ்மையான கருத்து.


முதலில் நான் கவிதை என்று கிறுக்கும் கிறுக்கல்களை பதிய வேண்டி வலை தொடங்கி, புதுச்சேரி கல்லூரிப்பேராசிரியர் மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்களின் வழிகாட்டலில் கட்டுரைகள் எழுதத்தொடங்கி, இன்று வலைச்சரத்தில் உங்கள் முன் நான் உங்கள் அங்கீகாரத்தையும், வழிகாட்டலையும் வேண்டி நிற்கிறேன்.

எனது வலைப்பூக்களில், அந்தமான் தமிழோசையில் எனது வாழ்விடம் குறித்த பதிவுகளைப் பதிவதிலும், மற்றும் காந்தீய கிராமங்களில் எனது பிறந்த மண்ணின் பாரம்பர்யத்தை,மனக்கிடக்கைகளைப் பகிரும் முயற்சியிலும் இருக்கிறேன்.


"நா எழுதறது பிடிக்கலையா பின்னூட்டத்துல சொல்லுங்க! அதுக்காக இதுக்கெல்லாம் யாருப்பா இவ்ள பெரிய பொறுப்பக்குடுத்ததுன்னு தயவு செய்து சீனா ஐயா அவர்கள மட்டும் எதுவும் சொல்லிடாதீங்க!

இந்த ஒரு வாரம் எனக்கான, என் எழுத்துக்கான மேடையாக வலைச்சரத்தை ஆக்கிக்கொடுத்த ஐயா சீனா அவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மீண்டும் மனம் நெகிழ்ந்த, நிறைந்த நன்றி.

என்றும் அன்புடன்
க.நா. சாந்தி லெட்சுமணன்.
மேலும் வாசிக்க...

Sunday, April 25, 2010

சிறப்புடன் சென்று வருக செல்வம் - வருக வருக சாந்தி லெட்சுமணன்

கடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் செல்வம் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எண்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வித்தியாசமான முறையில் பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் - 20010ல் இணைந்த புதிய பதிவர்களைத் தேடிப் படித்து - பிடித்து அறிமுகப்படுத்தி இருக்கிறார். பல தலைப்புகளில் அறிமுகப் படுத்தி கலக்கி இருக்கிறார். அவரை வாழ்த்துக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

26 ம் நாள் - நாளை துவங்கும் வாரத்திற்கு திருமதி சாந்தி லெட்சுமணன் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார். அவர் நமது உள்துறை அமைச்சர் பிறந்த ஊரைச் சார்ந்தவர். சென்னை மற்றும் அறந்தாங்கியில் வசித்திருக்கிறார். தற்பொழுது அந்தமானில் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார். படிப்பதற்கும் படைப்பதற்கும் ஆர்வமுள்ளவர். இவர் காந்திய கிராமங்கள் என்ற பதிவிலும் அந்தமான் தமிழோசை என்ற பதிவிலும் எழுதி வருகிறார்.

இவரை வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சாந்தி லெட்சுமணன்
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

நன்றியுரை

யாருமே இல்லாத கடையில் (என் பதிவுகள்) டீ ஆத்திக்கொண்டிருந்த என்னைக் கூட்டி வந்து கஃபே காஃபிடேயில் (வலைச்சரம்) வந்து காஃபி ஆத்த வைத்த சீனா ஐயாவிற்கு முதல் நன்றி.

நான் ஆத்திக்கொடுத்த காஃபியைக் குடித்து விட்டு மட்டும் போகாமல் அதை நல்லாயிருக்குன்னும் சொல்லிவிட்டுப் போன தோழர்களுக்கும் நன்றி.

என்ன தான் சுய எள்ளல் தொனியில் எழுதினாலும், பாராட்டிற்கு மனம் ஏங்கத்தான் செய்கிறது. அது கிடைக்கும் போது மனம் குதூகலிக்கிறது. ஆனால் பாராட்டுவதற்கு என்று நல்ல மனம் வேண்டும்.

நான் நிறைய பதிவுகள் படித்தாலும் என் சோம்பேரித்தனத்தாலோ, அல்லது வேறு ஏதோ ஒரு தனத்தாலோ யாருக்கும் அதிகம் பின்னூட்டம் போடுவதேயில்லை. இனி கூடுமான வரை நல்ல விஷயங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அதற்கும் நன்றி.

இனி வரும் வாரங்களில் வலைச்சரத்தில் கலக்கப்போகும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்

செல்வம்
மேலும் வாசிக்க...

Friday, April 23, 2010

தமிழ்சினிமாவின் சிறந்த ஆளுமைகள்

தமிழர்களின் சினிமா மீதான காதல் உணர்வுப்பூர்வமானது. அதனால் தான் இன்றும் படங்களில் நடித்து விட்டால் போதும்,முதல்வர் நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்ற ஆசையில் நிறையபேர் சுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை சற்று நேரம் செலவிட்டுப் படித்துப்பார்த்தால் புரியும். கலைஞரோ, எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ வெறும் சினிமாவில் இருந்ததால் மட்டும் முதல்வர்கள் ஆகிவிடவில்லை. அது ஒரு காஸ்ட்லி விசிட்டிங்கார்ட் அவ்வளவுதான். அதையும் தாண்டி எவ்வளவோ உள்ளது.

நம் தமிழ்சினிமா மிகச்சிறந்த திறமையாளர்கள் பலரைக் கொண்டது. அதில் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகள் பற்றி பதிவர்கள் பார்வையில் இன்று...

எம்.ஆர்.ராதா :காலத்தைத் தாண்டி ஒலித்த கலகக்காரனின் குரல். சுகுணாவின் இப்பதிவு ராதாவின் பல முகங்களை வெளிக்கொண்டு வந்தது.

நாகேஷ் : சுதேஷமித்திரனின் இப்பதிவு காலத்தை வென்ற கலைஞனை அழகாக ஞாபகமூட்டுகிறது.

கவுண்டமணி : முரளிகண்ணனின் கவுண்டமணி பற்றிய தொடர் பதிவுகளில் வெளியான பின்னூட்டங்கள், இன்றும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அன்பிற்குச் சாட்சி.

ஸ்ரீதர் : ஆர்.வி அவர்களின் வலைப்பூவில் ஸ்ரீதர் பற்றிய நிறைய இடுகைகள் உள்ளன. வாசித்துத்தான் பாருங்களேன்.

பாரதிராஜா :இயக்குநர் மகேந்திரன் பாரதிராஜா பற்றிச் சொன்னதைத் தொகுத்து தந்திருக்கிறார் முருகன். இதைப் படித்தால் பாரதிராஜாவின் வாழ்க்கைக்குறிப்பு இலவசம்.

பாக்யராஜ் : றேடியோஸ்பதி இந்தப் பதிவில் பாக்யராஜின் பல படங்களுக்கு சிறு குறிப்பு கொடுத்திருப்பார்.

மணிரத்னம் : அ.ராமசாமியின் இக்கட்டுரை மணியின் கருத்தியலையும் அலசுகிறது.

இளையராஜா : நம் ராகதேவனின் இசையைப் பற்றி நிறைய பதிவுகளைப் படித்திருப்போம். இளையராஜா பற்றிய விமர்சனங்கள் ஏன் உணர்வுப்பூர்வமாகி விடுகின்றன? ஏனெனில் அவரின் இசை தமிழர்களின் உணர்வோடு கலந்திருப்பதால் தான். அவருடைய வாழ்க்கைகுறிப்பு அடங்கிய pdf இத்தளத்தில்..


பி.சி.ஸ்ரீராம்: ஒளிப்பதிவு மேதை குறித்த ஆனந்தவிகடனின் 25 இது.


அஜயன்பாலாவின் இந்த 1980-1989 தமிழ்சினிமா கட்டுரை,தமிழ்சினிமாவை நேசிப்பவர்கள் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய ஒன்று.

அன்புடன்

செல்வம்
மேலும் வாசிக்க...

Thursday, April 22, 2010

புதுசு....கண்ணா…..புதுசு

வலைச்சரத்தின் நோக்கமே புதிய பதிவர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது தான். சனவரி 2010 லிருந்து இந்த வலைப் பெருங்கடலில் தம்மை இணைத்துக் கொண்ட பதிவர் நண்பர்களின் வலைப்பூக்களை இவ்விடுகையில் காண்போம்.

கோப்புகள் ராஜ் என்பவரால் துவங்கப்பட்டிருக்கும் வலைப்பூ இது. நமக்குத் தேவையான பைல்களை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். ராஜ் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.:-)

விஜய் ஆம்ஸ்ட்ராங் – மாத்தியோசி திரைப்பட ஒளிப்பதிவாளர் நமக்கு ஒளிப்பதிவு பற்றி நிறைய சொல்லித்தருகிறார்.

குறுந்தொகை குறித்த நண்பர் விஜயின் பதிவு இது.

அஷீதாவின் பதிவு இது.குழந்தையின் மழலை கேட்க முடியாத ஏக்கக் கவிதையை நீங்களும் படித்துதான் பாருங்களேன்.

எழுத்தாளர் அமுதவனின் பதிவு இது. சிவக்குமார் பேச்சு பற்றிய இவருடைய இடுகை சிவக்குமாரின் பேச்சாற்றலை இயல்பாய் விவரிக்கிறது.

நெற்றிக்கண் என்ற பதிவு இது. சினிமா, கிசுகிசு என்று சுவாரஸ்யமாக கலந்து கட்டி அடித்து வருகின்றனர்.

அக்குபஞ்சர் பற்றி ஒரு மருத்துவர் சொல்லித்தரும் வலைப்பூ இது.

துணையெழுத்து
எழுதப்பட்டு இருப்பது 4 கட்டுரைகள் என்றாலும், நாலுமே நச்.

ஜெய்யின் உலகத்திரைப் படங்களுக்கென்றே ஒரு பிரத்யேக வலைப்பூ இது.

சீதாம்மா எங்கள் ஊரின் பக்கத்து ஊரிலிருந்து (எட்டயபுரம்) ஒரு அம்மா வாழ்க்கையை சொல்லித் தருகிறார்கள்.
மேலும் வாசிக்க...

Wednesday, April 21, 2010

குழந்தைகள்….பெண்கள்.....ஆண்கள்

குழந்தைகள் மீதான நம் விருப்பம் தான் மனித இனத்தை இன்னும் உயிரோடு வைத்திருப்பதற்கான முதல் காரணி. அதிலும் இயல்பாகவே பெண்களுக்கு குழந்தைகள் மீதான ஆசை அதிகமாகத்தான் இருக்கும். ஆண்களும் தங்களைத் தாயுமானவனாக உணர்வது குழந்தை பெறும் போது தான். எனவே இன்று பதிவர்களின் பார்வையில் குழந்தைகள்...

தீபாவின் இந்த நேஹா பற்றிய பதிவு, அவ்வளவு அழகு.

அமித்து பற்றிய அவர் அம்மாவின் பதிவு. அமித்துவின் மொழிநடை தான் உலகிலேயே சிறந்த மொழிநடை.

சித்ராவின் பதிவு பிரசவ வேதனையை இவ்வளவு லைட்டாகக் கூட சொல்ல முடியுமா? முடியும். குழந்தைகள் மீது தீராக் காதல் இருந்தால்...

ரவியின் இந்தப் பதிவு குழந்தை வளர்ப்பை அறிவியல் / உளவியல் பூர்வமாகச் சொல்லித்தருகின்றது.

ரிதன்யா பற்றிய இப்பதிவு குழந்தை பிறப்பு நேரத்தை அழகாக விவரிக்கிறது.

பப்பு பற்றிய இப்பதிவில் பப்புவின் கேள்வி” அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?”

நிலா - உங்களுக்கு சோர்வாக உள்ளதா? ரிப்ரெஷ் செய்ய வேண்டுமா...நம் தேவதை நிலாவின் வீட்டிற்குச் சென்று வாருங்கள்.

ராம்குமாரின் இப்பதிவு குழந்தைகள் வளர்ப்பைப் பற்றி நிறைய பேசுகிறது.

தாத்தாபாட்டியில் வல்லிசிம்ஹன் குழந்தைகள் உணவு பற்றி சொல்லித்தருகிறார்.

லக்கிலுக்
- கல்யாணத்திற்கும், குழந்தைபிறப்பிற்கும் இடைப்பட்ட காலவெளி நீண்டு விட்டால் ஏற்படும் அவஸ்தைகளை இதை விட சிறப்பாக யாரும் சொல்லமுடியுமா?
மேலும் வாசிக்க...

Tuesday, April 20, 2010

அப்பா…..அன்புள்ள அப்பா

எனக்குத் திருமணம் முடிந்து, புதிய வீடு குடிபோகும் அன்று லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வீட்டைக் கழுவி விட்ட அப்பாவிடம் ஏதோ ஒரு புதிய பரிமாணம் ஒன்று தெரிந்தது.

”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி”என்று கூறுவார்கள். அந்த வலியை அதிகம் அடைந்திருப்பது அப்பாக்களாய்த்தான் இருக்கும்.

அப்பாக்களின் பொதுக் குணங்கள் என்று சிலவற்றைப் பட்டியலிடலாம்.

1. தான் நினைக்கும் எதையும் அம்மா மூலம் பேசுவது.
2. தான் மிகவும் கண்டிப்பு போல நடிப்பது.
3. பாசத்தை சீக்கிரத்தில் வெளிப்படுத்தாமை இன்னும் நிறைய சொல்லலாம்.

இனி...அப்பாக்கள் பற்றிய பதிவர்களின் பார்வைகள்

நர்சிம்மின் - இந்த அப்பா பற்றிய பதிவு நாம் சொல்ல ஆசைப்படுவதை அவர் நமக்காய் சொன்ன பதிவு.

நவீன்பிரகாஷின் - இப்பதிவு, கவிதைகள் மற்றும் படங்கள் வாயிலாக நமக்கு உணர்த்துவது ஏராளம்.

கிருத்திகாவின் இப்பதிவில் எனக்குப் பிடித்த வரி” அவர் இருந்த வரை நான் குழந்தையாகவே இருந்து வந்தேன்’.

லோஷனின் இந்தப் பதிவு, தன் அப்பாவையே தன் குழந்தைக்கும் ரோல் மாடலாக இருக்க செய்வதற்கான ஆசையை வெளிப்படுத்திய விதம் அழகு.

சூரியக்கதிரின் இப்பக்கத்தில் 4 ஆசிரியர்கள் தங்கள் அப்பாக்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சந்திரசேகர்
எழுதிய இப்பதிவு கதையாக
இருந்தாலும் நேசிக்கத்தகுந்தது.

அதிரையின் இக்கதை உணர்த்தும் வலிகள் ஏராளம்.

தூரத்துஅப்பா குழந்தையிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் தூரத்து அப்பா கவிதையாக.

ஞானசேகரின்
இக்கவிதையும் அப்பாவைப் பற்றிய சிறந்த ஒன்றுதான்.

புதிய தலைமுறை திரு.கல்யாண்ஜியின்
அப்பா பற்றிய கதை விகடனின் முத்திரைக்கதையாக வந்தது.
மேலும் வாசிக்க...

Monday, April 19, 2010

என் பதிவுகள்

கையில் வடை மடித்த காகிதம் கிடைத்தால், அதைக் கூடப் படிக்கும் பழக்கம் யார் வழியாக எனக்கு வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆராய்ச்சி செய்ய யாருமில்லாததால் அடுத்த மேட்டருக்குச் செல்வோம்.

வலையுலகம் அறிமுகமானது 2007 ல். படிப்பதற்கு இவ்வளவு விடயங்கள் அதுவும் ஓசியில் என்ற போது, தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்கள் போல், அதன் மீது இயல்பாகவே காதல் உருவானது. ஆறு மாதம் தொடர்ந்து படித்து வந்த போது தான் அந்த விபரீத ஆசை உருவானது. நாமே ஏன் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கக் கூடாதென்று. அப்படி என் ஊர் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது தான் கடலையூர்.

அறிமுகப்பதிவு என்ற என் கத்துக்குட்டிப் பதிவுற்கு பதிவர்கள் பின்னூட்டமிட்ட போது, றெக்கை இல்லாமல் பறக்கத் துவங்கியது மனசு.

சுஜாதா பற்றிய இந்தப் பதிவு என்னால் மறக்க முடியாத ஒன்று. அதன் பின் நான் தலைவர் பற்றிப் போட்ட மற்ற பதிவுகள் சுஜாதா 1 , சுஜாதா 2 நண்பர்கள் தேசிகன் மற்றும் பாஸ்டன் பாலா இருவரின் தொகுப்பிலும் இடம் பெற்றது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

அவ்வைசண்முகி படம் பற்றிப் போட்ட இந்தப் பதிவை விட இந்தப் பதிவில் இடப்பட்ட நண்பர்களின் பின்னூட்டங்கள் சிறப்பாக இருந்தது என்பது என் கருத்து.

நான் போட்ட சில ஆகச் சிறந்த, கருத்தாழமிக்க, சமுதாயத்தையே புரட்டிப் போடத்தகுந்த (சரி...சரி அடிக்க வராதீங்க) பதிவுகளை யாரும் படிக்கக் கூட இல்லாததால், சினிமா விமர்சன மொக்கைப் பதிவுகள் போடத் துவங்கினேன். அதில் எனக்குப் பிடித்தது பிள்ளைக்காதல் , பீமா , அஞ்சாதே
போன்றவை.

சில, பல பிரபலங்களை வைத்து கிண்டல் தொனியில் எழுதப்படும் லூசுப்பையன் வகையராவைச் சார்ந்த பதிவுகளான குசேலன் -2, குருவி -2 ,
நித்யானந்தர் போன்றவையும் எனக்குப் பிடித்ததே.

என் அனுபவங்களை வைத்துப் போடப்பட்ட திருப்பூர் , குழந்தைகள், சம்பளம்
போன்ற பதிவுகளையும் படித்துப் பாருங்களேன்.

பங்குசந்தை பத்தியெல்லாம் ஒரு பதிவு போட்ருக்கேன்னா பாத்துக்கோங்களேன்..

கடைசியா ஒரு கருத்து சொல்லனும்ல....

நானே நொங்காம எழுதிக்கிட்டு இருக்கேன். புதுசா வரவங்கல்லாம் தைரியமா எழுதுங்க பாஸூ....

அன்புடன்

செல்வம்
மேலும் வாசிக்க...

என் பெயர் செல்வம்

புரியுது..புரியுது மனசுல பெரிய ஆதவன்னு நினைப்பான்னு நீங்க கேக்கிறது புரியுது. இருந்தாலும் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல......

நான் முதல்பதிவு போட்டவுடனே யாருமே படிக்காமே, தெரியாம படிச்சவங்களும் நாலு திட்டு திட்டி அனுப்ச்சிருந்தாங்கன்னா உங்களுக்கு இந்த கொடுமையே வந்திருக்காது. இப்ப வருத்தப்பட்டு என்னா பண்றது? டூ லேட் பாஸ்.

நானும் ரவுடிதான்னு சொல்லிக்கிட்டு 2 ½ வருஷமா வலையுலகைச் சுத்தி சுத்தி வந்ததுல கற்றதும் அதிகம். பெற்றதும் அதிகம்.

சிறுவர்மலர், பூந்தளிர், ராணி காமிக்ஸ், குமுதம், விகடன், ராஜேஷ்குமார், பாலகுமாரன், சுஜாதான்னு படிப்படியா ஏறுன வாசிப்பனுபவத்தை லிப்ட் மூலமாக ஒரேயடியாக ஏற்றிவிட்டது இந்த வலையுலகம் தான்.

வாழ்க்கை என்பது கற்பதும், பகிர்வதும் என்று கொண்டால் சரியான மீடியம் வலையுலகம் தான். இன்னும் நிறைய கற்றலையும், பகிர்தலையும் எதிர்நோக்கி....

வலைச்சரத்தில் என்னை யாராவது அறிமுகப்படுத்தமாட்டார்களா? என்று ஏங்கியுள்ளேன். இன்று என்னையவே வலைச்சர ஆசிரியராக இருக்கச் சொன்னது சீனா ஐயாவின் சகிப்புத்தன்மையைக் காட்டுகிறது.

வலைச்சரம் குழுவிற்கும், என்னையும் வந்து படிக்கப் போகும் அன்பு பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.

ஸ்டார்ட் மீஸிக்........

இப்படிக்கு

செல்வம்
மேலும் வாசிக்க...

நன்றி கலந்த வாழ்த்துகள் ஸ்டார்ஜன் - வருக வருக செல்வம்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக - இரண்டாம் முறையாகப் பொறுபேற்ற அருமை நண்பர் ஸ்டார்ஜன் - ஏற்ற பொறுபினை - கடமையை - அழகாக நிறைவேற்றி - அன்புடன் விடைபெறுகிறார். அவர் ஒரு வார காலத்தில் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 250 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். புதுமையான முறையில் மணி-செண்பகம் எனக் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்கள் மூலமாக பதிவர்களை அறிமுகம் செய்துள்ளார். மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

அவரை வலைச்சரக் குழுவினர் சார்பில் வாழ்த்தி வழிஅனுப்புவதில் பெருமை அடைகிறேன். நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

19ம் நாள் - இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் - இளைஞர் செல்வம். இவர் கடலையூர் என்ற பதிவினில் எழுதி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் கடலையூரில் பிறந்து - தற்சமயம் திருப்பூரில் விற்பனைத் துறையில் பணி புரிகிறார். B.Tech பட்டதாரி. யாராச்சும் மாட்டினா மொக்கை போட்டே கொல்றது இவரது தனித் திறமை. 2007ல் வலையுலகத்திற்கு வந்த இவர் இது வரை 64 இடுகைகள் தான் இட்டிருக்கிறார். என்னைப் போன்றே இடுகைகள் இடுவதை விட படிப்பதே மேலெனக் கருதுகிறார் போலும்.

நண்பர் செல்வத்தினை வருக வருக - பதிவர்களை அறிமுகம் செய்க என வாழ்த்தி வரவேற்பதில் - வ்லைச்சரம் குழுவினர் சார்பினில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் செல்வம்.
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Sunday, April 18, 2010

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்

செண்பகம் : மச்சான் மச்சான் எங்கயிருக்கீக.. எல்லோரும் நம்மள தேடுதாக..

மணி : அப்படியாபுள்ள.. ஏபுள்ள நம்ம கதை முடியிற நேரம் வந்திருச்சிபுள்ள..

செண்பகம் : அட ஆமா மச்சான்.. ரொம்ப வருத்தமா இருக்குபுள்ள..

மணி : வருத்தப்படாதபுள்ள.. நம்ம கதைக்கு அவுக மத்தியில ரொம்ப வரவேற்பு கிடைச்சிருக்கு.. அவுக மனசுல நமக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கு.. நம்மகதைய படிச்ச எல்லோரும் குழந்தைகள், பெரியவங்க, தாய்மார்கள் என்று எல்லோரும் தம்வீட்டுல ஒருத்தற நம்மள நினைச்சிருக்காங்கபுள்ள.. அதனால கவலைப்படாதே..

செண்பகம் : இத கேட்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு மச்சான்.. ஆனா பிரிவ நினைச்ச அழுகஅழுகாச்சியா இருக்கு.. ( மணியின் நெஞ்சில சாய்ந்து கொண்டு )..

மணி : செண்பகத்தின் கூந்தலை கோதியவாறே.. கவலப்படாதே புள்ள.. இந்த ஒருவாரமும் நம்ம கதை படிச்சி ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டு வருகைதந்த அனைவருக்கும் நம்ம நன்றியை தெரிவித்துக் கொள்வோம்புள்ள..

மணி & செண்பகம் : உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறோம்..

மணி & செண்பகம் : அனைவருக்கும் நன்றிகள். விடைபெறுகிறோம்.


*************************************

முழுகதையும் படிக்க‌

செண்பகமே செண்பகமே.. செண்பகமே செண்பகமே.. 2 செண்பகமே செண்பகமே.. 3 செண்பகமே செண்பகமே.. 4 செண்பகமே செண்பகமே.. 5 செண்பகமேசெண்பகமே.. 6.


இந்த ஒருவாரமும் வலைச்சரத்துக்கு வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Saturday, April 17, 2010

செண்பகமே செண்பகமே .. 6

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க‌

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

செண்பகமே செண்பகமே.. 3

செண்ப‌கமே செண்பகமே.. 4

செண்பகமே செண்பகமே.. 5

மச்சான் மச்சான் இன்னிக்கி யாரெல்லாம் இருக்காக..

இன்னிக்கி நிறைய வித்யாசமான வலைப்பூவ வச்சிருக்கிறவங்களோட நாம பேசப்போறோம்.. மிக வேண்டியவங்களெல்லாம் இன்னிக்கி நம்ம கதையில வருவாங்க..

அட அப்படியா மச்சான்.. ரொம்ப ஆர்வமா இருக்கு..

இவுக பேரு திரவியம் நடராசன். இவரு சட்டத்தை கையில எடுத்துட்டாருன்னு சொல்லலாம். சட்ட நுணுக்கங்களை பற்றி அலசி ஆராய்கிறார். நாம தெரிஞ்சிக்கவேண்டியது நிறைய இருக்குபுள்ள..

ஆமா மச்சான் ரொம்ப நல்லாருக்கு மச்சான்..

அடுத்தவக அமைதிசாரல். அருமையான கட்டுரைகள், கதை, அனுபவ கட்டுரைகள் நிரம்பி கிடக்குது.. போய் பாப்போமாபுள்ள..

ஆங் சரி மச்சான்.. அடுத்தவக யாரு..

ஏபுள்ள.. நேரா நில்லு.. லைட் வெளிச்சத்துக்கு நேரா நில்லு.. முக‌த்த சிரிச்சமாதிரி வச்சிக்கோ.. இந்த இடம் சரியில்லை.. ஆங இங்க நில்லு..

அட என்ன மச்சான்.. அடுத்தவகள பத்தி சொல்லுங்கன்னா.. வேறெதோ சொல்றீக.. என்னாச்சி மச்சான்.

நான் சொல்லல புள்ள.. இதோ இவுகதான் சொல்றாக.. இவுக பேரு விஜய் ஆம்ஸ்ட்ராங்.. இவரு ஒரு ஒளிப்பதிவாளர்.

என்ன மச்சான் சொல்றீக..

அட ஆமாபுள்ள.. இவரு புகைப்படம், மாத்தியோசி திரைப்படத்தோட ஒளிப்பதிவாளர். ஒரு நல்ல புகைப்பட கலைஞர்.

அட அப்படியா மச்சான்.. மேல சொல்லுங்க மச்சான்..

இவரு புகைப்பட கலையின் நுணுக்கங்களை பற்றி நமக்கு கற்றுத்தருகிறார். ஒரு படத்துல எப்படி வெளிச்சங்களை காட்டணும். திரையோட தன்மைகள்.. படத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களை கற்றுத்தருகிறார்புள்ள.. அல்ஜீரிய போரை மையமாக க்ண்ட படத்தோட விமர்சனம், பிலிம் பற்றி சொல்லித்தருகிறார், இப்படி நிறைய விசயங்களை கற்றுத் தருகிறார்.

மச்சான் மச்சான் என்னை அவர்ட்ட அறிமுகப்படுத்துங்க மச்சான்.. நானும் நாளைக்கி ஹீரோயின் ஆகலாமில்லையா..

சரிபுள்ள.. அடுத்தவகள பாப்போமா..

சரி மச்சான்..

இவுக பேரு வினையூக்கி.. இவர் பக்கத்துல நிறய விசயங்கள் இருக்கு.. கிரிக்கெட் செய்திகள்.. பொதுவிசயங்கள், கட்டுரைகள் நிரம்பிய கதம்பம் இது.

அடுத்தவக யார் மச்சான்..

இவுக பேரு அஹமது இர்ஷாத். இவரோட பக்கத்துல கதை, செய்திகள், கவிதை இப்படி நிறைய விசயங்களை பற்றி எழுதிருக்கிறாக புள்ள.. நீயே பாரேன்..

அட ஆமா மச்சான்.. ரொம்ப நல்லாருக்கு.. எம்பூட்டு விசயமெல்லாம் சொல்றீக.. இந்தா வாங்கிக்கோ மச்சான் இச் இச் இச் இச்...

போதும்புள்ள.. அடுத்தவகள பாப்போமா..

சரி மச்சான்..

அடுத்தவக பேரு ரேசன் ஆபிசர்.. இவரோட பக்கத்துல ரேசன் பொருள்கள் வாங்குவதுபற்றி விளக்கமா சொல்றாரு..

அடுத்தவக யாரு மச்சான்..

இவுக பேரு ஸ்ரீராம். இவங்க பக்கத்துல அனுபவ கட்டுரை, கதை, செய்திகள், அரசியல் விசயங்கள், இப்படி நிரம்பி இருக்கு புள்ள..

அட அப்படியா மச்சான்.. இன்னிக்கி நீங்க சொன்னவங்களெல்லாம் ரொம்ப அருமையானவங்க.. மீதிய நாளைக்கி பாப்போமா மச்சான்..

ஆங் சரிபுள்ள..


தொடரும்..


நாளைக்கு இந்த கதை முடியும்..


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Friday, April 16, 2010

செண்பகமே செண்பகமே ..5

கதை புரியாதவ‌ங்க முதல்லருந்து வாங்க..

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

செண்பகமே செண்பகமே.. 3

செண்பகமே செண்பகமே.. 4மச்சான் மச்சான் எந்திரு மச்சான்.. பொழுது விடிஞ்சி நாழியாச்சி..


ம்.. ம்.. ம்.. செத்த நேரம்.. கர்.. கர்..

மச்சான் எந்திரி மச்சான்...

நீ உம்மா கொடுத்தாதான் எந்திரிப்பேன்..

காலையிலேவா.. விளங்கும்.. நம்ம கதய படிக்கிறவக‌ தப்பா நினைப்பாங்க..

அதெல்லாம் ஒண்ணும் நினைக்கமாட்டாக..

சரி இந்தா வாங்கிக்கோ.. இச் இச் இச்.. எந்திரிச்சி பல்விலக்கிட்டுவா..

ம் ம் தூங்கவிடமாட்டியே.. இரு இரு உன்ன வச்சிக்கிறேன்புள்ள..

வா மச்சான் இன்னிக்கி யாரெல்லாம் இருக்காவ..

இன்னிக்கி வித்யாசமா எழுதுறவகளபத்தி பாப்போம்புள்ள..

அப்பஞ்சரி அருமையா இருக்குன்சொல்லு.. சீக்கிரம் மச்சான்..

இவுக பேரு ஆனந்தி.. இவங்க தேடி அலையும்போது நம்ம மனசும் தவிக்குதுபுள்ள..

அப்படியா என்னாச்சி பாப்போம்..அட ஆமா மச்சான்.. அப்புறம் நமக்கான கவிதையும் எழுதிருக்காவ மச்சான்..

ஆமாபுள்ள.. இவுகபேரு மகராசன். இவங்க வித்யாசமான பக்கங்களை கொண்டவர். அனுபவ கட்டுரை, சமூக கட்டுரைகள் நிறய இருக்குபுள்ள..

அட ஆமா மச்சான்.. அடுத்தவக யாரு மச்சான்.

இவர் பேரு எல்கே LK .. இவருடைய எண்ணங்களை நம்மட்ட பகிர்ந்துகிறாருபுள்ள.. அதோடு நம்மள உசாரா இருக்க சொல்லுறாருபுள்ள.. இப்படி நிறய கட்டுரை இருக்குபுள்ள..

வேற யாரு மச்சான்..

மேல சொன்ன நம்ம எல்கே இன்னொரு பக்கத்துல வேலைக்கு ஆள்தேவை தகவல்லலாம் சொல்லுறாரு புள்ள..

ரொம்ப நல்ல விசயந்தேன் மச்சான். அடுத்தவக யாரு மச்சான்..

இவுக பேரு மனுநீதி. இவரோட பக்கத்துல சிறுகதைகளின் கதம்பம் ரொம்ப அருமையா இருக்குபுள்ள.

ஆமா மச்சான்.. ரொம்ப விறுவிறுப்பா இருக்கு.. அடுத்தவக யாரு மச்சான்.

இவங்க பேரு சிந்தன். அருமையான சிந்தனைகள், கவிதைகள் நிர‌ம்பி இருக்குபுள்ள இவரோட பக்கம். ஒருநாள் மனிதன் என்னசெய்வான்? தெரிஞ்சிக்கனுன்னா போகலாம் இங்கே..

ரொம்ப அருமையான விசயத்தெல்லாம் எப்பூடி விலாவெரியா சொல்றீக மச்சான். என் அரும ராசா.. இச் இச் இச் இச்...

நீ மட்டும்தான் கொடுப்பியா.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச்...

போதும் மச்சான் போதும்.. அடுத்தவகள பாப்போமா..

இவுக பேரு.. யாசவி.. இவக பக்கத்தோட பேரே ரொம்ப இனிப்புபுள்ள..

அப்டியா என்ன பேரு மச்சான்..

பேரு பலாச்சுளை.. இங்கபோய் பாத்தா அசந்துருவோம்.. வாழ்க்கைக்கு தேவையான அறிவியல் சங்கதிகள்.. ஆம்பள பொம்பள விசயம் நிரம்பி கிடக்கு..

மச்சான் உனக்கு ஆம்பளபுள்ள வேணுமா பொம்பளபுள்ள வேணுமா.. படிங்க இங்கபோய்.. அடுத்து நிறய மருத்துவகுறிப்புலாம் கொடுத்திருக்காவ மச்சான்.

அட ஆமா புள்ள.. அடுத்தவகள பாப்போமா புள்ள..

சரி மச்சான்..

இவுக பேரு தமிழ்பறவை.. பக்கத்தோட பேரக்கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி வருதுபுள்ள. நிறய வித்தியாசமான கட்டுரைகள் கவிதை, கதைன்னு ஒரு கதம்பம் இது.

அட ரொம்ப அருமையா இருக்கே மச்சான்.. அடுத்தவக யாரு மச்சான்.

இவுக பேரு பிரசன்னா.. இவரோட வருத்தத்தை இங்க கேளேன் செண்பகம்.. தன்னோட மனக்குமுறலையும் சொல்லிருக்காவ..

அட ஆமா மச்சான்.. வேற யாரு மச்சான்..

இவுக ஒரு டாக்டர். பேரு கந்தசாமி..இவுக பக்கத்துல விதவிதமா கதை கட்டுரை, அனுபவ‌ங்கள் இப்படின்னு நிற‌ய இருக்கு புள்ள.. விக்கிரமாதித்தன் கதைல்லாம் எழுதுறாவ..

சே என்னருமையான விலாவரியா சொல்லிருக்கீக.. நல்லாருக்கு மச்சான்.. இந்தா வாங்கிக்கோ.. இச் இச் இச்...

போதும்புள்ள.. மீதிய நாளைக்கி பாப்போமா புள்ள..


தொடரும்...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Thursday, April 15, 2010

செண்பகமே செண்பகமே .. 4

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க..

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

செண்பகமே செண்பகமே.. 3

செண்பகம் செண்பகம் வீடெல்லாம் ஒரே மணம் ரொம்ப நல்லாருக்கே.. வந்தது யாரு நம்ம பக்கத்தூட்டு மாலதி மாதிரியே இருக்கு..

ஆமா மச்சான் மாலதிக்காவேதான்.. நான் இன்னைக்கி இறால்பிரியாணி செஞ்சேன்..

கொண்டா கொண்டா சாப்பிட்டிருவோம். ஓ மணமே நல்லாருக்கே..

சாப்பிடு என்ஆச மச்சான்..

ம்ம்ம்.. என்னருமையா இருக்குபுள்ள.. பரவாயில்லையே நல்ல விதவிதமா சமைக்க கத்துக்கிட்ட.. ஒண்ணு தெரியுமாபுள்ள நம்ம ரெண்டுபேருக்கும் செம பாராட்டுக்கள்.. எல்லோரும் இது நல்ல ஜோடி.. அசத்துறாங்க.. வாழ்த்துகள்ன்னு சொல்லிருக்காவ..

அப்படியா மச்சான் அவுக எல்லாத்துக்கும் நம்ம நன்றியை தெரிவிச்சிக்கிருவோம்.

ஆமாபுள்ள.. எங்க கதைய படிச்சிக்கிட்டிருக்கிற எல்லாத்துக்கும் நன்றிங்கோ..

ஆமா மாலதிக்கிட்ட சமையலபத்தி பேசிக்கிட்டிருந்தீயாபுள்ள..

ஆமா இன்னும் கொஞ்சம்பேரு பாக்கியிருக்கு மச்சான்.

அப்படியாபுள்ள... சொல்லுபாப்போம்..

இவுக பேரு.. கவிசிவா... இவுக நாம கஷ்டப்படுததுக்கு ஒரு வழிய சொல்லிருக்காவ..

என்னவழிபுள்ள.. சீக்கிரம் சொல்லு..

ஆமா மச்சான்.. நாம பணக்காரவுகளா ஆவுறதுக்கு வழி இருக்காம்.. நாம எல்லோரும் இந்தோனேசியா போனோமுன்னா பணக்காரவுகளா ஆயிடலாமா..

அட அப்படியா.. இது நல்லாருக்கே.. உடனே கிளம்பிறவேண்டியதுதான்..

இன்னும் நிறைய விஷயத்தை பத்தி எழுதிருக்காவ.. நீயே படிச்சிபாரு மச்சான்.

அட ஆமா அடுத்தவுக யாருபுள்ள.. அட இங்கபாருபுள்ள.. ஏதோ வித்யாசமாருக்கு..

ஆமா மச்சான்.. இதுக்குபேரு..ரஸா மலாய்.. இத செஞ்சவுக மனோ சுவாமிநாதன்... வித்யாசமாவும் அருமையா இருக்கும் நினைக்கிறேன்.. ஒரு நாள் செஞ்சிதாரேன்..

என் ஆச பொண்டாட்டி என்னருமையா சமையல்ல வெளுத்து வாங்குறே.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்.....

இவுக பேரு இமா.. இவுக மருதாணி வச்சிருக்கிற அழகே தனிதான்.. அப்புறம் சமையல் குறிப்பு, அழகு குறிப்புன்னு அசத்திருக்காவ..

ரொம்ப நல்லாருக்கு.. அடுத்தவுக யாருபுள்ள..

இவுக பேரு செபா மேடம்.. இவங்க தன் அனுபவ குறிப்புகள சொல்லிருகாவ.. ரொம்ப நல்லாருக்கு மச்சான்..

ஆமா என் செல்ல பொண்டாட்டி.. இச் இச் இச் இச்..

போதும் மச்சான் போதும் அடுத்தவகள பாப்போமா..

ஆங் சரி பொண்டாட்டி.. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். :))

இவுக பேரு வானதி.. ரொம்ப அருமையான கதையெல்லாம் நிறய சொல்லிருக்காவ.. சிறுகதை ரொம்ப நல்லாருக்கு மச்சான்.

ஆமாபுள்ள நாம சேர்ந்து படிப்போமா.. அடுத்தவுக யாரு..

இவுக பேரு மலர்விழி.. இவங்க அனுபவ கட்டுரைகள், அறிவியல் கட்டுரைன்னு நிறைய எழுதிருக்காவ மச்சான். நாம ஒரு தடவை போய் பாத்துட்டு வரலாமா மச்சான்..

ஆங்! சரிபுள்ள.. வேற யாரு..

இவுக பேரு இலா.. இவுக கவிதை, கட்டுரை, சிறுகதைன்னு அசத்துறாவ..

அடுத்தவக யாரு புள்ள..

இவங்க கீதா ஆச்சல்.. நல்ல நல்ல விதவிதமான சமையல் செஞ்சி அசத்துறாக.. பார்லி சக்கர பொங்கல்.. வாழைக்கா பொடிமாஸ். இப்படின்னு நிறைய தினுசுதினுசா இருக்கு..

சே எவ்வளோ விஷயமெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கே என் செல்ல பொண்டாட்டி.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்...

என் ராசா என்மேல அம்பூட்டு ஆசயா.. மீதிய நாளைக்கி பாப்போமா மச்சான்..

சரி என் செல்லம்..


தொடரும்..


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவானாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Wednesday, April 14, 2010

செண்பகமே செண்பகமே .. 3

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க‌..

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

மாலதி : என்ன செண்பகம்.. இவ்வளோ நேரமாச்சி..

செண்பகம் : ஆமாக்கா எங்கூட்டுக்காரர்ட்ட பேசிக்கிட்டிருந்தேனா.. அதனால செத்த நாழியாயிருச்சி..

அப்படி என்னப்புள்ள பேசுவீக.. அதான் நாள்பூரா பேசுறீங்களே..

எக்காவ் இந்த எகத்தாளம் வேண்டாங்க்கா..

சரி சரி கோவிச்சிக்காதபுள்ள.. சும்மா கேட்டேன்..

சரிக்கா.. எங்கூட்டுக்காரர் பக்கத்தூர்ல வலையுலகம்ன்னு ஒரு உலகம் இருக்காம். அங்க நிறையபேர் இருக்காவளாம். அவுக பலவிஷய்ங்களைபத்தி எழுதுறாவலாம். நாங்க இரண்டுபேரும் படிச்சிப்பாத்தோமே..

அப்டியாபுள்ள.. கடத்தெருவுக்கு போயிட்டுவரும்போது வாரேன். உங்கூட்டுக்காரவுக இருக்கமாட்டாகல்ல..

சரிக்கா வா வா.

எப்பா என்ன வெயிலு வெயிலு.. மச்சான் மச்சான்.. ஓ ஓ.. வெளியபோயிட்டீகளா..

அப்போது கதைத்தட்டும் சத்தம் கேட்குது.. டொக் டொக் டொக்..

யாரு யாரு..

நாந்தான் மாலதி..

வா வாக்கா..

என்னபுள்ள செய்யிற..

சமையல் செஞ்சிக்கிட்டிருந்தேங்க்கா..

என்னாக்குழம்பு.. வீடெல்லாம் ஒரே மணமணக்குது..

ஆமாக்கா.. இன்னிக்கி இறால் பிரியாணி செஞ்சிக்கிட்டிருந்தேன்.

ஏப்புள்ள உனக்கு இதெல்லாம் தெரியாத எப்படி தெரிஞ்சிக்கிட்டே..

நாந்தான் சொன்னேனக்கா.. வலைப்பதிவர்கள் செய்யிறபார்த்து நானும் கத்துக்கிட்டனே..

அப்படியா எப்ப்டின்னு எனக்கும் சொல்லுபுள்ள..

இந்தா பாருக.. இவுகபேரு மேனகா.. இவுக செஞ்ச இறால்பிரியாணி தான் இப்போ செஞ்சிக்கிட்டிருந்தேன். இவுக எக்கசக்கம் சமையல்லாம் செஞ்சிருக்காவ.. எல்லாமே பாக்கிறதுக்கு நல்லாருக்கு.. செஞ்சும் பாத்துப்புடனும்...

ஆமா புள்ள.. ரொம்ப நல்லாருக்கு.. வேறயாரு புள்ள..

இங்கபாருங்க இறால் சாப்ஸ்.. ரொம்ப வித்யாசமாருக்கே..

இத செஞ்சது பேரு.. பேரு.. ஆங். ஸ்டார்ஜன்னாம்..

அடுத்து யாரு புள்ள..

இங்கபாருங்கக்கா.. இவுக பேரு செந்தமிழ் செல்வி.. என்னருமையான பேரு.. இவுக வீட்டுல உள்ள மசாலா சாமானெல்லாம் எப்படி பந்துசா வச்சிருக்கனுன்னு சொல்லிருக்காக பாருங்கக்கா..

அட ஆமாபுள்ள.. சே நம்ம வீட்டுலெல்லாம் அங்க ஒன்னு இங்க ஒன்னுமா சிதறி கிடக்குது.. இவுக சொல்லிருக்கிறமாதிரி பந்துசா வச்சிருக்கனும்புள்ள.. அடுத்தவுக யாரு..

அட இங்க பாருங்கக்கா.. கேப்ப..

அட நான் கேக்கமாட்டேன்.. நீயே வச்சிக்கோ..

அட என்னக்கா.. துயதமிழ்ல கேழ்வரகு.. அதத்தான் நான் சொன்னது கேப்ப..

இங்கபாருங்கக்கா.. இவுகபேரு ஆசியாஉமர்... கேப்பையிலே கூழு.. கேப்பையிலே உருண்டை.. இந்த உருண்டைக்கு பேரு மொஃதா வாம். ரொம்ப நல்லாருக்கும்போல.. இப்படி நிறய சமையல்ல் அசத்திருக்காக..

ஆட ஆமா செண்பகம்.. செஞ்சா நல்லா சாப்பிடல்லாம்.. நல்ல ருசியா இருக்கும்.

அடுத்து இங்கப்பாருங்க..இவுக பேரு விஜி.. எக்காவ் இவுகளும் நிறய சமையல்ல்ல சும்மா அசத்திப்புட்டாக.. விதவிதமா சமையல்குறிப்புகள், போளி, பிஸிபேளாபாத், கமன் டோக்ளா, க்ரிஸ்ப்பி பாகற்காய், வாழப்பூ பருப்பு உசிலி, பைனாப்பிள் ரசம் இப்படின்னு விதவிதமா இருக்குக்கா..

அடுத்து யாரு செண்பகம்.. அட மினுங்குதே..

அட ஆமாக்கா.. மினுங்குது.. பேரு மின்மினியாம்.

அதனால மினுங்குதா.. பேரு புதுசா இருக்கே..

ஆமாக்கா இவுக புதுசுதான்.. ஆனா புதுசா வந்தன்னிக்கி அசத்திபுட்டாக... உடனடி வெள்ளானம், கோதுமை பணியாரம், அழகு குறிப்புன்னு அசத்திருக்காக..

ஆமாபுள்ள.. நிறையவே மினுங்கட்டும்... அடுத்தவுக யாரு..

இவுக பேரு காஞ்சனா ராதாக்கிருஷ்ணன். இந்தம்மாவும் சமையல்ல ரொம்ப நல்லா செய்வாங்க போல..

வாபுள்ள போய்ப்பாப்போம்..

இவுகளும் சமையல்ல கலக்கிருக்காக.. விதவிதமான சமையல்.. மாங்காய்-வேப்பம் பூ பச்சடி, பாதாம் அல்வா, பேபிகார்ன் மசாலா, நீரிழிவிற்கு நாவல்பழம், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், வல்லாரை மசியல் இன்னும் நிறைய நாம தெரிஞ்சிக்கவேண்டியதிருக்கு.. ஒரு எட்டு பாத்துட்டு வருவோமாக்கா..

ஆமா உண்மையிலே அசத்திருக்காங்க அந்தம்மா.. நாம ஒரு நாளைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வரணும்..

சரிமாலதிக்கா.. அடுத்தவுகள பாப்போமா..

ஆங்.. சரி செண்பகம்..

இவுகபேரு சுஸ்ரீ.. பேரு நல்லாருக்குல்ல..

ஆமாப்புள்ள.. இவுக என்னன்னாலாம் செஞ்சிருக்காக விலாவரியா சொல்லுப்புள்ள..

ஆங்.. இவுக.. நிறய விதவிதமா செஞ்சிருக்காவ.. பேர பூரா சொல்லுறேன் கேட்டுக்கக்கா.. Maida Halwa / மைதா ஹல்வா, குழி பணியாரம், அவகாடோ சல்சா/டிப், புடலங்காய் மிளகு கூட்டு, மின்ட் ரைஸ், உருண்டை குழம்பு, தக்காளி குழம்பு, எள்ளு உருண்டை, சாக்லேட் கேக், கத்தரிக்காய் சாதம்.. விதவிதமா இருக்குக்கா.. நாம ஒரு நாளக்கி செஞ்சிபாப்போமா அக்கா..

ஆமா செண்பகம்.. ரொம்ப வித்யாசமா இருக்கு.. செஞ்சிருவோம்..

அப்போது கதவு தட்டப்பட்டது.. டொக் டொக் டொக்..

அய்யயோ உங்கூட்டுகாரவுக வந்திட்டாகபோல செண்பகம்.. ரொம்ப நன்றி செண்ப‌கம்.. இம்பூட்டு நேரமா எனக்கு சொல்லிதந்ததுக்கு நன்றி. நான் போயிட்டு வாரேன்..

நன்றில்லாம் எதுக்குக்கா.. போயிட்டு வா..


தொடரும்..


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Tuesday, April 13, 2010

செண்பகமே செண்பகமே ..2

கதை புரியாதவங்க முதல்ல இருந்து வாங்க..

செண்பகம் : மச்சான் காலையில பாதியிலே விட்டுட்டுபோன பதிவர்களை பற்றி சொல்லுங்க மச்சான்..

மணி : என்ன இது இவ்வளோ ஆர்வமா இருக்கியே.. பரவாயில்லை..

ரொம்ப பீத்திக்காத மச்சான்.. கேட்டா சொல்லுவியா..

சரிசரி சொல்லுறேன்.. காலையில பயணத்துல உள்ள அனுபவத்த பார்த்தோமா..

இவருபேரு மதார். இவரு சென்னையிலஇருந்து திருநெல்வேலி போறதுக்கு டிக்கெட் எடுத்திருக்காக.. ஆனா பாரு..

அட நம்மூரா அந்தம்மா... என்னாச்சி மச்சான் என்னாச்சி...

பாவம் அவங்கபட்ட கஷ்டத்த நீயே படிச்சிப்பாரு..

அட ஆமா மச்சான்.. அரசு பஸ்ஊழியர்கள் பண்ணுன தவறால.. சே...

சரிமச்சான் ராத்திரி 11 மணியாயிருச்சி.. படுங்க.. காலையில பாப்போம்.

பொழுது விடிகிறது.

மச்சான் ஏமச்சான்! எங்க இவரக்காணோம் காலங்காத்தால எங்கப்போனாரு...

கவிதையே தெரியுமா என்கனவு நீதானடி என்இதயமே புரியுமா...

அட அட என்னமா பாட்டெல்லாம் படிக்கிறீக மச்சான். ரொம்ப சந்தோசமாருக்கு மச்சான்.

என்ராசாத்தி அடியே உனக்காகத்தானடி இந்த உயிரே..

மச்சான் ரொம்ப புல்லரிச்சி போச்சி.. அழுகஅழுகாச்சியா வருது.

உனக்காகத்தான் கவிதை எழுதிக்கிட்டிருக்கேன். சரியா வரமாட்டேங்குது..

இதுக்கேன் கவலப்படுதே மச்சான்! கவிதை எழுதிதான் உன் அன்பை வெளிக்காட்டணுமா. எப்பவுமே நான் உன் மனசுலதான்; நீ என் மனசுல.., என்மேல இம்பூட்டு அன்புவச்சிருக்கிறத நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு மச்சான்..

சரிப்புள்ள.. நம்ம வலையுலகில பதிவர்கள் என்ன எழுதிருக்காங்கன்னு பாப்போமா..

ஆங்.. சரி மச்சான்..

நம்ம ஏஞ்சல் ஒரு கவிதை எழுதிருக்காக..

ஆமா மச்சான் இந்த கவிதை நமக்கானது மச்சான்.. ரொம்ப நல்லாருக்கு.

இதப்பாரு புள்ள.. இதுவும் நமக்குதான்..

அடுத்து யாரு மச்சான்..

காதல் கவிதை சரத்தை இங்க ஒருத்தர் தொடுக்கிறார் பாரு..

பேரென்ன மச்சான்..

பேரு வித்யாசாகர்.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்.. அருமையாக இருக்கு புள்ள..

ஆமா மச்சான்.. அடுத்து யாரு இருக்காவுக..

ஏப்புள்ள.. இதயம் பேசுறத கேட்டிருக்கியா..

ஆமா மச்சான்.. சத்தம் கேட்குது.. ( மணியின் நெஞ்சில் சாய்ந்துகொண்டு )

அடப்போபுள்ள.. என் இதயம் எப்பவுமே உனக்குதானே அதில் நீதான் இருக்கே..

என் ஆசமச்சான் இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்...

ரொம்ப நன்றி புள்ள.. அடுத்தவுகள பாப்போமா..

சரிசரி அடுத்தவுகள பாரு.

காட்சிகள் ரொம்ப நல்லாவே இருக்கு.. படம் ரொம்ப நல்லாருக்கு புள்ள..

என்ன மச்சான் கவிதைய கேட்டா படத்தபத்தி சொல்றீக..

ஏபுள்ள இந்த சினிமா படம் எடுக்கிறாவுள்ள அவுகளேதான்.. இந்த கற்றதுதமிழ் படம் எடுத்தாகளே அவுக பேரு ராம்.

ஆமா அதுக்கென்ன இப்போ..

அவரோட பக்கத்துல சுமதி கவிதைகள்ன்னு கவிதைகளா எழுதியிருக்காரு புள்ள..

படிச்சிக்காட்டு மச்சான்.. ரொம்பவே நல்லாருக்கு மச்சான்.

அடுத்தவுகள பாரு புள்ள..

இங்க ஒருத்தரு செயின் தொலைஞ்சி போன கதைய சொல்லிருக்காகபுள்ள..

அட இது கத மச்சான்.. அடுத்தது மச்சான்..

நான் உனக்கு இந்தமாதிரி ஒரு கவிதையத்தான் தேடிக்கிட்டிருந்தேன்.

அதாரு மச்சான்.. என்ன கவித..

இவங்க பேரு ஹேமா.. இவரோ கவிதய எல்லோரும் விரும்புதாகன்னா பாத்துக்கோயேன்.

அடுத்தவுக யாரு மச்சான்

இவுக பேரு கோமா.. கவிதையை மத்தாப்பு போல அழகா சுத்தவிட்டிருக்காக பாருபுள்ள.. நல்ல ரசனை.

ஆமா மச்சான்.. ரொம்ப நல்லாருக்கு..


சரிமச்சான் பக்கத்துவீட்டு மாலதிஅக்கா கடத்தெருவுக்கு போறதுக்கு கூப்பிட்டாக நான் போயிட்டுவாரேன் மச்சான். எங்கயும் போயிறாதீக.. நான் வருதவரைக்கும் இத நினைச்சிக்கிட்டே இரு.. இந்தா மச்சான் வாங்கிக்கோ. இச் இச் இச் இச்...

ஓகே என்ராசாத்தி..


தொடரும்...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Monday, April 12, 2010

செண்பகமே செண்பகமே .. ( வலைச்சரத்தில் )

அன்புமிக்க நண்பர்களே!!

வலைச்சரத்தில் மீண்டும் உங்களை சந்திக்க வந்துள்ளேன். இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. வலைச்சரத்தில் இன்று முதல்நாள். வழக்கமாக இன்றைய தினம் முதல்நாள் அன்று அறிமுகப்பதிவு தான் வெளியிடுவாங்க. நான் ஏற்கனவே கடந்தமுறை என்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளதால் அறிமுகப்பதிவு தேவையில்லை என நினைக்கிறேன்.

அதனால் நேரடியாகவே கதைக்குள்ள போவோமா. அட ஆமா கதைன்னு சொன்னதுதான் ஞாபகம் வந்தது. இப்போ கதை சொல்ற சீசன் நடந்துக்கிட்டிருக்குன்னு நினைக்கிறேன். அதனால் நான் இந்தவாரத்தில் கொஞ்சம் வித்தியாசமாக பதிவர்களின் அறிமுகத்தை தொடர்கதையாக எழுதப்போகிறேன். அதற்கு உங்கள் மேலான ஆதரவுகளை நல்குவீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது கதைக்குள் செல்வோமா நண்பர்களே!!..


ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் பெயர் மணி. அவன் மனைவி பெயர் செண்பகம். அவனுக்கு ஏராளமா சொத்துநிலபுலன்கள், இருந்தன. அதனால் அவன் வேலைக்கு செல்லாமல் உக்கார்ந்தே சாப்பிட்டு சொத்துக்களை கரைத்தான். இது அவன் மனைவிக்கு பிடிக்கவில்லை. அதனால் அவனை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தினாள்.

மணி தன் மனைவியிடம் ஏப்புள்ள!!.. 4 தலைமுறைக்கும் சேர்த்து இவ்வளோ சொத்துஇருக்கு. இதை அனுபவிக்காம நாம் வேற வேலைசெய்யவா. அதனால நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். நான் இந்த உலகை சுற்றிவர ஆசைப்படுகிறேன். அதுக்கு முன்னாடி பக்கத்து ஊர்ல வலையுலகில் நிறைய பதிவர்கள் இருக்காங்க அவங்களிடம் போய் ஐடியா கேப்போம் என்ன சரியா..

அதென்ன மச்சான்! வலையுலகம்.. அப்படின்னு ஒரு உலகம் இருக்கவா செய்யுது.. கலிகாலம்டா சாமி...

ஆமாப்புள்ள அவுகதான் இப்போ கொடிகட்டி பறக்குவுதாக.. சரிப்புள்ள நான் போய்வருகிறேன். இங்க இருந்தா நீ தொணதொணன்னு பேசிக்கிடே இருப்பே..

ஏமச்சான்! பாத்தீகளா என்னைய வுட்டுட்டு போறேன்னு சொல்றீகளே. இதென்ன நியாயம். நானும் வருவேன் ஆமா சொல்லிபுட்டேன்.

சரிசரி வா வா நாம ரெண்டுபேருமே போவோம்.

மச்சான் மச்சான் நீங்க ஊர்வழிக்கு போறேன்ன்னு சொன்னீங்களே.. அதைபற்றி யாராவது எழுதிருக்காங்களான்னு பாருங்களேன்..

இரு புள்ள பாக்குறேன்.. ஆங்.. ஆங்... அட இங்கபாரு ஒருத்தர் சிங்கப்பூர்ல இருக்காராம் அவருபேரு.. ஆங்.. கோவி.கண்ணன். இவரு சிங்கப்பூர்ல இருந்து தன் குடும்பத்தோடு ஐரோப்பாவுக்கு டூர் போயிட்டு வந்திருக்காராம்..

அப்படியா மச்சான்!! அதென்ன மச்சான் டூர்?.

மண்டு மண்டு!! டூர்ன்னா தமிழ்ல் சுற்றுலா. உன் பாஷையில சொல்லனுன்னா ஊர்வழி.

அட ஆமால்ல.. நான் ஒரு படிக்காதவ. என் ராசா எம்ப்பூட்டு விவரமா இருக்கீக. இந்தாங்க இதை வாங்கிக்குங்க. இச் இச் இச் இச்...

போதும் போதும்.. நம்ம விவகாரம் அப்புறம் பாக்கலாம். இங்க பாரு.

ஆங்! கோவி.கண்ணன் என்ன சொல்றாரு..

அவரு ஐரோப்பாவுக்கு டூர் போயிட்டுவந்ததை 9 பாகமா எழுதியிருக்காருன்னா பாத்துக்கோயேன்.

ஐரோப்பா எங்க இருக்கு மச்சான்?..

அடபோப்புள்ள! உனக்கு விளக்கம் சொல்றதுக்குள்ளே எனக்கு தாவு தீர்ந்திரும்போல சே! ஐரோப்பா, நாம இருக்கிற ஆசியா கண்டம் மாதிரி அதுவும் ஒரு சின்ன கண்டம்.

மன்னிச்சிகோ மச்சான்! இனிமே இப்படில்லாம் கேக்கமாட்டேன். மச்சான் என்னையும் கூட்டிட்டுபோ.. நானும் வருவேன் ஐரோப்பாவுக்கு.

சரி சரி.. அடுத்தவுகள பாப்போமா..

அட இங்கபாரு செண்பகம். இவங்க பேரு துளசி கோபால். இவரை துளசி டீச்சர்ன்னு எல்லோரும் அன்போடு அழைப்பாங்களாம்.

அப்போ வாத்தியாரம்மான்னு சொல்லுங்க..

இவங்க குஜராத் போன அனுபவத்தை 30க்கும் மேலான பாகங்கள் எழுதியிருக்காங்க. இவரோட வலைப்பூவில் நிறைய அனுபவ கட்டுரைகள் புதைந்து கிடக்குது.. தோண்ட தோண்ட ( படிக்க படிக்க ) ரொம்ப விறுவிறுப்பா இருக்குது. நாம் ஒரு தடவை போயிட்டுவருவோமா புள்ள.

சரிமச்சான்.. அடுத்து யாரு இருக்காகன்னு பாருங்க.

அடுத்து துபாய் ராஜான்னு ஒருத்தர் இருக்காரு..

அப்படியா இவரு துபாய்க்கே ராஜாவா?..

அட சே! என்னபுள்ள.. இவரு முன்னாடி துபாய்ல இருந்திருப்பாருன்னு நினைக்கிறேன். அதனால துபாய்ன்னு பேர்ல அடைமொழி போல. இப்போ இருக்கிறது எகிப்துல.

இவரு விமானத்துல செல்லும்போது ஏற்பட்ட அனுபவத்தை பற்றி எழுதிருக்காரு..

இது மட்டும்தானா மச்சான்!

இதுமட்டுமல்லபுள்ள.. இன்னும் நிறைய இருக்கு. குட்டிச்சாத்தானுக்கும் இவருக்கும் இடையே பெரிய சண்டையே நடந்திருக்கு..

என்ன மச்சான் குட்டிச்சாத்தானுக்கும் இவருக்கும் சண்ட நடந்திருக்கா நம்பவே முடியல..

என்னாலையும்தான் நம்பமுடியல... 6 பாகமா எழுதிருக்கான்னா பாத்துக்கோயேன். படிச்சி பார்ப்போமா..

அடுத்து இவரு எகிப்துல சுற்றுலா போனது பற்றி 8 பாகமா எழுதியிருக்காரு.

அப்ப ரொம்ப விறுவிறுப்பா இருக்குன்னு சொல்லுங்க. வேற யாரு..?.

இங்க பாரு ஒருத்தர் நம்நாட்டுல இருந்து வெளிநாட்டுக்கு போகும்போது உண்டான் அனுபவத்தை பற்றி எழுதிருக்காரு..

இது எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதானே.. இதுல என்ன புதுசா இருக்கு..

அட நீவேற புள்ள.. அவரு புதுசா கல்யாணம் ஆகி 3 மாதத்துல வெளிநாட்டுக்கு போறதுன்னா எவ்வளவு கஷ்டம். இது காணாதுன்னு இயற்கையும் சதி செஞ்சிருக்கு..

அதென்ன மச்சான்!

ஆமா புள்ள.. அவருபோன விமானத்துல ஏதோ கோளாறாம். 2 நாள் அவதிபட்டிருக்காரு.. நீயே படிச்சிப்பாரு.

அட ஆமா.. இவரு நம்ம ஸ்டார்ஜன்னுல்ல.. வேற யாருன்னு பாரு மச்சான்.

வெளிநாட்டுல இருந்து ஊருக்குத் திரும்பும்போது உள்ள சந்தோசம் இருக்கே.. அதை விவரிக்க வார்த்தையே இல்லன்னு சொல்லலாம் புள்ள..

என்ன மச்சான் சொல்றீக..

ஆமா புள்ள இவரு பேரு சரவணக்குமார்.. இவர் ஊருக்கு போகும்போது உண்டான சந்தோசத்தை பற்றி சொல்லிருக்காரு..

ஆமா மச்சான்! உண்மையிலே ரொம்ப சந்தோசமா இருக்கும்.. ஊர்ல மணைவி, பிள்ளைகளை 2 வருஷம் கழித்து பார்க்கும்போது எப்படி இருக்கும்?. வெளிநாட்டுல போய் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஊருக்கு போகும்போது ரொம்ப சந்தோசமாவே இருக்கும் மச்சான். இவரோட பக்கத்தை படிச்சி காட்டுங்க மச்சான்.

அட என் பொண்டாட்டி என்னமா பேசுற.. புல்லரிக்குது.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்...

போதும் மச்சான் போதும்.. அட அடடா.. சமையற்கட்டுல ஏதோ சத்தம் கேக்குது. மத்ததை நாளைக்கு பாப்போம் மச்சான். எனக்கு கொஞ்சம் சமையற்கட்டுல வேலை இருக்கு.. வாரேன்.


தொடரும்...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Sunday, April 11, 2010

நன்றி - நல்வாழ்த்துகள் பாலாசி ; வருக மீண்டும் வருக ஸ்டார்ஜன்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஈரோடு க.பாலாசி, ஏற்ற பொறுப்பினை, மிகுந்த பணிச்சுமைக்கு இடையேயும். பொறுப்போடு நிறைவேற்றி - மிகுந்த மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 155 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பலப்பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அதுவும் வித்தியாசமான முறையில் - சுட்டிய சுட்டிகள் அனைத்தும் அருமை - தவற விடக்கூடாத இடுகைகள். தேடித் தேடி, அவைகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வலைச்சரம் சார்பினில் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

வருகிற 12ம்நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் ஸ்டார்ஜன். இவர் ஏற்கனவே ஒரு வாரம் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது, பல பதிவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க , இவ்வாரம் அவருக்கு மீண்டும் ஆசிரியராகும் வாய்ப்பு அளிக்கப் படுகிறது. வருக வருக ஸ்டார்ஜன். ஏற்ற பணியினை நல்ல முறையில் நிறைவேற்றுக என வாழ்த்தி அமைகிறேன்.

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Saturday, April 10, 2010

ஆரம் (வலைச்சரம்)

என்றோ ஒருநாள் மூத்த பதிவரொருவர் தன் வலைப்பக்கத்தில் பதிந்திருந்தார்....புதிதாய் வருபவர்கள், மற்றும் இன்னும் சிலரை ஒரு பிராணிக்கொப்பாக. அவரின் அந்த தவறுதலான சொல்லுக்காக நானே வருந்துகிறேன். புதிதான நாற்றங்கால்கள் யாவும் உடனே நெல்மணிகளை வெளிக்கொணர்வதில்லை. தட்டிக்கொடுப்பதிலும், குட்டிவிடுவதிலும்தான் இங்கே இத்தனை விளைச்சல்கள் கிடைக்கிறது. எவரும் பிறந்தவுடன் விருட்சமாக ஆகிவிடுவதில்லை. (விருட்சமாகவே பிறப்பவர்களும் உண்டு). தேடிப்பிடித்து படிப்பதில்தான் அடையாளம் காணயியலும். எனக்கு அன்றையநாளில் எவரேனும் நீரூற்றாமல் இருந்திருந்தால் என்றோ நான் இவ்வலைமண்ணில் இலைவிடாமல் மறைந்திருப்பேன்.


மோதிரக்கையுடையவர்கள் குட்டுவதினாலும் தட்டிக்கொடுப்பதினாலும் புதியவர்கள் நேர்பட வளர நிறைய வாய்ப்புண்டு. உற்சாகமில்லா வாழ்வினை வாழ யாருக்குத்தான் விருப்பமிருக்கும். எனக்கும்கூட இருந்ததில்லை. ‘அருமை’யென்ற வார்த்தைக்கு இங்கிருக்கும் மதிப்பும் வலிமையும் அளவிற்கரியது. அதற்கேங்காத ‘என்’னெந்த இடுகைகளும்கூட உறங்கியதில்லை. நான் வலையுலகிற்கு வந்து ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாகியும், இந்த மனநிலையிலிருந்து நான் மாறுபடவில்லை. இதை மாயையென்பாரும் உண்டு. மாயைக்குள் அகப்படாத கனவுகள்கூட இல்லை.


இன்று புதிதாய் (சமீபத்தில்) இக்கலை(வலை)யுலகில் காலடியெடுத்து வைத்தவர்களில் எனக்குத்தெரிந்த ஒருசிலரை காட்ட எண்ணுகிறேன்.


நான் வலையுலகில் நுழைந்தபொழுது என் வலைப்பக்கங்களை எப்படி மாற்றியமைப்பது அதிலுள்ள தொழிற்நுட்பங்கள் என்னனென்ன, எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதே தெரியாமலிருந்தேன். பிறகு ஒவ்வொன்றாய் நானே முயன்று கண்டுபிடித்து மாற்றிக்கொண்டேன். அப்பொழுதும் நிறைய பதிவர்கள் இந்த தொழிற்நுட்பத்தினைப்பற்றி எழுதியிருந்திருக்கிறார்கள். நான் கண்டதில்லை. தமிழ்மண ஓட்டுப்பட்டையை எப்படி இணைப்பது என்பது பற்றி நானும் கதிர் அய்யாவும் மிகவும் ‘ஆராய்ந்து’ செய்தோம். அவ்வளவு தெரிவின்மை எனக்குள்.


இப்பொழுது அப்படியில்லை. இங்கே நிறையபேர் இருக்கிறார்கள். நமது வலைப்பூவை எப்படியெல்லாம் அழகுப்படுத்தலாம் அல்லது அதில் அத்தியாவசியமானதை எப்படி இணைப்பது என்பன போன்றவற்றை சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வகையில் நான் சமீபத்தில் அறிந்தவர்...


நண்பர் வந்தேமாதரம் சசிகுமார்

வலைப்பூ பற்றின நிறைய தொழிற்நுட்ப விபரங்களை அவர் தனது தளத்தில் தருகிறார். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


(பிளாக்கர்) இந்த ‘வகை’யில் அவர் எழுதியுள்ளவை எனக்கும் உங்களுக்கும்கூட பயனளிப்பவை...


வலைப்பூ பற்றின தகவல்கள் தவிர பொதுப்படையான தொழில்நுட்ப உதவிகளும் இவரது தளங்களில்


(தொழில்நுட்பம்) என்கிற ‘வகை’யில்.


••••••••••


புதிய வார்ப்பு

புதிய வார்ப்புதான் நான் கண்ட அளவில். அச்சப்படுத்தாமல், அடித்தடித்து தீட்டாமல் தானே உருவான வார்ப்பு. இவரின் புலமையுடன் கட்டப்பட்டுள்ள கட்டுரைகள் வெகுவாக மனதை பிசைகிறது. கொஞ்சம் இளைப்பாறக்கூட முடிகிறது. கட்டுக்குள் சிக்காத காற்றுக்கொப்பான எழுத்துக்கள் இங்கே பரவியிருக்கின்றன.


ஒத்த சொல்லு,ஒரு செயலு !!!!
உங்களையும் என்னையும் சுற்றி ஏதோவொரு சூழ்நிலையில் சந்தர்ப்பவசத்தால் சூறாவளி போன்றோ அல்லது சுனாமி போன்றோ உருவாகுவது தற்கொலையெண்ணம் (இருக்கலாம்) கொஞ்சம் மனதை கெட்டிப்படுத்தினால் நாளையெனும் வசந்தம் அதை கடந்துவிடும். அந்தமுறையில் மனதினை திடப்படுத்தும் மருந்து இந்த இடுகையில். சமீபத்திய இன்னொன்றும் மற்றும் ஒரு கொலை!!!

நிலா காய்கிறது !!!

(படித்த பொழுதுகளில் கொஞ்சநேரம் அந்த இடுகைக்கு குழந்தையாய் இருந்தேன். படிப்பவரின் மனநிலைக்கேற்ப மூன்றில் ஒரு கதாபாத்திரம் ஒட்டிக்கொள்ளும். என்வயதிற்கேற்ப என்னுடன் வந்தது குழந்தை வேடம். மிகையில்லை. படியுங்கள் உணரலாம்.)

•••••••••••

பிரேமா மகள்

நான் தற்சமயம் கண்ட மற்றொரு தளத்திற்கு சொந்தக்காரர். எள்ளலும், துள்ளலும் நிறைந்த பெண்மணி எழுத்துகளிலும். சமீபத்தில் வலையுலகில் சுற்றிவந்த ‘பெண் பார்த்தக் கதை’ தொடரிடுகையை, இவரை பெண் பார்த்த கதையை மையமாக வைத்து நகையுடன் கலந்துள்ளார்.


இவரிடம் நான் கண்ட எண்ணங்கள்..


கதவை திற. காற்று வரட்டும்

(தன்னுடைய அனுபவத்தையும் ஆற்றாமையையும் இவ்விடுகையில் பதிந்துள்ளார். கொஞ்சம் புத்தியை இந்த இடுகையின் மூலமும் பெற்றேன். உண்மையை உணரவேண்டியதுதான் நமது செயல்)


இந்த பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

(நாகரீக குகைக்குள் புகுந்து தாமே மூடிக்கொண்ட கதவினை விடுவிக்கத்தெரியாமல் அதற்குள்ளேயே வாழக்கற்றுக்கொண்டுவிடும் நகரத்து பெண்மணி பற்றின இடுகை. தனது அனுபவத்தின் வாயிலாக எழுதியிருக்கிறார்.)


•••••••••••••


எவ்வாசல் நுழைந்தேனும் நுகரக்கூடிய தளம் இங்கேயொன்று காணப்பெற்றேன். இத்தளம் புதிதல்ல ஆயினும் புதிதாய் காண்பவர்களுக்கு அப்படித்தான். அது மூலிகை வளம். கே.பி. குப்புசாமி என்பவர் இத்தளத்தில் நிறைய முலிகைப்பயிர்களை அடையாளம் கண்டு பயிர்செய்துள்ளார்.


உடல் நலத்திற்கு இங்கே இயற்கை விதைத்திட்ட விதைகள் ஏராளம். அதை இனம் கண்டறிந்து பயன்படுத்த தவறுவது நமது தவறே. உடலில் உண்டாகும் எப்பிணியாயினும் அதற்கான மருந்தை இங்கே நம்பூமி தன்மேல் எழுதிவைத்திருக்கிறது. ஒவ்வொரு மூலிகைச் செடிக்குமான அத்தனை தகவல்களும் இங்கே கிடைக்கப்பெறுகின்றன. பிரதியெடுத்து பாதுகாக்க வேண்டியன ஒவ்வொன்றும்.


இதை (குண்டுமணி)

இதை (அத்தி)

இதை (இலந்தை) இப்படி எதற்கான மருத்துவ குணங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கு தேவை...???. பாருங்கள் வேறொன்றும் நான் சொல்லப்போவதில்லை.


********


நல்வாய்ப்பினை நல்கிய அய்யா சீனா அவர்களுக்கும், மற்றும் வாழ்த்துக்களையும், ஆதரவினையும் பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் அலைபேசி வழியும் பகிர்ந்திட்ட அனைத்து வலையுலக பெருமக்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

என்றும் பாசமுடன்,


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது