07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 28, 2010

பெண்ணீயம் - வலைச்சரம் மூன்றாவது நாள்

பெண் சுதந்திரம் என்பது சமூகமேம்பாட்டிற்கு வித்திடும் ஒரு தளம். எந்த ஒரு நாட்டில் பெண் இனம் அடிமைப்பட்டுக்கிடக்கிறதோ அந்த நாடும், எங்கே பெண் கண்ணீர் வடிக்கிறாளோ அந்தக்குடும்பமும் மிளிர்வதில்லை. அதே சமயத்தில் குடும்பங்கள் மிளிர்வதும் பெண் என்பவளின் தியாகத்தாலும், உழைப்பாலும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

குடும்ப வன்முறையிலும், வரைமுறையற்ற அடிமைத்தனத்திலும், பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகி, சிக்கிச்சீரழிந்து கண்ணீரில் மூழ்கி, தம்மை இழந்த பெண்கள் ஒரு புறம்.அடிப்படை உரிமைகள், கல்வி, சமுதாய மேம்பாடு, போதுமான விழிப்புணர்வு இத்தனையும் கிடைத்த போதிலும் விட்டுக்கொடுப்பதற்கும், அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் புரியாமல், குடும்பங்களைப் போர்க்களமாக்கி, குழந்தைகளின் வாழ்வை சீரழித்து, சொந்தங்களோடு உறவை பலப்படுத்தத்தெரியாது,பொய் வழக்குப்போட்டு உறவை அறுத்தெரிந்து, கொண்டதே கோலமெனும் பெண்கள் அதிகரித்துக்கொண்டே வருவது ஒரு புறம்.

அடிமையாய்க் கிடக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி, அவர்களை அந்தத்துன்பங்களில் இருந்து மீட்டெடுத்து, மறுவாழ்வு கொடுக்க தமது சுகதுக்கங்களை மறந்து பாடுபடும் சமூக சேவகர்களின் எழுத்தும், பேச்சும் உரியவர்களைப்போய்ச்சேருவதில்லை. மாறாக விழிப்புணர்வுடன் இருக்கும் பெண்களுக்கு அதீத விழிப்புணர்வு தர உதவுகிறது என்பது தான் உண்மையோ என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதனாலேயே பெண்ணீய எழுத்துக்களை அதிகம் வாசிப்பதிலை.ஆனால் நிதர்சனங்களை, எங்கோ மூலைகளில் நடக்கும் அநியாயங்களை நியாயமாக எடுத்துரைக்கும் பெண்ணீய எழுத்தாளர்கள் நம் வலையுலகில் உண்டு.

எழுத்தாளர் குட்டி ரேவதியின் இந்தப்பதிவு கயர்லாஞ்சியின் சம்பவம் சொல்லும் இந்தப்பதிவு மனதை உருக்கி கண்ணீர் வழிவதைத் தவிர்க்கமுடியவில்லை எனக்கு. http://kuttyrevathy.blogspot.com/2010/04/2_20.html

தீபாவின் நீரோவின் விருந்தாளியா நீங்கள் பதிவு கூறுவதும் அதே சம்பவத்தைப்பற்றியது தான். http://deepaneha.blogspot.com/2010/04/blog-post_06.html

சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடிப் பெண்கள் - மு.வி நந்தினியின் இந்தப்பதிவு சம்பந்தப்பட்டவர்களைப் போயடைந்து அந்தப்பெண்களுக்கு விழிப்புணர்வைத்தருமா? http://mvnandhini.wordpress.com/2010/03/31/சோதனை-எலிகளாக்கப்படும்-ப/

தமிழச்சியின் தோட்டியும், மலக்குழியும் என்ற பதிவு மலம் அள்ளும் பெண்களின் அவலத்தைச்சொல்லும் பதிவு. http://www.tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=2047

சந்தன முல்லையின் குட் பை ஜெய் ஸ்ரீ மற்றும் இனிஷியலைப் பற்றி இனிஷியலாக பதிவுகள் அதீத வர்ணனையற்ற இயல்பான பதிவுகள் http://sandanamullai.blogspot.com/2010/03/blog-post_27.html

படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம். தந்திரமற்று, ஜாலங்கள் இன்றி மனதில் நல் எண்ணங்களோடு வாழ்க்கையை வாழ்வோம். ஒன்றுபட்டு அநீதிகளை எதிர்ப்போம்.இனியொரு கயர்லாஞ்சி சம்பவம் உலகின் எந்த மூலையிலும் நடந்துவிடக்கூடாது என்ற பிராத்தனைகளுடன்.

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்

13 comments:

 1. //பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்//

  சரியான கருத்து உண்மையும்கூட....

  பெண்ணீயம் சம்பந்தமான நீங்கள் சொன்னவைகள் சிலவற்றை தவிர்த்து பார்த்தால் இடுகை நலம்...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. /////படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.////////


  மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் .
  மிகவும் சிறப்பான பதிவு .
  பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன் .

  ReplyDelete
 3. பெண் ஈயம், ஆண் ஈயம் என்று ஈயம் பூசாமல் பார்க்கப் பழகுவதே, முதலில் நல்லதொரு தொடக்கமாக இருக்கும்!

  ReplyDelete
 4. முதலில், சமம் என்றால் என்ன?

  இதற்கு உங்களால் விளக்கம் சொல்ல முடியுமா? செய்யுங்கள் அதை.

  ஆணும் பெண்ணும் சமம் அல்ல.

  இதுவே இறைவனின் கட்டளை.

  பின் என்ன பிரச்னை?

  சமமற்ற தன்மையை இருபாலாரும் தங்கள்தங்கள் நலத்திற்காக துர்பிரயோகம் பண்ணுகிறார்கள்.

  ஆண் வேறு. பெண் வேறு.இருபாலாருக்கும் உடலில் மட்டுமல்ல; உள்ளத்திலும் சேர்க்கமுடியாத வேறுபாடுகள் உள. அவை அழியாதவை. அவை அழிக்கப்ப்டும்போது, வாழ்க்கையும் கலாச்சாரமும் துயரம் நிறைந்தனவாகி விடும்.

  lage raho! அப்படியே இருங்கள்.

  ReplyDelete
 5. பலர் எல்லாவற்றிலும் வேறுபாடு காண்பதினால் நிம்மதியை தொலைத்துவிடுகிறார்கள்
  வேறுபாட்டில் மனிதத்தை காண்பவர்கள் மட்டுமே மனிதனாய் நிம்மதியாக வாழ்கிறார்கள்...

  ReplyDelete
 6. ///படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.///


  ..... சரியா சொல்லி இருக்கீங்க. அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 7. எனக்கு, நிறய புதிய அறிமுகங்கள்!!!
  மிக்க நன்றி, வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 8. புதிய அறிமுக(வரி)ங்களுக்காக
  நன்றி!

  ReplyDelete
 9. //படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.//

  நீங்கள் சொல்லும் படி வாழ்ந்தால் வாழ்க்கை பூந்தோட்டம்தான்.

  மிக அழகான எழுத்து நடையில் அறிமுகங்கள் அருமை.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. பெண்ணியம் என்று எழுதினாலே போதும். பெண்ணீயம் தேவையில்லை.

  இதைப்போலவே,

  தேசியம், நாகரிகம் என்பன சரி.

  தேசீயம், நாகரீகம் என்பன தவறு.

  ‘உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ள வேண்டுமா ?” நூல் மீனாட்சி புத்தக நிலையம், மதுரையில் கிடைக்கும்.

  ஆசிரியர்: பேராசியர் பெரிய கருப்பன். பரவலாக ‘தமிழண்ணல்’ என்று அறியப்படுபவர். திணமனி நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

  ReplyDelete
 12. இந்த வரிகளின் கோர்வை உங்கள் இடுகையின் வாயிலாக நான் பார்த்தவரைக்கும்படித்த வரைக்கும் பங்களிப்பு குறைவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  அட்டகாசம். அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. ////படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.//

  உண்மைதான்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது