07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 31, 2009

நன்றி ! எனக்கு மிகவும் பிடிச்ச பதிவுகளின் பதிவர்

நண்பர்களே

சமீபகாலமாக நான் பதிவுலகில் மிக மிக சில பதிவுகளை மட்டுமே படிப்பது , மற்றும் பதிவு எழுதாமல் சில மாதங்களாய் இருந்தேன் காரணம் - அலுவலக வேளைகளில் மீளா காதல் வந்ததன் விளைவு. வீடுகளில் கூட நோ லேப்டாப்...

ஆனால் திரு சீனா அவர்கள் கேட்கும் போது அந்த வாரம் எழுத இயலமுடியாத காரணத்தை சொன்ன போது வேற சில வாரங்களை கொடுத்தார்... அந்த அன்பை மறுக்க என்னால் இயவில்லை எனவே முழு மனதோடு பல பதிவுலக எழுத்துகளை தன்னுள் கல்வெட்டாய் பதிந்துள்ள இந்த வலைச்சரத்தில் இதோ என் எழுத்துகளை நானே செதுக்கி கொண்டு இருக்கிறேன்..

இதற்க்கு வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

நான் ரசித்த பதிவர்களில் மிகவும் என்னை தன் பதிவுகளால் பாதித்த பதிவர் இதோ

   அவிங்க ராசா 
My Photoமதுரை மனுசன் செம நக்கலான எழுத்துகள் சில சமயம் அப்படியே எழுத்தின் வேகத்தில் நம்மை கரைத்து விடுவார்.. படிச்சு முடிச்சவுடன் ஒரு சின்ன பாரத்தை இறக்கி வைச்சிட்டு போயிடுவாரு அண்ணே....
நான் மிகவும் ரசித்து படித்த பதிவுகள் பல அதில் பிளடி இண்டியன்ஸ்..


இன்னும் நல்ல பதிவர்கள் நிறையா பேர்  இருக்காங்க நாளை முதல் இன்னும் சில பூக்களை பார்ப்போம்
நன்றி
சக்கரை சுரேஷ்
மேலும் வாசிக்க...

Sunday, August 30, 2009

நன்றி சுரேஷ் ‍- வருக வருக சக்கரை சுரேஷ்

கடந்த ஒரு வார காலமாக நண்பர் சுரேஷ் ஆசிரியப் பொறுப்பினை அருமையான முறையில் நிறைவேற்றி இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அவர் பல அரிய இடுகைகளையும் பல பதிவர்களையும் அறிமுகப்படித்தி உள்ளார். தனது நிச்சயதார்த்தப் பணிகளுக்கு இடையேயும் ஏற்ற பொறுப்பினிற்காக நேரம் ஒதுக்கியமைக்கு பாராட்டுகள்.

அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவினிலேயே இனிய இல்லற வாழ்வினில் ஈடுபடவும் நல்வாழ்த்துகள்.

அடுத்து 31.08.2009ல் துவங்கும் வாரத்திற்கு நண்பர் சக்கரை சுரேஷ் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் மென்பொருளாள‌ராகப் பணியாற்றுகிறார். இனிப்பானவரானதால் சக்கரை சுரேஷ் என அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய முழு விவரம் அறிய ஆசைப்படுபவர்கள் இங்குசெல்க.இவர் சக்கரை என்னும் பதிவினில் எழுதி வருகிறார்.

அருமை நண்பர் சுரேஷ்குமார் என்ற சக்கரை சுரேஷினை வலைச்சரம் சார்பினில் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன். இனிய இடுகைகளை அள்ளித் தருக என வேண்டுகிறேன்

சீனா
மேலும் வாசிக்க...

நன்றியோடு விடை பெறுகிறேன்

கடந்த திங்கட் கிழமை முதல் ஒரு வார கால வலைச்சர ஆசிரியர் பணி இன்று முடிவுக்கு வருகிறது . முன்னர் ஒவ்வெரு வாரமும் ஒவ்வெரு ஆசிரியர்கள் பணியாற்றிய போது நானும் ஒரு நாள் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் பலமுறை மனதில் தோன்றியதுண்டு அதற்கு செயல்வடிவம் கொடுத்து என்னை இந்த வலைச்சரத்தில் ஆசிரியராக அழைத்த அய்யா சீனா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

என்னை போன்ற ஆசிரியர்களுக்கு மட்டு மல்லாது என்னை போன்ற ஆசிரியர்கள் மூலமாக அறிமுகம் கிடைக்கும் பல பதிவர்களை ஊக்குவிக்க நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் . மொத்தத்தில் தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் மிக பெரிய தொண்டு என்றே சொல்லலாம் . உங்களின் இந்த பணிமேலும் சிறக்க வாழ்த்துகிறேன் .

ஒரு வார காலத்தில் இதையும் சேர்த்து ஆறு பதிவுகளே போட முடிந்தது .திருமண நிச்சயதார்த்த நிகழ்வுகளும் அதையொட்டிய வேலை பளுவின் காரணத்தாலும் சரியாக பதிவுகள் போட முடியவில்லை அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் . மேலும் ஒரு வார காலமும் என்னோடு இருது கருத்துக்கள் மூலமாக என்னை வாழ்த்தி என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு என்றுமே நன்றி கடன் பட்டுள்ளேன் . நீங்கள் தந்த உற்சாகம் மிக மிக பெரியது இன்று போல் என்றும் உற்சாகமளிக்க அன்புடன் வேண்டி வாய்ப்பிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடை பெறுகிறேன் .

மேலும் பிரபல பதிவர்களை நான் அறிமுக படுத்த வேண்டியதில்லை எனவே நான் அறிமுக படுத்தாக பதிவர்கள் ஒரு வேளை பிரபல பதிவராகவோ இல்லை பலமுறை மற்றவர்களால் அறிமுக படுத்த பட்டதாலோ இருக்கலாம் என நினைத்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் மீண்டும் என் பக்கங்களில் சந்திப்போம் .
மேலும் வாசிக்க...

Saturday, August 29, 2009

ஐந்தாம் நாள் வலைச்சரத்தில்

பதிவுலகம் பரந்து விரிந்தது இங்கே பதிவுகளை தேடினால் கிடைக்காத பதிவுகளே இருக்க முடியாது . நிறைய பதிவர்கள் பதிவுகள் எழுதினாலும் தங்கள் பதிவுகளை வாசகர்கள் மத்தியில் கொண்டு செல்வது எப்படியென்று தெரியாமல் இருப்பார்கள் . நான் கூட முதலில் பதிவுகள் எழுதிய பொது திரட்டிகளை பற்றி தெரியாது . இன்று கூட பல புதிய பதிவர்களுக்கு திரட்டிகள் பற்றியும் அதில் பதிவுகளை இணைப்பதை பற்றியும் அறியாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக வலைச்சரம் இருக்கிறது என்றால் மிகையாகாது .

இவர் ஒரு கவிஞர் நல்ல ஒரு கவிதை படைப்பாலம் இவர் பெயர் கூட என் பெயர் தான் சுரேஷ் . இவர் என் சுரேஷின் உணர்வுகள் என்ற தளத்தில் தன்னுடைய படைப்புகளை எழுதி வருகிறார் .இவரின் கவிதைகளில் பேனா கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஓன்று .

இவர் ஒரு நல்ல விமர்சகர் நல்ல ஒரு எழுத்தாளர் இவர் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார் . இவர் எனது ஊரின் பக்கத்து ஊரை செர்ந்த்டவர் இப்போது பெல்ஜியத்தில் பணியாற்றி வருகிறார் . யோ . திருவள்ளுவர் இவர் ஆலமரம் என்ற தளத்தில் எழுதி வருகிறார் . இவர் எழுதிய பதிவில் நான் பரிந்துரைக்கும் பதிவு ஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்! மற்றும் இவர் சமீபத்தில் ஈழம் இன படுகொலையை பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் முடிந்தால் அந்த புத்தகத்தையும் வாங்கி படித்து பாருங்கள் . நூல் அறிமுகம் : ஈழம் இனபடுகொலைகளுக்கு பின்னால்ஆழி பதிப்பகம்

தோழி உமா சக்தி இவர்கள் இவள் என்பது பெயர் சொல் என்ற தளத்தில் எழுதி வருகிறார்கள் . இவரின் பதிவுகளில் உயிரின் ஓசை பதிவு நல்ல ஒரு கவிதை .

என் பக்கம் என்ற தலைப்பில் ஓவியா அவர்கள் எழுதி வருகிறார்கள் இவர் எழதிய பதிவுகளில் நான் ரசித்த துபாய் என சில பாக்னகளாக எழுத்து துபாய் மற்றும் துபாயின் அழகை பற்றி நமக்கு தெரிய வைக்கிர்றார் . நான் ரசித்த துபாய்

நேற்று பதிவிட வேண்டிய நான் நேரமின்மையின் காரணமாக இப்போது பதிவிட வேண்டிய நிலை ஏற்பட்டது . இன்று காலை பன்னிரண்டு மணிக்கு எனக்கு திருமண நிச்சய தார்த்த நிகழ்ச்சி நடை பெறுகிறது என்பதை நண்பர்களாகிய உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . நன்றி மீண்டும் சந்த்திப்போம்.
மேலும் வாசிக்க...

Thursday, August 27, 2009

வலைச்சரத்தில் நான்காம் நாள்

சிறுவனாக இருக்கிற போதே அரசியலை பற்றி மற்றவர்கள் பேசும் போது சொல்லும் ஒரு வார்த்தை அரசியல் ஒரு சாக்கடை . அரசியலுக்குள் சென்றாள் எந்த மனிதனாக இருந்தாலும் சாக்கடையில் கிடக்கும் புழுக்களை போல் மாறி விட வேண்டும் இல்லையென்றால் அங்கெ அதிக நாட்கள் வாழ முடியாது என்பார்கள் . ஆனால் எனக்கு சிறு வயது முதலே அரசியலில் மிகுந்த ஆர்வம் . ஆனால் இன்றைய சூழ்நிலைகள் நினைக்கும் அரசியலை விட சாக்கடைகளே மேல் என இருக்கிறது .

பதவி மோகம் மனிதனை எப்படி மாற்றும் மனிதன் தன் தனி தன்மையை எப்படியெல்லாம் இழக்கிறான் என்ற செய்திகளை ஒவ்வெரு நாளும் வருகின்ற அரசியல் செய்திகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம் . அரசியலில் சில நேரம் பதிவுலகமும் ரண களமாகும் . இத்தனை முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான நட்புலகம் இந்த பதிவுலகில் இருக்கிறது என்பதை நாம் மறந்து விட முடியாது .

பதிவுலகம் வந்த போது நமக்கும் பின்னூட்டம் வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்த நேரம் பின்னூட்டமிட்டு ஊக்கபடுத்திய பல நண்பர்கள் இன்றும் என்னை ஊக்கப்படுத்தி வருகிறார்கள் அவர்களில் ஒருவர் தான் நண்பர் ஞான சேகரன் . இவரை தெரியாத பதிவர்கள் சிலராக தான் இருக்க முடியும் என்னை இந்த வலைச்சரத்திலே முதலில் அறிமுக படுத்தியவர் அவராக தான் இருக்க முடியும் . அவருக்கு என அறிமுகம் தேவையில்லைஎன்றாலும் அவரை அறிமுக படுத்தாமல் இருக்க முடியாது . அவரின் பதிவுகள் பொதுவாகவே சமுதாயத்தைச் செம்மை படுத்துவதாகவே இருக்கும் எளிய நடையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதாக இருக்கும் . அம்மா அப்பா என்ற தளத்தில் எழுதி வருகிறார் . இவருடைய பதிவுகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும் அதில் சில இயற்கை இயற்கையாக
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில் பகுதி 1 பகுதி ஓன்று முதல் ஐந்து வரை இருக்கிறது நல்ல விழிப்புணர்வு இடுகை படித்தவர்கள் பொறுத்து கொள்ளுங்கள் இல்லாதவர்கள் படியுங்கள் .

கவிதைகள் எழுதி பதிவுலகத்தை கலக்கி வரும் தோழி சக்தி நம்மை ஊககபடுத்துவதில் குறைபாடு வைக்க மாட்டார் நம் பதிவுகள் எப்படியிருந்தாலும் நம்மை ஊக்கபடுத்துவார் . இவர் வீட்டு புறா என்ற தளத்திலும் சக்தியின் உணர்வுகள் என்ற தளத்திலும் எழுதி வருகிறார் . இவருடைய கவிதைகளில் நான் பரிந்துரைக்கும் கவிதைகள் சில
குவார்ட்டரும் கோழி பிரியாணியும்
இதயம் ரணமானது
கல்வி கட்டணங்கலிருந்து எங்களை காப்பாற்ற போவது யார்

வாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலும் கலக்கலாக போடுவார் அவர் தான் கலையரசன் துபாயில் பணியாற்றி வருகிறார் அனைவரிடமும் நன்றாக பழகுவார் ஒரு வார இடைவெளியில் அனைவருக்கும் பின்னூட்டமிடுவார் . இவர் வடலூரான் என்ற தளத்தில் எழுதி வருகிறார் கலைநயத்தோடு எழுதும் கலையரசன் படைப்புகளில் சில
தமிழ் படிக்க தெரியுமா இத படியுங்க பாப்போம்
இத படிச்சிட்டு ஆண்கள் முறைப்பாங்க பெண்கள் சிரிப்பாங்க
கருப்பு வர்ணம்! (நல்லதா? கெட்டதா?)

நண்பர் நவாஸ் தீன் அவர்கள் இவர்களும் நல்ல ஒரு ஊக்கப்படுத்தும் நண்பர் பதிவுகள் குறைவாக போட்டாலும் நல்ல்ல கவிதைகளாக பதிவு செய்வார் . இவர் மன விலாசம் என்ற தளத்தில் எழுதி வருகிறார் .
என்று நிற்கும் இந்த இன ஒழிப்பு
விடை தெரியாத புதிராய்

நான் இன்று அறிமுக படுத்தியவர்கள் அனைவருமே உங்களுக்கு தெரிந்த முகங்களாக இருக்கலாம் . ஆனால் இவர்கள் அறிமுக படுத்த பட வேண்டியவர்கள் தெரியாத ஒரு சிலராவது இருந்தால் தெரிந்து கொள்ளட்டுமே என தான் அறிமுக படுத்துகிறேன் . தெரிந்தவர்கள் மன்னித்து விடுங்கள் நன்றி இன்றைய பொழுது இனிதாய் முடிந்தது நாளை மீண்டும் சந்திப்போம் .............


மேலும் வாசிக்க...

Wednesday, August 26, 2009

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

வலைச்சர ஆசிரிய பணியில் இன்று மூன்றாம் நாள் . காலையிலேயே பதிவு போட வேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் நேரமின்மையின் காரணமாக மாலை போட வேண்டியதாக ஆனது ( வேறு ஒன்றுமில்லை திருமண வீடு தான் ) .


காலையில் கொஞ்ச நேரம் வெயில் அடித்தால் போதும் தவறாது வருகிறது மழை கூடவே . மழை வந்தவுடனே மண்ணின் வாசனை நம் வாசலை தட்டுகிறது . மழை தவறுகிறதோ இல்லையோ மினாசரம் தவறாமல் தடை படுகிறது தினமும் . மடி கணினியோ ஒன்றரை மணி நேரத்தில் சக்தி குன்றிவிடுகிறது . இந்த நல்ல சூழ்நிலையில் கரண்ட் இல்லையென்றாலும் ஒரு அழகான காதல் கவிதையை பாப்போம் நீ எனது சொர்க்கத்தின் முகவரி இது இரண்டு லட்சத்திற்கும் மேல் ஹிட்ஸ் கொடுத்த கவிதை சாலை என்ற தளத்திலிருந்து படித்தது . மேலும் நான் பரிந்துரைக்கும் இடுகைகள் உன்பார்வை காதலின் கருவறை
மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்


இவர் குறைவான பதிவுகளே படைத்திருக்கிறார் . புது கவிதை என்ற தளத்தில் எழுதி வருகிறார் புதிய பதிவர் உற்சாகப்படுத்தி மேலும் நல்ல பல கவிதைகளை அவர் படைக்க நாம் வாழ்த்துவோம் . அவர் கவிதைகளில சில தமிழீழ வரலாறு
காத்திரு காலச்சுவடு மாறும் நிலை வரை

இவரும் ஒரு பதிய பதிவர் பா . இனியவன் அவருடைய பெயரிலேயே தளத்தின் பெயரும் இருக்கிறது . கடந்த மாதம் முதல் தான் பதிவுகள் எழுத துவங்கியிருக்கிறார் இவரையும் நாம் வாழ்த்தி மேலும் பல படைப்புகளை தமிழுலகத்திற்கு தர அழைப்போம் . இவருடைய படைப்புகளில் சில
ஒட்டு போட்ட கால்சட்டை
பொம்மைகளோடு
அம்மா

Hishaam mohamed இவர் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டிலிருந்தே பதிவுகள் எழுதி வருகிறார் இவருடைய பதிவுகளை நான் சமீபத்தில் தான் படித்தேன் . நன்றாக எழுதுகிறார் . இவருடைய பதிவுகளில் என்னை கவர்ந்த பதிவுகள் சில உங்களுக்காக
இதுதானா வாழ்க்கை
இது காதலா காமமா

உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமா அதற்காகவே ஒரு பிளாக வைத்திருக்கிறார் இந்த நண்பர். உலக நிகழ்வுகள் ஒரு பார்வையில் என்ற தலைப்பில் பதிவுகள் போடுகிறார் . இவருடைய படைப்புகளில் சில

சிறுவனின் உயிரை காப்பாற்றிய சிலந்தி மனிதன்
கணினிகளை தாக்கவுள்ள அதி பயங்கரமான வைரஸ்
புதையுண்ட நிலையில் பாரிய மலைதொடர்

இதுவும் ஒரு புதிய பதிவு தான் தலைப்பே விழிப்புணர்வை உண்டு பண்ணும் அறியாமையை அகற்றுவோம் என தான் இருக்கிறது இவரும் இன்னும் பல விழிப்புணர்வு இடுகைகள் இட நாம் வாழ்த்துவோம் . இந்த நண்பரின் பெயர் பிரதீப் . இவர் இதுவரை குறைவான இடுகைகளே எழுதியுள்ளார் . இவருடைய இடுகைகளில் சில

பார்த்ததும் காதல் மற்றும் நிச்சயிக்க பட்ட திருமணம் - சிறு ஒப்பீடு
1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது
தடுமாறும் தாம்பத்யம்

நாளை மீண்டும் சந்திப்பு தொடரும் ...........................
மேலும் வாசிக்க...

Monday, August 24, 2009

உதவும் கரங்கள்

வலைச்சரத்திலே இரண்டாம் நாள் என் பணியை இனிதே துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி என்றும் போல் இன்றும் எல்லோர் வாழ்விலும் வசந்தம் பூக்க வாழ்த்தி என் பணியை துவக்குகிறேன் .

வந்தமா பதிவுகள் போட்டமா இல்ல நண்பர்களின் பதிவுகளை படித்தமா பின்னூட்டமிட்டமா என்றில்லாமல் ஆக்கபூர்வமான செயல்களை வலை பதிவாளர்கள் செய்கிறார்கள் என்று நினைக்கும் பொது நெகிழ செய்கிறது . வலை பதிவுகள் எழுதுவதில் எத்தனை பேரின் முகத்தை நாம் பார்த்திருப்போம் ? எத்தனை பேருடன் நாம் பேசியிருப்போம் ? வலை பதிவுகள் தந்த வாய்ப்பை பயன் படுத்தி நல்ல நண்பர்களாக நாம் இருக்கிறோம் . நண்பர்களின் இன்ப துன்பங்களில் நேரடியாக பங்குபெற முடியவில்லைஎன்றாலும் வாழ்த்த வேண்டிய நேரத்தில் வலை பதிவினூடாக நாம் வாழ்த்த தவறவில்லை . ஆறுதல் கூற வேண்டிய நேரத்தில் ஆறுதல் கூற தவறவில்லை .


சக பதிவருக்கு ஆபத்து என்றால் இயற்கையாகவே அனைவரும் பதறி போகிறோம் . இப்போது வலைப்பதிவுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியிருப்பது சிங்கை பதிவர் செந்தில் நாதனின் உடல் நலத்தை பற்றி தான் . இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செந்தில் நாதனுக்கு தேவையான பணத்தில் பெரும் பகுதி வலைப்பதிவாளர்களின் வழியாக சென்றிருக்கிறது என்றால் இந்த நட்பு மிகவும் சக்தி வாய்ந்தது . இன்னும் மீதி தொகையை கூட பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறோம் .


செந்தில் நாதனுக்கு 27 ஆம் தேதி ஏழு மணி நேரம் கொண்ட ஒரு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது அதற்காக பிராத்தனை செய்ய வேண்டியிருக்கிறார்கள் அதை பற்றிய சுட்டி கேவிஆர் பக்கங்கள் தளத்தில் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்


மேலும் பண உதவி செய்பவர்களை இந்த சுட்டியில் சென்று உங்களது மேலான உதவிகளை செய்யுங்கள் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent


நான் இணைய தளத்தை அதிக நேரம் பயன் படுத்த துவங்கியது ஆர்குட் தளத்தில் அதில் எனக்கு முதலில் நண்பனாக வந்த மதிபாலா அவர்கள் . பின்னர் நான் பதிவுலகத்திற்கு வந்த பின்னரும் நண்பனாக தொடர்ந்தார் . அவரின் பதிவுகள் சிலவற்றில் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவருடைய பல பதிவுகளை நான் ரசித்திருக்கிறேன் . அவர் மதிபாலா பக்கங்கள் என்ற தளத்தில் எழுதி வருகிறார் அவற்றில் சிலவற்றை உங்களுக்காக நான் தருகிறேன் . அவர் சமீபத்தில் இந்தோனேசியாவை பற்றி எழுத்தினார் இந்தோனேசியாவை பற்றி தெரியாதவர்களுக்கு அந்த நாட்டின் கலாசாரம் , அந்த நாட்டின் தனி தன்மைகள் போன்றவற்றை அழகாக அவருடைய நடையில் எழுதியிருக்கிறார் இந்தோனேஷியா - கடவுளின் குழந்தை....!யூத் புல் விகடனில் நமது பதிவுகள் வருவது ஒரு அங்கீகாரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது . இங்கே நான் அறிமுக படுத்தும் நண்பரின் பெரும்பாலான பதிவுகள் விகடன் தளத்தில் பிரசுரமானவை . அது தான் செந்திலின் பக்கங்கள் நல்ல ஒரு எழுத்தாளர் அவருடைய பதிவுகளில் சில உங்கள் பார்வைக்கு எங்க வேண்டுகோளையும் சேர்க்கச் சொல்லுங்க!! - புறா
அன்றாடம் வரும் செய்திகளும் அதற்கான எதிர் கருத்துக்களும் தன் பதிவிலே நறுக்குன்னு போட்டு வருகிறார் பாலா அவர்கள் இப்போது வானம் பாடிகள் என பெயர் மாற்றியிருக்கிறார் அவருடைய பதிவு பாமரன் பக்கங்கள் என்ற தலைப்பில் இருக்கிறது . இவர் நறுக்குன்னு நாலு வார்த்தை என்றே 98 பதிவுகள் போட்டு விட்டார் மிக விரைவில் நறுக்குன்னு நாலு வார்த்தையில் சதமடிப்பார் . இவருடையை ஒவ்வெரு நறுக்குகளும் நச்சென்றே இருக்கும் என்பதில் ஐய்யமில்லை . இவருடைய பதிவுகளில் நான் பரிந்துரைக்கும் பதிவுகள்

நகைசுவையாகவும் கிண்டலாகவும் பதிவுகள் போடுவதில் மிகவும் கெட்டி காரரான இவர் நல்ல நண்பரும் கூட நேரில் பார்க்கவில்லை என்றாலும் அலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன் . இவருடைய பதிவின் தலைப்பே குறை ஒன்றும் இல்லை . ராஜகுமாரன் பெயருக்கு குறை ஒன்றும் இல்லாத ராஜா இவருடைய பதிவுகளிளுருந்து சில உங்கள் பார்வைக்கு
இன்றைய நாளை இத்துடன் முடித்து கொள்கிறேன் நாளை மீண்டும் அறிமுகங்கள் தொடரும் அதுவரை உங்கள் தோழன் . உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகூட்ட உதவும் எதிர் பார்கிறேன் நன்றிமேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் நான் ஒரு அறிமுகம்

பெரிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உலவிய வலைச்சரத்தில் ஒரு வார காலம் ஆசிரியராக பணியாற்ற அய்யா சீனா அவர்களிடமிருந்து அழைப்பு வந்த போது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது . பிரபல பதிவர்கள் வலம் வரும் பதிவுலகத்தில் பதிவர் என்றே சொல்ல தகுதியற்ற என்னையும் அழைத்து என்னை போன்ற பதிவர்களை ஊக்கப்படுத்தி வரும் அய்யா சீனா அவர்களுக்கும் மற்றும் வலைச்சர நிர்வாகிகளுக்கும் நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்து என்னை பற்றி சிறிய அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன் .

என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இதுவரை சாதிக்க வில்லைஎன்றாலும் ஒரு சிறு அறிமுகம் இன்றியமையாதது என நினைக்கிறேன் . தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் . காலம் செய்த கோலத்தினாலும் தொழிலுக்காக இப்போது மாலைதீவில் கட்டிட பொறியாளராக இந்திய நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறேன் .

ஒரு வாரத்திற்கு முன்னதாக விடுமுறைக்காக சொந்த ஊரிற்கு விட்டு போன வசந்தங்களை நுகர வந்தேன் . தாய் மண்ணிலிருந்து இப்போது வலைச்சர பணியை செய்து வருகிறேன் . என் வாழ்நாளில் இது ஒரு மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வு .

என்னுடைய வலைப்பதிவு என் பக்கங்கள் -சுரேஷ் . ஏதோ எல்லோரும் வலை பதிவு , இணைய தளம் வைத்திருக்கிறார்களே நமக்கும் நம்மை அடையாளப்படுத்த வலை பதிவு வேண்டும் என உருவாக்கினேன் . என்னுடைய பதிவில் நான் பரிந்துரைக்கும் இடுக்கைகள் என்றால்


வருகின்ற ஒரு வாரமும் வலைச்சர விதி படி பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுக படுத்தவிருக்கிறேன் . நண்பர்களின் பதிவுகளும் என்னை கவர்ந்த பதிவுகள் புதிய பதிவர்களின் பதிவுகள் என அறிமுக படுத்தவுள்ளேன் .நண்பர்களாகிய நீங்கள் என்றும் போல் எனக்கு பின்னூட்டம் வாயிலாக உற்சாகமளிக்க வேண்டி கொள்கிறேன் .
மேலும் வாசிக்க...

Sunday, August 23, 2009

நன்றி கலந்த நல்வாழ்த்துகள் லோகு - வருக வருக சுரேஷ்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக, ஏற்ற பணியினை, சிறப்பாகச் செய்து நம்மிடமிருந்து பிரியா விடை பெறுகிறார் அன்பின் லோகு. இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ என்பது மறு மொழிகள் பெற்றுள்ளார்.

இவரது இடுகைகள் விதி முறைகளின் படி, துறை வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதப்பட்டிருந்தன. சுய அறிமுகம், காதல் கவிதை எழுதும் கவிஞர்கள், அறிவு தொடர்பான புதிர்கள், உடல்நலம், கணினிக் கல்வி, இயறகை, குழந்தைவளர்ப்பு என பல நல்ல இடுகைகளை அறிமுகப் படுத்தி பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள உதவி இருக்கிறார்.

கடும் உழைப்பின் பலனை மகிழ்வுடன் ஏற்று - நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரக் குழுவின் சார்பாக வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து 24ம் நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் சுரேஷ் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் "என் பக்கங்கள் - சுரேஷ்" எனற் பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ நூற்று அறுபது இடுகைகள் எழுதி உள்ளார். மாலத்தீவினில் பணி புரிகிறார். இவரை வருக வருக - பல நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக என வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்

சீனா
----------------
மேலும் வாசிக்க...

வாய்ப்புக்கு நன்றி!!


அனைவருக்கும் வணக்கம்,

வலைச்சரத்தில் இந்த வாரம் முழுதும் எழுதும் பேறு பெற்றேன். அதைஇயன்ற அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். இருந்தாலும் இதற்கு முன் எழுதியவர்களுக்கு கிடைத்த பின்னூட்ட எண்ணிக்கையை ஒப்பிடும் போது என் எழுத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியது நிறைய இருக்கிறது என தெரிகிறது.

இந்த வாரம் முழுவதும், என் எழுத்தை படித்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

எனக்கிந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சிறந்த வலைப்பூக்களை அறிமுகப்படுத்தும் வலைச்சரத்தின் சேவை இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதில் ஐயமில்லை. தொடர இருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

விடை பெறுகிறேன்.

நன்றி

அன்புடன்
மேலும் வாசிக்க...

Saturday, August 22, 2009

குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கான பதிவுகள்

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே

அது நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பினிலே'

குழந்தை பருவம் தான் ஒரு மனிதனின் குண நலன்களை தீர்மானிக்கிறது. பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்.

குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.

அந்த கலையை இலகுவாக இணையத்தில் கற்று தரும் சில வலைப்பூக்களை பற்றி இந்த இடுகையில் காணலாம்.


பேரன்ட்ஸ் கிளப்:

பெற்றோர்களுக்கான வலைப்பூ. குழந்தை வளர்ப்பு குறித்த பல அத்தியாவசிய தகவல்களை சொல்கிறது. பல பிரபல பதிவர்களால் நடத்தப்படும் இந்த தளம் ஒரு சிறந்த சேவை. குழந்தைகளுக்கான நீதி கதைகள், அவர்களிடம் காட்ட வேண்டிய அணுகுமுறைகள், சிறுவர்களுக்கு உகந்த உணவு பழக்கங்கள் என பல உபயோகமான கட்டுரைகள் கொண்டுள்ள தளம்.

குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டியதின் அவசியத்தை விளக்கும் இடுகை, குழ்ந்தைகளின் பற்கள் பாதுகாப்பு, கற்றுக் கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள் என பல சிறப்பான இடுகைகள் உள்ளன. படித்து பயன் பெறுங்கள்.


அம்மாக்களின் பகிர்வுகள் :

இதுவும் பல பிரபல பதிவர்களால் நடத்தப்படும் பதிவு. இதிலும் குழந்தை வளர்ப்பு, குழந்தை உணவு, குழந்தைகளுக்கான கதைகள், புத்தகங்கள் என பல உபயோகமான இடுகைகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமின்றி தாய்மார்களுக்கான ஆலோசனைகளும் உள்ளன. அம்மாக்கள் படிக்க வேண்டிய தளம்.

தாய்மார்களும் தாய்ப்பாலும்,

நான் வளர்கிறேனா மம்மி,

தூங்குடா செல்லம்

தடுப்பூசி என பல நல்ல நல்ல இடுகைகள் உள்ளன..


அரும்புகள் :

வளரும் குழந்தைகளுக்கான ஒரு தளம். குழந்தைகளுக்கான பாடல்கள், விளையாட்டுக்கள், கதைகள், கைவினை பொருள் செய்தல் என பல சுவையான பகுதிகளை கொண்டுள்ளது. நீதிக்கதைகள் மூலம் குழந்தைகளுக்கு அறிவுரைகள் சொல்லப்படுகிறது. புத்தியை கூர்மையாக்கும் அறிவியல், கணக்கு புதிர்களும் உள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற தளம்.

அரும்புகள் தளத்தின் அருமையான இடுகைகள் சில:

யோசித்து செயல்படு

நான் யார்

வேடிக்கை பாடல்கள்

குட்டீஸ்களுக்கு பாதுகாப்பு குறிப்புகள்


குட்டிக்கதைகள் :

குட்டி குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில், புரியும் வகையில் நல்ல நல்ல குட்டி கதைகள் நிறைந்த தளம். நீதிக்கதைகள், நகைச்சுவை கதைகள், புராண கதைகள் என பலதரப்பட்ட கதைகள் எளிய நடையில் இருக்கிறது. கதைகள் உணர்த்தும் நீதியும் மனதில் பதியும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது. நாவினால் சுட்ட வடு, வித்தியாசமான உதவி, கை மேல் பலன் கிடைத்தது என்பது போன்ற கதைகள், படித்து மகிழுங்கள்..

இந்த தொகுப்பும் பயனுள்ளதாகவும், வித்தியாசமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.

நன்றி..

மேலும் வாசிக்க...

Friday, August 21, 2009

பூமியை காப்போம்..


இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். (நன்றி : thatstamil.com)

இயற்கை வளங்களின் இன்றியமையாமையையும், அவற்றை பாதுக்கக்க வேண்டிய அவசியத்தையும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கையின் அருமை குறித்தும், அவற்றை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எழுதப்படும் பதிவுகளை இந்த இடுகையில் காண்போம்.


மண், மரம், மழை, மனிதன்:

சுற்று சூழல் குறித்த ஒரு சிறந்த தளம். புவி வெப்பமடைதல், மரம் வளர்த்தல், தண்ணீரின் அவசியம் என பல தளங்களில் கட்டுரைகள் இப்பதிவில் உள்ளன.
அது மட்டுமின்றி அரிய வகை மரங்கள் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. வனவிலங்குகள் அழிப்பு குறித்தும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் தகவல்கள் உள்ளன.

வேளாண்மை செய்திகள், விவசாய குறிப்புகள் போன்றவற்றையும் அடக்கியுள்ள இத்தளத்தின் குறிப்பிடத்தக்க இடுகைகள் சில.

எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்

புவி பந்தை காப்போம்
சுற்று சூழலும் பருவ மழையும்


இது நம் பூமி :

நாமும், நம் தலைமுறையும் நன்றாக வாழ நம் பூமியை காப்பது நம் கடமை என சொல்லும் தளம். இயற்கை சீர்கேடு குறித்த பல புதிய தகவல்களை புள்ளி விபரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுக்களை வேண்டாம் என்கிறது இந்த இடுகை . இரட்டை குவளை முறையை விட மிக கொடுமையானது பிளாஸ்டிக் குவளைகள் பயன்படுத்துவது என்கிறது இந்த இடுகை. நீரின் மகத்துவத்தை சொல்லும் இடுகை என பயன் மிக்க தளம் இது.

பூவுலகின் நண்பர்கள் :

சமூக செயல்பாட்டுக்கான ஒரு வலைப்பூ என்று சொல்லப்பட்டிருக்கும் இத்தளத்தில் சுற்று சூழல் ஆர்வம் கொண்ட அனைவரும் எழுதலாம் என்று குறிப்பிட பட்டிருக்கிறது. சுற்று சூழல் சீர்கேடு குறித்த பல கட்டுரைகள் இங்கு உள்ளன. துல்லியமான புள்ளி விபரத்துடனும், தெளிவான அலசலுடனும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும். நம் பூமி இருக்கும் அபாயத்தினை மிக வருத்தத்துடன் அனைவருக்கும் புரியும் படி விளக்கி இருக்கிறார்கள்.

இந்த இடுகை புவி வெப்பமடைவதால் தனி மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அலசி இருக்கிறது. நதி நீர் எவ்வாறு பாசனத்துக்கு பயன்படாமல் வீணாக்க படுகிறது என்பதை இந்த இடுகை அலசுகிறது. இயற்கை வளத்தின் அடையாளமான யானைகளின் அழிவு குறித்து ஆதங்க கட்டுரை இது. இப்படி இன்னும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளை சொல்கிறது இந்த தளம்.

இந்த தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போது, நாகரீகம் என்ற பெயரில் நம்மை நாமே எப்படி அழித்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது.

நம்மால் முடிந்த அளவுக்கு இயற்கையை காப்போம், மரம் வளர்ப்போம்.. மீண்டும் அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.

நன்றி.
மேலும் வாசிக்க...

Thursday, August 20, 2009

பாடம் சொல்லும் பதிவுகள்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின்
ஊற்றாந் துணை.
- திருவள்ளுவர்
(நூல்களை கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டு தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலை போலத் துணையாக அமையும்)


*********

கணினி கல்வி என்பது பெருங்கடல், அதை முழுமையாக படித்து முடித்தவர் எவரும் இல்லை. கணிப்பொறி யை பொறுத்த வரையில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. தினம் ஒரு பாடம் படித்தாலும், வாழ்நாள் முழுவதும் படித்து கொண்டு இருக்கலாம்.

தம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு கொடுக்க யாருக்கும் மனசு வராது. அதற்கு மாறாக தமக்கு தெரிந்த தொழில்நுட்ப விடயங்களை பிறருக்கு கற்று கொடுக்கும் சிலரும் உள்ளனர். அப்படி பதிவுலகில் கணிப்பொறி தொழில் நுட்ப பாடம் நடத்தும் சில பதிவுகளை பற்றி இந்த இடுகையில் காண்போம்.

வேலன் :

150 இடுகைகளை இன்றைய தேதி வரையில் கொண்ட பதிவு. அனைத்தும் பாடங்கள், கணினி சம்பந்தமாக பல குறிப்புகள்.. போட்டோஷாப் போன்ற மென்பொருள்களில் எப்படி இயங்குவது குறித்து படங்களுடன், மிக விளக்கமாக, எவருக்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறார்.

கணினி நுட்பங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, வரப்பிரசாதம் இந்த தளம்.

இலவச மென்பொருள்கள், கீ போர்ட் கீக்கள் பற்றிய பாடம், போட்டோ ஷாப்பாடங்கள் , டெலிட் செய்த பைலை ரீ ஸ்டோர் செய்வது பற்றிய பாடம் என அனைவருக்கும் பயன்படும் தொழில் நுட்ப கட்டுரைகள் அடங்கியுள்ளது.


தமிழ் 2000 :

கிட்டத்தட்ட 600 இடுகைகளை கொண்ட தளத்திற்கு அறிமுகம் தேவையா. அனைத்துமே கணினி சம்பந்தமான கட்டுரைகள். மென்பொருள்களை எப்படி பயன்படுத்துவது குறித்த கட்டுரைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மென்பொருள்களை குறித்த செய்திகள். கணினி நிறுவனங்களை குறித்த தகவல்கள் என கணினி களஞ்சியமாக விளங்குகிறது இந்த தளம்.


தளத்தின் சுவையான இடுகைகளில் சில :

ஆன்லைனில் காப்பி- பேஸ்ட் செய்ய
விண்டோசின் வேகத்தை அதிகரிக்க
தமிழில் தட்டச்சு பழகுவதற்கு
குழந்தைகளுக்கான இணைய உலவி

என இன்னும் பல ஆச்சர்யங்கள் இந்த தளத்தில் உள்ளன. கண்டு மகிழுங்கள்.


கணினி மென்பொருட்களின் கூடம் :

நீங்கள் உங்கள் மவுசை எத்தனை தூரம் இழுத்திருக்கிறீர்கள் என்பதை அல்லது உங்கள் கீ போர்டில் குறிப்பிட்ட பட்டனை எத்தனை முறை அழுத்தியிருப்பீர்கள் என்று கணக்கிட முடியுமா?? முடியும் என்கிறது இந்த தளம் அதற்கான மென்பொருள் இந்த இடுகையில் உள்ளது. இதேபோல் கீறல் விழுந்த குறுந்தகடுகளை மீட்டெடுக்க உதவும் மென்பொருள் குறித்த இடுகை. இலவசமாக கிடைக்கும் அனிமேசன் மென்பொருள் என பல மென்பொருள்கள் குறித்தும், அவற்றை எங்கு தரவிறக்கம் செய்யலாம் என்பது குறித்தும் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது.

சுவையாகவும், பயனுள்ளதாகும் பல இலவச மென்பொருள்கள் குறித்து இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனுள்ள தளம்.

********

இன்றைய தொகுப்பு குறித்த கருத்துக்களை சொல்லுங்கள். அடுத்த இடுகையில் இன்னும் சில பயனுள்ள பதிவுகளோடு சந்திக்கலாம்..


நன்றி..
மேலும் வாசிக்க...

Wednesday, August 19, 2009

நலமோடு வாழ, படிக்க வேண்டிய பதிவுகள்.


'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' அந்த குறைவற்ற செல்வம் இப்போது யாருக்கும் கிடைப்பதில்லை. ஊசியே போட்டுக்கொள்ளாத தாத்தா, பாட்டியெல்லாம் இருந்தார்கள். ஆனால் இப்போது மாதத்துக்கு ஒருமுறை மருத்துவமனை செல்லாதவரை பார்ப்பதே அரிதாக உள்ளது.

விஞ்ஞான உலகில் தவிர்க்க முடியாத சுற்று சூழல் சீர்கேடும், தாறுமாறான உணவு பழக்க வழக்கங்களும், மக்கள் தொகை பெருக்கமும் தனி மனித ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கின்றன.

முடிந்த அளவுக்கு சீரான உணவு பழக்கத்தை கையாளுவதும், நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வதும் நம்மை ஓரளவுக்கு காக்கும்.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பொது நல மனப்பான்மையோடு எழுதப்படும் சில பதிவுகளை இந்த இடுகையில் காண்போம்.

பொது சுகாதாரமும், மருத்துவமும் :

மருத்துவர் சுரேஷ் அவர்களாலும், கிராம மருத்துவர் அவர்களாலும் நடத்த படும் தளம். மிக உபயோகமான ஒரு தளம். பல உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், ஆலோசனைகளும் தெளிவான முறையில் சொல்லப்பட்டுள்ளன. மேலும் கிராமத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள், பிரச்சனைகள், கிராம மக்களின் அறியாமை ஆகியவற்றை ரசிக்கும் வகையில் மிக அழகாக எழுதி வருகிறார்கள். கிராமத்தில் நடக்கும் சுவையான சம்பவங்கள் படிக்க நன்றாக இருக்கிறது.

மிகுந்த பணி நெருக்கடிக்கு இடையில் பொது நலத்தோடு எழுதி வரும் மருத்துவர்களின் தொண்டு பாராட்ட பட வேண்டியது.

அறியாமையால் தனக்கு போட வேண்டிய ஊசியை ன் குழந்தைக்கு போட்டஅம்மாவை பற்றிய இந்த இடுகை கல்வி அறிவின்மையின் பாதிப்பை உணர்த்துகிறது. கீரைகளின் பயன்களை பற்றிய இந்த இடுகை, மார்பக புற்றுநோய் குறித்த இடுகைகள் என பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய தளம்.


மருத்துவம்

சந்திர வதனா செல்வகுமாரன் என்பவரால் நடத்தப்படும் இந்த தளம் முழுக்க முழுக்க மருத்துவ குறிப்புகளால் ஆனது. மனச்சோர்வு, முடி உதிர்தல், தலைவலி, முட்டி வலி என பல பிரச்சனைகளுக்கு பல்வேறு மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்ட குறிப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

இது தவிர மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளை பற்றியும், காய்கறிகள் பற்றியும் நிறைய இடுகைகள் உள்ளன. தூக்கத்தின் அவசியத்தை பற்றிய இந்தஇடுகை , நோய்க்கான அறிகுறிகளை கொண்டே நோயை அறிய உதவும்இந்த இடுகை என பல சிறப்பான இடுகைகளால் ஆனது.

மிக சிறந்த தளம். தவறாமல் வாசியுங்கள்.

உங்களுக்காக :


மருத்துவ குறிப்புகள் அடங்கிய இன்னொரு வலைப்பூ. கிட்டத்தட்ட 50 இடுகைகள் மருத்துவ குறிப்புகளை கொண்டு உள்ளன. பல்வேறு கோணங்களில், பல பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளும், தீர்வுகளும் இங்கு கிடைக்கின்றன. இதுவும் அனைவருக்கும் உதவிகரமான தளம். தினசரி வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்ல பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்வுக்கு கடைபிடிக்க வேண்டிய பழக்க வழ்க்கங்கள் குறித்தும் பல இடுகைகள் உள்ளன..

இத்தளத்தின் பயனுள்ள இடுகைகளில் சில :

முதுகு வலி குறைய

குழ்ந்தை சாப்பிடாமல் அடம்பிடித்தால்
தெரிந்து கொள்ளுங்கள்
தாய்மையின் அடையாளங்கள் என பல உபயோகமான அரிய தகவல்களை உள்ளடக்கிய நல்ல தளம். படித்து பயன் பெறுங்கள்.


இன்றைய தொகுப்பும், உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் ஆலோசனைகளும், கருத்துகளும் என்னை சிறப்பாக செயல்பட தூண்டும்.

மீண்டும் சில உபயோகமான பதிவுகளோடு அடுத்த இடுகையில் சந்திக்கிறேன்.

நன்றி.
மேலும் வாசிக்க...

Monday, August 17, 2009

புத்திசாலிகளுக்கான பதிவுகள்


கவிதைகள், கதைகள், சினிமா விமர்சனங்கள், நகைச்சுவை பதிவுகள் தான் பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் கவனிக்கப்படுகின்றன பதிவுலகில்.. ஆனால் அதையும் தாண்டி சுவை மிக்க பதிவுகளும் உள்ளன. அவைகளில் ஒன்று தான் மூளைக்கு வேலை வைக்கும் புதிர் பதிவுகள். புதிர்களுக்கு விடை சொல்ல மட்டும் அல்ல.. புதிர்களை கேக்கவும் அபாரமான திறமை வேண்டும்..

விடுகதைகள், குறுக்கெழுத்துப்புதிர்கள், புதிர்க்கணக்குகள் இப்படி மூளைக்கு வேலை வைக்கும் பதிவுகளைப்பற்றி இந்த இடுகையில் பார்க்கலாம்..

யோசிங்க :
மிக சுவாரஸ்யமான (இந்த வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ன.. தெரிந்தால் சொல்லுங்களேன்) வலைப்பூ... இவரை அறிமுகப்படுத்த தேவையில்லை.. 2004 இல் இருந்து யோசிக்க வைத்து கொண்டிருக்கிறார்.. விதவிதமான புதிர்கள். எப்படித்தான் சேகரித்தார் என்று தெரியவில்லை. மொத்த இடுகைகள் முந்நூறை தாண்டி விட்டது.. (அம்மாடியோவ்..)

பொழுது போகாமல் கணினி முன்னால் இருக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக கழிக்க மிகச்சரியான தேர்வு, இவரது வலைப்பூ..

உதாரணத்துக்கு ஒரு கேள்வி:

தோனியும் சேவாக்கும் பாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே 94 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 49 ஓவர்களும் நான்கு பந்துகளும் வீசியாயிற்று. இன்னும் இரண்டு பந்துகளே பாக்கி. இன்னும் 7 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும். ஆனால் ஆட்ட முடிவில் தோனி, சேவாக், இருவரும் செஞ்சுரி எடுத்திருந்தனர். இது எப்படியென்று விளக்க முடியுமா?


இப்படி இன்னும் கலகலப்பான புதிர்களுக்கு சொடுக்குங்கள்:

குறுஞ்செய்தியில் குட்டி கணக்கு
வார்த்தை விளையாட்டு
கோலி

ஜன்னல் வழியே:

புத்திசாலிகளுக்கான இன்னொரு பதிவு.. வாரா வாரம் புதிர்க்கணக்குகள், கணித கேள்விகள் வெளியிடுகிறார். கட்டாயம் மூளையை கசக்க வைக்கும்.. நானும் முயற்சிக்கிறேன். இன்னும் ஒன்றுக்கு கூட சரியான விடையை கண்டு பிடிக்க முடிய வில்லை.. இந்த தளமும் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

இந்த வார கணக்குகள்


இலவசம்:

இன்னொரு பிரபலம். குறுக்கெழுத்து புதிர்கள் இவரது சிறப்பம்சம். பத்திரிகைகளில் குறுக்கெழுத்து பக்கத்தை முதலில் படிப்பவரா.. உங்களுக்கான தளம் இவருடையது. பொதுவாக தமிழ் பத்திரிகைகளில் குறிப்பிடும்படியாக குறுக்கெழுத்து போட்டிகள் வருவதில்லை. அந்த குறையை இவரது குறுக்கெழுத்து புதிர்கள் போக்குகின்றன..


இவரது குறுக்கெழுத்து புதிர்களை விளையாட இங்கு கிளிக்கவும் .

********

இந்த தொகுப்பு உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் ஒரு சுவையான தொகுப்போடு அடுத்த இடுகையில் சந்திக்கலாம்..

கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரியபடுத்தி, என்னை சிறப்பாக செயல்பட உதவுங்கள்..

நன்றி


மேலும் வாசிக்க...

காதலில் நனைந்த கவிதைப்பூக்கள்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

(முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!)

காதல்
கவிதை எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..
அதை வாங்கி செல்லும் பாக்கியசாலிகளே காதலிக்கிறார்கள்!
- நா. முத்துக்குமார்.

இது எந்த அளவு உண்மையோ தெரியாது, ஆனால் காதல் கவிதைகள் எழுதுபவர்கள் காதலித்துக் கொண்டோ அல்லது, மற்றவர் காதலுக்கு மறைமுகமாக உதவிக் கொண்டோ இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.. காதல் ஒரு மலரை போன்றது என்றால், அதை மென்மையாக நுகர்வது போன்றது காதல் கவிதை எழுதுவது.
காதலிக்கும் சுகத்தை விட காதல் கவிதை எழுதுவது அதிக சுகம் தரும். காதலில் வெற்றியோ, தோல்வியோ அதை அழகாக வார்த்தைகளில் வடிக்க, காதலை உண்மையாக உணர்ந்தவர்களால் மட்டுமே முடியும். அப்படி காதலை உணர்ந்து கவி வடிக்கும் காதலர்கள் சிலரை இன்று பார்ப்போம்.

அருட்பெருங்கோ:

நான்
படித்த முதல் வலைப்பூ இதுதான் என்று நினைக்கிறேன். இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக அனைத்து இடுகைகளையும் படித்து முடித்தேன். மறுபடி மறுபடி படிக்க தூண்டும் கவிதைகள் இவருடையது.

வரிகளில் எழுத்துக்களை கோர்க்காமல், காதலை கோர்த்து எழுதுபவர்.காதலியின் அழகை வர்ணித்து எழுதுவதில், தபூ சங்கரை நியாபகபடுத்துவார்.. இப்பொழுது அதிகமாக எழுதுவதில்லை, ஏன் என தெரியவில்லை..

உன்னைப்போலவே
உனது
முத்தங்களுக்கும்
காதல்
அதிகம்தான்.
முதல்
நாளின் கடைசி முத்தம்
அடுத்த
நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும்
வரை
உறங்குவதேயில்லை
.
******
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?

இன்னும் இவரது காதல் கவிதைகள், முத்தம், பிறந்தநாள் வாழ்த்து போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை..
இதெல்லாம் அவர் கட்டிய காதல் மாளிகையின் சிறு கல் மட்டுமே.. அந்த மாளிகைக்குள் நுழைந்து பாருங்கள்.. எவருக்கும் காதலிக்க ஆசை வரும்..

மறவாதே கண்மணியே (லோகு) :

அவர் பெயரே எனக்கும் இருப்பது எனக்கு பெருமை. காதலின் மகிழ்ச்சியை விட் காதலின் சோகம் நிறைய வலிமையானது. சோகத்தை எழுத்தில் வடிக்கும் ஆற்றல் மிக்கவர். இவர் வரிகளை படிக்கையில் சோகம் கூட சுகமாகும். உங்கள் வரிகளின் சோகம் உங்கள் வாழ்க்கையில் கட்டாயம் தூ என நம்புகிறேன்.

காதல் சோகம் உள்ளவர்களுக்கு இவர் தளம் சொர்க்கம்.. அவரின் கண்ணீர் துளிகள் சில..

என் தனிமை இனிக்க
நல்ல
நினைவாய் இருக்கிறாய்..
நான்
விழி மூடி ரசிக்க
நல்ல
கனவாய் வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு
நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே உன்னால்..
*****

நீ காதலை உணரும் நாட்களில்
ஒரு
கருங்கல்லைதான்
காதலித்துக்கொண்டிருப்பாய்
காதல் கடவுள் சாபங்கள் தந்துவிட்டானோ எனக்கு..
இன்னமும்
உன்னையே
காதலித்துகொண்டிருக்கிறேன்.

இன்னும் இவரது காதல் சாபம், மறவாதே கண்மணியே, போன்ற இடுகைகள் கண்ணீரை வர வைப்பவை.

ஆதலினால் (நவீன் பிரகாஸ்) :
என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...

*******

எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?


எங்கும் காதல்.. எதிலும் காதல் தான் இவர் தளத்தில். காதலியின் ஒவ்வொரு செய்கைக்கும் ஒவ்வொரு கவிதை. காதலிப்பவர்களும், காதலிக்க துடிப்பவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய தளம். காதலை உணர்ந்து எழுதுகிறார். படிக்கும் போது காதல் என்றால் என்ன என்று காதலிக்காதவர்களும் உணர முடியும்.

இவரது இன்னும் கொஞ்சம் கொஞ்சவா, நீயும் நானும் மற்றும் வெட்கங்களும் போன்ற பல கவிதைகள் காதலை பொழிபவை..


பிரியன் கவிதைகள்:

இவரது தளமும் கவிதைகளால் நிரம்பி இருக்கிறது. பெரும்பாலும் காதல் கவிதைகள்..நான்கு ஐந்து வார்த்தைகளிலேயே காதலியை எப்படியெல்லாம் வர்ணித்திருக்கிறார் பாருங்களேன்..

உனக்கான ஆபரணத்தை
மழைத்துளிகளால் கோர்க்கிறது
வானம்.
*
மழையின்
முதல் துளி நீ
அடுத்த துளி நான்
மற்றவை
நம் பிள்ளைகள்.
*
காதல் தேசத்தின்
தேவதையாய் இருக்ககூடும்
நிலவொளியில் நம்மை
நனைத்து சென்ற
மழை!
*
எவ்வூர் நியாயம்
மழை நனைத்தால்
அணைப்பதும்
நான் அணைத்தால்
தள்ளுதலும்!
*
நீ நனைய
என்னை தாக்குகிறது
அழகின் மின்னல்!
*
எழுத இன்னும் இருக்கிறது
உன்னைப் பற்றியும்
மழைப் பற்றியும்.

காதலை அணு அணுவாய், ரசித்து செதுக்கி இருக்கிறார் இவரது தளத்தில்.. காதலிப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய தளம். படிப்பவர்களை கட்டாயம் போதைக்குள்ளாக்கும் கவிதைகள் நிறைந்த தளத்தின் அழகுக்கு சான்றுகள் சில..

நீ, நான் பின் நமக்கான மழை..
அது, அது மட்டுமே காதல் #8 , #7 , #6 , #5 , #4 , #3 , # 02 , # 01

இனிய காதலனுடன் தொடங்கி இருக்கிறேன். பிடித்திருக்கும் என நம்புகிறேன், அறிவுரைகளையும், கருத்துக்களையும் கட்டாயம் சொல்லுங்கள்..

இன்னும் சில வித்தியாசமான பதிவுகளை அடுத்த இடுகையில் பார்க்கலாம்..

நன்றி..

பி.கு: மேற்சொன்ன நால்வருமே என்னை விட மூத்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள்... இவர்களை உங்களில் பலருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்கலாம். ஒரு ரசிகனாக அவர்களை பற்றி இங்கு வியந்திருக்கிறேனே அன்றி விமர்சனம் செய்யும் நோக்கில் அல்ல..


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது